அத்தியாயம் 3:

சரி சரி முறைக்காத என்று அவன் கூறியதும் அவள் “சரி போனா போகுது” என்று பெருந்தன்மையாக கூறியதும் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது…

ஏன் அம்மு உனக்கு ஹிந்தி பிடிக்கலை??

அதுவா ஆஆஆஆஆ …என்று அவள் இழுக்கும்போதே அவன் ஏதோ பெரிதாக சொல்ல போகிறாளோ என்று யோசித்தவன்,அவள் சொன்ன பதிலில் அவனுக்கு சப்பென்று இருந்தது…

ஒன்னும் இல்லை எனக்கு பிடிக்காது அவ்வளோ தான்…

ஹே உண்மையா சொல்லு…

ACTUALLLY அர்ஜுன் !!!எனக்கு சின்ன பிள்ளைலிருந்து புக்ஸ் படிக்கிற பழக்கம் அதிகம்…அதனால  பெரியார் புக்ஸ் நிறைய படிச்சிருக்கேன்…அதுல அவர் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தது என்னோட ஆள் மனசுல பதிஞ்சி போச்சு….அவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு..

 “அந்த காலத்துல பொண்ணுங்க இப்படி இருக்கனும் என்று என்று கூறிய கோட்பாடுகளை எல்லாம் உடைத்து இது எல்லாம் ஒரு மூட நம்பிக்கை தான்” என்று அவர் கூறிய அந்த வார்த்தை அவரு மேல எனக்கு மதிப்பு இன்னும் அதிகமாக ஆகிரிச்சி..

எங்களுக்காக குரல் கொடுத்த அந்த பெண்ணியவாதிக்கு நான் செய்ற கடமை தான் இது….

உனக்கு அவர தெரியுமா ??

YES OF COURSE நானும் அவர் பத்தி இங்க வந்ததுக்கு அப்பறம் கேள்வி பட்டுருக்கேன்..உன்னோட அளவுக்கு தெரியாது…

உன்னோட பக்கம் இருந்து பார்த்தா நீ சொல்றது சரி தான் போல என்று அவளின் கோட்பாடுகளை ஏற்று கொண்டான்…

அவன் புரிந்து கொண்டததால் அவனிடம் friends என்று கையை நீட்டினாள்…

அவனும் பிகு ஏதும் பண்ணாமல் கையை குலுக்கினான்…அவள் கையை பற்றியதும் அவன் உடம்பில் ஒரு சிலிர்ப்பு தோன்றியதை நினைத்து அவனுக்கு ஒரு நொடியில் சந்தேகம் வந்து விட்டது…

என்னாச்சு அர்ஜுன் என்றதும்,

ஒண்ணுமில்லை அம்மு…

உன்னோட ஏஜ் என்ன அம்மு???அவள் எதற்கு என்று கண்ணால் கேட்டாள்..

உன் மேல எனக்கு இந்த interest ம் இல்லை  அதனால தாரளமாக  நீ எங்கிட்ட சொல்லலாம்…

சும்மா அப்படி பார்த்தேன் அர்ஜுன்…

என்னோட ஏஜ் 23…பேஷன் designing முடிச்சிருக்கேன் அதை பத்தி மேற்கொண்டு படிக்க P.G பண்ண உங்க ஊருக்கு வரேன்…வீட்டுக்கு ஒரே பொண்ணு..

அப்பறம் அம்மு!!what about your relationship status??

இவ்வளவு நேரம் எதாவது ஒரு போன் வந்துதா இல்லையே…அப்போ நான் சிங்கள் தான்…

சூப்பர் answer என்று அவனும் சிரித்தான்…

நீ உன்னை பத்தி சொல்லு அர்ஜுன்..

அப்போ வேண்டாம்ன்னு சொன்ன இப்போ மட்டும் எதுக்கு கேட்கிற..

சொல்லு அர்ஜுன் அதான் friends ஆகிட்டோம்ல….

நான் அர்ஜுன் குப்தா…அம்மா அப்பா எல்லாரும் டெல்லில இருக்காங்க…எனக்கு ஒரு குட்டி தங்கை உண்டு அவளுடைய பெயர் சம்யுக்தா…அப்பா பிசினஸ் எடுத்து நான் கொஞ்சம் தனியாக நடத்திகிட்டு இருக்கேன்…மீதி அப்பாவும் நானும் எடுத்து பண்ணிக்கிட்டு இருக்கோம்…என்னோட ஏஜ் 30..

