Advertisement

அத்தியாயம் 18
அஜையோடு பேசியதில் அவனுக்கு அலைபேசி அழைப்புகளை விடுத்த எண்ணும், அந்த பெண்ணும் குருகுலம் காலேஜோடு தொடர்பு பட்டவர்கள் என்று முடிவு செய்த மதியும் அக்ஷையும் விசாரணையை இங்கிருந்து ஆரம்பிக்க முடிவெடுத்து குருகுலம் லேடீஸ் காலேஜை நோக்கி புறப்பட்டனர். 
வண்டியில் வரும் பொழுதே அக்ஷையோடு பேசிய மதி தனக்கு எழுந்து சந்தேகங்களையும் தான் அஜய்யிடம் பேசி தெளிவு படுத்தியதையும் கூறினாள். 
“என்ன சொல்லுற மதி சிம்ரன்தான் அஜய் லவ் பண்ண பொண்ணுன்னு சந்தேக பட்டியா? எத வச்சி உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்துச்சு” மதி சந்தேகப்பட்டால் அதில் விஷயமிருக்கும் என்று நம்பிய அக்ஷய் வண்டியை ஓட்டிவாறே நிதானமாகத்தான் கேட்டான். 
“அஜய் மாமாக்கு தான் பேசின பொண்ணோட முகம் கூட தெரியாது. ஏன் பேர் கூட தெரியாது. குரல் மட்டும்தான் தெரியும்” 
இடையில் குறுக்கிட்ட அக்ஷய் “சிம்ரன் தான் அஜையோடு நேரில் பல தடவை பேசி இருக்கானே! அப்பொழுது கண்டு பிடித்திருப்பானே!” 
“ஒருவேளை போனில் பேசும் பொழுது குரல் வேறு மாதிரி கேட்டிருந்தால்” 
“அப்படியும் கேட்குமா?” அக்ஷய் குழப்பமான முகத்தோடு மதியை நோக்க 
“கேட்டிருந்தால்” குறும்பாக சிரித்தாள் மதி.
சதா முறைத்துக் கொண்டிருக்கும் மதியின் இந்த புதிய அவதாரம் அக்ஷையின் காதல் நெஞ்சை தடம் புரளச் செய்ய வண்டியை ஓர் வளைவில் நிறுத்தியவன் அவளை இழுத்து அணைத்து இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.
அந்த முத்த தாக்குதலை எதிர்பார்க்காத மதி நிலை தடுமாறி அக்ஷையின் மீதே சாய அவளை அவள் விலகி விடாதவாறு இடது கையை இடையோடு சேர்த்து அணைத்து  மேலும் தன்னுள் இறுக்கியவன் வலது கையால் அவள் கழுத்தை வளைத்து முத்தமிட வசதியாக தன் புறம் திருப்பி இருந்தான்.
அக்ஷையின் அருகில் தன்னிலை மறக்கும் மதியழகி அவன் கொடுத்த முத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தன்னை தொலைத்துக்கொண்டிருக்க, அக்ஷையின் வண்டியின் கண்ணாடி தட்டப்பட்டது. 
அக்ஷையின் வண்டி சட்டென்று நின்றதும் அவன் வண்டியை தொடர்ந்து வந்த அவனது பாதுகாப்பு வண்டிகளும் நின்றிருந்தது. முன்னாடி சென்ற வண்டியிலிருந்தும் பின்னாடி வந்த வண்டியிலிருக்குதும் இருவர் மட்டும் இறங்கி சுற்றுப்புற சூழலை அலசி அவதானித்து விட்டே அக்ஷையின் வண்டியின் அருகில் ஒருவன் மாத்திரம் வந்திருந்தான். 
பொதுவாகவே டில்லியில் அக்ஷய் வண்டி ஓட்ட மாட்டான். இன்று மதியோடு செல்வதாலையே வண்டியை எடுத்திருக்க, வண்டி சட்டென்று நின்றதும், காவலர்கள் ஏதோ கோலாரென்றே கருதினர். ஆபத்தேதும் இல்லையென்று உறுதி படுத்திய பின்னே வண்டியின் அருகில் வந்து கண்ணாடியை தட்டினான் மெய்ப்பாதுகாவலன் ஒருவன்.  
