Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்று:

இன்றைய நிகழ்வுகள்

வராவையும், பி.ஏ வையும் வெளியே இருக்க வைத்து , சீ.எம் மிடம் பேசத்துவங்கினான்.

“ஐயா, நேற்று ஜெயில் கலவரம்”, என்று ஆரம்பித்து, அங்கே நடந்தவைகைளை சொன்னவன், பின்கைதி சொன்னது, அவன் நான்கு பேரை கைது செய்தது பற்றி கூறியவன்,

 “அவங்க கைதும் கைதியோட வாக்கு மூலம் வைத்து தான் நடந்தது ஐயா, ரிமாண்ட் பண்ணிட்டேன்”.

“என்றாலும் இன்னும் தெளிவாக விசாரித்த பிறகு குற்ற பின்னணி முடிவு பண்ணுவோம், இவ்வளவு அவசரமான கைதுக்கு காரணம் அவர்கள் போதை பொருட்களை மாணவர்கள் மத்தியில் உலவ விடுவது தான்”.

“மாணவர்களா?”, என்று அதிர்ச்சியாக வினவினார் முதல் அமைச்சர்.

“ விரிவா இன்னும் இரண்டு நாட்களில் உங்களுக்கு சொல்கிறேன் ஐயா”, என்றவன்.

“ இன்னும் இரண்டு பேர் இருக்காங்க ஐயா, இவங்க கைது நடந்தவுடனே   அவங்க தப்பி போய் இருக்கலாம், இல்லைனா……….. பழிய யார் மேலயாவது போட தயாரா இருக்கலாம் இல்லைன்னா…………. முன் ஜாமீனுக்கு கூட முயற்சி பண்ணலாம்”.

“உங்க கிட்ட கேட்காம நடவடிக்கை எடுக்க கூடாதுன்னு தான் இங்க வந்தேன் ஐயா”, என்றான்.

“ஏன்” என்பது போல் பார்த்தவரிடம்,

“ஒருவர் உங்கள் கட்சி, மற்றவர் எதிர் கட்சி”, என்றான்.

“நாட்டுக்காக கட்சி பாகு பாடு இல்லாம உழைக்க சொல்லுங்க…… யாரும் முன் வர்றதில்லை. ஆனால் குற்ற பின்னணி வரும் பொழுது எந்த கட்சி பாகுபாடும் யாருக்கும் தெரிவதில்லை…………”, என்றார் வருத்தத்துடன்.

“உங்க கட்சி கூட பெரிய பிரச்சனை இல்லை ஐயா, ஆனால் எதிர்க்கட்சி ஆளை கைது செய்தால் நீங்கள் வேண்டுமென்றே செய்ததாக சலசலப்பு வரும், அதற்கு தான் உங்களையே கேட்டுகொள்லாம் என்று வந்தேன்”.

 “எப்படியும் செய்துவிடுவேன், ஆனால் உங்களிடம் முன்பே சொல்வது பரவாயில்லை என்று தோன்றியது என்று வந்தேன்”.

“சட்டம் என்ன சொல்கிறதோ, அதை செய்யுங்கள்”, என்றார்.

மெதுவாக புன்னகைத்தவன், “ஐயா நீங்கள் தவறாக நினைத்து கொள்ளாவிட்டால்…………….., இதை நான் சொல்வது தவறு தான் இருந்தாலும்……………. சட்டப்படி தான் நடக்கிறேன்……………. இருந்தாலும்……….. சில விஷயங்களில் சட்டத்தை மீறி செய்வேன் என்று சொல்ல முடியாது……… ஆனால் சட்டம் அவர்களுக்கு தண்டனை கட்டாயம் கொடுக்குமாறு செய்வேன்………….”, என்றான்.

வார்த்தை பிரயோகம், வார்த்தை ஜாலம் செய்பவர்களிடமே……….. புரியாமல் பார்த்தவறிடம், “அந்த மாதிரி ஏதாவது கட்டாய சூழ்நிலைகள் வரும் பொழுது உங்களுக்கு கட்டாயம் தெரிவிப்பேன், ஆலோசனை கேட்பேன், உத்தரவு கேட்பேன், அதன் பொருட்டே உங்களை நேரில் பார்க்க வந்தேன்”.

“எனக்கு………… தகவல்கள் யார் மூலமாகவும் பரிமாறாமல், நானே உங்களை நேரடியாக தொடர்ப்பு கொள்வது போல் இருந்தால்………. விஷயங்கள் வெளியேறாது. உங்களுக்கு முடிவெடுக்கவும் சுதந்திரம் இருக்கும். என்னவாக இருந்தாலும் குற்ற பின்னணி இருந்தால், அதை கட்டுபடுத்துவது போலவோ அல்லது ஒடுக்குவதோ போலவோ…………….  என்ன மாதிரியான நடவடிக்கையும் உங்கள் ஒரு சொல்லில் எடுப்பேன்”.          

