தென்றல் – 04

“மரியாதையா தூரமா போயிடு. சத்தியமா கத்திடுவேன்” என்றாள்.

அவளது கன்னங்களை தன் கைகளால் பிடித்து ஷான்வியின் ரோஜா நிற இதழ்களின் அருகில் இதழ்களை கொண்டு செல்ல.”

“அம்மா…” என கத்தினாள்.

அவளது சத்தத்தை கேட்டு வசுந்தராவும் கண்ணம்மாவும் என்னம்மா?” என கேட்டுக் கொண்டே வர.

“அடிப்பாவி! கத்த மாட்டேன்னு நெனச்சா. நெஜமாவே கத்திட்டியே” என வேகமாக விலகி நின்றான்.

“என்னம்மா? என்ன ஆச்சு?” என வசுந்தரா கேட்க.

“அது ஒண்ணும் இல்லம்மா. கரப்பான் பூச்ச பாத்து கத்துறா. இவ என்னவோ  பெரிய தைரியசாலின்னு நினைச்சேன். கடைசியாக பார்த்தா ஹஹஹ. இதுக்கே இவ்வளவு பயப்படுறா. இன்னும் பல்லிலாம் இருக்கு. அதுக்கு வேற லெவல்ல கத்துவாளோ” என நக்கலாக சிரித்தான்.

“என்ன பொண்ணுமா நீ. இதுக்கெல்லாம் இப்படி கத்துவாங்களா? காலம்  காலமா இதை பார்த்து தான் பொண்ணுங்க பயப்படுறதா இருக்கு. நீங்க எல்லாம் இந்த காலத்து பொண்ணுங்க. இதுக்கெல்லாம் பயப்படுறது நல்லாவா இருக்கு. அசிங்கமா இல்ல.”

“அது இல்லம்மா. வந்து…” எனத் தடுமாற.

“விடு ஷான்வி. அதான் நான் இருக்கேன் இல்ல. நான் பாத்துக்குறேன். நீங்க போங்கம்மா” என்றான்.

“நான் ரெஸ்ட் எடுக்க சொன்னேன். நீ இங்க என்னடா பண்ற.”

“இல்லம்மா. எது எங்க இருக்கு. எங்க வைக்கணும்னு எதுவும் தெரியாது இல்ல. அதான் சொல்லிட்டு போலாமேனு வந்தேன்” என்றான்.

“அதெல்லாம் நாங்க சொல்லிக்கிறோம். நீங்க வெளில போலாம்” என வசுந்தரா சொல்ல.

‘இந்த அம்மாங்களே இப்படித்தான்.  நமக்கு வில்லியா இருப்பாங்க போல. கொஞ்சம் கூட யோசிக்காம வெளியில போக சொல்றாங்க. என்ன கொடுமைடா இது’ என நினைத்துக் கொண்டு ஷான்வியை பார்த்து கண்ணடித்துவிட்டு வெளியேறினான்.

மனதிற்குள்ளே அவனை திட்டித் தீர்த்து விட்டு அந்த இடத்திலேயே மௌனமாக நின்றாள் .

“இந்த பக்கம் இருக்கிற கபோர்டுல உன்னோட துணி எல்லாம் வெச்சுக்கோமா. சாயங்காலம் கோவிலுக்கு போகணும். ஒரு சம்பிரதாயத்துக்கு தான். பயப்பட வேண்டாம். வீட்டுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம். வெளியில நம்ம குடும்ப கௌரவம்னு ஒண்ணு இருக்கு இல்லையா? அதை காப்பாத்த வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கு. புரியும்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வசுந்தரா வெளியே போனார்.

ஷான்விக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. ‘தன்னுடைய நிலைமையை எண்ணி வாழ்வதா? சாவதா?’ என மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தாள்.