 
அக்ஷையின் வண்டியின் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே இருந்து பார்த்தால் தெரிவதில்லை. தெரிந்திருந்தால் தொந்தரவு செய்யாது விலகி சென்றிருப்பான். 
 
என்ன பிரச்சினை? ஏதாவது தேவையா? வெளியே வரலாம்? என்பதை சொல்வது போல் மிகவும் மெதுவாகத்தான் தட்டினான்.
அந்த மெல்லிய சத்தமெல்லாம் இருவருக்கும் நன்கு பழக்கப்பட்டதுதான். அக்ஷய் தன்னை சுற்றி உள்ள ஆபத்தை எண்ணி சதா எச்சரிக்கை உணர்வோடு இருப்பவன். மதியும் போலீஸ் என்பதால் சின்ன சத்தத்துக்கும் செவியை கூர்மையாக்குபவள்.
ஆனால் மதியழகி இன்று உலகம் மறந்து  அக்ஷையின் கைகளில் மதிமயங்கி சொக்கி நிற்க, அக்ஷய் தான் தன்னை மீட்டுக்கொண்டவன்  வலுக்கட்டாயமாக தன்னிடமிருந்து அவளை பிரித்து அவளது இருக்கையில் அவளை அமர்த்த, மாயவலை அறுபட்டு, தான் கண்ட அழகான சொப்பனம் களைந்து விழித்தது போல் முழிக்கலானாள் பெண்ணவள்.
“மதி மதி இங்க பாரு.. ரிலேக்ஸ்” அக்ஷய் மதியின் கன்னம் தட்டி பேச, சுயநினைவுக்கு வந்தவள் என்னவென கண்களாலே கேட்க, தண்ணீர் பாடிலை அவளுக்கு எடுத்துக் கொடுத்து விட்டு கண்ணாடியையும் திறந்தான். 
“சார் ஏதாவது பிரச்சினையா? இல்ல ஏதாவது தேவையா?” மெய்ப்பாதுகாவலன் கேட்க மதியை திரும்பி பார்த்த அக்ஷய் அமைதியாக, புரிந்து கொண்ட விதமாக பாதுகாவலன் சென்று விட முற்றாக தன்னை மீட்டிருந்தாள் மதி.  
 அக்ஷய் கண்ணாடியை மூடியவாறே விசிலடித்தவன் வண்டியை கிளப்ப அவன் புறமிருந்தவளோ! அவனை முறைக்க ஆரம்பித்தாள்.   
 
மதிக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை. அது தான் அக்ஷையை விருப்புகிறேனா? அல்லது வெறுக்கிறேனா? அவனருகில் மாத்திரம் நிலை தடுமாறுவது ஏன். அருகில் இல்லை மிக அருகில் மனம் எடுத்துக்கூற அக்ஷையை திரும்பிப் பார்க்க கண்சிமிட்டி குறும்பாக சிரித்தான் அவன். 
தன்னை முற்றாக மீட்டுக் கொண்டவள் பேச்சை மாற்றும் பொருட்டு “ஆனால் அஜய் மாமாவோடு பேசியது சிம்ரன் இல்ல” பேச்சை ஆரம்பித்து அக்ஷையின் கவனத்தை திசைதிருப்பினாள் மதி.
அவள் நினைத்தது போலவே “என்ன மதி குழப்புற” என்று அவள் முகம் நோக்கினான் அக்ஷய். 
“நான் குழப்பம் செய்யலையே! எனக்கு சந்தேகம் வந்ததுன்னு தானே சொன்னேன். நான் போலீஸ் பா சந்தேகப்படுவேன்” இளகிய குரலில் கூற அக்ஷையின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. 
கொடிமலரை வீரவேலன் காதலித்தான். அது கொடிக்காக அக்ஷய் மதியை காதலிப்பது கொடிமலர் என்பதாலையா? என்ற கேள்வி அவனுள் பல தடவை எழுந்திருந்தது. 
