Advertisement

அத்தியாயம் 13
“தளபதியின் தம்பியின் திருமணத்துக்கான மட்பாண்டங்கள் அனைத்தும் தயாராகி விட்டன. அனைத்தையும் வண்டியிலேற்றி விட்டேன். பத்திரமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பையும் மருதனிடம் கொடுத்து விட்டேன்” வேலையாள் வேலன் வந்து சொல்ல 
ஊர் தலைவர் “நீயும் கூடவே போய் மாட்பாண்டங்களை ஒப்படைத்து விட்டு பண்ணையார் கொடுக்கும் விளைச்சல்களை  பொறுப்பாய் கையேடு வாங்கிக் கொண்டு வா” 
“ஐயா போய் சேரும் பொது கல்யாண நாளாகிடும் இருந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டே வரவா?” தலையை சொறிந்தவாறு வேலன் கேட்க 
“நான் வேண்டாம் என்று சொன்னாலும் உன்னை கல்யாண சாப்பாடு போட்ட பின்தான் அனுப்பி வைப்பார்கள். அதனால் இன்னும் இரண்டு பேரை அழைத்து செல்” என்று உத்தரவிட
 இதைக் கேட்டுக் கொண்டிருந்த ருத்ரமகாதேவி குதூகலமாக தானும் கல்யாணத்தை கண்டுகளிக்க அவர்களோடு செல்ல முடிவெடுத்தாள். 
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை. அவளின் இந்த பயணத்தால் அவளின் கைகளால் இரு உயிர் போகக் போவதென்றும் அதனால் அவள் தனது காதலனை இழந்து சாபத்தில் சிக்கிக் கொள்ள போகிறாள் என்றும். அதிலிருந்து மீள முடியாமல் தனது காதலனை தேடி பல வருடங்களாக அலையப் போகிறாள் என்றும். 
அக்ஷையோடு அவனுடைய தனியார் ஜெட் விமானத்தில் டில்லியை நோக்கி பறந்துக் கொண்டிருந்தாள் மதி. இன்னும் அவள் கண்களுக்குள் அக்ஷய் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதுதான் வந்து வந்து போனது. 
பிற ஆண்களை போல் வழிந்து கொண்டோ, பூச்செண்டு கொடுத்தோ, மதியிடம் யாரும் காதலாக கசிந்துருகியதில்லை. காலேஜ் வரை நிர்மலோடு சுத்தியதால் இருவரும் காதலர்கள் என்று கணக்கிட்டு ஒதுங்கியவர்கள். அதன் பின் அவள் போலீஸ் என்று ஒதுக்கினார்கள். 
“போலீஸ் என்றால் பொம்பள இல்லையா? எவனுக்கும் தில்லில்ல” என்று மதியால் வசை பாட மட்டுமே முடிந்தது. 
அக்ஷய் விஷயத்தில் அவ்வாறில்லை முதலிலிருந்தே அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவனின் ராஜ தோரணையும், செல்வ செழிப்பும் என்றால் மிகையாகாது. அக்ஷய்க்கு ஆண்களை பிடிக்கும் என்பது புரளி என்று நன்கு அறிந்திருந்தாலும் ஏனோ உள்மனம் அதை சொல்லி அவனை வெறுப்பேத்துவதில்  குஷியாக அவனின் முகத்துக்கு நேராக சொல்லப்போய் அவன் வைத்த முத்தம் ஆழ்மன உணர்வுகளை தூண்டி அக்ஷையின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்திருப்பதை உணர்ந்தாள். 
காதல் என்ற வார்த்தையை அவள் வெறுக்கின்றாளா என்றால் இல்லை. ஆனால் அக்ஷையை காதலிக்க அவள் மனம் விரும்பவில்லை. அது ஏன் என்ற கேள்விக்கும் விடையில்லை. 
