Advertisement

தீரா காதல் தீ 5
விஷ்வஜித்தின் முறைப்பிற்கு எல்லாம் அசராமல் அவனையே  வீம்பாக பார்த்திருந்த அதிதியை பார்க்க பார்க்க இந்திரஜித்திற்கு  இன்னும் சிரிப்பு பொங்கியது. 
“ஜித்து..” என்று தம்பியின் சிரிப்பில் அதட்டிய விஷ்வஜித், “அவளை வாய் பேசாம முதல்ல வீட்டுக்கு கிளம்ப சொல்லு..” என்று அதிகாரத்தோடு சொன்ன விஷ்வாவை பார்த்து உதட்டை சுழித்த அதிதி, 
“நான் என்ன போக மாட்டேன்னா சொன்னேன், இவரையே என்னை கொண்டு போய் விடுங்கன்னு தான் சொன்னேன்..” என்றவளை சிரிப்பை நிறுத்தி யோசனையாக பார்த்த  இந்திரஜித்,
“ஓகே.. வாங்க போலாம், நாங்களே  உங்களை கொண்டு போய்  வீட்ல  விடறோம்..” என்று  சொல்லவும், அதிர்ந்த  விஷ்வஜித் திரும்பி தம்பியை பார்க்க, அவன் தீவிரமாக அண்ணனை பார்த்தான். 
அவன் எண்ணம் புரிந்தவுடன் “என்னமோ செய்..?” என்ற முகபாவத்தில் திரும்பி கொண்ட விஷ்வாவையும், இந்திரஜித்தையும்  பயத்துடன் பார்த்தனர்  அதிதியும், ராகுலும்.. 
“ஏய் தொப்பி மூக்கி.. உன்னை யாரு இவ்வளவு வாயடிக்க சொன்னா.. இப்போ பாரு நம்மளை  வீட்ல மாட்டிவிட பிளான் பண்ணிட்டார்..” என்று ராகுல் அதிதியின் காதை கடித்தான்.
“டேய் யாரைடா தொப்பி மூக்கி சொன்ன..? காக்கா வாய் மாதிரி ஒரு   மூக்கை வச்சிக்கிட்டு நீ என் அழகு  கிளி மூக்கை சொல்றியா..?” என்று ராகுலிடம் மல்லுக்கு நின்றாள். 
“ஏய் இம்சை.. இப்போ உன் மூக்கு கிளி மூக்குங்கிறது ரொம்ப முக்கியமா..? நானே வீட்ல மாட்ட போறேன்னு கவலையில் இருக்கேன்..”, என்று  அதிதியிடம் கடுப்பாக பொரிந்த ராகுல், விஸ்வஜித்தையும், இந்திரஜித்தையும் சமாளிக்கும் விதமாக பார்த்து  ஈயென்று இளித்தவன்,
 “ண்ணா.. உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம், நானே வீட்டுக்கு போயிடுறேன், நீங்க உங்க மாமா  பொண்ணை மட்டும் உங்களோட கூட்டிட்டு போங்க..” என்று அதிதியை மாட்டவைத்துவிட்டு எஸ்கேப்பாக பார்த்த ராகுலின் டிஷர்ட் காலரை இழுத்து பிடுத்து நிறுத்திய இந்திரஜித், 
“பக்கத்து பக்கத்து வீட்ல இருக்கிற  உங்க ரெண்டு பேரையும்  வீட்ல விடுறதுல  எங்களுக்கு எந்த சிரமும் இல்லை, வாங்க சார் போலாம்..” என்று அவனை இழுத்து கொண்டு சென்றான்.
 “ண்ணா.. ப்ளீஸ்ண்ணா,  நைட் பார்ட்டி எப்படி இருக்கன்னு பார்க்கதான் வந்தோம்.. இனி இப்படி எல்லாம் வரமாட்டோம்ண்ணா, வீட்ல எல்லாம் சொல்லாதீங்கண்ணா, ப்ளீஸ்ண்ணா..” என்று கெஞ்சியவன், “அதி சொல்லு அதி..” என்று தோழியை பார்க்க, அவளோ  முகத்தில் கிலோ கணக்கில் கெத்தை தேக்கி  வீரப்பாக நின்றிருந்தாள். 
