Advertisement

தீரா காதல் தீ 1
“தீக்ஷிதா.. இன்னிக்கு போர்ட் மீட்டிங் எப்படிம்மா  போச்சு..? ஒன்னும் பிரச்சனையில்லையே..?”  என்று ராமலிங்கம் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார். 
“ம்ம்.. போச்சு, பார்த்துக்கலாம் அங்கிள்..” என்று சுருக்கமாக முடித்துவிட்டாள் தீக்ஷி. 
“ஓகே.. தருண் எப்படி இருக்கான்..? ஊட்டியிலிருந்து வந்துட்டானா..?” என்று பேரனை பற்றி விசாரித்தார். 
“நல்லாயிருக்கான் அங்கிள், நேத்துதான் வந்தான்”. 
“ஓஹ்.. வந்துட்டானா, அப்போ நானும் உங்க அத்தையும் இன்னிக்கு ஈவினிங் வந்து அவனை பார்க்கிறோம்”. 
“இல்லை அங்கிள் நாங்க இன்னிக்கு ஈவினிங் ஷாப்பிங் போகப்போறோம்..” என்று அவர் வருவதை விரும்பாமல் தடுத்துவிட பார்த்தாள். 
“சரி எங்க ஷாப்பிங்ன்னு சொல்லுங்க, அங்கேயே வந்து பார்த்துகிறோம்..”  என்று அவள் விருப்பமின்மையை புரிந்தும் வினயமாக கேட்டார். அவரின் குணம் தெரிந்து  நக்கலாக சிரித்தவள், 
“நாங்க இன்னும்  எங்க போகறதுன்னு டிசைட் செய்யல அங்கிள், இனி வீட்டுக்கு போயி தருண்கிட்ட பேசிட்டுதான் டிசைட் செய்யணும், சோ..”  என்று முடித்தாள். 
“ஓகே.. தீக்ஷி பார்க்கலாம்..” என்று அவரும் வைத்துவிட்டாலும்,  இன்று அவர் நினைத்தபடி தருணை பார்க்காமல் விடமாட்டார் என்று நன்றாக புரிந்தவளாதலால் தோளை குலுக்கியபடி வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். 
சென்னையில் இருக்கும் மயிலாப்பூர் தான் தீக்ஷிதாவின் இருப்பிடம்,   “AAR டவர்..” தான் இவர்களின் மெயின் ஆபிஸ், தொழில் என்று பார்த்தால், மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் முதல் கொண்டு, பெரிய துணிக்கடைகள், நகை கடைகள்  என்று பல பெரிய பேர் சொல்லும் அளவிற்கு கடைகள் கைவசம் உள்ளது.  
இதெல்லாம் அவர்கள் தாத்தா காலத்திலுருந்து படிப்படியாக வளர்ந்த வளர்ச்சி இவர்களுடையது. இதில் இப்போது தனியாக இருக்கும் இவளை ஏமாற்ற  ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்க, அவர்களிடம் இருந்து தங்களின் தொழிலை பாதுகாப்பதே ஒவ்வொரு நொடியும் பெரிய சவாலாக எதிர்கொண்டு மனம் தளராமல் சமாளிப்பவள் தான் தீக்ஷிதா. 
“தருண்.. தருண்..”  என்று வீட்டிற்குள் வந்தவுடன் அவனை தேடி அவனின் ரூமிற்கு சென்றாள் தீக்ஷிதா. அவள் கூப்பிட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் டிவியை வெறித்தவாறே அமர்ந்திருந்தான் 9  வயது தருண். 
அவனின் வெறித்த பார்வையை கண்டு உள்ளுக்குள் வலித்தாலும், “என்ன தருண்  கூப்பிட்டிட்டு இருக்கேனே.. பதில் சொல்ல மாட்டியா..?” என்று மெலிதான அதட்டலோடு கேட்டவாறே அவனின் பக்கத்தில் அமர்ந்தாள். 
“ம்ப்ச்..” என்று உச்சுக்கொட்டிய தருண்  உடனடியாக அவளிடமிருந்து தள்ளி அமர்ந்தான். அவனின் உடனடி விலகளில், தானும் விடாமல் அவனை நெருங்கி அமர்ந்தவள், அவன் விலகாமல் இருக்க, அவனின் தோளில் கை போட்டு தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டாள். 
