Advertisement

*24*
இதயம் இயல்புக்கு மீறி அடித்துக்கொண்டாலும் ஒரு முடிவுடன் இருந்தவன் அழைப்பு ஏற்கப்பட்டதுமே, “என்னோட காத்திருப்புக்கான முடிவு சுகமானதா சோகமானதான்னு எனக்கு இன்னைக்கே தெரிஞ்சாகனும் வானதி?” என்று கேட்டுவிட, சிலிர்ப்பு ஓடி அடங்கியது எதிர்புறம்.
“என்ன… என்ன கேக்குறீங்க?” உச்சி முதல் பாதம் வரை கேசம் சிலிர்த்து நிற்க, திணறலுடன் வானதி வாய் திறந்தாள்.
“உன்னோட திணறலே நான் கேட்ட கேள்வி உனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொல்லுது வானதி. நீ பதிலை மட்டும் சொல்லு.” என்று ராஜனும் மடக்க, வானதிக்கு வியர்த்துவிட்டது. 
“என்ன பேச்சையே காணோம் வானதி? முடிவெடுக்க ஒரு மாசம் போதலையா?” என்ற கேள்விக்கும் அவளது வேகமூச்சுக்கள் மட்டுமே பதிலாய் வந்தது.
அவளுக்கு இணையாய் பெருமூச்சிழுத்தவன், “உனக்கு தேவையான அவகாசத்தை கொடுக்க நான் தயார், ஆனா அதுவரை எல்லோரும் காத்திருப்பாங்கன்னு சொல்ல முடியாது. நான் என்ன செய்யட்டும்?”
“ஏதாவது பதில் சொன்னா தான் நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கும் புரியும் வானதி. நீ இப்படி அமைதியா இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது? உன்னோட மெளனத்தை மறுப்பா எடுத்துக்கவா இல்லை சம்மதமா எடுத்துக்கவா?” 
ம்கூம் எதற்கும் அவளிடமிருந்து பதிலில்லை. அழுத்தக்காரி என்று மனதிற்குள் வைதவன், பொறுமையை இழுத்து பிடிக்க இலகுத்தன்மை கட்டவிழுந்தது.
“வானதீ!… இப்படி கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்? பதில் சொல்ல பிடிக்கலைன்னா விடு… நான் எவளையோ கட்டிட்டு போறேன். நீ கடைசி வரைக்கும் இப்படியே அமைதியாவே இருந்துடு. அப்புறம் காலம் போனபிறகு ஐயோ அம்மா விட்டுட்டோமேன்னு புலம்பினா ஒரு பயனும் இல்லை. நான் இப்போ வைக்கிறேன். ஒரு மாசமோ ரெண்டு மாசமோ கழிச்சு வீட்டுக்கு கல்யாண பத்திரிக்கை வரும், வந்து வயிறுமுட்ட சாப்டுட்டு போ.” என்று இறுக்கமாய் மொழிந்தவன் அழைப்பை துண்டித்துவிட, முறுபுறம் அலைபேசியை இறுக பற்றியபடி விழிகளில் நீருடன் அமர்ந்திருந்தாள் வானதி. 
வேண்டும். வேண்டாம் என்ற இரண்டில் இன்னதென முடிவெடுக்க முடியாமல் திணறிய அவளிதயமோ பாரம் தாளாது, பாரத்தை இறக்கி வைக்கவும் வழியறியாது அசுர வேகத்தில் அடித்துக்கொண்டது. அதை சற்று மட்டுப்படுத்தும் விதமாய் அறிவழகி அவள் மடியில் ஏறி, அவள் கன்னத்தை பிடித்திழுக்க, வழிந்த நீரை வேகமாய் துடைத்தாள் வானதி.
தன் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்த குட்டி அழகியை வாரி அணைத்தவள் உச்சி முகர்ந்து, “என்ன வேணும் குட்டிமாக்கு?”
அன்னையின் கவனம் தன் மீது திரும்பியதும் வானதியின் முகத்தை உமிழ்நீர் கொண்டு கொஞ்சியவள் மழலை மொழியில், “ம்மா… ம்மா… ம்மு…” என்று வார்த்தைக்கு வார்த்தை முத்தம் வைக்க, வானதியின் திணறலும், தயக்கமும் உருவாகிய தடம் தெரியாது மங்கியது.
