Advertisement

தீரா காதல் தீ 3
“தீக்ஷி.. நான் கண்டிப்பா வரணுமா…?” என்று அன்றிரவு பங்கஷனுக்கு செல்ல விரும்பாமல் கேட்டான் தருண்.
“போலாம் தருண்.. நாம போலன்னா  கிரி  அண்ணா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் எனக்காக..” என்று தீக்ஷி கேட்க, 
“ம்ம்.. போலாம், என் பிரண்ட்ஸையும் பார்த்து ரொம்ப நாளாச்சு, ஆமா என்ன பங்க்ஷன்..?” என்று தருண் சம்மதத்துடன் கேட்டான். 
“அவங்க கம்பெனியோட சில்வர் ஜூப்ளி செலிபிரேஷன்..” என, 
“ஓகே.. கிளம்பலாம்..”  என்று இருவரும்  கிரியின் பங்க்ஷன்க்கு சென்றனர். கிரிதரன் இவளின் காலேஜ் சீனியர் மட்டுமில்லாது பேமிலி ப்ரண்டுஸும்  கூட… 
“தீக்ஷி.. வா வா..? ஹலோ தருண்.. வந்துட்டியா..? உன் ப்ரண்ட்ஸ் எல்லாம் உன்னை கேட்டுட்டே இருந்தாங்க.. அங்க இருக்காங்க பாரு, ஓடி போய் அவங்களோட ஜாயின் ஆகிக்கோ ஓடு..” என்று இவர்களை சந்தோஷமாக வரவேற்ற “சித்ரா..  கிரிதரனனின் மனைவி” தருணை அவரின் குடும்பத்து பிள்ளைகள் இருக்குமிடம்  அனுப்பிவைத்தவர், 
“தீக்ஷி.. நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட..? பாரு இன்னும் பங்க்ஷனே ஆரம்பிக்கல, அதுக்குள்ள வந்துட்ட..”  என்று அவள்  பங்க்ஷன் முடியும் நேரம்  வந்ததை கிண்டாலாக சொன்ன சித்ராவிற்கு மெலிதான சிரிப்பையே பதிலாக தந்தாள் தீக்ஷி. 
“சரி வா.. முதல்ல மாமா, அத்தையை பார்த்துட்டு வந்துரலாம்..” என்று கிரிதரனனின்  தந்தை கணேஷிடம் அழைத்து சென்றாள். 
“வாம்மா தீக்ஷி.. நல்லா இருக்கியா..?”  என்று இவளின் தலையை பாசாமாக வருடி கேட்டார் கணேஷ். 
“நல்லா இருக்கேன் அங்கிள்.. உங்க ஹெல்த் இப்போ எப்படி இருக்கு..?” என்று இரண்டாம் முறை அட்டேக் வந்திருந்த அவரின் உடல்நிலையை விசாரித்தவளின்,  கையில் ரசமலாய் இருக்கும் பவுலை திணித்தார் “கணேஷின் மனைவி கஸ்தூரி”. 
“இதை சாப்புட்டுகிட்டே உங்க அங்கிளோட பேசு..” என்றவரை மகிழ்ச்சியுடன் ஒரு கையால் அணைத்து கொண்ட தீக்ஷியை தானும் அணைத்து கொண்ட கஸ்தூரிக்கு கண்ணில் கண்ணீர் திரள, அதை பார்த்த கணேஷும், சித்ராவும் அவரை வேண்டாம்.. என்று  சைகை காட்டவும், கண்ணீரை அடக்கி கொண்டு அவளை விடுவித்தார். 
அவர் என்னத்தான் மறைக்க நினைத்தாலும், அவரின் கண்ணீரை கண்டு கொண்டவளின் முகம் மிகவும் இறுகிதான் போனது. அதுவரை அவளிடம் இருந்த மெலிதான சிரிப்பும் மறைந்து போக, கஸ்தூரி அவளை வருத்தத்துடன் பார்த்தார். 