“போன ஜென்மத்துல லவ் பண்ணுறேன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டு ஓடிப்போய் இருப்பான் அதான் பிடிக்க மாட்டேங்குது” தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் 
அவன் காதலிப்பதாக சொல்லாமல் நேரடியாக கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டது உறுத்தியது. சினிமாத்தனமான “உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் செய்து கொள்ளலாமா?” என்னு அக்ஷய் கேட்டிருக்க வேண்டும் என்று மதி எண்ணவில்லை. அவன் கண்களில் தெரிந்த தீவிரம் மதியை அடைந்தே ஆகவேண்டும் என்ற தீவிரம் அவளை அச்சுறுத்தியது. 
உள்மனம் அவனை ஏற்றுக்கொள் என்று உத்தர விட, போலீஸ் மூளை அவளை தடுத்துக் கொண்டிருக்க பெண் மனமோ! “கல்யாண விஷயம் நேரடியாக பெண்ணிடமா பேசுவாங்க? பெத்த அம்மா இருக்காங்களே! அவங்க கிட்ட போய் பேச வேண்டியது தானே!” என்று சப்பைக்கட்டு கட்டியது. 
  விமானத்தில் அமர்ந்திருந்தாலும் தனது தொழில் பற்றிய பேச்சுக்களே அக்ஷையின் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது. பாஸ்கரும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டிருக்க, என்னதான் வேலை பார்த்தாலும் அக்ஷையின் கண்கள் மதியை அடிக்கடி மொய்த்துக் கொண்டான் இருந்தன. 
அவள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது அவன் மனதை வாட்டினாலும், அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் தன் வேளையில் மூழ்கி இருந்தவன் மதியை நோக்க 
“விட்டால் யோசித்து யோசித்தே மண்டை குழம்பி பைத்தியமாகிடுவா” முணுமுணுத்தவன் 
“மதி கல்யாண பொண்ணுக்கு என்ன கிப்டு வாங்கலாம்?” அது அவள் காதில் விழுந்தால் தானே 
“மதியழகி…..” சத்தமாக அழைக்க திடுக்கிட்டு திரும்பியவள் முழிக்கலானாள். 
மிகவும் சாதாரணமாக “கல்யாண பொண்ணுக்கு என்ன கிப்டு வாங்கலாம்” மீண்டும் முதல் முறையாக கேட்பது போல் கேட்க குழம்பினாள் மதி. 
அக்ஷையின் அண்ணன் கல்யாணம் அண்ணனுக்கு கிப்டு கொடுக்கலாம். அண்ணிக்கு கொடுக்க தன்னிடம் எதற்கு கேற்கின்றான்? நான் என்ன அவன் பொண்டாட்டியா?” முற்றாக தன்னை மீட்டவள் அவனை முறைக்க 
அவளின் எண்ணப்போக்கை கைப்பற்றியவன் உள்ளுக்குள் சிரித்தவாறு “எனக்குத்தான் பொம்பளைங்களை பற்றி ஒன்னும் தெரியாதே! அதான் என்ன கிப்ட் வாங்கலாம்னு உன் கிட்ட கேட்டேன்” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல 
தான் அவனுக்கு பசங்களைத்தான் பிடிக்கும் என்று சொல்வதைத்தான் இவ்வாறு சொல்கிறான். தக்க சமயம் பார்த்து மறைமுகமாக தாக்குவதில்  அக்ஷய் கில்லாடி என்று புரிந்து கொண்ட மதியோ அமைதியாக “உங்க அண்ணி பெரிய இடமாக இருக்கும். நான் எல்லாம் ஷாப்பிங் என்று போனதே இல்ல. எனக்கு எல்லாம் அம்மா வாங்கி கொடுப்பதுதான்.  இதுல என்ன கிப்டு வாங்க என்று நான் சொல்லி நீங்க வாங்கி உங்களுக்குத்தான் அசிங்கம்” உன் பணத்துக்கு முன் நான் ரொம்பவும் சாதாரண பெண் என்று சொல்லாமல் சொன்னாள் மதி. 
