Advertisement

“வெல் உனக்கு எப்போதிலிருந்து ஆவிகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது?”
“என்ன பத்தி எதையும் சொல்ல நான் இங்க வரல” மதி பட்டென்று சொல்ல 
“ஓகே கூல். நான் ஒரு இடத்துக்கு போகணும் நீயும் உன் அப்பாவும் வர” 
“எனக்கு தான் சம்பளம் தரீங்க எங்க அப்பா உங்க கிட்ட வேல பாக்கல” 
“ஓகே தந்துட்டா போச்சு. எவ்வளவு வேணும் னு சொல்லு. கேசா, செக்கா” குறும்பாக அக்ஷய் சிரிக்க,
அவனை முறைத்த மதி வண்டியில் ஏறி இருந்தாள்.  
அக்ஷய் சென்றது ஒரு லேண்ட் ப்ரோக்கரை சந்திக்க அவன் செல்ல வேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை. பாஸ்கரே சென்றிருக்கலாம். ஆனால் அந்த நிலத்தின் சொந்தக்காரனோ! அக்ஷய் நேரில் வந்தால் தான் இடத்தை விற்பதாக சொல்வதால் அக்ஷையே நேரில் செல்ல வேண்டி இருந்தது. 
அக்ஷையின் பாதுகாப்புக்காக உள்ளவர்களோ இது சதியாக கூட இருக்கும் என்று எச்சரிக்கை, மதியையும், ராஜவேலுவையும் மட்டும் நம்பி அவர்களோடு பயணித்தான். 
அவன் உள்ளே செல்லும் முன் ராஜவேலு சென்று அங்கிருப்பவர்களை கவனித்து சொல்லும் படியாக எந்த ஆபத்தும் இல்லை. உள்ளே வரலாம் என்ற பின்னே அக்ஷய் உள்ளே சென்றான். 
அது ஒரு பாதி கட்டிய நிலையில் இருக்கும் ஷாப்பிங் மால். ரவுடிகள் சந்திப்பதை போல் அவனை அங்கே வர சொன்னது அக்ஷய்க்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த இடத்தின் மதிப்பு விற்பவன் சொல்லும் விலை இரண்டுமே அவனுக்கு லாபத்தை ஈட்டித் தர அந்த இடத்தை நழுவ விட அவன் தயாராக இல்லை. அதனாலயே மதியை அழைத்துக் கொண்டு வந்தான். 
மதி உள்ளே நுழையும் போதே ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர் அந்த கட்டிடத்தை பார்த்துக் கொண்டு அழுது கொண்டிருக்க, அவரை கவலையாக பார்த்தவாறே உள்ளே சென்றாள். 
அக்ஷையின் வியாபார பேச்சு வார்த்தை சுமூகமாக முடிய இரண்டு நாளில் பத்திர பதிவு பண்ணலாம் என்று அக்ஷய் விடை பெற வெளியே வந்த மதியழகி அழுது கொண்டிருப்பவரிடம் சென்று பேச அவர் அக்ஷையின் கண்களுக்கு புலப்படாததால் யோசனையாக மதியை பார்த்தான். 
“பெரியவரே இங்க அமர்ந்து ஏன் அழுது கிட்டு இருக்கீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?” 
“என்னனு சொல்ல? சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லையே! எல்லாம் முடிஞ்சிப் போச்சு” அவர் புலம்ப 
“உங்க பிரச்சினை என்னனு சொன்னா தான் என்னால உதவ முடியும்” 
“உண்ணலா உதவ முடியுமா? நிஜமாவா? ஆமா நான் உன் கண்ணுக்கு தெரிகிறேனா?” அழுது கொண்டிருந்தவர் சட்டென்று அழுகையை நிறுத்தி “இது என்னுடைய இடம் என்னை கொன்று விட்டு என் மகனை மிரட்டி கையொப்பம் வாங்கி தாஸ் என்பவன் என் இடத்தை அபகரித்து விட்டான். என் மகன் வெளிநாட்டில் சம்பாதித்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வாங்கியது. அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எவனோ ஒருவன் அனுபவிக்கிறது பாக்கும் பொழுது என்னால் தாங்க முடியவில்லை” 
அக்ஷையிடம் சென்ற மதியழகி விடுப்பு கேட்க, அவனோ மறுத்தான். அவனிடம் வாக்கு வாதம் செய்ய பிடிக்காமல் வண்டியில் ஏறாது வெளியே செல்ல மதியின் பிடிவாதம் அறிந்து அக்ஷய் தானும் வருவதாக சொல்லி அவளோடு கிளம்பினான். 
