அவன் அப்படி கேட்டதும் அவளுக்கும் சற்று கோவம் எட்டி பார்த்தது….
ஏன் அர்ஜுன் கேட்கிற உனக்கும் கொஞ்சம் வேணுமா??
என்னடி நக்கலா??
இத பாரு அர்ஜுன்!!
“ என்னை நீ “டி” போட்டா உன்னை “டா” நான் போட்டு கூப்பிடுவேன்” என்னை விட பெரியவங்கன்னு பார்க்கிறேன்…
முடிஞ்சா கூப்பிடுடி…
“போடா லூசு” அர்ஜுன்…
அவன் அவளை கோவமாக பார்த்தான்…அதை எல்லாம் அவள் கண்டுகொள்ளாமல்,அந்த வெளி நாட்டினரிடம் பேசிகொண்டிருப்பதை பார்த்தவனுக்கு இன்னும் கடுப்பாக வந்தது…
இவ ஏன் நான் எதை சொன்னாலும் கேட்க மாற்றா??
இந்த ஒரு விஷயத்தை அவன் கவனிக்க தவற விட்டுவிட்டான்…அவள் ஏன் தன் பேச்சை கேட்க்க வேண்டும் என்று யோசிக்கவில்லை…அவள் மேல் எனக்கு எதற்காக இந்த அளவுக்கு POSSESSIVE ஆகிறது என்று அவன் யோசிக்க தவறினான்…
திடீர் என்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது….
இவள் வெளிநாட்டினரிடம் பேசி கொண்டு இருந்ததும்…இவன் உடனே அவளின் இன்னொரு பக்கம் இருந்த பிசினஸ் man ஒருத்தரிடம்,
ARRAY பையா AAP KAISE HO(எப்படி இருக்கீங்க)
BAHUT DIN HO GAYE DEKHE HUE(பார்த்து ரொம்ப நாள் ஆச்சு)
அவன் ஹிந்தியில் உரையாடியதும்,அம்ரிதாவிர்க்கு அப்படி கோவம் வந்தது…
“MADAM ARE you OKEY” என்று அந்த இத்தாலியன் வேறு கேட்டதும்,
இவன் தொல்ல தாங்க முடில…
“போடா” என்று கூறிவிட்டு,
WHAT mam??
WAIT,I M COMING…
டேய் அர்ஜுன்!!!
அப்போதுஅவன் அவளை பார்த்து கெத்தாக சிரித்தான்…
இப்போ என்ன பண்ணுவிங்க madam..
உன்கிட்ட நான் பேசவே விரும்பல நான் கிளம்பறேன்…அதுக்கு முன்ன எனக்கு அறிவு இல்லையான்னு எதுக்கு கேட்ட…
“நீ அன்னைக்கு என்னை “KISS “பண்ணதுக்கு நான் தான் உன்கிட்ட அறிவு இல்லையான்னு கேட்கணும்..”
எல்லாம் கேட்டு முடிச்சிட்டியா??என்று கேட்டவன் அவளின் போனை பிடுங்கி அவளின் தம்ப் வைத்து போனை ஓபன் செய்தவன், அவனின் போன் நம்பரை பதித்து கொடுத்தான்…அதிலிருந்து அவனின் நம்பருக்கு அழைத்து அவளின் எண்ணை SAVE செய்து கொண்டான்..
ஹே அர்ஜுன்!!இந்த மாதிரிலாம் பண்ணாத எனக்கு சுத்தமா பிடிக்கல..
“உனக்கு பிடிச்சிருக்கான்னு நான் கேட்கவே இல்லையே..”
“சரியான லூசுடா நீ..”என்று கூறிவிட்டு அவள் செல்லும்போது அவளின் கையை பிடித்து தடுத்தவன்,
“இன்னொரு முறை உன்னை எந்த ஒரு ஆண்களோடயோ பேசிகிட்டு இல்லை, சுத்திகிட்டு இருக்கிறத பார்த்தேன்னு வெச்சிக்கோ!! உன்னை ஏதும் பண்ண மாட்டேன்,ஆனா அவனை என்ன வேணாலும் பண்ணிருவேன்…
அவனுக்கு தன் மேல் எவ்வளவு கோவம் இருக்கிறது என்று அவன் அவளின் கையை பிடித்தது வைத்தே புரிந்துவிட்டது….
