Advertisement

அத்தியாயம் 12
ராஜவேலு தோன்றும் பொழுதெல்லாம் அவனை பிடிக்க ப்ரீத்தி வர சரியாக ருத்ராட்ச மாலை இருக்கும் இடத்துக்கு வந்தவன் ப்ரீத்தி நெருங்கும் பொழுது மறைய ப்ரீத்தியின் கழுத்தில் மாலை விழவும் சரியாக இருந்தது. 
எவ்வாறு நடந்ததென்று ப்ரீத்தி யோசிக்கும் பொழுதே அக்ஷய் அதன் கழுத்தை நெறிக்க அவனால் ஆவிகளை பார்க்க முடியுமா? ஏன் என்னிடம் சொல்லவில்லை” என்று மதி நினைக்கலானாள்.  
ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டதால் மந்திரம் சொல்ல முடியாமல், அக்ஷையை எவ்வாறு தடுப்பதென்று தெரியாமல் திமிரலானாள் ப்ரீத்தி.
மதியும் அக்ஷையின் அருகில் வர ப்ரீத்தி கொஞ்சகம் கொஞ்சமாக மாறி தனது உண்மையான ஆத்மாவின் உருவத்துக்கு வந்திருக்க, இப்பொழுது பார்க்க கொஞ்சம் நல்ல மாதிரியாக இருந்தாள். 
“சொல் ஏன் நீ ஸ்வீட்டியின் உடலுக்கு வந்த… என்ன உன் திட்டம்? தங்கை என்ற பாசம் கொஞ்சமாவது இல்லையா? இப்படி துர்ஆத்மாவாக அலைஞ்சு என்ன சாதிக்க போற? மதி கேள்விகளை அடுக்க அக்ஷய் கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கும் வேளையிலும் திமிரடங்காமல் சத்தமாக சிரிக்கலானாள் ப்ரீதி” 
“என்ன மதி கேள்வி கேட்டு கிட்டு நிக்குற இத அழித்தொழி” அக்ஷய் கர்ஜிக்க 
ஸ்வீட்டியின் அக்கா என்பதினாலே என்னமோ மதிக்கு அந்த ஆத்மாவைய் துர்ஆத்மாவாக அழிக்க மனம் வரவில்லை. 
“இல்ல… ஸ்வீட்டி ரொம்ப வருத்தப் படுவா…” மதி சொல்ல 
“யாரு அவளா? இந்த உலகத்துலயே நான் வெறுக்குற ஒரே ஜீவன் அவ தான்” 
“அப்படி அவ உனக்கு என்ன செஞ்சிட்டா?” 
“என் கூட பொறந்தாள்ல அதுதான் அவ பண்ண ஒரே தப்பு. அதுவும் அழகா பொறந்து தொலச்சது அத விட பெரிய தப்பு. சின்ன வயசுல இருந்தே அவளை படுத்த ஆரம்பிச்சேன். வளர வளர வன்மம் கூடியே தவிர கொஞ்சமாலும் குரையல. முதல்ல அவளை கொல்லனும் னு தான் முடிவெடுத்தேன். அவளை கொன்னுட்டு காலம் பூரா ஜெயில்ல இருக்கணுமா? கூடாதே என்ன செய்யலாம் னு யோசிக்கும் பொழுதுதான். லைபலரில ப்ளாக் மாஜிக் பத்தின புத்தகம் ஒன்னு கிடைச்சது. 
அது என்னமோ! சாதாரண புத்தகம் தான் அதன் பின்தான் அத பத்தி முழுமூச்சா தேட ஆரம்பிச்சேன். அப்பொழுதுதான் அகோரர்களை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. அவர்களிடம் நிறைய மந்திரங்கள் கத்துக்கிட்டேன். அதுவே எனக்கு கை கொடுத்தது. 
ஒரு கொடூரமான சாவு நிகழ்ந்தால் மட்டும் தான் என்னால துர்ஆத்மாவாக மாற முடியும் னு தெரிஞ்ச பின்னாடி வேணும்மெ போய் ஹைவேல வேகமாக வரும் பெரிய டேங்கர் லாரில மோதி அரைபட்டு செத்தேன். 
