Advertisement

அத்தியாயம் 3
அசோகவனத்து சீதை போல் அமர்ந்திருந்தாள் ருத்ரமகாதேவி. வழிகாட்டி இல்லாது வானலோகம் செல்ல முடியாமல் காட்டில் அலைந்து கொண்டிருந்தாள். அவளை தேடியவாறு குதிரை வீரன். 
அப்படி அவள் அலைந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிராமத்தை அடைய மற்பாண்டம் செய்து தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு அவர்கள் செய்யும் வேலைகளை ரசிக்கலானாள். 
அவள் தான் யார் கண்களுக்கும் தெரிய மாட்டாளே! அந்த தைரியத்தில் ஊரில் வளம் வர விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பாம்பு கடித்து விட்டது, உடனே ஊர் மக்கள் சிறுவனை வைத்தியரிடம் அழைத்து செல்ல அவரோ எந்த பாம்பென்று தெரியாததால் வைத்தியம் பார்க்க திண்டாட, 
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பிரசன்னமான ருத்ரமகாதேவி கடித்த பாம்பை வரவழைத்து அடையாளம் காட்ட குழந்தையின் உயிரும் காப்பாற்றப் பட்டது, அன்றிலிருந்து அவள் அந்த ஊரின் காவல் தெய்வமாகிப் போக இன்றோ அந்த ஊர்  வான் உயர்ந்த கட்டிடங்களோடு பெரிய நகரமாகி பலதரப்பட்ட மக்களும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
“யார் சார் அந்த அக்ஷய் சாம்ராட்? அவருக்கு பாதுகாப்பா நான் எதுக்கு போகணும். வேற யாரையாவது அனுப்புங்க” மதியழகி கோபமாக பேச 
“இங்க பாரு மதி.. அவருக்கு இருக்குற செல்வாக்குக்கு டில்லில இருந்து இன்டலிஜன் சர்வீஸ் பாதுகாப்பே கேக்கலாம். ஆனா அவர் உன்ன தான் தன்னோட பின்னாடி நிக்க வைக்கணும் னு சொல்லுறாரு”
“எனக்கு அரசாங்கம் தான் சம்பளம் தருது நான் எதுக்கு ஒரு தனி மனித பாதுகாப்புக்கு போகணும்? பொதுமக்களுக்கே சேவை செய்றேன்” முகம் சிவந்தாள் மதி.
“மதி.. மை டிஸிசன் ஈஸ் பைனல். நீ அவரோட பாதுகாப்புக்கு போற. யு கேன் கோ நவ்” சுற்றும் நாட்காலியை சுழற்றி அவளுக்கு முதுகை காட்டினார் கமிஷனர். 
கோபமாக வெளியே வந்தவளை அங்கே இருந்த பெண் இன்ஸ்பெக்டர் சித்ரகலா வழி மறித்து 
“என்ன மதி லக்குனா லக்கு இப்படி அடிக்குது” கிண்டலாக கூற பக்கத்தில் இருந்த இரண்டு பெண் கான்ஸ்டபிள்களும் சிரிக்கலானார்கள். 
“பெரிய கோடிஸ்வரன் பா.. அந்த அக்ஷய் சாம்ராட்.  இதுவரைக்கும் எந்த பொண்ணுமே அவனை நெருங்கிணைத்தே இல்லையாம். சைட் கூட அடிச்சதே கிடையாதாம். அக்மார்க் நல்ல பையன்” என்றவள் அசட்டு சிரிப்பை உதிர்த்தாள். அவர்கள் அக்ஷையை பற்றி பேசவும் ஆர்வமாக மதியின் அருகில் வந்திருந்தான் ராஜவேலு. 
“நீ தான் மொத பொண்ணு. உனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல இல்ல. ஹண்டசம், கோடிஸ்வரன், கஷ்டப்படாம லைப்பை என்ஜோய் பண்ணலாம் னு லவ் பண்ணி அவரை கரெக்ட் பண்ணலாம் னு மட்டும் நினைச்சிடாத, ஆளுதான் வாட்ட சாட்டமாக இருக்கான். அவன் ஒரு அவனா.. நீ.. யாம். உனக்கு தெரியாதா?” லத்தியை மதியின் தோளில் தட்டியவாறே சொல்ல மதி தந்தையை தான் முறைத்தாள். 
“நான் சொல்லல.. பணம் இருக்கும் இடத்துல ஏதாவது பிரச்சினை இருக்கும் னு” என்றது அவள் பார்வை. 
