Advertisement

குடை 8:
“இதுக்கு முன்னாடி என்னை எங்கையாவது பார்த்திருக்கியா..? என்றான் அஸ்வினியைப் பார்த்து.
“என்ன சார் விளையாடுறிங்களா..? இவ்வளவு நேரம் ட்ராவல் பண்ணியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது நீங்க யாருன்னு..! அது கூட நீங்களா சொல்லலை.அப்பறம் எப்படி உங்களைப் பார்த்திருப்பேன்..? என்றாள்.
“கரெக்ட்டு தான் இல்ல..! என்றவன் யோசிக்க,
“ஆனா உங்களைப் பார்க்கனும்ன்னு எங்க ஆபீஸ்லையே நிறையே பேர் ஆசைப்பட்டிருக்காங்க சார்..! என்றாள்.
“நீ எந்த கம்பெனில வேலை பார்த்த..? என்றான்.
“கிரீன் டெக் என்றாள்.
அவள் அந்த பெயரை சொன்னவுடன், அவனுக்குள் ஏதோ ஒன்று ஆகியது. அந்த பேரே மீண்டும், மீண்டும் அவனுக்குள் வர..
“என்னாச்சு சார்..? உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே..? உங்க அளவுக்கு இல்லைன்னாலும் அதுவும் பேமஸான கம்பெனி தான்..” என்றாள்.
“ஐ நோ..! என்றபடி அமைதியானான்.
“என்னாச்சு எதுக்கு இப்படி அமைதி ஆகிட்டார்..? என்றான் விகாஸ்.
“நான் வொர்க் பண்ண கம்பெனி நேம் கேட்டார், சொன்னேன். அப்பறம் அமைதியாகிட்டார்..! என்று உதட்டைப் பிதுக்கினாள் அஸ்வினி.
அதே நேரம் அங்கு ஏசி பெட்டியில்….
மித்ரனை அடுத்து எங்கு, எப்படி அடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் லக்சனா.
மித்ரனின் பாட்டி, ராணியம்மாள் அவளின் கைக்குள் இருக்கும் வரை, அவளை யாரும் அசைக்கக் கூட முடியாது என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள் லக்சனா. அதை அவள் அறியாமல் போனது தான் பாவம்.
மித்ரனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் அவள் மனம் இப்படி கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.
அவள் இதே ரயிலில் அவனைப் பின் தொடர்ந்து வருவது அவனுக்குத் தெரிய வேண்டும் என்று தான், அவன் ஏறிய பெட்டியை அறிந்து, அங்கு சென்று அவனை பயப்படுத்த எண்ணினாள்.
அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் சர்வ சாதரணமாக அஸ்வினியுடன் சேர்ந்து சாப்பிட, அதற்கு  மேல் அந்த நாடகத்தைப் பார்க்க முடியாமல் வந்து விட்டாள்.
மித்ரனிடம் விவாகரத்து வாங்க அவளுக்குத் துளியும் விருப்பம் இல்லை. ஆனால் மித்ரனோ அவளை லேசில் விடவில்லை. எதை இழந்தாலும், அவளை டைவேர்ஸ் செய்வதில் உறுதியாக இருந்தான்.
ஒரு பெண்ணிடம் ஏமாந்து போனதை அவனால் தாங்க முடியவில்லை. அதனால் தான் ராணியம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு கிளம்பி வந்தான்.
“அடாது கருப்பு விடாமல் துரத்தும்.. என்பதைப் போல, இப்போதும் அவனைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் லக்சனா.
அங்கே விகாஸிடம்…
“இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம சென்ட்ரல் போய்டுவோம்..! என்றாள் அஸ்வினி கொஞ்சம் சோகமாக.
“அதுக்காக ட்ரெயின்ல குடி இருக்கவா முடியும்..? என்று விகாஸ் கேட்டு வைக்க,
“உனக்கு ஒரு பிரண்ட பிரியற கவலை இருக்கா..? என்றாள்.
