அஜய் மதியிடம் சிம்ரனை பற்றி சொல்ல தன் காதலை பற்றியும் மதி கேட்க, அக்ஷையை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் முழுவதுமாக கூறுவதாக முடிவெடுத்த அஜய் அடுத்த நாள் சந்த்தித்து கூறுவதாக கூறியிருக்க, அதன் அப்படியே அக்ஷையின் ஹோட்டல் தளத்தில் மதியை சந்தித்தான் அஜய்.
அவன் அங்கு வருவது இதுவே முதல் தடவை. தம்பியின் வளர்ச்சியில் அவனுக்கு சிறிதும் பொறாமை இல்லை. சிறு வயதில் தான் நடந்து கொண்டதை எண்ணி வருந்தி மன்னிப்பும் கேட்டிருக்கிறான். ஆனால் அக்ஷைதான் அவனிடமிருந்து ஒதுங்கி போகிறான். புரிந்துக் கொண்டு அவனே வருவான் என்று அஜய் காத்திருக்க, இன்று மதியின் மூலம் அது நடந்ததில் சந்தோசம்.
ஹோட்டல் தளத்தை சுற்றி காண்பித்த அக்ஷய் மதியோடு தனியாக பேசட்டும் என்று காரியாலய அறைக்குள் நுழைந்து கொள்ள இவர்கள் வாசலில்தான் அமர்ந்து பேசலாயினர்.
“சொல்லுங்க மாமா. முதல்ல இருந்து சொன்னாத்தானே எனக்கு என்ன பண்ண முடியும்னு யோசிக்க தோணும்” மதியழகி பேச்சை ஆரம்பிக்க,
இடது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் தாடையை பிடித்தவாறு சிறிது நேரம் யோசனையில் அமர்ந்திருந்த அஜய் பேச ஆரம்பித்தான்.
“மதி நீயும் இப்போ எங்க குடும்பத்தில் ஒருத்தியாகிட்ட. அதனால உன் கிட்ட மறைக்க கூடாது. அக்ஷய் சொன்னானோ இல்லையோ நான் சொல்லணும். என் மனசுல இருக்குற அனைத்தையும் சொல்லணும்” என்றவன்
“எங்கம்மா எங்கப்பாவுக்கு இரண்டாம் தாரம். அதுவும் மூத்த தாரம் இருக்கும் போதே கர்ப்பமாகி அத காரணம் காட்டி அவங்கள விவாகரத்து பண்ணி எங்கம்மாவை மணந்து கிட்டாங்க”
மதி ஒரு போலீஸ் என்பதால் அவள் இந்த மாதிரி சம்பவங்களை கண்கூடாக கண்டிருக்கிறாள். கள்ளக் காதலால் முதல் மனைவி கொலை. இங்கே கொஞ்சம் வித்தியாசம். மூத்த மனைவிக்கு குழந்தைகள் இல்லை. அதை காரணம் காட்டி அவரை விவாகரத்து செய்து இன்னொருவரை மணந்து இருக்கலாம் அசோக் சாம்ராட். அதை விட்டு விட்டு மனைவி இருக்கும் பொழுதே வேறொரு பெண்ணோடு தொடர்பு.
அவருடைய பணம் தான் முக்கியம் என்று சமேலி குழந்தையை சுமந்து அவரை மணந்தது நன்றாக புரிகிறது. மூத்த தாரம் அவ்வளவு இலகுவில் விவாகரத்து கொடுத்து விட்டுட்டாரா? அது மட்டும் மதிக்கு புரியவில்லை.