முதல் அமைச்ச்சர் அவனை கண்டு சிறிது அசந்து போனார். மிகவும் தைரியமானவன். அதே சமயம், “நான் இப்படி தான்”, என்று ரூல்ஸ் பேசாமலேயே தான் வேண்டியதை நிறைவேற்றி கொள்ளும் தைரியம் இருப்பதை உணர்ந்தார்.

தவறு செய்பவர்களிடம் உள்ள தடுமாற்றம் இல்லை. பதவி வேண்டி அதிக பணிவோ, அதீத மரியாதையோ இல்லை.

அவனுடைய செல்வ நிலையை அவன் தந்தையை அறிந்தவுடனே அறிந்து கொண்டார். பணத்தை கொண்டு அவனை பணிய வைக்க முடியாது. அதற்கு அவசியமில்லாதவன்.

அதுவே இந்த நிமிர்வை இந்த திமிரை கொடுக்கும். அவன் தந்தை அவனுக்கு கொடுப்பது எந்த மகனுக்கும் பெருமையையும் கர்வத்தையும் கொடுத்து,  யாரையும் மதித்து நடக்க வேண்டிய அவசியமில்லாத தன்மையையும் கொடுக்கக்கூடியது.      

அவருடைய அனுபவத்தில் எத்தனை ஆட்களை பார்த்திருப்பார். சந்தர்ப்பம் கொடுக்கபடவேண்டியவன் என்றே உணர்ந்தார். 

“என்ன செய்ய வேண்டும் நான்”, என்றார். அவர் அந்த மாதிரி கேட்பது என்பது அரிது என்பதை விட கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அந்த பதிலுக்கு ரமணன் முகத்தில் திருப்தியோ, சந்தோஷமோ, இல்லை மாறாக அவனுக்கு கொடுக்கப்படும் பொறுப்பு புரிந்த தன்மையே இருந்தது.   நான் அதை நிறைவேற்றுவேன் என்ற உறுதியும் தெரிந்தது.

அவரிடம் அவன் ஆலோசிக்க வேண்டியதை பேசினான், கேட்டு கொள்ள வேண்டியதை கேட்டு கொண்டான், சொல்ல வேண்டியதை சொன்னான்.

அவனுடைய பேச்சும்…. கேள்விகளும்……. பதில் சொல்லும் விதமும்……… முதல் அமைச்சருக்கு மிகுந்த திருப்தியை அளித்து. இந்த கேள்வி பதில்களையும் தாண்டி அவர்கள் பேச்சு வேறு பல திசைகளில் சென்று முடிய கிட்ட தட்ட ஒன்றைரை நேரம் ஆனது.

பேச்சின் முடிவில் மறுபடியும் வராவை அவன் உள்ளே அழைத்து விடைபெற………

“நைஸ் மீட்டிங் யூ மை பாய்” என்று முதல் அமைச்சர் கூறி விடைகொடுக்க……………. “பாய்”. என்ற வார்த்தையை கேட்டு வரமஹாலக்ஷ்மி அவளையும் மீறி புன்னகைத்தாள். அது மரியாதை நிமித்தமான புன்னகையாக அடுத்தவர்களுக்கு தோற்றமளிக்க கூடியது. ஆனால் அது ரமணனை “பாய்” என்று கூறியதால் தோன்றிய புன்னகை. அதை உணர்ந்த வெங்கட ரமணன் முகம் மாறாமல் காக்க மிகுந்த சிரமப்பட்டான்.

முதல் அமைச்சரோடான சந்திப்பு, அசட்டுதனங்கள் அதில் கூடாது என்று மிகுந்த பிரயத்தனப்பட்டு முகம் மாறாமல் காத்து கம்பீரமாகவே விடைபெற்று வந்தான்.

“காக்கிசட்டையில் இருக்கும் பொழுது இவளோடு நாம் முடிந்தவரை  வெளியே வரக்கூடாது, ஹப்பா நம் சிந்தனையை இவள் ஆட்கொள்ளுகிறாள்”.

இத்தனை நாட்களில் அவன் வேலையில் சேர்ந்தபிறகு எப்பொழுதும் இந்த மாதிரி   ஆனாதேயில்லை. எப்பொழுதும் சீரியஸ் தான். காலையில் அவளை பார்த்ததும் தடுமாறி அவனையறியாமல் வசமிழந்தான். இப்பொழுது  சிறிது அசந்திருந்தால் கூட அவன் சிரித்திருப்பான்.

இப்படி சீரியஸாக அவன் யோசித்துக் கொண்டே வந்தாலும் அவன் முகத்தில் இருக்கும் கடினத்தன்மை குறைந்திருக்க அதை அவ்வப்போது கவனித்தபடியே நடந்து கொண்டிருந்தாள்.

நிறைய பேர் அவனோடு பேசுவதற்கு ஆர்வம் காட்டி பேசிக்கொண்டே வந்தனர்.

