Advertisement

“இது ரொம்பவே வித்தியாசமா இருக்கே? பொண்ணுங்க சாப்பாட்டுல  கூடவா கட்டுப்பாடு சொல்லுவாங்க? சாப்பாடு ஆணுக்கும் பொண்ணுக்கும் பொதுவானது. அவங்கவங்க வயித்து பசிக்கு தான் சாப்பிடணுமே தவிர இன்னொருத்தர் நம்ம பசியோட அளவை தீர்மானிக்க எப்படி முடியும்? காலையில ரெண்டு இட்லி சாப்பிட்டா மத்தியானம் கூட ஒரு கரண்டி சாதம் சாப்பிட தோணும். மறுநாள் நேரமிருந்தாலோ, பசி இருந்தாலோ ரெண்டு நாலா கூட மாறும்…”
“இந்த உலகத்துல பொதுவான விஷயங்கள்ள பசி தான் முதன்மையானது. ஏழை பணக்காரன்ற பாகுபாடில்லாம பொதுவானது. இதை தாண்டி ஆம்பிளை தான் நிறைய சாப்பிடனும் பொண்ணுங்க குறைவா சாப்பிடனும்னு சொல்றதெல்லாம் என்ன பழக்கமோ?…” என்றவள்,
“இங்க பாரு கெளரி, உன் பசிக்கு நீ சாப்பிட்டா தான் உன் குழந்தையோட பசியை நீ போக்க முடியும். அதுக்கு நீ சரியா இருக்கனும். ஆரோக்கியமா இருக்கனும். அளவா சாப்பிடறதால நன்மை இருக்குது தான். ஆனா இந்த சாப்பாட்டு விஷயத்துல கூட ஆண், பெண் பேதம் கொண்டு வரது தான் கண்டிக்கத்தக்கது…”
“அம்மாவா பிள்ளைங்களோட முகத்தை பார்த்து பசிபோக்கனும். இன்னைக்கு நீ இருக்கிற மாதிரி நாளைக்கு உன் பிள்ளைங்களுக்கும் வர வாய்ப்பிருக்கு. இன்னைக்கு நீ அனுபவிச்ச வலியை உன் சந்ததி உணராம இருக்கனும்னா நீ ஆரோக்கியமா இரு. இந்த மாதிரியான முட்டாள்தனமான, பிற்போக்கு விஷயங்களை உன் மனசுல ஏத்திக்காம சுயமா உனக்கு தேவையானதை நீ யோசி. செய். புரியுதா?…”
அஷ்மி சொல்லி முடிக்க எவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவள் என்ன இத்தனை பேசுகிறாள் என்று இருந்தது கிருஷ்ணமூர்த்திக்கு. பாக்கியமும் நந்தினியும் இதை நல்லவிதமாகவே எடுத்துக்கொண்டனர்.
“ஆல் தி பெஸ்ட் டா பிரசாத்…” என உதயா கை குலுக்க,
“உனக்கும் ஏதாவது அட்வைஸ்?…” பிரசாத் ஆரம்பிக்க,
“நந்து நைட் டின்னர்…” என்ற உதயாவை இடையிட்டு,
“இல்ல, நாங்க கிளம்பறோம். இன்னொருநாள் பார்க்கிறோம்…” என்று அஷ்மி எழுந்துவிட கிருஷ்ணமூர்த்தி எதுவும் தடுத்து பேசவில்லை. ஆனால் பாக்கியத்திற்கு வருத்தமாக இருந்தது.