ஆனா ஏன் அர்ஜுன்…உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் வரணும்…
சரி அதெல்லாம் இருக்கட்டும்,யார்கூட வந்த டைம் என்ன?இப்பவே கிளம்புறயா??இல்லை எங்கயாவது ஹோட்டல்ல STAY பண்ணிருக்கியா??
அர்ஜுன் நான் கேட்ட எந்த கேள்விக்குமே நீ பதில் சொல்லவே இல்லை…நீ கேட்கிற கேள்விக்கு மட்டும் நான் ஏன் பதில் சொல்லணும் என்று கேட்டவள் கையை கட்டிக்கொண்டு அவனை கோவமாக பார்த்தாள்…
அது “சரி” என்றவன்,அவளின் கையை பிடித்து அழைத்து கொண்டு இல்லை இல்லை இழுத்து கொண்டு அவனின் காருக்கு அழைத்து சென்று அவளை உள்ளே சீட்டில் தள்ளி விட்டு விட்டு,தானும் அமர்ந்து காரை எடுத்து கொண்டு பறந்தான்…
அவனுக்கு அங்கு வந்த வெளிநாட்டினரிடம் அவ்வளவு பழக்கம்லாம் இல்லை…தொழில் ரீதியாக அவர்கள் தேவை அவ்வளவுதான்…
இவன் அம்ரிதவை கை பிடித்து அழைத்து செல்லும்போது MAARC தான் பார்த்தான்…
Ohh அர்ஜுன் கேர்ள் FRIEND…HE SO LUCKEY என்று பெருமூச்சி விட்டான்…
காரில் அவன் அமர்ந்ததும்,காரை லாக் செய்து விட்டு காரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான்…
இவள் உடனே போனை எடுத்து மேகவிக்கு அழைத்து ஹோட்டல்க்கு வந்துரு,நானும் வந்துருவேன் என்று கால் செய்து கூறிவிட்டாள்..நல்லவேளையாக அவள் தனியாக வரவில்லை அவளோடு அஜயும் வந்திருந்தான்….
“அர்ஜுன் இங்க பாரு நீ பண்ற எதுமே சரி இல்லை….”
அப்படியா !!
“அம்மு” என்று அழைத்தவன்,காரை ஓரங்கட்டி விட்டு அதற்க்கு மேல் அவன் எதுவுமே பேசவில்லை,அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…
“இவன் இப்படி கூப்பிட்டா நமக்கு ஏன் மூளை வேலை செய்ய மட்டேங்குதுன்னு தெரிலையே!!”
அவளின் மனசோ,
“அவன் உன்னை எவ்வளவு காதலா இப்படி கூப்பிடுறேன் ரசிச்சிகோ அதை விட்டுட்டு தேவை இல்லாம ஏன், எதுக்குன்னு யோசிக்காத..”
“ஆனால் மூளையோ மனசு சொல்றத கேட்டா நாசமா தான் போவ…”அவன பார்க்காத, முக்கியமா அவன் கண்ணை பார்க்கவே பார்க்காத..
அம்மு இங்க பாரேன்…
நான் ஏற்கனவே கோவமாக இருக்கேன் எங்கிட்ட பேசாத அர்ஜுன்…
நீ தான் நார்த் இந்தியன்ஸ் பார்த்துலாம் மயங்க மாட்டியே !!அப்பறம் ஏன்? என்னை பார்க்க மாற்ற..?
உன் மேல எனக்கு கோவமாக இருக்கு…அதனால உன்னை பார்க்க மாட்டேன் போ..
அம்ரிதா அவனை பார்த்திராத,உன்னை கெத்தாக காட்டிக்கோ….என்று அவளே அவளுக்கு கட்டளைகளை இட்டாள்
காரை எடு அர்ஜுன் tired ஆக இருக்கு…கசகசன்னு இருக்கு ரூமுக்கு போகணும்…
அவளின் அருகில் திரும்பியவன்,
“அம்மு”
என்ன??…என்றவளுக்கு குரலே எழவில்லை….