அவள் உணர்வை புரிந்துக் கொண்டவனாக “பணம் இருந்தால் மட்டும் எல்லாத்தையும் வாங்கிட முடியாது மதி. பணமிருந்தும் அன்புக்காக ஏங்கும் ஏழை நான்” ஒரு பெருமூச்சு விட்டவன் “தேவதையிடம் வரம் கேட்டியே உலகத்திலுள்ள நம்பர் ஒன் பணக்காரியாகணும்னு ஏன் கேட்கல? உனக்கே தெரியும் பணம் மட்டும் இருந்தா சந்தோசமா வாழ்ந்திட முடியாது. அன்பான சொந்தங்களும், ஆறுதலா பேச நண்பர்களும். தோள் கொடுக்க தோழியா காதலியும், மடிசாய மனைவியும், செல்லம் கொஞ்ச குழந்தைகளும் வேணும். அப்போதான் ஒரு மனிசனோடு வாழ்க்கை முழுமையடையும்” 
அக்ஷய் நினைத்திருந்தால் மதியை வேலைக்கு பலவந்தமாக அமர்த்தியது போல் பலவந்தமாக கல்யாணம் செய்திருக்க முடியும். ஆனால் அவனுக்கு தேவை அவள் சம்மதம். அவன் காதலிப்பதாக அவளிடம் சொல்ல கூட முடியாத நிலை. காதலிக்கிறேன் என்று சொன்னாள் மதி ஏற்று கொண்டிருப்பாளா? கேள்விக்குறிதான். ஆனால் தன் மனதில் அவளுக்கான நேசத்தை சொல்ல முடியாமல் அவள் அருகில் ஒவ்வொரு நொடியும் தவிப்பது மனதை குத்திக் கிழிக்க மதியை அடையும் வரை பொறுமை காப்பது முக்கியமாக இருப்பதால் அமைதிகாக்கலானான். 
அக்ஷய் பேசப்பேச அவனை எடைபோடலானாள் மதி. அவள் சந்திக்கும் பொழுது அவள் பார்த்த அக்ஷய் இல்லை இது. சந்தித்த போது தெனாவட்டும், எள்ளல் பேச்சும், அதிகாரமும் பரவி இருக்க மனதளவில் அன்புக்காக ஏங்கும் அவனை காணக்காண இரக்கம் சுரந்தது. கண்டிப்பாக காசு, பணம் என்று அந்தஸ்து பார்ப்பவனல்ல அக்ஷய். அவன் நினைத்தால் உலகத்திலிருக்கும் எந்த ஒரு பேரழகியையும் மணக்க முடியும். அல்லது பணம் தான் முக்கியம் என்றால் பணக்காரியை பார்த்து மணக்க முடியும். தன்னை ஏன் மணக்க வேண்டும்? காதல் என்றால் கூட பரவாயில்லை. ஒருவேளை காதலித்தே இல்லாதவனுக்கு காதலை சொல்லி பழக்கமில்லையோ! வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு போல பட்டென்று கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு விட்டானோ! மீண்டும் மதி யோசனையில் விழ 
“மதி மேடம். என்ன கிப்ட் வாங்கலாம்?” அக்ஷய் மீண்டும் கேள்வி எழுப்ப 
“உங்க லெவலுக்கு நல்லதா வைரத்துல நகை வாங்குங்க பட்டென்று சொன்னவள் மீண்டும் அவன் ஏதாவது கேட்டு விடுவானோ என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
  விமானம் தரையிறங்கியதும் கார்கள் வரிசைகட்டி நிற்க ஒன்றில் அக்ஷையும் மதியும் ஏறிக்கொள்ள முன்னாள் ஏறப்போன பாஸ்கரை பின்னால் வரும் வாகனத்தில் ஏறும்படி சைகை செய்தவன் மதியோடு செல்லும் கார்ப் பயணத்தை ரசிக்கலானான். 
டில்லி குளிர் காருக்குள்ளும் வீச ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த ஸ்விட்ர்களை மதிக்கு கொடுத்தவன் தானும் அணிந்துக் கொண்டு கைக்கும் கைக்கவசம் அணிந்துக் கொண்டு காதுக்கும் குளிர் தாக்காதவாறு கவசமிட்டான். 
