Advertisement

அத்தியாயம் 23
 
நிர்மலுக்கு அழைப்பு விடுத்த மதி வீட்டுக்கு சென்று ராஜவேலுவிடம் டெல்லிக்கு புறப்பட்டு வருமாறு தகவல் சொல்லும் படி கூற முழித்தான் நிர்மல். 
 
“லூசா நீ? அவர் உன் கண்ணுக்கு தெரியிறாரு என் கண்ணுக்கு தெரியிறாரா? நா எங்க போய் சொல்ல?” 
 
“அம்மா பின்னாலதான் சுத்திகிட்டு இருப்பாரு நீ போய் சொல்லு டா…”  மதி வற்புறுத்த  
 
“உதை வாங்க போற” என்று மதியை வசை பாடினாலும் அவள் சொன்னதை செய்து முடிக்க அக்ஷையின் வீட்டை அடைந்தான் நிர்மல். 
 
முத்துலட்சுமி அவனை வரவேற்று நலம் விசாரிக்க, தலையை சொரிவதும், கையை மடித்து நெற்றியில் அடித்துக்கொள்வதுமாக நிற்பவனை வினோதமாக பார்த்தவள் என்ன விஷயம் என்று கேட்க 
 
“ஐயோ இத நா எப்படி சொல்வேன். அங்கிள் எங்கன்னு கேட்டா என்ன லூசுன்னு சொல்வாங்க, அங்கிள் இருக்கிறதா நினைச்சி பேசினா பைத்தியம்னு ஆஸ்பிடல்க்கு போன் பண்ணுவாங்களே! மதி வேற அவரு இவங்க பின்னால சுத்திகிட்டு இருக்கிறதா சொல்லுறா, இவங்க இல்லாம பேச முடியாதா?” நொந்தவனாக நிர்மல் முத்துலட்ச்சுமியை ஏறிட 
 
“என்ன நிர்மல்? ஏதாவது பிரச்சினையா?” பாவமாக அவனை பார்த்த முத்துலட்சுமி கேட்டாள்.
 
என்ன சொல்வது என்று யோசித்தவன் “இல்ல… மதிக்கு நீங்க இல்லாம திடிரென்று நிச்சயம் ஆகிருச்சே! உங்களுக்கு வருத்தமா இருக்குமே! அதான் ஆறுதலா ரெண்டு வார்த்த பேசிட்டு போலாம்னு வந்தேன்” ஏதோ வாய்க்கு வந்ததை உளறினான் நிர்மல். 
 
“போடா… பைத்தியம். இந்நேரம் அவ கல்யாணமே! பண்ணி இருந்தாலும் சந்தோச படுற மொத ஆளு நானாதான் இருப்பேன். நான் இல்லனாலும் பரவால்ல. அவ கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தா போதும்” என்று மூக்கை சிந்தினாள் முத்துலட்சுமி. 
 
“கடைசில என்ன பைத்தியம்னு சொல்லிட்டாங்க” முணுமுணுத்தவன். “அங்கிள் கூட இருந்திருந்தா சந்தோசபட்டிருப்பார் இல்லையா? இந்நேரம் மதி கூட ஜாலியா டெல்லில ஊரை சுத்த போய் இருப்பாரு” என்று விட்டு சுற்றும்முற்றும் பார்க்க, அவ்வளவு நேரமும் அமைதியாக வேடிக்கை பாத்திருந்த ராஜவேலு நிர்மல் என்ன சொல்ல விளைகிறான் என்று கவனிக்கலானான். 
 
“ஆமா அவருக்கென்ன அவர் பொண்ணு கூட ஊரு சுத்த போய்டுவாரு” முத்துலட்ச்சுமி கணவனின் நினைவில் கடுப்பாக மொழிய, 
 
“அங்கிளை மதி உடனே வர சொன்னா..” என்றவன் முழியோ பாவமா இருந்தது. 
 
“என்ன?” முத்துலட்ச்சுமி அவனை சந்தேகமாக பார்க்க, 
 
“இல்ல அங்கிள் இருந்திருந்தா உடனே போன போட்டு வர சொல்லி இருப்பா…” என்று எச்சில் கூட்டி விழுங்கியவன் “புரிஞ்சிருச்சா?” என்று வேறு கேட்டு வைத்தான். 
 