“அதி.. இப்போ எதுக்கு வீராசாமி மாதிரி வெட்டி போஸ் கொடுத்துட்டு இருக்க..? ஒழுங்கா  உன் மாமாங்க கிட்ட  வேண்டாம்ன்னு சொல்லு..” என்று கடுப்பாக கத்தியவனை எரிச்சலுடன் பார்த்த  அதிதி பேச வாய் திறக்கவும், 
“ம்ஹூம்.. கிளம்புங்க, கிளம்புங்க, போற வழியில பேசிக்கோங்க..” என்று இருவரையும் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு அதிதியின் வீடு வந்தனர். எல்லோரும் இறங்கவும்,  
“நான் வரல ஜித்து..”  என்று காருக்குள்ளே இருந்து கொண்ட விஷ்வஜித்தை பார்த்து,  “பழைய மாமியார் வீட்டுக்கு வரலைன்னா பரவாயில்லை, எதிர்கால மாமியார் வீட்டுக்கு வந்தா தான் என்னவாம்..? ரொம்பத்தான் என் மச்சானுக்கு..” என்று மனதுள் நொடித்து கொண்டாள் அதிதி.
இரவு மணி மூன்றை நெருங்கி கொண்டிருக்க, அதிதியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்திய இந்திரஜித், கதவை திறக்க போகும் ஆளுக்காக காத்திருக்க, ராகுலும், அதிதியும் மெதுவாக நகர்ந்து வீட்டின் பின்பக்கம்  செல்ல, அதை உணர்தாலும் கண்டு கொள்ளாமல் தீவிர முகபாவத்துடன் கதவை திறக்கும் நபரை எதிர்ப்பார்த்து நின்றான்.
அவன் எதிர்பார்த்த நபர் கதவை திறந்து, இவனை பார்த்து அதிர்ந்தவர், “வா… வாங்க..  என்ன இந்த நேரத்துல..?”  என்று மெலிதான பதட்டத்துடன் திக்கி கேட்டார். 
“வாங்கன்னு சொல்லிட்டு இப்படி  வழியை மறைச்சு நின்னா என்ன அர்த்தம் Mr. ராமலிங்கம்..?”  என்று அவரை இடித்து கொண்டு உள்ளே சென்று சோபாவில் கால் மேல் கால் போட்டு சட்டமாக அமர்ந்தான். 
அவனின் நள்ளிரவு வருகை ராமலிங்கத்திற்கு எதோ சரியில்லாதாதாக தோன்ற, யோசனையுடன் அவனின் எதிரில் அமர்ந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து வந்த பாரதி,  இந்திரஜித்தை பார்த்து அதிர்ச்சியானவர், 
“தம்பி.. என்ன இந்த நேரத்துல, ஏதாவது பிரச்சனையா..? தருண், தீக்ஷி எப்படி இருக்காங்க..?” என்று  பதட்டத்துடன் கேட்டார். 
“நல்ல இருக்காங்க..” என்று சுருக்கமாக முடித்து விட்டவன்,  “என்ன Mr. லிங்கம் உங்க பார்ட்னர்ஸ் போன் எதுவும் செய்யலையா..?” என்று ராமலிங்கத்தை  பார்த்து  அழுத்தமாக கேட்டான். 
“அவங்க..  அவங்க ஏன் எனக்கு போன் செய்யணும்..?” என்று தொற்றி கொண்ட நடுக்கத்துடன் கேட்டார். 
“பின்ன அவங்க போட்ட பிளான் பிளாப் ஆனா இன்னொரு பார்ட்னருக்கும் சொல்றது தானே முறை..” என்று இகழ்ச்சியாக கேட்டான். 
“பிளான்..  என்ன பிளான்..? எப்போ நடந்துச்சு..?  தருண்..  தருண் சேஃபா இருக்கானா..?” என்று வேர்த்துக்கொட்ட கேட்டவரை, வெறுப்புடன் பார்த்த இந்திரஜித், 
“தருண் மட்டுமில்லை, தீக்ஷிதாவும் ரொம்ப சேஃபா  இருக்கா..!!  இருப்பா..!!!” என்று சொல்ல, புரிந்து கொண்ட பாரதி, கணவனை எரிப்பது போல் பார்த்தார்.