“இவ்வளோ தூரம் வந்துட்டு சாப்பிடாம போறயேம்மா?…” என அவளின் கையை பிடிக்க,
“இங்க தான ஆன்ட்டி இருக்கோம். நினைச்சா வந்திட போறோம்…” 
“எங்கம்மா? நீ இப்படித்தான் சொல்லுவ. விருந்துக்கு வந்தது நீ. பாப்பா மொட்டை அன்னைக்கு கூட கோவில்ல பாதியிலையே கிளம்பிட்ட. இந்தா இருக்கிற கொஞ்ச தூரம். உன்னால அடிக்கடி வரமுடியலை..” என்றவரை பார்த்து புன்னகைத்தவள்,
“அப்போ நீங்க மட்டும் ஏன் வரதே இல்லை ஆன்ட்டி? நீங்க சொல்ற அதே தூரம் தானே உங்களுக்கும். நானாவது விருந்துக்கு வந்தேன். நீங்க நான் கல்யாணம் பண்ணிட்டு வந்தன்னைக்கு வந்தது. அடுத்து எப்பவும் அத்தை தானே வீட்டுக்கு வராங்க. நீங்க வரவே இல்லையே. அத்தை இதை நினைக்க மாட்டாங்க. ஆனா நான் நினைப்பேன்…” சிரித்துக்கொண்டே அஷ்மி சொல்ல பாக்கியம் முழித்தார்.
“எதிர்பார்ப்புகள் எல்லாருக்குமே இருக்கும் ஆன்ட்டி. நீங்க நாங்க இங்க வரனும்னு எதிர்பார்க்கறீங்க. இதே மாதிரி  அத்தையும் நீங்க வீட்டுக்கு வரனும்னு எதிர்பார்ப்பாங்க இல்லையா? நீங்களாம் இருக்கீங்கன்னு தானே பண்ணை வீட்டை விட்டுட்டு இங்க வந்தாங்க. அவங்களை போன் பண்ணி வர சொல்ற நீங்க கூட வீட்டுக்கு வந்துட்டு போகலாமே? அவங்களை விடுங்க. நான் எதிர்பார்க்கிறேன். நீங்களும் வரனும்னு. வருவீங்கன்னு நம்பறேன்…” என்றவள்,
“கிளம்பறேன் ஆன்ட்டி. வரேன் அங்கிள்…” என்றவள் நந்தினி கௌரியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட திறந்த வாயை மூடவில்லை அவர்கள். வெளியில் வந்த பிரசாத் அமைதியாக இருக்கவில்லை.
“ஏன் இப்படி பேசின?…” நிறுத்தி கேட்க,
“என்ன பேசிட்டேன்? சரியா தான் பேசினேன்…”
“சரியா இருந்தாலும் இப்ப பேசனும்னு என்ன?…”
“நான் அமைதியா தான் இருந்தேன். நந்தினி பேசினாங்க. நானும் பதில் சொன்னேன். அவ்வளோ தான்…”
“பழசை சொல்லிக்காட்ட இதுவா நேரம். நந்தினி என்னைக்கு புரிஞ்சு நல்லவிதமா பேசறாளோ அன்னைக்கு பேசட்டும். நீ ஏன்?…”
“ஹேய் ஸ்டாப் ஸ்டாப். நான் ஒன்னும் நந்தினிக்கு புரியவைக்க இதை பேசலை. அதுக்கான அவசியம் எனக்கு இல்லை. அது என்னோட வேலையும் இல்லை. புரியவைக்க வேண்டியது பிரபா தான். அதை அவர் தான் செஞ்சிருக்கனும். எனக்கென்ன தேவைக்கு?. என்னோட ஒரே வருத்தம் நீ செஞ்ச வேலைக்கு உனக்கு போய் சப்போர்ட் செஞ்சு பேசவேண்டியதா போச்சேன்னு தான்…”
உதயாவின் வீட்டு வாசலில் வைத்தே இத்தனை அஷ்மிதா பேசிக்கொண்டிருக்க பிரசாத்தின் முகம் புன்னகையை பூசியது. 
“பல்லை காட்டாத. காண்டாகுது…” என்று எரிந்துவிழ உதயா வந்துவிட்டான்.