“பெரியம்மாவை அப்பா மணந்தது வீட்டார் விருப்பம். அவர் இஷ்டமில்லாம மணந்தவங்களோடு அவர் வாழவே இல்ல. அது போல அவங்களும் வேறு ஒருத்தர விரும்பினாங்க, இத பயன் படுத்துக்கிட்டா எங்கம்மா நடுவுல புகுந்துட்டாங்க. சொல்ல போனா பின் வாசல் வழியா உள்ள புகுந்துட்டாங்க” என்றவன் மதியை பார்க்க அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
போலீஸ்காரியல்லவா என்ற எண்ணம் ஒரு நொடி அஜய்யின் மனதில் உதிக்க புன்னகைத்தவன் தொடர்ந்தான். “எங்க வாழ்க்கைல எந்த பிரச்சினையும் இருக்கல அக்ஷய் வரும் வர. எனக்கு பத்து வயசு இருக்கும் பொழுது தான் அக்ஷய் எங்க வீட்டுக்கு வந்தான். அவனுக்கும் அஜித்துக்கும் பத்து மாசம்தான் வித்தியாசம். அப்போ எனக்கு ஒன்னும் புரியல. அம்மாக்கு அவனை பிடிக்கல. அதனாலயே எங்களுக்கும் அவனை பிடிக்கல. அவனை கொடும படுத்த ஆரம்பிச்சோம்” என்றவன் தாங்கள் செய்த அனைத்தையும் விலாவரியாக சொல்லலானான்.
“ஒருநாள் அப்பா பாத்துட்டாரு. அப்பொறம் அக்ஷய அமேரிக்கா அனுப்பி படிக்க வச்சாரு. அப்பொறம் அவனை பேமிலி பங்க்சன்ல தான் சந்திப்பேன். வளர்ந்த பிறகுதான் பெரியம்மா பத்தி தெரிஞ்சி கிட்டேன். அம்மா எப்படி வந்தாங்கனும் புரிஞ்சி கிட்டேன். என் பொறப்பே கேவலமா இருக்கு, இதுல நான் அக்ஷய பேசி இருக்கேனு நினைக்கும் போது நொந்துட்டேன். அவன் கிட்ட பல தடவ மன்னிப்பு கேட்க முயற்சி பண்ணேன். அவன் பேசவே இல்ல.
எனக்கு ஒரு விஷயம் புரியல. பெரியம்மாவை வீட்டாரோட விருப்பத்துக்கு கல்யாணம் பண்ண அப்பா. அம்மா கூட எதோ ஒரு சந்தர்ப்பத்துல தப்பு பண்ணி இருக்காரு. நான் கருவூல உருவானதும் எனக்காக அம்மாவை கல்யாணம் பண்ணி கிட்டவாறு அக்ஷையோட அம்மாவை எதுக்கு கல்யாணம் பண்ணாருன்னு எனக்கு தெரிஞ்சிக்க வேண்டி இருந்தது. அதனாலயே அத பத்தி தேடினேன்”
அஜய் சொல்லிக் கொண்டிருக்க இவர்களின் பேச்சை காரியால அறையிலிருந்து ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த அக்ஷய் ஆர்வமானான் என்றால் மதியும் நேராக நிமிர்ந்து அமர்ந்தாள்.
“அக்ஷையோட அம்மா இந்திரா. இந்திராவதி சாதாரண குடும்பத்து பெண். காலேஜ் படிக்கும் பொழுதே அப்பாக்கு அவங்க மேல காதல். இவர் பணக்காரர் என்று சொல்லாமலையே காதலிச்சு இருக்காங்க. அத தெரிஞ்ச பிறகு அவங்க விலகி போய்ட்டாங்கனு கேள்வி பட்டேன்.
போனவங்கள பல வருஷம் கழிச்சு சந்திச்ச அப்பா வலுக்கட்டாயமாக கல்யாணம் பண்ணி இருக்காரு. அக்ஷய் பிறந்த பிறகு அவங்க கேன்சர்ல இறந்துட்டாங்க. இதுதான் நான் திரட்டிய தகவல். எங்கம்மா நடுவுல வராம இருந்திருந்தா அக்ஷய் மட்டும் அப்பாக்கு மகனா இருந்திருப்பான்” என்றவன் பெருமூச்சு விட அறையிலிருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அக்ஷய்க்கு இந்த செய்தி புதிது.