“மம்மு வேணுமா… பசிக்குதா குட்டிக்கு… பாட்டி என்ன செஞ்சிருக்காங்கன்னு போய் பார்ப்போம்மா?” என்று குழந்தையிடம் பேச்சு கொடுத்தபடியே அவளை தூக்கிக்கொண்டு எழ, அலைபேசி மீண்டும் சத்தம் எழுப்பியது.
வானதி யாரென்று பார்க்கும் முன்னரே அதை வெடுக்கென பிடுங்கி காதில் வைத்தாள் அறிவழகி. காதில் ஆர்வமாய் வைத்தாளே ஒழிய அறிவழகிக்கு அழைப்பை ஏற்று பேசுமளவுக்கு விவரம் வரவில்லை. 
“பாட்டிகிட்ட போங்க. அம்மா வந்துர்றேன்.” என்று அறிவழகியை கீழே இறக்கிவிட்டு அலைபேசியை அவளிடமிருந்து பிடுங்கி அழைப்பை அவசரமாய் ஏற்க, தாயின் காலை பிடித்துக்கொண்டு சிணுங்கினாள் அறிவழகி.
“நான் கோபமா அழைப்பை துண்டிச்சா நீ உடனே என்னை திரும்ப கூப்பிடனும் வானதி. அதுதானே முறை… நீ கூப்பிடுவேன்னு காத்திருந்து காத்திருந்து பொழுதே ஓடிப்போச்சு.” என்று ராஜன் குறை படிக்க, வானதியின் இதழ்கள் அவனின் இலகளில் மெல்ல விரிந்தது.
“என்ன இப்போவும் பேச மாட்டீயா?” என்றான் அவளின் அமைதியை கண்டு மீண்டும் நொந்தபடி.
“இல்லை… ஒரு அஞ்சு நிமிஷம். பாப்பா அழறா நான் அவளை அம்மாகிட்ட விட்டுட்டு வந்துறேன். நீங்க லைன்லிலேயே இருங்க.” என்று அவனை நிறுத்திவிட்டு,
அலைபேசியை காதில் வைத்தபடியே சிணுங்கிய மகளை கைகளில் அள்ளிக்கொண்டு வெளியேறியவள் நேராய் அன்னையிடம் ஒப்படைத்து அவளுக்கு உணவு கொடுக்கும்படி சைகை செய்துவிட்டு நகர, சுமதி அவளை முறைத்தார். 
“பகல் முழுக்க உன்னை தேடி தேடி பசங்க வெம்புறாங்க. நீ என்னடான்னா வேலை முடிஞ்சு வந்தபிறகும் பசங்களை கவனிக்காம போனை எடுத்துகிட்டு உட்கார போற. அவங்க தூங்கின பிறகு வேலையை செய்யேன்.”
“ம்ச்… ம்மா… நீ வேற அவசரம் புரியாம கத்தாத. அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிடு. நான் அவனை தூங்கவைக்கிறேன்.” என்றுவிட்டு சுமதிக்கு பேச வாய்ப்பு தராது அவரிடமிருந்த அறிவழகனை தூக்கிக்கொண்டு தன்னறைக்குள் பதுங்கினாள். 
மகனை மடியில் போட்டு தட்டிக்கொடுக்க, செவி தன்னாலே மறுபுறம் அவனிருக்கிறானா என்று கவனத்தை செலுத்தியது.
“சொல்லுங்க.”
“நீதான் சொல்லணும் வானதி. நான் கேள்வி கேட்டு ஒரு மாசமாச்சு.” ராஜன் அவளின் முடிவுக்காய் காத்திருக்க, வானதி மீண்டும் அமைதியானாள்.
“ஷப்பா… இவ்வளவு அழுத்தம் ஆகாது வானதி. ஏதாவது பேசேன். என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற… நீ இப்படியே இருந்தா நான் வீட்டுல எல்லோர்கிட்டேயும் சொல்லிடுவேன். அப்புறம் யோசிக்கவோ முடிவெடுக்கவோ உனக்கு அவகாசமும் சுதந்திரமும் கிடைக்காது.” என்று ராஜன் பொறுமையை இழுத்துபிடித்து மல்லுக்கு நிற்க, வானதியின் இதழ்கள் பிரிய மறுத்து சண்டித்தனம் செய்தது.