முகத்தில் தோணித்த கோவத்தோடு அவளின் அணைப்பிலிருந்து விலக முயற்சி செய்த தருணை, “ஏய் ரொம்ப ஓவரா பண்ணாதடா..” என்றாள். 
“என்னை விடு தீக்ஷி..”, என்று கத்திய தருண், வலுவாக அவளிடமிருந்து விலகி அமர்ந்தவன், “எத்தனை டைம் சொல்லியிருக்கேன், டோன்ட் டச் மீ.. இ ஹேட் யூ..”  என்று கோவம் கொண்டு கத்தியவன், அவளை கண்டு கொள்ளாமல் மறுபடியும் டிவியை வெறிக்க ஆரம்பித்துவிட்டான். 
“நானும் எத்தனை டைம் உன்கிட்ட சொல்லியிருக்கேன், என்கிட்ட இந்த மாதிரி ரூடா பீகேவ் செய்யாதேன்னு..” என்று அவனை போல் கோவம் கொண்டு கத்தியவள், தானும்  டிவியை வெறிக்க ஆரம்பித்துவிட்டாள்.  
அவளுக்குள்ளும் மலையளவு வேதனை, துயரம், ஏக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் கடுகளவு கூட தன் துயரத்தை  வெளிக்காட்ட கூடா நிலையில் இருபவளிடம் தருணின் இத்தகைய பேச்சு வலிக்காமல் இல்லை. 
“எனக்கு இவனை விட்டால் வேறு யார் இருக்கா..? என்னை பிடிக்காதுன்னு என்கிட்டேயே தினம் தினம் சொல்றான், அது எனக்கு எவ்வளவு வேதனையை  கொடுக்கும்ன்னு இவனுக்கு கொஞ்சமாவது தெரியுதா..?”
“ இதுல என்னை தொட கூட விடறதில்லை, எப்போ பாரு டோன்ட் டச் மீ, டோன்ட் டச் மீ.. இதுதான், இவன் பிறந்தப்போ நான்தான்  முதன்முதலா இவனை கையில வாங்கினேன், என்னை போய் தொட கூடாதுன்னு சொல்றான்..” என்ற ஆதங்கத்தோடு அமர்ந்திருந்தாள். 
அவளின் சிடுசிடு முகம் பார்த்த தருண், அலட்சியமாக தோளை குலுக்கியபடி சேனலை மாற்றினான். “டேய்.. எதுக்குடா மாத்தின..? எனக்கு அந்த படம் தான் வேணும்”, என்று கோவமாக கத்திய தீக்ஷி பாய்ந்து அவனிடமிருந்து ரிமோட்டை பிடுங்க பார்த்தாள். 
தருணும் கொடுக்க மாட்டேன் என்பதுபோல் ரிமோட்டை விடாமல் இறுகபற்றி கொள்ள, சிறிது நேரம் இருவரும் கட்டிலில் உருண்டு புரண்டு சண்டை போட்டனர். இறுதியில் எப்போதும்போல் இருவரின் சண்டையில் ரிமோட் பார்ட்டாக பார்ட்டாக உடைந்தபிறகே அடங்கி அமர்ந்தனர். மூச்சுவாங்கி கொண்டே அமர்ந்திருந்த இருவரும், மற்றவரை முறைக்க தவறவில்லை. 
“கண்ணு.. கண்ணு, சாப்பாடு ரெடி..” என்று கதவுக்கு வெளியே இருந்து சுப்பு கூப்பிடவும்,  “இதோ வரோம் சுப்பு..”  என்று இருவரும் சேர்ந்தே குரல் கொடுத்தாலும்,  முறைப்பு மட்டும் மாறாமல் தான் சாப்பிட இறங்கி வந்தனர். 
“சுப்பு.. எங்க என் பாஸ்தா..?” என்று தட்டில் வைத்த சாதத்தை பார்த்து, முகம் சுழித்து கேட்டான் தருண். 
சுப்பு பதில் சொல்லாமல் தயக்கத்துடன் தீக்ஷிதாவை பார்க்க, புரிந்து கொண்ட தருண், ஆத்திரமாக தட்டை தூக்கி அடித்தான். 