‘இவனை நம்பலாமா? வேண்டாமா? நிஜமாவே இவன் என் மேல காதல் இருக்கானா? அப்படியே இருந்தாலும் நான் இவனோட வாழ தகுதியே இல்லாதவ. என்னுடைய வாழ்க்கையில நடந்த அந்த சம்பவம் இன்னமும் என்னை நிழலாக துரத்திக்கிட்டே தான் இருக்கு. அப்படி இருக்கும்போது எந்த வகையில நான் திருமணத்திற்கு ஏற்றவளா இருக்க முடியும். அந்த வார்த்தைக்கு தகுதியே இல்லாதவ. நான் எப்படி சேர்ந்து வாழ முடியும். இதை எப்படி இவன்கிட்ட எடுத்து சொல்லி இங்க இருந்து வெளியே போக போறேன்னு தெரியலையே.’

‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி தப்பிச்சு வெளிய வர போறேன். பேசாம நடந்த எல்லாம் உண்மையும் இவன் கிட்ட சொன்னா நம்மள புரிஞ்சுகிட்டு விலகிப் போயிடுவானா? சொல்லி பாக்கலாமா?’ என பலவாறாக சிந்தித்தாள்.

‘நாம இங்கிருந்து வெளியே போனாலும் வீட்டுக்கு போக முடியாது. அப்பா உயிரையே விட்டுடுவாரு. இதனால தங்கச்சி சம்யுக்தா வாழ்க்கையும் பாதிக்கும். பேசாம செத்துடலாமா?’  என என்ன அலைகளை மனதிற்குள் ஓட விட்டுக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவளது அலைபேசி சத்தம் கேட்டது. எடுத்து பார்த்தாள். தனது ஆருயிர் தங்கை சம்யுக்தா தான் தொடர்பில் இருந்தாள்.

எடுத்து உடனே அலைபேசிக்கு இணைப்பை கொடுக்க.  உடனே  அக்கா நான் உன் மேல ரொம்ப கோவமா இருக்கேன். என்கிட்ட சொல்லலாமே கல்யாணம் முடிச்சுட்ட” என செல்லமாக சிணுங்கினாள்.

‘நான்  நெருப்புல நின்னுட்டு இருக்கேன்னு இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க போறேன். என் வாழ்க்கையில நடந்த இந்த சம்பவம் இப்ப வரைக்கும் யாருக்குமே தெரியாது. யார்கிட்டயும் சொல்லவும் முடியாமல் தவிச்சிட்டு இருக்கேனே’ என சிந்தனையில் இருக்க.

அதை கலைக்கும் விதமாக “அக்கா உன் கிட்ட தான் கேட்கிறேன். மௌனமா இருக்க” என்றாள்.

“அது இல்லடா. அப்பா திடீர்னு ஏற்பாடு பண்ணிட்டாங்க. சித்தி கிட்ட சொன்னேன். ஆனா உன் படிப்பு கெடும்‌ அவகிட்ட சொல்ல வேணாம்னு சித்தி தான் சொன்னாங்க. சித்தி பேச்ச மீறி சொல்ற தைரியம் எனக்கு இல்ல. உனக்கே தெரியும் இல்லடா.”

“என்னைக்கு தான் நீ திருந்த போற. எங்க அம்மாவுக்கு ஏன் இப்படி பயப்படுறியோ தெரியல. கொஞ்சமாவது தைரியமா இருக்க பழகு அக்கா. அடுத்து வாரம் எனக்கு லீவுதான். நான் கண்டிப்பா நேரா அங்க வந்துதான் இறங்க போறேன். உன் மேல நிறைய கோவமா இருக்குதான். ஆனாலும் நீ என்ன பண்ணுவ பரவால்ல என் செல்ல அக்கா தானே. மாமா என்ன பண்றாரு? பக்கத்துல இருக்காரா?” என்று கேட்க.

“எந்த மாமா?” என்றாள்.

“எந்த மாமாவா? உன் கழுத்துல தாலி கட்டினாரே அவருதான் மாமா” என சிரிக்க.

“ஓ! அவரு ஹால்ல இருக்காரு.”

“மாமா கிட்ட ஃபோன் குடு. நான் ரெண்டு வார்த்தை பேசுறேன்” என்று சொல்ல.

‘சூழ்நிலை தெரியாம இவ வேற இப்படி பண்றாளே. அவ மனசு நோகடிக்க வேணாம்’ என்று நினைத்துக் கொண்டு,  “ஒரு நிமிஷம் இருடா சம்யு” என்று சொன்னவள் அறையை விட்டு வெளியே வந்து பார்த்தாள்.