“அம்ரிதா கெத்தா விட்றாத” என்று தனக்கு தானே கூறிகொண்டவள் விரலை இறுக பிடித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள்..
“அம்மு”
தானாகவே அவன் புறம் திரும்பியவள்,
சொல்லு அர்ஜுன் !!என்று தலையை குனிந்து மறுபடியும் விரலை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவளின் விரலை பிடித்து அந்த விரலை தன் கையோடு சேர்த்ததும்,அவள் அவன் கண்ணை பார்த்தாள்…
அதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை….
அவனின் மூச்சு காற்று அவள்மேல் படும் அளவுக்கு அவள் அருகில் சென்றவன்,
எதுக்கு இந்த DRESS போட்டுக்கிட்டு,stageல PERFORM பண்ண வந்த,அங்க இருந்த பாதி ஆண்கள் உன்னையும் ,இதோ நல்ல வெள்ளையா தெரியுதே இந்த இடுப்பையும் தான் பார்த்தாங்க என்று சுட்டி காட்டியவன்,அவளின் உடையை அவனே சரி செய்து விட்டான்…
“அவன் உடையை சரி செய்ததும் அவள் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது…”
Model யாரையாவது இதற்க்கு ரெடி பண்ணி அவங்கள நீ டிசைன் பண்ண டிரஸ் போட சொல்லிருக்கணும் அதை விட்டுட்டு உன்னை யாரு இப்படி வர சொன்னங்க…
“இதுவே கடைசி முறையாக இருக்கணும் சரியா என்று அவளின் கன்னத்தை தட்டி நகர்ந்து விட்டான்…”
UFF என்று பெரு மூச்சி விட்டவள்,அவனின் அடுத்த செயலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை….
அவளின் அருகில் நெருங்கி வந்தவன்,அவள் எதிர்பாரா நேரத்தில் கன்னத்தில் நல்ல அழுந்த முத்தமிட்டான்…..
ஏன்னு அப்போ கேட்டல்ல இப்போ சொல்றேன் கேளு,என்று அவன் சொல்லும்போது “ஒருவேளை தன்னை காதலிக்கிறானோ!! “என்று தான் தோன்றியது…
“YOU ARE MY BABY DOLL…”
அவன் இப்படி கூறியதுமே,இவன் என்ன லூசா இருப்பானோ? என்று தான் தோன்றியது…அவன் கொடுத்த முத்தத்தின் தாக்கம் அவள் முகத்தில் இன்னும் குறையவேயில்லை ..
அம்மு இறங்கு சாப்பிட்டு விட்டு போய்டலாம் என்று ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தினான்….
அம்மு…
என்ன?
வா சாப்பிட உள்ளே போலாம் !!என்று அவன் அழைத்ததும் அவளும் உள்ளே செல்ல இறங்கும்போது அவளை பார்த்தான்…
என்ன அர்ஜுன்
ஒன்னும் இல்லை டிரஸ் சரியாக இருக்கான்னு பார்த்தேன்…
அவளுக்கு இருந்த மன குழப்பத்தை அவனிடமே கேட்டு விடலாம் என்று யோசித்தவள்,
அர்ஜுன் …
எனக்கு ஒரு சந்தேகம்..
சாப்பிட்டு தெம்பா என்ன வேணாலும் கேளு சொல்றேன் …இப்போ வா சாப்பிடலாம்…
இவனை……
சொல்லு அம்மு!! என்ன சாப்பிடுற,
எல்லாமே என்னை கேட்டுட்டு தான் செய்றியா அர்ஜுன்??
அவள் கேட்டதும் அவனுக்கு ஒரே சிரிப்பு வந்தது…
அம்மு நீ செம்மயா FUN பண்ற போ…
ஏது!! நான் FUN பண்றனா…நீ ஏன் சொல்ல மாட்ட,எங்கிட்ட அதிகமா ADVANTAGE எடுத்துக்கிற ,இதை நான் வெளிய சொன்ன ஆகும்ன்னு தெரியுமா ??
முடிஞ்சா சொல்லி தான் பாரேன்…என்று சொல்லும்போது அவனின் முகத்தில் அவ்வளவு தீவிரம் தெரிந்தது..
