சுஜாதா, அறிவழகன் மகளை பார்த்து பிரமித்துவிட, மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?

மீனலோக்ஷ்னி ஒருவித எதிர்பார்ப்புடன் கணவனை பார்க்க, அவன் புருவத்தை அழுத்தமாக நீவி விட்டு கொண்டிருந்தான்.

பிடிக்கலையா உங்களுக்கு?” என்று மீனலோக்ஷ்னி முகம் வாட,

க்கும். அப்படி இல்லை. வாஎன்று அவளுடன் கரம் கோர்த்து நடந்தான்.

மாளிகையின் தோட்டத்தில் ஆட்கள் கூடியிருக்க, அட்டகாசமான வரவேற்பு

வில்வநாதன் அளவான புன்னகையுடன், மனைவியின் கை விடாமல், எல்லோரிடமும் பேசினான்.

அறிமுகங்களை தொடர்ந்து மீனலோக்ஷ்னியின் அழகு அங்கு பேசும் பொருளாக, பெண்ணுக்குள் அசவுகரியம்.

அவ்வளவு தான் கொஞ்ச நேரம்என்று வில்வநாதன் அவளின் விரல் கோர்த்தான்.

நீங்க சாப்பிடுறீங்களா?” என்று பானுமதி வர,

நோ மாம். ரூமுக்கு அனுப்பி வைச்சிடுங்கஎன்றான் மகன்.

அவனிடம் என்ன கண்டாரோ, மருமகளுடனே இருந்து கொண்டார் மாமியார்.

தயாளன் மகனுக்கும், மருமகளுக்கும் குடிக்க கொண்டு வர செய்தார். “மாம். இவளை அழைச்சிட்டு போங்கஎன்று மனைவியை மாளிகைக்குள் அனுப்பி வைத்தான்.

அதன் பின் அவன் எல்லாம் முடித்து அறைக்கு வர நடு இரவே ஆகிவிட்டது.

அரைகுறை தூக்கத்தில் இருந்த மீனலோக்ஷ்னி கணவன் வரவும் எழுந்து கொண்டாள். “தூங்கலையா நீ?” என்று கேட்டபடி, கையில் இருந்த கோட்டை மனைவியின் மடியில் போட்டவன், அப்படியே படுத்துவிட்டான்.

மீனலோக்ஷ்னி அந்த கோட்டை விரலால் வருடிவிட்டவள், “உங்களுக்கு இந்த ட்ரெஸ் ரொம்ப நல்லா இருந்ததுஎன்றாள்

வில்வநாதன் ஆச்சரியமாக மனைவி பக்கம் கவிழ்ந்து படுத்தவன், “சோ மேடம் சைட் அடிச்சிருக்கீங்க?” என்றான்.

எனக்கு ரைட்ஸ் இருக்கு தானே?” என்று அவள் எழுந்து கோட்டை அதன் இடத்தில் வைக்க,

உங்களுக்கு மட்டும் தான் மேடம் இருக்குஎன்றான் கணவன்.

மீனலோக்ஷ்னி அவனுக்கு சாப்பிட கொண்டு வர சொல்ல, வில்வநாதனுக்கு சோர்வு இருந்த இடம் தெரியவில்லை.

எழுந்து சிறு குளியலை போட்டு வர, சுட சுட இட்லி தயாராக இருந்தது. மீனலோக்ஷ்னி அவனுக்கு பார்த்து வைக்க, பசிக்கு நன்றாக சாப்பிட்டு எழுந்தான்.

அவ்வளவு வெரைட்டி விட்டு இட்லியை சாப்பிடுறீங்க?” என்று மனைவி சீண்ட,

என் பொண்டாட்டி சாப்பிடலை. சோ எனக்கும் சாப்பிட தோணலைஎன்று வம்பிழுத்தான் அவன்.

நான் உங்களை எதுவும் கேட்கவே இல்லைஎன்றுவிட்டாள் மனைவி.

வில்வநாதன் வாய்விட்டு சிரிக்க, “இப்போ பழையபடி இருக்கீங்கஎன்றாள் மலர்ந்த முகத்துடன்.