“சரி விடு… உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… நீ பதிலும் சொல்ல வேண்டாம். எனக்கே சிலது புரியுது. உனக்கு வேண்டாம்னா நீ இவ்வளவு நேரம் அழைப்பை நீட்டிச்சிருக்க மாட்ட. இஷ்டம் இருக்கு ஆனா தயக்கமும் இருக்கு. அது என்னன்னு நீ சொன்னா தான் அதுக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியும் வானதி.” 
குந்தவை சொன்னது போல இவளிடம் பதிலை வாங்கமுடியாது என்று எண்ணினானோ என்னவோ அவளை பேசவைக்கும் முயற்சியில் இறங்கினான். என்ன வியப்பு! அதற்கு பலனும் கிடைத்தது.
“என்னை பார்த்தா பாவமா தெரியுதா?” உள்ளே சென்ற குரலில் தயக்கத்துடன் வானதி குரலை தேடிப்பிடித்து உயிர்பிக்க, ராஜனுக்கு முதலில் அவள் கேட்டது விளங்கவில்லை.
“என்ன புரியலை…” இவள் என்ன கேட்கிறாள் என்று ஒரு நொடி புரியாமல் விழித்தவன் உடனே சுதாரித்துவிட்டான், “உன் மேல பரிதாபப்பட்டு நான் இதெல்லாம் செய்றேனோன்னு உனக்கு சந்தேகம்… சரியா தான் யோசிக்கிற. இதை என்கிட்ட கேட்டு தெளிவுபடுத்திக்க உனக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டிருக்கு.”
“ப்ச் பதில் சொல்லுங்க.” அவன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்று ஆர்வமாய் காத்திருந்தவளுக்கு பதில் கூறாது அவன் வளவளக்க, அவளது நிதானம் தன் நிதானத்தை இழந்திருந்தது.
“ப்பா… அவசரம். இவ்வளவு நேரம் நான் எவ்வளவு கெஞ்சினேன். வாயை திறந்தீயா… இப்போ மட்டும் உனக்கு உடனே பதில் வந்திடனுமா?”
“பழிவாங்குறீங்களா?”
“ஷ்… ரொம்ப படுத்துற வானதி. நல்லா கேட்டுக்கோ பரிதாபப்பட்டிருந்தா உன்னோட சம்மதத்தை வாங்க இவ்வளவு பொறுமையா காத்திட்டு இருக்க மாட்டேன். உன்னோட எண்ணத்திற்கு இவ்வளவு மதிப்பு கொடுக்கணும்னு தோணியிருக்காது. நேரா வீட்டுல பேசி எல்லாத்தையும் முடிச்சி நல்லபேர் வாங்க எனக்கு எவ்வளவு நேரமாகும் சொல்லு… பரிதாபப்படுறது ஒருவழிப் பாதை. உன்னை பார்த்து ஐயோ பாவம் நினைச்சி நானே எல்லா முடிவும் எடுத்திருப்பேன். ஆனா இப்போ அப்படியா செய்றேன்? என்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுக்கிற மாதிரி சரிசமமா உன்னோட முடிவுகளை நீ எடுக்கணும்னுதான் இவ்வளவும்.” என்று அவன் பொறுமையாய் சொல்ல, வானதியின் சிந்தனைக் கோடுகளில் ஒன்று மறைந்து அவனிடம் தன் மனதை திறக்கும் தைரியத்தை கொடுத்தது.