“தீக்ஷிம்மா.. சாரிடா, என்னால ராணியை நினைச்சவுடன்..” என்று பொங்கும் கண்ணீரை அடக்கிகொண்டு அவளின் கையை பிடித்து மன்னிப்பு கேட்டார். 
“ஆன்ட்டி.. ப்ளீஸ்  சாரி எல்லாம் சொல்லாதீங்க, உங்க ப்ரண்டை நீங்க நினைக்கிறதுக்கு என்கிட்ட ஏன் சாரி சொல்றீங்க..? வேண்டாம்..” என்று அவளின் அம்மாவை மூன்றாம் மனிதரை போல  பேசியவளை, தவிப்புடன் பார்த்தனர்.
“ம்மா.. யாரு இது..? உங்க கெஸ்ட்டா..?” என்று தீக்ஷியை சீண்டியபடி வந்த கிரிதரன், அவளின் இறுகிய முகத்தை கவனித்துவிட்டு, வேகமாக திரும்பி அவனின் அம்மாவை தான் பார்த்தான். 
அவரும் கண்ணீர் மறைத்த தடத்துடன் வருத்தத்துடன் இவனை பார்க்கவும், பெரு மூச்சு விட்டவன், வேறெதுவும் பேசாமல், “வா சாப்பிட போலாம்..” என்று தீக்ஷியை சாப்பிட அழைத்தான். 
“ம்ம்.. நீங்க..?” என்று சித்ரா, கணேஷ், கஸ்தூரியை கேட்டாள். 
“நாங்க முதல்லே சாப்பிட்டோம், நீயும், கிரியும் போய் சாப்பிடுங்க, அவனும் இன்னும் சாப்பிடல..” என்று கணேஷ் சொல்லவும், சித்ரா உடன் வர சாப்பிடும் இடத்திற்கு வந்தனர். 
சித்ரா தானே சென்று தீக்ஷிக்கும், கணவனுக்கும் உணவை எடுத்து வந்து கொடுக்க, தீக்ஷி சாப்பிடாமல் தருணை பார்வையால் தேடினாள். “அவன் அவனோட பிரண்ட்ஸோட சாப்பிட்டுட்டு இருக்கான், அங்க பாரு..” என்று அவர்கள் இருக்குமிடத்தை காட்டியவள், “நீ சாப்பிடு..” என்றவள்,  அவர்கள் டேபிளில் அமர்ந்துகொள்ள,  கிரியும், தீக்ஷிதாவும் அமைதியாகவே சாப்பிட்டனர்.
அவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே கிரியின் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவன், உடனே அட்டென்ட் செய்து கொண்டே அங்கிருந்து தனியாக வந்தவன். 
“சொல்லு விஷ்வா..” என, 
“தருணை பார்க்கணும்..” என்று விஷ்வஜித் சொன்னான். 
“சரி..”  என்று மொபைலை எடுத்து கொண்டு தருண் அருகில் சென்று, விஷ்வஜித்திற்கு வீடியோ கால் செய்தவன், தருணை கூப்பிட்டு மொபைலை அவனிடம் கொடுத்தான். 
ஸ்க்ரீனில் தெரிந்த விஷ்வஜித்தை பார்த்த தருண், “ஹாய் ப்பா..” என்று சந்தோஷமாக கூவியவன், நெடு நேரம் விஷ்வாவிடம் பேசிவிட்டே வைத்தான்.  இருவரும் வீடியோ காலில் பேச பேச ஆற்றாமை, ஆதங்கம் பொங்க, அவர்களையே பார்த்திருந்தாள் தீக்ஷிதா. 
மகனிடம் பேசிவிட்டு வைத்தவன், அடுத்து தீக்ஷிதாவின் மொபைலுக்கு அடித்தான். எடுக்க பிடிக்கவில்லை என்றாலும், எடுத்தவள் பேசாமல் அமைதியாகவே இருக்க, “பார்த்து சேஃபா இருங்க..” என்ற மூன்றே வார்த்தை பேசியவன், தீக்ஷியின் பதிலை எதிர்பார்க்காமல் வைத்துவிட்டான்.  
