Advertisement

நிச்சயம் சத்யா…. உன் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். அது மட்டுமல்லாமல் நீ எவ்வளவு தைரியமாக எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிக்கிறாய்…” என்று அவளை சற்றுப் புகழ்ந்துவிட்டு “உன்னைப் பற்றி பார்வதி நிறைய சொன்னாள்தான். ஆனால்¸ இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய் என்று எண்ணவில்லை” என்று அவளுக்காக வருந்தினார்.
இவர்களுக்கு சற்றுத் தொலைவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஜீவாவிற்கு இவர்களது பேச்சு எந்தவித தடையுமின்றி தெளிவாகக் கேட்டது. கேட்டவனிற்குள் குற்ற உணர்ச்சி தோன்றியது.
ஆபரேசன் முடிந்தது.
டாக்டர்கள் வெளியே வந்தனர். தொண்ணூறு சதவீதம் பார்வை திரும்ப வாய்ப்பிருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.
மீனாட்சிக்கு  மயக்கம் தெளிந்தபின் தன் பெற்றோரை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் சஞ்ஜீவன்.
மூவரின் மீதும் கடுங்கோபத்திலிருந்தாள் கல்பனா.
அவர்கள் வந்ததும் சஞ்ஜீவன் மேலே போகிறானா என்பதை மட்டும் கவனித்துவிட்டு  பார்வதியிடம் சென்று “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட நல்லாயில்லை அத்தை” என்றாள்.
பார்வதி கணவனைப் பார்க்க “என்ன கல்பனா?” எனக் கேட்டார் சங்கரன்.
இப்படித்தான் என்னைத் தனியே விட்டுவிட்டு…. எல்லோரும் அந்த சத்யாவிற்கு காவல் இருப்பீர்களா?” என்று கோபமாகக் கேட்டாள்.
ஆமா.. இருந்தோம். அதிலென்ன தப்பு?” என்றார்.
நீங்கள் அந்த சத்யாவைப் பற்றிப் பேசினாலே எனக்குப் பிடிக்கவில்லை” என்றாள் அவரது கேள்வியைக் கவனிக்காதவள் போல.
என்னம்மா செய்வது? எங்களுக்கும் ஒருசில விஷயங்கள் பிடிக்கவில்லைதான். ஆனாலும் நாங்கள் பொறுத்துப் போகவில்லையா….? அதுபோல நீயும் பழகிக்கொள்” என்றவர் மனைவியைக் அழைத்துக் கொண்டு தங்களறைக்குப் போகலானார்.
நேராக சஞ்ஜீவனைத் தேடிப் போனாள் அவள். மூடியிருந்த அறைக்கதவைத் தட்டினாள்.
படுத்திருந்தவன் எரிச்சல்பட்டான். “யாரது மனுஷனை கொஞ்ச நேரங்கூடத் தனியா விடமாட்டீங்களா?” என்றவாறே வந்து கதவைத் திறந்தவன்¸ வந்திருந்தவளைக் கண்டதும் இன்னும் எரிச்சலடைந்தான்.
என்ன?” என்றான் அதே வேகத்தில்.
வந்து… அத்தான் அத்தை என்னிடம் கோபமாகப் பேசினார்கள்” என்றாள் கண்ணைக் கசக்கியபடி.
வீட்டினுள் நுழைந்ததும் மேலே வந்துவிட்டிருந்தாலும் கீழே நடந்த எல்லாவற்றையும் கவனித்த பின்னரே அவன் படுக்கச் சென்றது. எனவே¸ இவள் நடிக்கிறாள் என்பது தெளிவாகவேப் புரிந்தது.
அதனால் “தலை வலிக்கிறது கல்பனா… அப்புறம் பேசிக்கலாம்” என்றவன்¸ அவள்மேலே பேசும்முன் கதவை அடைத்துவிட்டான்.
கல்பனாவின் கோபம் தலைக்கு மேலேறியது.
மயக்கம் தெளிந்த மீனாட்சி சத்யாவிடம் பேசினார். தாயாரிடம் மகிழ்ச்சியாகவே பேசினாள் அவள்.
செலவு பற்றி தாயார் கேட்க¸ சங்கரனே செய்வதாகக் கூறினாள்.
அப்படியாம்மா… அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துவிடு” என்றவரிடம்¸ “அம்மா நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்… அதனால பேசாமல் படுங்க. நான் போயிட்டு பிறகு வருகிறேன்” என்று கூறி அவரைப் படுக்க வைத்துவிட்டுக் கிளம்பினாள்.
வீட்டினுள் இவள் நுழையும்போதே இவளைக் கண்ட கல்பனா முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள். அவளது செய்கையை கண்டுகொள்ளாமல் சங்கரன்¸ பார்வதியை பார்க்கச் சென்றாள்.
அவர்களது அறையை நெருங்கும்போது பேச்சுக்குரல் கேட்டது.
