Advertisement

சுபஷ்வினி  அவளை ஆச்சர்யமாகப் பார்க்க,
“அடுத்தவ புருஷனைத்தான் லவ் பண்ண கூடாதுன்னு சொன்னேன். பட், சார் இப்போ சிங்கிள். அதனால் நீ தாராளமா சைட் அடிக்கலாம், லவ் பண்ணலாம்..! என்றாள் சங்கி.
“நீ ரொம்ப லேட். அவ ஆல்ரெடி அதைத்தான் பண்ணிட்டு இருக்கா..! என்றாள் தேஜு.
“சொல்லுமா..! என்றார் மீண்டும்.
“மித்ரனுக்கு ஓகேன்னா, எனக்கும் ஓகே ஆன்ட்டி..! என்றாள் பட்டும் படாமல். அவளை யோசனையுடன் பார்த்திருந்தான் மித்ரன்.
“அட,அட.., என்னா நடிப்பு.. என்று சங்கி சொல்லிவிட்டு சிரிக்க, அவள் காலில் ஓங்கி மிதித்தாள் சுபஷ்வினி.
அவர்களின் சேட்டைகளை  கண்டும் காணாமல் இருந்தான் விகாஸ்.
கிடைத்த தனிமையில்,
“எதுக்காக இப்படி அவசரப்படுற ரேகா..? என்றார் சிவகாமி.
“உங்களுக்கும் புரியலையாம்மா..? மித்ரனோட பாட்டியைப் பத்தித்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே..! அந்த பொண்ணு சரியில்லைன்னு தெரிஞ்சும், மித்ரனை அவளோட சேர்ந்து வாழ சொல்றாங்கன்னா, இதை சாதாரணமா விட முடியாது. அங்க என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா இனி நடக்குறது நல்லதா மட்டும் நடக்கட்டும்..! என்றார்.
“நீ சொல்றதும் சரிதான்..! எப்படி இருக்க வேண்டியவ நீ.. இன்னைக்கு, நீ பெத்த புள்ளைக்கு, பயந்து கல்யாணம் பன்ற நிலைமை.. என்று பெருமூச்சு விட்டபடி சென்றார் சிவகாமி.
மித்ரன் இந்த விஷயத்தை, போன் மூலமாக நேசனிடம் சொல்ல, நேசனுக்கு கொஞ்சம் வருத்தம் என்றாலும்,  இந்த பாக்கியத்தையாவது ரேகாவிற்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
“ரேகா சொல்ற படி செய் மித்ரா. சின்ன வயசுல, நீன்னா அவளுக்கு உசுரு. அவ உசுர தான், அவகிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தேன். இன்னைக்கு அவகிட்டயே ஒப்படைச்சுட்டேன்..! அந்த நிம்மதி போதும் எனக்கு..! என்றார்.
“அதெப்படி , நீங்க இல்லாமையா..? கண்டிப்பா முடியாது. நீங்க கிளம்பி வாங்க டாட்..! என்றான்.
“இப்போ நிலைமை சரியில்லை. பாட்டிக்கு வேற உடம்புக்கு முடியலை மித்ரா. உன்னைய வேற வர சொல்லிட்டு இருக்காங்க..! என்றார்.
“டாட், நான் ஒன்னும் நீங்க கிடையாது. அவங்க நினைச்சபடி ஆட்டி வைக்க. இந்த மித்ரன் பாசத்துக்கு மட்டும் தான் கட்டுப்படுவான். அது அவங்ககிட்ட இப்போ இல்லை. யாரோ ஒருவனோட பிள்ளைக்கு, இன்ஷியல் குடுக்குற அளவுக்கு, நான் தியாகி கிடையாது..! என்னைக்கு, சொந்த பேரன் என்னை நம்பாம, அவளுக்கு எல்லா ஷேர்சையும் எழுதி வைக்க சொன்னாங்களோ, அப்பவே இந்த உறவு மேல இருந்த நம்பிக்கை எனக்கு அத்துப் போய்டுச்சு.
இனி, யாரோட வாழ்க்கைக்காவும், என் வாழ்க்கையை இழக்க நான் விரும்பலை… என்றான் முடிவாக.