அவனின் வார்த்தையில் தெரிந்த உட்பொருளில் யோசனையானவள்,  அதே சிந்தனையுடன் எல்லோரிடமும் விடைபெற்று கொண்டு தருணுடன்  வீட்டிற்கு கிளம்பினாள். இரவு நடுநிசியை நெருங்க,  அவளே காரை  ஓட்டிக்கொண்டு வந்தவளின் பின்னால், அவளுக்கென ஏற்பாடு செய்ய பட்டிருந்த பாடிகார்ட்ஸ் தனி காரில் பின் தொடர்ந்தனர். 
கார் மெயின் ரோடை கடந்து, கிளை சாலைக்குள்   நுழைய, ஏதோ விபரீதமாக மனதுள் பட்டவுடன், வேகமாக  திரும்பி தருணை பார்த்தாள். அவன் தூக்கத்திற்கு சென்றிருக்க, நிம்மதியான அவளின் கண்கள் கூர்மையாக நாலாபுறமும் அலசிகொண்டிருந்தது. 
அவளுக்கு தோன்றியது போல், அவளின் பின்னால் வந்து கொண்டிருந்த கார்ட்ஸ் கார் நொடியில் காணாமல் போக, தீக்ஷியிடம் தானாகவே ஒரு விறைப்பு உண்டாக, நன்றாக நிமிர்ந்து அமர்ந்தாள். 
அவள் எதிர்பார்த்த நொடி வந்துவிட, அவளின் முன்னால் மூன்று கார்கள் முழு ரோடையும் அடைத்தபடி வேகமாக வந்து கொண்டிருக்க, அவளின்  பின்னால் லாரி ஒன்றும் அவளின் காரை தொடர்ந்து கொண்டிருந்தது. 
அவர்களின் வேகத்திலே, அவர்களின் எண்ணம் புரிந்துவிட, என்ன செய்வதென்று நாலாபுறமும் அலசியவளின் கண்களில் தென்பட்டது  சிறிது முன் இருந்த அந்த ஒன்வே ரோட்.  இவள் காருக்கும், அவர்களின் காருக்கும் இடையில் இருந்தது அந்த ஒன்வே ரோட்.
 “கணம் தப்பினால் மரணம்..”  என்று புரிந்த போதும், நொடியும் யோசிக்காமல், ஆக்சிலேட்டரை அமுக்கியவளின் காரின் வேகம் 150 ஐ தாண்ட, தனக்கு முன்னால் வந்து கொண்டிருந்த  அந்த மூன்று கார்களை  நோக்கி மிக மிக வேகமாக முன்னேறினாள். 
அவளின் திடீர் அதிக வேகத்தில், அந்த மூன்று காரின் வேகம் சிறிது குறைய, அவர்களின் கார்களை உரசும் அளவில், அவர்களுக்கு மிக மிக அருகில் சென்று காரை திருப்பி அந்த ஒன்வே ரோடிற்குள் வண்டியை நுழைத்துவிட்டாள்.  
அவளின் இந்த செயலை எதிர்பார்க்காதவர்கள், வண்டியை திருப்பிக்கொண்டு, ஆளுக்கொரு திசையில் சென்று தீக்ஷியின் காரை கண்டு அவளை நெருங்கும்  சமயம், அவர்களுக்கு முன் திடீரென முளைத்தது ஒரு பார்டியூனர் கார். 
காரை பறக்க வைத்துகொண்டிருந்த தீக்ஷிதா, அவர்கள் தன்னை கண்டுபிடித்து நெருங்கவே, அடுத்து என்ன..? என்ன..? என்று தப்பிக்கும் வழி பார்த்து நாலாபுறமும் கண்ணை சுழற்றியவள், தன்னுடைய காருக்கும், அவர்களின் காருக்கும் நடுவில் முளைத்த பார்டியூனர் காரில் இருந்தவனை  கண்டு கொண்டாள். 