“…கல்பனாவைத் திருமணம் செய்வது எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கலைங்க” என்றது பார்வதியின் குரல்.
புரிகிறது பார்வதி… அது அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கப்போகிறது. வேறு எத்தனைப் பெண்கள் இருக்கிறார்கள்…. அவனுக்கும் நமக்கும் தெரிந்தவர்களாக¸ அவர்களில் யாரையாவது பார்க்கச் சொல்லியிருக்கலாம்…. அதைவிடுத்து இந்தப் பெண்ணை… ச்சே!” என்றார் சங்கரன்.
அறைவாசலை நெருங்கிவிட்டவள்¸ மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது தவறென்பதால் மேலும் கேட்டுவிடாமலிருக்க நினைத்தாலும் ‘மகனுக்காக வருந்தியவர்களுக்கு தான் ஒன்றும் செய்ய முடியாதே… ஆனாலும் அவன் வாழ்க்கையல்லவா…? என்ன செய்வது?’ என்றெண்ணியவாறே கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்த பார்வதி இவளைக் கண்டதும் முகம் மலர “வாம்மா… வா… அம்மா எப்படி இருக்கிறார்கள்? மயக்கம் தெளிந்துவிட்டதா?” என்று அவள் அன்னையின் நலன் விசாரித்தார்.
ஆமாம்…” என்று புன்னகைத்தவள்¸ சங்கரனிடம் நன்றி கூறினாள்.
என்ன சத்யா இது?” என்றார் அவர்.
அம்மா மனதார சொல்லச் சொன்னது சார்… அதனால உடனே சொல்லிவிட்டேன்” என்று சிரித்தவளோடு சேர்ந்து சிரித்த பெரியவர்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
வெளியே செல்வதற்காகக் கிளம்பியவனின் காரில் சட்டென வந்து ஏறிக்கொண்டாள் கல்பனா.
இதை எதிர்பார்த்திருக்காதவன் “என்ன கல்பனா¸ எங்கே போகிறாய்?” என்று கேட்டான் கோபத்தைக் காட்டாமலே.
அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு “அத்தான்… உங்களோடு தனியாக இருக்க ஆசையாக இருக்கிறது. அதனால்¸ நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே என்னையும் அழைத்துப் போங்கள்” என்றாள் கொஞ்சுதலாக.
அங்கே உனக்கு போரடிக்கும் கல்பனா…”
அதெல்லாம் இல்லை…. நீங்கள் இருக்கும் இடம் எனக்கு சொர்க்கமாகத்தான் இருக்கும். அதனால் நானும் வருகிறேன்¸ காரை எடுங்கள்” என்றாள்.
தோளைக் குலுக்கிவிட்டுக் காரை ஸ்டார்ட் செய்தான் அவன்.
அவன் சொன்னதுபோல் அவளுக்கு ‘ஏன்டா இவனுடன் வந்தோம்?’ என்ற எண்ணமே வந்துவிட்டது. ஏனென்றால் அவன் அவளை அழைத்துச் சென்ற இடமெல்லாமே அவனது வேலை சம்பந்தப்பட்டதாகவே இருந்தது. சஞ்ஜீவிற்கும் அவளது மனநிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்ததால்¸ அவனும் எதுவும் பேசவில்லை. வீடு வந்து சேரும்வரை அமைதியாகவே கழிந்தது.
வீட்டை அடைந்ததும்¸ காரை விட்டிறங்கி வேகமாக வீட்டினுள் சென்றுவிட்டாள் அவள்.
அவன் காரை விட்டு வெளியே இறங்கியபோது¸ சத்யாவுடன் வீட்டிலிருந்து வெளிப்பட்டார் பார்வதி.
சங்கரன் வெளியே சென்றிருந்தார். மற்றொரு கார் டிரைவரின்றி நின்றது. இப்போது சத்யாவை எப்படி மருத்துவமனைக்கு அனுப்புவது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார் பார்வதி.
பரவாயில்லைம்மா… நான் ஆட்டோ பிடித்து போய்க்கொள்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் சத்யா.
இவள் கேட்டை நோக்கிச் செல்லவும் “ஹாஸ்பிட்டலுக்கா போகிறாய்?” என்று அவளிடம் வந்து நின்றான் சஞ்ஜீவன்.
சத்யா பதில் பேசாமல் முழிக்க “ஆமாப்பா…” என்றார் பார்வதி.
சரி நான் கூட்டிட்டுப் போறேன்” என்றான்.
இல்லை சார்… நானே ஆட்டோவில்….” என்றவளைப் பேசவிடாமல் தடுத்து¸ “வேண்டாம் சத்யா… நீ ஆட்டோவில் போனால் என்னாலும் நிம்மதியாக இருக்கமுடியாது. அதனால் ஜீவாவோட போய்ட்டு அவன்கூடவே வந்துவிடு” என்று அவளிடம் சொல்லிவிட்டு “தம்பி நீ நின்னு அவளை அழைச்சிட்டு வந்துடு” என்றார் மகனிடம்.
