அக்ஷய் ரொம்ப சந்தோசமாக உணர்ந்தான். தன் காதலி கொடிமலர் தன் கண் முன்னால் நடமாடிக் கொண்டிருந்தாள். காண்பதெல்லாம் கனவா என்று நினைக்கும் அளவுக்கு சந்தோசம் மனதை நிறைத்திருந்தது. இத்தனை நாளும் யாரிடமும் சொல்லாத ரகசியம் அது.
முஜன்மம் பற்றி சினிமாவில் பார்த்த போது சிரித்திருக்கின்றான். “புல் ஷிட்” என்று வாய் விட்டே கூறியும் இருக்கின்றான். ஏன் காதல் என்ற வார்த்தையையும் வெறுத்தான் அது அவன் அன்னை தந்தை மேல் வைத்த அதீத காதலால் காதலையே வெறுத்தான்.
அந்த காதலால் தானே அன்னை தந்தைக்கு மூன்றாம் தாரமானார். அவப்பெயரோடு வாழ்ந்து மறைந்தார் என்று கொதிக்கும் உள்ளம். அப்படிப்பட்டவன் காதல் என்று நெருங்கும் பெண்களை மாத்திரமன்றி பணத்துக்காக தன்னிடம் நெருங்கும் பெண்களையும் ஒதுக்கினான்.
அவன் நினைத்திருந்தால் பணத்தால் விரும்பும் பெண்ணை விலைபேசி இருந்திருப்பான். தந்தையிடம் பணம் கொட்டிக் கிடப்பதால் தானே பெரியன்னை அவரை நெருங்கி அஜய் உண்டான பின் முதல் தாரத்தை விவாகரத்து செய்து மணந்தார் என்ற புரளி இருக்க அவனை நெருங்கும் பெண்களை நம்ப மறுத்தான். அதனால் தான் அஜித்துக்கு இலகுவாக அக்ஷையை பற்றிய வதந்திகளை கிளப்ப முடிந்தது.
தனது இருபத்தியோராம் வயதில்லையே தன் முன்ஜென்ம நியாபகங்கள் கனவாக வர அதை பெரிதாக கண்டு கொள்ளாதவன் பாஸ்கரிடம் மட்டும் அதை பகிர்ந்து டாக்டரை அணுகினான். ஆனால் அவனுக்கு தெளிவான பதில் தான் கிடைக்கவில்லை.
மதியழகியை முதன் முதலாக கண்ட போது கூட பெரிதாக எந்த தாக்கமும் ஏற்படவில்லை. ஆனால் உள்மனம் அவளை விடாதே என்று மட்டும் கூவ அவள் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொண்டான்.
மீண்டும் கனவு வந்தது கனவில் கொடிமலரின் முகம் மதியழகியாக தெரிந்தாள். வினோதமான கனவு என்று நினைத்தவன் பாஸ்கரிடம் பகிர அவன்தான் முன்ஜென்மமாக இருக்கும் என்று சொல்ல யோசனையில் விழுந்த அக்ஷய் அதை பற்றி ஆராய்ச்சி செய்யலானான்.
அவன் கனவில் கண்ட ஊரை பற்றி தேடிப்பார்த்தவன் அவன் கனவில் கண்டது போல் தான் இருந்திருக்கிறது என்று அறிந்து கொண்டதும் ருத்ரமகாதேவி என்று ஒருத்தி உண்மையாகவே இருக்கிறாளா? என்று ஆச்சிரியமடைய மதியழகியின் மூலம் அந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தது.
அவன் நல்ல நேரம் அவன் இறந்த பிறகு நடந்த சம்பவங்களும் கனவில் வர ருத்ரமகாதேவியின் சபதமும் நியாபகத்தில் வர ருத்ரமகாதேவியை சந்திப்பதை தவிர்த்தான்.
அவனுக்கே குழப்பமாக இருந்தது. தான் இந்த ஜென்மத்தில் அக்ஷையாக பிறந்திருப்பது உண்மை. கொடிமலர், பிறந்திருக்கிறாள், வெற்றி என்ன ஆனான் என்று தெரியவில்லை. வெற்றியும் தன் ஆழ்மனதில் இருக்கிறானோ? அம்மன் சொன்னது போல் ருத்ரமகாதேவியை சந்தித்தால் வீரவேலன் மறைந்து வெற்றிவேலன் தோன்றி ருத்ரமகாதேவியின் பின்னால் சென்று விடுவேனோ! என்ற அச்சம் அக்ஷையை ஆட்டுவிக்க ஆரம்பித்திருந்தது.
