Advertisement

தீரா காதல் தீ 8
“தான் பேச ஆசை கொண்ட பெண், அவளாக பேசவும், இந்திரஜித்திற்கு  ரகசிய சந்தோசம் ஊற்றெடுக்க, அதை மறைத்தவன்,  “சாரி.. தேவையில்லை, எனக்கு கொஞ்சம் கோல்டு  இருக்கு, அதனால் தான்  மப்ளர் வச்சு, மூக்கை  கவர் செய்யவும் அது என்னடான்னா முகத்தை கவர் செஞ்ச  மாதிரி  ஆயிடுச்சு, அதுல பயந்து தானே நீ கத்துன.. சோ  டோன்ட் ஆஸ்க் சாரி..” என்றான். 
“ஓஹ்..” என்ற தீக்ஷி, வேறென்ன பேச என்று தெரியாமல் மறுபடியும் தர்ஷினியிடம் வரதிரும்பியவள், அங்கு விஷ்வஜித் மனைவியுடன் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, அதிதி, மனோஜ் இருக்குமிடம் செல்ல பார்த்தாள். 
“எந்த காலேஜ் படிக்கிற..?” என்று அவள் செல்ல பார்க்கவும், அவசரமாக பேச்சு கொடுத்தான் இந்திரஜித். 
“அண்ணா யூனிவர்சிட்டி கேம்பஸ்..” 
“ஓகே.. எந்த கோர்ஸ்  படிக்கிற..?”. 
“பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்..” என்று  சொன்னவளிடம்,  
“ஏன் அந்த கோர்ஸ்..?, உனக்கும் பிஸ்னஸ் செய்ய பிடிக்குமா…?” என்று கேட்டான். 
“ம்ம்.. தெரியல..” என்றாள். 
“வாட்..?” என்று அவளின் பதிலில் புரியாமல் ஆச்சரியமாக கேட்டான். 
“அப்பா பிசினஸ் லைன்ல இருக்கிறதால பிஸ்னஸ் பத்தி படிக்கணும்ன்னு தானாகவே ஒரு தாட்..”, என்றாள். 
“ஓகே..” என்ற இந்திரஜித்தின் முகத்தில்  சிரிப்பு தெரிய, அதை உணர்ந்தவள், அவனை கேள்வியாக பார்த்தாள். 
“இல்லை, இப்படியொரு விளக்கம் நான் எதிர்பார்க்கல, உனக்கு பிடிச்சி ஒரு ஆம்பிஷனோட படிக்கிறேன்னு தான் நான் கேள்விப்பட்டேன்..” என்றான். 
“விஷ்வா மாமா சொன்னாங்களா..?”  என்று கேட்ட, தீக்ஷியின் கேள்விக்கு ஆமோதிப்பாக தலையாட்டிய இந்திரஜித்திடம், 
“அது.. அம்மா என்னை என்ஜினீயரிங் இல்லை டாக்டர் போல ஏதாவது படிக்க சொன்னாங்க, எனக்கு ரெண்டுமே  வேண்டாம்ன்னு தோணுச்சு, சோ அதிலிருந்து எஸ்கேப்பாக தான் எங்க அப்பா போல பிஸ்னஸ் செய்ய போறேன்னு..” என்று இழுக்க, 
“உங்க அப்பாக்கு ஐஸ் வச்சி குல்லா போட்டு, இந்த கோர்ஸ்  சேர்ந்துட்டேங்க மேடம் அப்படித்தானே..?”  என்று முடித்தான். அவன் முழுவதும் சொன்னதில் கண்ணை சுருக்கி வெட்கியவள், 
“இல்லை.. அந்தளவு மெனக்கெடணும்ன்னா ஒரு எண்ணம் அதான்.. ஆனா இந்த கோர்ஸுக்கும் நிறைய ப்ரொஜெக்ட், அசைன்மென்ட், இன்டெர்னல்ஸுன்னு நிறைய மெனக்கெட வேண்டிதான் இருக்கு..”  என்று பெருமூச்சோடு வருத்தபட்டவளை பார்த்து  சிரித்தவன், 
“உன்னோட  பிஸ்னஸ் ஆம்பிஷன்க்கு பின்னாடி இப்படியொரு வரலாறு  இருக்கும்னு நான் எதிர்பார்க்கல..” என்று கையை விரித்து ஆச்சரியமாக சொல்லவும், தீக்ஷிக்குமே அவன் சொன்ன தினுசில் சிரிப்பு வந்துவிட, தானும் சிரித்துவிட்டாள்.  
