இருக்கறத பார்க்கவே உனக்கும் எனக்கு நேரம் சரியா போகுது…என்னோடு சேர்ந்து நீயும் இப்படி எதுக்கு தான் கஷ்டபடுரன்னு தான் எனக்கு புரியவில்லை அர்ஜுன்…
நான் உன்னோடு நண்பன் அம்மு…உன்னோட கஷ்டத்துல பங்கெடுத்துக்க எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு அம்மு…
உன்னோட தொழிலையும் பார்க்கணும் நீ….என்னோடதையும் சேர்த்து இப்போ நீ பார்த்துக்கிற இத பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அஷ்வின்…
அப்போ நான் உன்னோட friend இல்லையா அம்மு என்று சிறிது கோவபடுவது போல் காட்டிகொண்டான்..
“சரி சரி உன்னோட மூஞ்சிய அப்படி வைக்கத அஷ்வின் கேவலமாக இருக்கு என்று சிரித்து விட்டாள்..”
என்னோட அம்மு எப்பவுமே இப்படி சிரிச்சிகிட்டே தான் இருக்கனும்..
கண்டிப்பா அஷ்வின்…
ஆம் அம்ரிதா PG DESIGNING முடித்ததும் ,கனடாவில் இருக்கும் ஒரு company மூலமாக INTERNSHIP கிடைத்து துணிகளுக்கு டிசைன் செய்து கொண்டு இருந்தாள்…
அதன் பிறகு அவளின் தந்தையின் மூலமாக லோன் போட்டு ஒரு சிறு BOUTIQUe போல் ஆரமித்திருந்தாள் இப்போது அது ஒரு வருடத்திலே நன்கு வளர்ந்து விட்டது .. சென்னையிலே தொடங்கி இருந்தாள்…
ஏற்கனவே அவள் கனடாவில் வடிவமைத்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தது…அவள் இப்போது தொழில் தொடங்கிய ஒரு வருடத்தில் அவள் யோசிக்க கூட நேரமில்லாத அளவுக்கு அவளுக்கு ஆர்டர் வந்து கொண்டு இருக்கிறது..
இதில் பெரிய விஷ்யம் என்னவென்றால்,அஷ்வினும் அவளது தொழில் PARTNERSHIP…
மூன்று வருடத்திருக்கு முன்பு அவளை அப்படி ஒரு அழுத கோலத்தில் பார்த்தவனுக்கு,தோன்றிய ஒரே விஷயம் அவளுக்கு ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்து இருந்தான்..இதோ மூன்று வருடங்கள் அவளோடவே தான் இருக்கிறான்…அங்கே அவள் கல்லூரி முடிக்கும் வரை அவளை நன்றாக பார்த்து கொண்டான் ,இங்கே ஒரு வருடமாக அவளுக்கு பாதுகாவலன் போல் அவளை காத்து கொண்டு தான் இருக்கிறான்…
“நன்றி” என்கிற ஒரு வார்த்தையில் முடிக்க முடியாது அஷ்வின் உன்னோட உதவிக்கு…
நம்பினவங்க கூட கைவிட்டுட்டு தான் போனாங்க…உனக்கு நான் எதுமே பண்ணல இப்போ வரைக்கும் என்னோடவே இருக்க நீ…
அம்மு….உனக்கு நான் எப்பவுமே நண்பன் தான் சரியா…இதை தாண்டி உன்னிடம் நானாக எப்பவுமே எதையுமே யோசிக்க மாட்டேன் சரியா…
இப்போது அவள் முகத்தில் திருப்தியான புன்னகை வந்தது…
அவளுக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று இரு வீட்டினரும் முடிவு செய்து இருந்தனர்…
அன்றே அஷ்வின் சொல்லி விட்டான்…அவள் மேல் எனக்கு இருப்பது “வெறும் நட்பு மட்டுமே தவிர அது காதல் எல்லாம் கிடையது” என்று கூறி விட்டான்…இரு வீட்டினருக்குமே அது வருத்தம் தான்…
அம்முவிர்க்காக அவன் தான் அன்று பேசி அவளுக்கு சுய தொழிலை ஏற்பாடு செய்து கொடுத்தான்…
அவள் வீட்டில் அவளுக்கு திருமணம் செய்யலாம் என்ற பேச்சு வரும்போது எல்லாம் இவன் தான் அவளை காப்பாற்றி விடுவான்…..
