ரூமிற்கு செல்லும் வரை அவள் அவளாகவே இல்லை…உள்ளே வந்ததும் மேகவியை அணைத்து அங்கே நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி அழுகையில் கரைந்தாள்…
இங்க பாரு அம்மு!!
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் அம்மு…
குளிச்சிட்டு வா பேசிக்கலாம் போ..
அவளை குளிக்க அனுப்பி விட்டவளுக்கும் ரொம்ப வேதனையாக தான் இருந்தது…அந்த அர்ஜுன் என்ன லூசா…ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு கூட தெரில்ல இவனெல்லாம் பெரிய பிசினஸ் man வேற…
என்ன மனுஷங்களோ…
பூ போல இருக்கும் இவளை துன்புறத்த அவனுக்கு எப்படி தான் மனம் வந்ததோ??
எங்கயாவது போய் முட்டிகிட்டு கீழ விழட்டும் ராட்சசன்…
அம்ரிதா வந்ததும் அவளை அழைத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே சென்று அமர்ந்து இருந்தனர்…
அம்மு!!எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கணும்…
Are you LOVE HIM…
தெரிலடி…
அவன் கேட்டதும் சரி தான…அவன் உன்கிட்ட இந்த அளவுக்கு ADVANTAGE எடுத்துருக்கான் ஆனா நீ ஏன் அவனை எதுமே சொல்லல….இந்த விஷயத்துல எனக்குமே ஒண்ணுமே புரிலடி…
கொஞ்சம் யோசிச்சி தெளிவா சொல்லு…
அவன் உனக்கு வேண்டுமா??
தெரில மேகு ….ஆனா அவன் என்னை “அம்முன்னு” கூப்பிடும்போது ஏதோ ஒரு பீல் அவன் மேல எனக்கு வந்துருது, ஆனா காதலான்னு தான் தெரில….
சரி விடு நீ ரொம்ப யோசிக்காத….வந்த வேலைய மட்டும் பாரு அம்மு சரியா…அவன பத்தி ஏதும் யோசிக்காத சரியா!!இப்போ நல்லா தூங்கு காலைல கிளம்பிரலாம் …
அம்முவை படுக்க வைத்து,அவள் உறங்கியதும் தான் மேகவியும் உறங்கினாள்…
மேகவி வாய் வைத்த நேரமோ என்னவோ!!…அர்ஜுன் ரொம்ப வேகமாக சென்று கொண்டு இருந்ததால்,எதிரே வந்த லாரியில் இடித்து விட்டான்,இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து அவன் மருத்துவமனையில் சேர்க்க பட்டான்…மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு வந்தது….
டாக்டர்,KYA CHAL RAHA HAI(என்ன ஆச்சு)
KOEE BADEE BAAT NAHIN ,BAS HAATH AUR PAIR MEIN THODA DAED HAI(பெரிதாக ஏதும் ஆகவில்லை,கையிலும் காலிலும் அடி அவ்வளவு தான்)
MUJHE DO SAPTAAH TAK BISTAR PAAR AAARAM KARANE KEE AAVASHYAKAATE HAI(இரண்டு வாரம் பெட் ரெஸ்ட் எடுக்கணும்)
என்று கூறிவிட்டு அர்ஜுனை பார்க்க உள்ளே சென்றனர்…
அர்ஜுன் என்று அவனை அழைத்ததும் கண்களை திறந்து பார்த்தவன் திரும்ப கண்களை மூடி கொண்டான்…
அவன் கடைசியாக விபத்து நடக்கும்போது கூட அம்ரிதாவின் அழுத முகமே அவன் கண் முன் தோன்றியது….
அவள் வாழ்கையில் தான் செல்லாமலே இருந்திருக்க வேண்டும்….என்னால் தான் அவள் அப்படி அழுதாள்…இனி அவள் வாழ்க்கையில் நான் தலையிடவே கூடாது என்று அவளை பற்றி யோசித்து கொண்டே இருந்தவன் எதிரே வந்த லாரியை கவனிக்க தவறினான்..
சிறிது நேரத்திற்கு பிறகு சம்யுக்தா வந்து, “அண்ணா” என்று அவள் அழுதுகொண்டே அழைத்ததும் தான் கண் திறந்து பார்த்தான்..
சம்யு, I M OKEY ..PLS DON’T CRY
அர்ஜுன் என்று அவனின் தாய் வந்து அழைத்ததும் ,அவ்வளவு பெரிய ஆண்மகன் கூட குழந்தை போல் அவனின் தாயின் கையை பிடித்து கொண்டு அழுது விட்டான்…
ROO MAT,MERE BACHCHE(அழுகாத கண்ணா )
அவனுக்கு சாப்பாடு எல்லாம் குடுத்துவிட்டு சென்றதும் அவன் உறங்கி விட்டான்….
