Advertisement

“சூப்பர் தீக்ஷி.. நானும் வரவா…?” என்று ஆசையுடன் கேட்டான்.
“ ம்ஹூம்.. இது ஒன்லி பிக் பர்ஸன்ஸ்க்கான மீட்டிங், நாட் பார் கிட்ஸ்..” என்று சிரிப்புடன் சீண்ட, 
“தீக்ஷி.. நான் ஒன்னும் கிட் இல்லை, வளந்துட்டேன், இங்க பாரு உன் சோல்டர்கிட்ட வரேன்..” என்று கோவமாக மறுத்து கொண்டிருக்கும் போதே, 
“ஏய் புஜ்ஜூ குட்டி, அம்லு பேபி..” என்று கத்தியபடி ஓடி வந்தாள் அதிதி. 
“ஓஹ்.. காட், ‘சில்லி’  சித்தி வந்தாச்சா..!!!”, என்று நொந்து போய் பார்த்தவனின் அருகில் வந்த அதிதி, அவனை கட்டி அணைத்து, அவனின் கன்னத்தை கிள்ளி, தலை முடியை கலைத்து முத்தம் கொடுத்தாள். 
“அதி.. டோன்ட் டச் மை ஹேர்..” என்று அவள் கலைத்துவிட்ட, முடியை விரல்களால் கோதியவன், அதிதியை  சலிப்புடன் பார்த்தான். 
“போடா.. ஒரு அழகான பொண்ணு கொஞ்சுனா ரொம்பத்தான் சலிச்சிக்கிற.. அப்படியே உங்க அப்பா மாதிரி ரசனை கெட்டவன்..”  என்று உதட்டை வளைத்தவள், 
“சுப்பு.. எனக்கு பொங்கல்..” என்று குரல் கொடுத்தவாறே தீக்ஷியை பார்த்து முறைத்து கழுத்தை வெட்டினாள். அவளின் முறைப்பை கண்டு கொள்ளாமல், சாப்பிட்டு கொண்டிருந்த தீக்ஷியை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்தவள், 
“இங்க ஒருத்தி கோவமா முறைக்கிறாளேன்னு யாருக்காகவாது ஏதாவது இருக்கா..?”என்று கத்தியவளை, 
“ஷ்ஷ்.. ஏண்டி இப்படி கத்துற..? என்ன செஞ்சு மாட்டினேன்னு சொல்லு..?” என்று கேட்டாள் தீக்ஷி. 
“நான் ஒன்னும் பெருசா செய்யல, எதோ குழந்தை பொண்ணு ஆசைப்பட்டு, மிட்நைட் பார்ட்டிக்கு போனேன், அது ஒரு குத்தமா..? அதுக்கு என் மாமாங்க என்ன மிரட்டி, கையோட வீட்டுக்கே இல்லை  கூட்டிட்டு போயிட்டாங்க”, 
“நல்ல வேலை நானும்,ராகுலும் சூதானமா இருந்ததால தப்பிச்சு பின்னாடி வழியா  வீட்டுக்குள்ளே ஓடிட்டோம், இல்லாட்டி அந்த லிங்கத்துக்கிட்ட இல்லை மாட்டியிருப்பேன், லிங்கம் கூட பரவாயில்லை, இந்த பாரதி என்னை கட்டிவச்சு தோளை உறிச்சியிருக்கும்..” என்று பயத்துடன் சொன்னாள். அதி.. 
“அதி.. மிட் நைட் பார்ட்டிக்கு போயிருந்தியா..? எப்படி இருந்துச்சு..? நெக்ஸ்ட் டைம் நானும் வரேன், என்னையும் கூட்டிட்டு போறியா..?” என்று கண்களில் ஆசை மின்ன கேட்ட தருணை  கண்டிப்புடன் பார்த்த தீக்ஷிதா, 
“தருண்.. என்ன இது..?” என்று அதட்டினாள்.   “ஏன் தீக்ஷி..? போனா என்ன..?” என்று முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு கேட்டான். 