இந்தியாவிலையே தலைசிறந்த சுவாமிகள் என்று அழைக்கப்படும் சுவாமி ஜெகதீஸ்வரன் சுவாமிகளை சந்தித்தவன் ஆலோசனை கேட்க அவன் குழப்பம் தீர ஒரே வழி மதியுடனான திருமணம். திருமணம் நடந்து விட்டால் எந்த சக்தியாலும் அவர்களை பிரிக்க முடியாது என்று விட்டார்.
காதலை சொல்லி மதியை அணுக பயந்தான் அக்ஷய். மதிக்கு பழைய நியாபங்கள் இல்லை. காதலால் பழைய நியாபங்கள் திரும்பி ருத்ரமகாதேவியை பழி வாங்கவென்று கிளம்பிவிடுவாளோ என்ற அச்சம் வேறு. திருமணத்தை முடிப்பதே சரியான தீர்வு அதன் பின் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
அதன் படி மதியிடம் நேரடியாக திருமணத்தை பற்றி பேச, அவள் மறுத்து விட்டாள் என்பதற்காக அவன் ஒன்றும் அமைதியாக இருக்கவில்லை. நிர்மலிடம் பேசியவன் அவனோடு சென்று முத்துலட்சுமியை சந்தித்து திருமணத்துக்கு அனுமதி வேண்டி நின்றான்.
மகளின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற மனவேதனையில் இருந்த முத்துலட்சுமி அக்ஷய் கூறிய செய்தியில் ஆனந்தக் கண்ணீர் வழிய சம்மதித்தாள்.
மதியிடம் தானே பேசி சம்மதம் வாங்குவதாக அக்ஷய் கூற முத்துலட்சுமியும் சரியென்று இரண்டு நாட்களாக சந்தோசத்தில் மிதந்தவள் அதன் பின்தான் அக்ஷையின் குடும்பத்தை பற்றி நிர்மலிடம் விசாரித்து அறிந்து கொண்டு அவர்கள் சம்மதிப்பார்களா என்ற எண்ணம் தோன்ற அக்ஷையிடம் பேசினாள்.
“நீங்க வேற அத்த நான் யார கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி கிட்டேனு சொன்னாலும் அப்பா சரின்னுதான் சொல்வாரு. பொண்ணு வடநாடா, தென்னாடா என்றெல்லாம் பார்க்க மாட்டாரு. ஒரு பையன கல்யாணம் பண்ணாம பொண்ண கல்யாணம் பண்ணாவே போதும்” என்றவன் சிரிக்க
“பணம் அந்தஸ்து….”
“ஒரு பொண்ணுகிட்ட இருந்து வாங்கி சாப்புட அளவுக்கு என் நிலைமை இல்ல. என் அப்பா பரம்பரை பணக்காரர். அதுக்காக உழைக்காம இருக்கலையே! இன்னமும் சம்பாதிச்சு கிட்டுதான் இருக்காரு. காசுக்காக இல்ல உழைப்பின் மகத்துவம் அறிந்தவர் அவர். என்ன மூணு பெண்களை திருமணம் செஞ்சிருக்கிறாரு. அப்பா வழியில் மகன் போய்டுவானோ என்று நீங்கதான் பொண்ணு கொடுக்க யோசிக்கணும்” புருவம் உயர்த்தியவன் உதடு பிதுக்க அவன் முகபாவனையில் முத்துலட்சுமியின் முகம் கனிந்தது.
மனசஞ்சலம் நீங்கியவளாக மதியிடம் சீக்கிரமாக பேசி கல்யாணத்துக்கான நாள் பார்க்குமாறு கூற அக்ஷையும் டில்லி செல்ல அனுமதி வேண்ட முத்துலட்சுமியும் அனுமதி வழங்கினாள்.
அஜய்க்கு திருமணம் பேசி இருக்கும் காஜல் பணக்கார வீட்டு பெண் என்றாலும் பழக நல்லவிதமாகத் தெரிந்தாள். மதியின் கையை பிடித்துக் கொண்டவள் வெகுநேரமாக உரையாடினாள். மதியும் ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் பதில் அளித்துக் கொண்டிருக்க அக்ஷய் தன்னவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அஜய் இவற்றில் ஒட்டாமல் தனி உலகில் இருக்க அவனிடம் சென்ற அக்ஷய் நலம் விசாரிக்க சுயநினைவுக்கு வந்தவன் போல் சந்தோசமாக பேச ஆரம்பித்தான் அஜய். இங்கே நடந்த நிச்சயதார்த்தம் கூட அவன் கவனத்தில் இல்லை என்பது அக்ஷய்க்கு புரிய தமையனின் மேல் முதன் முதலாக வருத்தம் கொண்டான்.
