Advertisement

“அஜய்யை சுற்றி புகை மூட்டம்…  விளக்கு ஒளியினாளையா?” ஒருகணம் கண்களை சுறுக்கிப் பார்த்த அக்ஷையின் மூளையின் ஓரத்தில் மதியின் மதிமுகம் மின்ன கண்களை சுழற்றி மதியை நோக்க அவளின் பார்வையும் அஜய் மீது இருக்கவே அந்த வெள்ளை புகை என்னவென்று புரிந்துக் கொண்டவன் அவளை அணுகி குறும்பாக பேசி நடனம் ஆரம்பிக்கவும் அவளோடு ஆட ஆரம்பித்திருந்தான். 
ஒருகணம் திகைத்தவள் மறுகணம் அவனைவிட்டு விலக முயற்சி செய்ய பலர் அவர்களை சுற்றி ஆட அக்ஷய் இழுத்த இழுப்புக்கெல்லாம் சுழன்றுக் கொண்டிருந்தாள் மதியழகி.  
அக்ஷையோடு ஆடும் மதியை கண்டு அசோக் சாம்ராட் யார் என்று பாஸ்கரிடம் விசாரிக்க அக்ஷய் கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண் என்று சொல்ல 
“சற்று நேரத்துக்கு முன்னால் தான் கல்யாணத்தை பற்றி கேட்டேன். கண்டிப்பாக பண்ணுவேன் என்றானே ஒழிய அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளேன் என்று ஒரு வார்த்தையாவது சொல்லவில்லை” என்று பாஸ்கரை முறைக்க, 
“நாம் சொல்லும் படி செய்ய அவன் ஒன்றும் நான் பெற்ற மகன் இல்லையே!” என்றாள் பெரியன்னை சமேலி.
அசோக் சமராட்டின் இரண்டாம் மனைவி என்று சொன்னாலும் முறைப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்து மணந்ததால் கெத்தாக சமூகத்தில் சுற்றிக் கொண்டிருந்தவர் அக்ஷையை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்து என்னுடைய மகன் என்றதும் ஆடித்தீர்த்து விட “உன்னை விவாகரத்துய் செய்வேன்” என்றதும் தான் அடங்கினார். 
அன்று முதல் அக்ஷையை கண்டால் ஆகாது. அக்ஷையை காணும் பொழுதெல்லாம் வார்த்தையால் குதருபவள். கணவனின் முன்னிலையில் நல்ல அன்னையாக வேஷமிட்டுக் கொண்டிருந்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அக்ஷையை மட்டம் தட்டும் வேலையை அழகாக செய்த்து கொண்டிருந்தாள். 
இன்றும் தன் மகனில்லையே! என்று சொல்லி மறை முகமாக அக்ஷையின் அன்னையையும் தாக்க,
“அது சரி. நீ பெத்ததுங்க பண்ண கொடுமையை தாங்கிக் கிட்டு அமைதியா இருந்ததே பெரிய விஷயம். பொறுமைல அப்படியே அவங்க அம்மா போல. அந்த புண்ணியவதி கொடுத்து வச்சவ யாருக்கும் தொந்தரவு இல்லாம போய் சேர்ந்துட்டா” அசோக் சிரிக்க 
“அப்போ நான் இன்னும் சாகலானு சொல்ல வாரீங்களா?” சமேலி எகிற 
“புரிஞ்சா சரி” என்று முணுமுணுத்த அசோக் “போய் கல்யாண வேலைய பாரு டி” கோபமாக  சொல்ல கண்ணை கசக்கியவாறே இடத்தை காலி செய்தாள் சமேலி.
பாஸ்கர் “ஆ” வென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருக்க 
“அந்த பொண்ண பத்தி சொல்லுடா” என்று ஆரம்பித்த அசோக் சாம்ராட் மதியழகியை பற்றி எல்லா தகவலையும் பாஸ்கரிடம் வாங்கி கொண்டார். 
“பாயோ! பேகனோ! தோஸ்தோ!{சகோதராசகோதரிகளே, நண்பர்களே} இன்று என் மூத்த மகன் அஜய்யின் மெகந்தி, சங்கீத். இந்த சந்தோசமான நிகழ்வன்று இன்னுமொரு சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்” மைக்கை கையில் பிடித்துக் கொண்ட அசோக் பேச அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டனர். 