“தருண்.. வாட் ஈஸ் திஸ்..? சாதம் இருக்கிற தட்டை தூக்கி எரியற.. அன்னலக்ஷ்மிக்கு மரியாதை கொடுக்கணும்ன்னு  ராணிம்மா உனக்கு சொல்லி கொடுக்கல..” என்று அதட்டலோடு கேட்டாள். 
ராணி பெயரை சொன்னவுடன் கண்ணில் நீர் உற்பத்தியாக ஆத்திரத்துடன் அதை துடைத்த  தருண், “அவங்க யார் பேரையும் என் முன்னாடி சொல்லாத..” என்று கலங்கிய குரலில் சொன்னவன், வேகமாக வெளியே தோட்டத்திற்கு சென்றான். 
அவன் கண்ணில் கண்ணீர் கண்ட நிமிடம், தானும் கலங்கிய தீக்ஷி, வெளியே தன் கலக்கத்தை காட்டாமல் எப்போதும் போல் நிமிர்ந்து நின்றவள், “சுப்பு அவன் கேட்டதை செஞ்சு கொடுத்துடுங்க..” என்று சொன்னவள், சாப்பிடாமல் தன் ரூமிற்கு கிளம்பிவிட்டாள்.  
தன்னுடைய ரூமிற்கு வந்தவள், அங்கிருக்கும் ஜன்னலில் இருந்து தோட்டதில் இருக்கும் தருணை பார்த்தாள். ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி அவளின் ரூம் ஜன்னலை நிமிர்ந்து பார்த்த தருண், முறைப்புடன் முகம் திருப்பி கொண்டான்.  
அவனின் முகம் திருப்பலில் முறுவல் துளிர, அவனையே மெலிதான சிரிப்புடன் பார்த்தாள். சுப்பு வந்து அவனை சாப்பிட கூப்பிடவும், மேலே நிமிர்ந்து பார்த்த தருண், எதோ சுப்புவிடம் கேட்டவாறே எழுந்து உள்ளே வந்தான். 
தீக்ஷி எதிர்பார்த்தது போல, சில நொடிகளிலே அவளின் ரூம்கதவை  தட்டியபடி சுப்பு  வந்து நின்றார். “கண்ணு.. நீயும்  சாப்பிட வரணுமாம், தருண்  கண்ணு சாப்பிடாமல் உட்காந்திருக்கு..” என்று கூப்பிட்டார். 
“வாங்க போகலாம்..” என்றவாறே அவருடன் சாப்பிட வந்தவள். அமைதியாக தருணுக்கு எதிரில் இருக்கும் சேரில் அமர்ந்தாலே தவிர சாப்பிடவில்லை. அவள் சாப்பிடாமல் இருக்க, கையில் எடுத்த பாஸ்தாவை மறுப்படியும் தட்டிலே போட்டவன், 
“நீ என்னை ரொம்ப டார்ச்சர் செய்ற. ஐ ஹேட் யூ..” என்று எப்போதும் போல் சொன்னவன், வேறு தட்டை எடுத்துவைத்து தானே சாதம் போட்டு சாப்பிட ஆரம்பித்தான். 
அவனின் செயலில் உள்ளுக்குள் நெகிழ்ந்தவள், தானும் தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தவள், இடையிடையே தருணுக்கு தேவையானதை கவனித்து பரிமாற, முகம் சுழித்து தன் விருப்பமின்மையை காட்டினாலும், அவள் பரிமாறியதை சாப்பிடத்தான் செய்தான் தருண்.
“தருண்.. ஈவினிங் என்ன பிளான்..? எங்கேயாவது போகலாமா..?” என்று மதிய உணவு முடியவும், தீக்ஷி கேட்டாள். 
“யாரு..? நீ..? என்னை வெளியே கூட்டிட்டு போற, ஜோக் பண்ணாத  தீக்ஷி”, என்று  எதோ ஜோக் சொன்னதுபோல் சிரித்து கொண்டே கேட்டான். 
“தருண் ஐயம் சீரியஸ்.. நாம கண்டிப்பா இன்னிக்கு வெளியே போறோம்..”என்று உறுதியுடன் சொன்னாள். 