“ஜித்து..” என்றவாறே அண்ணன் வரவும், இந்திரஜித்திடம் தலையசைப்புடன் கிளம்பிய தீக்ஷி, தர்ஷினியிடம் சென்று அமர்ந்து கொண்டாள். 
“என்னடா என் மச்சினிச்சிக்கிட்ட  சிரிச்சி சிரிச்சி பேசிட்டிருக்க..?” என்று லேசான கோவத்தோடு விஷ்வஜித் கேட்டான். 
“உன் மச்சனிச்சிக்கிட்ட நான் எங்கப்பா  பேசினேன்..?”என்று இந்திரஜித் கிண்டலாக  கேட்டான். 
“டேய்.. தீக்ஷியும் என் மச்சினிச்சி தான்”, என்றவன், “என்னடா என்ன சங்கதி..?” என்று தம்பியின் மலர்ந்த முகத்தை பார்த்து ஆராய்ச்சியாக கேட்டான். 
“தெரியலடா, என்னமோ தீக்ஷியை பார்க்க பார்க்க ஒரு நல்ல பீல், ஒரு ஈர்ப்பு, ஒரு அட்ரேக்ஷன்.. நான் பீல் செய்றதை முழுசா சொல்ல தெரியல..” ரகசிய சிரிப்புடன் தலையை கோதியபடி  சொன்னான். 
“என்னது சொல்ல தெரியலையா..? அப்போ இவ்வளவு நேரம் நீ சொன்னதெல்லாம் என்னடா..?” என்றான் விஷ்வஜித். 
“அதான் சொன்னேனே, என்னோட பீல் இது தான்னு  டிஸ்க்ரைப் செய்ய தெரியலன்னு”, என்றவன், “பார்க்கலாம்.. இது ஜஸ்ட் ஒரு அட்ரேக்ஷ்னா இல்லை வேறெதுவுமான்னு..”என்று சொன்னவனின் பார்வை முழுவதும் தீக்ஷியே..!! 
“மாமாஸ்.. லஞ்சுக்கு போலாம்..” என்று மனோஜ் வரவும், எல்லோரும் சுத்தப்படுத்தி கொண்டு உணவுண்ண அமர்ந்தனர். முதலில் தர்ஷினிக்கு அளவான காரம், வாயு இல்லாத உணவை வைத்த ராணி, அடுத்து அரசுவிற்கு பிபி இருப்பதால், உப்பு குறைவாக உள்ள உணவை கொடுத்தவர், இந்திரஜித்திற்கு பெப்பர் அதிகம் போட்ட நாட்டு கோழி சூப் கொடுத்தவர், உணவிலும் நண்டு வறுவல் வைத்தார்.  
தனக்கு கோல்ட் இருப்பதற்காக தான் இந்த சூப், நண்டு வறுவல் எல்லாம் என்று புரிந்து கொண்டான்  இந்திரஜித். விஷூவிற்கு பிடித்த பிஷ் பிங்கரும் உணவில் இருந்தது. இப்படி ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவு  இருந்தது.