“நீ சொல்றது சரிதான் மித்ரா..! இருந்தாலும், இத்தனை நாள் உன்னை வளர்த்தவங்க..அந்த நன்றி கடனுக்காகவாவது வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போ..! என்றார்.
“முயற்சி பண்றேன் டாட்..! என்றான்.
“நீ அங்கயே இருந்துட்டா..இங்க இருக்குற பிஸ்னசை யார் கவனிக்கிறது..? என்றார் யோசனையுடன்.
“அதைப் பத்தி நீங்க கவலைப் படாதிங்க டாட். நான் எங்க இருந்தாலும், நடக்க வேண்டியது, ஆட்டோமேட்டிக்கா நடக்கும். நான் மேனேஜ் பண்ணிப்பேன். என்றான்.
“ஓகே..! “ என்றவர் தயங்க,
“ஏதாவது சொல்லனுமா டாட்..? என்றான்.
“ரேகாகிட்ட பேசனும் போல இருக்கு…ஆனா, அவ எப்படி எடுத்துப்பான்னு தெரியலை..! என்றார் தயக்கமாக.
“கோழைக்கு என்னைக்கும் காதல் வந்துடவே கூடாது டாட். அப்படி வந்த காதல் , இப்ப வரைக்கும் என்ன பாடு படுத்துன்னு பாருங்க..! என்றான் மித்ரன்.
“குத்திக் காட்டுறியா மித்ரா…? என்றார்.
“உண்மையை சொன்னேன் டாட். நீங்க பிஸ்நெஸ்ல சம்பாதிச்ச எதுவும் இப்போ உங்க தனிமையை போக்காது. உங்க மனைவி, உங்க குடும்பம், உங்க பிள்ளைங்களால மட்டும் தான் அது முடியும். இது வயசு இருக்குறப்போ உங்களுக்கும் தெரியலை. எனக்கும் தெரிய வைக்க முயற்சி பண்ணலை..! என்றான்.
“மித்ரா.. என்றபடி கண்கலங்கினார் நேசன்.
“ஒரு அப்பாவா, உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் டாட், ஐலவ் யு. பட் ஒரு ஹஸ்பன்ட்டா உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கலை டாட், ஐ ஹேட் யு.. என்றான்.
“விகாஸ் எப்படி இருக்கான், ரொம்ப வளர்ந்திருப்பான்..! என்றார் அவராகவே.
“அவன் நியாபகம் கூட உங்களுக்கு இருக்கே..? என்று மித்ரன் கிண்டல் தொனியில் சொல்ல,
“பிளீஸ் மித்ரா…! வார்த்தையால கொள்ளாத. ரேகா கிட்ட போனை குடு பிளீஸ்..! என்றார்.
அதற்கு மேல் அவரை பாடாய்படுத்த, அவனுக்கும் விருப்பம் இல்லை.
நேராக, ரேகாவிடம் சென்றவன்…
“டாட், லைன்ல இருக்கார். உங்க கிட்ட பேசணுமாம்..! என்றான்.
அவன் சொன்ன செய்தியை நம்பாமல், ரேகா அதிர்ச்சியுடன் பார்க்க,
“நிஜமா.. என்றபடி போனை அவர் கையில் திணித்தான் ஜீவ மித்ரன்.
போனை வாங்கிய ரேகாவிற்கு, கை நடுங்கத் தொடங்கியது. எத்தனை வருடங்கள் காத்திருப்பு. எத்தனை வருட தவிப்பு…இதெல்லாம் சேர்ந்து அவரைப் பாடாய் படுத்த, கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
நடுங்கிய விரல்கள், போனைப் பற்றி காதின் அருகில் கொண்டு செல்ல, அந்த அமைதியை குத்திக் கிழித்தது, நேசனின் ‘ரேகா என்ற அழைப்பு.
“ரேகா..! என்றார் மீண்டும்.
கண்களில் தேங்கிய கண்ணீர், கன்னத்தில் வழிய, அந்த குரல், மனதில் ஆழம் அவரை தீண்டியது அவரை.
“ரேகா..!
“சொ..சொ..சொல்லுங்க..! என்றார் திணறிக் கொண்டு.