“நாமதான் சென்னையை தாண்டவே இல்லையே.. எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊருக்கு ஏத்தா மாதிரி துணி கொண்டு போகணும்னு கூட தெரியல. தான் கொண்டு வந்த துணிகளை நினைத்து நொந்து கொண்டவள். இரவில் குளிரில் நடுங்கி சாவது உறுதி என எண்ணலானாள்” 
வண்டிகள் வரிசையாக நிற்கவும் அக்ஷையின் வண்டி வாசற்கதவின் அருகே நிற்க அக்ஷய் இறங்க மதியும் இறங்கிக் கொண்டாள். சாதாரணமான வீடாக தெரியவில்லை பார்க்கவே ஹோட்டல் போல் காட்ச்சியளிக்க மதி வாய்விட்டே கேட்டு விட்டாள். 
“ஆமாம் இது என் சொந்த ஹோட்டல் இந்த என்டெரெண்ட்ஸ் நான் வந்து போக மட்டும்” என்றவன் நடந்தவாறே சொல்ல மின்தூக்கி வரவும் உள்ளே நுழைய அங்கே ஒரே ஒரு பொத்தான் இருக்கவே மதி புருவம் உயர்த்த அக்ஷய் அதை அலுத்தியிருந்தான். மின் தூக்கியும் விசாலமாக இருக்க அக்ஷையோடு பாஸ்கர், பிர்ஜு, மதி இன்னும் இரண்டு பாதுகாவலர்கள் கூட வர மற்றவர்கள் கீழ் தளத்தில் இருந்தனர். 
மின்தூக்கி நின்றதும் மதியால் கண்களை விரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த தளம் அக்ஷையின் வீடு. ஹோட்டல் போல் அலங்காரமும், ஓவியங்களும், திரைசீலைகளும் நேர்த்தியாக அமைந்திருக்க, அக்ஷய் தங்கிக் கொள்ளும் பகுதி வேறாக இருந்தாலும் பிரிக்கப்பட்டது தெரியாமல் இருந்தது. 
மதி ஆவலாக வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க “பாக்குறத பாரு பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்தா மாதிரி. இவ கிட்ட என்ன இருக்குனு அக்ஷய் சார் இவ பின்னாடி அலையிறாரோ” பிஜு கழுத்தை நொடிக்க
“பார்த்து பிர்ஜு சுளிக்கிட போகுது. அப்பொறம் சார் நல்லாவே சுளுக்கெடுப்பாரு”  பாஸ்கர் வெறுப்பேத்த 
“அவர் சுளுக்கெடுப்பாரோ இல்லையோ நீ வந்து பருப்பு கடஞ்சி கொடு சமைக்கணும்” 
“சமைக்கிறது உன் வேல அத மட்டுமாச்சும் ஒழுங்கா பாரு”
“கண்ட கண்டவங்களுக்கெல்லாம் சமைக்க வேண்டி இருக்கு சார் கிட்ட சொல்லி ஒரு அசிஸ்டன் வைக்கணும்” 
“உன்ன தூக்கிட்டுதான் மறுவேலை பாப்பாரு பரவாலையா?” பாஸ்கர் சிரிக்க 
“தமாஷ் பண்ணா என் வேலைக்கே உலை வைப்ப போல் இருக்கே” பாஸ்கரை வசைபாடியவாறு  பிர்ஜு உள்ளே செல்ல அழைப்பு மணி அடித்தது. 
பாஸ்கர் சென்று கதவை திறக்க பாதுகாவலர் ஜவுளிக்கடைக்காரரையும், நகைக்கடைக்காரரையும் பரிசோதித்து விட்டதாக சொல்லி உள்ளே விட அவர்களை உள்ளே அழைத்து வந்து அமர்த்தி விட்டு அக்ஷய்க்கு தகவல் கொடுத்தான் பாஸ்கர். 