அக்னிவ் சோஃபாவில் அமர்ந்து கொண்டு அங்கிருந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் மெதுவாக  அருகில் வந்து நின்றாள்.

“என்ன ஆங்கிரி பேர்ட். எதாவது ஹெல்ப் பண்ணனுமா?” என்றான்.

“இல்ல… வந்து… என் தங்கச்சி சம்யுக்தா  உங்ககிட்ட பேசணும்னு சொன்னா” என சொல்ல .

“வாவ் சூப்பர். நானே பேசணும்னு தான் நினைச்சேன். போட்டோவை கூட என்கிட்ட காட்டல. குடு குடு” என செல்போஃனை அவசரமாக  வாங்கியவன், “ஹாய். ஹவ் ஆர் யூ?” என்றான்.

“ஹலோ மாமா. எப்படி இருக்கீங்க. உங்க மேல அக்கா மேல நான் ரொம்ப கோவமா இருக்கேன். உங்க கல்யாணத்துக்கு என்னையவே இன்வைட் பண்ணாம விட்டுட்டீங்க.”

“ஓ ஸாரி. உனக்கு லீவு இல்லன்னு அத்தம்மா சொன்னாங்க. அதான் வரும்போது பாத்துக்கலாம்னு விட்டுட்டேன் பேபி.”

“நான் பேபி இல்ல. சம்யுக்தானு கூப்பிடுங்க. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.

“நிஜமாவா?”

“ஆமா மாமா.”

“எனக்கும் தான். உங்க அக்காவை விட நீ சூப்பரா ஜாலியா பேசுற.  உங்க அக்கா எப்ப பார்த்தாலும் ஆங்கிரி பேர்ட் மாதிரியே தான் இருக்கா.”

“அதுக்குள்ள பேர் எல்லாம் வெச்சிட்டீங்களா? சூப்பர்… சூப்பர்.  நெக்ஸ்ட் வீக் லீவ். அப்போ நான் ஊருக்கு வருவேன். நீங்கதான் என்ன வந்து பிக்கப் பண்ணிக்கணும்” என அன்பு கட்டளை இட்டாள்.

“தாராளமா வரேன் . என்னோட நம்பர் சென்ட் பண்றேன். எதுவா இருந்தாலும் எனக்கு கால் பண்ணு. உங்க அக்கா என்கிட்ட சொல்ல கூட மாட்டா” என்று சொல்ல.

“எங்க அக்கா ரொம்ப அன்பானவ.  எங்க அக்கா மாதிரி உலகத்துல யாருமே இருக்க முடியாது. அவளை பத்தி மட்டும் என்கிட்ட குறை சொல்லாதீங்க” என்றாள்.

“ஓகே. ஓகே.”

“ஓகே! ஃபோன அக்காட்ட குடுங்க” என்றாள் .

“உன் தங்கச்சி சூப்பரா பேசுறா. இந்தா என்ன அலைபேசியை ஷான்வியிடம் நீட்டினான்.

அவனை முறைத்து விட்டு, அப்புறம் சம்யு எப்படி இருக்க. நல்லா படிக்கிறியா?”

” அதெல்லாம் சூப்பரா தான் படிக்கிறேன். நான் எப்ப வந்து உன்னை பார்க்க போறேன்னு சந்தோஷத்துல இருக்கேன். மனசு இப்போதைக்கு வேற எதிலும் போகாது. ஹாப்பி மேரீட் லைஃப் அக்கா.”

“ஓகே! சம்யு. நீ அடுத்த வாரம் வா பேசிக்கலாம். இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.”

“அதுக்குள்ளேயே மாமியார் வீட்டுக்கு இம்பார்ட்டண்ட் கொடுக்க ஆரம்பிச்சுட்டியா? வேற லெவல் அக்கா நீ.”

*அடி வாங்கப் போற பாரு. போய் படிக்கிற வேலையை பாரு” என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள்.

“ஹே ஆங்கிரி பேர்ட். நீ தான் இப்படி இருக்க. உன் தங்கச்சி செம ஜாலியா பேசுறா. பரவால்ல. நெக்ஸ்ட் வீக் வரட்டும் பேசிக்கிறேன்”
என கண்ணடித்தான்.

