அர்ஜுன் காரை எடுத்ததும் இருவரும் பின் புறமாக ஏறி கொண்டனர்…
மூவருமே அமைதியாக தான் சென்றனர்…
சம்யுக்தா தான் அரமித்திருந்தாள்,
ஆமா அம்மு நீ எங்க படிச்ச? எப்படி இந்த அளவுக்கு DESIGNING எல்லாம் கத்துகிட்ட ,சின்ன வயசுல இருந்தே இது எல்லாம் பிடிக்குமா அம்மு?
UG சென்னைல முடிச்சேன்..PG இங்க தான் முடிச்சேன்…எல்லாம் ஒரு கற்பனையில் வரைவது தான்…செய்யுற வேலைய பிடிச்சி செஞ்சா போதும் சம்யு…எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த FIELD ரொம்ப பிடிக்கும் அப்போ இருந்தே நோட்ல வரஞ்சுகிட்டே தான் இருப்பேன்…
கனடாக்கு போயிட்டு வந்தது உனக்கு எப்படி இருந்துச்சு…
கனடா எனக்கு ரொம்ப ஸ்பெஷல் சம்யு….நெறைய விஷ்யத்தை அங்க தான் கத்துகிட்டேன் சம்யு…
Ohh ஓகே ஓகே அம்மு…
உன்னை பாரக்கும்போது எனக்கும் நீண்ட முடி வளர்க்கனும்ன்னு ஆசையா இருக்கு அம்மு…
அதுகென்ன வளத்துட்டா போச்சு…
இருவரும் பேசி கொண்டதை கேட்டு கொண்டு தான் வந்தான்…கண்ணாடி வழியே அவளை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்…
எப்படி துருதுரு என்று இருப்பவள் இன்று என்னால் தான் எதையோ இழந்தது போல் இருக்கிறாள்…அன்று கடைசியாக பார்த்தை விட இன்று ரொம்ப இளைத்து போய் விட்டாள்…அவளின் குண்டு கன்னங்கள் இன்று காற்று போனது போல் இருந்தது…
அதற்குள் கடை வந்து விட்டது…டெல்லியில் இருக்கும் பெரிய மாளிற்கு அழைத்து சென்று,சம்யுக்தாவிர்க்கு பிடித்த நிறத்தில் துணிகளை எடுத்து கொண்டு அவளுக்கு தேவையான அனைத்து பொருளையும்,ஆசை ஆசையாக கல்யாணத்திற்கு வாங்கி கொள்ளும் அவளையே பார்த்து கொண்டு இருந்தவளுக்கு,கண்கள் கலங்கியது தனக்கு ஏன் தன்னுடைய காதல் கை கூடாமல் சென்று விட்டது…
சம்யு நீ எடுத்துகிட்டு இரு நான்வாஸ்ரூம் போயிட்டு வந்துறேன்…
சரி அம்மு…நம்ம கடை தான் தைரியமாக போயிட்டு வா…
அப்படியா!!
வாஸ்ரூம் போயிட்டு வந்தவள் முகத்தை கழுவி கொண்டு கொஞ்சம் தெளிவாக வந்தாள்…
வந்ததில் இருந்து அவளை மட்டுமே தான் பார்த்து கொண்டு இருந்தான்…ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவளை பார்க்க கடுப்பாகவும் இருந்தது…
கொஞ்சம் கூட திரும்பி பார்க்க மாற்றா…
வா அம்மு கடைய சுத்தி பார்த்துட்டு வரலாம்….சரி வா போலாம்..
அந்த கடையில் இருந்த சாரி செச்ஷனுக்கு அழைத்து சென்றதும் அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது….
ஆனால் இது எப்படி சாத்தியம்??அப்போது அவனை தான் திரும்பி பார்த்தாள்…
இந்த ஒரு வருடத்தில் அவள் டிசைன் பண்ண அனைத்து புடவையும் அவர்களின் கடையில் தான் இருந்தது…
அங்கு இருந்த அனைத்து புடைவகளும் அவனை நினைத்து தான் உருவாக்கிருந்தாள்…
ஆனால் அதில் கண்ணணையும்-மீராவையும் உருவகபடுத்தி அதை அவ்வளவு அழகாக வடிவமைத்து இருந்த பத்து புடவைகளும் அவர்களின் கடையில் தான் இருந்தது….