“நம்பிட்டேன்.. இதேபோல நிறையயய  முறை ஏமாந்திருக்கேன், இன்னிக்கு நோ..” என்று நக்கலாக சொன்னவனை முறைத்தவள். 
“தருண்.. நான் உண்மையை தான் சொல்றேன், ஈவினிங் நாம படத்துக்கு போலாம், என்ன படம்ன்னு நீயே டிசைட் செஞ்சுட்டு எனக்கு சொல்லு..” என்று டேபை அவனிடம் கொடுத்தாள். 
அவள் கொடுத்த டேபை வாங்காமல்  சந்தேகமாக பார்த்தவனின் கையில் டேபை திணித்தவள், “நாம இன்னிக்கு போறோம், சீக்கிரம் சர்ச் செஞ்சுட்டு சொல்லு..”, என்று தன்னுடைய மொபைலில் ஆழ்ந்துவிட்டாள். 
தருணும் அவளின் உறுதியில் முகம் மலர வேகமாக என்ன படம், என்ன தியேட்டர் என்று சர்ச் செய்து, அவளிடம் சொல்லவும், “டன்.. நல்ல மூவி தான், போகலாம், ஷார்ப்பா 5″ 0 கிளாக் கிளம்பறோம்..”, என்று சொன்னவளின் மொபைல் ஒலிக்க காதுக்கு கொடுத்தாள். 
“மேம்..  நகை கடையில ஒரு ப்ராபளம், நாளைக்கு அக்ஷ்ய திருதிக்குன்னு  ஆர்டர் கொடுத்திருந்த நகையை எடுத்துட்டு வர்ற வழியில போலீஸ் பிடிச்சு வச்சிருக்காங்க, கேட்டா ஏதோதோ காரணம் சொல்ராங்க..”,  என்று  மேனேஜர் போன் செய்தார். 
அவர் சொல்லவும், தருணிடம் இருந்து தன் முகஉணர்ச்சிகளை கவனமாக மறைத்தவள், “நான் வரேன்..”  என்று  வைத்தாள். 
“என்ன கிளம்பணுமா..?” என்று உர்ரென்ற முகத்துடன் கேட்டான் தருண். 
“போகணும் தான், பட்  அஸ் பர் பிளான், 5″0 கிளார்க் கண்டிப்பா கிளம்பிடுவோம்..” என்று அவனின் தலையில் உள்ள முடியை களைத்து சொன்னாள். 
“ச்சு..”  என்று அவளின் கையை கோபத்துடன் தட்டிவிட்டவன், “எப்படியும் இன்னிக்கு போகபோறதில்லை, நான் கேம் விளையாடபோறேன்..” என்றவன் அவனின் ரூமிற்கு சென்று கதவை ஓங்கி அடித்து சாத்தினான்.
“இவனுக்ககாவது இன்று கண்டிப்பாக போகவேண்டும்..” என்ற உறுதியுடன் கம்பெனிக்கு சென்றவளின் நேரம் அவளின் கட்டுபாட்டில் இல்லாமல் போனது. அங்கு சென்றவுடன் டென்க்ஷன் அவளை இழுத்துக்கொண்ட போதும், மனதில் ஒருபுறம் தருண்  இல்லாமல் இல்லை. 
அதனாலே அவ்வளவு டென்க்ஷனிலும்  இருமுறை அவனுக்கு போன் செய்தபோதும் அவன் எடுக்கவில்லை, போலீசிடம் இருந்து பல வழிகளில் போராடி நகையை மீட்டு கடைக்கு கொண்டு சேர்த்துவிட்டு  இரவு போல வீட்டிற்கு வந்தவள், வெளியே இருந்த காரை பார்த்து கொதித்தாலும், அமைதியாகவே உள்ளே சென்றாள். 
“வாங்க அங்கிள், வாங்க ஆண்ட்டி..” என்று சோபாவில் சட்டமாக அமர்ந்திருந்த ராமலிங்கத்தையும், அவரின் மனைவி பாரதியையும் வரவேற்றவள், எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவளின் பார்வை, ராமலிங்கத்தின் பக்கத்தில் ஒவ்வாமையுடன் அமர்ந்திருந்த தருண்  மேல்தான் இருந்தது.  
