அத்தியாயம் 8:

அவள் செல்வதையே பார்த்தவனுக்கு வேதனையாக இருந்தது…இதனால் தானே அவளை பார்க்க வேண்டாம் என்று விலகி இருந்தான்…

அவனுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்து விட்டது….அவள் கண்டிப்பாக தன்னை காதலிக்கிறாள் என்று புரிந்து விட்டது…ஆனால் அவள் மனதை கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்…என்னை அவள் நினைக்கவே வேண்டாம்….அவளாவது சந்தோசமாக இருந்து கொள்ளட்டும்…

அவள் பின்னாடியே ஓடினான்….

அம்மு அம்மு!!

தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள்,திரும்பலாம் என்று நினைத்தவள் அங்கு தரையின் மேல் கிடந்த கண்ணாடி துண்டு அவளின் காலில் நன்கு கீறி பாதத்தில் மாட்டிகொண்டது ….பூ போன்று இருந்த அவளின் பாதத்தில் ரத்தம் வழிந்தது..அவள் காலை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்…அவனை பார்க்க வேண்டும் என்று செருப்பு கூட அணியாமல் கீழே வந்து விட்டாள்…

அம்மு !!என்ன ஆச்சு!!

அர்ஜுன் கால்ல கண்ணாடி குத்திருச்சி என்று அழுது கொண்டே கூறினாள்…அவளின் கையை பிடித்து தூக்கி விட்டான்…அவளால் நிற்கவே முடியவே இல்லை…

இது சரி வாறது என்று யோசித்தவன் அவளை தூக்கி கொண்டு அவ்வளவு தூரம் பதட்டதோடு காருக்கு சென்றான்…

அவள் கூட வலியை தாங்கி கொண்டாள்…ஆனால் அவன் முகத்தில் இருந்த வேதனையை பார்த்தவளுக்கு மனம் ரொம்ப வலித்தது…

பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு சென்று,சிறு கண்ணாடி துண்டை அகற்றினர்….

சீழ் ஏதும் பிடிக்காம பார்த்துகோங்க,தண்ணியில கால் வைக்காதிங்க,கொஞ்சம் deep ஆக உள்ளே போயிருக்கு ,இந்த oinmet போடுங்க…

அவனின் கையை பிடித்து கொண்டு,தத்தி தத்தி நடந்து வந்தவளை,மறுபடியும் தூக்கி கொண்டு கார்க்கு சென்றான்….

தேங்க்ஸ் அர்ஜுன்..

எதுக்கு அம்மு..??தூக்கிட்டு வந்ததுக்கா??கேட்டுவிட்டு சிரித்தான்..

சரி அப்படியே வெச்சிக்கோ என்று அவளும் சிரித்தாள்…

வீட்டுல அங்க யாரு இருக்காங்க அம்மு??உன்னோட friend இருக்காங்களா??

இல்லை அர்ஜுன் எல்லாரும் வெளிய போயிருக்காங்க…எப்போ வருவாங்கன்னு தெரில அர்ஜுன்….

சற்று யோசித்தவன்,

“சரி என்னோடு வா” என்று வெகு சாதாரணமாக கூறியவனை முறைத்தாள் ஆனாலும் உள்ளுக்குள் அவளுக்கு ரொம்ப சந்தோசமா தான் இருந்தது…

உன்னை எதுவும் பண்ண மாட்டேன் நம்பி வாங்க madam..

நம்பாம தான் இப்போ உன்னோடு இருக்கேனா அர்ஜுன் ..

அவ்வளவுலாம் நம்பாத அம்மு…உன்னோட விஷயத்துல நான் அவ்வளவு நல்லவன்லாம் இல்லை சரியா!!

சரிங்க சார்..

அவளை அவன் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லும்போதே மருந்தின் வீரியத்தால் உறங்கி விட்டாள்…

அம்மு என்ன அதிசயம் எதுவும் பேசாம இருக்க என்று அவளை திரும்பி பார்த்தான்..நன்கு உறங்கி விட்டாள்…

காரை கொஞ்ச நேரம் சாலையோரம் நிறுத்தியவனுக்கு,சொல்ல முடியாத அளவுக்கு வேதனையாக இருந்தது….