“நான்.. நான் வேண்டாம்ன்னு தான் சொன்னேன், அவங்க தான் எனக்கு.. எனக்கு தெரியாம..” என்று முழுவதுமாய் சொல்ல முடியாமல் திணறியவரை வெறுப்புடன் பார்த்த இந்திரஜித், 
“உங்ககிட்ட இருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும், நீங்க இதுதான்னு அரசு மாமா இறந்ததுக்கு அப்பறமும் எல்லாருமே தெரிஞ்சிக்கிட்டோம், உங்களை நம்பி பிஸ்னஸை மட்டுமில்லாம, சொந்த பொண்ணையும் விட்டுட்டு போன உங்க உயிர் நண்பருக்கு, அந்த நரிங்களோடு சேர்ந்துக்கிட்டு நல்ல கைமாறு செஞ்சிட்டு இருக்கீங்க.. ச்சே..”என்று உச்ச கட்ட வெறுப்பை உமிழ்ந்தவன், 
“எனக்கு வர்ற கோவத்துக்கு உங்களை ஆளே அடையாளம் தெரியாம அழிச்சிடுவேன், ஆனா அண்ணியோட அப்பான்ற ஒரே காரணத்துக்காக நீங்க தப்பிச்சீங்க.. ஆனா  இதுக்கு மேலயும் உங்களை இப்படி விட்டு வச்சா சரிவராது, என்ன செய்யலாம்..? பிஸ்னஸை முடிச்சிரலாம்ன்னா, அதை ஏற்கனவே  தீக்ஷி முடிச்சிட்டா, அப்போ நான் வேறென்னதான் செய்றது..? எதாவது செஞ்சே ஆகணுமே.?” என்று மிக தீவிரமாக யோசித்தவனை, பயத்துடன் பார்த்த ராமலிங்கம், 
“தம்பி.. உண்மையிலே எனக்கும், இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, நான் அவங்களை எல்லாம் விட்டு விலகி வந்துட்டேன்.. என்னை நம்புங்க தம்பி, பாரதி நீயாவது சொல்லு..” என்று மனைவியை பார்த்து கெஞ்சினார். 
“நீங்க எல்லாம் திருந்தவே மாட்டேங்க இல்லை, தீக்ஷி.. தீக்ஷி.. அவளை போய்.. உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு..? நீங்க எல்லாம் மனுஷனே இல்லை..”, என்று சத்தமிட்ட பாரதி, உள்ளே சென்றுவிட, ராமலிங்கம்  இந்திரஜித்தையே “என்ன செய்வானோ..?” என்ற  திகிலுடன் பார்த்தார். 
அவரின் முகத்தை பார்த்து கோவமாக சிரித்தவன்,  “உங்க உயிர் மட்டும் தான் உயிர்,  மத்தவங்க உயிர் எல்லாம் என்ன —..?” என்று தலை முடியை பிடித்து இழுத்து ஊதியவன்,  ராமலிங்கத்தின் பயந்த முகத்தை பார்த்து  ஆத்திரத்துடன் சிரித்தவன்,
“இப்படியே நான் என்ன செய்வேனோங்கிற பயத்துலே கொஞ்ச நாள்  இருங்க..  உங்களை எல்லாம்  அவசரப்பட்டு எதுவும் செய்ய போறதில்லை, கொஞ்ச கொஞ்சமா வச்சு  வெய்ட்டா செய்ய போறேன்..” என்று வெறியில் மின்னும் கண்களோடு மிரட்டியவன், அங்கிருந்து கிளம்பி காருக்கு  வந்தான். 
“என்ன ஜித்து… ஏன் இவ்வளவு கோவம்..?”  என்று அவனின் முகத்தில் தெரிந்த கோவசிவப்பில் கேட்டான் விஷ்வஜித். 