“இருந்து சாப்பிட்டு போக சொன்னா இங்க வந்து அரட்டை அடிக்கறீங்க ரெண்டு  பேரும்?…” என கேட்டு,
“அஷ்மி நந்தினி ஏதோ விளையாட்டுக்கு பேசினது, நீங்க தவறா நினைச்சிட்ட வேண்டாம்…”
“ரொம்ப கஷ்டப்படாதீங்க பிரபா. எங்களோட பிராப்ளம் உங்களுக்கு தெரியும்னு எனக்கு ஏற்கனவே தெரியும். எங்களை நீங்க பிக்கப் பண்ண ஏர்போர்ட் வந்தப்பவே நான் கவனிச்சேன். நாச்சி பாட்டி நந்தினி பத்தி சொன்னப்போ நீங்க டக்குன்னு என்னை ரிவர்வ்யூமிரர் வழியா என்னை பார்க்கவுமே கன்பார்ம் ஆகிடுச்சு. இன்னைக்கும் அப்படித்தான்…”
எந்தவித ஒளிவுமறைவும் இன்றி அவள் சொல்லிவிட ஆண்கள் இருவரும் திகைத்து நின்றனர்.
“இவர் செஞ்சதை நான் ஏத்துக்கவும் ஒத்துக்கவும் முடியாது தான். அது எங்களோட விஷயம். எங்களுக்குள்ள. ஆனா நந்தினி இவரை அந்த விஷயத்தை வச்சே ஜஸ்டிபை பண்ணி பேசறது தான் பிடிக்கலை. இவர் தானா நந்தினியை தேடி போய் பிரச்சனை செய்யலை. பிரச்சனையை தேடி அவங்க தான் வந்திருக்காங்க. அதை ஆரம்பிச்சு வச்சதும் அவங்க தான்…”
“அதன் பின்னால நடந்தது வேணும்னா இவர் முழு பொருப்பாகலாம். ஆனா தவறு இரண்டு பக்கமும் இருக்கும் போது ஒருத்தரை மட்டுமே மொத்த பழியையும் சுமக்கவைக்கிறது தப்பில்லையா? இதுல உங்களோட தவறுமே இருக்குது பிரபா…”
“அஷ்மி ப்ளீஸ்…” பிரசாத்திற்கு வேறு எவரும் இதை பார்த்து கேட்டுவிடுவார்களோ என்கிற பயம். உதயா சங்கடமாய் அவனை பார்க்க,
“நீங்க பேசாம இருங்க…” என அவனை அடக்கியவள்,
“எஸ் பிரபா, இத்தனை வருஷத்துல நீங்க நந்தினிக்கு புரியவச்சிருக்கலாம். நான் அவங்களை புரிஞ்சுக்கறேன். அந்த சூழ்நிலையில் அவங்க அனுபவிச்ச வேதனைகளை உணர்றேன். அவங்க பக்கம் இருந்த நியாயத்தை ஏத்துக்க முடிஞ்ச உங்க ஒருத்தராலையும் பிரச்சனையின் ஆரம்பபுள்ளி அவங்கதான்னு சொல்லி புரியவைக்க முடியலைல. அதுதான் தப்பில்லையா?…”
தன்னிடம் அத்தனை சண்டையிட்டு அவ்வளவு பேசியவள் இன்று அவனின் தவறின் காரணத்திற்கு நியாயம் பேசும் மனைவியை வியப்பாக பார்த்தான் பிரசாத்.
