அம்மு ஒரு விஷயத்தை மட்டும் நல்லா நியாபகத்துல வெச்சிக்கோ…ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி எந்த ஒரு சூழ்நிலையும் கண்டு ஓடி ஒளிய கூடாது அதற்க்கு பதிலா எதிர்த்து நிற்கணும் சரியா…
அந்த வாசகம் உனக்காக எழுதப்பட்டதா? இல்லை எனக்காக எழுதப்பட்டதா அஷ்வின்??
நமக்காக அம்மு !!
அது சரி..
அவங்க வீட்டுக்கு எப்படி செல்வது அஷ்வின் ….பிக் பண்ணிக்க யாராவது வருவாங்களா இல்லை நம்மலே தான் போகனுமா??
வரேன்னு சொன்னாங்க அம்மு..இரு கால் பண்றேன் என்று போனை எடுக்கும் முன்னே அர்ஜுன் அவர்களின் முன் வந்து தரிசனம் கொடுத்து விட்டான்…
ஹாய் பையா!!NAMASHKAAR என்று அர்ஜுன் கையை நீட்டினான்..
அஷ்வின் இரண்டு கையையும் கூப்பி வணக்கம் என்று கூறினான்…
அவனை பார்த்ததுமே அம்ரிதாவிர்க்கு கால் தரையில் படவில்லை பதட்டத்தில்..
ஓகே அர்ஜுன் என்று அவனிடம் கூறியவன்,அம்முவின் கையை பிடித்து கொண்டு அவர்களின் காரில் ஏறும்போது,
அஷ்வின் அவனோட கார்ல நம்ம எதுக்கு ஏறனும்…
கல்யாணத்துக்கு வர எல்லாரையும் நானாக இப்படி வந்து தான் PICKUP பண்ணுவோம் சார்..
இவனுக்கு என்ன பாம்பு காதா இருக்குமோ என்னவோ ??அதுக்குள்ள எப்படி தான் கேட்டுச்சோ??இவன்கிட்டலாம் பேசி சமாளிக்க முடியாது அஷ்வின் பேசாம இவன்கூடவே போயிருவோம்..
சரி அம்மு..
இவர்கள் இருவரும் காரின் பின்புறம் ஏறி அமர்ந்து எந்த மாறி டிசைன் பண்ணலாம் என்று DISCUSSION செய்து கொண்டு வந்தனர்…அங்கு ஒருவன் இருக்கிறான் என்பது கூட அவர்கள் நினைவில் இல்லை…
வீடு வரும் வரை இவர்கள் இருவருமே அவனிடம் பேசவே இல்லை…
வீட்டை பார்த்த இருவருக்குமே,அப்படி ஒரு ஆச்சர்யம் இவ்வளவு பெரியா வீடா??வீட்டிற்க்கும் அந்த கேட்டிற்கும் இடையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்….வீடு பிரம்மாண்டமாக இருந்தது,வீடு முழுக்க ஆட்கள் நிறம்பி இருந்தனர்..
கல்யாண பெண்ணின் முகத்தில் தான் கல்யாண கலை கட்டும் என்பார்கள் ஆனால் இங்கு வீட்டிற்க்கே கல்யாண கலை வந்து விட்டது போல் தான் இருந்தது…
இருவருமே அதை வெளியே காட்டி கொள்ளாமல்,அர்ஜுன் அழைத்து சென்ற வழியில் சென்றனர்…
அவர்களின் வீட்டிற்குள் நுழைந்ததும்,அர்ஜுன் அவனின் தாயிடம் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்..
அம்மா இவங்க தான் நம்ம சம்யுக்தாவிர்க்கு சாரி டிசைன் பண்ண வந்துருகாங்க..
அப்படியா என்றவர்,அம்ரிதாவை தான் முதலில் பார்த்தார்…அவளின் முகத்தில் தெரிந்த அந்த குழந்தை தனம் அவருக்கும் நிரம்ப பிடித்து விட்டது…
நீங்க தமிழா??
நீங்கலும் தமிழா ஆண்டி?என்று கேட்கும்போதே அவருக்கு புரிந்து விட்டது அவளுக்கு தமிழ் என்றாள் எவ்வளவு பிரியம் என்று..
ஆமா டா…
உன்னோட பேரு என்னமா ??