நான் நினைச்சது போலவே துர்ஆத்மாவாக மாறி ஸ்வீட்டியோட ஆத்மாவை சிறை புடிச்சு அவ உடம்ப அடைஞ்சேன்” தான் செய்த கொடுமையை கொஞ்சமேனும் வருத்தமில்லாமல் சொல்ல மதிக்கும் இவ திருந்தவே மாட்டாள் என்று தோன்ற 
“உனக்கு கடைசியா ஒரு சந்தர்ப்பம் தரேன். ஸ்வீட்டிகிட்ட மன்னிப்பு கேளு” 
“யாரு நானா… அவளை வர சொல்லு என் கையாலையே அழிக்கிறேன் இன்னைக்கி இந்த பூஜைல அவ ஆத்மாவை பழி கொடுத்து நான் நிரந்தரமா அவ உடம்புல தங்கலாம்னு முடிவு பண்ணி இருந்தேன் அதுக்குள்ளே இவனால் அவ தப்பிச்சா” அக்ஷையி பார்த்தவாறே கத்த 
இதற்கு மேலும் இவளிடம் கெஞ்ச வேண்டிய அவசியமென்ன என்று எண்ணிய மதி “உன் முடிவு உன் கையில்” என்றவாறே அக்ஷையிடம் கையை எடுக்குமாறு கூற இலகுவாகவே கையை வைத்திருந்தவன் எடுக்க மதி காப்பணிந்த கையால் ப்ரீதியையின் கழுத்தை பிடித்து நெறிக்க சாம்பலாக மாறி காற்றில் கரைந்தாள்.   
“ப்ரீத்தியை அழிச்சாச்சு இப்போ எப்படி ஸ்வீட்டியோட ஆத்மாவை அவ உடம்புக்குள் புகுத்துறது” அக்ஷய் கேள்வி எழுப்ப 
அவனை முறைத்தவள் “உங்களுக்கு ஆவிகள் கண்ணுக்கு தெரியும்னு ஏன் சொல்லல” 
அவளின் முறைப்பைக் கண்டு கொள்ளாது கையில் கண்ணாடி குத்துப்பட்டு இரத்தம் வழியவே  அதை துடைத்தவாறே “என் கண்களுக்கு ஆவிகள் தெரியும்னு நான் சொல்லவே இல்லையே” அவளை மடக்க, 
“பேச்சுல பெருச்சாளி” முணுமுணுத்தவள் அவனின் கையைக் கண்டு கைக்குட்டையை எடுத்தவாறே அவனருகில் சென்றவள் காயத்தை பார்த்து விட்டு கை குட்டையை காயத்தின் மேல் வைத்து கட்டியவாறே “நான் கண்டது பொய்யா? ப்ரீதியோட கழுத்த நெருச்சீங்களே அது எப்படி?”
அவளின் நெருக்கமும், கரிசனமும் அக்ஷையின் காதல் நெஞ்சம் நிறைக்க, அவளை ரசனையாக பார்த்தவாறே “ஓஹ்…  அத கேக்குறியா? முழுசா தெரியாது. நிழல் உருவமா… நல்ல ஆத்மனா வெள்ளையாக, துர் ஆத்மனா கருப்பாக தெரியும். எனக்கென்னமோ நான் உன் கூட இருக்குறதால வந்த சைட் எபக்ட்னு நினைக்கிறேன்” என்று கண்சிமிட்ட 
அவனின் ஆறடி உயரத்துக்கு அவளின் ஐந்தரையாடி உருவம் சளைக்கவில்லை எனும் விதமாக அவனை நெருங்கி நின்றவள் தலை உயர்த்தி அவனை நேர்பார்வை பார்த்தவாறு “அப்போ இந்த காப்பால ஆவிகள் உங்க கண்ணுக்கு தெரியல. அப்படித்தானே!” காப்பிருக்கும் கையை பிடித்துக் கொண்டு முறைக்க 
மதியின் முறைப்பைக் கண்டு ரசித்தவன் அவள் முறைத்தவாறே தன்னை நெருங்கி நிற்பதை உணராது இருக்கிறாள் என்று உள்ளுக்குள் சிரித்தவாறே “அட ஆமால்ல… ஆனா காப்பு போட்டா முழுசா தானே தெரியணும் ஏன் இப்படி அறையும், குறையுமா காட்ச்சி தருது?” அவளிடமே சந்தேகம் கேட்பது போல் கேட்க, தனது கோபத்தை அடக்க, மதி பெரிதும் பாடுபடலானாள். 