சம்யு,உங்க கிட்டு இருந்து தான் எங்களுக்கு சாரி வருது போலயே இன்னைக்கு தான் நானும் பார்க்கிறேன்…
இந்த கைக்கு DIAMONDல கூட வளையல் போடலாம் அம்மு…உன்னோட ரசனையே ரசனை தான் போ..
எல்லாமே மாறி தான் போச்சு ஆனாலும் இந்த மூக்குத்தி மேல இருக்க ஆசை மட்டும் இன்னும் போகலடி என்றவன் அந்த மூக்குத்தியின் மேல் இதழ் பதித்தான்…
மூன்று வருடத்திற்கு முன்பு இருந்த “அந்த பேபி டால் மாறி இல்லை” இப்போ??அவளை ரொம்ப மிஸ் பண்றேன்…
அர்ஜுன் இதெல்லாம் நல்லா இல்லை…
“இவ்வளவு வருஷம் கண்ணுல படமா தான இருந்த,இப்போ எதுக்குடி என் முன்னாடி வந்த…”
அர்ஜுன் இந்த கதை நல்லா இருக்கு…
நீ தான் என்னை வர வெச்சேன்னு எனக்கு நல்லாவே தெரியும்…ரொம்ப நடிக்காத சரியா??
அபப்டியா!! என்று யோசிப்பது போல் பாவனை செய்தவனை வெட்டவா குத்தவா என்பதை போல் பார்த்தாள்..
நீயாவே கண்டுபிடிச்ச மாறி பேசாதா சரியா…என்னோட தங்கச்சி சொல்லிருப்பா..
ஆமா அவ தான் சொன்னா இப்போ அதுக்கு என்ன??
மூணு வருஷத்துக்கு முன்னாடி இருந்த “என்னோட பேபி டால் பேசும்போது அதை கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கும் ஆனா நீ இப்போ பேசறத கேட்டா எப்போடா இவ வாய மூடுவான்னு இருக்கு”
“இனிமேல் உன்னால எங்கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது சரியா!!”
நான் உன்னை இங்க எதுக்கு வர வெச்சேன்னு நீ கண்டுபிடி பாப்போம்.. அப்போ உனக்கு அறிவு இருக்குன்னு நான் நம்புறேன்…
இன்னொரு விஷயம் நீ இங்க எதுக்கு வந்துருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்…
அவன் அப்படி கூறியதும் அவளுக்கு முகத்தில் வியர்த்தது…
ஹஹஹஹா என்றவன்,நான் பக்கா பிசினஸ் man அம்மு!! எனக்கு தெரியாத என்ன??
அவளை விட்டு தள்ளி நின்றவன்,அவளது புடவையை சரி செய்து,முகத்தை எல்லாம் சரி செய்து விட்டான்….
ஒரு SMALL REQUEST madam….நீ இன்னொரு முறை புடவை கட்டாத…என்னோட கவனம் எல்லாம் சிதறுது என்றவன் அவளது இடுப்பை சுட்டி காட்டினான்…
சரியான பொறுக்கி நீ..
நன்றி madam…வயசாகுது madam என்ன பண்றது…
போடா…
என்னடி சொன்ன..
“கேட்கலையா? போடா” என்று கூறி விட்டு ஓடிவிட்டாள்…அவனும் அவளை துரத்திகொண்டே வருவதற்கும் அவனின் தங்கை வருவதற்கும் சரியாக இருந்தது..
“இவ ஒருத்தி கொஞ்சம் romance பண்ண விட மாட்ட…”
இவனை ஒரு மாறி பார்த்தாள் சம்யுக்தா…
அவளை பார்த்து ஒரு சிறு புன்னகையுடன் தள்ளி நடந்தான்…
அம்மு புடவை எல்லாம் எடுத்துட்டியா??
அவள் பதில் சொல்வதற்கு முன்பே,அர்ஜுன் அவங்க எடுத்துட்டாங்க சம்மு…
கிளம்பலாமா வேற எதாவது எடுக்கணுமா??
இல்லை அண்ணா அவ்வளவு தான்…வீட்டுக்கு போலாம்…
காருக்குள் ஏறியதில் இருந்து,அம்ரிதாவிர்க்கு ஒன்றுமே புரியவில்லை…இங்கு வந்து இருக்கா கூடாதோ??இப்போ கிளம்பிரலாமா??என்று பல மாதிரி யோசித்தாள்…இதை எல்லாம் விட அவன் தான் வந்த காரணத்தை உண்மையிலே கண்டுபிடித்து விட்டானோ ??என்ற கேள்வி தான் அவள் மண்டையில் ஓடிகொண்டே இருந்தது….