“அவன் இந்திரஜித்..”
அடுத்த நொடி காரின் வேகம் முற்றிலும் குறைந்து சிறிது தூரத்திலே நின்றும் விட்டது. அதுவரை இருந்த எச்சரிக்கை, டென்க்ஷன் மறைந்து கண்மூடி சீட்டிலே சாய்ந்துவிட்டாள். 
அந்த பார்டியூனர் காரில் இருந்த இந்திரஜித்தின் முகம் மிகவும் இறுகி போய் கல் போலே இருக்க,  அந்த மூன்று கார்களை நோக்கி வேகமாக முன்னேறி  கொண்டிருந்தவன் காரின் பிரேக்கை திடீரென அழுத்தினான்.
பிரேக்கின் கட்டுப்பாடு வேகத்தை தாங்கமுடியாமல் கார்  சுழல, சுழலும் காரில் இருந்தவனோ சிறிது கூட அசையாமல் கம்பீரமாக அமர்ந்தபடி காரை தன் கட்டுப்பாட்டிற்குள் மிக சாதாரணமாக கொண்டு வந்தான்.
அந்த மூன்று கார்களில் இருந்தவர்கள், தங்கள் முன் சுழன்ற காரை கண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைக்கும் போதே, ஒரு காரை பொக்ரைன் வண்டி மேல் நோக்கி தூக்கிவிட்டது. இதை பார்த்த மற்ற இரன்டு  கார்களில் இருந்தவர்கள், அவசரமாக தங்களின் காரில் இருந்து இறங்கி நின்றனர். 
அதில் ஒருவன், “இது யாரு..? இங்க என்ன நடக்குது..?” என்று  மற்றவனிடம் கேட்டான். 
“எனக்கும் தெரியல, நம்மோட டார்கெட் அந்த காரில் இருக்கிறவங்கதான்”,  என்று தீக்ஷியின் காரை காட்டி சொன்னான்.
“இப்போ என்ன செய்ய..?” என்று இன்னொருவன் கேட்க, 
“இன்னிக்கு எப்படியாவாவது அந்த கார்ல இருக்கிற டார்கெட்டை முடிச்சிடனும், இல்லை பாஸ் நம்மளை முடிச்சுடுவார்”, 
“சரி.. முடிச்சிடுவோம், ஆனா இவன் குறுக்கால வர்றானே..” பார்டியூனர் காரில் இருந்தவனை பார்த்து மற்றவன் கேட்டான். 
“குறுக்கால வந்தா, இவன் குறுக்கை உடைச்சிட்டு, அவங்களை முடிச்சுட வேண்டியது தான்.. வாங்க..” என்றவனோடு மற்றவர்களும், இந்திரஜித்தை நோக்கி வெறியுடன் ஓடினர். 
தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தவர்களை பார்த்தவாறே மிக நிதானமாக காரிலிருந்து இறங்கி நின்ற இந்திரஜித், போட்டிருந்த கோட்டை கழற்றி பின் சீட்டில் போட்டு விட்டு, டக்இன் செய்திருந்த ஷார்ட்டையும் வெளியே எடுத்து விட்டவன், காஃப் பட்டனை கழற்றி, முழங்கை வரை சட்டையை ஏற்றிவிட்டவாறே, காலை விரித்து நின்றான். 
அவனின் நிதானத்தில், ஓடி வந்தவர்கள் ஆச்சரியப்பட்டாலும், “கொல்வது ஒன்றே எங்கள் குறி..” என்பது போல், ஓடி வந்த வேகத்தில் இந்திரஜித்தை தாக்க நெருங்கவும், முதலில் கையை ஓங்கி கொண்டு வந்தவனின், ஓங்கிய கையை பிடித்து ஒரு திருப்பு திருப்பியவன், தன் ஒரு விரலால், அவனின் கை நரம்பில்  தொடுவர்ம கலை கொண்டு  தட்ட, செயலிழந்து போன அவன், நடுரோட்டிலே பொத்தென விழுந்தான். 
