Advertisement

அத்தியாயம் 5
“தேவி உன்னை எங்கே எல்லாம் தேடுவது? கண்கட்டு வித்தையெல்லாம் கற்று வைத்திருக்கின்றாயே! அந்த கண்களில் அப்படி என்ன காந்தத்தை வைத்திருக்கிறாய்? பார்க்கும் பொழுதெல்லாம் என்னை உன்னிடம் இழுத்து வந்து என் பார்வையை வேறெங்கும் செல்ல விடாது உன்னிடமே தஞ்சமடைய செய்கிறது” 
குளக்கரையில் அமர்ந்திருந்த ருத்ரமகாதேவி திடீரென கேட்ட குரலில் திரும்ப அங்கே நின்றுக் கொண்டிருந்த குதிரைவீரனைக் கண்டு முகம் மலர்ந்தவள் அவன் பேசுவதைக் கேட்டு முகம் செவ்வானம் பூசிக்க கொண்டது. 
அடுத்து வந்த நாட்களில் ருத்ரமாதேவி குதிரை வீரனுக்காக காத்திருக்கலானாள். பக்கத்து ஊர்காரனான அவனும் அவளை சந்திக்க பேராவல் கொண்டிருந்தான். அன்று கண்ட ருத்ரமகாதேவியின் உடையோ, தோற்றமோ!  நியாபகத்தில் இல்லை. இன்று கிராமத்து பெண் போல் ஆடை அணிந்திருக்க, ஏழை வீட்டு பெண் என்றே எண்ணினான். அவளை பற்றி விசாரிக்க அவளோ தான் கிராமத்தில் வைத்தியர் வீட்டில் தங்கி இருப்பதாக சொல்ல அவள் வைத்தியரின் மகள் என்று எண்ணிக் கொண்டான். 
அவன் பெயரையோ! யார் என்னவென்றோ அறியாமல் அவளும், அவள் யாரென்று தெரியாமல் இவனும்  காலையும், மாலையும் சந்திக்க எக்கணம் அவர்களுள் காதல் மலர்ந்ததென்று இருவருக்குமே! தெரியவில்லை. ருத்ரமகாதேவி தன்னையும் மறந்த நிலையில் குதிரை வீரனின் காதலில் திளைத்திருக்க, 
“தேவி என் அன்னையின் சுகயீனம் காரணமாகத்தான் ஊர் திரும்பினேன். நான் மீண்டும் நகரம் போயாக வேண்டும். திரும்ப என்று வருவேன் என்று தெரியாது. நீயும் என் கூட வருவியா?” கண்களில் காதலைத் தேக்கி வைத்து வினவ 
அவனோடு செல்ல ஆசை இருந்தாலும், ஊரை விட்டு வேறெங்கும் போக மாட்டேன் என்று ஊர்மக்களுக்கு வாக்கு கொடுத்திருப்பதால், பௌர்ணமி இரவில் காட்டுக் கோவிலில் பூஜை செய்ய வேண்டியுள்ளதாலும் அவனோடு செல்ல மறுத்து விட்டாள். 
குதிரை வீரனும் அரைமனதாக அவளிடம் விடைப் பெற்று செல்ல அவன் நினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு அவன் வரவுக்காக காத்திருந்தாள் அவள்.
“மிஸ் மதியழகி. நீங்க டுவென்டி போ ஹவர்ஸ் ஒன் டியூட்டில இருக்கணும். சோ என் கூடவே தங்கிக் கோங்க” வீட்டின் முன் வண்டியை நிறுத்திய அக்ஷய் கண்ணில் இருந்த கூலரை கழட்டியவாறே சொல்ல 
அவனை ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்தவள் “நோ சார் உங்க கிட்ட வேல பார்க்க எனக்கு இஷ்டம் இல்ல. நான் ரிசைன் பண்ணுறேன்” என்று இறங்கி நடக்கலானாள் மதியழகி. 