அம்ரிதா ஆன்டி..
NICE NAME டா…சரி உள்ளே போங்கடா…நீங்க என்று கேள்வியாக அஷ்வினை பார்த்தார்…
என்னோட FRND ஆன்டி…ரெண்டு பெரும் சேர்ந்து தான் தொழில் பண்றோம்…
Ohh சரிமா உள்ள போங்க…
அவர்கள் உள்ளே சென்றதும்,அவர் அர்ஜுனிடம் இரண்டு பேரோட ஜோடி பொருத்தம் ரொம்ப அழகா இருக்குல அர்ஜுன்..
அவன் திரும்பி அவர்களை தான் பார்த்து கொண்டு இருந்தான்…தன் தாய் கூறியது போல தான் இருவரும் இருந்தனர்..
இருக்கலாம் அம்மா என்று ஏதோ ஏக்கத்தோடு கூறிய மகனின் முகத்தில் இருந்த சோகத்தை கவனித்து விட்டார்..
சரி அர்ஜுன் அவங்களுக்கு ரூம் எல்லாம் ARRANGE பண்ணி கொடு,சம்யுக்தா கிட்ட கூட்டிட்டு போயிட்டு அவங்களை விடு…
சரி அம்மா என்றவன்,அவர்களை நோக்கி சென்றான்…
ரூம் மேல இருக்கு வாங்க போகலாம் என்று அவர்களை மேலே அழைத்து செல்லும்போது,படிக்கட்டில் அம்ரிதாவின் புடவை சிக்கி கீழே விழும் நேரம் இருவருமே அம்மு என்றனர்,அதற்குள் அஷ்வின் அவளை தாங்கி கொண்டான்…
அம்மு பார்த்து வா..அடி எதும் படலையே??
ஓகே தான் அஷ்வின்…புடவை சிக்கிரிச்சி…
சரி வா என்றவன் அவளின் தோலின் மேல் கை போட்டு அவளை பாதுகாப்பக அழைத்து சென்றான்…
வந்ததில் இருந்து அவள் ஒருமுறை கூட அர்ஜுனின் முகத்தை இம்மியும் திரும்பி பார்க்க வில்லை…
தான் பேசிய பேச்சிற்கு அவள் எப்படி பார்ப்பாள் என்று அவனே தன் மனதை தேற்றி கொண்டான்…அவள் மேல் கை போட்டு அஷ்வின் அழைத்து செல்வதை பார்க்கும்போது அவனுக்கு வேதனயாக இருந்தது…இதை எல்லாம் நானாக தேடி கொண்டது தானே..
அவர்களிடம் சென்று,இந்த ரூம் எடுத்துகோங்க என்றவன் அஷ்வினை பார்த்தான்…
அவனை முறைத்து கொண்டே கீழே சென்றாள்..இவங்க ரெண்டு பெரும் நல்லா திட்டிகிட்டே love பண்றாங்க ,நமக்கு தான் ஆளையே கண்ணுல காட்ட மாற்றாங்க…
கீழே சென்றதும் அவளை அன்போடு வரவேற்றார் அர்ஜுனின் தாய்…
வா அம்ரிதா…
அவளும் சிரித்த முகமாக சென்று அமர்ந்து கொண்டாள்…அஷ்வினையும் அழைத்து அவளின் பக்கத்தில் அமர வைத்து இருவருக்கும் சாப்பாத்தி,பரத்தா,பனீர் திக்கா,கொஞ்சம் ஜீரா ரைஸ்,கொஞ்சம் VEG தம் பிரியாணி என்று வகை வகையாக எடுத்து வைத்தது அவள் அவரை பாவமாக பார்த்ததும் அவருக்கே சிரிப்பு வந்து விட்டது…
என்ன ஆன்டி இதெல்லாம்..ரெண்டு இட்லி சாப்பிடுற எங்கிட்ட போயிட்டு இவ்வளவு ITEMS வெச்சா நான் எப்படி சாப்பிட முடியும் என்று பாவமாக கூறியதும் அவருக்கு இன்னும் சிரிப்பு வந்து விட்டது…
வயசு பொண்ணு வெறும் ரெண்டு இட்லி சாப்பிடுறதால தான் இப்படி ஒல்லியா இருக்க…
“நீ சாப்பிடுற எல்லா சாப்பாடும் உன்னோட முடிக்கே சரியா போய்டும் போல அம்மு என்றதும்,”
அவள் உடனே அர்ஜுனை தான் பார்த்தாள்…அன்று அவனும் அப்படி தானே கூறி இன்னும் நிறைய சாப்பிட வைப்பான்…அவனும் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்…
இவர்கள் இரண்டு பேரின் பார்வை பரிமாற்றத்தை அந்த தாய் கவனிக்க தவறவில்லை…
ஒருவேளை இவர்களுக்குள் எதாவது இருக்குமோ ??ஏனென்றால் இந்த மூன்று வருடத்தில் அவனின் முகத்தில் இருக்கும் சோகத்தை அவரும் தான் பார்த்து கொண்டு இருக்கிறார்..