இப்போது மருத்துவமனையில் இருந்து அர்ஜுன் வீட்டிற்கு வந்து விட்டான்…உடலில் ஏற்பட்ட காயங்கள் கூட மறைந்து விட்டது ஆனால், மனதில் ஏற்பட்ட காயம் மட்டும் அப்படியே தான் இருந்தது…
உன்னை நான் பார்த்திருக்கவே கூடாது அம்மு!!!
முழுதாக ஒரு மாதம் கடந்து விட்டது…இனி அவளை நான் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்தவன் கனடாவிற்கு சென்று விட்டான்..அவன் வீட்டில் எல்லாம் சரி ஆகட்டும் பின்பு போகாலாம் என்று கூறினார்கள்…முடியவே முடியாது என்று ஓடி வந்து விட்டான்…
கனடாவிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது…ஆனால் அவளின் நியாபகம் மட்டும் அப்படியே இருந்தது….
அவளை, பார்த்த நாளில் இருந்து இன்று வரை அவன் ஒரு பெண்ணை கூட தேடி சென்றதே இல்லை …அவன் மனதில் இன்று வரை அவள் மட்டுமே இருக்கிறாள்…இது இவனுக்கு எப்போது தான் புரியுமோ ??
இது சரி வராது என்று யோசித்தவன்,ஒரு பெண்ணின் நம்பருக்கு கால் செய்து அவளை தன் ரூமிற்கு அழைத்தான்…
அவள் வருவதற்கு ரொம்ப நேரம் ஆனது அப்போது தான் “அம்ரிதா” அழைத்திருந்தாள் …
எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்து கொண்டு இருந்தவன்…
“சரி எடுப்போம்” என்று எடுத்ததும் கட் ஆகி விட்டது…
திரும்ப அவளுக்கு அழைத்தான்…
அவளும் எடுத்து விட்டாள்…
சொல்லு அம்ரிதா!!
அவனின் குரலை கேட்டதும், அவளுக்கு தன் ஒட்டு மொத்த தைரியமும் வடிந்தது போல் இருந்தது…இந்த ஒரு மாதத்தில் அவள் அவனை பற்றி யோசிக்காத அளவுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்தாள்…நெறைய ஆடைகளுக்கு டிசைன் செய்வது,நெறைய MODELLING ஷோவிற்கு சென்று அவள் திறமையை மேம்படுத்திகொண்டாள் ,தன்னை பிஸியாகவே வைத்து கொண்டாள்….அதனால் அவனின் நினைவுகளில் இருந்து தப்பித்து கொண்டு இருந்தாள்..
ஆனால் இன்று அவனின் குரலை கேட்டதும்,
அம்ரிதா இருக்கியா ??
YES I M HERE…
சொல்லு அம்ரிதா என்ன விஷயம் போன் பண்ணிருக்க….??
Free ஆக இருக்கிங்களா இல்லை பிஸி ஆக இருக்கிங்களா??
என்னனு சொல்லு அம்மு….
“உங்களை பார்க்கணும் போல இருக்கு…பார்க்க முடியுமா??”
“ஹே அம்மு” என்ன சொல்ற!!…எங்க இருக்க நீ??….நான் கனடால இருக்கேன்…
நானும் அங்க தான இருக்கேன்…
விளையாடதா அம்மு…??
மும்பைல ஒரு ஷோ நடந்துச்சில அவங்க தான் கால் பண்ணிருந்தாங்க,இங்க கனடால ஷோ நடக்குதுன்னு சொன்னாங்க அதான் இங்க வந்துருக்கேன்…காலேஜ்ல இது நல்ல வாய்ப்பு USE பண்ணிகோங்கன்னு சொன்னாங்க…என்று ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தாள்…
அம்மு உன்னை எத்தனை தடவை தான் நான் திட்றது….உனக்கு புரியுதா இல்லையா??
யார்கூட வந்த??
மேகவி கூட தான் வந்தேன்…அவங்க அம்மா அப்பா எல்லாரும் இங்க இருக்காங்க …அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை…
காலையில் அந்த ஷோவிற்கு தேவையான ஆடைகளை எல்லாம் வடிவமைக்க தேவையான துணிகளை எல்லாம் வாங்கிட்டு வெளிய வரும்போது தான் உங்களை பார்த்தேன்…
இப்போ உங்களை பார்க்கணும் போல இருக்கு…வர முடியுமா???
“அவள் தன்னை தேடி இருக்காள்” என்று நினைத்தவனுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது…
சரி எங்க இருக்கணு சொல்லு வரேன்…
டோர்ராண்டோல இருக்கேன்…
நானும் அங்க தான் இருக்கேன்…பத்து நிமிஷத்துல வந்துருவேன்….