அக்ஷய்க்கு தனது பெற்றோர்கள் காதலித்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தந்தையின் வசதி வாய்ப்பை அறிந்து அன்னை விலகி சென்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்னையை உருகி உருகி காதலித்த தந்தை சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறொரு பெண்ணை மணந்ததால் விலகி சென்றிருந்தால் கண்டிப்பாக திரும்பி வந்திருக்கவும் மாட்டார்.
அவர்களின் அன்பையும், பாசத்தையும் அனுபவித்தவனுக்கு அவர்களின் காதல் வாழ்க்கையை கண்கூடாக கண்ட பின் அன்னை தந்தையை ஏன் மூன்றாம் தாரமாக மணந்தாள் என்று அன்னையையும், மூன்று பெண்களை மணந்தார் என்று தந்தையையும் அவனால் வெறுக்க தோன்றவே இல்லை.
கண்டிப்பாக அன்னை தந்தையை விட்டு சென்றதும் வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்று எண்ணியவன். திரும்பி அவளாகவே வந்தாளா? அல்லது தந்தை அவளை வலுக்கட்டாயமாக தன் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டாரா? தந்தையிடம் தான் கேட்க வேண்டும் என்றெண்ணியவன் அஜய்யின் பேச்சை கவனிக்கலானான்.
“வாழ்க்கைல காசு, பணம், எல்லாம் ஒரு வேஷம், மாயைனு தோன ஆரம்பிச்ச போ மனிதர்களை நேசிக்க ஆரம்பிச்சேன். ஏழைங்களுக்கு உதவணும்னு நினச்சேன்.
ஆனா அக்ஷய போல சட்டுனு தனியா தொழில் எல்லாம் தொடங்க முடியாது. நான் தான் குடும்பத்தோட மூத்த வாரிசு. அப்பாவோட எல்லா பிஸினஸையும் நான் தான் கூட இருந்து பார்த்துக்கணும்.
அவர் அக்ஷய்யோட அம்மா பேர்ல இந்திரா ட்ராஸ்னு ஒரு ட்ரஸ் ஆரம்பிச்சு அதன் மூலம் ஹெல்ப் பண்ணுறது தெரிஞ்சதும் என்னாலான எல்லா உதவியையும் நானும் செஞ்சேன்.
அப்போதான் உதவி கேட்டு ஆபீஸ் நம்பருக்கு போன் வந்தது ஒரு பொண்ணு பேசினா. அவ குரல் கேட்டதும் எனக்குள்ள அப்படி ஒரு பரவசம்” சொல்லும் பொழுதே அஜய்யின் முகம் இளகி குரல் கனிந்திருந்தது.
“அந்த குரலை கேக்கவேண்டியே என்னோட பெர்சனல் நம்பர கொடுத்தேன். அவள் பேர் தெரியல. அடிக்கடி போன் பண்ணி யார் யாருக்காகவோ ஹெல்ப் கேப்பா”
“ஒருநாள் யார் யாருக்கோ ஹெல்ப் கேக்குறியே உனக்கு ஹெல்ப் தேவையில்லயானு கேட்டேன்”
“சத்தமா சிரிச்சவ, எனக்கென்ன சார் அப்பா இருக்காரு பாத்துபாருனு சொன்னா”
“என்ன போல சாதாரண பொண்ணுங்க கிட்ட விளையாடாதீங்க. என்ன நீங்க பாத்தது கூட இல்லையே!னு சொன்னா”
“மத்தவங்களுக்கு உதவணும்னு நினைக்கிற உன் நல்ல மனசே போதும், பாத்து பேசணும்னு நீ நினச்சா சந்திக்கலாம்னு சொன்னேன்.
சரினு சொன்னவ அடுத்த மாசம் அவ பொறந்த நாள் வருது அப்போ சந்திக்கலாம்னு சொன்னா.
என்ன கிப்ட் வேணும்னு கேட்டேன். தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் கூட கேட்டு பாத்துட்டேன். அது எதுவும் வேணாம், சாதாரணமான இந்த பொண்ணுக்கு சாதாரணமான ஒரு கிப்ட் போதும்னு சொன்னா.