“நாம எங்க பிரியறோம்..? அதான் போன் நம்பர் இருக்கே..! தினமும் பேசலாம். விருப்பப்பட்டா நீ என் வீட்டுக்கு வரலாம். நான் உன் வீட்டுக்கு வரலாம்..! என்றான் விகாஸ்.
“இது  நல்லா இருக்கே..! என்று அவள் தலையை ஆட்ட. மித்ரனுக்கு தான் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல் வந்தது.
“சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு முன்னாடி எந்த ஸ்டேஷன்..?”””””என்றான்.
“பெரம்பூர் சார்..! என்றாள் அஸ்வினி.
“நான் அங்கயே இறங்கிக்கிறேன்..! என்றான்.
“என்னாச்சு சார்..! நீங்க அங்க இறங்கி தான் போகனுமா..? என்றாள்.
அவளை எரிச்சலுடன் பார்த்தவன்..ஆமா என்றான்.
“ஓகே..! என்று அவள் தோள்களைக் குலுக்க, விகாசிற்கு கோபமாய் வந்தது. இவளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று எண்ணினான் போலும்.
அதற்கு பிறகு அவர்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. கிளம்பும் போது தலையை மட்டும் அசைத்தான் மித்ரன். அவர்களும் பதிலுக்கு தலையை அசைக்க, உடனே இறங்கியவன் காற்றில் கரைந்ததைப் போல  கூட்டத்தில் கரைந்தான்.
“என்ன விகாஸ்..! அவர் போறப்ப இப்படி டக்குன்னு பேசாம கூட கிளம்பிட்டார்..! என்றாள் அஸ்வினி.
“ம்ம்..! அவருக்கு என்ன பிரச்சனைன்னு அவரைக் கேட்டா தான தெரியும். என்னைக் கேட்டா எனக்கு எப்படி தெரியும்..? என்றான் விகாஸ் சற்று கோபமாக.
“ஹேய் உனக்கு என்ன ஆச்சு..? என்று அவள் கேட்க,
“ஒன்னும் ஆகலைமா தாயே..? என்றபடி அவனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“இப்ப இவன் எதுக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சிருக்கான்..? என்று மனதில் எண்ணியவள், வார்த்தையாகவும் கேட்டுவிட,
“இவ்வளவு நேரம் வரைக்கும் மித்ரன் சார் இருந்தார். அதனால் உன்னோட கண்ணுக்கு நான் தெரியலை. இப்போ அவர் போன உடனே என்னை வம்புக்கு இழுக்குற..? என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் புரியாமல் திகைத்தவள், சில நிமிடங்களில் வாய்விட்டு சிரிக்கத் தொடங்க,
“நான் சொன்னது அவ்வளவு பெரிய காமெடியா என்ன? இப்படி சிரிக்குற..? என்றான் அவளையே பார்த்துக் கொண்டு.
“நீ இன்னும் மாறவே இல்ல விகாஸ். அதே பொசிசிவ்னெஸ்..! ஆனா மாடல் ஆகிட்டன்னு பேரு..! என்று சொல்ல,
“அதைத்தான் நான் சொல்றேன். நான் மாறலை. நீ மாறிட்ட..! என்றான்.
“அப்படி எல்லாம் இல்லை. ஆனா மித்ரன் சாரை கொஞ்சம் சைட் அடிச்சேன்..! உண்மைதான்..! என்றாள் வெளிப்படையாக.
“இது உனக்கே நல்லாயிருக்கா..? என்றான்.
“சைட் அடிக்கிறது நல்லாத்தான் இருக்கு..! என்றாள்.