“நீங்க ஒர்ரி பண்ணுறது பாத்தா உங்களுக்கு வந்த சான்சை நான் பரிச்சிக் கிட்டேன் போல இருக்கே சித்ரா மேடம்” தோளில் இருந்த லத்தியை தள்ளி விட்டவள் “வேணும்னா… அந்த அக்ஷய் கிட்ட கேட்டு அவன் வீட்டு கூர்க்கா வேல வாங்கித் தரட்டுமா?” கண்ணடித்தவாறே சொன்னவள் கிண்டலாக சிரித்தாள். 
சித்ராவின் முகம் கோபத்தில் சிவக்க “கூஜா தூக்க எப்போவுமே ரெடியா இருக்கீங்க, ஒன்னு பண்ணுங்க கமிஷனர் கிட்ட சொல்லி அந்த வேலைய நீங்களே! வாங்கிக் கோங்க. அந்த அக்ஷய் சாம்ராட் கிட்டயும் எக்ஸ்ட்ரா… சம்பளம் வாங்குங்க… கூஜா.. தூக்குறதுக்கு….” கடைசி வாக்கியத்தை அழுத்தி சொன்னவள்  முன்னால் நடக்க, ராஜவேலு மதியின் பின்னால் அமைதியாக செல்ல வேகநடையில் வெளியேறினாள் மதியழகி. 
சித்ரகலா இன்ஸ்பெக்டர் என்றாலும் சப்பின்ஸ்பெக்டரான மதியழகியே அதிகமான கேஸ்களை கண்டு பிடிக்க, டிபார்ட்மெண்ட்டில் அவளுக்கு நல்ல பெயர் சேர பொறாமையில் வெந்தாள் சித்ரகலா. மதி தனியாக சிக்கும் போதெல்லாம் அவளிடம் வம்பு வளர்த்து வாங்கியும் கட்டிக்க கொள்வாள். மதியழகிக்கு கூடிய விரைவில் ப்ரோமோஷன் கிடைக்கும் என்று வேற பேசிக் கொள்ள, இந்தியாவின் பெரும் கோடிஸ்வரனான அக்ஷய் சாம்ராட் மதியை தேர்ந்தெடுத்தது அவளை இன்னும் உசுப்பேத்தி விட்டிருக்க மதியை சீண்டினாள். 
அக்ஷய் சாம்ராட் ஒரு பெண் போலீசை பாதுகாப்புக்காக கேட்டிருப்பதாக அறிந்து அவனிடம் வேலையில் சேர கனவில் மிதந்த சித்ரா.. அவனை பற்றிய தகவல் சேகரிக்க,  அவன் இது வரை எந்த பெண்களிடமும் நெருங்கிப் பலகாதவன், ஆண்மையற்றவன், ஆண்களை மட்டும் விருப்புகின்றவன் என்ற புரளியை அவனுடைய எதிரிகள் கிளப்பி விட்டிருக்க, அதை நம்பி நொந்து விட்டாள். அவனோ மதியை தேர்ந்தெடுக்க, மதியின் மேல் கடுப்பில் இருந்த சித்ரா மதியை சீண்ட அக்ஷையின் மீது கடுப்பில் இருந்த மதியும் பதில் கொடுத்து விட்டே நகர்ந்தாள்.
அக்ஷையும் மதியை பத்தித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். வீரமான பெண்களை அவன் பாத்திருக்கின்றான். ஆனால் ஆவிகளோடு பேசும் பெண்ணை முதல் முதலாக அன்று தான் பார்த்தான்.
“அப்பா.. எத்தனை பேர், எங்க இருந்து சீக்கிரம் பாரு” மதி சொல்ல அவளை வித்தியாசமாக பார்த்த அக்ஷய் அவள் செய்கைகளை கவனிக்கலானான். 
அக்ஷய்  யாரையும் அவர்களின் பேச்சில் எடை போடுபவனல்ல. மாறாக அவர்களின் செய்கைகளை கூர்ந்து கவனித்தே கணிப்பவன். கடவுள் இருக்கிறான் என்றால்? ராட்சசனும் இருப்பான் என்று நம்பும் ரகம். அதற்க்காக கடவுள் வழிபாடு என்று விழுந்து கிடப்பவனல்ல. தன் செயலே! நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கும் என்று நம்புபவன். கோடிகளில் புரண்டாலும் மண்ணாசை, பெண்ணாசையற்றவன். அவன் இலக்கு புகழ்… பணம்… மட்டுமே! 