“நான் செய்கிறேன்..!!!”  என்று இல்லாமல்  எல்லோருக்கும் தேவைபடும்  உணவை,  பிடித்த உணவை எந்தவிதமான விளக்கமும், சொல்லி காட்டலும் இல்லாமல்  மிகவும் நார்மலாக, பார்த்து பார்த்து பரிமாறும் ராணியையும், அவருக்கு உதவியாக இருக்கும் தீக்ஷியையும், தங்களை அவர்களுள் ஒருவராக நடத்தும் அரசுவையும், குட்டி தம்பி போல் பழகும் மனோஜையும்  பார்த்திருந்த இந்திரஜித்திற்கு, ஏன் விஷூக்கு இவர்களை இவ்வளவு பிடிக்கிறது என்பதற்கான காரணம் புரிந்தது.  
“ராணிம்மா.. ப்ளீஸ், இன்னிக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சமா ஐஸ்க்ரீம்..” என்று தர்ஷினி, ராணியிடம் கேட்டு கொண்டிருக்க, 
“தர்ஷி.. நிறை மாசம் வந்துருச்சு, எப்போ பிள்ளை பிறக்கும்ன்னு தெரியாது, இந்த மாதிரி நேரத்துல உடம்பை பத்திரமா பார்த்துக்கணும், அதோட உனக்கு சீக்கிரமே கோல்ட் பிடிக்கிற உடம்புவாகு,  வேண்டாம் அப்பறம் அதுக்குன்னு தனியா  மாத்திரை எல்லாம் சாப்பிட வேண்டி வரும்,  அது வயித்துல இருக்கிற பிள்ளைக்கு தேவையில்லாத கஷ்டத்தை தான் கொடுக்கும், அதனால நீ என்ன செய்றன்னா..? வயித்துல இருக்கிற உன் பிள்ளையை நினைச்சு பாரு, ஐஸ்க்ரீம் ஆசை தானா போயிரும்..” என்று முடிவாக சொல்லிவிட்டார். 
அவர் சொல்வதில் இருந்த உண்மை புரிந்து அமைதியாகிவிட்ட தர்ஷினியை பார்த்திருந்த தீக்ஷி, ராணி உள்ளே சென்றுவிடவும்,  வேகமாக தர்ஷினிக்கு இரண்டு மூன்று ஸ்பூன் ஐஸ் க்ரீம் ஊட்டிவிட்டாள். 
“வேண்டாம் தீக்ஷி, ராணிம்மா சொல்றது சரிதான்..”  என்று தர்ஷினி மறுக்க,  
“நீ ஆசைப்பட்ட இல்லை சாப்பிடுக்கா, நாம கொஞ்ச நேரம் கழிச்சு சூடுதண்ணி குடிச்சிக்கலாம்.. எல்லாம் சரியா போயிடும்..” என்ற தீக்ஷி அவளுக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட செய்தாள்.
“ஏய்.. இதெல்லாம் ஏமாத்து வேலை, இரு உன்னை அம்மாகிட்ட சொல்லி தரேன்..” என்று மனோஜ் எப்போதும் போல நாரதர் வேலையை செய்ய போனான். 
“போ.. போய் சொல்லிக்கோ, அப்பறம் தம்பி பாப்பா பொறந்தா நாங்க உன்னை பாப்பாவை தொடவே விடமாட்டோம், இப்போ நான்  ஐஸ்க்ரீம் கொடுத்தது  அக்காக்கு ஒன்னும் இல்லை, வயித்துல இருக்கிற தம்பி பாப்பாக்கு தான், அதை போய் மாட்டிவிட பார்க்கிற..?” என்று தீக்ஷி வினயமாக சொன்னாள். 
“அப்படியா பாப்பாக்கா கொடுத்த..?” என்று யோசித்த மனோஜும், “அப்போ சரி நானும் பாப்பாக்கு தரேன்..”  என்று அவனும் தர்ஷினிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட்டான். சிறிது நேரம் கழித்து தர்ஷினிக்கு மிதமான சூடு நீர்  கொடுத்து குடிக்க வைத்த தீக்ஷியை பார்த்துவிட்ட ராணி, 
“எதுக்கு இப்போ அவளுக்கு சுடுதண்ணி கொடுக்கிற..?” என்று முறைத்து கேட்டார். 