மறுஜென்மமாக இருக்கட்டும், இல்லாமல் போகட்டும் மதியை தவிர வேறு எந்த ஒரு பெண்ணையும் தன் வாழ்வில் நினைத்து கூட பார்க்க மாட்டான் இந்த அக்ஷய் என்ற முடிவில் தான் இருந்தான் அக்ஷய். 
மதிக்கு முன்ஜென்ம நியாபகங்கள் எதுவுமில்லை. மதி அக்ஷையை காதலித்தால் அக்ஷையை மட்டும் காதலிப்பாள். வீரவேலனுக்காக அக்ஷையை காதலித்திருக்க மாட்டாள். 
போலீஸ் என்ற திமிரா? பெண் என்ற அகங்காரமா? முதலில் மதியை கண்ட பொழுது அக்ஷய்க்கு தோன்றிய எண்ணத்தை தாண்டி அவளை தன்னோடு தங்க வைத்து கொள்ள ஆழ் மனம் சொன்னது முன்ஜென்ம காதல் தானோ! 
முறைத்துக்கொண்டு திரியும் அவளுள் இருக்கும், அன்னையின் மீதான அதீத பாசமும், தந்தையின் மீதான நேசமும், நண்பனின் மீதான அக்கறையும் மதிக்காகவே அக்ஷய் அவளை காதலிக்க ஆரம்பித்தான். 
அவனை மட்டும் கண்டால் முகம் திருப்புபவள் இன்று முதல் முறையாக இன்முகம் காட்டி பேசுகிறாள். அது மட்டுமா? அவளுள் எழுந்த சந்தேகத்தை கூட பகிர்ந்துகொள்கிறாள். இதுவே பழைய மதி என்றால் இவற்றை கூறி இருக்கவே மாட்டாள். அவள் மனம் தன் வசமாவதை உணர்ந்த அக்ஷையின் மணமோ குத்தாட்டம் போட, கூடிய விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவை நொடியில் எடுத்தான்.  
“ஹலோ எந்த கோட்டையை புடிக்க இப்படி யோசிக்கிறீங்க?” மதி அக்ஷையின் தோள் தொட்டு உலுக்க 
“மதியழகி என்கிற ராணி வசிக்கும் கோட்டையை தான்” என்றவன் அவள் புறம் திரும்பி கண்சிமிட்டியவன் கழுத்தை வளைத்து அவள் கைக்கு மெல்லிய முத்தம் வைத்தான். 
தன்னையும் மீறி கன்னங்கள் சிவப்பதை மறைக்க “ரோட்டை பாத்து வண்டிய ஓட்டுங்க” என்றவள் கையை விலக்கி, பாதையை வேடிக்கை பார்த்தவாறு அமைதியானாள் 
அவளை மேலும் சிரமத்துக்கு உள்ளாகாமல் “சரி உனக்கு வந்த சந்தேகம் எப்படி தீர்ந்தது?” அக்ஷய் மீண்டும் கேட்க வண்டியும் காலேஜ் வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. 
வண்டியை விட்டு இறங்கியவாறே “அந்த பொண்ணு பேசும் பொழுது சிம்ரன் ரெண்டு தடவ அஜய் மாமா கூட இருந்திருக்கா. அத வச்சி பாத்தா போன் பண்ணது சிம்ரன் இல்ல” என்றவள் வண்டியை பூட்ட அக்ஷையும் வண்டியை பூட்டி விட்டு மதியோடு காலேஜ் காரியாலய அறையை நோக்கி நடந்தான். 
“தங்க கோட்” ஒரு நொடி நடையை நிறுத்திய அக்ஷய் மதி சொல்ல விளைந்தது புரிந்து கொண்டவனாக நெற்றியை தடவ, 
“இப்போ புரிஞ்சுதா? சிம்ரன் தன்னை தங்கையென்று நினைக்கிறாரே அதனால் உண்மையை என் கிட்ட மறைகிறாளோ! தனக்கு எதுவும் நியாபகம் இல்லை என்று பொய் கூறுகிறாளோ! என்று எனக்கு சந்தேகம் வந்தத்தில் ஏதும் தவறு இருக்கா?” மதி அக்ஷையை பார்த்து புருவம் உயர்த்த 
“என் பொண்டாட்டி புத்திசாலிதான். ஆனா உனக்கு இப்படி ஒரு சந்தேகம் வர காரணம்” என்றவன் நடையை தொடர 
“அஜய் மாமாவை அந்த பொண்ணும் காதலிச்சிருந்தா இந்த நேரம் அவருக்கு நிச்சயமாகும் செய்தி கேள்வி பட்டிருக்கணும். தேடி வராம இருக்காளே! என்றதும் வந்த சந்தேகம்” 
“சரிதான். நியாயமான சந்தேகம்” என்றவாறே இருவரும் காரியாலய அறையினுள் பிரவேசித்தனர்.
