Advertisement

அத்தியாயம் 19
அஜய்யை காதலித்த பெண் சிம்ரன் இல்லாத பட்சத்தில் அந்த பெண் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டாள். அவ்வாறு இறந்திருந்தால் ஆவியாக இன்று அஜய்யின் பின்னாடி தான் சுற்றிக்கொண்டிருப்பாள் என்று நம்பிய மதி எதோ ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுதான் அவள் அஜய்யை காண வராமல் இருந்திருக்கக் கூடும் என்று நம்பினாள்.   
அதனாலையையே அவளை தேடி அக்ஷையோடு அவள் படித்த காலேஜ் வரை சென்று அவள் பெயரை கண்டு பிடித்து, விலாசத்தை கண்டு பிடித்து வீட்டை தேடி சென்றால் அவளுக்கு நிச்சயம் ஆகிவிட்டதாம். 
வேறு ஒருவனை நிச்சயம் செய்துகொள்ள  எதற்கு அஜய்யை காதலித்தாளாம். நன்றாக நான்கு கேள்வி கேட்க வேண்டும் என்று கோபமாக வண்டியில் ஏறிய மதி வண்டியை நகரத்துக்கு செலுத்தும் படி அக்ஷையிடம் கூறியவள் பப்லியை வசை பாடியவாறே வர 
“அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சினையோ! வீட்டுல மிரட்டினங்களோ!”
“இது உங்களுக்கே அபத்தமா தெரியல? அஜய் சாம்ராட்டுக்கு பொண்ணு கொடுக்க அந்த குடும்பத்துக்கு கசக்குமா?” மதி அக்ஷையை முறைக்கலானாள். 
“பயந்து சொல்லலைன்னா?” 
“அஜய் மாமாக்கு ஒரு போன் பண்ணி சொல்லி இருந்தா? அவர் பாத்துக்க மாட்டாரா?” கொஞ்சமாலும் கோபம் குறையாமல் பொருமினாள் மதி. 
மதி சொல்வது முற்றிலும் உண்மையே! காதலிப்பவர்கள் தங்கள் காதல் கை கூடுவதை பற்றி மட்டுமே சிந்தித்து செயல் படுவார்கள். பெற்றோர் மிரட்டி இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு எதிராகத்தான் செயல் படுவார்கள். காதலிப்பவர்களை மிரட்டி ஒரு காலமும் பணிய வைக்க முடியாது. 
அதே போல் பாசத்துக்கு கட்டுப்பட்டவளானாலும் அஜய்யை தொடர்பு கொண்டிருப்பாள். அக்ஷையால் பப்லியை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழப்பத்திலையே வண்டியை செலுத்த மதி புலம்பியவாறேதான் வந்தாள்.  
பண்ணை வீட்டை பார்த்தாலும் வசதியானவர்கள் போல்தான் தெரிந்தது. அந்த பெண் யார் என்ன என்று விசாரித்து அறிந்து கொள்ள அக்ஷய்க்கு அரைமணித்தியாலம் போதும். ஆனாலும் நேரில் சென்றே பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். 
அவனுக்கு அஜய்யை நினைத்தால் பாவமாக இருந்தது. இதை அஜையால் கண்டு பிடித்திருக்க, முடியும். தங்கையாக நினைத்த சிம்ரனின் இறப்பும் அதை தொடந்த சம்பவங்களினாலும் மனதளவில் பெரிதும் அடிபட்டு போனவன், பப்லி அலைபேசி அழைப்பு விடுக்காததும் மீடியாக்களில் வந்த செய்தியை நம்பி இருப்பாள் என்று எண்ணி இருக்கக் கூடும். அத்தோடு தந்தையின் சொல்லையும் தட்ட முடியாமல் தடுமாறி சம்மதித்து அமைதியாகி விட்டான். முதலில் இந்த பெண் பப்லிக்கு என்ன பிரச்சினை என்று பார்க்க வேண்டும் அதன் பிறகு கல்யாணத்தை நிறுத்துவதை பற்றி அப்பாவிடம் பேசலாம் என்ற முடிவுக்கு வந்தான் அக்ஷய்.