“பண்றதலாம் பண்ணிட்டு எதுமே பண்ணாத மாறி பேசற நீ”
நான் என்ன அம்மு உன்னை பண்ணேன்…எதுமே இன்னும் பண்ணலையே
நீ எங்கிட்ட கேட்கமலே கிஸ் பண்ற,இடுப்புல கை வெச்சி புடவை சரி செய்து விடுற இதுக்கெல்லாம் என்ன தான் அர்த்தம்ன்னு எனக்கு புரியவில்லை…
“அம்மு டிரஸ் சரி பண்ணி விட்டேன் அவ்வளவு தான்” உன்னோட இடுப்புல என்னோட கை பட்டுச்சா என்ன??எனக்கு அப்படி ஒன்னும் பீல் ஆகவே இல்லையே..பார்க்க பேபி டால் மாறி இருக்க அதான் கிஸ் பண்ணேன்…இதை எல்லாம் தப்பா பார்க்காத சரியா…
சரி அர்ஜுன் இதை எல்லாம் என்னனு சொல்றது உன்னோட பாஷையில,FRIENDship or love ??
இதுல எதுன்னு சொல்லு…யாரவது ஒரு பையன் எங்கிட்ட பேசினால் உனக்கு அவ்வளவு கோவம் வருது…இதுக்கெல்லாம் என்ன தான் அர்த்தம்??
நான் சாப்பிடலனா கூட பரவாவில்லை…இதுக்கெல்லாம் என்ன தான் அர்த்தம்ன்னு சொல்லிடு அதுவே போதும்…
பதில் தெரிஞ்சி என்ன அம்மு பண்ண போற??நீ தான் நார்த்ன்னா பிடிக்காதுன்னு சொல்லிட்ட…இதை பத்தி எல்லாம் எதுக்கு நீ யோசிச்சி உன்னோட சின்ன மூளைய கஷ்டபடுத்துற…
அதற்குள் சாப்பாடு வந்தது…அவனை முறைத்துக்கொண்டே இரண்டு சப்பாத்தியை விழுங்கினாள்…இன்னொரு சப்பாத்தி எடுத்து அவளோடைய தட்டில் எடுத்து வைத்தான்…அவள் அவனை முறைத்தாள்…
“முடி கொட்டி போய்டும்” என்று அவள் சாப்பிட்டு கொண்டே கூறும் அழகை பார்த்தவனுக்கு, மறுபடியும் அவளது குழந்தை தனத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது …
எங்கிட்ட அப்பறமா சண்டை போடுவ…இப்போ நல்லா சாப்பிடு…
இருவரும் சாப்பிட்டு விட்டு காருக்கு சென்றனர்…காரில் அமர்ந்ததுமே,அர்ஜுன் பதில் சொல்லு என்று அவன் பக்கம் திரும்பி கேட்டாள்…
என்னை love பண்றியா ??இல்லை இது நட்பா??
உனக்கு BRAIN இருக்கா அம்மு??என்று கேட்டவனும் அவளின் பக்கம் திரும்பி கேட்டான்..
இருவருக்கும் ஒரு நூலிழை தான் கேப்…அதை அம்மு கவனிக்க தவறினாள்…
எதுக்கு இப்படி கேட்கிற அர்ஜுன்….
நட்பா பழகுறவங்க இப்படி எல்லாம் செய்வாங்களா…அதும் ஒரு பையன் இப்படி எல்லாம் செய்வானா…?
அப்போ இது கண்டிப்பா நட்பு இல்லையே அர்ஜுன்…
அதை தான் நானும் சொல்றேன் அம்மு…இது நட்பு இல்லை..
அப்போ love பண்றியா அர்ஜுன்??
உன்கிட்ட TRAINல வரும்போதே கூறினேன் நியாபகம் இருக்கா ??இந்த அர்ஜுன்க்கு love,கல்யாணம் இது எல்லாம் ALLERGY மாரின்னு சொன்னனே…
அப்போ இது love ம் இல்லை அம்மு…
இந்த ரெண்டு பதிலையும் கேட்ட அம்ரிதாவிர்க்கு தன் நிலையை நினைத்து தனக்கே அவ்வளவு கேவலமாக தோன்றியது,உடல் எல்லாம் கூசுவது போல் தோன்றியது,கண்ணில் நீர் கோர்த்தது…
அப்போ உனக்கும் எனக்கும் என்ன தான் சம்மந்தம் அர்ஜுன்….