“நல்லா புரிஞ்சிருச்சு” என்றான் ராஜவேலு 

டில்லியில் எங்கு செல்ல வேண்டும் என்று அறிந்து கொள்ள நிர்மல் தனியாக சென்று மதிக்கு அழைப்பு விடுக்கவும் மதி ஸ்பீக்கர் மூடில் போட சொன்னதும் மதியோடு பேசி அறிந்து கொண்ட ராஜவேலு டில்லியை நோக்கி பயணிக்க மதி பேசியதில் அவள் ராஜவேலுவோடு பேசியதை அறிந்து கொண்ட பின்தான் நிம்மதி பெருமூச்சு விட்டான் நிர்மல்.
 
ஒருவாறு அக்ஷையின் ஹோட்டலை கண்டு பிடித்து வந்து சேர்ந்த ராஜவேலு மகளை செல்லம் கொஞ்ச நலம் விசாரிக்கலானாள் மதி. சென்னையில் மதி இல்லாத போது நடந்தவைகளையும், தான் எவ்வாறெல்லாம் முத்துலட்சுமியை பயமுறுத்தினேன் என்று ராஜவேலு சொல்ல இடுப்பில் கை வைத்து தந்தையை முறைக்கலானாள் மதி. 
 
அங்கே என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும் மதி பேசுவதை வைத்தே புரிந்து கொண்ட அக்ஷய் புன்னகைத்தவாறு அமர்ந்திருக்க, “மாப்புள…” அப்பொழுதுதான் அவனை கண்டு அணைத்துக்கொள்ள வெள்ளை உருவம் தன் அருகில் என்றதும் மதியிடம் விசாரித்து அறிந்து கொண்ட அக்ஷய் ராஜவேலுவோடு உரையாடலானான்.
 
அக்ஷய் மதியை நிச்சயம் செய்து கொண்டான் என்ற கோபத்தில் பிர்ஜு சமையலறையை விட்டு வெளியே வருவதில்லை. அதுவே! வாசலில் நடப்பவைகளை அவனுக்கு தெரியாமல் போக காரணமாகவும் அமைந்தது.
 
“ஆமா மதி எதுக்கு என்ன அவசரமா வர சொன்ன?” முக்கியமான விஷயம் எதுவும் இல்லாம மதி தன்னை வர சொல்ல மாட்டாள் என்று நன்கு அறிந்த ராஜவேலு கேட்க, 
 
குற்றவாளிகளை பிடிக்க, ராஜவேலுவின் உதவியை நாடலாம் என்பது மதியின் முடிவாக இருந்தாலும், அவனுக்கு உண்மையை கூற வேண்டுமே! கூறினால் அக்ஷையின் குடும்பத்தை பற்றி தந்தை என்ன நினைப்பார் என்ற கவலையும் மதியின் மனதில் குடிகொள்ள அக்ஷையை பார்த்தாள் மதி. 
 
உண்மையை கூறாமல் உதவி கேட்க முடியாது என்பதும் அக்ஷய் அறிந்ததுதான் மதியின் பார்வையை சந்தித்தவன் சொல்லுமாறு செய்கையாலையே சொல்ல மதி மெதுவாக இங்கு வந்ததிலிருந்து நடந்த ஒவ்வொன்றையும் கூறலானாள். 
 
பொறுமையாக கேட்டிருந்த ராஜவேலு “மதி அப்போ அன்னைக்கி மாப்பிளையை காப்பாத்த சொன்னது மாப்பிளையோட அம்மாவா?” என்று இந்திராவை பத்தி கேட்டான். 
 
“ஆமாம்” என்று தலையசைத்தாள் மதி.
 
“மாப்பிளையோட வீட்டுல நான் அடிக்கடி காணாமல் போறேன்னு என்ன திட்டுவியே! நானும் அவரை வேவு பாக்கத்தான் போறேன்னு சொல்லுவேனே! அங்க இருக்குற மண்டபத்துல அவங்கம்மா இருப்பாங்க அவங்க கூட பேச முயற்சி பண்ணா அவங்க மறைஞ்சிடுவாங்க, இத உன் கிட்ட எப்படி சொல்லுறது? அவங்க யாருன்னு தெரியாம சொல்லவும் முடியாதே! பார்க்க வேற சின்ன பொண்ணா இருக்காங்க மாப்பிளைக்கு அம்மாவா இருப்பாங்கன்னு நினைக்கவே இல்ல” என்று ராஜவேலு தலையை உலுக்கிக்கொள்ள 
 
தந்தை என்ன நினைத்து தன்னிடம் கூறாமல் மறைத்திருப்பார் என்று புரிந்துகொண்ட மதி ராஜவேலுவை நன்றாக முறைத்தாள். ஒருவேளை கூறி இருந்தால் இந்திராவை எப்படியாவது மதி சந்தித்து பேசி இருப்பாள். இருந்தால் அக்ஷையின் மனக்குறை நீங்கி இருக்கும். முக்தியடைந்தவளை எங்கே சென்று தேட? 
 