பிறப்பில்லையே! கோடீஸ்வரனாக பிறந்தாலும் அவன் தந்தையின் மூன்றாவது மனைவிக்கு பிறந்தவன் தான் அக்ஷய் அதனாலயே குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினை. சகோதர்களும் இவனை வேண்டாத விருந்தாளியாகவே பார்க்க, சிறு வயதில் இவனை அடி, உதை என்று  செல்லம் கொஞ்ச அதைக் கண்டு தந்தை ஹாஸ்டலில் சேர்த்து விட நன்றாக படித்தவன் சொந்தமாக தொழில் தொடக்கி தனக்கென்று ஒரு பெயரை நிலை நிறுத்தினான். 
அசோக் சாம்ராட்டின் புதல்வர்களில் எந்தநாளும் டிவியில் பேசப்படும் மகனாக அக்ஷய் இருக்க அவனை பற்றிய செய்திகள் எல்லாம் அதை செய்தான், இதை செய்தான் என்று அவனுடைய தொழில் விஷயங்களே! மீடியாவில் வளம் வர, அவனை பற்றிய மைனஸ் செய்திகள் இருக்க வில்லை. சமீபகாலமாக அவனை கொல்வதற்கும், அவனுக்கு வேண்டாதவர்கள் சில அவனின் இமேஜை வீழ்த்தவெனவே புரளியை கிளப்பி விட்டிருந்தனர்.
“சீக்கிரம் போ பா…”  ராஜவேலு சென்று பார்த்து விட்டு வந்து ஒரு பாறைக்கு மறைவில் ஒருத்தன் இருப்பதாகவும் அவனை அடித்து போட்டு வந்ததாகவும் சொன்னது மாத்திரமல்லாது கண்ணாடியில் எழுதியும் காட்ட அக்ஷய் புருவம் உயர்த்தினான். 
அடுத்த நொடி இறங்கி ஓடிய மதி அவனைக் கட்டிப் போட்டு அவன் துப்பாக்கியை கைப்பற்ற அவள் பின்னாடியே வந்த அக்ஷய் அவளையே கைகட்டி பாத்திருந்தான். 
காவலர்களும் வரவே அவ்விடம் பரபரப்பாக, அக்ஷய் சாம்ராட் என்றதும் அவனை கொல்ல சதி என்று டிவியில் பிளாஷ் நியூஸ் ஆகி எல்லா சேனல்களிலும் ஓடிக் கொண்டிருந்தது.  
ராஜவேலு சும்மா இருக்காமல் புழுதியை கிளப்பி தான் இருப்பதையும் காட்டிக் கொள்ள அக்ஷய் முடிவே செய்து விட்டான். மதி தன் அருகில் நிற்க வேண்டியவள் என்று. 
அதன் படி தன்னுடைய பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் அதிகாரி வேண்டும் என்றும். அதுவும் ஒரு பெண் அதிகாரி தான் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டவன் திறமையானவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டு, கோப்பை புரட்டிப் பார்க்க அதில் மதியின் புகைப்படம் இருக்கவே, மனதுக்குள் குதூகலித்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாது கடையில் ஆடர் கொடுப்பது போல் மதி தான் வேணும் என்றவன் விடைப் பெற்றான். 
அவனின் வேண்டுகோளை நிராகரிக்காதவாறு மேலிடத்தில் பேசி கமிஷ்னரை லாக் செய்ய, அவரும் வேறு வழியில்லாது மதியை அனுப்பி வைத்தார்.  
“ஹாய் மதி எப்படி இருக்க?” வெகு நாட்களுக்கு பிறகு நிர்மல் அழைத்திருக்க,
“சொல்லுடா நல்லவனே! நான் ஆவிகளோடு பேசுறத பாத்துட்டு  பயந்து அமெரிக்காவுக்கு ஓடினவன் தானே! என்ன உனக்கு என் நியாபகம் வந்திருக்கு” 
“சொல்லுறத கேளு மதி அங்க இருக்காத பேசாம என் கூட அமெரிக்காவுக்கு வந்துடு. இந்த பேய் பிசாசுங்க ஒன்னும் இருக்காது” நிர்மல் அழைத்த உடன் பாடும் பாட்டைப் பாட
“அடிங்க… நம்ம ஊரு பேய்ங்க காமடி பேய்ங்கடா அமேரிக்கா பேய் கஞ்சூரியன் பேய். அந்த பேய் கிட்ட என்ன கோர்த்து விடலாம்  னு பாக்குறியா” மதியும் அவனிடம் வம்பு வளர்க்கலானாள்.