அந்த குளிரிலும் ஒரு குளியலை போட்டுவிட்டு வந்த அக்ஷய் மதியை அழைத்து மணப்பெண்ணுக்கான வைர நகையை தேர்வு செய்யும் படி சொல்ல பிகு பின்னால் அவளும் தேர்வு செய்து கொடுக்க, இன்னும் சில நகைகளையும், டிசைனர் சாரிகளையும் தேர்வு செய்தவன், வேலைப்பாடுகள் கூடிய லேகங்கா மற்றும்  நீண்ட ஃபிராக் ஒன்றையும் தேர்வு செய்தான். 
“யாருக்காக பார்த்து பார்த்து தேர்வு செய்கிறான்” மதிக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அவனிடம் கேட்கவா முடியும். அமைதியாக வேடிக்கை பார்த்தவள் அவனின் வர்ணத் தேர்வுகளும், அதன் வேலைப்பாடுகளும், ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதும் அவைகளின் விலையும் அவளை பிரம்மிக்க வைக்க அந்த நீல நிற ஃபிராக் தான் அணிந்தால் எவ்வாறு இருக்கும் என்று கற்பனையில் மிதந்தவள் உடனே சுதாரித்து உள்ளே செல்வதாக அக்ஷையிடம் கூறிக் கொண்டு உள்ளே சென்றாள். 
மதிக்கு சரி என்று தலையசைத்த அக்ஷய் பாஸ்கரின் புறம் திரும்பி “இந்த எல்லா ட்ரெஸ்ஸுக்கும் பொருத்தமான காலனி உடனே வேணும். உடை அலங்காரம், ஒப்பனை செய்பவர், பியூட்டிபாலர்ல இருந்து ஆட்கள் எல்லாரும் உடனே வரணும். மணப்பெண்ணுக்கு ஈடாக என் மதி நிற்கணும். இட்ஸ் மை ஆர்டர்” சொல்லியவன் தனதறைக்குள் புகுந்துக்கொள்ள 
“ஆகா கல்யாண வீட்டுல கத்தியில்லாம, ரத்தமில்லாம யுத்தம் இருக்கும் போலயே” தனக்குள் முணுமுணுத்தவன் அக்ஷையின் கட்டளையை உடனே நிறைவேற்றலானான். 
அடுத்து இருநாளும் மதி பாலர் பெண்களின் வசமானாள்,பேசியல், வாக்சிங், மேனிக்கிவ், பெடிகிவ், என்று அவளை பாடாய் படுத்தி வெயிலில் கறுத்திருந்த அவளின் தேகத்தை மிளிர செய்தனர் பாலர் பெண்கள். 
தனது முகத்துக்கோ, முடிக்கோ அதிக கவனம் செலுத்தாதவள் மதி. முத்துலெட்சுமிதான் வசைபாடியவாறு எண்ணெய் தேய்த்து விடுவாள். மேகம் மறைத்த நிலவாய் இருந்தவள் பௌர்ணமியாய் ஜொலிக்க தன் கண்களையே மதியால் நம்ப முடியவில்லை. உடனே தாயை வீடியோ காலில் அழைத்தவள் பேச முத்துலெட்சுமியும் மகளைக் கண்டு மெய்மறந்து ரசிக்கலானாள். 
“மதி கல்யாணத்துல பெரிய இடத்து பசங்களெல்லாம் வருவாங்க கண்டிப்பா எவனாச்சும் உன் அழகுல மயங்கி கல்யாணம் பண்ண சொல்லி கேட்கத்தான் போறான் உடனே சரினு சொல்லு” ஒரு அன்னையாக தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை இவ்வாறு சொல்ல 
“உன் கண்ணுக்கு அக்ஷய் ஆம்பிளையாக தெரியலையா?” கத்தனும் போல் இருந்தது மதிக்கு “நான் சாதாரணமாக இருந்த போதே என்னை அவன் கல்யாணம் செய்வதாக கேட்டானே! இப்போ கூட எனக்காதானே இதெல்லாம் பண்ணுறான். யாரோ ஒரு பொண்ணா இருந்தா பண்ணி இருப்பானா? இல்ல பாதுகாப்புக்கு வந்தவதானேனு துணியெல்லாம்  எடுத்துக் கொடுத்திருப்பானா?” 