அதிகம் நெருங்கிப் பழகாததால் சட்டென்று போய் அஜய்யின் பிரச்சினையை பற்றி பேச அக்ஷையால் முடியவில்லை. சோகத்தை தாண்டி அக்ஷையை கண்டு மலரும் அவன் புன்னகை அக்ஷய்க்கும் அஜய்க்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது.
காஜலோடு பேசிக்கொண்டிருந்தாலும் மதியின் கண்கள் அஜய்யின் அருகில் இருக்கும் ஆத்மாவின் மீதே இருக்க, அப்பக்கம் திரும்பி பார்த்த காஜல்
“சான்ஸே இல்ல நான் தான் என் ஆளையே மாஞ்சி மாஞ்சி லவ் பண்ணுறேன்னு நினச்சேன் நீ கண்ணாலேயே பேசுர, அக்ஷையும் கண்ணாளையே பதில் சொல்லுறாரு வரே வாஹ்” காஜல் சிலாகிக்க அப்பொழுதுதான் அக்ஷையை கவனித்தாள் மதி.
“நல்லவேளை அக்ஷய் அங்கு வந்தார் இல்லையென்றால் காஜல் என்னை தப்பாக நினைத்திருப்பாள், அக்ஷய் சொன்னது போல் இனிமேல் கவனமாக நடந்துக்க கொள்ள வேண்டும்” காஜலை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைக்க மதியை இழுத்துக் கொண்டு அக்ஷய், அஜய் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள் காஜல்.
“ஹாய் என்ன அண்ணனும் தம்பியும் கல்யாண கனவுல மிதக்குறீங்களா? ரெண்டு கல்யாணத்தையும் ஒரே நாள்ல வச்சிக்கலாமா?” கேட்டவாறே அஜய்யின் அருகில் உரிமையோடு அமர்ந்து கொண்ட காஜல் மதியையும் அமர்த்திக் கொண்டாள்.
அஜய்யிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அக்ஷய் பதில் கூறி அவர்களுடன் ஒன்றினான். அஜய் அடிக்கடி மூட் மறுவதைக் கண்டு காஜல் முகம் சுணங்கினாலும் சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு உறையாடுவது மதியின் கண்களில் பட அஜய்யை நினைத்து அவளும் வருந்துவது புரியவே! அஜய்யின் அருகில் இருந்த ஆத்மாவை திரும்பிப் பார்த்தாள்.
ஆத்மாவும் அவளையே பார்த்திருக்க “உன் கிட்ட பேசணும் வா” எனும் விதமாக யாரும் அறியாமல் செய்கை செய்தவள் வாஷ்ரூம் செல்வதாக நகர அவளை பின் தொடர்ந்தான் அஜித்.
அந்த விசாலமான மண்டபத்தில் எங்கும் கூட்டம் அலைமோத உண்மையிலயே அவள் வாஷ்ரூமில் தான் புகுந்திருந்தாள். உள்ளே அவளுக்காக காத்திருந்தாள் ஆத்மா.
“நீ யாரு? எதுக்காக அஜய் மாமா பின்னாடி சுத்தி கிட்டு இருக்க? உன்ன பார்த்தா துர்ஆத்மாவாக தெரியல, அவர் உன்ன நினைச்சி தான் அப்சட்டாக இருக்குறாருன்னு எனக்கு தோணுது. நீ அவரை லவ் பண்ணியா?” மதி பேசிக்கொண்டே செல்ல
“ஐயோ இல்ல…” இடைமறித்தது ஆத்மா…
“அப்போ எதுக்கு அவர் பின்னாடி அலையுற? அவர் கிட்ட என்ன எதிர்பாக்குற?” மதி கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கும் பொழுது பெண்கள் கழிவறையென்றும் பாராமல் உள்ளே நுழைந்த அஜித் தாழ்பாள் இட்டிருந்தான்.
அந்த சத்தத்தில் அவன் புறம் திரும்பிய மதி “ஹலோ மிஸ்டர் இது பெண்கள் கழிவறை. கண்ணு என்ன குருடா? வெளிய போங்க” என்று கத்த அவள் கழுத்தை நெறிக்கலானான் அஜித்.
திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத மதி நிலைகுலைய ஆத்மா அவனை தடுக்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தது. அந்த ஆத்மாவால் எதையுமே தொடவோ! அசைக்கவோ! முடியவில்லை.
“சாவுடி சாவுடி… என் திட்டத்தையா முறியடிக்க பாக்குற? இப்போ நீ செத்தா அவனுக்கு ராசியில்லாதவன்னு பட்டம் கட்டி கல்யாணமாகாமல் தடுத்துடுவேன்” என்று கர்ஜிக்க
அஜித்தின் கைகளில் மதி திமிறியது ஒரு நொடிதான் மறு நொடி பெண்சிங்கம் போலீஸ் அவதாரம் எடுத்து முழங்காலை தூக்கி அவன் அடிவயிற்றுக்கு கீழ் எட்டி உதைக்க வலியால் துடித்தவாறு சுருண்டு விழுந்தான் அஜித்.
உண்மையில் மதி அணிந்திருந்த லேகங்கா கொஞ்சம் உடம்பை பிடித்திருக்க அவளின் அடி சரியாக விழவில்லை. விழுந்திருந்தால் அவன் நிலைமை என்னவாக இருந்திருக்கும்.
அவனை ஒரு அடியிலையே மயக்கமடைய செய்தவள், அவனை இழுத்து ஒரு கழிவறையில் பூட்டி ஆத்மாவை பார்க்க அது கண்களை அகல விரித்து மதியை பார்த்திருக்க,
“நான் ஒரு போலீஸும் கூட என் கிட்டயேவா? நீ சொல்லு” என்று முகம் கழுவும் வாஷ் பேசனின் மேல் சாய்ந்து கொண்டாள்.
மூடிய கதவை பார்த்தவாறே “என் பேர் சிம்ரன் அசோக் சாரோட இந்திரா ரஸ்ட்டின் மூலம் தான் காலேஜ் படிச்சேன். அவங்க கம்பனிலையே எனக்கு வேலையும் கிடைச்சது. ஒரு நாள் அஜய் சார் என்ன சந்திச்சு பேசணும்னு சொன்னாரு. அவரு என்ன பேச போவாரோன்னு கொஞ்சம் பயமா கூட இருந்துச்சு. காதல்னு சொல்லுவாரோ! இல்ல காசுக்காக கூட…” மதி பார்த்த பார்வையில்
“இந்த சமூகம் அப்படித்தானே இருக்கு. என்ன மாதிரி அனாதை பொண்ணுங்கள என்னவேனாலும் பண்ணலாம் கேள்வி கேட்க யாருமில்லன்னு தானே பணக்கார பசங்க நினைக்கிறாங்க என்ற ஒரு எண்ணம் என் மனசுல இருந்தது. அவரை தனியா சந்திக்க பயந்தேன். ஆனா அவர் வேல முடிஞ்சி போகும் போது லிப்ட்டு கிட்ட வச்சி பேசினாரு”
“என்ன கேட்டாரு?”
“ஒரு சாதாரண பொண்ணு புருஷன் கிட்ட என்ன எதிர்பாக்குறானு கேட்டாரு. எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு எதுக்கு கேட்டாருன்னு ஷாக்காகி அவரை பார்த்தேன்.
‘ஐயோ அப்படி பார்க்காதேம்மா நான் ஒரு சாதாரண வீட்டு பொண்ண லவ் பண்ணுறேன். என்ன கிப்ட்டு கொடுத்தாலும் பிடிக்கலன்னு சொல்லுறா. அவ என் கிட்ட என்ன எதிர்பாக்குறான்னே தெரியல” அப்படினு சொன்னாரு. எனக்கு சிரிப்பு வந்தது.
“அப்பொறம்”
“உங்க அன்ப முழுமையா அவங்களுக்கு மட்டும் என்று எதிர்பாக்குறாங்க, உங்க காதலுக்கு அடையாளமா ஒரு பரிசு கொடுங்கன்னு சொன்னேன். என்ன கொடுக்கலாம்னு என் கிட்டயே கேட்டாரு. தாஜ்மகால் கொடுங்கன்னு சொன்னேன்”
“அதுக்கும் நீ அவர் பின்னால சுத்துறதுக்கும் என்ன சம்பந்தம்” மதி யோசனையாக கேட்க
“உடனே அவர் கண்ணாடியிலான தாஜ்மகால் எல்லாரும் கொடுக்குறாங்க அது கீழ விழுந்ததும் உடையுதே! அத கொடுத்தா என்ன கொடுக்காட்டி என்னனு கேட்டாரு”
“அதுக்கு நீ என்ன சொன்ன?”