அதற்குள் அவனுக்கு தொலைபேசி அழைப்பு வர பேசினவன், “வரா நீ வீட்டுக்கு போயிடறியா, நான்……….. கொஞ்சம் அவசர வேலையிருக்கு ஆஃபிஸ் போகணும்”, என்று கேட்க,

“நான் மட்டுமா”, என்று இழுத்தாள்.

“நீ மட்டும் தான் வரா”, என்றவன், “முன்னே எப்படியோ? ஆனா இனிமே நீ என் மனைவி, என்பது எல்லோருக்கும் தெரியும் போது, உன்னோட அசைவுகள்ள பயம் என்பதே கொஞ்சம் கூட இருக்க கூடாது”.

“கமிசனர் மனைவி நீ பயந்தா…… மற்ற பெண்கள் என்ன நினைப்பாங்க”, என்றான்.

“எனக்கு பயம்னு நான் சொன்னேனா?”, என்றாள்

பதில் பேசாமல், நீயே பேசு என்று ரமணன் பார்த்திருக்க………..

“சும்மா உன்னோட இருக்கற நேரம் குறையுதேன்னு நான் நினைச்சா, எனக்கு பயமா”, என்று அவனை நோக்கி திருப்பினாள்.

அதற்கு ரமணன்……….. “இது இன்னும் கஷ்டம் பாப்பா,  நான் நேரம் காலம் பார்க்காமல் தான் சுத்துவேன். அதுவும் இப்போ தான் நான் சென்னை வந்திருக்கேன். என்னோட கண்ட்ரோல்ல தான் இருக்குன்னு எனக்கு த்ருப்தியாகுற வரைக்கும்…….. “,என்று பேசி முடிக்கும் முன்னரே……..

“ஷ்”, என்றவள், “நோ அட்வைஸ் மழை. கிளம்புங்க, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்”, என்றவாறே காரில் ஏறி அமர்ந்தாள்.

“எப்படி போவீங்க? நான் ட்ராப் பண்ணட்டுமா”, என்று வரா கேட்க…….

“இல்லை, நான் பஸ்ல போகிறேன்!”, என்றான்.

“என்னது? சென்னை சிட்டி கமிசனர் பஸ்லயா”, என்று அவள் விச்சித்திரமாக பார்க்க……. “ம், எஸ் இன் பஸ்”, என்றான் ரைமிங்காக.

“அவசரம்னு சொன்னது பொய்யா…… என்னை அனுப்பரதுக்காக சொன்னதா”,

“ப்ச் பாப்பா, கிளம்பு எனக்கு போகணும்னா வண்டியா இல்லை. அப்படி திரும்பி பார்தன்னா பத்து வண்டி நிற்க்கும். நான் ஏன் செய்யறேன், எதுக்கு செய்யறேன், இதெல்லாம் சொல்ல முடியாது. கிளம்பு… போடி!”, என்றான் முகத்தில் எரிச்சலை காட்டியபடி..

“கிளம்பு, போடி”, என்று உதடு அசைத்தவள்,   

“சரி வாங்க பஸ் ஸ்டாப் வரைக்கும் விடறேன்”, என்க………..

“விடமாட்டியாயே நீ”, என்றவாறு அவள் சொன்னதை செய்தவன், பஸ் ஸ்டாப் வந்தவுடன் இறங்கினான். ஓகே, பை”, என்றவன். அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான், சுற்று புறத்தில் என்ன நடக்கிறது என்று.

உடனே கிளம்பாமல் கார் கண்ணாடியை ஏற்றி விட்டபடி அவனையே வரமஹாலக்ஷ்மி பார்த்திருக்க…………

உணர்ந்தவன், “கிளம்பு வரா”, என்று போனில் அழைத்து கூறினான்.

“கொஞ்சம் நேரம் பார்த்துட்டு போறேனே!”, என்று வரா கூற………

“ஹேய், நான் என்ன சினிமா வா காட்டப்போரேன். பஸ் ஏறி போலிஸ் ஸ்டேசன் போறேன். படுத்தாம கிளம்பு”, என்று சற்று குரலுயர்த்தி கூற………

இன்னும் நின்றால் நிறைய திட்டுவான் என்று தெரிந்து, “சரிங்க கமிசனர் சர்”, என்றபடியே கிளம்பினாள்.

“இவன் பஸ்ல போய் நாளைக்கு பேப்பர்ல தான் சென்சேஷன் கிளப்ப போறான், என்னை விட்டுட்டு லைஃப்ப என்ஜாய் பண்றான். இப்படி எல்லாம் பண்ணினா சென்னைக்கே ஹீரோ ஆயிடுவானே. சும்மாவே திமிர், இன்னும் நிறைய திமிர் பண்ணுவான்”, என்று மனதிற்குள் அவனை திட்டியபடியே காரை ஓட்டினாள்.  

பழைய வரா திரும்ப , தன் அண்ணனை தொலைபேசியில் அழைத்தவள் ரமணன் சிறு வயதில் தன்னிடம் ஏதாவது செய்யும் போது தன் அண்ணனிடம் அவன் குறை சொல்லுவாள்.

