Advertisement

தீரா காதல் தீ 9
“தீக்ஷி.. இங்க என்ன செய்ற..? வா, கேக் வந்துடுச்சு, அரேஞ் செய்யலாம்..” என்று ராகுலும், அதிதியும் வர, இந்திரஜித்திடம் இருந்து தன் பார்வையை திருப்பியவள், தருணின் பிறந்த நாளிற்கான ஏற்பாட்டில் இறங்கிவிட்டாள். மாலை நெருங்கும் சமயம் தான் கேக் கட்டிங் வைத்திருக்க, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்க பட்டிருந்தனர். 
கணேஷும் குடும்பத்துடன் வர, அரசுவின் மூலம் விஷ்வஜித்தும், இந்திரஜித்தும்  அவர்களுடன் நட்பாக பழக தொடங்கி இருந்தனர். அதிலும் இளையவர்களுக்குள் இன்னும் ஒத்து போக, விஷ்வஜித்தும், இந்திரஜித்தும், கிரிதரனுடன் இணைந்து பிசினஸ் செய்யும் அளவுக்கு யோசித்திருந்தனர். 
“தீக்ஷி மேடம்.. பிரியாணி வாசம்  மூக்கை துளைக்குது, வயிறு  வேற வேணும் வேணும்ன்னு கூவுது, அதை கொஞ்சம் என்னன்னு கவனிக்கிறது..” என்று கிரி, தீக்ஷியிடம் வம்பிழுக்க, 
“இன்னும் கேக் கட்டிங்கே ஆரம்பிக்கல, அதுக்குள்ள சோறு  வேணுமா..? நாங்களே  அதுக்கு தான் மதியத்துல இருந்து வெயிட்டிங், இப்போ வந்துட்டு உடனே பிரியாணி வேணும்னா வந்துடுமாக்கும்.. “ என்று மனோஜும்,  ராகுலும்  கிரியிடம் ஒருபக்கம் பொரிந்து கொண்டிருக்க, அங்கே இன்னொரு பக்கம் மூத்தவரக்ளும் ஒரு கூட்டணி அமைத்து பேசிக்கொண்டிருந்தனர். 
ஆனந்தனும், கணேஷும், அரசுவும் பேசி கொண்டிருக்க, ராமலிங்கம் எப்போதும் போல அமைதியாக அமர்ந்திருந்தார். கள்ளம் நிறைந்த அவரால்  ஆனந்தனின் கூர் பார்வையை எதிர்கொள்ள முடிவதில்லை. அதனாலே அவர்  இருக்கும் சமயங்களில் இருக்குமிடம் தெரியாமல் இருந்துகொள்வார். 
தீக்ஷியும், அதிதியும்  வந்தவர்களுக்கு  வெல்கம் ட்ரிங்க்ஸை கொடுத்து கொண்டிருந்தவர்கள், இளையவர்கள் இருக்குமிடம் வரவும், அதிதி..  மனோஜ், ராகுல், விஷ்வஜித்தும் கொடுக்க, தீக்ஷி கிரிக்கும், இந்திரஜித்திற்கு கொடுத்தாள்.
“தீக்ஷி.. நான் உன்கிட்ட பிரியாணி கேட்டா, நீ  என்னடான்னா அதை கண்ணுல கூட காட்டாம இப்படி வெறும் ஜுஸை கொடுத்திட்டிருக்க..” என்று கிரி ஜுஸை எடுத்தபடி கேட்க, 
“அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் இந்த ஜுஸை குடிக்க வேணாம், என்கிட்ட கொடுத்துடுங்க..” என்று ராகுல் சொல்லவும், சிரித்த தீக்ஷி, “எடுத்துக்கோங்க..” என்று இந்திரஜித்திடம் நீட்டினாள். 