“அப்பா.. இவரை பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கார் விஷூ, அவர் இந்த விஷயம் தெரிஞ்ச உடனே சொன்னார், லிங்கத்துக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்ன்னு, அது சரியா தான் இருக்கு”, 
“இந்த மனுஷனுக்கு அவங்க தீக்ஷியை டார்கெட் செய்றது தெரிஞ்சிருக்கு, ஆனா ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரு, அப்போ அவருக்கு தீக்ஷியை குறிவைக்கிறதை பத்தி கவலை இல்லன்னு தானே அர்த்தமாகுது.. இவரை..” என்று இறுகிய கைகளை கொண்டு, காரில் குத்தியவனை, கீழே இறங்கி சேர்த்தணைத்த விஷ்வஜித், 
“விடு.. ஜித்து, நாம இருக்கிறவரை இவங்களை மாதிரி எத்தனை பேர் வந்தாலும், தீக்ஷியை நெருங்க கூட முடியாது, விடுடா, இவங்களை என்ன செய்யறதுன்னு பொறுமையா யோசிச்சு  செய்யலாம்..” என்று அவனின் கோவத்தை  கட்டுப்படுத்தினான்.  
“இல்லை விஷூ.. அரசு மாமா இருந்தவரை இவரை ஒரு ப்ரண்டாவா நடத்தினாரு, எதோ கூட பிறந்த பிறப்பு மாதிரி இல்லை பார்த்துக்கிட்டாரு, தர்ஷினி அண்ணி இவர் பொண்ணு, ஆனா அரசு மாமாவும், ராணி அத்தையும் தான்  அண்ணி  கடைசி மூச்சு வரை அவங்களை  பார்த்துக்கிட்டங்க”
“அண்ணியை   மட்டுமில்லை நம்ம தருண்.. அவனை இந்த செகண்ட் வரை அவங்கதானே பார்த்துகிறாங்க, இவர் இவ்வளுதான் தெரிஞ்சதுக்கு அப்பறமும் தீக்ஷி கொஞ்சம் கூட யோசிக்காம தருணை எப்படி பார்த்துகிறா.. அவளை போய் எப்படிடா..?”
“அரசு மாமா இறக்கும் போது கூட இவரை நம்பி தானே தீக்ஷியையும், சொத்தையும் விட்டுட்டு போனாரு, ஆனா இவர், அந்த சொத்துக்காக, அந்த நரிங்களோட  சேர்ந்துக்கிட்டு அவளையே..? எப்படிடா இவங்களால இப்படியெல்லாம் செய்ய முடியுது..?”
“ஒரு பொண்ணு தைரியமா எதிர்த்து நின்னு சாதிச்சா இவங்களை மாதிரி ஆட்களால அதை ஏத்துக்கவே முடியறதில்லை, உடனே அவங்களை அழிக்க எத்தனை வழி இருக்கோ அத்தனை வழியையும் இல்லை பார்க்கிறாங்க”
“இவளால எப்படி அந்த நரிங்களை டே அண்ட் நைட்  சமாளிக்க முடியும்..? இதுக்கு தான் நான் முதல்லே  சொன்னேன், பேசாம எல்லா பிஸ்னஸையும்  க்ளோஸ் செஞ்சுடுன்னு.. எங்க என் பேச்சை கேட்டா, கோவமா விறைச்சுட்டு  இல்லை நிக்கிறா..”
“ இவ டென்க்ஷன்லே என்னால நம்ம பிஸ்னஸ்ல  கான்சன்டிரேட் செய்ய முடியல,  நான் இங்க சென்னையில இருந்தா கூட பரவாயில்லை,  இவளை பார்த்துக்க முடியும், ஆனா நம்ம பிஸ்னஸை பார்க்க நான் நாலு இடத்துக்கு ஓடித்தான் ஆகணும்..”
 “சரி விடு அவங்களை நான்  ஹாண்டில்  செஞ்சுக்கிறேன்னா, அதுக்கும் என்னை விடமாட்டேங்கிறா, இல்லை ஒரே நாள்ல அவங்களை எல்லாம் தட்டி தூக்கிருவேன்.. என்ன செய்ய..?” என்று கோவம் கலந்த இயலாமையுடன் பொரிந்து கொண்டிருந்த இந்திரஜித்தை  சமாளித்து அழைத்து சென்றான் விஷ்வஜித்.
“தருண்..   நீ சொல்லியிருந்த கேம்ஸ்க்கான டிஸ்கஷன் தான் மார்னிங் மீட்டிங்,  எந்தெந்த கேம் பாசிபிலிட்டி இருக்குன்னு ஆர்கனைசர்ஸ்கிட்ட டிஸ்கஸ் செஞ்சுட்டு  சொல்றேன்..” என்று காலை உணவின் போது சொன்னாள் தீக்ஷி. 

Advertisement