“உங்க பேச்சு வார்த்தையை அப்பொறம் வைச்சிக்கோங்க முதல்ல இந்த பொண்ண இவ உடம்போட சேருங்க” ராஜவேலு ஸ்வீட்டியை அழைத்து வந்திருக்க, நிர்மலுக்கு அழைப்பு விடுத்தவள் அவனையும் உள்ளே வரும் படி சொல்ல  பாதுகாவலர்கள் வெளியே காவலுக்கு இருக்க நிர்மல் உள்ளே வந்து சேர்ந்தான். 
மதி காப்பணிந்த கையால் ஸ்வீட்டியின் உடம்பையும், ஸ்வீட்டியின் ஆத்மாவையும் ஒன்று சேர்க்க முனைய அது நடக்கவில்லை. 
அக்ஷய் தன் கை கொண்டு முயற்சி செய்ய ஒன்றுமே நடக்கவில்லை.
கடைசி முயற்சியாக இருவரின் காப்புக் கைகளாலும் ஸ்வீட்டியையும், ஸ்வீட்டியின் ஆத்மாவையும் இணைக்க போராட அதுவும் தோல்வியில்லையே முடிந்தது.
“துர்ஆத்மாவை எப்படி அழிக்குறதுனு ருத்ரமகாதேவிக் கிட்ட கேட்டியே ஸ்வீட்டிய எப்படி ஒன்னு சேக்குறதுனு கேட்டியா?” ராஜவேலு மதியின் முகம் பார்க்க நிர்மல் அழுதே விட்டான். 
“இவன் ஒருத்தன் எதுக்கெடுத்தாலும் அழுது கிட்டு” ராஜவேலு கடுப்பாகி நிர்மலின் தலையை தட்ட ராஜவேலுவின் கை நிர்மலின் தலையில் படாமல் ஊடுருவி செல்ல அதில் மேலும் கடுப்பான ராஜவேலு “மதிமா எனக்கா இவனை ரெண்டு போட்டேன்” என்று சொல்ல நிர்மலோ மதியின் காலைக் கட்டிக் கொண்டு கதறலானான். 
அவனின் நிலை அக்ஷய்க்கே பார்க்க பாவமாக இருக்க “அந்த ப்ரீதியோட ஆத்மாவை அழிச்சாச்சு. அத செஞ்ச நம்மால ஸ்வீட்டியோட   உடம்ப அவ கைல ஒப்படைக்க முடியாத அழாத நிர்மல்” என்றான் அக்ஷய்.
மதியோ “மீண்டும் ருத்ரமகாதேவியை அழைத்து கேக்கலாம் என்று விட” அக்ஷையின் மனதில் பூகம்பமே வெடிக்கலானது. 
“எதுக்கு சும்மா, சும்மா அவங்கள டிஸ்டர்ப் பண்ணுற?” அக்ஷய் உள்ளுக்குள் பதறினாலும் அதை வெளிக்காட்டாது சொல்ல
அவனை முறைத்தவள் “ருத்ரமகாதேவி எப்போ வேணாலும் நான் கூப்பிட்டா வருவாங்க, என்று கண்ணை மூடி வேண்ட
அவளை இழுத்தணைத்தவன் அவளை முத்தமிட ஆரம்பிக்க அங்கே இருந்த அனைவரும் அதிர்ச்சியாக பார்த்திருக்க மதியோ அவனிடமிருந்து திமிறி விலகி தன்னுடைய பலம் முழுவதையும் திரட்டி அவனை தள்ளி விட்டிருக்க, சமநிலை தவறியவன் தேசிக்காய் வட்டத்துக்குள் இருக்கும் மண்ணாலான பொம்மை மீது விழ பொம்மை துகள் துகளாக உடைய ஸ்வீட்டியின் ஆத்மா மாயமாக மறைந்தது. 
“ஐயோ…. ஐயோ… அந்த பொண்ணு மறையுது ராஜவேலு கத்த மதியும் ஸ்வீட்டியின் புறம் திரும்பினாள். ஸ்வீட்டியோ காற்றில் கரைந்துக் கொண்டிருந்தாள்.
மதி அதிர்ச்சியாகி சிலைபோல் நின்று விட தனது காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்துகள்களை தட்டியவாறே எழுந்து நின்ற அக்ஷய் மதியை உலுக்க 
“ஸ்வீட்டி, ஸ்வீட்டி மாயமா மறைஞ்சிட்டா, மாயமா மறைஞ்சிட்டா…” என்று கதற அதைக் கேட்டு நிர்மல் தலையில் அடித்துக் கொண்டு அழலானான். 