அப்போ சார் commited or single??

சிங்கள் தான் அம்மு…

அவள் அவனை நம்பாமல் பார்த்து வைத்தாள்…

நீ சொன்னது போல் எனக்கும் எதாவது போன் வந்ததா பாரு என்றதும் அவனுக்கு கால் வந்தது…

அவள் உடனே சிரித்து விட்டாள்…

அவன் போனை எடுத்து பார்த்தான்..அவள் தங்கை தான் அழைத்து இருந்தாள்…”சம்யு” என்ற பெயர் இருந்ததை அவளிடம் காட்டினான்…

ஓகே நம்பிடேன் என்றாள்…

அவளுடைய அழைப்பை துண்டித்து விட்டான்…

எடுத்து பேசவேண்டியது தான…

சென்னைல ஒரு ப்ராஜெக்ட் அதை முடிக்க கிட்டத்தட்ட 6 MONTHS ஆக அலைஞ்சிட்டு இருக்கேன் வெளிநாட்டிற்கும் சென்னைக்கும்…அவர்களிடம் பேசி பல மாதங்கள் ஆகி விட்டது அதான் போன் பண்ணிகிட்டே இருக்காங்க….

எனக்கு தனியாக travel பண்ண ரொம்ப பிடிக்கும் அம்மு…அந்த நேரத்துல யாரு போன் பண்ணினாலும் நான் எடுக்க மாட்டேன்…என்னோட privacy டைம்  எனக்கு ரொம்ப முக்கியம்….இன்னும் ஒரு இரண்டு வாரத்துக்கு சந்தோசமா இருப்பேன் அப்பறம் திரும்பவும் பிஸி ஆகிருவேன்…

அர்ஜுன் நீ சொல்றது எல்லாமே ஓகே தான் அதை நான் மறுக்க விரும்பல ஆனா அந்த பக்கம் அவங்களுக்கு எதாவது emergency கூட இருக்கலாமே…நம்மலாம் வாழறதே நம்ம குடும்பத்துக்காக தான்,இப்படி உழைக்கிறதும் அவங்களுக்காக தான்!!!அப்போ அவங்க கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேசறது அவ்வளவு தப்பான விஷயம்லாம் இல்லை அர்ஜுன்..

நான் advantage எடுத்துகிறேன்னு நீ நெனைக்க வேண்டாம்…தோணிச்சி சொன்னேன் அவ்வளவு தான்…

சரி!! சரி! அம்மு சொன்னா கண்டிப்பா கேட்க வேண்டிதான்…

தங்கைக்கு உடனே கால் செய்தான்,சம்யு வீட்டுக்கு நான் வந்துட்டு இருக்கேன் ,நாளைக்கு கண்டிப்பா வந்துருவேன் ,நீ சாப்டியா என்று நலன் விசாரித்து விட்டு வைத்து விட்டான்…

உங்க தங்கைக்கும் தமிழ் தெரியுமா??

என்னோட அம்மா சென்னை,அப்பா தான் நார்த் அதனால வீட்டுல சின்ன பிள்ளைங்கள இருந்து தமிழும் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டோம்…சம்யுக்கு உன்ன மாறியே தமிழ்ன்னா ரொம்ப பிடிக்கும்..

ஆனா வீட்டுல தமிழ் பேசறது ரொம்ப rare தான்..அவளோட சந்தோசத்துக்காக தமிழ்ல பேசினேன்..அவ சென்னைல தான் படிச்சா….

அப்படியா !!உன்னை பார்த்த அம்மாவும்,சம்யுக்தாவும் ரொம்ப சந்தோச படுவாங்க…கண்டிப்பா ஒரு நாள் வீட்டுக்கு வா சரியா!!

“அப்போ நீங்களும் ,சம்யுக்தாவும் north and south collaboration ன்னு சொல்லுங்க சரியா நான் சொல்றது…”

அதை சிரித்து கொண்டே அமோதித்தாள்…

Love லைப் பத்தி நீ சொல்லவே இல்லை அர்ஜுன்…

சிங்கள் தான் அம்மு…

நிஜமாவா..