“என்ன அக்ஷய் சார் அமைதியா வரீங்க? இங்க ஒருத்தி லூசு மாதிரி கத்திக்கிட்டு வராளே என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?” பப்லியின் மேல் இருந்த மொத்த கோபமும் அக்ஷையின் புறம் திரும்ப 
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன் “யார் மேலையோ இருக்குற கோபத்தை ஏன் என் மேல காட்டுற மதி? இழுத்து வச்சி கடிச்சிடுவேன்” என்று மிரட்ட 
அவன் வண்டியை நிறுத்துவான் என்று எதிர்பார்க்காதவள் திருதிவென முழித்து விட்டு “முதல்ல வண்டிய எடுங்க, உங்க பாடிகாட்ஸ் வந்து கண்ணாடியை தட்ட போறாங்க” என்னதான் அக்ஷய் தண்ணீர் குடிக்க நிறுத்தினோம் என்று சொல்லாமல் சொன்னாலும், அவர்கள் ஏதாவது கற்பனை பண்ணுவார்களோ! என்று மதிக்கு வெட்கமாகவும் இருந்தது. 
ஆனால் அக்ஷய் அவள் பேச்சை மதிக்காமல் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். 
“ப்ளீஸ். ப்ளீஸ். யாரோ மேல இருந்த கோபத்தை உங்க மேல காட்டினது தப்புதான். வண்டிய எடுங்க” மதி கோபத்தை விட்டு விட்டு கெஞ்ச ஆரம்பித்தாள். 
வந்த சிரிப்பை அடக்கியவாறே “அப்போ ஒரு கிஸ் கொடு வண்டியை எடுக்கிறேன்” அவள் புறம் திரும்பாமலே கூற    
“என்ன விளையாடுறீங்களா?” அக்ஷையை மதி முறைக்க 
“இப்போ நான் வண்டியை எடுக்கவா?  வேணாமா?” அதையும் அவள் புறம் திரும்பாமலே கேட்க நீ என்ன வேணாலும் பண்ணிக்க என்றவாறு மதியும் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள். 
மெய்ப்பாதுகாவலன் வந்து கண்ணாடியை தட்டினால் அக்ஷய் கண்ணாடியை திறந்து பதில் சொல்லித்தான் ஆகா வேண்டும். அதன் பின் வண்டியை எடுக்கத்தானே வேண்டும். இதுதான் மதியின் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் பதினைந்து நிமிடங்கள் கடந்தும் யாரும் வண்டியின் அருகில் கூட வரவில்லை. அக்ஷையும் வண்டியை எடுப்பது போல் தெரியவில்லை. 
 ஒன்றுமில்லை என்பதை கூற இரண்டு தடவை வண்டியின் ஹெட்லைட்டை எரியவிட்டு அனைத்து விட்டே தன் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறான் அக்ஷய். அதனால் தான் பாதுகாவலர்கள் யாரும் அவன் சிறுது நேரம் ஓய்வெடுக்கிறான் என்றெண்ணி நெருங்காமல் இருக்கின்றனர். 
இதையறியாமல் மதி ஒரு கணக்கு போட, அக்ஷய் தன் காரியத்தில் கண்ணாக அமர்ந்திருந்தான். மதியின் நெருக்கம் அவனுக்கு பிடித்திருந்தது. அவளின் உரிமையான கோபம் கூட. எங்கே தான் சொல்வதை அவள் செய்வாளோ! என்ற ஏக்கமும், எதிர்பார்போடும் தான் அமர்ந்திருந்தான். 
முரண்டு பிடிப்பவள்தான். உடனடியாக ஒத்துக்கொள்ள கூடியவள்ள மதி.  அவள் மனம் அவன் புறம் சாயும் வேளை அவளை கட்டாயப்படுத்துவது நல்லதா? பொறுமையாக கையாள சொல்லி அவன் மனம் கூறினாலும், மதியழகியை திருமணம் எனும் பந்தத்தினூடே சீக்கிரம் தன்னிடம் நிருத்திக்கொள்ள இந்த நெருக்கத்தை ஒத்திகையாக பார்கலானான் அக்ஷய். 
நேரம்தான் கடந்து கொண்டிருந்ததே! தவிர இருவரும் அசைவது போல் தெரியவில்லை. மதி இரண்டு தடவை அக்ஷையை திரும்பி பார்த்தாள். அவன் அவள் புறம் கண்ணை கூட திருப்பாமல் கண் மூடி அமர்ந்திருந்தான். 