செல்லும் அவளை புரியாத ஒரு பார்வை பார்த்த அக்ஷய் ஓடாத குறையாக அவள் முன் நின்று “நீங்க என்ன நினைக்கிறீங்க னு புரியுது. உங்க மேல எனக்கு எந்த இன்டெரெஸ்ட்டும் இல்ல” 
நீ நினைப்பது போல் நான் பெண் பித்து பிடித்து அலைபவனல்ல என்று அவளுக்கு ஒரு குட்டு வைக்க அவனை இகழ்ச்சியாக ஒரு பார்வை பார்த்தவள் 
“உங்களுக்கு பெண்களை விட ஆண்கள் தான் பிடிக்கும் என்று தெரியும் சார். ஆனா பாருங்க என்ன தான் நான் போலிஸாக இருந்தாலும் என் அம்மாவுக்கு ஒரே மகள். அவங்கள நைட் வீட்டுல தனியா விட்டுட்டு உங்க கிட்ட வேல பார்க்க முடியாது. எனக்கு என் வேலைய விட அவங்க முக்கியம்” உன் விருப்பமெல்லாம் எனக்கெதுக்கு, அது எனக்கு தேவையும் இல்லை. என் பிரச்சினை எனக்கு அவனைக் குட்ட 
அவள் சொன்ன செய்தி அவனுக்கு ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக நியூஸ் தான் ஏனோ மதி சொல்லும் போது அவளின் முகத்தில் வந்து போன பாவனை அக்ஷையை தூண்ட அவளை இழுத்து தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டவன் 
“எனக்கு பொம்பளைங்கள பிடிக்காது னு யார் சொன்னது. உன்ன ரொம்பவே புடிக்கும். உன்ன பார்க்கும் போது அப்படியே… சொல்லியவாறே அவள் கன்னத்தில் முத்தம் வைக்க ஸ்தம்பித்து நின்று விட்டாள் மதியழகி 
இவர்கள் வண்டியில் இருந்து இறங்கியதிலிருந்து அவர்களையே பாத்திருந்த பிரஜூவு அக்ஷையின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து நெஞ்சை இறுக பிடித்தவாறு சோபாவில் சரிய அங்கே வந்த பாஸ்கரும் வாய் பிளந்து நின்று விட்டான். 
பாஸ்கர் ஒரு சில கணங்களில் சுயநினைவுக்கு வர பிர்ஜூவைக் கண்டு அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான். பிர்ஜூவோ அழுது கரைய பாஸ்கர் அவனை சமாதானப் படுத்தும் வேலையில் இறங்கினான். 
அக்ஷையின் அத்துமீறிய செயலில் கோபம் தலைக்கேற ஒரு சுழற்சி சுழன்று தன்னை விடுவித்துக் கொண்டவள் அவனை அடிக்க கையோங்க மீண்டும் அவளின் கையை பிடித்து அவள் விலகி விடாதவாறு இழுத்தணைத்தவன் அவள் காது மடல் உரச 
“என்ன உங்கப்பா அமைதியாக இருக்காரு பொண்ணுக்கு ஒன்னென்றா காப்பாத்த வருவாரே!” சொன்னவன் அவளை விட்டு விட்டு 
“வெல் மிஸ் மதியழகி உங்க பிரச்சினை உங்க அம்மா என்றால் அவங்களும் உங்க கூட தங்கலாம். கூடவே உங்க அப்பாவும். அவர் என் கண்ணுக்கு காணாவிட்டால் என்ன? நமக்கு உதவியாக இருப்பாரே!” 
இவ்வளவு நேரம் இருந்த அக்ஷய் எங்கே மறைந்தான் என்பது போல் நொடியில் மாறியவனை வியந்து பார்த்த மதி அக்ஷய் பேசிக் கொண்டே போக “இவனுக்கு அப்பாவை பத்தி எப்படித் தெரியும்? இவனைப் பாத்தா ஆவிங்கள நம்புறவன் மாதிரி தெரியல. இவன் என்ன வேலைக்கு வச்சிக்கிட்டதுக்கும், அவன் கூடவே தங்க சொல்லுறதுக்கும் எதோ காரணம் இருக்கு” மதியின் மூளை அலர்ட் பண்ண 
மதியை சொடக்கிட்டு அழைத்தவன் நீ நினைக்கிறது உண்மை தான் உன்னால ஆவிங்க கூட பேச முடியும்கிறத நன் நம்புறேன். அன்னைக்கி எதோ ஒரு சக்தி தான் என்ன காப்பாத்திருச்சு. அது உன் அப்பான்னு புரியுது. உன்னால எனக்கு ஒரு உதவி வேணும் அதான் உன்ன என் கூட வச்சிக்கிறேன் நேரம் வரும் போது சொல்லுறேன். பி கம்படபள். உங்கம்மா ஈவினிங்க்குள்ள இங்க இருப்பாங்க” என்றவன் உள்ளே செல்ல மதி அக்ஷையை பற்றிய சிந்தனையில் விழுந்தாள். 