அதை இப்பொழுது செய்தாள், “அண்ணா இந்த வெங்கி இல்லை……….”, என்று ஆரம்பித்தவள், “ரொம்ப சீன் போடறான்…………..”, என்று வம்புவளர்த்து கொண்டே சென்றாள். பிறகு பக்கத்தில் யாரும் இல்லையே என்று உறுதி படுத்திகொண்டு வைத்தாள்.

இவள் எப்பொழுது இதை விடுவாள், என்று மனதிற்குள் சிரித்துகொண்டே ராம் தொலைபேசியை வைக்க………….

 “யாரு”, என்று கேட்டபடியே கல்பனா வர,

“பாப்பா”, என்றவனிடம்.

“என்னவாம் உங்க தங்கச்சிக்கு?”.

“சும்மா கூப்பிட்டா”, என்ற படியே ராம் எழுந்து போக,

எல்லா விஷயங்களையும் கல்பனாவிடம் பகிர்ந்து கொள்ளும் ராம், அவளிடம் ஆலோசித்தே காரியங்களை செய்யும் ராம், தன் தங்கை விஷயம் என்று வந்து விட்டால் வாயே திறக்க மாட்டான்.

கல்பனா கூட கேட்பாள், “நான் என்ன உங்களையும், உங்க தங்கையையும் பிரிச்சிடுவேன்னு நினைக்கறீங்களோ”, என்று………..

“அப்படி எல்லாம் இல்லை”, என்று அவன் கூறினாலும், ஏதோ சில விஷயங்கள் வரமஹாலக்ஷ்மியை பற்றி அவன் பகிர்ந்து கொள்ளாதது போலவே தான் கல்பனாவுக்கு தோன்றியது.

இவனாவது பரவாயில்லை வெங்கட  ரமணன் தன் மனைவியை விட்டு தூரத்தில் இருந்தாலும், ஒரு வார்த்தை அவளை பற்றி பேசமாட்டான்.

வராவிடம் பேசமாட்டான், சந்தர்ப்பம் கிடைத்தால் அவளிடமே அவளை திட்டுவான். ஆனால் மற்றவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டான்.

இப்படி ஒரு அண்ணன், கணவன் கிடைக்கபெற்ற வரமஹாலக்ஷ்மி மிகவும் அதிர்ஷ்டசாலி என்றே கல்பனா உணர்ந்தாள்.             

 

அத்தியாயம் இருபத்திரண்டு:

 அன்றைய நிகழ்வுகள்

இந்த பக்கம் ஸ்ரீதரின் சித்தப்பாவை வரமஹாலக்ஷ்மியின் வீட்டிற்கு அனுப்பி வைத்த ஸ்ரீதரின் தந்தை, அந்த பக்கம் அவனுடைய அத்தையை அழைத்து அவனுக்கும் சித்ராவிர்க்கும் நிச்சயம் பண்ணி விடலாம் என்று சொல்லி நாள் பார்த்தார்.

 அடுத்த நாளே நல்ல நாள் என்று தெரிய………… அன்றே செய்யலாம் என்று முடிவெடுத்து…………., நிச்சயத்திற்கு மிக நெருங்கிய உறவுகளை  அழைக்கலாம் என்று வேறு இருவரை அனுப்பி வைத்தார்.  

மற்றவர்களுக்கு நிச்சயத்திற்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வேலையை ஜரூராக ஆரம்பித்தனர்.

இரவு ஸ்ரீதரின் சித்தப்பா வந்து அவன் தந்தையிடம் அவர் வரமஹாலக்ஷ்மியின் வீட்டிற்கு சென்று வராவின் தந்தையிடம் பேசியதையும், அவர் சொன்னதையும் சொல்லிகொண்டிருக்க………. கேட்ட ஸ்ரீதருக்கு ரத்தம் கொதி நிலையை அடைந்தது என்றே சொல்ல வேண்டும்.

“என்ன சித்தப்பா சொல்றிங்க. யாரை கேட்டு நீங்க அவங்க வீட்டுக்கு போனீங்க. உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா என்கிட்ட தான் சொல்லனும். அதை விட்டு உங்களுக்கு அவங்க வீட்டுக்கு போய் பேசற தைரியத்தை யார் கொடுத்தது”.

“சும்மா ஜாதி, அது, இது, கொன்னுருவோம், இதையெல்லாம் பேசி என்னை உங்க யாராலையும் கட்டு படுத்த முடியாது. எங்க அப்பாவுக்கும் சேர்த்து தான் சொல்றேன்”.

“அவ வீட்டுக்கு போய் நீங்க எதுவும் கலாட்டா பண்ணிட கூடாதுன்னு தான் சாயந்தரம் என் அப்பா பேசினதுக்கு பொறுமையா இருந்தேன்”.