“அப்போதான் சிம்ரன் கிட்ட சொல்லி தாஜ்மகால் செய்ய சொல்லி சொன்னீங்களா?” மதி கேட்க
“ஆமாம் என்றவன். சிம்ரன் ஆபிஸ்ல சேர்ந்து மூணு மாசம் கூட இல்ல. குட்டி பொம்மை போல இருப்பா. எனக்கு தங்கச்சின்னு இருந்தா அவ மாதிரி இருப்பான்னு அடிக்கடி நினைப்பேன். தாஜ்மகால் செய்ய சொன்ன பிறகு அவ கூட பேசுற சந்தர்ப்பம் தானா அமஞ்சது. லிப்ட்டுள்ள அடிக்கடி மீட் பண்ணிக்கிட்டோம்”
“தானா அமைஞ்சதா? யாராவது ஏற்படுத்தினங்களா?” அஜய்யிடம் கேட்டாலும் மதியின் பார்வை சிம்ரனையும் தொட்டு மீண்டது. அஜய் பேசியவைகளை கேட்டதில் அவளுக்கு ஏதாவது நிஜாபாகம் வந்திருக்குமோ என்று கேட்டது அந்த பார்வை. அஜய் உள்ளே வரும் பொழுதே! சிம்ரனும் அவனோடு வந்திருக்க, அங்கே தான் அமர்ந்திருந்தாள்.
“சிம்ரனுக்கு உங்க ஆபிஸ்ல என்ன வேல? அவ உங்கள சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?” மதி தான் ஒரு போலீஸ் என்று நிரூபிக்க,
“அவ ஒரு சாதாரண எம்ப்லாய் தான். நான் லிப்டுக்கு போகும் போதே அவளும் பைலை தூக்கிக் கிட்டு வருவா? ஆனா இப்போ நீ சொல்றத பார்த்தா யாரோ புரளியை கிளப்பவென்றே அவளை அனுப்பி இருக்காங்கனு தோணுது” அஜய் நெற்றியை தடவ
“நீங்க அந்த கம்பனியோட சி.எம். உங்க மேல அவதூறு சொல்றதுல யாருக்கு என்ன லாபம்? யோசீன்க?”
அஜய் யாரோ ஒரு பெண்ணை அலைபேசி வழியாக காதலித்தான் என்பதை சொல்லும் பொழுது,பார்க்காமல் காதலா? இவனுக்குள் இப்படி ஒருவனா? சமேலியின் மகன் இவ்வளவு நல்லவனா? அதுசரி அசோக் சாம்ராட்டின் மகன் அல்லவா என்ற எண்ணம் தான் அக்ஷையின் மனதில் நொடியில் உதித்து மறைந்தது.
“பரவாயில்லை காதல் என்று வந்தால் எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்காங்க” என்று சிரித்துக்கொண்டவன் சிம்ரனை வைத்து அஜய்யை சுற்றி வலை பின்னி விட்டைத்தை உணர்ந்ததும் அது யாரால் என்று நொடியில் கண்டு பிடித்தும் விட இனி தனக்கு காரியாலய அறையில் என்ன வேலை என்றே வெளியேறி இருந்தான்.