அவன் அவளை முறைக்கவும்,
“இதப்பாருடா, நீ கூட தான் அந்த அழகியை சைட் அடிச்ச. நான் ஏதாவது சொன்னேனா..? மித்ரன் சார் இத்தனைக்கும் அவ ஹஸ்பண்ட். அவர்கூட உன்னைய ஒன்னும் சொல்லலையே..? என்று சிரிக்க,
“சரி..! இந்த பேச்சை இதோட விட்டுடுவோம்..! என்று அவன் ஜகா வாங்க,
“அப்படி வா வழிக்கு..! என்றாள்.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க, அங்கு மித்ரனோ தன்னுடைய தேடலைத் தொடங்கியிருந்தான்.கொஞ்சம் பழக்கப்பட்ட ஊர் என்றாலும், இன்றைய வளர்ச்சி அவனை பிரமிக்க வைத்தது. மும்பையில் காணாத வளர்ச்சியா..? இருந்தாலும் சென்னையைப் பார்க்கும் போது, அவனை அறியாமல் அவனுக்குள் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம்.
அனைத்தும் புதிதாய் தெரிய, தேடி வந்த தேடல் முடியுமா..? என்றால் அவனிடம் பதில் இல்லை.
வாடகைக் காரில் பயணம் செய்து கொண்டிருந்த அவனின் நினைவுகள், பின்னோக்கி சென்றது.
அன்றைக்கு நடந்த ஒரு பிரபல தொழில் அதிபரின் மகன் கல்யாணத்தின் ரிஷப்ஷனில் கலந்து கொண்ட பின்பு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் மித்ரன்.
அவனுடைய செல்போன் விடாமல் ஒலிக்க, எரிச்சலுடன் ப்ளூடூத்தை ஆன் செய்தவன் ‘ஹலோ என்று சொல்வதற்கு முன்பாகவே, அந்த குரல் கத்த ஆரம்பித்தது.
“ஏய்..! எருமை மாடே..! எங்கடி இருக்க..? நேரம் என்ன ஆகுது..? இதென்ன சென்னைன்னு மனசுல நினைப்பா..? இன்னும் பிளாட்க்கு வராம இருக்க…? இன்னும் அங்க என்ன பண்ணிட்டு இருக்க..? என்று கத்தத் துவங்கினாள் அஸ்வினி.
எடுத்த எடுப்பில், அந்த குரலில் வழிந்த எரிச்சலும், அவள் பேசிய தமிழும் மித்ரனுக்கு கடுப்பை உண்டாக்க…அவன் அவளைத் திட்டுவதற்காக வாயைத் திறக்க போக,
“எருமை வாயைத் திறந்து பேசுறாளா பாரு..! திண்ணி மாடு..! என்று அவள் மீண்டும் வசை பாட…மித்ரனுக்கு வந்த கோபத்தில்,
“ஹலோ..! ஹூ ஆர் யு..? இடியட்..! என்று அவன் கத்திய கத்தலில், அவள் கையிலிருந்த செல்போன் நழுவி கீழே விழுந்தது.
“என்ன சங்கிக்கு போன் பண்ணா ஆம்பிளை வாய்ஸ் கேட்குது..? என்று ஒரு நிமிடம் பயந்த அஸ்வினி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மீண்டும் போனை எடுத்தாள்.
“ஹலோ..? யாரு நீங்க…? சங்கி போன் எப்படி உன்கிட்ட வந்துச்சு..? சங்கியை என்ன பண்ணின..? என்று ஆங்கிலத்தில் கத்தத் தொடங்கினாள்.
“ஹேய் ஸ்டாப் இட்..! என்று அவன் பேசத் தொடங்க,
“என்ன ஸ்டாப் இட்டு..? டேய் என்னடா பண்ணுனா என் பிரண்டை, மரியாதையா அவகிட்ட போனை குடு. இல்ல நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணுவேன்.. என்று அவள் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச…பொறுமை இழந்த மித்ரன்,
“ஸ்டாப் இட் ஐ சே..! ராங் நம்பர் இடியட்…, செக் த நம்பர். இரிடேட்டிங் வுமன்ஸ்..! என்று அவன் பேசத் தொடங்க,
அப்போது காலிங் பெல் சத்தம் கேட்க, போனில் திட்டியவனையும், அவன் லைனில் இருப்பதையும் மறந்து ஓடி சென்று கதவைத் திறந்தாள் அஸ்வினி.

Advertisement