“அங்கேயே போய் பேசிட்டு வந்துடீங்க. இனி எனக்கென்ன பயம். நீங்க பொறந்த ஜாதில தான் நானும் பொறந்திருக்கேன். உங்களால வெட்ட முடியும்னா என்னாலயும் முடியும்”.

“வீட்ல எங்க அம்மாவும், தங்கச்சியும், இவ்வளவு பேசும் போது என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைகிறீன்களா”.

“இது ஒண்ணும் நீங்களும் எங்கப்பாவும் சேர்ந்து சம்பாதிச்ச சொத்து இல்லை, பரம்பரை சொத்து. சும்மா பூச்சாண்டி காட்டுகிற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்”.

“யாராவது வரமஹாலக்ஷ்மிய தப்பா பேசினீங்க, நீங்க சொன்ன அதே வார்த்தை தான். நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்லை”.

“நாளைக்கு இந்த நிச்சயம் நடக்காது. தேவையில்லாம ஏற்பாடு பண்ணி அசிங்கபட்டுகாதீங்க”, என்று பேசினான்.

“டேய், என்ன பயமுறுத்துறையா! இந்த நிச்சயம் நடக்கும்டா! நீயா நாங்களா பார்த்துறலாம். நீ மட்டும் இந்த நிச்சயத்துக்கு சம்மதிச்சு உட்காரலை, அந்த பொண்ணு வீட்டை ஒரு வழி பண்ணிடுவோம்”, என்று ஸ்ரீதர் அப்பா மிரட்ட……..

“என்ன அப்பா யாரோ சாதாரண ஆளை பற்றி பேசற மாதிரி பேசறீங்க! அவங்கப்பா எம்.பி, எக்ஸ்-மினிஸ்டர். அவர் அதிகமா வம்புக்கு போறதில்லைன்னு பேசறீங்களா. யாரையும் சாதரணமா நினைக்காதீங்கப்பா, என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது”, என்று இவன் ஒரு பக்கம் கத்த,

 அவன் அப்பா ஒரு பக்கம், “என்னடா நீதாண்டா இப்போ பூச்சாண்டி காட்டற! நடத்தறண்டா இந்த கல்யாணத்தை! நீ என்ன செஞ்சாலும் அவங்களை தாண்டா பாதிக்கும். அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது”.

ஆளுக்கு ஒரு பக்கம் கத்திக்கொண்டும், மிரட்டிகொண்டும் வீடே மினி போர்க்களமாக மாறியது.

   பேசினவன் வரமகாலட்சுமியை  சமாதானப்படுத்தும் பொருட்டு அழைக்க…………. முதலில் யாரோடோ பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று பிஸி டோன் காட்ட, நேரத்தை பார்த்தால் இரவு பன்னிரெண்டு என்றது.

அதற்கு பிறகு அவளை அழைத்தால் ரிங் போனது, ஆனால் அவள் எடுக்கவில்லை. பிஸி டோன் சிறிது நேரத்திற்கு முன் தான் வந்ததால் அவள் உறங்கியிருக்க வாய்ப்பில்லை என்று உணர்த்தியது.

 இது காட்டுவது ஒன்றே தான் அவளுக்கு அவனோடு பேச விருப்பமில்லை என்று தெரிந்து கொண்டான். மறுபடியும் மறுபடியும் அழைக்க அது எடுக்கபடவேயில்லை.

நேரத்தை பார்த்தால் ஒன்றை காட்டியது. ஒரு மணி நேரமாக தான் அழைக்கிறோம் அவள் எடுக்கவில்லையா ? 

எத்தனை நாட்கள் பின்னால் சுற்றி, மெதுவாக அவளோடு நட்பை ஏற்படுத்திக்கொண்டு, இன்றைக்கு தான் காதல் என்ற வார்த்தையை அவளிடம் வாங்கி இருந்தான்.             

மூன்று மணி நேரத்தில் தன்னுடைய இரண்டரை வருட காதலை இவர்கள் அழிப்பதா………..

என்ன செய்வது யோசிக்க ஆரம்பித்தான். நாளை சித்ராவுடன் நிச்சயம் நடக்காவிட்டால் வராவுக்கு தொந்தரவு கொடுப்பார்கள். அவர்கள் நிச்சயத்திற்கு அடி போட்டால் நாம் ஏன் திருமணத்தை நடத்தி விட கூடாது.

அதன் பிறகு யார் என்ன செய்ய முடியும். யார் என்ன செய்தாலும் அதன் பிறகு பார்த்து கொள்ளலாம்.

முடிவு எடுத்த வுடனேயே அவன் தன் தந்தையின் மகனென்று காட்ட, அவர் எப்படி மாலையில் இருந்து வேலைகளை ஜரூராக செய்தாரோ அதற்கு சற்றும் குறையாமல் ஸ்ரீதர் அந்த நேரத்தில் வேலைகளை ஆரம்பித்தான்.