இப்படி ஒரு பெண் எனக்கு கிடைத்தும்,ஏன் அவளோடு என்னால் அவளை மனைவியாக ,காதலியாக பார்க்க முடியவில்லை,என் மனம் ஏன் அதை மறுக்கிறது….இதை எல்லாம் யோசித்தவனுக்கு கண்ணீல் நீர் வழிந்தது…

அவளின் அருகில் சென்று,அவள் தூங்கும் அழகையே பார்த்து கொண்டு இருந்தான்….அவள் இங்கே என்னோடு இருக்கும் வரை சந்தோசமாக இருக்க வேண்டும் என்று யோசித்தவன்,அவளின் இதழின் மேல் இதழ் பதித்தான்…அவளை பிரியவே மனம் இல்லை…

அவனை பொறுத்தவரை அவள் அவனுக்கு வேண்டும்…ஆனால் காதலியாகவோ,மனைவியாவோ இருக்க கூடாது…அவளை அவனின் கூடவே எவ்வளவு நாள் வைத்திருப்பான் என்றும் அவனுக்கு தெரியாது..

இதை எல்லாம் யோசித்தவனுக்கு மறுபடியும் மனம் வேதனையாக தான் இருந்தது…

(aaya aur meree aankhon ke saamane hee gaayab ho gaya )ஏண்டி ஏன் கண்ணு முன்னாடி வந்து தொலைச்ச…

Mujhe tumase pyaar hai,lekin min tumase pyaar Nahin kar sakata(I love you but I cant love you)

அவளை அப்படியே தூக்கி கொண்டு ரூமிற்கு சென்றான்…படுக்கையில் படுக்க வைத்தான்…அதுவரையுமே அவளுக்கு உறக்கம் கலையவில்லை…

அம்மு! என்று அழைத்து கூட பார்த்தான்…

சிறிது நேரம் அவள் உறங்குவதே பார்த்து கொண்டு இருந்தான்….அப்போது தான் நியாபகம் வந்தவனாக அவளின் காலை பார்த்தான்…அந்த பாதத்தை பார்த்தவனுக்கு வேதனையாக தான் இருந்தது…அந்த பாதத்தின் மேல் இதழ் பதித்தான்…பின்பு அவளின் பாதத்திற்கு oinment போட்டு விட்டான்…

“தவமே செய்யாத வரம் நீ

பெண் கடலே முத்தங்கள் இடு நீ”

“எதை நீ சொன்னாலும் வியப்பேன்

உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன்

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்

உன் குரலை செல்போனில் பதிப்பேன்

பொழுதும் உன்னோடு இருப்பேன்

உன் சிரிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்”

சிறிது நேரம் அவளின் அருகில் அமர்ந்து இருந்தவன்…தன்னை சுத்தம் செய்து கொண்டு முடித்தவன்,பால்கனிக்கு சென்று அமர்ந்து கொண்டான்…மனதில் அவ்வளவு கேள்விகள் எழுந்தது ஆனால் பதில் தான் கிட்டவில்லை…

பால்கனியில் இருந்து இவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்…அவளை ஏன் இப்படி பூ போல் பாதுகாக்கிறேன் என்று புரியவில்லை…

“பெண்கள் எல்லாம் போதைக்கு மட்டும் தான் “என்று நினைத்து கொண்டு இருந்தவனை மொத்தமாக மாற்றியது அம்ரிதாவின் குழந்தை தனம் தான் என்றாள் மிகை இல்லை…

அவனுக்கு முதன் முதலில் அவளை பார்த்த நியாபகம் வந்ததும் சிரிப்பு தான் வந்தது… அவள் ரயிலில் ஏறிவருவதற்கு முன்பே அவளை பார்த்து விட்டான்…

முதலில் அவனின் கண்ணில் பட்டது அவளின் நீண்ட கூந்தல் தான் அதை பார்த்ததும்,அவளின் முகத்தை பார்க்க ஆர்வம் வந்தது…அவள் ரொம்ப நேரம் திரும்பவே இல்லை…அவளுக்கு சிறு பிள்ளை போல் அறிவுரைகளை வழங்கிய பெற்றோர்களிடம் செய்யும் வாக்கு வாதம் பார்க்க அவ்வளவு சிரிப்பாக இருந்தது…

ஐயோ போதும் அம்மா ,காதுல ரத்தம் வந்துரும் போல,

இங்க பாரு அம்மா,நான் இல்லைன்னு நெனச்சிகிட்டு ரொம்ப சந்தோச படாத,போன வேகத்தில் கூட திரும்ப வந்துடுவேன் சரியா!!என்று அவளின் அம்மாவை கையை ஆட்டி எச்சரித்து கொண்டு இருந்தாள்..