நாளைக்கு இன்னமும் சூப்பராகிடுவேன்என்று கண்ணடித்து படுத்தான்.

மறுநாள் மீனலோக்ஷ்னியை கிளம்ப சொன்னான். “எங்க?” என்று மனைவி கேட்க,

அது சர்ப்ரைஸ்என்றவன், அவளுக்கான புடவையை தானே தேர்வு செய்து, “இது பெர்பெக்ட்என்று மனைவி கையில் கொடுத்தான்.

பில்ட் அப் அதிகமா இருக்குஎன்றபடி மீனலோக்ஷ்னி கிளம்பி வர, மொத்த குடும்பமும் தயாராக நின்றிருந்தனர்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க கணவன் சைகை செய்ய, “நீங்களும் வாங்கஎன்று இருவருமாக ஆசீ பெற்று கொண்டனர்.

தனபாலன் தான் மிகவும் உற்சாகமாக இருக்க, “இதுக்காக தான் என் பேரனுக்கு நீங்க கொடுக்கலையா?” என்று கஜலக்ஷ்மி கேட்டார்.

பேத்திக்கு கொடுத்தாலும் ஒன்னு தானே லட்சுமிஎன்றார் மனிதர்.

நம்பிட்டேன்என்று அவர் சொல்ல, கார் அவர்களின் அலுவலகத்திற்குள் நின்றது.

இங்க எதுக்கு?” என்று பெண்ணின் முகம் சுருங்க, வில்வநாதன் அவளின் கை பற்றி அழைத்து சென்றான்.

முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், பங்குதாரர்கள் எல்லாம் அங்கிருக்க, போர்ட் மீட்டிங் ஆரம்பித்தது.

மீனலோக்ஷ்னியை வரவேற்று பேசிய கஜலக்ஷ்மி, “இனி மிஸஸ் மீனலோக்ஷ்னி வில்வநாதனும் தொழிலில் பங்குதாரர்என்று அறிவித்தார்.

மீனலோக்ஷ்னி அதிர்ந்து, கணவனை பார்த்தாள். அவன் அழுத்தமாக அவளின் பார்வையை எதிர்கொண்டான்.

பானுமதி மருமகளுக்கான ஷேர் எண்ணிக்கையை சொன்னார். தனபாலன் அவரின் மொத்த பங்கையும் பேத்திக்கு கொடுத்திருக்க, மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவளுக்கு கொடுத்தனர்.

வில்வநாதனுடையது அதிகமே!

என் மனைவிக்கு என்னோட கிப்ட்என்று வில்வநாதன் அவளின் கரம் கோர்த்து சொன்னான்.

அதற்கான எல்லாம் தயாராக இருக்க, மீனலோக்ஷ்னிக்கு பென் கொடுத்தான் வில்வநாதன்.

அவள் தலையசைத்து மறுக்க, “என்னோட கிப்ட்ன்னு சொன்னேன் தானே?” என்று வில்வநாதன் கேட்க,

மற்ற எல்லோரின் பார்வையும் அங்கிருக்க, அமைதியாக கையெழுத்திட்டாள்.

தொடர்ந்த வாழ்த்துக்கள், பேச்சுக்கள், டீ பார்ட்டி எதுவும் அவளின் மனதை எட்டவில்லை. பொம்மையாக கணவனின் கையில் இருந்தவள், மாளிகைக்கு திரும்பியதும் அறைக்கு சென்றுவிட்டாள்.

என்ன ராஜா பேத்திக்கு பிடிக்கலையா?” என்று தனபாலன் கவலையாக கேட்க,  

தாத்தா. ஷாக்ல இருக்கா. அவ்வளவு தான்என்றான் பேரன்.

தயாளன் மட்டும் மகனை சந்தேகமாக பார்க்க, அவன் அசராமல் அவரை எதிர்கொண்டான்.

சரி நீ ரூம்க்கு போஎன்று கஜலக்ஷ்மி பேரனை அனுப்பிவைத்தார்.

மீனலோக்ஷ்னி கட்டிலில் அமைதியாக அமர்ந்திருக்க, வில்வநாதன் அவளின் எதிரில் சென்று நின்றான்.