அவளின் சிரித்த முகத்தை வெறித்து பார்த்தவன், எடுத்து கொள்ளாமல் முகம் திருப்பி கொண்டான். அவனின் முகம் திருப்பலில் அவனை கூப்பிடுவதா..?  வேண்டாமா..? என்று குழம்பியபடி அவனை பார்த்தவள், “எடுத்துக்கோங்க..” என்று மறுப்படியும்   சொல்ல, அவன் திரும்பாமல் தான் நின்றான். 
அவர்களையே பார்த்து கொண்டிருந்த விஷ்வஜித், “நீ போம்மா..” என்று தீக்ஷியை அனுப்பி வைத்தவன், “ஜித்து.. என்ன செய்ற நீ..? எல்லாரும் இருக்கிற இடத்துல இப்படித்தான் உன் கோவத்தை காட்டுவியா..?” என்று தம்பியிடம் கடிந்து கொண்டான். 
“எதுவும் சொல்லாத, நான் இப்போ பொறுமையா கேட்கிற மூட்ல இல்லை..”, என்று அண்ணனிடம்  முகம் இறுக சொன்னவனின் பார்வை சகஜமாக நடமாடிகொண்டிருந்த தீக்ஷியை வெறித்து, எரித்து தான் பார்த்தது. 
“தருண் வந்தாச்சு..”  என மனோஜ் சொல்லவும், எல்லோரின் பார்வையும் இன்றைய கதாநாயகனான தருணின் பக்கம் திரும்பியது. ஒவ்வொருவராக எல்லோரும் சென்று தருணை கொஞ்ச ஆரம்பிக்கவும், தருண் லேசாக உதட்டை பிதுக்க ஆரம்பித்தவன், சிறிது நேரத்திலே சத்தமாகவே அழுக ஆரம்பித்துவிட்டான். 
“மொத்தமா எல்லாரையும் பார்க்கவும் கொஞ்சம் பயந்துட்டான் போல..” என்று சொன்ன கஸ்தூரி  {கணேஷின் மனைவி} அவனுக்கு விளையாட்டு காண்பிக்க, அவன் எப்போதும் போல அழுகையில் ராணியின் இடுப்பில் தவ்வி கொண்டான்.  
“சரிடா ராஜா.. உன் பாட்டிகிட்டேயே இருந்துக்கோ..” என்றார்  கஸ்தூரி சிரிப்புடன், அடுத்த சில நிமிடங்களில் தர்ஷினி, விஷ்வஜித் உடன் இருக்க லேசான அழுகையில் தேம்பியபடி தருண் கேக் கட் செய்ய போக, அதிதி, ராகுல், மனோஜ் மூவரும் சேர்ந்து கலர் கன்னை வெடிக்க வைத்துவிட்டனர், அந்த திடீர் சத்தத்தில் பயந்துவிட்ட தருண், ஒரே மூச்சாக நிற்காமல் அழுக ஆரம்பித்துவிட்டான். 
“டேய்.. உங்களை யாருடா அதை வெடிக்க சொன்னா..?” என்று அரசு பிள்ளைகளை கோபத்துடன் அதட்ட, “அவன் கட் செய்யலைன்னா போகுது, அவன் பேரை சொல்லி நாங்க கட் செஞ்சிக்கிறோம், எவ்வளவு நேரம் தான் பிரியாணிக்காக வெய்ட் பண்றது..” என்று ராகுலும், மனோஜும் முணுமுணுக்க, அவர்களை முறைத்த ராணி, 
“உங்க மூணு பேருக்கும் இன்னிக்கு பிரியாணி கட், அவன் பிறந்த நாளுக்கு நீங்க கேக் கட் செய்ய போறீங்களாகுக்கும்..” என்றவர், தருணை சமாளித்து ஒரு வழியாக கேக் கட் செய்தனர்.