மதிக்கு பேய்கள் தெரிய ஆரம்பிக்கவும் மதியை விட பயந்தவன் தான் நிர்மல். ஒரு நாள் இரவில் இருவரும் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெயம்ரவி, ஜெனிலியாவை போல் சுவரேறி  குதிச்சு குல்பி ஐஸ் சாப்பிட சென்றனர். 
நடு இரவை தாண்டியும் ரோட்டில் ஆட்டம் போட்டவர்கள், யாரும் இல்லாத நிசப்சத்தில் டொக், டொக் என்ற சத்தம் கேக்க எங்கே இருந்து வருகிறது இந்த சத்தம் என்று காதைத் தீட்ட தூரத்தில் ஒரு கண் தெரியாத இளம் பெண் கண்ணில் கூலரோடு  குச்சியை தட்டிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். 
“என்ன மதி நடு இரவுல கண்ணில்லாத பொண்ணு ஒன்னு நடந்து வருது” நிர்மல் அனுதாபப் பார்வையை வீசினான். 
“கண்ணில்லாதவங்களுக்கு இரவேது, பகலேது?” மதி பெருமூச்சு விட அந்த பெண்ணின் அருகில் ஓடி இருந்தான் நிர்மல் 
கண் தெரியாவிட்டாலும் பார்க்க பேரழகியாக இருந்த அப்பெண்ணை கண்ட உடன் மனதை பறி கொடுத்தான் நிர்மல். 
“ஹாய் நான் நிர்மல் உங்க பேரென்ன?” 
“உங்களுக்கு என்ன தெரியுதா?” அப்பெண் கேக்க 
“நல்லாவே தெரியுது. இந்த ராத்திரில எங்க போய் கிட்டு இருக்கீங்க?” 
“வாக்கிங் போறேன்” சிரித்தாள் அவள். 
“பேய் வாக்கிங் போற நேரத்துலயா? அது சரி பகல்ல கூட்டம் அதிகமாக இருக்கும். ட்ராபிக் வேற, ஆக்சிடன் ஆக சான்ஸ் இருக்கு. அதான் நைட்டுல போறீங்க இல்லையா” அவனே கண்டு பிடித்து சொல்ல அதற்கும் சிரித்தாள் அவள்.
இவர்களின் சம்பாஷனையை கேட்டவாறே மெல்லிய புன்னகையோடு அவர்களை சில அடிகள் தூரத்தில் பின் தொடர்ந்தாள் மதியழகி. 
“நீங்க எங்க போறீங்களோ! நானும் உங்க கூட நடந்து வரட்டுமா? நீங்க ஒன்னும் தப்பா எடுக்கலையே!” பின் தலையை கோதியவாறே நிர்மல் 
“உங்க இஷ்டம்” 
“உங்க போன் நம்பர் கிடைக்குமா?” தூண்டில் போட 
“நா இருக்கும் இடத்துல போன் எல்லாம் வேல செய்யாதே!” கவலை தொந்த குரலில் அவள். 
“ஓஹ்.. பரவால்லங்க நீங்க இருக்குற இடத்துக்கு வந்தா உங்கள மீட் பண்ணலாமா?”
“பகல்ல வந்தா முடியாது ராத்திரில வந்தா தான் முடியும் 
“என்ன இவ ஐட்டம் மாதிரிரி பேசுறா..” என்ற எண்ணத்தோடு அவளை பார்க்க அவளோ நடையை நிறுத்தி இருந்தாள். 
“என்னங்க ஆச்சு”
“நா வரவேண்டிய இடத்துக்கு வந்துட்டேன்” 
சுற்றிமுற்றி பார்க்க ஒரே சுடுகாடாய் தெரிய யோசனையாக அவளை ஏறிட அவளோ கண்ணில் இருந்த கூலரை கழட்டி 
“வழித்துணையாக வந்ததுக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லி விட்டு சுடுகாட்டினுள்ளே நடக்க ஸ்தம்பித்து நின்று விட்டான் நிர்மல். 
கூலரை கழட்டிய அவளது கண்களில் குழி மட்டுமே இருக்க கண்கள் இரண்டையும் காணவில்லை. பின்னால் வந்த மதி நிர்மலின் தோளில் கை வைக்க 
“ஐயோ அம்மா பேய்” என்று கத்திய வாறே மயக்கம் போட்டு விழுந்தவன் பத்து நாள் பத்து கட்டி ஜுரத்தில் படுத்தான். 