“கண்ணை நோண்டிடுவேன். போடா” என்று சொல்லிவிட்டு அறைக்க சென்றாள்.

நேரம் வேகமாக சென்று கொண்டிருக்க சம்பிரதாயத்திற்காக கோவிலுக்கு அழைத்துச் செல்ல தயாராகச் சொன்னார்கள். வேறுவழி இன்றி ஷான்வி அவர்களோடு கிளம்பினாள்.

“எதுக்கு கோயிலுக்கு போறோம்னு தெரியுமா? தெரிஞ்சு தான் வரியா?” என்றான் அக்னிவ்.

“நீ உன் திருவாயை மூடிக்கிட்டு வந்தாலே போதும். உன்ன பார்த்தாலே பத்திகிட்டு வருது” திரும்பி கொண்டாள்.

கோவிலுக்கு சென்று இஷ்ட தெய்வ வழிபாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ஷான்விக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“இந்த வீட்ல குழந்தை இருக்கா? கு… குழந்தை…” என வசுந்தராவைப் பார்த்து கேட்க.

“ஆமா. இறந்து போன பெரிய மகனோட குழந்தை” என கண் கலங்க கூறினார்.

ஷான்விக்கும் சற்றே அதிர்ச்சியாக தான் இருந்தது. மறு நொடி, “குழந்தையை நான் பார்க்கலாமா?” எனக் கேட்க.

“அதுக்கு இப்போ அவசியம் இல்ல. நேரம் வரும்போது பாக்கலாம். எங்க மேல அக்கறை இல்ல. இதுல குழந்தை மேல புதுசா அக்கறை வருதோ? எதுக்கு ஷான் வீணா நடிக்கிற” என்றான்.

“குழந்தையை பார்க்கணும்னு கேட்டது தப்பா?. அதுக்கு இப்படி வக்கிரமா பேசுறீங்க” என கண்கலங்கி நின்றாள்.

“என்னையவே வேண்டாம்னு சொல்ற. என் அண்ணன் குழந்தை மேல மட்டும் உனக்கு எங்க இருந்து பாசம் வரும். உண்மைய தான் சொன்னேன்.”

” நான் கேட்டது தப்புதான். இதுக்கு மேல அதை பத்தி பேச மாட்டேன். விட்டுடுங்க” என்றாள்.

அக்னிவ் பேசிய வார்த்த இதயத்தில் ஈட்டியை குத்தினார் போல இருந்தது. தாங்க முடியாத வலியோடு அமைதியாக நின்றாள்.

‘சிலநேரங்களில் மௌனமாக இருப்பது தான் மனவலிக்கான சிறந்த மருந்து’ எனவும் நினைத்தாள்.

நேரம் மெதுவாக கடந்து கொண்டிருக்க. இரவு உணவு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

அன்று இரவு வசுந்தராவின் கணவர் சுந்தரத்திடம் ஷான்வியை அழைத்துச் சென்றார்.

அவரால் பேச முடியாது கை, கால் செயலாற்று கிடந்தது. சொல்வதை புரிந்து கொள்ள முடிந்தது. கண்களால் மட்டுமே பதில் சொல்ல கூடிய நிலைமையில் இருந்தார்.

“நம்முடைய மருமகள் என வசுந்தரா” என  காட்ட கண்களால் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“அவர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோ ஷான்வி” என்று வசுந்தரா சொல்ல.

மறுப்பேதும் சொல்லாமல் அவரிடம் ஆசையைப் பெற்றுக் கொண்டாள்.

ஷான்வி வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. ஆனாலும் வசுந்தரா நிலைமையை புரிந்து கொண்டு தங்களது குடும்ப கௌரவத்திற்காகவும் ஊரார் பேசக்கூடாது என்பதற்காகவும் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஷான்வியை தனியாக அழைத்து “நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான். உன்னோட மனநிலை இப்பொழுது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். உன் முகத்தை பார்க்கும் போதே தெரியுது. நீ சந்தோஷமா கல்யாணத்துக்கு சம்மதிச்ச மாதிரி எனக்கு தெரியல. ஆனா என்னோட பையன் உன்னை உயிருக்கு உயிரா விரும்புறான். நிச்சயமாக போகப் போக அவனோட மனசு உனக்கு புரியும். கண்டிப்பா அவனை ஏத்துக்கவேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல. உள்ள போம்மா” என அனுப்பி வைத்தார்.