“ஆமாம் மதி இத்தனை வருடங்களாக இருந்தவங்க திடீருனு முக்தியடைஞ்சி போக காரணம் என்ன?” ராஜவேலு திடிரென்று கேட்க, 
 
“தெரியாதே!” உதடு பிதுக்கினாள் மதி. 
 
“உங்க நிச்சயதார்த்தம்? இருக்காது. ஒருவேளை அவங்க மனசுல இருந்த பாரமெல்லாம் நீங்க உண்மையை சொன்னதால இருக்கும்” என்ற ராஜவேலு மதியையே பாத்திருக்க, 
 
“என்னப்பா…”
 
“நானும் ஒருநாள் உன்ன விட்டுட்டு போய்டுவேனா?” கவலையான குரலில் கேட்க தந்தையை அணைத்துக்கொண்டாள் மதியழகி.  
 
ராஜவேலு மதியோடு பின்னிப்பிணைந்து இருப்பதை பார்த்த அக்ஷய் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. தந்தை, மகள் இருவரும் தங்கள் நிலையிலிருந்து மீண்டு வந்த பின்பு தான் என்ன செய்ய வேண்டும் என்று ராஜவேலுவே கேட்டான். 
 
“வழக்கம் போல பயமுறுத்துற வேலைதான்” மதி கண்சிமிட்டி சிரிக்க,
 
 “பேஷா பண்ணிடலாம்” சத்தமாக சிரித்தான் ராஜவேலு.
 
அக்ஷையின் குடும்ப கதையை கேட்ட ராஜவேலு அதை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டான். இதுவே! உயிரோடு இருந்திருந்தால் மதியின் திருமணத்தை மறுத்திருப்பானோ! ஆவியாக அலைவதால் குற்றவாளிகளை கூண்டில் அடைத்தால் அவர்களின் வாழக்கையில் எந்த சிக்கலும் இருக்காது என்று எண்ணினான். முதலில் யாரை பயமுறுத்த வேண்டும்? என்று மதியிடம் கேட்க 
 
சிம்ரனை அறிமுகப்படுத்தியவள், அவளை கொலை செய்த காரணத்தை சொல்லி இருந்ததால் அவள் போலவே சென்று அஜய்யையும், அஜய்யின் தந்தையையும் பயமுறுத்துமாறு கேட்டுக்கொண்டாள். 
 
அஜய் மீண்டும் அலைபேசி அழைப்பு விடுத்து மதியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க, சாதாரண மயக்கம் தான் என்ற அக்ஷய், இன்னும் கொஞ்சம் நாட்கள் டெல்லியில் தங்கி விட்டே செல்வதாகவும், நாளையிலிருந்து ஆபீஸ் வந்து வேலைகளை பார்க்க போவதாகவும் கூடுதலான தகவலையும் கூற மறுமுனையில் பலத்த அமைதி நிலவ, மெளனமாக புன்னகைத்தான் அக்ஷய். 
 
சுதாரித்த அஜய் அக்ஷையை வரவேற்கும் விதமாக பேச, “கொஞ்சம் நாட்களுக்குத்தான் அஜய் நீ நேத்து கேட்டு கிட்டதால என்னால மறுக்க முடியல” என்று அழகாக அஜய்யின் தலையிலையே கைவைத்தான். 
 
சும்மா கெடந்த சங்க ஊத்தி கெடுத்தானாம் ஆண்டியின் கதையாக, தானே அக்ஷையை ஆபீஸ் வர சொல்லி அழைப்பு விடுத்ததை எண்ணி நொந்து கொண்ட அஜய். திருட்டுத்தனமாக அக்ஷையிடமிருந்து கையொப்பம் வாங்க வேண்டும் என்று திட்டமிடலானான்.
 
சிம்ரனை அழைத்துக்கொண்டு அஜய்யின் தந்தை இருக்கும் வீட்டுக்கு சென்ற ராஜவேலு பகலிலும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் அவரை பார்த்து “அடுத்தவன் காசுல உடம்பு வளர்த்து வச்சிட்டு, என்னமா சொகுசா தூங்குறான் கூடாதே! என்ன பண்ணலாம்” என்றவன் முதலில் ஏசியை ஆப் பண்ணினான்.
 