“டேய் என்னங்கடா உங்களுக்கு பிரியாணி இல்லைன்னு ராணிம்மா சொன்னதுக்கு அப்பறமும் இப்படி ஈயின்னு இளிச்சிட்டு நிக்கிறீங்க..?”, என்று கிரி கேட்க, 
“ராணிம்மாவை சமாளிக்கிறதா கஷ்டம், முகத்தை பாவமா வச்சிக்கிட்டு, ஒரு சாரி சொன்னா வேலை முடிஞ்சது, அதுக்கப்புறம் அவங்களே எங்களுக்கு பிரியாணி கொண்டு வந்து ஊட்டுவாங்க..” என்ற மனோஜ், அதிதியும், ராகுலும் கிரியிடம் சொன்னபடி முகத்தை பாவமாக மாற்றி கொண்டவர்கள், 
“ம்மா.. ராணிம்மா சாரி..”  என்று தலையை குனிந்து அழுவது போல சொல்லவும், “சரி சரி விடுங்க..”  என்ற ராணி, தானே சென்று மூவருக்கும் பிரியாணி கொண்டு வந்து கொடுக்க, மூவரும் கிரியை பார்த்து கண்ணடித்து சிரித்தவர்கள், பிளேட்டில் இருந்த லெக் பீஸை காட்டி சீயர்ஸ் சொல்லி சாப்பிட்டனர். 
“டேய்.. இதெல்லாம் அநியாயம்டா, இருக்கிற லெக் பீஸெல்லாம் அவங்களுக்கே கொடுத்துட்டாங்க போல..” என்று புலம்ப, 
“விடு கிரி, இது எல்லாம் எங்களுக்கு பழகிருச்சு..” என்ற விஷ்வஜித், “சரி வாங்க நாம சாப்பிட போலாம்..” என்றவன் தம்பியை பார்க்க அவனோ கையை பேண்ட் பேக்கெட்டில் விட்டபடி எங்கோ பார்த்து நின்றான். 
அவனின் முக இறுக்கத்திலே அவனின் கோவத்தை புரிந்து கொண்டவன். “ஜித்து.. வா போலாம்..” என்று இழுத்து கொண்டு தான் சென்றான். தீக்ஷி எல்லோருக்கும் பர்த்டே கேக்கை வைத்து கொண்டு வந்தவள், இந்திரஜித் அருகில் வரவும், மிகவும் தயக்கத்துடன் கேக்கை எடுத்து வைக்க போக, நொடியில் பிளேட்டை இழுத்து கொண்டான். 
“ம்ப்ச்..” என்ற விஷ்வஜித், “இது தருணோட கேக், ஒழுங்கா சாப்பிடு..” என்று மெலிதாக அதட்ட, அவனுக்கு வைத்திருந்த கேக்கில் சிறிது எடுத்து  சாப்பிட செய்யவும், அதுவரை தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருந்த தீக்ஷி, 
“அந்த கேக்கு வச்சதும் நான் தான்..”  என்றாள். அவள் சொன்னது காதில் விழாதது போல சாப்பிட்டு கொண்டிருந்தவனை கோவம் தோன்ற முறைத்து பார்த்தவள், அங்கிருந்து சென்றுவிட்டாள். அவனின் இத்தகைய ஒதுக்கம், புறக்கணிப்பு அவன் மேல் புதிதாக உண்டாகியிருந்த ஒரு  சலனத்தை விரட்டியடிக்க, கோவம் முன்  நின்றது. 
இறுதியில் எல்லோரும் டிசர்ட் சாப்பிட்டு கொண்டிருக்க, இந்திரஜித் மட்டும் ஏதும் சாப்பிடாமல் மொபைலை பார்த்து கொண்டிருந்தான். அதை கவனித்த அரசு, “தம்பி..ஏன் டிசர்ட் எதுவும் சாப்பிடலையா..? உங்களுக்கு இதுல எதுவும் பிடிக்கலயா..?” என்று கேட்டார். 
“இல்லை மாமா.. கொஞ்சம் தலை வலிக்குது..” , என்று முகம் சுருங்க சொன்னவனை பார்த்தவர், “ராணி.. தம்பிக்கு ஒரு காபி கொண்டு வா..” என்று மனைவியிடம் சொல்ல, அவர் கையில் தருண் இருக்கவும், “தீக்ஷி..” என்று மகளை காபி போட்டு கொண்டு வர பணித்தார். 