“அது லேசா நெஞ்சு கரிக்குதுன்னு சொன்னா அக்கா, அதான்..”  
“தீக்ஷி நீ பொய் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும், ஆனா  அதே சமயம்  உண்மையும் சொல்ல மாட்ட, நடுவுல இப்படி பொத்தாம் பொதுவா சொல்லி தப்பிக்கிறது என்ன..?” என்று அதட்டியவர், உடனே சென்று சுக்கு,இஞ்சி  லேசாக தட்டிப்போட்டு கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு பனைவெல்லம் சேர்ந்து தர்ஷினிக்கு கொடுத்தார். 
இதையெல்லாம் மேல் பால்கனியிலிருந்து பார்த்திருந்த இந்திரஜித், “விஷூ.. இவங்க உண்மையிலே சேன்ஸே இல்லை,.” என்று உணர்ந்து சொன்னான். 
“என்ன..?  ஏன் திடீர்ன்னு வொர்க்கை நிப்பாட்டுறீங்க..? என்னது இன்னும் கூலி அதிகமா தருணுமா..? என்ன விளையாடுறீங்களா..? இப்படி பாதியில வொர்க்கை நிறுத்தி வச்சி என்னை கார்னர் செய்ய பார்க்கிறீங்களா..?” என்று விஷ்வஜித் போனில் கோவமாக பேசிக்கொண்டிருந்தான்.  
அன்று மாலை நேர டீக்கு எல்லோரும் ஒன்று கூடியிருக்கும் போதுதான் அவனுக்கு இதுபோல போன் வர, எல்லோரின் பார்வையும் அவன் மேல்தான் இருந்தது. “மாமா.. நம்ம சென்னை ஓட்டல் கட்டிட்டிருக்கிற அந்த லேபர்ஸ் எதோ பிரச்சனை செய்றாங்க போல, நாங்க கிளம்புறோம்..” என்று போன் பேசி முடித்து விஷ்வஜித் சொல்லவும், 
“அதுக்கேன் மாப்பிள்ளை நீங்க போகணும்..? நீங்க தொழிலுக்கு புதுசுன்னு தான் இப்படியெல்லாம் செய்றாங்க, அவங்களை நம்ம கணேஷ்கிட்ட விட்டுடுலாம்..” என்று சொன்னார். 
“யார் மாமா..?”  என்று விஷ்வஜித் புரியாமல் கேட்டான். 
“கன்ஸ்டர்க்ஷன் சங்கத்தோட செகரட்டரி, என் ப்ரண்ட் கணேஷ்.. அவன் அவங்களை பார்த்துப்பான்..” என்றவர், உடனே அவருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அடுத்த சில  நிமிடங்களிலே  பிரச்சனை முடிந்தது. 
“அரசு மாமா எல்லா விதத்திலும்  செமையா இருக்கார், என்ன இந்த ராமலிங்கம்  விஷயத்தில் மட்டும்தான் கொஞ்சம்  பலவீனமா இருக்கார் என்ன..?” என்று இந்திரஜித் அண்ணனிடம் கேட்டான். 
“அந்த சின்ன பலவீனமே  அவருக்கு பிரச்சனையா  முடிஞ்சிட கூடாது..”, என்று விஷ்வஜித் பெருமூச்சோடு சொன்னான்.
“அப்பறம் தம்பி, இந்த காலத்து  பசங்கக்கிட்ட கேட்க கூடாதா கேள்விதான். இருந்தாலும் நீங்களும் எனக்கு விஷ்வா மாப்பிள்ளை மாதிரி தான், அதனால ஒரு அக்கறையில தான் கேட்கிறேன், படிப்பை முடிச்சுட்டிங்க, அடுத்து என்ன செய்றதா பிளான்..?” என்று இந்திரஜித்திடம் கேட்டார் அரசு.  