“மதியழகி இங்க வா.. மா…” மதியழகியை அழைத்து அருகில் நிறுத்திக் கொண்ட அசோக் சாம்ராட். 
“இந்த தெற்கு தேவதை,  என் மகம் அக்ஷையின் மனம் கவர்ந்த பேரழகி மதியழகி” என்று அறிமுகப்படுத்த ஒரு கணம் பேரமைதிநிலவிய பின் கரகோசத்தோடு வாழ்த்துக்கள் ஒலிக்க ஆரம்பித்தன. 
அந்த அமைதி வலைத்தளங்களில் அக்ஷையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அலசி அதை உடைத்து,  அவனின் ஆண்மையின் கம்பீரமும், மதியழகி போன்ற ஒரு அழகி அவனுக்கு பொருத்தமானவள் தான் என்று எடை போட போதுமானதாக இருந்தது.
அக்ஷய் மதியை அழைத்து வரும் பொழுது விஷயத்தை சொல்லி அழைத்து வந்திருந்தாலும், அக்ஷையின் தந்தையே தன்னை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கத்தவள் அதிர்ச்சியடைய, 
“என்ன மருமகளே! எத்தனை நாளைக்கு மறைத்து வைக்க போறீங்க, என்னைக்காவது சொல்லித்தானே ஆகணும்” என்று அசோக் மீண்டும் மதிக்கு அதிர்ச்சியோடு தன் சம்மதத்தையும் கொடுத்தார்.
“அமைதி, அமைதி… இன்று அக்ஷய் மதியின் நிச்சயதார்த்த விழாவும் கூட அதை அவர்களுக்கே தெரியாமல் ஏற்பாடு செய்து இருக்கிறேன். அக்ஷய் வந்து என் மருமகளுக்கு மோதிரம் அணிவி…” என்று உத்தரவோடு நகர்ந்துகொள்ள மதியழகியின் அருகில் வந்த அக்ஷய் அவளின் கண்களையே பார்த்திருந்தான். 
அந்த கண்கள் “மறுத்து விடாதே மதியழகி” என்று யாசிக்க, 
அக்ஷையின் கருப்பும், பழுப்பும் கலந்த கண்களில் கட்டுண்டவள் இடது கையை அவன் புறம் நீட்டி இருந்தாள். 
மதி மறுத்துவிடுவாளோ என்று உள்ளுக்குள் குளிரெடுத்து நடுங்கிக் கொண்டிருந்த அக்ஷய் மதி கையை நீட்டவும் வேறெதுவும் சிந்திக்காமல் அசோக் சாம்ராட் கொடுத்த வைர மோதிரத்தை மதியழகிக்கு அணிவிக்க, அக்ஷையின் கண்களை பாத்திருந்த மதியும் அக்ஷய்க்கு மோதிரத்தை அணிவித்திருந்தாள். 
“என்ன இவ இந்த லுக்கு விடுறா… மோதிரத்துக்கு பதிலா தாலிய வாங்கி வந்திருக்கணும்” அக்ஷையின் மனம் ஓலமிட்டு அவனை காட்டிக் கொடுக்க கரகோசத்தில் தன்நிலையடைந்தவள் என்ன நடந்ததென்று யோசிக்க அவள் விரலில் வீற்றிருந்தது அந்த வைர மோதிரம்.
மதிக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது, அக்ஷையின் அருகில் தடுமாறும் மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியவில்லை. அவனை காதலிக்கிறாயா என்று கேட்டால் சொல்ல தெரியவில்லை. நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. அவளின் உறவு என்று இருக்கும் அன்னை கூட அருகில் இல்ல. அன்னைக்கு துணையாக தந்தையை விட்டு வந்ததால் இங்கு நடப்பதை தடுக்கவும் யாருமில்லை. நடப்பவை நல்லதா கெட்டதா? குழப்பமான முகபாவத்தை கொடுத்தாள் மதி.
திடீர் நிச்சயதார்த்தத்தை பார்த்த பாஸ்கருக்கு வியக்காமல் இருக்க முடியவில்லை. “பாஸின்  கணிப்பின் படியே எல்லாம் நடைபெறுகிறது. ஜெகஜாலகில்லாடிதான் நம்ம பாஸ்” வாய் விட்டே சொன்னவன் அக்ஷய் மோதிரங்களை கொடுக்கும் போது சொன்னது நியாபகத்தில் வந்தது. 