“தருண் நீ  ஒன்பது வயசு கிட்.. கிட் மாதிரி நடந்துக்கோ.. “ என்று தருணை கண்டித்தவள், 
“அதிதி..  நீ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது, உனக்கு எல்லாம் தெரியும், நாம ஒன்னும் காந்திஜி  ஆசைப்பட்ட சுதந்திர நாட்ல இல்லை,  நமக்கே தெரியாம  நம்மை சுற்றி எப்போவும் ஒரு வெறி பிடிச்ச கூட்டம் இருந்துட்டே தான் இருக்கு, அதை மனசுல வச்சிக்கிட்டு பாதுகாப்பா இருக்க பழகு..”  என்று   கண்டிப்புடன் அதட்டியவள், “நான் மீட்டிங் கிளம்புறேன்..” என்று கிளம்பிவிட்டாள்.
“பாலா.. மீட்டிங்ல பைனலைஸான கேம்ஸை எல்லாம் தருணுக்கு சொல்லிடுங்க, அவன்  எதிர்பார்த்திருப்பான்..” என்று மீட்டிங் முடியவும், தீக்ஷி சொன்னாள். 
“ஓகே.. மேம்..”, என்றவன், “மேம்.. ஈவினிங் நம்ம பிஸ்னஸ் ப்ரண்ட் அருணாச்சலத்தோட பொண்ணுக்கு ரிசப்ஷன் இருக்கு, நீங்க போகணும்..” என்று ஞாபகப்படுத்தவும், ஓகே என்றுவிட்டவள், மாலை தருணிடம் பங்க்ஷன் வரகேட்டாள். 
“ம்ஹூம்.. நான் மாட்டேன் தீக்ஷி, அங்க எனக்கு ரொம்ப போரடிக்கும்.. நான் அதியோட வீட்லே இருக்கேன்..” என்றுவிட்டான். “நான் பார்த்துகிறேன் தீக்ஷி, நீ கிளம்பு..” என்று அதிதியும் சொல்ல, அவர்களிருவரையும் வீட்டில் விட்டு தான் மட்டும் ரிசப்ஷனுக்கு கிளம்பினாள். 
“ஹாய் தீக்ஷி.. வா உள்ளே போலாம்..” என்று பங்கஷனுக்கு வந்திருந்த கிரியும், அவளும் இணைந்தே உள்ளே சென்றனர். முதலில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள், தங்கள் பிஸ்னஸ் வட்டார ஆட்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஆரவாரமாக கார்ட்ஸ்  புடைசூழ வந்தான் இந்திரஜித். மற்றவர்களை  பொறுத்தவரை இருவரின் குடும்ப நண்பர்கள் அவ்வளவே..  
அவனை பார்த்தும் பார்க்காதது போல் அருணாசலத்தின் மகன்  நிகிலிடம் பேசிக்கொண்டிருந்த தீக்ஷியை பார்த்து உள்ளுக்குள் கொதித்தவன், வெளியே சாதாரணமாக எல்லோரிடமும் பேசிக்கொண்டு இருந்தவனின் கண்கள் நிகில், தீக்ஷிதாவையே வட்டம் போட்டு கொண்டிருந்தது. 
“ஹலோ இந்திரஜித் வாங்க..” என்று பங்க்ஷன் சார்பாக வரவேற்ற நிகிலுக்கு தலையாட்டியவன், பக்கத்தில் இருந்த தீக்ஷியிடம்  பார்மலாக கை கொடுத்து நலம் விசாரித்தவன், பிடித்த கையை விடாமல் நிகிலிடம் பேசிக்கொண்டிருந்தான். 
சுற்றி எல்லோரும் இருக்கவும், முயன்று தன் முகத்தை சாதாரணமாக வைத்தவள், அவனின் பக்கத்தில் நின்று தங்களின் இணைந்த கையை மறைத்தவாறே, மற்றவர்களின் கவனம் கவரா வண்ணம், கையை உருவ முயற்ச்சிதாள். “ம்ஹூம்.. இன்ச் கூட விடுபட முடியவில்லை..!!”
“ பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது நிகில்..?”  என்று கேட்ட இந்திரஜித்திற்கு “அதுக்கென்ன சூப்பரா  போகுது..” என்றவனின் கண்கள் தீக்ஷியிடமே இருந்தது. 
அவனின் பார்வையில் எரிந்த இந்திரஜித், “உங்க தங்கைக்கு முடிஞ்சுது, அடுத்து உங்களுக்குதான் போல..” என்று  அளவான சிரிப்புடன் ஆழம் பார்த்தவனின் கண்களுக்கு, நிகிலின் பாக்கெட்டில் இருந்த பாக்ஸ் தெரியவும், உடல் இறுகியது. 