அந்த பெரியவரின் வீட்டுக்கு செல்ல அவரின் போட்டோவுக்கு பெரியதொரு மாலையிடப்பட்டு அவரின் மகன் அழுது கொண்டிருக்க,  நேராக உள்ளே சென்றவள் அந்த பெரியவரின் பெயரை சொல்லி தனக்கு அவரை தெரியும் என்று அறிமுகப் படுத்திக்க கொண்டு அவருக்கு எவ்வாறு இப்படி நடந்தது என்று அவரின் மகனிடமும் விசாரித்தாள்.   
மகனும் அப்பா சொன்ன கதையையே சொல்ல தாஸ் என்பவனைத்தான் தான் சந்தித்து விட்டு வந்ததை புரிந்துக் கொண்ட அக்ஷய் மதியை வெளியே அழைத்து சென்று 
‘மதி லெட்ஸ் கோ”
“ஏன் சார் நான் இவங்களுக்கு உதவி செஞ்சா உங்க இடம் உங்களுக்கு இல்லாமல் போகும் என்ற பயமா?”
“எஸ். அந்த இடம் எனக்கு வேணும்” உறுதியாக சொல்ல என்ன பார்வையென்றே அக்ஷையால் உணர முடியாதபடி பார்த்தவள் 
“ஐ வில் ஹெல்ப் தேம்” என்று விட்டு உள்ளே சென்றாள்.  
மதியின் பிடிவாதம் அறிந்ததால் அக்ஷய் என்ன செய்வதென்று யோசிக்க தாஸை அழைத்தவன் இன்றே பத்திர பதிவை வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேக்க அவனும் கூடுதலாக பணம் கேட்க அதற்கும் ஒத்துக் கொண்டவன் மதியை விட்டு விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். 
போகும் அவனையே பாத்திருந்தவள் பாஸ்கரை அழைத்து அக்ஷய் தனியாக சென்ற விஷயத்தைக் கூறி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து விட்டு பெரியவரை அழைத்துக் கொண்டு தந்தையோடு தாஸின் வீடு நோக்கி பயணித்தாள். 
தாஸ் என்பவன் அந்த ஏரியாவில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தவன் தன்னால் அடக்க முடிந்தவர்களை மாத்திரம் அடக்கி சொத்துக்களை அபகரித்து அதை விற்று வீடு, வாசல் என்று வாழ்கின்றவன். நிச்சயமாக அவனிடம் பெரியவரின் இடத்துக்கான அசல் பாத்திரம் இருக்கும் என்று நம்பினாள் மதி.  
அதன் படி தந்தையை உள்ளே அனுப்பி தேடச் சொல்ல தாஸ் அவனின் பெயரில் பதிவு செய்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்ப பெரியவரின் பத்திரத்தை கைப்பற்றிய ராஜவேலு அந்த தகவலையும் மதிக்கு சொல்ல அக்ஷய் பேசியதை கேட்ட  படியால் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவோடு பத்திர பதிவு அலுவலகம் சென்றாள்.  
பதிவு அலுவலகத்தின் முன் வண்டியை நிறுத்திய மதி உள்ளே செல்ல அவள் முன்னாடி உள்ளே சென்றான் தாஸ். உள்ளே அக்ஷய் காலுக்கு மேல் கால் போட்டு ஒரு கதிரையில் அமர்ந்திருக்க அவன் பின்னால் பாஸ்கரும் இரண்டு பாதுகாவலரும் இருந்தனர். மதியை ஒரு பார்வை பார்த்து விட்டு தாஸிடம் திரும்பியவன் 
“ஆரம்பிக்கலாமா?”
“கண்டிப்பா. பணம்” என்று ஏறிட பாஸ்கர் வைத்திருந்த பெட்டியை திறந்து காட்டினான் அக்ஷய்.
தாஸ் திருப்தியான முக பாவத்தைக் காட்ட அக்ஷய் மதியை ஒரு வெற்றிப் புன்னகையோடு பாத்திருக்க மதியின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. 
பதிவாலாளர் வந்து தாஸிடம் பத்திரத்தைக் கேக்க அது அவனிடமிருந்து மாயமாக மறைந்திருக்க பதட்டமடைந்தவனாக பத்திரத்தை தேட அக்ஷய் மதியை திரும்பிப் பார்க்கும் நேரம் கண்சிமிட்டி சிரித்தாள் மதி. 
பத்திரம் மாயமாக மறைந்ததற்கு மதி தான் காரணம் என்று அறிந்த பின்னும் கோபம் வராது அக்ஷய்க்கு புன்னகை எட்டிப் பார்க்க  அங்கே நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்க்கலானான். 