குருகுலம் பாரம்பரிய பழமையான அரசு காலேஜ். அதன் சட்ட திட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் வகுத்ததாகவும் இன்றும் அதுவே கடைபிடிக்க படுவதாகவும் அக்ஷய் விசாரித்து அறிந்து கொண்டதில், முதல்வரிடம் ஏற்கனவே அனுமதி வாங்கி இருந்ததால் காலேஜினுள் சென்று அவரை சந்திக்க காத்திருக்க அவசியமிருக்கவில்லை. 
“வணக்கம் மிஸ்டர் அக்ஷய் சாம்ராட் வாங்க உக்காருங்க” சகல மரியாதையோடு அக்ஷையை வரவேற்று அமரும் படி முதல்வர் கூறியவாறே மதியையும் ஏறிட 
“இது என் வருங்கால மனைவி” என்றவன் மதியையும் தன் அருகில் அமர்த்திக்கொண்டான். 
“சொல்லுங்க நா உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்” தான் அணிந்திருந்த கண்ணாடியை சரி செய்தவாறே கேட்டார் முதல்வர் 
இவரிடம் நேரடியாக விசாரித்தால் உண்மையை கூறுவாரா? சந்தேகம்தான் என்றது மதி – அக்ஷையின் பார்வை பரிமாற்றங்கள். மதியின் கையை அழுத்தியவன் தானே பேசுவதாக மதியின் கையில் இருதடவை தட்டிவிட்டு தொண்டையை கனைத்து பேச ஆரம்பித்தான். 
“இது ஒரு பாரம்பரிய காலேஜ். அரசு காலேஜும் கூட. எங்க கல்யாண பரிசாக இரண்டு மாணவர்களின் படிப்பு செலவையாவது முற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை படுகிறேன். வாய்ப்புகள் ஏதும் இருக்கா?” தெளிவாகவே தான் கேட்டான் அக்ஷய் 
அரசு காலேஜ் என்றாலும் சில கட்டணங்கள் வசூலிக்கப்படுவதுதான். நன்றாக படிக்கக் கூடிய தூரத்திலிருந்து வரும் மாணவர்கள் வசதியின்மையின் காரணமாக படிக்க முடியாமல் இருப்பதும் அவர் அறிந்ததுதான். எத்தனை பேரிடம்தான் அவர் உதவி கேட்பது? தானாகவே வந்து உதவி செய்கிறேன். அதுவும் படிப்பு முடியும் வரை பொறுப்பேற்றுக் கொள்ளிறேன் என்றால் எவ்வளவு பெரிய மனது உச்சி குளிர்ந்தவர் வேறெதுவும் யோசிக்காமல் உடனே அது சம்பந்தமான மாணவ தலைவியை சந்திக்கும் படி கூறினார்.
மதிக்கு ஒருபக்கம் ஆச்சரியமும்தான். சந்தேகமும்தான். சட்டென்று அக்ஷய் இவ்வாறு கேட்பான் என்று ஆச்சரியம் என்றால், உதவி செய்வானா என்பதும் சந்தேகம் தான் குழப்பத்துடன் முதல்வர் அலைபேசியில் அழைத்த உடன் வந்த மாணவியை பின் தொடர்ந்தனர் இருவரும். 
அக்ஷையின் சிந்தனையில் உழன்ற மதியால் வந்த வேலையும் மறந்து போக அந்த பெண் அழைத்து சென்ற அறையியில் அமர்ந்து பேச ஆரம்பித்ததும்தான் கவனிக்க ஆரம்பித்தாள். 