“பாஸ்கர் இந்த வைர மோதிரங்கள் உன்னிடமே இருக்கட்டும், இதை அஜய்யின் சங்கீத்தின் போது அப்பாவிடம் கொடு”
“எதுக்கு சார்”
“எனக்கும், மதிக்கும் திடீரெண்டு நிச்சயம் பண்ண மோதிரத்துக்கு அவர் எங்க போவாரு” 
அக்ஷய் சொன்ன பொழுது “என்ன உளறுகிறார்” என்று எண்ணியவன் அசோக் சாம்ராட் மதியழகியை பற்றி அறிந்து கொண்ட பின் “உடனே இரண்டு மோதிரங்கள் வேண்டுமே!” என்று வாய் விட்டே கூற 
“என் கிட்ட இருக்கு சார்” என்று வாய்விட்டிருந்தான் பாஸ்கர் 
“எங்க கொடு” என்று கையேடு வாங்கிய அசோக் சாம்ராட் சற்று யோசித்திருந்தால் தன் மகனின் தில்லாங்கடி வேலையையும், அவன் ஆட்டத்தையும் கணித்திருப்பார். பாசமிகு தந்தையாய். மகனுக்கு வந்திருக்கும் அவப்பெயரை துடைக்க நினைத்து மகனின் வலையிலையே விழுந்து அதில் மதியையும் சிக்கவைத்து விட்டார்.
மதியின் குழப்பமான முகத்தைக் கண்ட அக்ஷய் “உன்னை சார்ந்தவர்கள் யாருமில்லை என்ற குழப்பம் வேண்டாம் மதி. நான் இங்கு வரும் முன்பாகவே உன் அம்மாவை சந்தித்து நம் திருமணத்தை பற்றி பேசி அனுமதி வாங்கி விட்டுத்தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன்” என்று குறும்சிரிப்பொடு அவளை நோக்க, 
“எல்லாம் உன் திட்டப்படிதான் நடக்குது இல்ல” அனல் கக்கும் பார்வையை வீசினாள்  மதி. 
“இல்ல மதி. அப்பா இப்படி அனவுன்ஸ் பண்ணுவார்னு நான் நினைச்சி கூட பார்க்கல. தெரிஞ்சிருந்தா உன் அம்மா, அப்பா நிர்மல், எல்லாரையும் வரவழைத்து இருப்பேனே!” தீவிரமான முகபாவனையோடு சொல்பவனை பார்த்தவள் அவன் சொல்வதில் உண்மை இருக்கும் என்று நம்பி ஒரு கணம் அமைதியானவள் அடுத்த நொடி 
“என்னது அம்மாகிட்ட கல்யாணத்த பத்தி பேசினியா? என்ன சொன்னாங்க?” மரியாதை அழைப்புகள் எங்கு சென்றதோ ஒருமையில் விழித்திருந்தாள். 
“அவங்க மாட்டேனா சொல்ல போறாங்க? கல்யாண வயசுல பொண்ணு வளர்ந்து தறிக்கெட்டு அலையிறானு அவங்களுக்கு கவலையா இருக்காதா?” மதி முறைத்த முறைப்பில் கேலி செய்வதை கைவிட்டவன் 
“மதி லுக் அட் மீ. என் கண்ண பாரு அதுல உனக்கான காதல், நேசம் எல்லாம் இருக்கே. உன் கண்ணுக்கு தெரியலையா?” மதியழகியின் கண்களோடு கண்களை கலக்க விட்டவாறு கேட்க அவன் கண்களில் தொலைந்துக் கொண்டிருந்தாள் மதியழகி. 
அஷோக்  சாம்ராட் நிச்சயதார்த்த அறிவிப்பு விடுக்கும் பொழுது உள்ளே நுழைந்த அஜித் மதியழகியைக் கண்டு தான் அக்ஷையை சுற்றி பின்னிய வலையை அக்ஷய் சுக்கு நூறாய் உடைத்து விட்டதை உணர்ந்து கொண்டவன் மதியழகியை கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தான்.

Advertisement