“ஆமாம்.. அடுத்து எனக்குத்தான், பொண்ணு எல்லாம் ரெடி..” என்று தீக்ஷிதாவையே பார்த்து சொன்னவனின் பேச்சை கவனத்தில்  கொள்ளாத தீக்ஷிதா,  இந்திரஜித்திடமிருந்து தன் கையை விடுவிப்பதிலே குறியாய் இருந்தாள்.
 “பார்த்து நிகில்.. நீங்க பார்த்திருக்கிற  பொண்ணு  கமிடெட்டா இருக்க போகுது, என்ன தீக்ஷிதா நீங்ககூட கமிடெட் தானே..?” என்று தீக்ஷிதாவிடம் கேட்டான். “என்ன..?” என்று அவனின் பேச்சு புரியாமல் விழித்தவளின் பக்கம் சாய்ந்தவன் மெலிதான குரலில், 
“நிகில்கிட்ட நீ கமிட்டெட்ன்னு சொல்லு..” என்றான். 
“என்ன..? திடீர்ன்னு ஏன்..? எதுக்கு சொல்லணும்..?” என்று அவனின் பேச்சு புரியாமல் கேட்டாள் தீக்ஷிதா. 
“சொல்லுடி முதல்ல.. ஏன் எதுக்குன்னு எல்லாம் காரணம் கேட்காத..” என்று பல்லை கடித்து மிரட்டியவனை ஓரக்கண்ணால் முறைத்தவள், 
“நான் கமிட்டெட்டா என்ன..? எனக்கு தெரியாதே..?” என்று அவனையே பார்த்து அழுத்தமாக  கேட்டாள். 
“ஓஹ்…  நீ கமிட்டெட் இல்லைங்கிற..” என்று  அவளின் கேள்வியில் அவளை நேராக திரும்பி பார்த்தவன், “அப்போ நீ சிங்கிள்..!! அப்படித்தானே..?” என்று இந்திரஜித்தும்  மிக அழுத்தமாக கேட்டான். அவனின் அழுத்தத்தில், கூர் பார்வையில் மனம் ஜெட் வேகத்தில் துடித்தாலும், உறுதியாக “ஆமாம்..!!” என்று தலையாட்டி விட்டாள்.
“ஓஹ்ஹ்..” என்றவன், அடுத்த நொடி, அவளின் கையை விட்டுவிட்டு, மற்றவர்களுடன் பேச சென்றுவிட்டான். அவன் கோவமாக விலகி செல்ல, அவனையே தன் பார்வையால் தொடராமல் தொடர்ந்து கொண்டிருந்த  தீக்ஷியிடம், 
“தீக்ஷி.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..” என்ற நிகில் திடீரென அவளின் முன் மண்டியிட்டு, “ஐ லவ் யூ  தீக்ஷிதா.. வில் யூ மேரி மீ..” என்று கேட்டுவிட, எல்லோரின் பார்வையும் இவர்கள் மேல் விழுந்ததோடு மட்டுமில்லாமல், கை தட்டி சந்தோஷ கூச்சலும் இட்டனர். 
“ஓகே சொல்லு தீக்ஷி.. நிகில் நல்ல பேர் உனக்கு, ஓகே சொல்லு, ஓகே சொல்லு..”  என்ற ஆராவரம் வேறு செய்தனர். நிகிலிடம் இருந்து இத்தகைய செயலை எதிர்பார்க்கா தீக்ஷி, அதிர்ச்சியில் திகைத்து வேகமாக திரும்பி இந்திரஜித்தை பார்க்க, அவனோ பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டபடி, அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். 
“ஓகே  சொல்லு தீக்ஷி.. ஓகே சொல்லு..”   எல்லோரும் விடாமல்  கத்தி கூச்சல் இடவும், 
“ப்ளீஸ் ப்ரண்ட்ஸ், இது அவங்க பர்சனல், அவங்களே பார்த்துக்கட்டும், கிவ் சம் பிரைவசி பார் தெம்..” என்று கிரி சத்தமாக சொல்லவும் தான், எல்லோரும் அமைதியாகி விலகி சென்றனர். 