“அஷ்மி நீங்க சொல்றது எனக்கு புரியாமல் இல்லை. ஆனா நந்து அந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளலை…”
“எனக்கும் தான் அதிர்ச்சியா இருந்துச்சு. இவரை நான் பேசினேன். என்னலாமோ டார்ச்சர் பண்ணினேன். நான் அவர் வொய்ப். எனக்கந்த உரிமை இருக்கு. அதுக்காக நந்தினி அத்தனை பேர் முன்னாடியும் அதையே மனசுல வச்சு டீஸ் பண்ணி பேசினா நானும் பேசத்தான் செய்யவேண்டி வரும்…”
“இல்லை எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா…”
“யார் எடுத்து சொல்லனும் பிரபா? இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு எடுத்து சொல்லுவீங்க?…”
“அஷ்மி…” இருவரும் ஒரே சேர குரல் எழுப்ப,
“செஞ்ச தப்புக்கு இப்ப வரைக்கும் வருந்தி மன்னிப்பும் கேட்டுட்டு நந்தினி பேசறதை எல்லாம் பொருட்படுத்தாம சிரிச்சுட்டே அமைதியா போறார். மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன், மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்னு சொல்லுவாங்க. இனி இவர் மனுஷனாவும் இருக்க வேண்டாம். உங்க வொய்ப் பெரிய மனுஷியாவும் இருக்க வேண்டாம்…”
“உங்கப்பா உள்ள சொன்னார் முடிஞ்சதை பேச வேண்டாம்னு. அவரோட தங்கச்சியை பத்தி சொல்லவும் அதை என் முன்ன சொல்லவும் அவருக்கு பிடிக்கலை. அந்த பேச்சை நிறுத்திட்டார். பிடிக்காத தங்கச்சியா இருந்தாலும் மூணாவது மனுஷங்க முன்னாடி விமர்சிக்கிறது அவருக்கு விருப்பமில்லைன்றது ஒண்ணா இருந்தாலும் இன்னொரு காரணம் என்ன தெரியுமா?…”
“அதை பத்தி பேசி பேசி அதையே ஏன் நினைச்சு நம்ம மனசை கஷ்டப்படுத்திக்கனும்? நினைக்க நினைக்க வேதனையா இருக்கும் ஒரு விஷயத்தை ஏன் வலுக்கட்டாயமா நினைச்சு பார்த்து வருந்தனும்? அதுக்காக இன்னொருத்தரை ஏன் நோகடிக்கனும்? என்னதான் அம்மா தப்பு செஞ்சாலும் வேணி கௌரியோட அம்மா தானே? அவளுக்கு வருத்தமா தானே இருக்கும்…”
அஷ்மி சொல்ல சொல்ல உதயா வாய் பிளந்து பார்த்து நின்றான். ஒருவரின் ஒற்றை வார்த்தையை கொண்டு எத்தனை அர்த்தம் காண்பிக்கிறது இந்த பெண் என்று.
“எனக்கு நந்தினி மேல தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை பிரபா. ரொம்ப அழகா இருக்காங்க உங்க வொய்ப். ஸ்வீட்டா பேசறாங்க இவரை தவிர மத்தவங்கட்ட. ஆனா நானும் இவரும் வேற வேற இல்லை தானே? இவரை பேசினா எனக்கும் வலிக்கும்…” 
“நான் யாருக்கு இத்தனை விளக்கம் குடுத்ததில்லை. பல தலைமுறையா உங்க ரெண்டு குடும்பமும் ஒண்ணா இருக்கீங்க. என்னால அது பாழாகிட கூடாதேன்னு தான் இவ்வளோ பொறுமையா பேசறேன்…” என முடித்துக்கொள்ள,
“இந்தா தண்ணியை குடி…” என்று வாட்டர் பாட்டிலை நீட்டினான் பிரசாத் உதயாவிற்கு. அதை வாங்காமல் அவன் முறைக்க,
“உங்களுக்கு ரொம்பத்தான் கொழுப்பு…” என அஷ்மி சொல்ல,
“நல்லவேளை சரியா வந்துட்டேன்…” என நந்தினியும் வர மீண்டும் ஆண்கள் இருவருக்குமே தூக்கிவாரி போட்டது. எதையும் கேட்டிருப்பாளோ என்று. அஷ்மி சாதாரணமாக பார்த்தாள்.
“இன்னும் நீங்க கிளம்பலைன்னதும் அத்தை இந்த பூவை உங்களுக்கு குடுத்துட்டு வர சொன்னாங்க. வச்சுக்கோங்க…” என்று அஷ்மியிடம் நீட்ட புன்னகை மாறாமல் வாங்கிக்கொண்டாள் அஷ்மிதா.
“இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலைடா பிரபா…” என பிரசாத் புலம்ப அவன் முறைத்தான்.