ஆமா அம்மு…ஆனா நீ ஏன் நம்ப மாற்றன்னு தான் தெரில…

சரி சரி நம்புறேன்…

அதாவது என்னன்னா,சைட் எல்லாம் அடிப்பேன் ஆனா இந்த love ,கல்யாணம் இது எல்லாம் எனக்கு லைக் allergy மாறின்னு வெச்சிகோயேன்…

Ohh அந்த மாரியா அது சரி….

“எதுவுமே ஆசை தீரும் வரை தானே” என்று அவன் சொல்லியதை அவள் காது குடுத்து கேட்கவில்லை… ஒரு வேலை கேட்டிருந்தால் அவள் மனதில் தேவை இல்லாத ஆசைகள் வந்து துன்பத்திற்கு ஆளாகிருக்க மாட்டாள் …

அவளிடம் ஒன்றை மறைத்து விட்டான்….அவனுக்குமே சில கெட்ட பழக்கங்கள் உண்டு…மாச கணக்கில் நேரம் பார்க்காமல் உழைப்பவனுக்கு இரவில் ஒரு பெண் தேவை…இந்த உடல் தேவைக்காக மட்டும் தான் பெண்கள் என்று அவனின் மனதில் ஒரு மாய தோற்றம் உண்டு…

ஆனால் அம்ரிதாவிடம் எப்படி இவ்வளவு நேரம் மரியாதையாகவும் ,தவறாகவும் பார்க்காமல் இருக்கிறான் என்று அவனிர்க்கே தெரியவில்லை…

அவன் மரியாதையாக பார்க்கும் இரண்டு பெண்கள் அவனின் தங்கையும் ,அம்மாவும் தான்…மற்றவர்கள் வெறும் போதை பொருளே…

என்னை பொறுத்தவரை love பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்…என்னோட கணவனின் காதலில் உருகனும்  அவ்வளவு தான்…

All best ammu!!!

நீ நெறைய படம்  பார்பாயோ அதனால தான் இப்படி love ,கல்யாணம் பத்தி எல்லாம் இப்படி அதிகமாக கனவு காண்கிறாயோ?? என்று தான் தோன்றுகிறது…

அதற்க்கு அவள் சிரித்துக்கொண்டே,இங்க பாரு அர்ஜுன் படமாக இருக்கலாம், இல்லை நான் அதிகம் விரும்பும் புத்தம்கத்தில் கூட இருக்கலாம்…

நானாக காதலை அவ்வளவு மிகை படுத்தி எல்லாம் கூறவில்லை….

“உண்மையிலே ஒருவரை நம்ம நேசித்தோம்ன்னா  அந்த காத்திருப்பு கூட அவ்வளவு அழகாக தான் இருக்கும்..”

உனக்கு மீரா கண்ணனுக்கா காத்திருந்ததை  பத்தி சொன்னா உனக்கு புரியுமான்னு தெரில்ல…ஆனாலும் சொல்றேன் அர்ஜுன்..

மீராபாய் ராஜஸ்தான்ல பிறந்த ஒரு இளவரசி…அவங்களுக்கு சிறு வயதிலிருந்தே கிருஷ்ணர் பக்தி அதிகமாக இருந்தது கால போக்கில் அவர் கண்ணன் மீது இருந்த  காதலால் அவரையே கணவனாகவும் ஏற்று கொண்டார்..அதை மீறி அவருக்கு திருமணம் நடந்தும் அதை ஏற்று கொள்ளாமல்,வழக்கம் போல் கண்ணனின் பாடல்கள் பாடி கொண்டு இருந்தவரை கண்ட குடும்பத்தினருக்கு கோவம் வந்தது…அதனால் அவருக்கு விஷம் கலந்த பானம் கொடுத்தனர்,பாம்பை எல்லாம் அனுப்பி வைத்தனர் இதை எல்லாமே கிருஷ்ணன் முறியடித்து அவளை காத்தார்…அந்த உறவையும் தனது இளவரசி என்கிற  பதவியையும் துறந்து விட்டு முழுமையாக கண்ணனின் பக்தி பாடலால் கண்ணனுக்காக ஆயுள் வரை காத்திருந்தார்…

இறுதியில் அவர் துவாரகையில் கிருஷ்ணனோடு ஒன்றாகி விட்டார் ..என்று முழு கதையும் அவள் சொல்லும்போது அவளின் கண்ணில் சிறு கண்ணீர் துளித்தது அதை அர்ஜுனும் கண்டு கொண்டான்…

ஹே அம்மு! ஓகே! உணர்ச்சி வசபடாத…நீ சொல்ற காதல் கதைய நம்புறேன் என்றவன்….