“என் போன்ல இருந்த ஒரு சில மாதிரியான போட்டோசை அவருக்கு காட்டினேன். அது முத்தாலான தாஜ்மகால் அழகாக செய்யப்பட்டிருக்க அவருக்கு அது புடிச்சிருந்து, யார் பண்ணதுன்னு கேட்டாரு, பக்கத்து வீட்டுல திருநங்கைங்க வசிக்கிறாங்க கைத்தொழிலுக்காக இதெல்லாம் பண்ணுறாங்க உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க ஆடர் கொடுக்கலாம்னு சொன்னேன். அவரும் சிரிச்சி கிட்டே தலையாட்டினவரு சைக்கிள் கப்புல பிசினஸ் பேசி முடிக்கிறியே உனக்கு கமிஷன் எவ்வளவுன்னு கேட்டாரு, கமிஷனெல்லாம் கிடையாது ஏதோ என்னாலான சிறு உதவின்னு சொன்னேன்”
“அந்த தாஜ்மகால்….”
“அத அப்போவே அவர்கிட்ட கொடுத்துட்டேன்”
“அப்போ எதுக்கு நீ அவர் பின்னாடி சுத்தி கிட்டு இருக்க…”
“நான் எப்படி செத்தேன், ஏன் செத்தேன்னு எனக்கு நியாபகம் இல்ல. அஜய் சார பார்த்ததும் தாஜ்மாகால் நியாபகம் வந்தது அதான் அவர் கூட இருக்கேன்”
மதிக்கு குழப்பம் தீரவில்லை. “ஆவிகளுக்கு தான் ஏன் இறந்தேன், எவ்வாறு இறந்தேன் என்று கூடவா நியாபகம் இல்லாமல் இருக்கும். நியாபகம் இல்லாததால் தான் எந்த சக்தியும் இல்லாமல் அப்பாவியாக அலையுறாளா சிம்ரன்” குழப்பத்தோடு குளியலறை கதவை திறக்க அக்ஷய் வெளியே நின்றிருந்தான்.
“என்ன மதி ஆவி கிட்ட பேசிட்டியா?” அக்ஷய் குறும்பாக கேட்க
தலையை பலமாக ஆட்டுவித்து “அஜித் குளியலறையில் நடந்து கொண்டதை சொன்னவள் “நூறுக்கு போன் பண்ணி போலீஸ்ல புடிச்சி கொடுத்திருப்பேன், பங்க்சன் நடக்குற நேரத்துல எதுக்கு வீண் பிரச்சனைன்னு அவனை உள்ள லாக் பண்ணிட்டேன்”
“யாராக இருக்கும் என்ற யோசனையில் சென்று பார்த்த அக்ஷய் அஜித்தை கண்டதும் கேலியாக புன்னகைத்தவன் “இவன் என் நொண்ணன், எங்க என் அப்பா என்ன கம்பனி எம்,டி ஆக்குவாரோன்னு புரளியை கிளப்பினான், உனக்கும் எனக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததும் அவன் நினைச்சது நடக்கல அதான் சார் கொந்தளிச்சிட்டாரு, உனக்கொண்ணும் அடிப்படையையே!”
“அப்போ புரளியை ஸ்டாப் பண்ணத்தான் இந்த நிச்சயதார்த்தமா?” எல்லாவற்றையும் விட்ட மதி புருவம் உயர்த்த
“என் பொண்டாட்டி போலீஸ்னு தெரியும் இப்படி புத்திசாலின்னு தெரியாம போச்சே!” அக்ஷய் பொய்யாய் ஆச்சரியப்பட கழிவறையை உபயோகிக்க வந்த இரண்டு பெண்கள் அங்கே அக்ஷையை கண்டு திகைக்க
“யாரோ ஒருத்தன் தண்ணிய போட்டுட்டு வாஷ்ரூம் மாறி வந்துட்டான் போல உள்ள மட்டையாகிட்டான். அதான் இவரை கூட்டிட்டு வந்தேன் இவன தூக்க” என்று அவர்களுக்கு விளக்கம் கொடுத்தவள் அஜித்தை தூக்குமாறு கண்களால் சொல்ல அக்ஷையும் மறு பேச்சின்றி அஜித்தை தூக்கியவன் கழிவறையை விட்டு வெளியேறினான்.