ஏசி ஆப் ஆனதும் கண்விழித்த அஜயின் தந்தை உதித் கரண்ட் போயிருச்சா என்று முணுமுணுத்தவாறே எழுந்து அமர்ந்து தலையைச் சொறிந்தவர் தண்ணீர் பருக கிளாஸை கையில் எடுத்து தண்ணீர் குவளையில் இருந்து தண்ணீரை ஊற்ற கிளாசில் தண்ணீர் நிரம்பவே இல்லை. ஆச்சரியமாக கண்களை விரித்தவர் என்ன நடக்கிறது என ஒரு கணம் திகைத்து நிற்க, மின்குமிழ் எரிந்து எரிந்து அனைய ஆரம்பித்து.  
 
அதிர்ச்சியாக அதை பார்க்க தான் காண்பது கனவு என்று முடிவுக்கு வந்தவர் பலமாக சிரிக்க, கீழே கிடந்த செருப்பால் அவரை அடிக்கலானான் ராஜவேலு வலி தாங்க முடியாமல் கதறியவர் காண்பது கனவல்ல நிஜம் என்று உணரும் பொழுதே கட்டிலில் கிடந்த விரிப்பு மேலெழுந்து உருவமாக மாறி அவரை துரத்த ஆரம்பிக்க,  வீட்டில் பேய் தான் ஆட்டுவிக்கிறது என்று புரிந்து கொண்டார். 
 
ஓடி ஓடி கலைத்தவர் ஒரு கட்டத்தில் முடியாமல் “யார் நீ உனக்கு என்ன வேணும்” என்று பயந்தவாறே கேக்க 
 
முகம் பார்க்கும் கண்ணாடியில் சிம்ரன் என்று தன் பெயரை எழுதி விட்டு தன்னை கொலை செய்ததற்காக போலீசில் போய் சரணடையும் படி எழுதி இருக்க, சிம்ரன் யாரு என்று தெரியாமல் முழித்தார் அவர்.
 
ராஜவேலு செய்வதையெல்லாம் ஒரு ஓரமாக இருந்து வேடிக்கை பாத்திருந்த சிம்ரன் அவர் முழிக்கவும் “அஜய்யிடம் போய் கூறுமாறு சொல்லுங்க” என்று சொல்ல ராஜவேலுவும் அப்படியே எழுத அடித்துப் பிடித்துக்கொண்டு அஜய்யை தேடி சென்றார் அஜய்யின் தந்தை.
 
ஒரு தடவை பயமுறுத்திய உடன் பயந்து போலீசுக்கு போய் வாக்கு மூலம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் பயந்து வாக்கு மூலம் கொடுக்க வைக்க வேண்டும். அஜய்யின் தந்தை அஜய்யை தேடி செல்லவும் ராஜவேலுவும் சிம்ரனும் மதியிடம் வந்து சேர்ந்து நடந்ததை சொல்லி சிரிக்க, 
 
“மதி சிம்ரன் உன் கண்ணுக்கு தெரிகிறானு அஜய்யிடம் சொல்லிட்டோமே! அவன் அப்பன் சொல்லுறத நம்பிட்டானா உனக்கு போன் பண்ணி கேப்பானே! உனக்கும் எனக்கும் உண்மை தெரிஞ்சிருச்சு, அதனாலதான் கம்பனில இருந்து வந்ததா சந்தேக பட மாட்டானா?” அக்ஷய் யோசனையாக சொல்ல 
 
“நான் போலீஸ் சும்மா போட்டு வாங்க சொன்னேன். ஆவிங்கள நம்புறீங்களானு திருப்பி கேப்பேன்” மதி அசல்டாக சொல்ல ராஜவேலுவும், சிம்ரனும் “ஆ..” என பாத்திருந்தனர். 
 
அக்ஷய் சொன்னது போலவே அஜய் மதியை அழைத்து சிம்ரனை ஆவி உன் கண்ணுக்கு தெரிகிறதா சொன்னியே! அவள் ஏதாவது சொன்னாளா என்று கேட்க “நீங்க வேற நான் போலீஸ் சும்மா போட்டு வாங்க பொய் சொன்னேன். ஆவியாவது, பிசாசாவது. இந்த காலத்துல போய் இதெல்லாம் யாராவது நம்புவார்களா?” என்று அவனையே கேட்க
 
 “அதானே!” அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு அலைபேசியை அனைத்திருந்தான் அஜய். 
 