அவன் உள்ளே சென்ற பிறகே அவனின் அணைப்பும், முத்தம் தந்த கிரக்கமும், அவளை ஏதோ செய்ய அவன் மேனியிலிருந்து வீசிய உயர்தர வாசனை திரவியத்தை சுகந்தமும் அவளை சுற்றி அவன் இருப்பதை போலவே மாயையை ஏற்படுத்த தலையை பலமுறை உலுக்கிக் கொண்டவள் 
“நாம நினைக்கிறதெல்லாம் புட்டு புட்டு வைக்கிறான். மதி அவன் பக்காவா திட்டம் போட்டு வேலை செய்பவன், அவனிடம் நீ ஜாக்கிரதையாகவே இரு” தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் “இந்த அப்பா எங்க போனாரு? கூடவே தான் சுத்திக்கு கிட்டு இருப்பாரு எங்க போய் தொலஞ்சாரு னு தெரியல, இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்தாம அப்படி என்ன வேலைல மூழ்கிட்டாரு” தந்தையை தேடி அலைந்தாள் மதியழகி. 
வாய் விட்டு சத்தமாக கூப்பிடவும் முடியாத படியால் அந்த பரந்து விரிந்த இடத்தில் நடந்தவாறே தேட அங்கே இருந்த பாதுகாவலர்கள் அவளை ஒரு மாதிரியாக பார்ப்பது போலவே பிரம்மை தோன்ற மீண்டும் அக்ஷையின் வீட்டை நோக்கி நடந்தாள். 
அக்ஷையை மீறி மதியால் எதுவும் செய்ய முடியவில்லை. முத்து லட்சுமியும் பெட்டி படுக்கையோடு அன்றே வந்திறங்க அவளுக்கென்று தனியாக வீடொதுக்கிக் கொடுத்தான் அக்ஷய். வனவாசம் சென்றது போல் அந்த மதில் சுவரைத் தாண்டி வேறெங்கும் அவளால் நகர முடியாமல் போக, வேலையை விடுவதாகவும் மிரட்டிப் பார்த்தாள். எதற்கெடுத்தாலும் கமிஷ்னரை கைகாட்டி விட்டு அவர் பொழியும் வசை மழையில் மதி நனைய அவன் குளிர் காய்ந்தான். 
மதி போலீஸ் ஆனதே மக்களுக்கு மாத்திரமன்றி ஆவிகளுக்கு உதவ அவளால் வெளியே செல்லவும் முடியாமல், உதவவும் முடியாமல் திண்டாடியவள் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அக்ஷையை சாடை மாடையாக திட்ட ஆரம்பித்தாள். 
முத்து லட்சுமியோ மகள் வீட்டோடு அடங்கி இருப்பதே மேல் என்று, அக்ஷையை உபசரிக்கவென பலவிதமான சிற்றுண்டிகளை ஒவ்வொரு நாளும் செய்து அனுப்ப முதலில் மறுத்தவன் லட்சுமி வற்புறுத்தவே சாப்பிட ஆரம்பித்து இன்று லட்சுமியின் விசிறியாகிப் போனான். 