இப்போது ரேகாவின் குரலைக் கேட்ட நேசனுக்கும், உள்ளே ஆயிரம் அதிர்வலைகள். எத்தனை வருடங்கள் கழித்து, மனைவியின் குரலைக் கேட்கிறார்.
“எப்படி இருக்க ரேகா..? என்றார் சந்தோஷத்துடன்.
“நான்…நான் நல்லாயிருக்கேன்..! நீங்க..! என்றார் பதட்டத்துடன்.
“உயிரோடவும், உன் நினைப்போடவும் இருக்கேன்..! என்று அவர் சொல்ல, இந்த பக்கம் ரேகா, அழுதே விட்டார்.
அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியே வந்தான் மித்ரன். ரேகாவை பார்ப்பதற்கு உள்ளே வந்த சுபஷ்வினி, அவனை கவனிக்காமல் அவன் மீது மோத,
இருவரும் சேர்ந்து விழுகப் பார்த்த நிமிடம், அவளையும் தாங்கிப் பிடித்து, தானும் விழாமல் நின்றான் ஜீவ மிதரன்.
“ஹேய்..! பார்த்து வர மாட்டியா..? அடியேதும் படலையே..? என்றான்.
“இல்லை..! என்று அவள் தலை மட்டும் தான் ஆடியது. நினைவோ கனவில் சோலோவாக பாடிக் கொண்டிருந்தது.
“என்னாச்சு..? என்று அவள் முன், அவன் சொடக்கிட,
“ந்ஹான்..! ஒண்ணுமில்லை..! என்றபடி விலகினாள்.அவன் கைப்பட்ட இடம், தீயாய் தகிக்க, அவனின் அருகாமையை முதன் முதலில் உணருகிறாள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சுபஷ்வினி..! என்றான்.
“சொல்லுங்க..! என்றாள்.
“இங்க இல்ல. கொஞ்சம் தனியா போய் பேசணும்..! என்றான்.
“வெளிய போய் பேசலாமா..? என்றாள்.
“ஓகே..! என்றபடி அவன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் சுபஷ்வினி.
இதுவரை அங்கு நடந்த அனைத்தையும், மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர், மூவரும்.
“என்ன..? பெரிய ரொமான்ஸா எதிர்பார்த்தோம். இப்படி சப்புன்னு முடிச்சுட்டாங்க..! என்றாள் தேஜு.
“அஸ்வினி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டா..! என்றாள் சங்கி.
“யாரு அவ..? பாரு எப்படி பின்னிப் பெடல் எடுக்கப் போறான்னு..! என்று தேஜு சவால் விட,
“கிழிப்பா…! பார்க்கத்தான போறோம்…! என்றாள் சங்கியும்.
“பேசனும்ன்னு சொன்னிங்க..? என்றாள் சுபஷ்வினி.
“என்னைப் பத்தின விஷயம் ஓரளவுக்கு உனக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..! என்றான்.
“ம்ம்…தெரியும்.. என்றாள்.
“தெரிஞ்சும், உனக்கு இந்த மேரேஜ்ல சம்மதமா..?உனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம் இல்லையா..? என்றான்.
“எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கற அளவுக்கு, நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. எனக்கு இந்த திருமணத்துல முழு சம்மதம்..! என்றவள்,
“வேற கேள்வி ஏதாவது இருக்கா..? என்றாள் எரிச்சலுடன்.
“கூல்..! ஏன் இப்படி டென்சன் ஆகுற..? என்றான் சின்ன சிரிப்புடன்.
“பின்ன, இதைத்தான் எல்லார் முன்னாடியும் சொன்னேன். இப்போ நீங்க தனியா கூப்பிட்டு கேட்டா மட்டும்….. மனசுல பெரிய ஜென்டில்மேன்னு நினைப்பா..? என்றாள்.
“உனக்கு இப்படி கூட பேச வருமா..? என்றான் ஆச்சர்யமாய்.
“ஏன்..? நான் என்ன ஊமையா..? ஊமையா இருந்து நான் பட்டது எல்லாம் போதும்..! என்றாள்.
“என்ன சொல்ல வர..? புரியலை..? என்றான் இடுங்கிய பார்வையுடன்.