இதற்கு வரா ஒத்துக்கொள்வாளா என்பதை பற்றி இம்மியளவும் யோசிக்கவில்லை, அவனுக்கு காரியத்தை முடிக்கும் உத்வேகம் மட்டுமே இருந்தது.  

அந்த நேரத்தில் தன்னுடைய நண்பனை அழைத்தான். அவனிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னான். பிறகே அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

காலை எப்பொழுதும் போல் காத்திருக்காமல் விடிய……….

நேற்று இரவு இருந்து கல்பனா அழைத்துக்கொண்டே இருக்க……………. ராம் தனக்கிருந்த மனவுளைச்சலில் எடுக்கவில்லை.

தன் தங்கையை பற்றி அவளிடம் சொல்ல விருப்பமில்லை. பேசினால் சொல்லாமல் இருக்க முடியாது. அதனால் தொலைபேசியை எடுக்கவில்லை.

தன் மன உளைச்சலால் அவனை அறியாமலேயே கல்பனாவுக்கு கவலையை கொடுக்க ஆரம்பித்தான், அவள் கர்பிணி என்பதை மறந்து.

அவன் நேற்றிலிருந்து எடுக்காததை உணர்ந்த கல்பனா காலையில் வீட்டிற்கு லேன்ட் லைனிர்க்கு அழைத்தாள்.

எடுத்த வேலையாள், அவனுடைய விசுவாசத்தை கல்பனாவிடம் காட்ட வேண்டி………… முதல் நாள் இரவு நடந்தது என்ன என்று தெரியாத போதும்,

“நேற்று இரவு இரண்டு வண்டி நிறைய ஆட்கள் வந்தார்கள். அய்யாவிடம் கோபமாக பேசியது போல் தான் தோன்றியது எல்லா ஆட்களையும் வெளியே அனுப்பி விட்டு அவர்கள் மூவர் மட்டும் பின்பு பேசிக்கொண்டு இருந்தனர்”.

“நேற்று இரவு சமைத்ததை யாரும் சாப்பிடவில்லை”, என்று சொன்னான்.

 “சரி, நான் இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு கூப்பிடறேன். என்ன நடக்குதுன்னு சொல்லு?”, என்றவாறு தொலைபேசிய வைத்த கல்பனா,

நடந்ததை அவள் மாமியாரிடம் கூற, கவலையான அவர் சிவசங்கரனுக்கு அழைக்க அதுவும் எடுக்கப்படவில்லை.

இரவு வராவை பற்றி கேள்வி பட்டது, சிவசங்கரனை பாடாய் படுத்த, நெடு நேரம் உறக்கம் வராமல் இருந்தவர், தூக்கமாத்திரையின் உதவியை நாடியிருக்க………. அது தன் வேலையை வஞ்சனையில்லாமல் செய்து கொண்டிருந்தது.

அவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். தொலைபேசியின் சத்தம் அவர் காதுகளுக்கு எட்டவேயில்லை.

பின்பு கல்பனாவும் ராஜேஸ்வரியும் வராவை அழைக்க, இரவு ரமணனிடம் பேசிய பிறகு, ஸ்ரீதர் அழைத்து கொண்டே இருப்பதை பார்த்த வரா அவனிடம் பேச விரும்பாமல் போனை சைலேன்ட் மோடில் போட்டு உறங்கிகொண்டிருந்தாள், அதனால் அவர்கள் அழைப்பது அவளுக்கும் கேட்கவில்லை.

சிறிது சிறிதாக கல்பனாவுக்கு டென்ஷன் ஏற ஆரம்பித்தது. அப்போதும் ராஜேஸ்வரி அவளை சமாதானப்படுத்தி கொண்டு தானிருந்தார்.

“எல்லாரும் தூங்கறாங்கன்னு இப்ப தானே வேலைபார்க்கறவங்க சொன்னாங்க. எதுக்கு இவ்வளவு பதட்ட படற. அமைதியா இரு!”, என்று கூறிகொண்டுயிருக்க,

 அதற்கு கல்பனா, “இல்லை, அத்தை. எனக்கு மனசே சரியில்லை. ஒரு மாதிரி இருக்கு. எனக்கு அவரை பார்க்கணும் போல இருக்கு. அவரை வரசொல்றீங்களா?  இல்லை நாம போகலாமா?”, என்று நச்சரிக்க துவங்கினாள்.

“அவசரப்படாத முதல்ல நாம அவங்க  கிட்ட பேசலாம். பின்ன முடிவு பண்ணலாம், மணி ஏழு தான் ஆகுது. இன்னைக்கு ஞாயிறு இல்லையா? தாமதமா எழுந்திருப்பாங்க. எட்டு மணிக்கு மேல கூப்பிடலாம்”,  என்று சமாதனபடுத்தி கொண்டிருந்தார்.

விடிந்ததில் இருந்து  வராவிற்கு மறுபடியும் ஸ்ரீதர் போன் செய்து கொண்டிருக்க……….. தாமதமான உறக்கம் சைலேன்ட் மோட் அவளை தொலைபேசி எடுக்க விடவில்லை.