இருடி நீ வரதுக்குள்ள ஒரு மாப்பிள்ளை பார்த்து உனக்கு கல்யானம பண்ணி வெச்சிடுறேன்…அங்க போனா தான் உனக்கு என்னோட அருமை புரியும்டி என்று அவரும் அவளிடம் விடாமல் பேசிக்கொண்டு தான இருந்தார்…

ஹஹஹா என்றவள்,நீ பார்க்கிற பையன “நீயே கல்யாணம் பண்ணிக்கோ” என்று அழகு காட்டிவிட்டு ரயிலில் ஏறி இருந்தாள்…

அவள் உள்ளே வந்ததும் தான் அவன் அவளை பார்த்தான்…அவளின் கண்ணிற்கு ஈடு இணையே இல்லை போல என்று தான் தோன்றியது அதை எல்லாம் விட அவனிற்கு அவளிடம் ஏதோ ஒரு விஷயம் அவளின் முகத்தில் பிடித்து இருந்தது..

யாரிடம் இல்லாத ஒன்று இவளிடம் அப்படி என்ன ஈர்க்கிறது என்று பார்த்தவனுக்கு, “அவளின் நாசியில் சுடர் போல் மிளிரும் மூக்குத்தியை” ரொம்ப பிடித்து இருந்தது…

“நிச்சயமாக இவள் பேரழிகி தான்”…அப்போது தான் அவளும் அவனை பார்த்தாள்….

அதை எல்லாம் இப்போ நினைத்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது….

அவள் எழுந்து அமர்வதை பார்த்தவன்,அவளிடம் சென்றான்…

அம்மு!!ARE YOU OKEY..

அர்ஜுன் பசிக்குது…

அவளை பற்றி யோசித்து கொண்டு இருந்தவனுக்கு ,அப்போது தான் உரைத்தது…

Sorry அம்மு..

இரு எதாவது சமச்சி தரேன் என்று கிட்சன்க்கு சென்றவன் பின்னாடியே,முக்காடு போல் பெட்ஷீட்டை போட்டு கொண்டு சென்றாள்…

“என்ன அம்மு இது” என்று அவனும் சிரித்து விட்டான்..

ரொம்ப குளிரா இருக்கு அர்ஜுன் அதான்…

அர்ஜுன் எனக்கு ஒரு சந்தேகம் உனக்கு சமைக்க தெரியுமா ??

அவ்வளவா ஏதும் தெரியாது அம்மு என்று கையை விரித்தான் ஆனால்சமைக்க தேவையான எல்லா பொருளுமே இருக்கிறது அம்மு…

அப்போ ஓகே அர்ஜுன் நான் சமைக்கிறேன்…

நிஜமாவா!!!

ஏன் என்ன பார்த்த சமைக்க தெரியாத மாதிரியா இருக்கு…

பின்ன பெரிய செப் மாறிலாம் தெரில்லையே அம்மு…

அது சரி என்றவள்…அவனிடம் வெங்காயம்,தக்காளி எல்லாம் கட் பண்ணி கொடு என்றதும்,

அவன் அவளை முறைத்தான்…

என்ன ஆச்சு??

என்னடி இது எல்லாம் எனக்கு தெரியாது என்றதும் ,அவனுக்கு இப்படி தான் கட் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தாள்…

நமக்கு HEALTH முக்கியம் அர்ஜுன்…வெளிய சாப்பிடுரதெல்லாம்  உடம்புக்கு நல்லது இல்லையே…

அதனால அம்மு …

கத்துக்கோ அர்ஜுன் …இது தப்பெல்லாம் கிடையாது…பசங்க சமைச்சா அசிங்கம்லாம் கிடையாது..

 அவள் அவனிடம் பேசிகொண்டே தக்காளி சட்னி வைத்து முடித்து விட்டாள்….

அம்மு எப்படி செஞ்ச தக்காளி சட்னி!!