சரி …
அவளின் முகத்தை பார்பதற்கு அவ்வளவு ஆர்வமாக இருந்தது…அவளை பார்த்து ஒரு மாதம் ஆகி விட்டது…ஆனால் என் என்று இவன் யோசிக்கவில்லை..
அப்போது வர சொன்ன பெண்ணை கூட வர வேண்டாம் என்று காசை கொடுத்து அனுப்பி விட்டான்…
உடனே அழைத்தான் அவளுக்கு,
அம்மு !!எங்க இருக்க??
அவன் வரும்போதே மேலிருந்து பார்த்து விட்டாள்…
என்னை எதுக்கு இப்படி தேடுகிறான்…கேட்டால் காதல் இல்லைன்னு கதை சொல்ல வேண்டியது..
உன்னை பார்த்துட்டேன் அர்ஜுன்…கீழ வரேன் இரு..
அவள் கீழே வந்ததும் அவளை கீழிருந்து மேல் வரை பார்த்தான்…
எல்லாம் ஓகே தான அர்ஜுன்…??
நீ அன்னைக்கு பார்த்த மாறி தான இருக்கேன்…
ஏதோ ஒன்னு குறையுற மாறி தான் இருக்கு அம்மு…
சரி அதை அப்பறமா பார்த்துகிறேன்…
கருப்ப நிற கிராப் டாப்,ஒரு லாங் ஸ்கர்ட் அணிந்து இருந்தாள்…எப்போதும் போல் முடியை பின்னி இருந்தாள்…குளிருக்கு SWEATER அணிந்து இருந்தாள்…பார்க்க எப்போதும் போல் அழகாக தான் இருந்தாள்….கொஞ்சம் இளைத்தாற்போல் இருந்தாள்….
என்ன அர்ஜுன் எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல சரியா இருக்கா??
என்ன அதிசயம் madam பேச்சு எல்லாம் ஒரு மார்கமாக இருக்கு…
அப்படியா அர்ஜுன்!!
கொஞ்ச தூரம் நடந்து கொண்டே சென்றவர்கள்,ஒரு இடத்தில் அமர்ந்தனர்…அர்ஜுன் COFEE குடிக்கலாமா??
SURE அம்மு..
அப்போது தான் அவள்,அவனை பார்த்தாள்…கண்களின் கீழ் கருவளையம் வந்து இருந்தது,முகத்தில் சொல்ல முடியாத அளவுக்கு ஏதோ வேதனை தெரிந்தது…அவனும் இளைத்தது போல் தான் இருந்தான்…
அப்போது தான் அவன் கையில் ஒரு பெரிய காயம் வடுவாக தெரிந்தது…
அதை எல்லாம் நான் மறந்துட்டேன் அர்ஜுன்….அதை பத்தி பேச எதுவும் இல்லை விட்டுடு….
சரி அம்மு…
திடீர் என்று ஒரு பெண் வந்து அர்ஜுனை அணைத்ததும், அம்ரிதாவிர்க்கு அப்படி ஒரு வேகம் எழுந்தது…
உடனே அம்ரிதா எழுந்து,HOW DARE you??HE IS MY BOYFRIEND..என்று கூறியவள்,அவளை அறைய கையை ஓங்கியதும் அர்ஜுன்,அதை தடுத்து விட்டான்…
அம்மு அம்மு!!!ஜஸ்ட் தெரிஞ்சவங்க தான் அம்மு கோவபடாத…
அதுக்குன்னு உன்னை வந்து கட்டிபிடிப்பாங்களா அர்ஜுன்!!…
BABY,WHO IS SHE ,என்று அந்த பெண் வழியும் குரலில் கேட்டாள்…
மறுபடி மறுபடி அந்த பெண் யாரென்று கேட்டதால் அம்ரிதா உணர்ச்சி வசத்தில் “HE IS MY HUSBAND” என்று அர்ஜுனின் கைக்குள் கையை கோர்த்து கூறிவிட்டாள்…
அவள் அப்படி கூறியதும்,அர்ஜுனுக்க்குள் இனம் புரியாத உணர்வு ஒன்று அவனை தாக்கியதும் அம்ரிதாவியே பார்த்து கொண்டு இருந்தான்..
தான் என்ன கூறினோம் என்று அப்போது தான் அம்ரிதாவிர்க்கு புரிந்தது…
என்னது நானா!!! இப்படி கூறினேன் ஆனால், இது எப்படி சாத்தியம் என்று யோசித்து கொண்டே இருந்தவள் அவனின் கையில் இருந்த கையை பிரித்து விட்டு அவள் தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தாள்…
இவனை பற்றி தெரிந்தும் நான் எப்படி இந்த மாறி அவனை நினைக்க முடிகிறது…