அஜித்தை தூக்கிக் கொண்டு போகும் அக்ஷையை பார்த்திருந்த மதியின் சிந்தனை அக்ஷய் சொன்னது போல் அவன் குடும்பம் புரியாத புதிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
அசோக்கிடம் ஒட்டும் அக்ஷய், அஜய்யிடம் விலகி இருந்தாலும் அஜய் அக்ஷையின் மேல் பாசமாகத்தான் இருக்கிறான் என்று தோன்கிறது. அஜித் மற்றும், பெரியன்னை அவனை முற்றாக வெறுக்கிறார்கள். அக்ஷையும் அவர்களிடம் ஒதுங்கியே போனாலும் தக்க பதிலடியை சமயம் பார்த்து கொடுப்பதில் வல்லவன்.
“சார் லவ் பண்ணுவாராம், ஆனா சொல்ல மாட்டாராம், சொல்ல தெரியலையோ!” புன்னகைத்தவள் அஜய்யை தேடி சென்றாள்.
அனைவரும் சாப்பிட சென்றிருக்க அஜய் தனியாக அமர்ந்திருந்தான். அஜய்யிடம் சிம்ரனை பற்றி பேசியவள் அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்க, மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியவன் சிம்ரனை எப்படி தெரியும் என்று கேட்க உண்மையை சொல்லலாமா? வேண்டாமா? என்று மதி யோசிக்க
“சிம்ரனின் மரணத்தில் நிறைய மர்மம் இருக்கிறது. அவ எனக்கு குட்டி தங்க, தோழி மாதிரி அவளையும் என்னையும் வச்சி கம்பனில காதலர்கள் என்று கத கட்டி விட்டு இருந்தாங்க, என்ன பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா அந்த சின்ன பொண்ணுக்கு எவ்வளவு மனக்கஷ்டத்தை கொடுக்கும்னு யோசிச்சு அவளை வேற டிபார்ட்மெண்ட்டுக்கு மாத்தினேன். அதன் பிறகு அவ நான் வேல பாக்குற கம்பனிக்கு எதுக்கு வந்தா? எப்படி செத்தான்னு தெரியல, அவ சாவுக்கு நான் தான் காரணம், நான் காதலிச்சு ஏமாத்திட்டதாகவும் அதனால அவ தற்கொலை பண்ணிக்கிட்டதாகவும் செய்தி பரவ போலீஸ், கேஸ்னு, கொஞ்சம் நாள் அலைஞ்சேன். நான் பிரச்சினைல இருந்து வெளியே வந்தாலும் சிம்ரன் சாவுக்கு நியாயம் கிடைக்கல”
“ம்ம்… அப்போ நீங்க லவ் பண்ண அந்த சாதாரண பொண்ணு யாரு?”
“மதி நீ போலீஸ்னு தெரியும் ஆனா டில்லி போலீஸ் இல்லையே இப்படி விசாரிக்குற?”
சிரித்து மழுப்பியவள் “உங்களுக்கு உதவத்தான் வேறு எதுக்கு” என்று சொல்ல மனபாரம் நீங்க அஜய்யும் மனம் திறந்தான்.
அஜித்தை தூக்கி சென்று ஒரு அறையில் கிடத்திய அக்ஷய் அவன் கன்னத்தில் மாறி மாறி அடிக்க மயக்கம் தெளிந்து கண்விழித்தவன் அக்ஷையை கண்டு கொலைவெறியில் முறைக்க,
“என் மதியையே! கொலை செய்ய பாக்குறியா? அவ கழுத்துல உன் விரல் தடம் சிவப்பா பதிஞ்சிருந்தத பார்த்தேன். அப்படி என்ன கொலைவெறி உனக்கு. சொத்து சொத்துனு சாக போற. நான்தான் உங்க சங்கார்த்தமே வேணாம்னு ஒதுங்கி போறேன்ல, போறவன வா… வானு… பாக்கு வெத்தல வச்சு கூப்டிரியே! இப்போ சொல்லுறேன் கேட்டுக்க அப்பா சோத்துல பாதி சொத்து எனக்குதான்” என்ற அக்ஷய் தாறுமாறாக அடிகளை அஜித்துக்கு கொடுத்து விட்டே அறையை விட்டு வெளியேறினான்.