எட்டு மணியாகிவிட்டிருக்க பொருமையிழந்தவன் கிளம்பி அவள் வீட்டிற்கே வந்தான்.

வாசலில் இருந்த காவலாளியிடம், “தான் ஸ்ரீதர்,  வராவின் நண்பன்”. அவனை இன்று வீட்டிற்கு அழைத்திருப்பதாக கூற………….. உள்ளே அனுமத்தித்த காவலாளி, “கொஞ்சம் நேரம் காத்திருங்க. உள்ள இருந்து வருவாங்க”, என்றான்.

உள்ளே லானில் நின்று கொண்டிருக்க……… வேலையால் வந்து கேட்க………. “வராவை பார்க்க வேண்டும்” என்றான்.

“தூங்கறாங்க”, என்றவன், “நீங்க போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வாங்க!”, என்றான்.

“ஒரு தடவை நான் இருக்கேன்னு சொல்லுங்க. பார்க்கலைன்னா போயிடறேன்”, என்றான் ஸ்ரீதர்.

“என்னடா இவன் காலையில் வந்து உயிரை எடுக்கிறான். யாரும் இன்னும் எந்திரிக்களை. யார் கிட்ட போய் கேட்பேன். ஒரு வேளை ரொம்ப வேண்டியவானா இருந்தா பாப்பா கத்துமே! ஒரு தடவை அவங்க சிநேகித பசங்கள காக்க வச்சதுக்கு ரொம்ப கோபிச்சுகிச்சே”, என்று யோசித்தபடியே,

“இருங்க”, என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவன் உள்ளே செல்லவும் வரா கீழே வரவும் சரியாக இருக்க வேலையாள், “உங்களை பார்க்க ஒரு தம்பி வந்திருக்கு”, என்றான்.

“என்னை பார்க்க யாராக இருக்கும்”, என்று யோசித்தபடியே செல்ல…….. ஸ்ரீதரை பார்த்தவள் அதிர்ந்தாள்

“என்ன ஸ்ரீதர் இங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்க………….

அவள் அவ்வளவு அதிர்ச்சியாக கேட்க்கும் பொழுது, உன்னை கல்யாணம் பண்ணிக்க கூட்டிட்டு போக வந்திருக்கேன் என்று எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

“அது………. உங்க வீட்டுக்கு நேத்து சித்தப்பா வந்து பேசிட்டு போனாங்க………..”, என்று ஸ்ரீதர் சொல்லும்போதே நேற்றைய நினைவுகள் ஞாபகத்திற்கு வர……………

“அச்சச்சோ! அப்பா உன்னை இங்க பார்த்தா என்னை கோபிப்பாங்க. நாம அப்புறம் பேசலாம்”, என்றவள், “இல்லையில்லை, நான் உன்கிட்ட பேசமாட்டேன்னு அப்பா கிட்ட சொல்லியிருக்கேன். நீங்க போங்க”, என்றாள்.

“போங்கன்னா! நமக்குள்ள அவ்வளவு தானா. அப்போ என்னை கல்யாணம் பேச சொன்னதெல்லாம்?”,

“அது……….”, என்று தற்போது வரா விழித்தாள்.

தெரியாம சொல்லிட்டேன் என்றா சொல்ல முடியும். தான் சொன்ன வார்த்தை தற்போது அவளுக்கே உவப்பாக இல்லை எனும்போது அதை என்னவென்று சிந்திப்பது என்றே தெரியவில்லை.

“அப்பா உங்க வீட்ல திட்டுனதுனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க”, என்றாள்.

“நம்மளோடது அர்றேஞ் மேரேஜ் இல்லை வரா. லவ் மேரேஜ். உங்க வீட்டு சம்மதமும் எங்க வீட்டு சம்மதமும் அவ்வளவு முக்கியம் இல்லை”, என்று அவன் சொல்லிகொண்டிருக்கும்போதே,

ஏதோ சத்தம் கேட்பது போல் தோன்ற………… “நீ போயேன். நம்ம அப்புறம் பேசலாம். அண்ணா பொருமையாயிருன்னு சொல்லியிருக்காங்க! ப்ளீஸ்!”, என்று அவள் சொல்ல…………

அங்கே ஒரு கோயிலில் திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் தன் நண்பர்களிடம் சொல்லி செய்ய சொல்லிவிட்டான். இப்பொழுது  இவளிடம் திருமண விஷயத்தை சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்றுணர்ந்து…………

“நான் வெளியே நிக்கறேன். நீ ஒரு அஞ்சு நிமிஷம் வா! பேசிட்டு அனுப்பிடறேன்”, என்றான்.

“என்ன பேசணும்? இப்போ வேண்டாம்!”, என்று அவள் கூற…………..