அதுவா என்றவள்,

முதலில் சின்ன வெங்காயம்,தக்காளி அதனோடு வரமிளகாய் எல்லாம் கொஞ்சம் திப்பி திப்பியாக அரைத்து,அதன் பிறகு எண்ணை,கடுகு ,அரைத்து வெச்ச வெங்காயம் நன்றாக அதன் வாசம் போகும் அளவுக்கு வதக்கி விட்டு, அது போல் தக்காளியையும் நன்கு வாசம் போகும் அளவுக்கு வதக்கி விட்டுட்டு,கொஞ்சம் கரம் மசாலா  சேர்த்து,எண்ணெய் பிரிஞ்சி வர அளவுக்கு வதக்கி விட்டுடு,திரும்ப ஒரு முறை எண்ணெய்,கடுகு,கறிவேப்பில்லை எல்லாம் சேர்த்து தாளித்து விட்டு இறக்கிரனும் அவ்வளவு தான் அர்ஜுன்…

அவன் சப்பாத்தி மாவை பிசைந்ததும், அவள் இருவருக்கும் சப்பாத்தி செய்து முடித்து table மேல் எடுத்து வைத்து விட்டு,அவனிற்கும் பரிமாறிவிட்டு தானும் சாப்பிட்டாள்…

இதுக்கு முன்னாடி எல்லாம் அவனுக்கு சாப்பிட கூட நேரம் இருக்காது சொல்ல போனால் கிட்சேன் எங்கு இருக்கு என்றே தெரியாது..இதை எல்லாம் எதற்காக அவன் அவளுக்காக செய்தான் என்று புரிந்து கொள்ள தவறினான்…

அம்மு !!WOW!!உண்மையாவே நன்றாக இருக்கு..இப்படி ஒரு டேஸ்ட்ல சாப்பிட்டதே இல்லை…உங்க அம்மா மாறியே நீயும் சூப்பராக சமைக்கிற அம்மு…

அவள் கெத்தாக இல்லாத காலரை தூக்கி கொண்டாள்…

இருவரும் சாப்ட்டு முடித்து விட்டு நேரத்தை பார்த்தனர் நேரம் பன்னிரெண்டை கடந்து இருந்தது …

அவளை பால்கனிக்கு அழைத்து சென்றான்…

தேங்க்ஸ் அம்மு ..

எதுக்கு …

ரொம்ப நாளைக்கு அப்பறம் நல்ல சிரிச்சிருக்கேன்,நல்லா சாப்பிட்டு இருக்கேன்…

அப்படியா சரி சரி …

சிறது நேரம் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…

என்ன அர்ஜுன் look எல்லாம் பலமா இருக்கு ..என்ன விஷயம் …

உன்கிட்ட ஏதோ MAGIC இருக்கு அம்மு …உன்னோடு இருந்தா நேரம் போறதே தெரியல..

அப்படியா அர்ஜுன்!!

அம்மு நீ எப்போ இருந்து இந்த மாறி NOSEPIN போட்டுருக்க…

காலேஜ் முடிச்சதுக்கு அப்பறம் தான் அர்ஜுன்…பிடிச்சி இருந்துச்சி மூக்குத்தி போட்டு கிட்டேன்…

உன்னோட முகத்துக்கு ரொம்ப அழகா இருக்கு அம்மு…

அப்போ அர்ஜுன்க்கு NOSEPIN போட்ட பொண்ணுங்கள ரொம்ப பிடிக்குமோ ??

ஹாஹஹா சிரித்தான்…

அப்படி எல்லாம் இல்லை அம்மு…நான் NOSEPIN போட்டு பார்த்த ஒரே பொண்ணு நீ தான்…உங்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதும் இந்த மூக்குத்தி தான் அம்மு ….

நான் பார்த்த பொண்ணுங்கள்ள நீ மட்டும் SOMETHING ELSE அம்மு…

உன்னோட கண் பார்வைக்கு ஆயிரம் பேர் காதலில் விழுவாங்க, ஆனால் இந்த NOSEPIN ல் விழுந்த ஒரு ஆள் நான் தான் அம்மு…

என்று சொல்லி கொண்டே அவளின் அருகில் சென்று அவளின் நாசியின் மேல் இருந்த மூகுத்தியின் மேல் இதழ் பதித்து விலகினான்…

அவன் இந்த முறை இதழ் பதிக்கும்போது அவள் முகத்தில் அதிர்ச்சி எல்லாம் இல்லை ,அவனை காதலாக தான் பார்த்தாள்…

அந்த கண்ணில் தெரிந்த அளவில்லா காதலில் அவன் தான் அதிர்ச்சியாகி விட்டான்…