அவளின் வரவேற்பிற்கு தலையை  அசைத்த பாரதி,  இவளை பார்த்தும் கோவத்தோடு முகம் திருப்பி கொண்டு அமர்ந்திருந்த தருணிடம், “வா.. தீக்ஷிக்கு ஸ்வீட் கொண்டுவரலாம்..” என்று அவனை  உள்ளே அழைத்து கொண்டு சென்றார். 
அவர்கள் செல்லவும், உதடு வளைய சிரித்த ராமலிங்கம், என்னம்மா.. நகை கடையில  எதோ பிரச்சனை போல, பாவம் இன்னிக்கு பேரனோட ஷாப்பிங்கும் போக முடியல..” என்று பரிதாபம் கொள்வது  போல கேட்டார். 
“எங்க நகை கடையில  வர்ற பிரச்சனை உங்களுக்கு தெரியாம போகுமா  அங்கிள்..?”  அவரின் போலி பரிதாபத்தில் அவரையே தீர்க்காமாக பார்த்த தீக்ஷிதா கேட்டாள். 
“ஹாஹா.. அது என்னமோ சரிதான் தீக்ஷி, உங்களுக்கு வர்ற பிரச்சனை எனக்கு தெரியாம போகாதுதான்..”  என்று பெருமையாக சிரித்தார். அவரின் சிரிப்பை வெறுப்பு கலந்த நக்கலுடன்  பார்த்தவள், 
“அதேதான் நானும் சொல்றேன் அங்கிள், எப்படி இன்னிக்கு எங்களுக்கு வந்த  பிரச்சனை உங்களுக்கு தெரியுமோ..? அப்படி நாளைக்கு உங்களுக்கு வரபோற பிரச்சனையும் எனக்கு தெரியத்தான் செய்யுது, என்ன செய்ய..?” என்று கேட்கவே, முகம் வெளுத்த ராமலிங்கம் அவளை சந்தேகத்தோடு பார்த்தார். 
“ம்ஹூம்.. சந்தேகமா எல்லாம் பார்க்காதீங்க அங்கிள், நான் உண்மையாதான்  சொல்றேன், நாளைக்கு உங்களுக்கு பிரச்சனை வரப்போகுதுன்னு எனக்கு கண்டிப்பா தெரியுமே..” என்று அழுத்தமாக சொன்னாள். அவளின் அழுத்தத்தில், அவரின்  ரத்தம் அழுத்தம் அதிகமாக, அடுத்த ஐந்தே நிமிடத்தில் மனைவியுடன் கிளம்பிவிட்டார். 
“என்ன அங்கிள், பேரனோட டைம் ஸ்பென்ட் செய்யலையா..? உடனே கிளம்பிடீங்க..”  என்று நக்கலாக கேட்டாள். அவளின் நக்கலில் பதட்டபட்ட ராமலிங்கத்தையும், அவளையும்  பார்த்த புரிந்து கொண்ட பாரதி, எதுவும் பேசாமல் அவளின் தலையில் கைவைத்து தடவியவாறே, 
“நான் வர்றேண்டா, உனக்கும், தருணுக்கும்  பிடிச்ச ஸ்வீட் செஞ்சிருக்கேன்,  சாப்பிடுங்க..”  என்று சொன்னார். 
அவரின் பாசமான தடவலில் ஒரு நொடி இளகியவள், அடுத்த நொடி அந்த இளக்கத்தை மறைத்து, அவரை வேற்றாளாக பார்த்தவள், “கிளம்புங்க..” என்று கை குவித்து அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
சோபாவில் முகம் தூக்கியவாறே அமர்ந்திருந்த தருணை பார்த்து பெருமூச்சு விட்டவளின் முகம் பிரகாசமாக,  “தருண்.. வீ வில் டூ ஒன்திங்,   ECRல  நமக்கு பிடிச்ச ஒரு லாங் டிரைவ் போலாமா..?” என்று கேட்டாள். 
“போனவரைக்கும் போதும்..”  என்று ஏமாற்றத்துடன் சொன்னவனின் கையை பிடித்து ஆறுதலாக தட்டி கொடுத்தவள். 
“ப்ளீஸ் தருண்,  போலாம்..”  என்று அவனை சமாதானம் செய்து ஒருவழியாக காரில் கிளம்பியும் விட்டனர். 