“கண்ணு முழிய தோண்டிடுவேன்னு சொல்வதை கேட்டு இருக்கேன். பாத்துட்டேன்… பாத்துட்டேன்… பாத்துட்டேன்” என்று ஜுர வேகத்தில் புலம்பிக் கொண்டே இருக்க, 
ருத்ரமகாதேவியை அழைத்து “நிர்மல் வரம் கேட்க வில்லையே அவனுக்கு எதற்கு இந்த வரம்” என்று மதி கேட்க 
 
“உன் கூட இருக்கும் பொழுது அவன் கண்களுக்கும் பேய்கள் தெரிவார்கள். ஐந்து வருடங்கள் பிரிந்திருந்தால் தெரியாமல் போய் விடும்” என்று சொல்ல அடுத்த நாளே ப்லைட்டை பிடித்து அமேரிக்கா பறந்தவன் தான். இப்பொழுது ஆவிகள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அந்நாட்டின் மேல் உள்ள மோகத்தால் இந்தியா வராது மதியை அங்கே அழைத்து செல்ல அழைப்பு விடுப்பான்.  
“சரி எதுக்கு போன் பண்ண சொல்லு” 
“அம்மா எனக்கு பொண்ணு பாக்குறாங்க” 
“நல்ல விஷயம் தானே டா..” 
“நீ வேற.. என்ன இந்தியா வர சொல்லுறாங்க”
“சரி வா.. உனக்குத்தான் இப்போ பேய்கள் கண்ணுக்கு தெரிறது இல்லையே!
“அதில்ல எனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணு ஒருத்தி இருக்கா…” நிர்மல் வெக்கப்படுவதை மதியால் உணர முடிந்தது.
“ஓஹ்.. ஓ.. கத அப்படி போகுதா… ஒரு வெள்ளைக்காரிய கட்டி கிட்டு பேஸ்புக்ல போட்டோ போடுவன்னு பாத்தா… காதல் எல்லாம் பண்ணுற? யாரடா அது வெள்ளைக்காரியா? இல்ல நம்ம ஊரா” மதி சிரித்தவாறே கேக்க 
“ஐயோ.. அவளுக்கு இன்னும் சொல்லல” உடனே வந்தது நிர்மலின் பதில் 
“ப்ரொபோஸ் பண்ண ஐடியா கேக்க போன் பண்ணி இருந்தா ஐ ஏம் ரியலி சாரி மாப்பு… எனக்கு இந்த விசயத்துல முன் அனுபவமே இல்ல” மதி நக்கலாக சிரிக்க 
“அடிங்க… இருடி வந்து உன்ன கவனிச்சிக்கிறேன்” சந்தோஷமாக விசிலடித்தவாறே அலைபேசியை துண்டித்திருந்தான் நிர்மல். 
“யார்மா போன்ல” ராஜவேலுதான் கேட்டான்.
“நிர்மல் தான் பா…” 
“நல்ல பையன் பேசாம அவனையே கல்யாணம் பண்ணிக்க”
தந்தையை முறைத்தவள் “உங்களுக்கு வேற வேலையே இல்ல” என்று விட்டு அகல முத்து லட்சுமி மதியை பிடித்துக் கொண்டாள்.  
“ஏழு கழுத வயசாகுது. தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்கிறதில்ல, உடம்பு  சூடாகுமே என்ற கவலை இல்ல கண்டதை சாப்புடுற, எப்போ பாத்தாலும் வேல, வேலைனு அலையுற, நான் இருக்குற வர துணி தொவச்சு, சாப்பாடு செஞ்சி, வீட்டை பெருக்கி.. சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்கேன். நானும் போய் சேர்ந்துட்டேனா… உன் கதி அதோ கதி தான்” 
“ஆரம்பிச்சிட்டாளே!…. என் பொண்டாட்டி மூச்சு விடாம பேசுறதுல செம கில்லாடி… சான்ஸே இல்ல. ஒரு பையன பெத்திருக்கணும், மருமக னு ஒருத்தி வந்து இவ கூட சண்டை போடுற தினுசுல  நல்லா டைம் பாஸாகி இருக்கும். தப்பு பண்ணிட்டேன்” ராஜவேலு குதூகலித்து பின் நொந்துகொள்ள 
“கல்யாணம் பண்ணி புள்ளய பெத்து நீ படுகிற கஷ்டத்தை நானும் படணுமா… அம்மா…” மதி அவளை கட்டிக்க கொள்ள அவளின் அலைபேசி அலறியது. திரையில் அக்ஷய் சாம்ராட். 

Advertisement