 இரண்டு நாட்களுக்கு முன் அவன் தேர்வு செய்த துணிகளோடு பொருத்தமான காலணிகளுடன் அவள் அறைக்கதவை தட்டியவாறு உள்ளே நுழைந்த அக்ஷய் “மதி இத சங்கீத்க்கு அணி, இத நிச்சயதார்த்தத்துக்கு, இது கல்யாணத்துக்கு, இது வரவேற்புக்கு, உன்ன யார்னு கேட்டா என் உட்பினு தான் அறிமுக படுத்த போறேன்” கடகடவென சொன்னவன் அறையைவிட்டு நகர 
“ஒரு நிமிஷம் என்ன நினைச்சி கிட்டு இருக்கீங்க உங்க மனசுல நான்தான் உங்கள கல்யாணம் பண்ண முடியாதுனு சொல்லிட்டேன்ல அப்பொறம் இதெல்லாம் வாங்கிக்கொடுத்து என்ன உங்க பக்கம் சாய்க்க பாக்குறீங்களா?” தன்னிடம் அதிகாரமாக அக்ஷய் நடந்து கொண்டது பிடிக்காமல் மதி கோபமாக பேச 
“எங்க வீட்டு பங்க்சன்ஸ் எப்படி இருக்கும்னு நெட்ல பாரு. நீ கொண்டுவந்திருக்கும் துணிய போட்டுட்டு போனா உன்ன கண்டபடி பேசுவாங்க. உன்ன பேசினா என் கை நீளும். ஏற்கனவே என் குடும்பத்துக்கு நான் என்றால் ஆகாது. உன்னால பிரச்சினை என்றால் அத ஊதி பெருசாக்கி குளிர் காய்வங்க. நீ நல்ல துணி போட்டு போனாலும் உன்ன யார்னுதான் கேப்பாங்க. என் உட்பி சொன்னா கேள்வி கேட்க மாட்டாங்க. கூடவே எனக்கு பசங்கள பிடிக்கும் என்ற புரளியும் மாயமா மறைஞ்சிடும். ஒரே கல்லுல எத்துணை மங்கா?” பொறுமையாக விளங்கியவன் கண்சிமிட்டியவாறே கதவை சாத்திவிட்டு நகர 
“உன் துணியை போட்டுக்கொண்டு போனால் எனக்கு கேவலம் என்று சொல்லாமல் உன்னை கண்டபடி பேசுவார்கள். உன்னை பேசுபவனை அடிப்பேன் என்று சோபவனிடம் என்னவென்று சொல்ல. தான் மறுத்தாலும் அவன் நினைத்ததைத்தான் செய்வான்.  நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக அக்ஷய் சொல்பவைகளையெல்லாம் செய்யலானாள் மதியழகி. 
அக்ஷய்க்கும் ஆச்சரியம் தான் மதி அடம்பிடிக்காமல் அமைதியாக ஒத்துக் கொண்டது. அவன் கண்களுக்கு காக்கி உடையிலும் கொள்ளை அழகியாக தெரிபவள் பாலர் அழகில் மிளிர்ந்தால் தன்னிலை கட்டுக்குள் கொண்டுவருவது கஷ்டம்தான். பெரும் பாடு பட்டு மனதை அடக்கியவன் அவளை சாதாரணமாக பார்த்து வைக்க மதியின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.  
அந்த கட்டுப்பாடெல்லாம் அவளை லெகாகாவில் பார்க்கும் வரைதான். எலுமிச்சை நிற இடை தெரிய, முடியை முன் பக்கம் பின்னி பின் பக்கம் விரிரித்து போட்டு, நெத்திச்சுட்டி சூடி, தலையலங்காரம் வேறு கண்ணைக்கவர,   கண்ணுக்கு விஷேசமாக ஒப்பனை செய்திருந்தாள். அதில் அக்ஷையின் இதயம் கரைந்துக் கொண்டிருக்க அதற்க்கு கீழ் அவன் கண்கள் செல்லவே இல்லை.  கண்சிமிட்டாமல் மதியை ரசித்துக் கொண்டிருந்தான் அக்ஷய். 