“எதுக்கு பர்ஸ் வாங்கி அதில் பணம் வச்சிக் கொடுத்தீங்க? எனக்கு ஒருமாதிரி இருந்துச்சு. அதை எப்படி எடுத்துக்கிறதுன்னு எனக்கு புரியல…”
“எதிர்பார்த்த கேள்வி தான்… நான் பணம் வச்சிக் கொடுத்தது உனக்கு சங்கடமா இருக்கும்னு நினைச்சேன். ஆனா எனக்கு வேற எதுவும் வாங்கிக் கொடுக்கணும்னு தோணல வானதி. துணையில்லைன்னு உன்னை நினைச்சு எல்லோரும் கவலைப்படுறதை விட உன்னையும் கவனிச்சிகிட்டு ரெண்டு பிள்ளைங்களை வளர்க்கிற பொருளாதார சக்தி உன்கிட்ட இல்லைன்னு நினைச்சி அதிக வருத்தப்பட்டிருக்காங்க. உனக்குள்ளும் அந்த பயம் இருக்கு. அந்த பயம் இனி உனக்கு வேண்டாம்னு சொல்லத் தோணுச்சு. அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல அந்த பர்சில் வைக்கிற பணமும் குறையாம இருக்கணும்னு எனக்கொரு ஆசை. அதனால் பர்ஸ் வாங்குனேன். ஆனா உன்கிட்ட அதை கொடுக்க கிளம்பினப்போ அந்த பர்ஸை கூட வெறுமையாக கொடுக்க மனசில்லை. உனக்கு எல்லாமே நிறைவா தான் கிடைக்கனும் வானதி. வெறுமைங்கிற உணர்வு எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். அந்த உணர்வு எப்போதும் எதிலும் உனக்கு வரக்கூடாது.” என்று அவன் கலங்கிக் கூற, வானதியின் உணர்வுகள் உடைந்து கண்ணீராய் வெளியேறியது.
வெறுமையை உணர்ந்த இரு உள்ளங்களும் சங்கமமாகி கலங்கி நிற்க, ராஜனே முன்னெடுத்தான்.
“என் வாழ்க்கையோட உன்னோடதை இணைக்கிறதால் நீ உன் முதல் வாழ்க்கைக்கு துரோகம் செய்யுறதா அர்த்தமில்லை. என்னை பொறுத்தவரை அந்த வாழ்க்கை முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட முடியாது. அந்த வாழ்க்கையின் நினைவா ரெண்டு குட்டீஸ் இருக்காங்க. கடைசி வரை அந்த வாழ்க்கையின் தடம் இருக்கும். அதனால் அவருக்கு குடுத்த இடத்தை எனக்கு குடுன்னு என்னைக்கும்மே நான் கேட்க மாட்டேன். அவரோட இடம் அப்படியே இருக்கட்டும், நான் எனக்கானதை உருவாக்கிக்கிறேன்… அதுக்கு நீ அனுமதி கொடுக்கணும் வானதி.” 
ராஜனின் சொற்கள் அனைத்தும் அவளின் பயத்தை போக்கி இதயத்தை தாக்க, உணர்ச்சிகள் அடைபட மறுத்து தொண்டைக்குழியில் வந்து நின்றது. விசும்பியவள் அழுகையை அடக்கி,
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… உங்ககூட பேசும்போது ஒரு தெம்பு வருது. உங்களை மாதிரி ஒருத்தர் எங்ககூடவே இருந்து எங்களை வழிநடத்தி எங்களை கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கணும்னு தோணுது. ஆனா அதை என்னால ஏத்துக்க முடியுமான்னு தெரியலை. இந்த உலகமும் அதை ஏத்துக்குமான்னு தெரியல.”
“மத்தவங்களை விடு. உன் மனசுல என்ன ஓடுது அதை சொல்லு…” என்று அவன் வற்புறுத்த, கண்ணீருக்கு இணையாய் மடை திறந்துவிட்டது போல அவளது குழப்பங்களும் வந்து வரிசையாய் விழுந்தது.
“இருந்தவரை நல்லா பார்த்துகிட்டாரு… ஆனா என்கிட்ட எதையுமே பகிர்ந்தது இல்லை. நீங்க பேசின அளவுகூட என்கிட்ட அவர் மனசை திறந்து பேசினது இல்லை.  அப்போ அதெல்லாம் எனக்கு பெரிய விஷயமா தெரியல. ஆனா கடன்சுமையை காரணமா வச்சி வறுமைக்கு தன்னை இறையாக்கின பிறகு தான் அவர் எங்க கோட்டை விட்டாரு, நான் எங்க தவறிப் போனேன்னு புரிஞ்சிது. அப்பப்போ எங்களை இப்படி நிறுத்திட்டு போன அவர் மேல எனக்கு அளவுக்கதிகமான கோபம் வரும்… பசங்களை பார்க்கும் போது அவரோட நினைப்பும் வரும். 