“நீங்க ரொம்ப பொசஸிவ்ல…” நந்தினி கேட்க அஷ்மி ஆமாம் என தலையை அசைக்க,
“ரொம்ப அழகா பேசினீங்க உள்ள. எனக்கு ரொம்ப பிடிச்சது…” என உளமார நந்தினி சொல்லவும்,
“தேங்க் யூ…” என்றவள் பிரசாத்தை பார்க்க அவன் வண்டியை கிளப்பிவிட்டான் உடனே.  இருவரின் தலை மறைந்ததும் நந்தினியோடு உள்ளே வந்தான் உதயா. 
“இந்த பொண்ணு ரொம்ப பேசுது பாக்கியம். என்ன பேச்சு பாரேன். ரொம்ப தெளிவு தான். பட்டு பட்டுன்னு பேச்சு பொட்டு வெடி மாதிரி. பாவம் தனம்…” என கிருஷ்ணமூர்த்தி சொல்ல,
“அவ பேசினதுல எந்த தப்பும் இல்லை. சரியா தான் பேசினா. தனம் குடுத்து வச்சவ தான்…” பாக்கியம் சொல்ல,
“ஏன் பிரசாத் கூட தான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும். அவர் மேல அத்தனை அன்பா இருக்காங்க…” நந்தினியும் சொல்ல அதிசயமாய் பார்த்தான் உதயா.
ஆள் அரவமற்ற பாதையில் இருபுறமும் பருத்திக்காடுகள் சூழ்ந்திருக்க பிரசாத்தின் இறுக்கமான அணைப்பில் அஷ்மி திணறிக்கொண்டிருந்தாள்.
“ஹஸ் விடுங்க. என்ன இது பாதி ரோட்ல வண்டியை நிறுத்திட்டு…” என்றவளை பேச விடாமல் முகம் முழுவதும் முத்திரை பதிக்க,
“யோவ் விஸ்வாசம் என்னவாம் இப்ப?. நடு ரோட்ல வச்சு இதனை அலப்பறை?…” என அவனிடம் இருந்து தன்னை பிரித்துக்கொண்டு கேட்க,
“என்னை புரிஞ்சுட்டு நீங்க அங்க அத்தனை சிக்ஸர் அடிச்ச பாரு. நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன் வெள்ளெலி…” என்று மீண்டும் அணைக்க,
“அங்க ஆதரவா பேசினா நீ செஞ்சது தப்பில்லன்னு ஆகிடுமா ஹஸ்?…” என்று அஷ்மி கேட்கவும் திரும்பவும் முதலில் இருந்தா என்றானது பிரசாத்திற்கு.
“ஆனா இறந்த காலத்துக்காக எதிர்காலத்தை மறந்து நிகழ்காலத்துல கஷ்டப்பட மாட்டேன் ஹஸ். அஷ்மி ஷார்ப்…”
“அப்ப நீ பெரியமனுஷின்னு சொல்லு…”
“ச்சே ச்சே எனக்கேதுக்காம் அந்த போஸ்ட்?…” என மிதப்பாய் பார்க்க, 
“இன்னைக்கு நைட் ஒரு அம்சமான நைட்டா இருக்கும்னு பார்த்தேன்…” என அவன் பெருமூச்சை விட அஷ்மியின் குறும்பு புன்னகை அவனின் கட்டுபாடுகளை தகர்த்தது.
அடக்கமாட்டாமல் வயிற்றை பிடித்துக்கொண்டு அவள் சிரிக்க உதட்டை கடித்துக்கொண்டு அவளையே பார்த்திருந்தவனுக்கும் அப்புன்னகை தொற்ற,
““உன்னை பேசாவிட்டா இந்த ஜென்மத்துக்கும் என்னை பிரம்மச்சாரியா தான் இருக்க வைப்ப நீ. மனுஷனை இந்த பாடு படுத்தறடி…” என சிரிப்புடன் அவளை அணைக்க அவளாகவே அவனின் கைகளுக்குள் அடங்கினாள்.
வாழ்க்க தீர தீர வாயேன் நிழலா கூட 
சாகும் தூரம் போக துணையா நீயும் தேவ
இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் நானும் உறவா வரனும்.

Advertisement