“தூங்கி விட்டானா?” என்று கூட எண்ணினாள் மதி. அவ்வாறில்லை என்பதை காட்டும் விதமாக அக்ஷையின் வலது கை விரல்கள் அவன் தொடையின் மீது தாளம் போட்டுக்கொண்டிருந்தன.
அரைமணித்தியாலம் கடந்தும், பாதுகாவலர்களும் வரவில்லை என்றதும் தான் மதிக்கு அக்ஷய் விளையாடவில்லை என்பதே! உரைக்க ஆரம்பித்தது. 
“அக்ஷய் நான் முத்தம் தராமல் நீங்க வண்டிய எடுக்க மாட்டீங்களா?”  அவன் புறம் திரும்பி அமர்ந்தவள் அவனை பார்த்து நேராகவே கேட்க 
அவள் புறம் கழுத்தை மாத்திரம் திரும்பியவன் “ஆமாம்” என்று தலையசைத்தான். 
“எங்கே கொடுக்கணும்? உங்க கன்னத்துலயா? இல்ல உதட்டுலயா? நீங்க கொடுத்ததை திருப்பி கொடுக்குற மாதிரி கொடுத்த சரியா?” 
அவளின் பேச்சின் த்வனியிலையே கோபம் அப்பட்டமாக தெரிய, எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பி இருந்தான் அக்ஷய். 
வண்டி நகரவும் கேள்வியாக அவனை ஏறிட்டாள் மதி. ஆனால் அக்ஷையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எப்பொழுதும் அக்ஷய் ஒரு புரியாத புதிர் எனும் விதமாக அவனை பார்த்தவள் “ஏன்” என்று கேட்போமா? உள்ளுக்குள் தோன்றிய கேள்வியை முழுங்கி விட்டு அமைதியானாள். 
மதி வெட்கப்பட்டவாறே மறுத்திருந்தால் கூட அக்ஷய் ஏற்றுக்கொண்டிருப்பான். அவளின் கோபம் தான் அவனால் தாங்க இயலவில்லை. ஒரு முத்தம் கேட்டது கொலை குற்றம் செய்தது போல் கோபம்கொள்ள வேண்டுமா? இனி இதை பற்றி வேறு பேசி புரியவைக்க என்ன இருக்கிறது. அவளே! அவள் மனதை உணர்ந்தாள் தான் உண்டு. என்றே அமைதியானான். 
மதியின் கோபம் வேறு. பப்லியை தேடிச்செல்லும் நேரத்தில் எதற்கு சிறுபிள்ளை தனமான இந்த விளையாட்டு என்றே கொதித்தாள். அவளால் அக்ஷையின் மனதை ஆழமாக புரிந்து கொள்ள முடியவில்லை. முயற்சசிக்கவுமில்லை. ஒருவேளை பழைய நியாபகங்கள் இருந்திருந்தால் சூழ்நிலை வேறுமாதிரி இருந்திருக்கக் கூடும்.  
வண்டி நகரத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்க, வண்டியினுள் மயான அமைதி நிலவியது. அக்ஷய் – மதி இருவருமே! தங்களின் சிந்தனையில் உழன்றுக்கொண்டிருக்க தங்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளாமலே நகரத்தை வந்தடைந்து ஒருவாறு பப்லியின் வீட்டையும் தேடிக் கண்டு பிடித்தனர்.
பப்லியை பார்க்க வேண்டும் என்று கூற ஒருவேலையால் இருவரையும் அழைத்து சென்று வரவேற்பறைபோல் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்த்த, அக்ஷய் – மதி இருவரும் ஒரு தவிப்புடனே! அமர்ந்திருந்தனர். 
பண்ணை வீட்டை போல் இரண்டு மடங்கு பெரிய வீடு. வீடு முழுக்க சொந்தபந்தங்கள் நிறைந்து வழிய, வேலையாட்கள் அவர்களை கவனிக்கும் பணியில் இருந்தனர். நிச்சயதார்தத்துக்கு வந்தவர்கள் இன்னும் செல்லவில்லை என்று தெரிகிறது. இவர்களை வாசலின் பக்கமாக உள்ள ஒரு சிறிய அறையில் அமர்த்த யாரையும் சந்திக்க முடியவில்லை. சத்தம் மட்டும்தான் கேட்டது. குழந்தைகள் மட்டும் ஓடியாடி விளையாடி கொண்டிருந்தனர். 