“அஜித்தா? என்ன சொல்லுற? அக்ஷய்” அஜய் யோசனையாக கேட்க
“என்ன பிடிக்காது அதனால புரளியை கிளப்பி என்ன குடும்பத்துல இருந்து ஒதுக்க பார்த்தன். உன்னையும் ஆபீஸ்ல இருந்து தூக்கிட்டா மொத்த ஆபீசுக்கு அவன் கண்ட்ரோலுக்கு வரும். அப்பா சொத்தை தனியா ஆட்டைய போடலாம்னு பிளான் பண்ணுறான்” மதியின் அருகில் அமர்ந்தவாறே சொன்னான் அக்ஷய்
“சிம்ரனையே பாத்திருந்த மதியழகி இவ சாவுக்கும் அந்த அஜித்துக்கும் ஏதவது சம்பந்தம் இருக்குமா? அஜய் மாமாவையும் இவளையும் சம்மதித்த படுத்தி புரளியை கிளப்பி விட்டது அஜித் என்றால்? இவளை கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன”
அக்ஷய் தன் அருகில் அமரவும் அவனை முறைத்தவள் அவன் புறம் திரும்பி “பேச வசதியா முகம் பார்க்கும் படிதான் யாரானாலும் உக்காரு வாங்க, அண்ணன் இருக்கானு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம இப்படி ஒட்டிக்கிட்டு உக்கார்க்குறீங்க? தள்ளி உக்காருங்க” புன்னகை முகமாக தமிழில் சொன்னாலும் வார்த்தைகளில் அனல் தெறித்தது.
“பேபி நேத்துதான் எங்களுக்கு நிச்சயமாச்சு. பக்கத்துல உக்காந்ததுக்கே சீருற? இப்போ நான் என்ன உன் தோளுல கை போட்டேனேனா? வந்த உடனே ஹாய் பேபினு கன்னத்துல கிஸ் பண்ணினேனா? டில்லில இதெல்லாம் சகஜம்” என்றவன் கண்சிமிட்டு விட்டு “ஆக்சுவலி பண்ணி இருப்பேன் அண்ணன் முன்னாடி உன் கிட்ட அடி வாங்க முடியாதில்ல” என்றவன் மதியின் முறைப்பையும் பெற தவறவில்லை.
அஜய்யின் பேச்சை கேட்டிருந்த சிம்ரனுக்கு எதுவும் நிஜபாகம் வரவும் இல்லை. அஜய்யும் பலத்த யோசனையில் இருந்தவன்
“அஜித் ஆபீஸ்க்கு வாரான், வேலைகளை பார்க்குறேன். ஒழுங்காதான் இருக்கான். சந்தேகப்படும் படியா எதுவும் எனக்கு தோணல”
“சிம்ரன் செத்தது ஒரு ஆக்சிடண்ட்டாகவே இருந்தாலும் அத உங்க கூட சம்பந்த படுத்தி, நீங்க காதலிச்சு ஏமாத்தியதாலதான் சிம்ரன் தற்கொலை பண்ணி கிட்டதா அஜித்தான் புரளியை கிளப்பி இருக்கணும்னு நான் ஆணித்தரமான நம்புறேன்” அக்ஷய் சொல்ல அதை ஆமோதித்ததாக தலையசைக்க மதியழகி
“ஏன் சிம்ரனை கொலைகூட செய்து அதை தற்கொலையாக மாற்றி இருக்கலாம் அல்லது அந்த கொலையை உங்க தலையில் கட்டி உங்களை கம்பி என்ன வைக்க திட்டம் கூட தீட்டி இருக்கலாம்” என்றாள் மதி.
“சிம்ரன் என்ன சொல்லுறா?” அக்ஷய் கேட்க அஜய் முழித்தான்.
“அவளுக்கு எதுவும் நியாபகம் இல்லை. அதான் அஜய் மாமா பின்னால சுத்தி கிட்டு இருக்கா”
“நீங்க ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க கொஞ்சம் புரியும் படி சொல்லுறீங்களா?” அஜய் குரலை உயர்த்த அக்ஷய் மதிக்கு ஆவிகளை பார்க்கக் கூடிய சக்தி இருப்பதை தெளிவாக விளக்கியவன் சிம்ரன் அங்கேதான் இருப்பதாகவும் அவளுக்கு தான் எவ்வாறு இறந்தது என்பது நியாபகம் இல்லை என்பதையும் கூற கண்கள் கலங்கினான் அஜய்.
“சிம்ரன் எங்கம்மா இருக்க? என்ன மன்னிச்சிடு. என்னாலதான் உனக்கு இந்த நிலம” அஜய் மன்னிப்பு வேண்ட சிம்ரனும் அவன் அருகில் வந்து அவன் கண்களை துடைக்கலானாள் ஆனால் அவளால் அது முடியாமல் போனது.