தீக்ஷியும் சென்று எடுத்து வந்தவள், யாருக்கு என்று கேட்கவும், “இந்திரஜித் தம்பிக்கு தான், தலை வலிக்குது போல, கொண்டு போய் கொடு..” என, “நான் கொண்டு போனா அவர் குடிச்ச மாதிரிதான்..”, என்று மனதுள் முணுமுணுத்தவள், 
“ம்மா.. நீயே கொண்டு போய் கொடு..” என்று அம்மாவிடம் சொன்னாள். 
“ச்சு.. தீக்ஷி தருண் என் கையில் இருக்கான், கை மாத்தினா அழுவான், நீயே கொண்டு போய் கொடு..” என்று சொல்லவும், வேறு வழி இல்லாமல் தானே கொண்டு சென்றவள், அவனை தேட, அவன் தோட்டத்தில் இருந்த கல்லில் அமர்ந்து அரசுவிடம் பேசிக்கொண்டிருந்தான். 
பெருமூச்சோடு அவனிடம் சென்றவள், காபி கப்பை நீட்ட, அவளை பார்த்தவன் பார்க்காதது போல தலையை திருப்ப கொண்டான், “தம்பி.. இந்தாங்க காபி..”  என்று அவன் கவனிக்கவில்லை என்று நினைத்து அரசு மகளிடம் இருந்து வாங்கி கொடுத்தவர், கணேஷ் கூப்பிடவும், “நீங்க குடிங்க.. நான் இதோ வந்துடுறேன்..” என்று செல்லவும், இந்திரஜித் காபி கப்பை குடிக்காமல் வைத்துவிட்டான். 
அவ்வளவுதான் தீக்ஷிக்கு இருந்த கொஞ்சநஞ்ச பொறுமையும் பறந்தது. “நீங்க என்கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிறீங்க..? நீங்க செய்றது உங்களுக்கு தப்பாவே தெரியலையா..?”  என்று கோவமாக கேட்டாள். அவளின் கோவத்தில் அவளை பார்த்தவன், 
“நீ என்னை செய்ற மைண்ட் டார்ச்சருக்கு நான் தான் கோவப்படணும், நீ எதுக்கு கோவப்படுற..?”  என்று கேட்டான். 
“யாரு..?  நானா உங்களை மைண்ட் டார்ச்சர் செய்றேன்..?” என்று கண்ணை உருட்டி கேட்டாள். 
“ஆமா நீ தான்.. நீ மட்டும் தான்..” என்று அழுத்தி சொன்னான். 
“என்ன நானா..? நான் என்ன செஞ்சேன்..?” என்று தீக்ஷி கோவம் கொந்தளிக்க கேட்டாள். 
“ நீ எல்லார்கிட்டயும் பேசுற மாதிரி, என்கிட்டேயும் பேசுற, அது எனக்கு தாங்கவே முடியல, இந்த கண் எல்லாரையும் பார்க்கிற மாதிரிதான் என்னையும் பார்க்குது, அது எனக்கு அப்படியே எல்லாத்தையும் நொறுக்கிற வெறியைவே கொடுக்குது..”  
“என்னை நீ சாதாரணமா பார்க்கிற..? பேசுற..? பழகுற..? அதெப்படி முடியும் சொல்லு.?    நீயும்.. நானும்  வேற..!!!” என்று கைகளை ஆட்டி  ஆத்திரமாக சொன்னான்.  
“நீங்களும் நானும்  என்ன வேற..?” என்று நிதானமாக  கைகளை கட்டி கொண்டு கேட்டாள். 