“நிகில் முதல்ல எழுந்திருங்க.. இது உங்க தங்கை ரிசப்ஷன், இங்க இப்படிதான் நடந்துபிங்களா..?” என்று  கோபமாக அதட்டியே நிகிலை எழுப்பிவிட்ட கிரி, இந்திரஜித்தையே கோவமாக முறைக்க, அவனோ ஆத்திரத்துடன் தோள்களை குலுக்கி, தீக்ஷிதாவை கண் காட்டினான்.
“நிகிலுக்கு தன் மேல் ஒரு எண்ணம் உண்டு என்று தீக்ஷி முன்னமே உணர்த்திருந்தாள் தான். ஆனால் இப்படி பொதுவில் எல்லோரும் பார்க்க, ப்ரொபோஸ் செய்வான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை”.  நிகில்.. தீக்ஷியின் பதிலை எதிர்பார்த்து அவளையே ஆவலாக பார்த்து கொண்டிருக்க, அவர்களின் அருகில் வந்தனர்  அருணாசலத்தின் குடும்பத்தார். 
“தீக்ஷிதா.. என் மகனுக்கு உன்னை பிடிச்சிருக்கிறது ரொம்ப நல்ல விஷயம், என் மகனுக்கு ஓகேன்னா எங்களுக்கும் ஓகேதான், நீ என்னமா சொல்ற..?  எப்போ கல்யாணம் வச்சிக்கலாம், எப்படியும் உன்பக்கம் பேச ஆள் இல்லை, எல்லாமே நாங்களே பார்த்துகிறோம்..”, என்று அருணாச்சலம் சொல்ல, கைகளை இருக்க மூடி தன் உணர்வுகளை அடக்கிய தீக்ஷியிடம், 
“என் ஒரே மகனுக்கு பொண்ணு கொடுக்க எத்தனை பேர்  ஆசைப்படுறாங்க, ஆனா என்  மகன் உனக்கு யாரும் இல்லன்னு தெரிஞ்சும் உன்னை கட்டிக்க ஆசைப்படறான், எங்க நிகிலுக்கு  எவ்வளவு பெரிய மனசு, நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..” என்று அருணாச்சலத்தின்  மனைவியும் அவர்களாகவே முடிவெடுத்து பெருமை பேசினர்.  
அவர்கள் பேச பேச இந்திரஜித் பொறுமையிழந்து தீக்ஷிதாவையே வெறித்து  பார்த்து கொண்டிருந்தான்.  “தீக்ஷி.. என்ன இது..? அவங்க என்ன இப்படி பேசிட்டிருக்காங்க..? இவங்களை இன்னிக்கு என்ன  செய்றேன் பாரு..” என்று கோவமாக பேச போன கிரியின் கையை பிடித்து தடுத்து கொண்டிருந்த தீக்ஷியிடம், 
“என்னமா சொல்ற..? எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்..?” என்று அருணாச்சலம் திரும்பவும் கேட்க, இந்திரஜித்தின் கூர் பார்வை அவளை துளைத்தாலும், அவனின் பக்கம் திரும்பாமல், அருணாசலத்தின் குடும்பத்தை  தீர்க்கமாக பார்த்த தீக்ஷிதா, 
“யாரும்  இல்லாத என்னையே போல ஒரு பொண்ணை உங்க குடும்பத்து மருமகளா ஏத்துகிற உங்க பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி.. ஆனா உங்களை போல நல்வங்களுக்கு  அந்த கஷ்டத்தை கொடுக்க எனக்கு விருப்பமில்லை..”, என்று அழுத்தமாக சொன்னவள், 
“உங்க பெரிய மனசுக்கு ஏத்தது போல எல்லாரும் இருக்கிற ஒரு பொண்ணையே நீங்க கல்யாணம் செஞ்சுக்க  என்னுடைய வாழ்த்துக்கள் Mr. நிகில்..” என்று நிகிலிடம்  சொன்னவள், கிரி உடன் வர அங்கிருந்து கிளம்பியவளின் கையை  யாரோ பிடித்து இழுக்கவும், திரும்பி பார்த்தவள், தன் கையை பிடித்திருந்த  மனிதரை கண்டு அதிர்ந்தாள்.

Advertisement