“என்ன இப்படி பார்த்துக் கொண்டு நிக்குறான்” மதியின் மனம் வெம்ப உடலில் இரத்தம் சூடாக பாய ஆரம்பித்தது. ஆளை ஊடுருவும் பார்வை. அப்பொழுதுதான் அக்ஷையின் கண்களை கவனித்தாள் மதி. கருப்பும், பழுப்பு கலந்த நிறம். எங்கையோ பார்த்த கண்கள் எங்கே? அவள் மூளை சிந்திக்க, இவர்களின் மோனநிலையை கவனிக்காது அங்கே வந்த பாஸ்கர் ஒருகணம் திகைத்து நின்றுவிட பின்னால் வந்த பிர்ஜூதான் வேண்டு மென்றே மேசை மீதிருந்த தண்ணீர் குவளையை தட்டிவிட்டு உடைத்து சத்தமெழுப்பி அவர்களை சுயநினைவுக்கு கொண்டுவந்தான்.  
சுதாரித்த அக்ஷய் எதுவும் பேசாது அமைதியாக மதியோடு மின்தூக்கியில் நுழைய பாஸ்கர் பிரஜூவை வசைபாடலானான். 
“விட்டா போன ஜென்மம் வரை பார்வையாலையே  ஊடுருவி போய் பார்த்து விட்டு வந்திருப்பாங்க நீ வேற” பிர்ஜு எகிற 
“எல்லாம் நியாபகத்தில் வந்து அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தால் நல்லதுதான்” மனதில் நினைத்த பாஸ்கரோ! மின் தூக்கி வரும் வரை காத்திருக்கலானான். 
வட நாட்டவர்களின் சங்கீத் எனும் இசைவிழா ஒரு பக்கம் ஆடல், பாடலோடு களைகட்ட,  மருதாணி இடும் நிகழ்ச்சி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அக்ஷையும், மதியும் உள்ளே நுழையும் பொழுது மாப்பிளை வீட்டார்கள் வருகை தந்து அமர வைக்கப் பட்டிருக்க உள்ளே செல்லும் முன்பாகவே மதியை தன் வருங்கால மனைவி என்று அறிமுகப்படுத்தி வைத்த அக்ஷய் உள்ளே சென்று மதியோடு அமர்ந்து கொள்ள மணமகனாக அமர்ந்திருந்த அஜய்யின் முகத்தில் மாப்பிளை கலையில்லாமல் சோகம் குடிகொண்டிருந்தது.  
இந்த திருமணம் அவன் விருப்பமில்லாமல் வியாபார ஒப்பந்தமாக  நடப்பது அக்ஷய்க்கு நன்றாகவே தெரிந்தது. அதுவும் மணப்பெண் கோடீஸ்வரி என்றும், தன் பெரியண்ணை பார்த்த பெண்ணென்றும் அறிந்து கொண்டவன் அண்ணனின் விதியை நினைத்து கவலை கொண்டானில்லை. மாறாக கோழையென்றும், கைபொம்மையென்றுமே எண்ணலானான். 
பணத்தை வீசியெறிந்து கொண்டாடப்படும் விழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மதியின் கண்களில் விழுந்தால் அவள். அஜய்யின் அருகில் வெள்ளை புகை உருவமாய், சோகச்சித்திரமாய் அஜய்யின் கைகளை பிடிக்க முடியாமல் தடுமாற்றத்தோடு, அவனோடு பேச முடியாமல் குழப்பத்தோடு. மதியின் மனமோ! எவ்வாறு அந்த ஆவியிடம் பேசுவதென்பதிலையே இருந்தது. 
   
  

Advertisement