“வேறதான்.. நீயும், நானும் மூணாம் மனுஷங்களை போல சாதாரணமா பழக முடியாது, நீ.. நான்.. நமக்குள்ள இருக்க அந்த பீல், ஒரு பாண்ட், ஒரு நெருக்கம், எல்லாமே வேறதான்..” என்று சொன்னவனை தீரக்கமாக பார்த்தவள், 
“நமக்குள்ள என்ன பீல், பாண்ட், நெருக்கம்  இருக்கு..?”
“ஏன் உனக்கு அது தெரியலையா..? புரியலையா..? உணரலையா..?” என்று இந்திரஜித்தும் உறுதியாக கேட்டான். 
“எனக்கு தெரியறது, புரியறது  எல்லாம் இருக்கட்டும், நீங்க சொன்ன அந்த பீல்க்கு, நெருக்கத்துக்கு எல்லாம் பேர் ஒன்னும் இல்லையா..?”
“பேர்..? பேர்..?   ஏய்.. என்று அதுவரை இருந்த கோவம், ஆத்திரம் மறைந்து அவள் சொல்ல வருவதை புரிந்து சிரித்து விட்டவன், “சொல்லு.. என்ன பேர் வைக்கலாம்..?” என்று அவளையே கேட்டான். 
“ம்ஹூம்.. இது ஆகாது..” என்று அவனின் கேள்வியில் சலிப்புடன் தலையாட்டியவள், அங்கிருந்து செல்ல பார்க்க, 
“தீக்ஷி.. டோன்ட் கோ, சீரியஸா நான் உன்கிட்ட ப்ரொபோஸ் செய்யணும்ங்கிறதுதையே யோசிக்கல..”, என்றவன் தீக்ஷியை பார்க்க, அவளிடம் தெரிந்த எதிர்பார்ப்பில், “காதலை சொல்ல வேண்டும்..!!”  என்று நினைத்தவுடனே அதுவரை இயல்பாக மூச்சு விட்டு கொண்டிருந்தவன், 
அந்த நொடியில் இருந்து மூச்சு காற்று பற்றாமல் இழுத்து இழுத்து  சுவாசித்தவனின் கால்கள் ஓரிடத்தில் நிலையாக நிற்க முடியாமல் தடுமாறியது. 
“ஓஹ்.. காட் எனக்கு என்ன நடக்குது..?” என்று ஜெட் வேகத்தில் துடித்த இதயத்தை அழுத்தி கொண்டவன், அங்கும் இங்கும் நடந்து தன்னை தானே சமாளிக்க முயன்றவனுக்கு அது முடியாமல் போக, “நோ..  ஐ காண்ட்..” என்று தனக்குள் தவித்து தீக்ஷிதாவை  பார்த்தவன், 
“கண்டிப்பா ப்ரொபோஸ் செய்யணுமா..?”  என்று வெட்கத்தில் சிவந்த முகத்துடன் திணறியவாறே கேட்டான். அவனின் வெட்கத்தில் சிவந்த முகம், தீக்ஷியின்  நெஞ்சில் பஜக்கென ஒட்டிகொள்ள, அதை மறைத்தவள், 
“செய்யாமா எப்படி..?” என்று புருவத்தை தூக்கி மிதப்பாக கேட்டாள். 
“ஓஒஓ..” என்று வாய்திறந்து மூச்சு விட்டவன்,  “ம்ஹூம்.. முடியாது, அதான் இதுதான்னு உனக்கு தெரியுதுல்ல, அப்பறம் என்ன..?” என்று  சிவந்த முகத்துடன் தலையை கோதியபடி சொன்னவன், அவளின் மலர்ந்த சிரிப்பில், 
“ராட்சஸி.. சிரிக்காத..”, என்று காதலாக அதட்டியவன், “உன் கண்ணுல  எப்போ எனக்கான மயக்கம், வெட்கம், நெருக்கத்தை பார்க்கிறேனோ..??!!!  அப்போ பார்க்கலாம்..” என்று இந்திரஜித்தும் மலர்ந்து சிரித்தபடி மிதப்பாக சொன்னான். 

Advertisement