இருவருக்குமே காரில் லாங் டிரைவ் போவது மிகவும் பிடிக்கும், அதுவும் முன் சீட்டில் உட்கார எப்போதும்  இருவருக்குள் பெரிய சண்டைதான். இவர்களை சமதானப்படுத்தவே வீட்டினருக்கு பெரும் பாடாக இருக்கும். 
அதையெல்லாம் நினைத்து தருண்  கண்கள் கலங்க அமர்ந்திருக்க, தீக்ஷி உயிர் துடிக்க கார் ஒட்டி கொண்டிருந்தாள். ஒரே சமயத்தில் எல்லோரையும் இழந்த துயரம், இத்தனை வருடங்கள்  கடந்தும் குறையாமல்  இன்றும் அதே வலியை, வேதனையை கொடுக்க, தங்களுக்கு மிகவும் பிடித்த லாங் ட்ரைவையும் மறந்து இறந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் மாறி மாறி அமைதியாகவே பயணித்தனர். 
“தருண்.. ஐஸ்கிரீம் சாப்பிடலாமா..?” என்று அவனின் கண்ணீர் கண்டு, தன் வேதனையை மறைத்து முகம் மலர கேட்டாள். 
“ம்ஹூம்.. வேண்டாம் தீக்ஷி”, என்று உடல் இறுகி போய் அமர்ந்திருந்தவனின் உடல் இறுக்கத்தை பார்த்து காரை ஓரமாக நிறுத்தி, இழுத்து அணைத்து கொண்டாள். 
“நோ.. நோ..  டோன்ட் டச் மீ, ஐ செட்..  டோன்ட் டச் மீ..” என்று அவளை விலக்கி தள்ளியவனை, விடாமல் இறுக்கி அணைத்து கொண்டவள், ஆறுதலாக முதுகை தடவி கொடுத்தாள். 
அவளின் அணைப்பிலிருந்து விலக போராடியவன், முடியாமல், அவளை கட்டி கொண்டு அழுது தீர்த்தான்.
“தீக்ஷி.. என்னை விட்டு போன அவங்களை எல்லாம் நினைச்சு வர்ற இந்த அழுகை எனக்கு பிடிக்கல, இந்த  ஸ்டுபிட் அழுகையை எப்படி நிறுத்தறது..? எனக்கு இந்த அழுகை வேண்டாம், இந்த கண்ணுல எப்போ பாரு தண்ணீ வந்துட்டே இருக்கு, எனக்கு இது வர வேண்டாம், இ ஹேட் டியர்ஸ்..”  என்று முரட்டுத்தனத்துடன் கண்ணில் பெருகும் நீரை அழுத்தி துடைத்தவாறே  கேட்டான்.   
அவனின் கேள்வியில் கண்ணில் கண்ணீர் வரப்பார்க்க, ஒருவித வைராக்கியத்துடன் கண்ணீரை அடக்கியவள், அவனை சமாதானம் செய்து, ஒருகையால் அவனை  தன் தோளோடு சேர்த்து  அணைத்தவாறே  காரை ஸ்டார் செய்தாள். 
“தீக்ஷி.. எனக்கு அந்த வீட்டுக்கு போக வேண்டாம், இப்படியே நாம எங்கேயாவது  போயிட்டே இருக்கலாம்..”  என்று தருண்  கேட்கவும், 
“அப்படி செய்தால் தான் என்ன..? எங்களுக்காக காத்திருக்க யார் இருக்கா..?” என்ற விரக்தி உண்டான நொடியே ஒருவனின் முகம் மனக்கண்ணில் ஒளிர்ந்து,  
“நான் இல்லையா..?”  என்ற சிரிப்பை சிந்த முகம் கடுக்க  அவனின் கேள்வியை புறந்தள்ளியவள்  தருண்  கேட்டு கொண்டது போலே விடிய விடிய இலக்கின்றி ஓட்ட ஆரம்பித்தாள்.
வாழா என் வாழ்வை வாழவே..!!! 
தாளாமல் மேலே போகிறேன்..!!! 
தீரா உள்ளூற்றை தீண்டவே..!!! 
இன்றே இங்கே மீள்கிறேன்..!!! 
இன்றே இங்கே ஆழ்கிறேன்..!!!

Advertisement