“அம்மு இறங்கு வீடு வந்துரிச்சி” என்று நான்காவது முறையாக கூறும்போது தான் திரும்பி பார்த்தாள்…
அம்மு உன்னை நான்கு முறை கூப்பிட்டு விட்டேன்….
Sorry சம்மு…ஏதோ யோசனை
சரி வா உள்ளே போவோம்…
அம்மு எனக்கு செம்மையா பசிக்குது…சாப்டுட்டு ரூமுக்கு போய்டலாம்…
சரி சம்யு…
அண்ணா நீயும் வா சாப்டுட்டு எல்லாரும் அவங்க அவங்க ரூமுக்கு போய்டலாம்….
சரி சம்யு…
ஷாப்பிங் இன்னைக்கு எப்படி இருந்துச்சு சம்யு,அம்மு எல்லாமே வாங்கிடிங்களா??
எல்லாமே நல்ல படியா முடிஞ்சுது அம்மா…
அம்மு உனக்கு டிரஸ் வாங்கினியா…
வாங்கிட்டேன் ஆன்டி..
சரி அம்மு …ரொம்ப tired ஆக இருக்கா??
அவள் பதில் சொல்வதற்கு முன்பே,அதெல்லாம் எதுவும் இல்லை அம்மா அவங்க தான் சொன்னாங்க,இங்க இருக்கிறது சந்தோசமாக இருக்குன்னு சொன்னாங்க என்று கூறிய அர்ஜுனை மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக பார்த்தது….
அர்ஜுனா இது??
அண்ணா உனக்கு பேசலாம் தெரியுமா ??
ஏன்டா இப்படி ஒரு சந்தேகம் உனக்கு…
நீ கொஞ்ச நேரம் வேற ஷாப்பிங் பண்ணிக்கிட்டு இருந்த அப்போ நாங்க பேசிட்டு இருந்தோம் அதை தான் இப்போ சொன்னேன்..
ம்ம் என்றவள்…எல்லோருக்கும் ஒரு வணக்கத்தை கூறி விட்டு அர்ஜுனின் கண்களில் படாமல் ஓடிவிட்டாள்…
அஷ்வினிர்க்கு வேறு ஒரு அறையை ஒதுக்கி இருந்தான்…இனி இந்த கொசு தொல்லை நமக்கு இருக்காது…
என்ன தான் படுத்து இருந்தாலும் அவனுக்கு உறக்கமே வரவில்லை…அவளை பார்க்காத போது கூட உறக்கம் கொஞ்சம் வந்தது இப்போது மொத்தமாக தூக்கம் தொலைந்து விட்டது…
ஜன்னலின் வழியாக தெரிந்த அந்த நிலவை பார்க்கும்போது எல்லாம் அவளின் அந்த பூ முகம் தான் அவனுக்கு நியாபகத்துக்கு வரும் …இன்றும் அவளின் அருகாமையை மனம் நாடியது…
நேற்று காலை அவளை ஏர்போர்ட்டில் பார்த்த அப்போது கூட அவளை எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான்…
ஆனால் அவள் தன் அருகில் இருக்கும்போது தனக்கு போட்டு வைத்த அனைத்து கட்டுபாடுகளையும் உடைத்துவிட்டு மனம் அவளின் காலடியில் சரணடைகிறது…
மூன்று வருடத்திற்கு முன்பு இருந்த குழந்தை தனம் போயி இப்போது இன்னும் அழகாக இருந்தாள் அந்த கருப்பு நிற காட்டன் புடவையில் அவ்வளவு அழகாக இருந்தாள்…அப்போதே அவனின் மனம் அவளிடம் சென்று விட்டது…முன்பே அவள் அழகி தான் இப்போது தொழில் கொடுத்த தன்னம்பிக்கையில் பேரழிகியாக இருந்தாள்…
அவளை பார்பதற்காக ஏற்போர்டிற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டான்…இத்தனை வருடத்திற்கு பிறகு அவளை பார்க்க போகிறோம் என்று அவனுக்கு அன்று இருந்த பதட்டத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது…