காலேஜில் சுமார் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் வசதி குறைவானவர்கள் எத்தனை பேர். எந்தெந்த ட்ரஸ்ட் மூலம் தங்கள் காலேஜுக்கு உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தனிப்பட்ட நபருக்கு கிட்டும் உதவி என விலாவாரியாகவே அந்த மாணவத் தலைவி  விளக்கிக் கொண்டிருந்தாள். 
அனைத்தையும் பொறுமையாக கேட்ட அக்ஷய் “இந்த பொறுப்பை ஏன் ஒரு மாணவ தலைவியிடம் கொடுத்திருக்கிறார்கள்? இதற்கென்றே ஒருவரை நியமித்திருக்கலாமே!” என்று கேட்க
புன்னகைத்த அந்த மாணவி “செய்திருக்கலாம் சம வயதுடைய மாணவியிடம் பகிர்வதை நிறைய பேர் அவரிடம் பகிர விரும்ப வில்லை என்பதினாலையே இந்த முடிவு” 
“ஒஹ்… அப்படியென்றால் நீங்கள்  மட்டும்தான் தான் இந்த பொறுப்பில் இருக்கிறீர்களா?” 
“இந்த வருடம் நான். போன வருடம் பப்லி இருந்தாங்க” என்றதும் அக்ஷையும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அக்ஷய்க்கும் தெரிய வேண்டியதும் அதுவே! காலேஜில் நம்பரில் இருந்து பேசி இருக்கிறாள் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில். அப்படியானால் அவள் மாத்திரம்தான் அந்த நேரத்தில் அந்த தொலைபேசியை உபயோகித்திருக்க முடியும். அப்படியாயின் மற்ற நேரத்தில் அவளால் அதை உபயோகிக்க முடியாது. காரணம் அவள் அலுவலக பொறுப்புதாரியும் கிடையாது. இதுதான் மதியும் அக்ஷையிடம் கூறியது. 
அந்த பெண் தன்னுடைய பெர்சனல் நம்பரை கொடுக்காததற்கு கூட ஒரு காரணம் இருக்கக் கூடும். போன வருடம் என்றால் கண்டிப்பாக அஜையோடு பேசிய பெண் இந்த பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. யாரோ பப்லி என்று சொல்கிறாளே! ஒருவேளை” அக்ஷையின் மனம் கணக்கு போட மதியை நோக்கினான். 
“அந்த பப்லியை பத்தின டீடைல்ஸ் கிடைக்குமா?” மதி நேரடியாகவே கேட்டிருக்க 
“அப்படியெல்லாம் கொடுக்க முடியாது” பட்டென்று சொன்னாள் அந்த மாணவி 
“நீ சொல்லலைனா முதல்வர் கிட்ட போய் கேட்கிறோம். டொனேஷன் கேக்குறோம் எங்குற பேர்ல பணக்கார பசங்களுக்கு வலை விரிக்கிறதா கம்பளைண்ட் வந்திருக்கு அத விசாரிக்கத்தான் என் வருங்கால ஹஸ்பன கூட்டிகிட்டு வந்தேன்னு உண்மையை சொன்னா போதும் ஆடி போய்டுவாரு. காலேஜ் மானம் போய்ட கூடாதுனு பொறுமையா விசாரிக்கலாம்னு பாத்தா ரொம்பதான் துள்ளுற” என்றவள் 
“ஏன் நீயும் கூடத்தான் வந்ததுல இருந்தே இவர் கூட மட்டும் பேசுற. நான் இங்க இருக்குறது உன் கண்ணுக்கு தெரியலையா? என்ன சைட் அடிக்கிறியா? இல்ல வலை வீசுறியா?” 
 அக்ஷய் அழகா இருக்கானே என்று சைட் அடித்தது என்னமோ உண்மைதான். அதற்காக வலை விரிக்கிறேன் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா? மதியிடம் மாட்டிக்கொண்டாள் அந்த சின்னப்பெண்    
அக்ஷையை பார்த்து “அதிரடியா இறங்கிடலாம்” என்று மதி எழுந்து கொள்ள 
அக்ஷையையும் மதியையும் முதல்வர் அறிமுகப்படுத்தும் பொழுதே மதி போலீஸ் என்று கூறி இருக்க, மிரண்டு போன மாணவி மதியின் கையை பிடித்து அமர்த்தி பப்லியை பற்றிய தகவல்களை எடுத்துக் கொடுத்தாள். 