அவருக்கே பலமுறை தோன்றி இருக்கிறது ஒருவேளை தன் மகனுக்கு காதல் தோல்வியாக இருக்குமோ என்று யோசித்திருகிறார்…
திருமணம் செய்து கொள்ள சொல்லி அவரும் பல பெண்களின் புகைபடத்தை காட்டிவிட்டார் அதற்கு அவனிடம் பதில் தானில்லை…
எதற்கு எடுத்தாலும் கோவப்படும் தன் மகன் இந்த மூன்று வருடத்தில் எதை சொன்னாலும் அமைதியை மட்டுமே பதிலாக அளிக்கிறான்…
ஒருவேளை அம்ரிதாவிர்க்கும் அர்ஜுனிர்க்கும் இடையில் எதாவது இருக்குமா??அவன் அவளை பார்க்கும் பார்வையை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது…
அந்த நேரம் அம்ரிதாவின் போன் விடாமல் அடித்து கொண்டே இருந்தது…பிரேமம் படத்தில் காதல் தோல்வி ஏற்பட்ட பிறகு ஒரு BGM வரும் அதை தான் அவளும் RINGTONE ஆக வைத்து இருந்தாள்…
அதை எடுத்து பேசலாம் என்று எழுந்தவளை,தடுத்து நிறுத்தினார் அர்ஜுனின் தாய்…
அம்மு சாப்பிடும்போது எழுந்திரிக்க கூடாது…
இல்லை ஆன்டி அம்மாவுக்கு நான் இங்க வந்துட்டேன்னு இன்போர்ம் பண்ண மறந்துட்டேன்…அதான் போன் பண்ணிகிட்டே இருக்காங்க சொல்லிட்டு வந்துறேனே…
போனை இங்க கொடு நான் சொல்றேன் என்று போனை வாங்கி கொண்டார்…..
“ஹலோ சொல்லுங்க” என்று அர்ஜுனின் தாய் பேசினார்..
“என்னடி வாயடி குரலை மாத்தி பேசினா” என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன??நீ சொன்ன இடத்துக்கு போனியா இல்லையா ??உன்னோட இஷ்டத்துக்கு தான் அம்மு இருக்க நீ …என்னவோ போ..சாப்டியா ??
ஹலோ mam சம்யுக்தாவோட அம்மா.. உங்க பொண்ணு எங்க வீட்டுல தான் இருக்காங்க …கவலைபடாதிங்க நாங்க நல்லா பாத்துபோம் எங்க வீட்டு பொண்ணு மாறி பாத்துகுறோம்…
Mam நீங்க நார்த் சைடுல இருந்திட்டு இந்த அளவுக்கு தமிழ் அழகா பேசுறிங்க..so ஸ்வீட் mam நீங்க…
நான் சென்னைல தான் கல்யாணம் ஆகுற வரைக்கும் இருந்தேன் mam…நம்ம மொழிய நம்ம விட்டு கொடுக்க முடியாது இல்லையா..
அம்முவ நாங்க நல்லா பாத்துகுறோம் கவலைபடாதிங்க…
அவளை நெனச்சிலாம் கவலை இல்லை mam…உங்க எல்லாரையும் நெனச்சி தான்….