அடுத்து வந்தவனின் காலை ஒதைத்து சாய்த்தவன், அவனின் தொடை நரம்பில், ஒருவிரலை வைத்து வலுவாக அழுத்த, அவனும் சாய்ந்தான். நின்ற இடத்தில இருந்து ஓர் அடி கூட அசையாமல், மிக சாதாரணமாக தாக்கியவனை மற்றவர்கள் பயத்துடன் பார்த்தாலும், வாங்கி கொண்ட காசுக்காக அவனை தாக்க முன்னேறியவர்களை தீர்க்கமாக பார்த்தவன், 
முதலில் வந்தவனின் கழுத்து நரம்பில் அழுத்தி அவனை சாய்த்தவன், அடுத்தவனின் கையை வளைத்து, அவன் இடையின் முக்கிய புள்ளியில் தட்ட, அவனும் அப்படியே ரோட்டில் சாய்ந்தான். 
தொடுவர்ம கலை கொண்டு, எல்லோரையும் நிமிடங்களில் சாய்த்தவன், கையை தூக்கி அசைக்கவும், நான்கைந்து ஆட்கள் வந்து கீழே கிடந்தவர்களை அள்ளிகொண்டு சென்றனர். 
அவர்கள் செல்லவும், தீக்ஷி கார் இருக்குமிடம்  வந்த இந்திரஜித், கார் கண்ணாடியை தட்ட, கண் திறந்து பார்த்த தீக்ஷி கார் கதவை திறந்தவுடன், இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் அழுத்தமாக தீண்டியது. 
“இறங்கு..”  என்றவன், தீக்ஷி இறங்கி காரின் பின் சென்று அமர, டிரைவிங் சீட்டில் அமர்ந்தவன், பக்கத்தில் படுத்திருந்த தருணின் நெற்றியில் இதழ் பதித்து, காரை கிளப்பினான். 
தீக்ஷியின் வீட்டில் கார் நுழைய, நிறுத்தி  இறங்கியவன், தூங்கி கொண்டிருந்த தருணை தூக்கி கொண்டவன், நேரே  சென்று அவனின் ரூமில்  படுக்க வைத்து விட்டு வந்தான். 
“சுப்பு.. டீ..”  என்று குரல் கொடுத்தவன், சோபாவில் அமர்ந்து கண் மூடி கொண்டான். அவனின் இறுகிய முகத்தில் தெரிந்த கோவத்தில், உதட்டை கடித்த தீக்ஷி, கிச்சனுக்குள் சென்றவள்,  
“சுப்பு.. காரசட்னிக்கு எல்லாம் எடுத்து வைங்க..” என்றவாறே தோசை ஊற்ற ஆரம்பித்தாள். “இதை கொண்டு போய் கொடுங்க..” என்று அவரின் கரத்தில் தோசை, காரசட்னி  கொடுக்க, அவரும் கொண்டு வந்தவர், 
“பெரிய தம்பி.. நல்லா இருக்கீங்களா..?” என்று பாசமாக  கேட்டபடி, பிளேட்டை அவனிடம் கொடுத்தார். 
“நல்லா இருக்கேன் சுப்பு.. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க..?” என்று அவர்களின் நலம் விசாரித்தவன், அவர் கொடுத்த தோசையை சட்னியில் தொய்த்து சாப்பிட ஆரம்பித்தான். தீக்ஷி சுட சுட தோசை சுட்டு கொடுக்க கொடுக்க, சுப்பு எடுத்து கொண்டு வந்து பரிமாறினார். 
அவன் சாப்பிட்டு முடிக்கவும், டீயை எடுத்து கொண்டு தானே வந்தவள், அவனின் முன் நீட்ட, நீட்டிய கையை பார்த்தவாறே அதை வாங்கி குடிக்க ஆரம்பித்தவனின் போன் ஒலிக்க, காதிற்கு கொடுத்தான். 