சரி” என்று கிளம்பினார்கள் இருவரும்.
இதை கவனித்த கல்பனாவுக்கு ‘என்கூட வர கசக்கும் அத்தான் அவளை வலியச்சென்று அழைத்துப் போகிறாரா..?’ என்றிருந்தது. ‘அப்படி எங்கே போகிறார்கள்?’ என்று தெரிந்துகொள்ள பார்வதியைக் கேட்டாள்.
அவளுக்குத் தாங்கள் ஏற்கனவே நிறைய இடம் கொடுத்துவிட்டதாலும் அவளது செய்கைகளாலும் ரொம்பவே வெறுத்திருந்தவர்¸ அவளிடம் அதிகம் பேசுவதை விரும்பாமல் ‘அவன் வந்தபின் அவனிடமே கேட்டுத் தெரிந்துகொள்!’ என்றுவிட்டு வீட்டிற்குள் செல்லத் திரும்பினார்.
காலையிலிருந்து அவனுடன் மகிழ்ச்சியாகச் சுற்றலாம் என்றெண்ணி சென்றது¸ அவள் விருப்பப்படி அமையாமல் ரொம்பவும் கோபத்தை வரவழைத்திருந்தது.
அதை யாரிடம் காட்டலாம் என்றிருந்தவளுக்கு இவர் எடுத்தெறிந்து பேசிவிடவும் “ஏய்… கிழவி!! உனக்கு அவ்வளவு திமிராகிவிட்டதா?” என்று கத்திவிட்டாள்.
அதிர்ந்து போய் அவர் திரும்ப¸ அதேநேரம் உள்ளே நுழைந்துவிட்டிருந்த சங்கரனும் அதைக் கேட்டுவிட்டு மனைவியிடம் வந்தார். கணவனைக் கண்டுவிட்ட பார்வதிக்கு கண்களில் நீர் திரண்டுவிட்டது.
வாயை விட்டுவிட்டது புரிந்து நாக்கைக் கடித்தாள் கல்பனா.
கல்பனா சற்று மரியாதையாகப் பேசு” என்று கடிந்தார் சங்கரன்.
அவர் கோபமாகவும் இவள் சீறினாள் “என் கண்முன்னாடியே அந்த அவளை அத்தானோடு அனுப்பி வைக்கிறாள் உன் பெண்டாட்டி… கேட்டால் பதில் சொல்லாமல் திமிராகப் பேசினால் நான் இப்படித்தான் பேசுவேன்” என்று ஏகவசனத்தில் பேசினாள்.
பொறுமையாகவே பதிலளித்தார் சங்கரன் “இங்கே பார் கல்பனா… உன் அப்பா¸ அம்மா எங்களை நம்பி உன்னை விட்டுப் போயிருக்கிறாங்க. அதனால்தான் பொறுத்துப் போகிறேன்¸ இல்லையென்றால்…” என்று அவர் முடிக்காமலேவிட.
இல்லைன்னா… என்ன செய்வீங்க? என்னை வீட்டைவிட்டுத் துரத்திவிடுவீர்களோ?” என்று எகத்தாளமாகக் கேட்டாள்.
ஆமாம்” என்றார்.
எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் மட்டும் முடியட்டும்¸ அப்புறம் தெரியும் யார் இந்த வீட்டைவிட்டுப் போறாங்கன்னு…” என்றாள்.
அதற்கு முதலில் என் மகன் உன்னைக் கல்யாணம் செய்ய வேண்டுமே!”
ஏன் நடப்பதற்கென்ன? அத்தான் கண்டிப்பாக என்னைத்தான் மணப்பார்” என்றாள் சவால் விடுபவள்போல.
நிச்சயம் நடக்காது. என் மகன் எங்களுக்குப் பிடித்த நாங்கள் சொல்கின்ற பெண்ணைத்தான் மணப்பான். அது நிச்சயமாக நீயில்லை” என்றவர்¸ மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.
அழுது கொண்டேயிருந்த மனைவியிடம் “கவலைப்பட்டு அழுது உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே பார்வதி. இவளைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஜீவா ஒன்றும் முட்டாளில்லை… அதனால் இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிராமல் கவனத்தை வேறு எதிலாவது செலுத்து” என்றார்.
சற்றுத் தெளிந்தவர்¸ அழுவதை நிறுத்தி முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டு “பால் எடுத்து வரட்டுமா?” என்றார்.
சரி கொண்டு வா… ஜீவா எங்கே?”
சத்யாவை அழைச்சிட்டு ஹாஸ்பிட்டல் போயிருக்கிறான்”
ஓ… அதனால்தான் மேடம் இப்படி குதிக்கிறாளா…?” என்றவரிடம்¸ ‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டுச் சென்றார்.

Advertisement