“மதி எனக்கென்னமோ அந்த தம்பி அப்படி பட்ட தம்பி னு தோணல” வாசல் படியில் கீரையை சுத்தம் செய்துக்க கொண்டிருந்த லட்சுமி சொல்ல
யோகா செய்து கொண்டிருந்த மதியோ “அந்த தொம்பிய பத்தி அப்பொறம் பேசலாம் என்ன டிஸ்டப் பண்ணாம இரு” 
“அங்க இருக்கானே அந்த விளங்காதவன் பிர்ஜு அவன் என்ன நம்மள அப்படி பாக்குறான்” 
“பின்ன இருக்காதா அவன் புருஷன் அக்ஷய நீ ஆட்டைய போட பார்த்தா அப்படித்தான் பார்ப்பான்” சிரிப்பு பீறிட்டு வந்தாலும் அடக்கியவாறே மதி. 
“ச்சி சீ என்ன பேசுற? ஒருத்தர பாத்தா அவர் என்ன மாதிரி னு என்னால கணிக்க முடியும். அந்த தம்பி ஒன்னும் அவன் பின்னாடி அலையல, அவன் தான் லூசுத்தனமா பேசிக் கிட்டு இருக்கான்” லட்சுமி   
சிரிப்பை அடக்கிக் கொண்டு “எப்படி நீ அப்பாவை பாத்த உடனே இவர் தான் எனக்கு னு முடிவு பண்ணியே அப்படியா?” 
“அவருக்கென்னடி தங்கமான மனிசன். என்ன அல்பாயுசுல போய்ட்டாரு” மதியை முறைத்தவாறே லட்சுமி. 
“ம்ம்..இத நீ அப்பா உயிரோட இருக்கும் போது ஒரு தடவையாவது சொல்லி இருக்கியா?” என்றவள் சொல்லியவாறே தந்தையை தேட 
‘சொன்னா மட்டும் எனக்கு அவார்டா கொடுக்க போறாரு” கழுத்தை  நொடித்தவாறே சுத்தம் செய்த கீரையோயோடு லட்சுமி உள்ளே செல்ல தந்தையை தேடித் சென்றாள் மதி. 
அக்ஷையின் வீட்டுக்கு வந்ததிலிருந்து ராஜவேலு அடிக்கடி காணாமல் போக தந்தையை தேடிச் செல்வது மதியின் வேலையாகியது. அவரோ அக்ஷையின் வீட்டுக்கு எதிர் புறம் உள்ள மண்டபத்தில் யோசனையாகவே அமர்ந்திருப்பார். மதி என்ன ஏதென்று கேட்டாலும் சொல்லாமல் மறைப்பவர் இன்றும் மதி தன்னை தேடி வரவும் ஒரு பழைய பாடலை முணுமுணுத்தபடி  இருக்க 
“இங்க என்ன பண்ணுறீங்க?”
“வாம்மா மதி உங்கம்மா என்ன சொல்லுறா?”
“அம்மாவை வம்பிழுக்காம, அவங்கள பய முறுத்தாம உங்களால இருக்க முடியாதே! என்ன திடிரென்று இப்படி ஒதுங்கி வந்து இருக்கிறீங்க? எனக்கு தெரியாம என்னவோ பண்ணுறீங்கப்பா” 
“போலீஸ்காரிய பொண்ணா பெத்தா இப்படித்தான்” முணுமுணுத்தவாறே “சும்மா தான் மா… இந்த இடம் ரொம்ப புடிச்சிருக்கு அப்படியே அந்த அக்ஷய் பயல வேவு பாத்தா மாதிரியும் இருக்கும்” 
“உங்க அப்பா கிட்டயா பேசிக் கிட்டு இருக்க?” என்றவாறே வந்தான் அக்ஷய் 
மதி மௌனம் காக்க ராஜவேலு மண்டபத்தில் போட்டிருந்த கதிரையை அக்ஷையின் புறம் நகர்த்த பல்லைக் கடித்தாள் மதி. 
“தாங்க் யு மிஸ்டர் ராஜவேல்” என்றவாறே அமர்ந்துக் கொண்ட அக்ஷய் மதியையும் அமரும் படி சொல்ல ராஜவேலு அவளுக்கான கதிரையையும் நகர்த்திக் கொடுக்க மதியும் அமர்ந்துக் கொண்டாள். 

Advertisement