அங்கே அக்னிவ் இவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். அந்த அறையின் அலங்காரத்தை பார்த்துவிட்டு அவன் மீது எறிந்து விழுந்தாள்.

“என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல. பொண்ணுங்கன்னா அவ்வளவு கேவலமா போயிடுச்சா? நீ தாலி கட்டிட்டா நீ சொன்ன மாதிரி ஆடுவேன்னு நினைச்சியா?” என கோபம் கொந்தளிக்க பேசினாள்.

“ஏன் ஷான்வி இப்ப  நான் உன்னை ஆடுனு  சொல்லவே இல்லையே. என் மேல அபாண்டமா பழி சுமத்துற” என அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.

“என்னை ஜோக் அடிக்கிறியா? சிரிக்கிற நிலைமையில நான் இல்ல.
உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? அறிவே இல்லையா? எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்கவே மாட்டியா?” என கேள்விகணைகளை தொடுக்க.

“அறிவு நிறைய நிரம்பி வழித்ததனால தான் உன்னைய என் பொண்டாட்டியா செலக்ட் பண்ணி இருக்கேன். நீ ஆங்கிரி பேர்ட்னு தெரியும். ஆனா இவ்வளவு ஆங்கிரியா இருப்பனு  எனக்கு தெரியாது ஜாங்கிரி. இப்பவும் சொல்றேன் ஐ லவ் யூ ஷான் “என அவள் அருகில் எழுந்து நிற்க.

“நீ அவ்வளவு பெரிய உத்தமன்லாம் கிடையாது. முதல்ல தள்ளி நில்லு. என் பக்கத்துல வர அருகதை உனக்கும் கிடையாது. உனக்கு பொண்டாட்டியா இருக்கிற தகுதி எனக்கும் கிடையாது. என்ன பேச வைக்காத” என கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வர அழுது கொண்டே சொன்னாள்.

“எதுக்கு ஷான்வி இப்ப அழுவுற எனக்கு தகுதியான பொண்டாட்டி இந்த உலகத்திலேயே நீ மட்டும் தான். அதை நான் தான் முடிவு பண்ணனும். நீ முடிவு பண்ணாத. ஓகேவா. ஆனா அதுக்கு முன்னாடி ஏதோ ஒண்ணு சொன்னியே. ஆங்… உன் பக்கத்துல நிக்கிற தகுதி எனக்கு இல்லைன்னு சொன்னியே. அது என்னனு தெரிஞ்சுக்கலாமா?” என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான்.

“அந்த அசிங்கத்தை என் வாயால நானே சொல்லி நீ கேவலப் படணும்னு முடிவோட இருக்க. அப்படித்தானே.”

“அப்படி என்னைய பத்தி நீ என்ன தெரிஞ்சுகிட்ட சொல்லு. நானும் தெரிஞ்சிக்கிறேன்.”

“அந்த அசிங்கத்தை சொல்லிட்டா எனக்கு நீ விவாகரத்து கொடுத்துடுவியா? என்னைய விட்டு விலகி போயிடுவியா?” என கண்ணீருடன் கேட்க.

“நூறுசதவீதம் அதுக்கு வாய்ப்பு இல்ல ஆங்கிரி பேர்ட். என்ன நடந்தாலும் உன்னை விட்டு விலகி போக மாட்டேன். ஆனா என்னனு மட்டும் தெரிஞ்சுக்கிறேன் சொல்லு.”

“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீலகிரியில ஒரு பொண்ணோட வந்த ரெசார்ட்ல ஆட்டம் போட்டியே ஞாபகம் இருக்கா? அவள் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என ஷான்வி கேட்க.

அக்னிவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சி விலகாமல் அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டு தன்னை அறியாமல் இரண்டடி பின்னால் விலகி நின்றான்.

தீயாய் தொடரும்…