ஆனாலும் விடாது அக்ஷையை அழைத்து. மதி ஏன் அவ்வாறு கூறினாள். நீ பொய் கூற மாட்டியே! இப்போ கேட்டால் இப்படி கூறுகிறாள் என்று கேட்டான் அஜய். 
 
“மதிக்கு அவ அப்பான்னு உயிர். அப்பா இறந்துட்டாரு.  அடிக்கடி அப்பா இருக்கிறதா நினைச்சி அவர் கிட்ட பேசுறா. இது ஒரு வித மனநோய் என்று டாக்டர் சொன்னாரு. இறந்தவங்க அவ கண்ணுக்கு தெரியிறதா அவளே! கற்பனை பண்ணிப்பா. கேஸ் பைலை சிம்ரன் போட்டோ பாத்ததும் உன் கிட்ட அப்படி சொன்ன அதான் நானும் வேற வழியில்லாம அப்படி சொல்ல வேண்டியதா போச்சு. நிதானமா இருந்தா தான் அப்படி சொல்லவே இல்லனு சொல்லுவா. உன்ன தனியா சந்திச்சா உண்மையை சொல்லலாம்னு இருந்தேன். எங்க?”  அக்ஷய் வருந்துவது போல் கூற குழம்பினான் அஜய்.
 
அக்ஷய் அஜய்யிடம் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த மதி அவனை முறைத்தவாறேதான் அமர்ந்திருந்தாள். பேசி முடித்து விட்டு என்ன என்று அக்ஷய் புருவம் உயர்த்த 
 
“எனக்கு மனநோயா?” 
 
“ஆஹா போலீஸ்காரி பொய்ண்ட்ட புடிச்சிட்டாளே! விடமாட்டாளே!” அவள் கேட்டது காதில் விழாதவாறு “ஆமா கமிஷ்னர் சார் உனக்கு பல தடவ போன் பண்ணி இருக்குறாரு ஏன் பேசல?” மதியை கேள்வி கேட்டான் அக்ஷய்.
 
“நான் எதுக்கு பேசணும். டில்லி வரும் போது லீவ் போட்டுத்தான் வந்தேன். லீவ்ல இருக்கும் போது பேசணும்னு ஒன்னும் அவசியம் இல்லையே!” மதி முறுக்கிக்கொள்ள 
 
“நம்ம நிச்சயதார்த்த செய்தியை டிவில பார்த்துட்டுதான் போன் பண்ணினாரு. உன்னையும் விஷ் பண்ணத்தான் பேசி இருப்பாரு”
 
“ஒன்னும் தேவ இல்ல” கோபமாகவே பதில் சொன்னாள் மதி. 
 
“இப்போ எதுக்கு அவர் மேல கோப படுற? அவரோட உதவி இல்லாம நீ என் கிட்ட வந்திருக்க முடிந்திருக்காதே மதி. இப்போ நாம நிச்சயதார்த்தம் வர நடந்திருக்கு நாளைக்கு நாம கல்யாணம் பண்ண போறோம்” 
 
“அதான் எனக்கு புரியல” 
 
“என்ன புரியல?”
 
“எதுக்கு என்ன கல்யாணம் பண்ண பாக்குறீங்க?”
 
“ஐம் இந்த லவ் வித் யு மதி” என்று அக்ஷய் சொல்ல 
 
“இதை நான் நம்பணுமா?” என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்தாள் மதி.    
 
“சாதாரணமா எப்போன்னுதான் எல்லோரும் கேப்பாங்க” என்று அக்ஷய் சிரிக்க 
 
“சரி எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சீங்க?” 
 
“போன ஜென்மத்துல இருந்ததுன்னு சொன்னா நீ நம்பவா போற?” என்று சொல்லி அவளின் முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டவன் “உன்னை பார்த்த நொடி” என்று கூற 
 
“உலகத்துலயே பெரிய பொய் இதுவாகத்தான் இருக்கும் அக்ஷய் சாம்ராட் அவர்களே! வேற ஏதாச்சும் ட்ரை பண்ணுங்க” கேலியாக சிரிக்கலானாள். 
 
அவள் சிரித்து முடிக்கும்வரை அவளையே பாத்திருந்தவன் “நீ நம்பாததற்கு காரணம் என்ன?”
 
“பிடிச்சிருந்தா பட்டென்று சொல்லி இருக்கலாம் நீங்கதான் சொல்லவே இல்லையே!” 
 