அவன் செய்த உதவியை எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு அவனின் நட்பை நினைத்து இன்றும் பெருமிதமாக தான் இருந்தது..
“நட்பு என்றுமே எதையுமே எதிர்பாராதது தானே”
அஷ்வின்,CUSTOMER யாரு என்னன்னு கேட்டியா ??
அம்மு!! அது வந்து அவங்க நார்த் இந்தியா??
லேப்டாப்பில் டிசைன் செய்து கொண்டிருந்தவளின் கை ஒரு நிமிடம் வேலை செய்யாமல் நின்று விட்டது…
கல்யாண பொண்ணு பேரு என்ன அஷ்வின்??
சம்யுக்தா…
அஷ்வின் கண்டிப்பா என்னால முடியாது…இது நமக்கு வேண்டாம் அஷ்வின்…இனிமேல் இதை பத்தி நம்ம பேச வேண்டாம் அஷ்வின்…உடனே அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது….
அம்மு இங்க பாரு ப்ளீஸ் அழுகாத…
“அஷ்வின் எதையுமே என்னால மறக்க முடியலை…”
அம்மு இது உன்னோட திறமைக்கான ஒரு நல்லவாய்ப்பு அவ்வளவு தான்..
அதுவும் இல்லாமல் என்று இழுத்தவனை,
என்ன அஷ்வின் எங்கிட்டா மறைகிற சொல்லு!!
சம்யுக்க்தா என்னோட ஜூனியர் அம்மு…அவ என்னை love பண்ணினா அம்மு…
என்ன அஷ்வின் சொல்ற??
அர்ஜுன் தங்கச்சிய உனக்கு முன்னாடியே தெரியுமா ??
ஆமாடா…ஆனா அர்ஜுன் அவளோட அண்ணனுன்னு எனக்கு தெரியாது அம்மு…
சம்யுக்தா எங்கிட்டா காதலை சொல்லி இருந்தால்,ஆனால் நான் அதற்க்கு அவளிடம் பதில் கூறவில்லை…
ஏன் அர்ஜுன்??
உன்ன மாறி எனக்கும் ஒரு கொள்கை இருந்தது அம்மு…நம்ம ஊரு பொண்ண தான் கல்யாணம் பண்ண வேண்டும்ன்னு இருந்தேன் அம்மு…
ஆனா இப்போ அவளுக்கு தான் கல்யாணம்ன்னு செய்தி வந்ததுக்கு அப்பறம் ரொம்ப வேதனையாக இருக்கு அம்மு…அப்போவே சரி என்று கூறி இருக்கலாமோன்னு கூட தோணுது அம்மு…
அவன் கூறும்போதே அவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது,,
அஷ்வின் அழாத….ஆனா நம்ம இப்போ என்ன பண்ண முடியும்ன்னு சொல்லு…
அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிடாங்களே அதை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?? உன்னை தான் சம்யுக்தா காதலித்தால் என்று அர்ஜுனிற்கு தெரியுமா??
இல்லைடா தெரிய வாய்ப்பில்லை…அவ ONESIDE தான love பண்ணினா..
“இப்போ என்ன பண்றதுன்னு புரியலயே” என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்..
இவ்வளவு நல்லது செய்த தன் நண்பனுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று மட்டும் தான் அவளுக்கு தோன்றியது….எனக்கு என்ன நடந்தாலும் பரவால்லை என்று ஒரு முடிவு எடுத்தவள்,நிமிர்ந்து தன் நண்பனின் முகத்தை பார்த்து இன்முகமாக சிரித்தாள்…
என்ன அம்மு சிரிக்கிற…என்னோட பொழப்பு உனக்கு சிரிப்பாக இருக்கா??
அவனுக்கு இரண்டு அடியை கொடுத்தவள்,ரெண்டு FLIGHT டிக்கெட் புக் பண்ணிரு இன்னைக்கே கிளம்பிறாலம் அஷ்வின்..
அம்மு நிஜமா !!