அவளை சமாளிக்க நீங்க எல்லாரும் சேர்ந்தாலும் முடியாது அந்த அளவுக்கு அவ வாளு பொண்ணு mam அதான்…இரவு நேரத்துல சாப்பாடு நல்லா இல்லைன்னா வெளிய போயிட்டு சாப்பிடுரதுக்கு மரம் விட்டு மரம் கூட தாவி எத்தனை முறை போயிருக்கா mam…
அம்மா என்று கத்தினாள்…
இதை எல்லாருமே கேட்டு விட்டு சிரித்து விட்டனர்…அதிசயம் என்னவென்றால் அர்ஜுன் கூட சத்தமாக அவளை பார்த்து கொண்டே சிரித்து விட்டான்..
ஆன்டி….நீங்களுமா?? என்று முகத்தை தூக்கிவைத்து குழந்தை போல் சிணுங்கிய அவளை அவருக்கு நிரம்ப பிடித்து விட்டது…
மூன்று வருடத்திற்கு பிறகு அர்ஜுன் இந்த அளவுக்கு சிரிப்பதை இன்று தான் பார்க்கிறார்…
சரி அம்மு சாப்பாடு நல்லா இல்லைனா சொல்லு வேற கூட செஞ்சுக்கலாம் அதை விட்டு மரம் விட்டு மரம் தாவிடலாம்ன்னு நெனச்சிராத இங்க மரம்லாம் அவ்வளவா கிடையாது சரியா …
ஆன்டி …….
JUST FOR FUN அம்மு…
எல்லாரும் சிரித்து விட்டு செல்லும்போது தான் அர்ஜுனின் தந்தை வந்தார்…
NAMASHKAAR BETTI!!
வணக்கம் UNCLE என்று இரு கையையும் கூப்பி கூறும் அழகே சொல்லிவிட்டது அவள் தமிழ் என்று…
வணக்கம் டா என்று அவரும் அவளை போல் கூறியதை பார்த்த அர்ஜுனிர்க்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது…
மொத்த குடும்பமும் தலை கீழ் நின்று தண்ணி குடித்தாலும் தான் என்ன செய்தாலும் அதை மறுபரிசீலனை செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிப்பவர் இன்று அவளுக்காக இரு கையையும் கூப்பி கூறியது ஆச்சர்யமாக இருந்தது…
எனிக்கி தமிழு அவ்ளோ தெரியது BETTI…அட்ஜஸ்ட் கரோ …
நீங்க கவலையே படாதிங்க அங்கிள் …இங்க இருந்து போறதுக்குள்ள சூப்பரா கத்து குடுத்துறேன்..
அதுக்கு குள்ள உணக்கி தமிழு மர்ந்து போயும் BETTI…
ஹஹ்ஹஹா அதுக்கு எல்லாம் வாய்ப்பில்லை அங்கிள்…
அவரும் அவளை போலவே சிரித்து அவளை கலாய்த்து விட்டார்…
அங்கிள் நீங்களுமா??போங்க உங்க கூடவும் பேச மாட்டேன்…
ஹ்ஹஹஹா BETTI!! JUST FOR FUN..
சரிங்க அங்கிள் நீங்க சாப்பிடுங்க…
நான் போயிட்டு சம்யுக்தாவ பார்கிறேன் அங்கிள்..
BETTI ஒரு சின்னி REQUEST..
என்ன அங்கிள்…
உனக்கி சௌத் இந்தியன் கூக்கிங் தெர்மா??
நல்லாவே குக் பண்ணுவேன் அங்கிள்…மெனு மட்டும் போட்டு வைங்க மதியத்திற்கு நான் சமைத்து தூள் பண்ணிறேன்..
ஓகே ஓகே BETTI நம்மலு தூளு துளு பண்ணிரும்…
அவள் சிரித்துக்கொண்டே அவரிடம் இருந்து விடை பெற்றதும்,அஷ்வின் நீ ரூமுக்கு போ!! நான் போயிட்டு சம்யுக்தாவ பார்க்கிறேன்…
ஓகே அம்மு…
அவன் சென்றதும் அர்ஜுன் அவள் பின்னாடி இருந்து அழைத்தான் அவளை,
அம்மு !!எப்படி இருக்க..
அவன் அவளை அம்மு என்று அழைக்கும்போதே அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது…நம்ம அழவே கூடாது என்று முடிவு செய்தவள்,அவனை நிமிர்ந்து பார்த்தாள்,
அந்த பார்வையில் வெறும் வெறுமை மட்டுமே இருப்பதை புரிந்து கொண்டான்…