ராஜவேலுவும் செய்வதறியாது நின்றிருக்க, அக்ஷய்க்கு என்ன நடந்தது? எங்கே தவறு நடந்ததென்று புரியாமல் குழம்பி நின்றான். 
மதி நிர்மலைக் கட்டிக் கொண்டு அழ இருவரின் கதறலையும் கேட்டுக்கொண்டே கண்விழித்த ஸ்வீட்டி 
“கொஞ்சம் அழுறத நிறுத்துறீங்களா?” ஈனசுரத்தில் முனக அது யார் காதையும் எட்டவில்லை. 
எழுந்து அமரவும் முடியாமல் சத்தமாக பேசவும் முடியாமல் நிர்மலும், மதியும் கதறுவது காதில் இரைச்சலாகவே ஒலிக்க கண்களை இறுக மூடிக் கொண்டாள் ஸ்வீட்டி. 
அவர்கள் கதறுவது ஓயவே  இல்லை என்றதும் அக்ஷய் அவர்களை எப்படி ஆறுதல் படுத்துவதென்று புரியாமல் தன்னையே வெறுக்கலானான். 
ஸ்வீட்டியோ கண்ணை மூடியவாறு கையால் துழாவி கையில் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க அவள் கையில் ஏதோ ஒரு பொருள் தட்டுப் படவே அதை நிலத்தில் அடிக்க ஆரம்பித்தாள். 
அந்த சத்தத்தில் ராஜவேலுவும், அக்ஷையும் அவள் புறம் திரும்ப ஸ்வீட்டி அசைவத்தைக் கண்டு அக்ஷய் அவளருகில் ஓட ராஜவேலு மதியை உலுக்கலானான். 
மதி சுயநினைவுக்கு வரவும்,  அக்ஷய் கத்தவும் சரியாக இருக்க அனைவரும் ஸ்வீட்டியை சூழ்ந்துக் கொண்டனர். 
நிர்மல் அவளைக் கட்டிக் கொண்டு அழ “போதும் டா டேய் முடியல” ஸ்வீட்டி வலி நிறைந்த முகமாக கிண்டலடிக்க, நிர்மலின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது. 
“ஸ்வீட்டி ஆர் யு ஓகே? உன்னால எந்திரிக்க முடியுமா? அக்ஷய் கேள்வி எழுப்ப 
“முடியல.. ப்ரோ… உடம்பு ரொம்ப வலிக்குது. தல சுத்துது” முனகியவாறே பேச 
“கோமால இருந்து எழுந்தது போல தான் இருக்கும். நாம உடனே ஸ்வீட்டிய ஆச்பிடல்ல அட்மிட் பண்ணலாம்” அக்ஷய் சொல்ல துரிதமாக ஸ்வீட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள். 
அவள் உடல் பலவீனமாக இருப்பதாகவும், நன்றாக ஓய்வெடுத்தால் சரி என்று டாக்டர் சொல்லிவிட ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட நிலையில் ஸ்வீட்டி உறங்க, நிர்மல் அவள் கையை பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். 
அக்ஷயை  கட்டாய படுத்தி கைக்கு மருந்திட வைத்தவள் அவனருகில் அமர்ந்துக் கொண்டிருக்க முத்துலட்சுமியோ மதிக்கு அழைத்து “சாப்பாடு செய்ய சொன்னியே இங்கதான் போயிட்டீங்க? மதியமும் தாண்டிருச்சு” என்று கத்த, இருக்குறதெனியெல்லாம் வழிச்சிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு வரும் படி சொல்லி அலைபேசியை அனைத்தாள் மதி. 
ஒருவாறு முத்துலட்சுமி பாஸ்கரோடு வந்து சேர உணவின் வாசத்தால், அக்ஷய்க்கும் பசியெடுக்கவே, அவனும் மதியும் ஒரு புறம் அமர்ந்து சாப்பிட நிர்மலையும் வற்புறுத்தி சாப்பிட வைத்தாள் முத்துலட்சுமி. 