“என் மனசு போற போக்கை பார்த்தா,  நானும் உங்க மாப்பிள்ளை ஆகிடுவேன் போல…!!”, என்று தீக்ஷிதாவையே பார்த்தபடி மனதுக்குள் முணுமுணுத்தவன், 
“மாமா.. நீங்க என்கிட்ட எது கேட்கிறதா இருந்தாலும் உரிமையாவே கேட்கலாம், நானும் உங்களுக்கு விஷூ மாதிரி தான்..”என்றவனை அர்த்தத்துடன்  பார்த்த விஷ்வஜித், 
“என்னடா பேச்சை எல்லாம் பார்த்தா இது ஜஸ்ட் அட்ரேக்ஷ்ன் போல தெரியலையே..?” என்று தம்பியின் காதுக்கருகில் கிசுகிசுத்தான். 
“ச்சு.. என்னை டிஸ்டர்ப் செய்யாதா..? நான் என் வருங்கால  மாமனார்கிட்ட பேசிட்டருக்கேன் இல்லை..” என்று அண்ணனை கடிந்தவன், அவனின் முறைப்பை கண்டு கொள்ளாமல்  “மாமா..”  என்று அரசுவிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.  
“பிஸ்னஸ் தான் மாமா, சில புது பிஸ்னஸ் ஐடியா இருக்கு, அதை செய்யலாம்னு தான் பிளான்..” என்று அவன் செய்ய நினைத்திருக்கும் பிஸினஸை பற்றி விலாவரியாக சொன்னான்.  
“ரொம்ப நல்ல பிளான்ஸ் தம்பி, துணிஞ்சு செய்ங்க..  கண்டிப்பா சாதிப்பீங்க..!!”  என்று மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதமாகவே சொன்னவர், 
“என் தீக்ஷிக்கும்  உங்களை போல பிஸ்னஸ்ல சாதிக்கணும்னு ஏகப்பட்ட ஆசை..” என்றவர் அருகில் அமர்ந்திருந்த தீக்ஷியை பாசத்துடன் தோளோடு அணைத்து கொண்டார்.  
இந்திரஜித் அவனின் பிஸ்னஸை பற்றி சொல்லவும், “இங்கேயும் இதுதானா..?” என்று போரடித்து கடனே என்று அமர்ந்திருந்த  தீக்ஷி, டாபிக் திடீரென தன் பக்கம் திரும்பவும்  அவரின் அணைப்பிலுருந்து லேசாக இந்திரஜித்தை பார்த்தவள், அவனின் கண்ணோர சுருக்கத்தில் அவனின் சிரிப்பை கண்டு கொண்டவள், “ச்சே.. இவர்கிட்ட சொல்லாமலே இருந்திருக்கலாம்..” என்று நொந்து கொண்டாள். 
“அவ மார்க்குக்கு  மெரிட்லே டாக்டர் சீட் கிடைச்சிருக்கும், ஆனா அவளுக்கு என்னை போல பிஸ்னஸ் செய்யணும்ன்னு  தான் ஒரு ட்ரீம், அதனால தான் பிஸ்னஸ் அடிமினிஸ்ட்ரேஷன் படிச்சிட்டு இருக்கா..” என்று மகளை பற்றி பெருமையாக சொன்னவர்,
 “நீங்க வேணும்னா பாருங்க தம்பி, என் பொண்ணு ஒரு நாள் கண்டிப்பா  சாதிப்பா..” என்று மகளின் நெற்றியில் இதழ் பதித்து  உறுதியாக  சொல்ல, “தந்தையை ஏமாற்றுகிறோமோ..?” என்று தீக்ஷிக்குள் ஒரு குற்ற உணர்வு.. “கிளம்பலாமா..?” என்று டீ முடிந்தவுடன், அன்றே எல்லோரும் அங்கிருந்து வீடு திரும்பிவிட, இந்திரஜித் மறுநாளே ஊட்டி கிளம்பிவிட்டான்.

Advertisement