“சார்.. மினிஸ்டர்  பேசிட்டு இருக்கும் போதே நீங்க கிளம்பிட்டதால, கோவமான மினிஸ்டர் ஹோட்டல் திறக்க நமக்கு  பர்மிஷன் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு..” என அவனின் PA சொல்லவும், 
“நமக்கு பெர்மிஷன் கொடுக்க, அவன்  தேவையில்லை, அவனோட ஒரு  விரல் போதும், எப்படி வசதின்னு நம்ம வேலுவை விட்டு கேட்க சொல்லு..” என்றவன் வைத்துவிட, அவனின் பேச்சு பிடிக்காத தீக்ஷி, அமைதியாக இன்னொரு சோபாவில் அமர்ந்து கொண்டாள். 
அவளின் அதிருப்தியை கண்டு கொள்ளாமல், டீயை குடித்து முடித்தவன்,  மொபைலை பார்த்துகொண்டே  ” அவங்களோட  டார்கெட் நீதான்.. என்ன செய்யலாம்..?” என்று மொபைலில் வந்த மெசேஜை பார்த்தபடி கேட்டான். 
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,, அவன் கையிலிருக்கும் மொபைலை வெறித்தவளை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவன்,  ம்ப்ச்.. என்று மொபைலை கீழே வைத்துவிட்டு, அவளை நேருக்கு நேராக பார்த்தவன், 
“எனக்கு உன்னை பார்க்க வேணாம்ன்னு தான் மொபைலை பார்க்கிறேன்னு உனக்கு தெரியாதா..?” என்று கண்ணை சுருக்கி  கோவம் வெளிப்பட கேட்டான். 
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவனையே பார்த்தவளின் பார்வையில், சட்டென எழுந்து அங்கும் இங்கும் நடக்க செய்தவன், அவளின் முன் நின்று “ஏன் இப்படி செஞ்சே..?”  என்று   வேகமாக சென்று காரை ஒன்வே ரோடில் எடுத்த ரிஸ்க்கை கேட்டான். 
அவன் பிளான் செய்தது, லாரிக்கும், அந்த கார்களுக்கும் நடுவில் இருந்த இவளின் காரை எதிர்த்த  ரோடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்ரைன்  வைத்து தூக்குவதே.. 
அதன்பிறகு தாக்க வந்தவர்களை வளைத்து பிடித்து யார் அவர்களை அனுப்பியது..? என்று கண்டுபிடிப்பது ஆகும்..  ஆனால் தீக்ஷி திடீரென வேகத்தை அதிகப்படுத்தி, இந்தளவு ரிஸ்க் எடுப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவிலை.
“எனக்கு அந்த செகண்ட் அதைவிட்டா வேற வழி தெரியல..” என்று தானும் எழுந்து நின்று சொன்ன தீக்ஷியை பார்த்து நெற்றியை தேய்த்து விட்டு கொண்டான். 
“நீ.. உனக்குள்ள இருக்கிற இந்த  உயிர்.. என்னோடது.. அதை பணையம் வைக்க உனக்கு யார் உரிமையை கொடுத்தது..” என்று அவளின் நெஞ்சில் ஒற்றை விரல் கொண்டு அழுத்தி கேட்டவனின் கோவத்தை உணர்ந்தவள், ஏதும் சொல்லாமல் மவுனமாக நின்றாள். 
“சரி நம்மளை விடு.. தருண்.. அவன்தான் விஷுவோட எல்லாமேன்னு உனக்கு தெரியாதா..?” என்று கோவப்பட்டவனிடம், 
“விஷ்வாவுக்கு மட்டுமில்லை எனக்குமே அவன்தான் எல்லாம்..!!” ன்று  உறுதியாக சொன்ன தீக்ஷியை வெறித்தவன், 
“போடி..” என்று அவளை அப்படியே  சோபாவில் தள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

Advertisement