அவர் நினைப்பை எல்லாம் முழுசா உதறி தள்ளிட்டு உங்களுக்கான இடத்தை என்னால் கொடுக்க முடியாமான்னு தெரியல. ஆனா அப்படி கொடுக்க முடியாம போனா என்னால தாங்க முடியாது… பசங்களுக்கு அப்பாவா உங்களை உருவகப்படுத்த முடிஞ்ச என்னால எனக்கான துணையா உங்களை முழுசா ஏத்துக்க முடியுமான்னு எனக்கு நானே கேட்டு கேட்டு பார்க்கிறேன், பதிலே கிடைக்க மாட்டேங்குது.
வீட்டுல அத்தை, மாமா குந்தவை எல்லாம் ஒத்துப்பாங்களா? அவங்க பார்வையில் இது எப்படி இருக்கும். நாளைக்கு பசங்க வளர்ந்து உண்மை தெரிஞ்ச பிறகு அவங்க உங்களை எப்படி பார்ப்பாங்க, உங்களை முழு மனசா ஏத்துப்பாங்களா… இல்லை பார்க்கிறவங்க அவங்க மனசுல நீங்க அவங்களை பெத்தவர் இல்லைன்னு சொல்லி சொல்லியே தவறான எண்ணத்தை விதைச்சு, பசங்க உங்களை தள்ளி வச்சிடுவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு. இன்னும் நிறைய நிறைய தோணுது ஆனா பதில் தான் கிடைக்கலை. இதெல்லாம் நினைச்சு நினைச்சு குழம்பினது தான் மிச்சம். இதில் நான் எங்க உங்களுக்கு பதில் சொல்றது?”
உள்ளத்தில் இருப்பது உள்ளபடி வெளியே வரட்டும் என்று பொறுமையாய் காத்திருந்தவன் அவள் அழுந்தி இருந்ததை இறக்கி வைத்துவிட்டாள் என்ற திருப்தியில் நிம்மதி மூச்சிழுத்தான்.
“உன்னோட குழப்பத்துக்கான பதிலை நான் சொல்றது வாய்சவடாலாக் கூட தோணலாம். நீ வா வானதி வாழ்ந்து பார்த்திடுவோம்னு சொன்னாலும் அது உனக்கு ஐயத்தை கொடுக்கும். இன்னொரு முறை ரிஸ்க் எடுக்க நீ விரும்ப மாட்ட. அதில் எனக்கும் விருப்பமில்லை. 
முதல்ல அடுத்தவங்க சொல்றது எல்லாத்தையும் காதில் வாங்கி மனசில் போட்டுக்க கூடாது வானதி. நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகிட்டு மிச்சத்தை ஒதுக்கிடனும். இதுதான் உன்னோட பாதி குழப்பத்துக்கான விடை. எதை எடுத்துக்கணும் எதை எடுத்துக்க கூடாதுன்னு நீ இப்போவே குழப்பிக்காத. அது வரும்போது வரட்டும். சமாளிச்சிக்கலாம். வீட்டில பேச வேண்டியது என் பொறுப்பு. நாம ரெண்டு பேருமே நல்லா விவரம் புரிஞ்சவங்க, நம்மை மீறி நம்மளை கட்டாயப்படுத்துற உரிமையை யாருக்கும் கொடுத்திடக் கூடாதுன்னுதான் நான் எல்லாத்தையும் பொறுமையா பேசிட்டு இருக்கேன். 
உன் மனசிலும் எண்ணத்திலும் எனக்கான இடம் தானா அமையட்டும் வானதி. சும்மா போட்டு கட்டாயப்படுத்தி திணிக்க வேண்டாம். காலப்போக்கில் நல்ல புரிதலும் இயல்பான வாழ்க்கையும் நமக்கு அமையும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்புறம் கடைசியா பசங்க…

Advertisement