அதுவும் நல்லதுதான். பப்லியை சந்தித்து, உண்மையை உள்ளபடி அறிந்து கொண்டால்தான் மேற்கொண்டு பேச முடியும் என்று மதி அக்ஷையை பார்க்க, அவன் மனதிலும் அந்த எண்ணமே! 
பத்து நிமிடங்கள் செல்ல, பப்லியை காணவில்லை. அவள் வருவாளா? அல்லது வேறுயாராவது வந்து ஏதாவது காரணம் கூறி அவளை பார்க்க முடியாது என்று கூறுவார்களா? மதியின் மனம் அடிக்க ஆரம்பித்தது. 
அந்த வரவேற்பறையில் மறுபுறத்திலுள்ள கதவு திறக்கப்பட காலடி ஓசையும் கேட்டது. மதி மற்றும் அக்ஷையின் பார்வை ஒரே நேரத்தில் அப்பக்கம் திரும்ப அங்கே காஜல் வந்து கொண்டிருந்தாள்.
காஜல் இங்கே என்ன செய்கிறாள் என்ற ஆச்சரிய பார்வையோடு மதி எழுந்துகொள்ள, அக்ஷய் அசையாது அமர்ந்திருந்தான். 
அங்கே அக்ஷய் மற்றும் மதியை கண்ட காஜல் முகம்கொள்ளா புன்னகையில் வேகநடையில் வந்து மதியை இறுக அணைத்துக்கொண்டு நலம் விசாரிக்கலானாள்.
“ஓஹ் .. மை கார்ட் காஜலின் சொந்தகார பெண் என்பதால் தான் பப்லி அமைதியாக இருந்தாளா?” மதியின் மனம்  காஜலிடம் எவ்வாறு கேட்பதென்று தயங்க அக்ஷையின் புறம் திரும்பி இருந்த காஜல் அவனை வரவேற்று இருந்தாள்.
ஒரு தலையசைப்பிநிலையே அவளுக்கு பதில் சொன்ன அக்ஷய் மதியை பார்க்க, அவள் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் இருப்பது புரிந்தது. 
காஜல் வேலையாள் அழைத்து அவர்களுக்கு உண்பதற்கும், குடிப்பதற்கும் கொண்டுவரும் படி ஏவிக்கொண்டிருக்க, மதியை உலுக்கிய அக்ஷய் என்னவென்று கேட்க, மதியும் புலம்பலானாள். 
“பப்ளிக்கு நிச்சயமாச்சுனு தான் அந்த வேலையாள் சொன்னான். இங்க காஜல் நிக்குறா. காஜலுக்குத்தானே அஜையோடு நிச்சயமாச்சு. ஏன் ரெண்டு பேரும் ஒரே ஆளாக இருக்க கூடாது?” அக்ஷய் மதியின் குழப்பத்தை தீர்க்கும் விதமாக கூற அதை தீர்க்க வேண்டியவளே காஜல்தான் எனும் விதமாக மதி அக்ஷையை முறைத்தாள். 
“சும்மா சும்மா என்ன முறைக்காத மதி. அவ கிட்ட பேசு” என்று அக்ஷய் அலைபேசியை நொண்டியவாறு அமர்ந்துகொண்டு மதி, காஜல் பேசுவதை கவனிக்கலானான். 
காஜல் வந்து மதியிடம் பேச ஆரம்பித்ததும் பப்லி யார் என்று கேட்டாள் மதி. 
“ஹேய் என் பேர் உனக்கு எப்படி தெரியும்” என்று குதூகலித்தாள் காஜல்.
“இரு இரு உன் பேர் காஜலா? பப்லியா?” மதி அவளை அமைதி படுத்த 
“என் பேர் காஜல் தான் வீட்டுல செல்லமா பப்லினுதான் கூப்பிடுவாங்க, அதுவே காலேஜ்வரை தொடர்ந்ததுனா பாரேன். கல்யாண கார்டளையும் பப்லினு போட வேண்டி வரும்னு அப்பாதான் கல்யாணம் கூடி வந்ததிலிருந்து காஜ்லனே கூப்பிட ஆரம்பிச்சிட்டாரு. இப்போ எல்லோரும் காஜ்லனே தான் கூப்பிடுறாங்க, சில நேரம் குழம்பியும் போறாங்க” என்றவள் சிரிக்கலானாள். 