நிஜமாக தான் சொல்கிறேன் அஷ்வின்…
இன்னும் அவ உன்னை தான் நெனச்சிட்டு இருக்காளா ??
அவள் கேட்ட கேள்விக்கு,அவனின் போனில் இரண்டு நாட்களுக்கு முன்பு சம்யுக்தா அவனுக்கு மெசேஜ் செய்து இருந்தாள் ,எனக்கு இன்னும் இரண்டு வாரங்களில் திருமணம் எப்படியாவது நிறுத்தி விடுங்கள் இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று மெசேஜ் செய்து இருந்தாள்..
சம்யுக்தா,அர்ஜுன் மாறி இல்லைபோல அஷ்வின்…காதல் தீவிரவாதி மாறி இருக்கிறாள் அஷ்வின்..
அவள் சொல்லியதை கேட்டவனுக்கும் சிரிப்பு தான் வந்தது…
உண்மயாவே சம்யுக்தா “காதல் தீவிரவாதி” தான் அம்மு,கல்லூரி படிக்கும்போது அவளை நான் வேண்டாம்ன்னு சொன்னாலும் என்னோட பின்னாடியே தான் சுத்துவா,அவளை பார்க்கும்போது உன்ன பார்க்கிற மாறியே தான் தோணும் சரியான வாலு பொண்ணு அம்மு…
போதும் போதும் அஷ்வின் உன்னோட காதலியோட புராணம்…
அவள் அத்தனை முறை காதலை சொல்லியும் நான் ஒரு முறை கூட அவளுக்கு ஒரு பதிலை சொல்லவும் இல்லை,அவளோட காதலை மதிக்கவும் இல்லை அம்மு…
பொண்ணுங்க நாங்களா தேடி வந்து காதலை சொன்னா உங்களுக்கு எல்லாம் எங்களோட காதல் மதிப்பு புரியிறது இல்லை அப்படித்தான அஷ்வின்…
அவன் தலை குனிந்தான்…
ஆனா அம்மு அப்போ இருந்து இப்போ வரைக்கும் அவளை தாண்டி ஒரு பொண்ணை கூட நினைத்தது இல்லை…
சரி அஷ்வின் …இந்த டிரஸ் டிசைன் பண்ண சம்யுக்தா உன்னிடம் கேட்டலா இல்லை உண்மையிலே ஆர்டர் வந்துச்சா ??
அவ எப்படி அம்மு கேட்பா??அவங்களே தான் கேட்ருந்தாங்க அம்மு…
ஓகே அஷ்வின் அப்போ evening எல்லா வேலையும் முடித்து விட்டு நம்ம கிளம்புவோம்…
இந்த TWO வீக்ஸ் மேகவியும்,அஜயும் வந்து வேலை எல்லாம் பார்த்து கொள்ளட்டும்…
மேகாவிக்கும் அஜய்க்கும் அவர்களின் வீட்டில் பேசி திருமணத்தை முடிப்பதற்குள் இவளுக்கு விழியே பிதுங்கி விட்டது போல் இருந்தது…அதை இப்போது நினைக்கும்போது கூட சிரிப்பு தான் வந்தது..அவர்களும் சென்னைக்கே வந்து விட்டனர்..
இவளை அர்ஜுனின் நினைவுகளில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு அஷ்வினும் ,அஜயும் ,மேகவியும் பட்ட கஷ்டத்தை என்னவென்று சொல்வது…
கருப்பு நிற DEISGNER புடவையில் அழகாக படியில் இறங்கி வந்த மகளை பார்பதற்கு சந்தோசமாக இருந்தாலும் ஒரு பக்கம் வேதனையாகவும் இருந்தது…
மூன்று வருடத்திற்கு முன்பு நடந்த அணைத்தயுமே இவள் அவர்களிடம் கூறி விட்டாள்…தன் மகள் அதில் இருந்து வெளி வந்தாள் போதும் என்று அவளை பெரிதாக தொல்லை செய்ய வில்லை…
வாழக்கை முழுவதும் அவனையே நினைத்து இப்படியே இருந்து விடுவாளோ என்று அவர்களுக்கு எப்போதுமே பயம் இருக்கிறது தான் ஆனால் அவளை எப்படி தான் திருமணதிற்கு சம்மதிக்க வைப்பது என்று தெரியவில்லை..