ஏன் இப்படி?” என்று நிமிர்ந்து பார்த்து கேட்டாள் பெண்.

வில்வநாதன் அவளுக்கு பதிலளிக்காமல், அவளை நெருங்கி நின்றான்.

எனக்கு இதெல்லாம் வேண்டாம் ப்ளீஸ்என்று மனைவி சொல்ல,

ஏன் வேண்டாம்?” என்று கேட்ட வில்வநாதன், அவனின் கால்களுக்கு இடையில் அவளின் கால்களை கொண்டு வந்தான்.

திடுக்கிட்ட பெண்ணுக்கு, அவனின் அழுத்தம் நிறைந்த முகம் கோவமாக இருக்கிறான் என்பதை சொன்னது.

நான் தானே கோவப்படணும். நீங்க ஏன் கோவமா இருக்கீங்க?” என்று கேட்டபடி எழுந்து நிற்க, இருவரின் உடலும் உரசி நின்றது.

மீனலோக்ஷ்னி அதை தவிர்க்க, கால்களை சிறிது பின்னால் அசைக்க, “நோஎன்றான் கணவன் கட்டளையாக.

இப்படியே நில்லுஎன்றவன் கை அவளின் இடையை வளைத்தது

வில்வநாதனோட மனைவிக்கு அவனோட கடமையில, உரிமையில பங்கு எடுத்துக்க முடியாதா?” என்று கேட்டான்.

கடமை செய்றேன். ஆனா இந்த உரிமை எனக்கு வேண்டாம்என்று அவள் சொல்ல,

இங்க யாருக்கும் சேவை தேவை கிடையாது. நம்மோடதுங்கிற உரிமை தான் வேணும்என்றான் இறுக்கமாக.

ஷேர்ஸ் கொடுத்தா தான் உரிமை வருமா?” 

உங்களுக்கு அப்படி தான்என்றான் வில்வநாதன் அழுத்தமாக.

அவனுக்கான நியாயங்கள் வேறு. எல்லா விதத்திலும் அவன் மனைவியை தன்னுடன் பிணைத்து வைப்பதையே விரும்பினான்.

சிறு இடைவெளியையும் அவன் அனுமதிக்க தயாராக இல்லை

உங்களுக்குன்னா?” என்று அவள் புருவம் சுருக்க,

மாமனாரை மிஞ்சிய மருமகள்என்றான் கணவன் தாடை இறுக.

மீனலோக்ஷ்னிக்கு ஏதோ புரிவது போல் இருந்தாலும், முழுதாக புரிதல் இல்லை.

வில்வநாதனின் நெருக்கம் இன்னும் கூட, “இப்போ எனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

அதை தான் நீ கேட்கிற?” என்றவன், “வில்வநாதன் மட்டும் வேணும். ஆனா அவனுக்குண்டான வேறெதுவும் வேண்டாங்கிற. அப்படி என்ன? ம்ம். இதென்ன கொள்ளை அடிச்சு ஆரம்பிச்ச தொழிலா?” என்று சீற்றம் கொண்டான்.

ப்ளீஸ். நீங்க நிதானமா இல்லை. நாம பேசலாம்என்று அவள் விலக பார்க்க,

நில்லுடிஎன்று கர்ஜித்தான்.

மனைவியின் உடலில் தூக்கி போட, “காலேஜ்ல படிக்க கூட மாட்டேன்னு சொல்ற. அவ்வளவு என்ன உனக்கு? எதையும் மறைச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கலை தானே?” என்று கேட்க,

மீனலோக்ஷ்னிக்கு புரிந்து போனது. அதுக்காகவா இந்த கோவம், ஷேர்ஸ் எல்லாம்? திகைத்து போனாள்.

என்னோட குணத்துக்கு இதெல்லாம் செட் ஆகாதுங்கஎன்று தன் மனதினை சொல்ல,

எனக்கு கூட தான் நீ செட் ஆக மாட்டேன்னு சொன்ன, அப்படியா நாம இருக்கோம்?” என்றான் குரல் உயர்த்தி.