“அப்போ அஜய் மாமாவோட காலேஜுல இருக்கும் பொழுதே போன்ல பேசினது, பழகினது நீயா?” மதியின் குரல் கோபமாகத்தான் ஒலித்தது. 
ஆனால் மதியின் கோபம் எல்லாம் காஜலுக்கு தெரியவில்லை. அஜய்யின் பெயர் சொல்லும் பொழுதே வெக்கப்பட்டவள், அவளின் காதல் கதையை சொன்னதும் மேலும் வெக்கப்பட்டு, பின்பு ஆச்சரியத்தோடு 
“ஹேய் உனக்கெப்படி தெரியும்? அஜய் சொன்னாரா? இல்லையே! அவருக்கே தெரியாதே! கல்யாணத்துக்கு பிறகு சப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேனே!” என்று யோசனை முகபாவனத்தை கொடுத்தவள் மீண்டும் மதியை ஏறிட்டு “உனக்கெப்படி தெரியும்?” என்ற கேள்வியை கேட்டு “ஹேய் நீ போலீஸ் இல்ல நீயே கண்டு பிடிச்சிருப்ப” என்று பதிலையும் சொன்னாள். 
“கல்யாணத்துக்கு பிறகு சப்ரைஸ் கொடுக்க இருந்தாலாமா? என்ன உளறுகிறாள் இவள்” மதி அவளை முறைத்துக்கொண்டிருக்கும் பொழுதே அஜய் உள்ளே நுழைந்தான்.
“நீதானா என்னோடு அலைபேசியில் பேசியது?” அஜய் உள்ளே நுழைந்த உடனே காஜலை பார்த்து கேட்டிருக்க, அஜய்யை அங்கே கண்டதும் சந்தோசத்தில் பூரித்தவள் பேச்சற்று போக அவளை நெருங்கி நின்ற அஜய் “சொல்லு காஜல் என்னோடு பேசியது நீதானா?” அதட்டலாகத்தான் கேட்டான். 
“ஆமாம்” என்று தலை குனிந்தாள் காஜல் 
“நான் எப்படி உன்ன நம்புறது?” உறுமினான் அஜய். 
அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்த காஜல் “என்ன சொல்றீங்க அஜய்?” என்று கேட்க்கும் பொழுதே கண்களில் நீர் நிரம்பி இருந்தது. 
அவனுடைய வலியையும், வேதனையையும் அவளின் கண்ணீர் கரைக்கவில்லை போலும் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும் என்னும் விதமாக நின்றிருந்தான். 
அஜய்யின் கையை பிடித்து இழுக்காத குறையாக தனதறைக்கு அழைத்து சென்றாள் காஜல். பின்னோடு செல்ல முற்பட்ட மதியின் கையை பிடித்து தடுத்த அக்ஷய் 
“அவங்க பேசி தீர்த்துக்கொள்ளட்டும் மதி” என்று கூற  
“ஆமா அஜய் மாமா எப்படி கரெக்ட்டா இந்த நேரத்துல இங்க வந்தாரு?” சந்தேகமாக அக்ஷையை ஏறிட்டாள் மதி 
“பப்லிய கண்டு பிடிச்சிட்டோம்னு லொகேஷன் அனுப்பினேன். இது காஜல் வீடுன்னு எனக்கு தெரியாது. நாம கேட்டு சொல்லலைனா? அதான் அஜய்யை வர சொன்னேன்” அமைதியான குரலில் கூறினான் அக்ஷய்.
“ஆமா என் கூடவே தானே! இருந்தீங்க? எப்போ மெஸேஜ் பண்ணீங்க?” புருவம் சுருக்கினாள் மதி. 
புன்னகைத்தவன் “இந்த வீட்டுக்குள்ள வந்த போ என்ன விட்டுட்டு பப்லிய பார்க்க வேகமாக நடந்தியே!  நான் உன் பின்னாடி தானே வந்தேன் அப்போ” என்றான் அக்ஷய்.
அவனை சந்தேகமாக பார்த்த மதி “அஜய் மாமா எப்படி சீக்கிரம் வந்தாரு?” 