ஸ்வீட்டி கண் முழிக்கவே இரவாக அவளுக்கும் ஊட்டிவிட்ட முத்துலட்சுமி மதியிடம் என்ன நடந்ததென்று விசாரித்து விட்டு 
“இந்த பெண்ணோடு அம்மா, அப்பாக்கு தகவல் சொல்லலையா? என்று கேட்க, அப்பொழுதுதான் ஸ்வீட்டிக்கும் தன் பெற்றோரின் நியாபகம் வந்தது. 
அதன் பின் அவர்களை அழைத்து ஸ்வீட்டி மருத்துவமனையில் இருப்பதாக மதி சொல்ல அவர்களிடம் தன் உடம்பில் ப்ரீத்தி தங்கி இருந்ததை சொல்லவேண்டாம் என்று ஸ்வீட்டி கேட்டுக் கொண்டாள். 
வந்தவர்களோ அவளைக் கட்டிக் கொண்டு அழ, மனசு கேக்காமல் மதியோ இத்தனை நாட்களாக ஒரு ஆத்மா அவளை ஆட்டிப் படுத்தியதாகவும், இப்பொழுது அவள் சரியாகி விட்டதாகவும் கூற ஸ்வீட்டியின் நடை, உடை, பாவனை அனைத்திலும் ஏற்பட்ட மாற்றத்தால், அவர்களும் கண்டிப்பாக அப்படி ஏதாவது தான் நடந்திருக்கும் என்று நம்பினார்.  
நிர்மலோடும் அறிமுகமானவர்கள் ஸ்வீட்டி நிர்மலை காதலிப்பது தெரியவரவே வீட்டில் வந்து நிர்மலின் பெற்றோரை பேசும் படி கூற அவனும் சந்தோசமாக புன்னகைத்தான்.  
அக்ஷையின் தந்தை அழைத்து அவனின் அண்ணனுக்கு அடுத்த வாரம் திருமணம் என்றும் வந்து சேருமாறும் கூற நிர்மலிடம் விடை பெற்றவள் ஸ்வீட்டியை அவளின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு அக்ஷையோடு வீடு திரும்பினாள் மதி.
வண்டியை விட்டு இறங்கும் பொழுது மதியை தடுத்த அக்ஷய் “நாம என்ன முயற்சி செஞ்சும் ஒன்னு சேர்க்க முடியாமல் போன ஸ்வீட்டி, ஆத்மாவையும் உடம்பையும் யார் ஒன்னு சேர்த்தங்கனு தெரியுமா மதி” 
“ஆமால்ல அது எப்படி நடந்ததென்றே தெரியல, எப்படி நடந்திருக்கும்?” 
“உன்னால் தான் மதி நீ தள்ளி விட்டதுல நான் அந்த மண்ணாலான பொம்மை மீது விழுந்தேனா அது உடைஞ்ச பின் தான் ஸ்வீட்டியோட ஆத்மா உடம்புல கலந்து” 
“ஹேய்…. சும்மா சொல்லுறதுக்காக கத சொல்லாதீங்க” 
“நிஜமா தான் மந்திரவாதியின் உயிர் கிளிக்கிட்ட இருக்குறது போல ஸ்வீட்டியின் ஆத்மாவை சிறை பிடிக்க அவளை போல பொம்மை செஞ்சு பூஜை செஞ்சிருக்கா அதான் எங்களால முடியாம போச்சு, பொம்மை உடைஞ்சதும் ஸ்வீட்டி தான உடம்புல சேர்ந்துட்டா” 
அவன் சொல்வதை சுவாரஸ்யமாக கேட்டிருந்தவள் “எப்படியோ ஸ்வீட்டி திரும்ப வந்துட்டா… அது போதும் இனி நிர்மல் சந்தோசமா இருப்பான்”
“ஆமா அவன் கல்யாணத்த நடத்தி வைக்கிறதா நான் வாக்கு கொடுத்துட்டேன். உன் நண்பனே கல்யாணம் பண்ண போறான் நீ எப்போ பண்ண போற? நீ சரி னு சொன்ன நானே உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” 
      
அவளின் கல்யாணத்தை பற்றி பேசியதும் முத்துலட்சுமியின் திட்டுக்கள் நியாபகத்தில் வர அக்ஷய் சொன்னதில் அவன் விளையாடுகிறான் என்று அவனை முறைக்க 
“ஐம் டேம்ன் சீரியஸ்” அவனின் தீவிரம் அவன் முகமே சொல்ல தலையசைத்து மறுத்தாள் மதி. 
       

Advertisement