ஏங்க?” என்று அவன் உதட்டின் மேல் தன் விரல் வைக்க,

எடுடிஎன்று எச்சரித்தவன், அதற்கான நேரம் கூட கொடுக்காமல் அவளின் விரலை தன் உதட்டுக்குள் இழுத்து கொண்டான்.

பெண்ணின் கண்கள் விரிந்து போனதுடன், “ஸ்ஸ்என்றாள். கடித்து வைத்திருந்தான் நல்லவன். சிவந்து போய் வெளியே வந்தது விரல்.

என்ன உன் மாமனார் மாதிரி இருக்க பார்க்கிறியா? ஆனா நான் உன் மாமியார் இல்லை. ஞாபகம் வைச்சுக்கோஎன்றான் மிரட்டலாக.

எனக்கு வேணாம்ன்னு சொல்றதுக்கு கூட உரிமை இல்லையா?” என்று மனைவி ஆதங்கம் கொள்ள,

தன் நெஞ்சில் அவளை வலுவாக இடித்தவன், “நாளைக்கு என்னை வேணாம்ன்னு சொல்ல கூடத்தான் உனக்கு உரிமை இருக்கு. அதையும் சொல்வியா என்ன?” என்று கேட்டு வைத்தான்.

ம்ப்ச். இப்படி பேசாதீங்க ப்ளீஸ்” 

பேசுவேன்டி. நீ ஏன் என்னை டென்க்ஷன் பண்ற?”

நீங்களும் தான் எனக்கு பிடிக்காதது பண்றீங்க?” 

என்னை பிடிச்சா, இதெல்லாம் உனக்கு எப்படி பிடிக்காம போகும்?” என்று அவன் வேறு வழியில் வந்தான்.

வில்வநாதனின் மார்பு அதிக வேகத்துடன் மேலேறி, கீழிறங்க, அவனின் உடல் நன்றாகவே விறைத்திருக்க, கோவத்தில் காது மடல் எல்லாம் சிவந்து போயிருந்தது

மனைவிக்கு கண் கட்டியது. “என்னடி பதில் சொல்லுஎன்றான்.

ஒருவேளை பாண்டி நாட்டு அழகிக்கு என்னை பிடிக்காதது தான் பிரச்சனையா?” என்றான்.

உன்னை தொழில் எடுத்து நடத்த சொல்லலை. என் பொண்டாட்டி, என்னோட எல்லாத்திலும் சரிபாதியா இருக்க கூட முடியாதுன்னா நான் உனக்கு வேண்டாம்ன்னு தானே அர்த்தம்” என்று கொதித்தான். 

மீனலோக்ஷ்னி முகம் திருப்ப, கன்னம் பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், “தாலி கட்டியிருக்கேன்டி. உனக்கு என்மேல உரிமை இல்லையா? சொல்லுடி, உன்னை தானேசீறி கொண்டிருந்தவன் ஆவேசம், சட்டென அப்படியே நின்று போனது. 

கணவனின் கொதித்த நெஞ்சின் மேல் குளிர் நீராய் அவன் மனைவி.

வில்வநாதனின் அழகி, அவனின் மார்பில் சரணடைந்து இருந்தாள்.

பாண்டி நாட்டு அழகி, அவளின் அணைப்பை விலக்காமல்,  முகத்தை மட்டும் நிமிர்த்தி கணவனின் கண்களை கண்டவள், “எனக்கு இந்த வில்லனை பிடிக்கும்என்றாள்.

எல்லோருக்கும் நீங்க ஹீரோ. ஆனா எனக்கு மட்டும் வில்லன். இப்போவும் நீங்க வில்லன் வேலை தான் பார்த்திருக்கீங்க. ஆனாலும் எனக்கு இவர் வேணும்

இந்த வில்லன் வேணும். இவர் மட்டும் தான் வேணும்என்றாள் கணவனின் நெஞ்சில் ஒற்றை விரலால் குத்தி.

அசையாது நின்றுவிட்ட ஆண்மகனுக்கு முதல் முறையாக ஓர் இன்ப அதிர்வு, சுக மின்னல் வெட்டியது.