“எனக்கென்ன தெரியும் நீ அத அவன் கிட்ட தான் கேக்கணும். ஒருவேளை அவன் காஜலை பார்க்க புறப்பட்டுக்கிட்டு இருக்கும் பொழுதுதான் நான் மெஸேஜ் பண்ணி இருப்பேனோ என்னவோ” என்றவன் “போலீஸ்காரியானாலும் இப்படியெல்லாம் சந்தேகமா கேக்க கூடாது என்று சத்தமாகவே முணுமுணுத்தான். 
அவன் முணுமுணுப்பு மதியின் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது. 
அஜய்யை தனதறைக்கு அழைத்து சென்ற காஜல் அவன் பரிசாக கொடுக்க எண்ணி அன்று ரெஸ்டூரண்ட்டில் மறந்து வைத்து விட்டு சென்ற தாஜ்மகாலை காட்ட அதிர்ச்சியடைந்தான் அஜய்.
“ஆமா அன்னைக்கு சிம்ரன் இறந்ததை கேள்வி பட்டதும் ஒன்னும் ஓடல அப்படியே கிளம்பிட்டேன். தாஜ்மலை அங்கையே விட்டுட்டேன். அதற்கு பிறகு அதை பத்தின சிந்தனை கூட வரல” நெற்றியை தடவியவாறே கூறினான் அஜய்.  
“அன்னைக்கி உங்கள மீட் பண்ண வந்தா… போன் பேசிக்கொண்டே நீங்க அவசர அவசரமாக கிளம்பி போயிட்டீங்க, வேற வழியில்லாம நான் தாஜ்மகாலை எடுத்துட்டு வந்தேன்” என்றாள் காஜல்
“ஏன் அதற்கு பிறகு எனக்கு போன் பண்ணவே இல்ல?” 
“அன்னையோடு என் காலேஜ் முடிஞ்சிருச்சு. நேர்ல சந்திச்சு உங்க கிட்டு என்ன பத்தி எல்லா உண்மையையும் சொல்லலாம்னு தான் அன்னைக்கி மீட் பண்ணலாம்னு சொன்னேன். ஆனா ஏதேதோ நடந்திருச்சு. அப்பொறம் பாத்தா எங்கப்பா உங்களையே மாப்பிள்ளையா கொண்டு வந்து நிறுத்தி சம்மதமான்னு கேட்டாரு பாருங்க? சரி கல்யாணத்துக்கு அப்பொறம் சப்ரைஸா சொல்லிக்கொள்ளலாம்னு இருந்துட்டேன்”
“ஆனா எனக்குதான் நீ யார்னு தெரியலையே காஜல். நான் கல்யாணத்துக்கு சம்மதிச்சது உனக்கு அதிர்ச்சியா இல்லையா?” கவலையாக கேட்டான் அஜய். 
“வேற யாரையாவது கல்யாணம் பண்ண சம்மதித்திருந்தா விட்டுடுவேனா? சட்டையை பிடித்திருக்க மாட்டேனா?” பொய்யாக கோபப்பட்டாள் காஜல் 
அவளை ரசனையாக பாத்திருந்த அஜய் “வா போய் அக்ஷய் மதியிடம் நடந்ததை கூறலாம். நான் சோகமாக இருப்பதை கண்டு, நான் காதலித்த பெண்ணை கண்டு பிடித்து நம்ம கல்யாணத்தை நிறுத்த துடித்தவர்கள் அவர்கள்” என்று அஜய் கண்சிமிட்ட 
“என்னது” ஒரு நொடி திகைத்தவள் “இந்த மதி ஓவரா பொலிஸ் ஆகுறா. அவளுக்கு இருக்கு இன்னைக்கி என்றவாறு அறையை விட்டு வெளியேறினர்”
“இருவரும் சந்தோசமாக பேசி சிரித்தவாறு வரவும் அக்ஷய் நிம்மதி பெருமூச்சு விட மதி சந்தேக கண்கொண்டே பார்க்கலானாள். 
நடந்ததை அஜய் தீவீரமாக சொல்ல தன் பங்கையும் காஜல் கூறலானாள். 
பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மதி “ஏன் அஜய் மாமா நீங்க காதலிச்ச பொண்ணு வேற யாராகவோ! இருக்கக் கூடாது? தாஜ்மகாலை இவ வைத்திருக்குறதால மட்டும் இவதான் அந்த பொண்ணுன்னு எப்படி முடிவு பண்ணீங்க?” என்று சந்தேகத்தை கிளம்பினாள்.    
   

Advertisement