கையேடு கொண்டு வந்த பத்திரம் மாயமாக மறைந்த காரணம் புரியாமல் தாஸ் கையை விரிக்க 
“மிஸ்டர் தாஸ் உண்மையிலயே அது உங்க இடமாக இருந்தால் தானே பத்திரம் உங்க பெயரில் இருக்கும். அந்த இடத்துக்கு சொந்தக்காரர் முருகேசன் என்பவர். அவர் இறந்த பின் அவருடைய மகனுக்கு சேர வேண்டிய சொத்து இது” மதி சொல்ல பெரியவரின் மகன் உள்ளே வந்தான்.
மதியின் கையில் இருந்த பத்திரத்தை அவன் கையில் கொடுக்க அவனோ அக்ஷையை ஏறிட்டு “இந்த இடம் எனக்கு சொந்தமானது, அதை விற்பதென்று  முடிவு செய்து இருக்கின்றேன். நீங்க வாங்கிக் கொள்வதென்றால் சரியான விலையை நிர்ணயிக்கவும்” 
அக்ஷய்க்கு அந்த இடம் தான் தேவை அதன் சொந்தக்காரன் யார் என்றால் என்ன அங்கையே விலைபேசி இடத்தை பத்திரப்பதிவு செய்து முடித்தவன் “வெற்றி எனக்கே” என்ற பார்வையை மதியின் மீது வீச அதைக் கண்டு கொள்ளாது தந்தையிடம் ஏதோ கூறிக் கொண்டிருந்தாள். 
தாஸுக்கு அங்கே நடந்த எதுவுமே புரியவில்லை. குழப்பத்தில் இருந்தவனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்திருக்க, வீட்டில் உள்ள மொத்த பத்திரங்களும் காணாமல் போனதாக தகவலோடு போலீஸ் வந்திருப்பதாகவும் சொல்ல தன்னுடைய முடிவு காலம் நெருங்கி விட்டதாகவே எண்ணலானான் அவன். 
அலுவலகத்துக்கு வெளியே வந்த பெரியவரின் மகன் “கண்டிப்பா பத்திரம் மீண்டும் கிடைச்சாலும், தாஸ் மீண்டும் பிரச்சினை பண்ணுவான்னு இடத்தை விற்க சொன்னதுக்கு நன்றி. கூடுதலான பணமும் கிடைச்சிருச்சு. ஆனா அப்பா சாவுக்குத்தான் நியாயம் கிடைக்கல” வருந்தியவாறே சொல்ல 
“கூடிய சீக்கிரத்துல தாஸ் தன் வாயாலையே உங்க அப்பாவை கொன்னது நான் தான்னு போலிஸ்ல சரணடைவான்” என்றவாறே தந்தையை பார்க்க ஒருவனை பயமுறுத்தும் வேலை கிடைத்ததில் குஷியான ராஜவேலு தாஸோடு வண்டியில் பயணிக்க ஆரம்பித்தான். 
அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அக்ஷய்க்கு அவன் இடத்தை விற்க சம்மதித்தது மதியால் என்று புரிந்தது. அவளை எதிர்த்து விட்டு தனியாக வண்டியை கிளப்பிக் கொண்டு பத்திர பதிவு அலுவலகம் வரும் போது பாஸ்கரோடு இருகாவலர்கள் இருக்க யோசனையாக பார்த்தவனை மதியழகிதான் அனுப்பியதாக சொல்ல அவளை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. 
பெரியவரின் மகன் கிளம்பிச் சென்றதும் மதியின் அருகில் வந்தவன் “ஜெயிச்சது நீயா? நானா?” மதியை சீண்ட 
“அதில் என்ன சந்தேகம் பாஸ் நீங்கதான்” என்றவள் நடக்க துவங்க 
“வண்டியில் ஏறு வீட்டுக்கு போலாம்” 
“எதுக்கு பாதில இறக்கி விடவா? ஒன்னும் வேணாம் நான் ஆட்டோலையே போறேன்” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மதி சொல்ல 
சத்தமாக சிரித்த அக்ஷய் “முரண்டு புடிச்சா தூக்கி வண்டில ஏத்திடுவேன். அன்னைக்கி பண்ணது மாதிரி” வேகமாக அவளை இழுத்து வண்டியில் ஏற்றியது இருவரின் கண்களிலும் வந்து போக இருவரின் முகமும் புன்னகையை பூசிக்க கொள்ள 
அக்ஷயா இது ஒரு பெண்ணோடு மிகவும் நெருங்கி சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது? பாஸ்கர் தான் இங்கே நடப்பது கனவோ என்று தன் கையை கிள்ளிப் பார்த்தான்.

Advertisement