“நிஜமாவா..? அஸ்வினி ஒரு தடவை கூட சொல்லலையே..?” என்றான் ஆச்சர்யமாய்.
“நீங்களும் கேட்கலையே..?” என்றாள் தேஜு.
“என்ன புத்திசாலித் தனமா பேசுறதா நினைப்பா உனக்கு..?” என்று மித்ரன் கேட்க, சுபஷ்வினியோ நடக்கும் சம்பாஷனைகளில் கலந்து கொள்ளாமல் அவளுடைய உலகத்தில் இருந்தாள்.
“அப்போ, நேத்து நான் பார்த்து பேசுனது…?” என்று மித்ரன் கேள்வி கேட்க,
“இதோ இவகிட்ட தான். இவ எனக்கு அக்கா, அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி பிறந்ததுனால..!” என்றாள் தேஜு.
“எனக்கும் லேசா ஒரு டவுட். என்னடா நம்ம வழிய போய் பேசுறோம், ஆனா அமைதியா இருக்காளேன்னு..இப்போ கிளியர் ஆகிடுச்சு..” என்றான் மித்ரன்.
“ஹாய் சுபஷ்வினி..! ஐயாம் ஜீவ மித்ரன்…!” என்று அவளை நோக்கி கையை நீட்ட, அவனின் கையையும், முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி.
“சுபா, கையை குடு. பாவம் அவரு எவ்வளவு நேரம் தான் திரும்பி கையை நீட்டிட்டே இருப்பாரு. இந்த இடஞ்சல்லையும் சார்க்கு கையைக் குடுத்தே ஆகணும்…” என்று தேஜு கிண்டல் அடிக்க,
“ஹா..ஹாய்..!” என்றபடி அவளும் கையை நீட்டினாள். அவனின் வலிய கரங்களுக்குள், சுபஷ்வினியின் மெல்லிய கைகள் சிக்கிக் கொள்ள, அந்த தீண்டல், அந்த கை குலுக்கல் அவளுக்குள் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியது.
“சுபஷ்வினி..! அவன் கல்யாணம் ஆனவன்..!” என்று மனசாட்சி, மறந்திருந்த விஷயத்தை நியாபகப் படுத்த, பட்டென்று கையை உருவிக் கொண்டாள் சுபஷ்வினி.
“என்னாச்சு..?” என்றான் மித்ரன்.
“ஒ..ஒண்ணுமில்லை..!” என்றாள் லேசாக பிசிர் தட்ட.
“உனக்கு இப்படி ஒரு அமைதியான சிஸ்டரா..?” என்று தேஜுவைப் பார்த்து மித்ரன் சிரிக்க,
“சார் வேண்டாம். நான் பேசாம இருக்கேன். மறுபடியும் என்னை வம்புக்கு இழுக்காதிங்க..?” என்றாள்.
“ஆமா..! எப்படி உங்கம்மா உங்களை விட்டாங்க..! அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்ன்னு சொன்னியே..?” என்றான்.
“எங்க சார்..! விகாஸ் வீட்டுக்கு வந்தப்ப, அவங்கம்மா தான் எங்கம்மா கிட்ட பர்மிசன் வாங்குனாங்க. எங்கம்மாவும் ரெண்டு நாள்ல கிளம்பி வருவாங்க..! நாங்க கொஞ்சம் முன்னாடியே போறோம். ஆண்ட்டியை சின்ன வயசுல பார்த்தது. இன்னைக்கு பார்க்க போறோம்..!” என்றாள் தேஜு.
“சார்க்கு தான்.ஆல்ரெடி டைவேர்ஸ் பண்ணிட்டார். பட் இன்னமும் ஏதோ பிராப்ளம் போல, அதான் இப்படி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரார்..!” என்றாள் தேஜு.
“ஷட்அப் அஸ்வினி..! திஸ் ஸ் த லிமிட். விகாஸ் ட்ராப் த கார்..!” என்றான் கோபமாய்.
“அவ ஏதோ தெரியாம பேசிட்டா சார்..! அவளுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்..!” என்ற விகாஸ் தேஜுவை முறைக்க,
“சாரி மித்ரன் சார்..! நீங்க தான் ட்ரெயின்ல சொன்னிங்க..! அதான் கேட்டேன்..!” என்றாள்.
இருந்தும் அவன் பதில் பேசவில்லை. அவள் மீது கோபம் என்றாலும், அவள் சொன்னது என்னவோ உண்மைதானே. அவன் ஒளிந்து தானே வருகிறான்.
அதுவும் ஒரு பெண்ணிற்கு பயந்து, ஒளிந்து வருகிறான். அவளின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு வருகிறான். கண்களை மூடி அவன் சிந்தனையில் ஆழ்ந்திருக்க,
அவனுக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் சுபஷ்வினி. கொஞ்சம் கூட அவளின் மனம் சுயநலமாக யோசிக்கவில்லை. அவனுக்காகத் தவித்தாள். அவனின் கஷ்ட்டங்களுக்காகத் தவித்தாள்.
சிறிது நேரத்திற்கு பின்,
“சாரி தேஜஸ்வினி..!” என்றான் மித்ரன்.
அவனை ஆச்சர்யமாய் பார்த்தவள்,”எதுக்கு சார்..?” என்றாள்.
“நீ சொன்னது உண்மை தான். ஒளிஞ்சு தான் வரேன்.” என்றான் வேதனையுடன்.
“சார், நான் ஏதோ விளையாட்டா சொல்லிட்டேன். நீங்க அதுக்காக வருத்தப்டுற மாதிரி இருக்கு. அதை மறந்திடுங்க சார்..!” என்றாள் தேஜுவும்.
ஏனோ தேஜுவும், அவனும் அப்படி எதார்த்தமாக பேசிக் கொண்டு வருவதைப் பார்த்த சுபஷ்வினிக்கு கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. அவன் அறியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.
“இப்ப மட்டும் பத்து மீட்டருக்கு முன்னாடியே சொன்னியே, நிக்குறது இவர் தான்னு..!” என்று தேஜு விடாமல் குடைந்தாள்.
“யப்பா சாமி..! தெரியாம சொல்லிட்டேன்..! ஆளை விடுங்க..” என்று சுபா கும்பிடு போட, அப்போதைக்கு விட்டு விட்டாள் தேஜு. ஆனால் அவளின் சந்தேக வட்டத்திற்குள் வந்து விட்டிருந்தாள் சுபஷ்வினி.
“என்ன பண்ணிட்டு இருக்க சுபஷ்வினி? எதுக்காக இவனோட விஷயத்துல மட்டும் கண்ட்ரோல் இலக்குற. நீயா வாயைக் குடுத்து வேற மாட்டிக்கிற..? தேஜுக்கு ஏற்கனவே டவுட் இருக்கு. நீயே எல்லாத்தையும் கிளியர் பண்ணிக் குடுத்திடாத..” என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டாள்.
விகாஸ் காரை ஓட்டிக் கொண்டிருக்க, அவனையே பார்த்துக் கொண்டு வந்தான் ஜீவ மித்ரன். ஏனோ மனதிற்குள் ஒரு தயக்கம். இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்தவனால் இப்போது பேசமுடியவில்லை.
”என்னாச்சு மித்ரன் சார்..? விகாஸையே பார்த்துட்டு வரீங்க..?” என்று தேஜு கேட்க, அவளை முறைத்தவன்….