அம்மு!! எனக்கு ஒரு சந்தேகம் மீரா மாறி உனக்கும் இந்த மாறி சூழ்நிலை வந்தால் உன் காதலனுக்காக காத்து இருப்பாயா??

இந்த கேள்வியை அவன் ஏன் கேட்டான் என்று அவனுக்கே தெரியவில்லை…அவள் மேல் காதல் அவனுக்கு வரவே வராது என்று தான் நினைத்து கொண்டு இருந்தான்…

கண்டிப்பா அர்ஜுன்…காலம் கடந்து காத்திருப்பேன் என்று அவள் சொல்லும்போது,அவனுக்கு உண்மையிலே மனதில் ஏதோ சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றி மறைந்தது…

ஆனால் அம்ரிதாவின் நிலை மீராவின் நிலையை விட மோசமாக போகிறது என்று அம்முக்கு தெரியுமா?? இல்லை அந்த சூழ்நிலையை தான் உருவாக்க போகிறோம் என்று அர்ஜுன்க்கு தான் தெரியுமா??

சரி அம்மு….உன்னோடு காதலும் ஒரு நாள் தெய்வீக காதலாக தான் இருக்கும்…

இப்போ பசிக்குது மணிய பாரு அம்மு!!இரவு ஆகி விட்டது…இவ்வளவு நேரமா கதை சொல்றேன்னு சொல்லி இப்படி காதுல ரத்தம் வரவ வெச்சிடியே என்று அவன் கூறும்போது அவள் எழுந்து வந்து அவனை தோளிலே இரண்டு அடி அடித்தாள்….

அர்ஜுன் போ அர்ஜுன் !!!உன்கிட்ட பேச மாட்டேன்னு அவள் முறுக்கி கொண்டதை பார்க்கும்போது அவனுக்கு சிரிப்பு பீறிட்டது….

இவ்வளவு நேரம் பெரிய மனிஷி மாறி காதல் கதைலாம் சொல்லிட்டு இப்போ என்னன்னா குழந்தை மாறி கோச்சிகிற அம்மு!!

நான் ஒன்னும் குழந்தை இல்லை…

“சரி நம்பிட்டேன் “என்று மீண்டும் சிரித்தவனை பார்த்தவளுக்கு கோவத்தில் அர்ஜுன்ன்னன்ன் என்று கத்தினாள்…

சரி சரி ஓகே..

சரி வா சாப்பிடலாம் அர்ஜுன்…

நைட்டுக்கும் எடுத்துட்டே வந்துட்டியா???

ஆமா ஆமா…

சரி எடுத்து வை சாப்பிடலாம்…

ஆளுக்கு இரண்டு சப்பாத்தி,வெஜ்ஜூ குருமா எடுத்து வைத்து இருவரும் சாப்பிட்டனர்…

அம்மு! உங்க அம்மா கை பக்குவம் வேற மாறி இருக்கு…

உங்க அம்மா சமைக்க மாட்டாங்களா அர்ஜுன் !!

அங்கலாம் யாருக்கும் உட்கார்ந்து சாப்பிட கூட  நேரம் இருக்காது அம்மு…அந்த அளவுக்கு பிஸி ஆக இருப்பாங்க…

Ohh ஓகே ஓகே…

அப்போ சம்யுக்தா தனியா வீட்டுல இருப்பாளா??

ஆமா என்றான்…உன்ன மாறி அவளும் FASHION designing தான் முடிச்சா…கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆக போகுது அதனால வீட்டுல இருக்கா??

சரி சரி என்று அதோடு முடித்து கொண்டாள்…ஆனால் ஏதோ ஒன்றை அவன் மறைப்பது போன்று தான் தோன்றியது..