உனக்கு தான் நார்த் பசங்கள யாரையும் பிடிக்காதுன்னு சொல்லிட்டியே…இதை எல்லாம் எதுக்கு அம்மு யோசிச்சி உன்னை கஷ்டபடுத்திக்கிற…
“சில உறவு முறைகளுக்கு பெயரே கிடையாது அம்மு….”
அது போல் தான் நம்ம உறவு முறையும் பெயர் வைக்க வேண்டாம் …எதுவரை போகட்டுமோ, போகட்டும்விடு என்று ரொம்ப இயல்பாக கூறுபவனை பார்த்தவளுக்கு அவ்வளவு கோவம் வந்து அவன் சட்டையை பிடித்திருந்தாள்…
டேய்!! என்னை பத்தி என்ன நெனச்சிட்டு இருக்க???என்ன பார்த்த உனக்கு PROSTITUTE மாறி தோணுதா??என்று கேட்கும்போது அவளுக்கு அழுகை வெடித்தது…
அம்மு !!!என்னடி வார்த்தை இது…அவள் இப்படி கேட்டுவிடுவாள் என்று அவன் நினைக்கவே இல்லை…..என்னை என்ன வேணாலும் சொல்லி அசிங்கபடுத்திகோ உன்னை அசிங்கமா நீயே பேசாதா???
போதும் நிறுத்து அர்ஜுன்…என்னை இறக்கி விடு நான் கிளம்பறேன்…
அம்மு இங்க பாரு!! என்று அவளை சமாதனம் படுத்த முயற்சி செய்தான் ஆனால் முடியவில்லை…இங்க இருந்து ஹோட்டல் டென் MINUTES தான் போய்டலாம் அம்மு …
தான் அவளிடம் பேசிய வார்த்தை எவ்வளவு பெரிய தவறு என்று அவனுக்கு புரியவில்லை…
பத்து நிமிடத்தில் அவள் இருக்கும் ஹோட்டலுக்கு முன் காரை நிறுத்தியவன்,
அம்மு இங்க பாரு!! என்று அழும் அவளின் முகத்தை கையில் ஏந்தியவனுக்கும் கண்கள் கலங்கியது தான்…
இங்க பாருடா…..உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்….ஆனால் காதல் எல்லாம் கிடையாது…நீ சொன்னியே அந்த மாறி எல்லாம் உன்னை ஒருநாளும் நான் நெனச்சதே இல்லை…உன்னோட குழந்தை தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ….நான் இந்த பூமியில் இருக்கும் வரை உன்னை ஒரு நாளும் தவறான எண்ணத்தில் நினைக்கவே மாட்டேன்….
உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு உன்னை யார்கிட்டயும் விட்டு குடுக்க முடியயவில்லை…உன்னோட விஷ்யத்துல ரொம்ப POSSESSIVE ஆகுது ஏன்னு தான் புரியவில்லை…
ஓரளவுக்கு அவளின் அழுகை நின்றது….
அழும்போது கூட எப்படி அம்மு இவ்வளவு அழகா இருக்க என்றவன் அவளின் மூக்குத்தியின் மேல் இதழ் பதித்தான்…
அம்மு உனக்கு என்மேல் காதல் இருக்கா??
அதற்க்கு அவனை முறைத்தாள்…
உன்கிட்ட அதிகமா நான் ADAVNATAGE எடுத்துகிட்டேன்ன்னு சொல்ற….இதே வேற யாரவது இருந்திருந்தால் என்ன செஞ்சி இருப்ப??
செருப்பாலையே அடிச்சிருப்பேன்…
அப்போ என்னை ஏன் நீ அடிக்கல…
“அவன் கேட்ட கேள்வி சரி தானோ” என்று தோன்ற அமைதியாக இறங்கி ஹோட்டலுக்கு சென்று விட்டாள்…
அவள் உள்ளே சென்றதும் அவனும் காரை எடுத்துகொண்டு பறந்து விட்டான்…