இது சரி வராது என்று யோசித்தவன் படுக்கையில் இருந்து எழுந்து,வெளியே தண்ணீர் எடுக்க வந்தவன்,அம்ரிதாவின் ரூமில் மட்டும் லைட் எரிந்து கொண்டு இருந்தது…
இவ இன்னும் தூங்கல போலையே, கதவை லாக் கூட பண்ணாமள் இவ என்ன பண்ணிட்டு இருக்கா?? என்று எட்டி பார்த்தான்…துணிகளை வெட்டி கொண்டு இருந்தாள்…
சரி என்று கீழே சென்றவன் அவளுக்கு பிடித்த டேஸ்ட்டில் காபி கலந்து, அவளின் ரூமுக்கு எடுத்து சென்றவன் கதவை தட்டினான்…
வா அஷ்வின்…
துணிகளை கட் செய்து கொண்டே அவனிடம்,அஷ்வின் எனக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாயேன்…கொஞ்சம் தூக்க கலக்கமா இருக்கிறது என்று அவள் கூறும்போதே, அவளின் முன் காபி கப்பை நீட்டினான்…
தேங்க்ஸ் அஷ்வின் …
நீ அங்க உட்காரு அஷ்வின் …இதை மட்டும் சரியாக கட் பண்ணிட்டா இன்னும் இரண்டு நாளில் இதை முடிச்சிறலாம் என்று கூறிக்கொண்டே காபி ஒரு வாய் வைத்ததும் அவளுக்கு புரிந்து விட்டது…
தான் குடிக்கும் இந்த டேஸ்ட்டில் இருவர் மட்டுமே அவளுக்கு காபி கலந்து கொடுப்பார்கள்..ஒன்று அவளின் தாய் இன்னொரு ஆளு நம்ம அர்ஜுன்..
அவனை கோவமாக திரும்பி பார்த்தாள்…
“வேலை தான் முக்கியம் அதை கவனி அப்பறமா என்னை திட்டலாம்…”
அதவும் சரி தான் என்று வேளையிலே மொத்தமாக மூழ்கி விட்டாள்…
அவன் அவளையே தான் ஏக்கமாக பார்த்து கொண்டு இருந்தான்…கருப்பு நிற ஸ்கட்,வெள்ளை நிற T ஷர்ட் அணிந்து இருந்தாள்…அவளின் நீண்ட கூந்தலை அள்ளி ஒரே க்ளிப்பில் அடக்கி இருந்தாள்…வேறு எந்த ஒரு ஒப்பனையுமே இல்லாமலாமலே அவ்வளவு அழகாக இருந்தாள்…
அதும் அவள் வேலை செய்யும் விதம் பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் போலயே..
“ஏன்டா வெட்கம் கேட்ட அர்ஜுன் இரவு முழுக்க இவளை இப்படியே பார்த்துகிட்டு இருன்னு சொன்னா கூட அப்படியே இருப்ப போலயே என்று அவனது மனம் அவனை கேலி செய்தது…”
அப்படி இருந்தா உனக்கு என்ன என்று அதை அடக்கி விட்டான்…
அவள் கத்தரிகோலை எடுத்து வட்டமாக வெட்டும்போது அவளது t ஷர்ட் சற்று மேலேறி அவளது இடையயை பளிச்சென்று காட்டியது…
நம்மளுடைய நிலைமை இந்த இரவு நேரத்தில் இப்படியா இருக்கணும் அர்ஜுன்…எவனாவது வந்துற போறான் கதை சாத்திருவோமா??
உடனே சுதாரித்தவள் டிரெஸ்ஸை இழுத்து விட்டு மறுபடியும் அவனை முறைத்தாள்…
உனக்கு அறிவே இல்லையா அர்ஜுன்??
எனக்கு உன்னோட விஷயத்துல அறிவே இல்லன்னு உனக்கு தான் நல்லா தெரியுமே….
First காபி குடி அப்பறம் என்னை கேள்வி கேளு ..
அதுவும் சரி என்றவள்,அதை குடித்ததும் அவளுக்கு இருந்த தலை வலி பறந்தே சென்றது…
தேங்க்ஸ் அர்ஜுன்…
எனக்கா நம்ப முடியலையே அம்மு!!..
ONE HOUR ஆகா செம்ம தலைவலி…யாராவது காபி போட்டு எடுத்துட்டு வந்தா நல்லா இருக்கும்ன்னு நெனச்சேன் அதுக்கு தான் இந்த நன்றி மத்தபடி நீ கெட்டவன் தான்…