  
அக்ஷையின் புறம் திரும்பி கண்ணடித்த மதி “கிளம்பலாமா என்று கேட்க” 
“ஐயோ கொல்லுறாளே!” அக்ஷையால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது. காலேஜில் இருந்ததால் அவளை அள்ளி அணைக்க துடிக்கும் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு காசோலையை மாணவியிடம் கொடுத்தவன், உதவி தேவையாயின் அழைக்குமாறு பாஸ்கரனின் நம்பரையும் கொடுத்து முதல்வரிடமும் விடைபெற்றுக்கொண்டு மதியோடு வண்டி  நிறுத்தி இருந்த இடம் நோக்கி நடக்கலானான். 
  
“மதி நீ மிரட்டுன மிரட்டுல அந்த பொண்ணு பயந்து சரியான டீடைல்ஸை தான் தந்தாளா? மாத்தி கீத்தி தந்திருக்க போறா எதுக்கும் ஒரு தடவ செக் பண்ணிக்க” அக்ஷய் சிரிக்க அவன் முதுகில் பட்டென்று ஒரு அடி கொடுத்தாள் மதி. 
“ஆனாலும் பாவம் அந்த பொண்ணு என்னமோ நான் கேள்வி கேட்டதால் என் கிட்ட பதில் சொன்னா அதுக்கு சைட் அடிக்கிறானு சொல்லுற” 
“அவ சைட் அடிச்சா” என்றவாறு மதி வண்டியில் அமர்ந்து கொள்ள 
“பொறாமையா? வயிறு எரியுதா? இரத்தம் கொதிக்குதா? மூள சூடாகுதா?” 
“ஆமா அப்படியே உங்கள கடிச்சி குதரனும் போல இருக்கு” என்றவள் பற்களை கடித்தவாறு கைகளை பிராண்டுவது போல் காட்ட 
சத்தமாக சிரித்தவன் “சோ கியூட் டி நீ. உன்ன… ” என்றவன் அணைத்து முத்த மிட முயல அவன் கன்னத்தை கடித்தவள் அக்ஷய் கத்தவும்
“என் கிட்ட நெருங்க கூடாது தள்ளியே நில்லுங்க” 
“என்ன டி புதுசா ரூல்ஸ் எல்லாம் போடுற? நமக்குத்தான் நிச்சயம் ஆச்சே!”
“கல்யாணம் ஆகல இல்ல” 
“நீ ரொம்ப மாறிட்ட” இதுவே கொடியாக இருந்தால் அவனை அள்ளி அணைத்திருப்பாள் அந்த நியாபகத்தில் சொல்ல 
“என்ன மாறிட்டேன்” மதி முறைக்க 
சுதாரித்தவன் “நீ என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட” அவள் கன்னத்தில் முத்த மிட்டு விட்டே வண்டியை கிளப்பி இருந்தான்.
மாணவத் தலைவி கொடுத்த விலாசம் நகரத்திலிருந்த்து கொஞ்சம் தள்ளியே இருக்க அக்ஷய் வேகமாக வண்டியை செலுத்தலானான். 
பப்லி……. யார் அந்த பெண்? அஜய்யை காதலிப்பதாக கூறியவள் சந்திக்க வந்தாளா? வராமலையே மாயமாய் மறைந்தாளா?  பல கேள்விகளும் குழப்பங்களுக்கும் மத்தியில் அந்த விலாசத்தை அடைய, அது ஒரு பண்ணை வீடு போல் இருக்க பப்ப்ளியை பற்றி மதியே சென்று விசாரித்தாள்.  
அவளுக்கு நிச்சயம் நடந்து விட்டது என்றும் தற்பொழுது நகரத்தில் உள்ள வீட்டில் இருக்கிறாள் என்று விலாசத்தை வேலையாள் சொல்ல அதை பெற்றுக்கொண்ட மதி அக்ஷையிடம் பொறுமியவாறே வண்டியை நகரத்துக்குள் விட சொன்னாள்.

Advertisement