“அதுக்குதான் திட்டம் போட்டு உன்ன கூடவே வச்சிக்கிட்டேன்” 
 
“ஒரு தடவையாவது காதலிக்கிறதா சொல்லல”
 
“கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேனே” 
 
“அப்படிதான் ப்ரொபோஸ் பண்ணுவாங்களா?” மதி முறைக்க 
 
“உனக்கு எத்தனை பேர் ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க? நான் லவ் பண்ண ஒரே பொண்ணும் நீதான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச ஒரே பொண்ணும் நீதான், அதான் கல்யாணம் பண்ணலாம்ணே கேட்டேன்” 
 
“அதான் நான் அன்னைக்கே நோ சொல்லிட்டேனே!” 
 
“நீ வேறுயாரையாவது லவ் பண்ணுறியா?”
 
“இல்ல” 
 
“அப்போ நீ எனக்குதான் மதியழகி. கல்யாணத்துக்கு தயாராகு” என்றவன் அத்தோடு பேச்சு முடிந்து விட்டது என்று எழுந்து சென்று விட கோபம் வருவதற்கு பதிலாக மதிக்கு சிரிப்புதான் வந்தது.
 
அக்ஷையின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவே மதி எதுக்கு மடக்காக பேசலானாள், அவன் அன்பு அவளுக்கு புரியாமலில்லை. அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பார்த்த நொடி காதல் என்பதை தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் அன்று நடந்துகொண்ட முறைதான் அவளுக்கு தெரியுமே! எதுவாக இருந்தாலும் ஒருநாள் உண்மை தெரியவரும் என்று அமைதியானாள்.
 
இங்கே அஜய் அவன் தந்தையையே வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான். 
 
“என்ன நீ பேய் பிசாசுன்னு பேசிக்கிட்டு இருக்க? உன்ன நம்பி நானும் மதிய விசாரிச்சா அவளுக்கு மனநோய்ன்னு அக்ஷய் சொல்லுறான். அவன் பொய் சொல்ல மாட்டான்”
 
“அப்போ நான் பொய் சொல்லுறேனா? வா வந்து என் வீட்டை பாரு?” 
 
“இரு இரு ஏதோ தப்பா இருக்கு அன்னைக்கி மதி சிம்ரனை பத்தி சொல்ல மொத அக்ஷய் தான் மதி கிட்ட சிம்ரன் என்ன சொன்னான்னு கேட்டான். அப்போ ஆவி உண்மையா?” அஜய் குழம்ப 
 
“நான் சொல்லல” 
 
“அப்படி இருந்திருந்தா இந்த நேரம் அக்ஷய் என் சட்டையை பிடிச்சிருப்பான். சரியாக சிந்தித்தவன் தருணத்தில் தவறாக முடிவெடுத்தான்.  
 
அக்ஷய் எதுவானாலும் முகத்துக்கு நேராக பேசுபவன். முதுகில் குத்தும் பழக்கம் அவனிடத்தில் இல்ல. அக்ஷையின் இந்த குணத்தை நன்கு அறிந்த அஜய் உண்மையை அறிந்திருந்தால் அக்ஷய் அவன் முன் நின்று கேள்வி கேட்டிருப்பான் என்றே எண்ணினான். 

“இல்ல எந்த குழப்பமும் இல்ல. மதி சிம்ரனோட ஆவி இருக்குனு சொன்னா.. ஆனா அவளுக்கு எல்லாம் மறந்து போச்சுன்னு சொன்னா. அப்படினா மதிக்கு உண்மை தெரியாது. அக்ஷய்க்கும் உண்மை தெரியாது. நீ சொல்லுற மாதிரி சிம்ரனோட ஆவி வந்து உன்ன பயமுறுத்திருச்சுனு சொல்லுறது உண்மைனா? ஆவியை ஒழிச்சு கட்டணும்” 
 
“எப்படி?”
 
“மந்திரவாதி? பூஜை, இந்த மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்” 
 
“ஆவியை விரட்டிடலாமா?” 
 
“ம்ம்” அஜய் யோசனையாகவே சொல்ல அஜய்யின் தந்தை உதித் தலையசைத்தவாறே வெளியேறினான்
 
ஆனால் தந்தையை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சி செய்து யார் என்று அறிய முயற்சி செய்யும் அக்ஷய் மதியோடு கூட்டு சேர்ந்ததால் பதுங்கியும் பாய்வான் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை.

Advertisement