அவர்களின் பாசப்பிணைப்பை பார்த்திருந்த அக்ஷய் அஜய்யை சுயநிலைக்கு கொண்டுவர “நீ லவ் பண்ண பொண்ணு என்ன ஆனா? அவளை சந்திச்சியா? காஜலை திருமணம் செய்ய எப்படி சம்மதிச்ச?”
அக்ஷையின் கேள்விக்கு ஷோபாவில் தொப்பென்று அமர்ந்த அஜய் “தாஜ்மகளோடு அவளை மீட் பண்ண அவ சொன்ன ரெஸ்டூரண்ட்டுக்கு போன அன்னைக்குதான் சிம்ரன் செத்ததா கேள்விப்பட்டு அங்கிருந்து கிளம்பிப் போய்ட்டேன். அதுக்கு பிறகு அவளை சந்திக்க முடியல. அதன் பிறகு அவ போன் பண்ணவுமில்லை”
“அவ போன் பண்ணலைனா என்ன நீ பண்ண வேண்டியது தானே” கடுப்பாக கேட்டான் அக்ஷய்.
“அவ பேர் கூட தெரியாது நான் எடுத்தா யார் யாரோ பேசுறாங்க, யார் கிட்ட பேசணும்னு நான் என்ன சொல்ல?”
“அப்பாக்காக. இதுவரைக்கும் எதையுமே கேக்காத அப்பா திடீருனு வந்து அஜய் உனக்கு ஒரு பொண்ணு பாத்திருக்கேன். கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டார்கு. என்னால மறுக்க முடியல”
“அறைஞ்சேன்னு வை. அண்ணன்னு கூட பாக்க மாட்டேன். நீ லவ் பண்ணுற விசயத்த அப்பா கிட்ட சொல்லி இருந்தா அந்த பொண்ணையே அவர் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சி இருப்பாரே! முட்டாள்”
“என்னனு சொல்வேன். பேர் தெரியாது. யார் என்னனு தெரியாது. அன்னைக்கி நான் ரெஸ்டூரண்ட்டு வரலன்னு நினைச்சி அவளும் அதுக்கு பிறகு போன் பண்ணவே இல்ல. அதுக்கு மேல அவளை எங்க தேட? அதான் அப்பா சொல்லுற பொண்ணையே” குலுங்கி குலுங்கி அழலானான் அஜய்.
பெருமூச்சு விட்ட அக்ஷய் “மதி முதல்ல அந்த பொண்ண கண்டு புடிச்சி இந்த கல்யாணத்த நிறுத்தணும். இல்லனா இன்னொரு அசோக் சாம்ராட்ட நாம பார்க்க வேண்டி இருக்கும்” தீவிரமான முகபாவனையில் கூறினான் அக்ஷய்.
மதிக்கும் ஒரே குழப்பம்தான். பேர் கூட தெரியாத அந்த பெண்ணை எவ்வாறு கண்டு பிடிப்பது. அஜய்க்கு திருமணம் ஆகா போவதை அறிந்தும் அவள் அவனை சந்திக்க வரவில்லையானால் ஒரு வேலை வர முடியாத தூரத்தில் இருக்கிறாளோ! இறந்து விட்டாளா?
சிம்ரனை திரும்பி பார்த்த மதி அவள் பாதையை வேடிக்கை பார்ப்பதைக் கண்டு ஏன் அது சிம்ரனாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் நொடியில் உருவானது. அஜய்க்கு அந்த பெண்ணை யார் என்றே தெரியாது. சிம்ரனை தங்கை என்கின்றான். அதனால் சிம்ரன் தன்னிடம் எதுவும் நியாபகம் இல்லை என்று பொய் கூறுகிறாளோ! என்ற சந்தேகம் மதிக்கு தோன்ற எவ்வாறு இந்த சிக்கலை கண்டு பிடிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தாள்.