கொஞ்ச நாட்களாக அவர்களும் அவளிடம் பல மாப்பிள்ளை போட்டோஸ்களை காட்டிவிட்டனர்…அவர்களை எல்லாம் பார்காமலே பிடிக்கவில்லை என்று கூறும் இவளை என்ன தான் செய்வது…
என்னம்மா நின்னுகிட்டே எங்க அப்பா கூட டூயட் ஆடுரிங்க்ளா ??
ஏண்டி சொல்ல மாட்ட நீ???
“உன்னோட கல்யாணத்துல நாங்க ஆடலாம்ன்னு பார்த்தா அதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவே மாற்றியே “என்று ஆதங்கமாக கூறி கொண்டு இருந்தாலும்,அவள் வெளியே செல்வதற்கு தேவையான அனைத்து பொருளையும் எடுத்து வைத்து கொண்டு தான் இருந்தார்…
என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றதுக்கு பதிலா ,நீங்க ரெண்டு பேரும் திரும்ப ஒரு கல்யாணம் பண்ணிகோங்களேன்…
உங்க கல்யாணத்தை பார்க்க முடியலையேன்னு எனக்கு ஒரு ஏக்கமும் இருக்கு அம்மா !!
இப்படி பேசற உன்னை திட்ட கூட மனசு வர மாட்டேன்குதுடி…
பார்த்து போயிட்டு வா அம்மு!!
சரி அம்மா..
இரு அம்மு என்றவர் அவளுக்கு தலை நிறைய பூவை வைத்து விட்டு அவளுக்கு திருஷ்டி கழித்தே அனுப்பி வைத்தார்…
அஷ்வினும்,அம்ரிதாவும் சென்னை TO டெல்லி செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்..
என்ன தான் இருவரும் வெளியே எதையும் காட்டி கொள்ளவில்லை என்றாலும்,அவரவர் மனதில் அவர்களின் மனதை கவர்ந்தவர்களின் நினைவே முன் வந்து நின்றது…
அம்ரிதா என்ன தான் அவனின் நினைவுகளில் இருந்து வெளியே வந்துவிட்டால் என்று நினைத்தாலும் அது எல்லாம் உண்மை இல்லை…
“அவனை மறக்க நான் இன்னொரு பிறவி தான் எடுக்க வேண்டும்…”
அவனை பற்றி நினைக்கும்போதே அவளின் கண்ணில் இருந்து நீர் வழிந்தது…
“என்னவனே என்னை மறந்தது ஏனோ
எண்ணி வந்தேன் உன் நினைவுகள் தானோ
என்னை சிதைத்தவன் பின்பு அணைத்தவன் ..
இன்று விலகி செல்லும் என் நிம்மதி நீ …”
விமானத்தில் இருந்து இறங்கி வரும்போதே அவளுக்கு மனதில் ஏதோ அறிய முடியாத உணர்வு வந்து தாக்கியது….உடல் எல்லாம் சிலிர்த்து நின்றது…
ஒருவேளை அவனாக இருக்குமோ என்று சுற்றியும் பார்த்தாள் …அவன் இல்லை என்று பெரு மூச்சி விட்டாள்..
அம்மு are you ஓகே !!
ஓகே தான் அஷ்வின்…
அப்பறம் ஏன் உன்னோட முகம் ஒரு மாறி இருக்கிறது…
அர்ஜுன் இங்க இருக்க மாறி ஒரு பீல் ஆகுது அஷ்வின் என்று அவனின் கையை பிடித்து கொண்டாள்…
நீ இந்த அளவுக்கு வீக்காக பீல் பண்ற மாறின்னா கிளம்பிராலாம் அம்மு…
அதெல்லாம் ஒன்னும் இல்லை அஷ்வின்…தப்பு பண்ண அவனே தைரியமா இருக்கும்போது எனக்கு என்ன அஷ்வின்….
அப்போ வா போலாம்…
இவர்கள் இருவரும் கையை பிடித்து கொண்டு கொண்டு ஜோடியாக வருவதை தூரத்தில் ஒருவன் கோவமாக பார்த்து கொண்டு இருந்தான்…