“ம்ம்..! சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொல்றேன்..! என்றாள்.
“அது தப்பில்லை..போட்டுக்கலாம்..! என்றான்.
“என்ன கிண்டலா..? என்றாள்.
“ஆமா..! என்றான் சிரிப்புடன்.
“அவ்வளவு தான..? நான் கிளம்பலாமா..? என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க,
“என்னை ஓவரா சைட் அடிக்கிற..! அதை மட்டும் குறைச்சிக்கோ..! என்றான் சற்று சத்தமாக.
“ஸ்ஸ்.. என்று கண்களை இறுக மூடிக் கொண்டாள் சுபஷ்வினி.
“இப்படியா, அவனுக்குத் தெரியற மாதிரி சைட் அடிச்சு வைப்ப..? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்,
அவனைப் பார்த்து, ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து விட்டு சென்றாள். அவள் செல்வதைப் பார்த்த ஜீவ மித்ரனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இப்படியும் ஒரு பொண்ணு இருப்பாளா..? அதுவும் இந்த காலத்துல..? பசங்க பின்னாடி வரணும்ன்னு நினைக்கிற காலத்துல, இவ இப்படி இருக்குறா..? என்று வியந்து பார்த்தான்.
“என்ன..? எங்க அக்காவை சைட் அடிக்கிறிங்க..? என்றபடி வந்தாள் தேஜு.
“அக்காவா..? என்றான்.
“ஆமா..அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்ததால..! என்றாள்.
“உனக்கும், அவளுக்கும் நூறு வித்யாசம்..! என்றான் சிரித்தபடி.
“உண்மைதான். ஆனா, அவ என்னை விட ரொம்ப நல்லவ. யாருக்கும் மனசால கூட கெடுதல் நினைக்கத் தெரியாது. ஈசியா எல்லாத்தையும் விட்டுக் குடுத்துடவா… தனக்கு என்ன வேணும்ன்னு அவளுக்கே தெரியாது..! என்றாள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு.
“ஹேய்..என்னாச்சு..? எதுக்கு இப்படி ஒரு பீலிங்..? என்றான்.
“இதெல்லாம் ஏன் சொல்றேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். நீங்க அவளை நல்லா பார்த்துக்கணும். உங்க அளவுக்கு அவ ஷார்ப் இல்லை. ஆனா ரொம்ப நல்லவ..! என்றாள்.
“இதெல்லாம் யார் சொல்லியும் எனக்குத் தெரியவேண்டாம் தேஜு. எனக்கே தெரியும்..! என்றான்.
“இருந்தாலும், சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு..! என்றாள்.
“ உன் சிஸ்டர்ருக்கும் ஒரு லவ் பெயிலியர் கதை இருக்குல்ல..? அது யாரு..? என்றான்.
“அது தெரிஞ்சு நீங்க என்ன செய்ய போறீங்க..?  நீங்க உங்க எக்ஸ் லைப்ப மறந்துடுங்க.! அவளும் மறந்துடுவா..! ரெண்டு பெரும் ஒழுங்கா வாழற வழியைப் பாருங்க..! என்றவள், அங்கிருந்து உடனே கிளம்பினாள். இருந்தால் ஏதாவது உளறிவிடுவாள் என்ற பயம் தான் அவளுக்கு.
அவள் அப்படி செல்வதைப் பார்த்த மித்ரனுக்கு சிரிப்பு தான் வந்தது.
சற்று முன்பு ஜெனி சொன்னது, அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது. அவன் அம்மா விஷயத்தை சொன்னவுடன், மித்ரன் முதலில் சொன்னது ஜெனியிடம் தான்.
அவளுடைய போட்டோவை,ஜெனிக்கு அனுப்ப, அதைப் பார்த்த ஜெனிக்கு ஆச்சர்யம். அவள் தான் சொல்லியிருந்தாள் சுபஷ்வினியைப் பற்றி.
இருந்தாலும் அதை வைத்து, மித்ரனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவளுக்கு பழைய காதல் இருந்து, அவள் குடும்பத்திற்காக சம்மதம் சொன்னதாக இருக்கக் கூடாது என்று தான், அவளிடம் கேட்டான்.

Advertisement