“எனக்கு இப்போ பேசணும்! நீ வரலைன்னா நான் இங்கேயே உட்காருவேன்!”, என்று சொல்லி உட்கார,

அப்போது பார்த்து தந்தையின் கட்சி ஆட்கள் இரண்டு மூன்று பேர் முன்பிருந்த ஆபீஸ் திறப்பதற்கு வந்தனர்.

“நீ வெளிய வெயிட் பண்ணு. நான் வர்றேன்!”, என்று வரமஹாலக்ஷ்மி அவனை அனுப்பினாள். 

அங்கே ஸ்ரீதர் வீட்டில் அவனை காணாமல் அவனை தேட……….. ஆளுக்கொரு பக்கம் செல்ல, வரமஹாலக்ஷ்மியின் வீட்டிற்கு ஒரு நான்கைந்து பேர் கிளம்பினர்.

இங்கே வாசலில் ஸ்ரீதர் காத்திருக்க………….. ஐந்து நிமிடங்களில் வரா வர,

“வெளியே எல்லாரும் பார்ப்பாங்க! காரில் உட்காரு பேசலாம்!”, என்று சொல்ல………. காரில் வரா ஏறி அமர்ந்தாள்.

இதை வாசலில் இருந்த காவலாளி பார்த்து கொண்டு தான் இருந்தான். 

அவள் உள்ளே அமர்ந்த ஒரு நிமிடத்தில் கார் கிளம்பி வேகமெடுக்க,

 “இது என்ன நம்ம கிட்ட சொல்லாம கூட போறாங்க”, என்று காவலாளி கார் சென்ற திசையையே பார்த்திருக்க …………

அவன் சென்ற ஒரு அரை மணீநேரத்திர்க்கெல்லாம் ஸ்ரீதரை தேடி வந்தவர்கள், “இங்கே ஸ்ரீதர் என்று யாராவது வந்தார்களா?”, என்று விசாரிக்க……….

“வந்தாங்க, கொஞ்சம் நேரம் முன்னாடி. எங்க வீட்டு வராம்மா கூட அவங்க கூட போனாங்க”, என்று காவலாளி சொன்ன உடனேயே,

 ஸ்ரீதரின் அப்பாவிற்க்கு சொல்ல…………. “நாம இவ்வளவு சொல்லியும் பொண்ண விட்டுட்டாங்களா, வீட்ல யாராவது இருந்தா தூக்கிட்டு வாங்கடா”,……….. 

“அவங்களை புடிச்சா தான், ஸ்ரீதரை வீட்டிற்கு வரவழைக்க முடியும்”, என்று கூற…………

அவர்கள், “அய்யாவை பார்க்க வேண்டும்”, என்று உள்ளே நுழைந்தனர்.

அங்கே அப்போது தான் எழுந்த ராம் பிரசாத் வெளியே வர, அவனை அப்படியே தூக்கினர்.

“என்ன நடக்கிறது”, என்று அங்கே இருப்பவர்கள் உணர்ந்து, அவர்களை பிடிக்க வர……… அதற்குள் அவன் கழுத்தில் கத்தியை வைத்து, அவன் வாயை கட்ட ஆரம்பித்து இருந்தனர்.  திமிறிய அவன் கால்களை இருவர் பிடிக்க கைகளை ஒருவன் பிடிக்க, தூக்கி ஓடினர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ராம் பிரசாத் கடத்தபட்டான். அவன் கழுத்தில் கத்தி வைத்திருந்ததால் பார்த்த இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவசரமாக உள்ளே சென்று சிவசங்கரனை எழுப்ப,

அந்த நேரம் தொலைபேசி அடிக்க, அதை முன்பு எடுத்த வேலையால் எடுத்தான்.

அந்த புறம் கல்பனா என்று உணர்ந்ததும். “நம்ம ராம் அய்யாவ கழுத்துல கத்திய வச்சு நாலஞ்சு பேர் தூக்கிட்டு போயிட்டாங்கம்மா”, என்று சொல்ல……….. ,

மாடிப்படி அருகே நின்று பேசிகொண்டிருந்த கல்பனா, “என்ன?????”, என்று அதிர்ந்தவள்,

அவளையறியாமல் பின்புறம் படி இருப்பதை உணராமல் கால் வைக்க, அப்படியே பின்புறமாகவே படியில் உருள ஆரம்பித்தாள்.

எட்டு மணிக்கு ஸ்ரீதர் வந்தவன், எட்டரை மணிக்கு வராவை கொண்டு செல்ல,

ஒன்பது மணிக்கு ராம் கடத்தப்பட, கீழே உருண்ட கல்பனா வலியால் துடிக்க, ஒன்பதரைக்கு  ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக…………

பத்து மணிக்கு ரமணன் வந்த போது……….. பையனையும் பொண்ணையும் காணாமல், மருமகளையும், அவள் வயிற்று குழந்தையும், சீரியசாக இருக்க, சிவசங்கரன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார்.  

வரா, அவள் இஷ்டப்பட்டு போன ஒரு தோற்றம் தான் கொடுத்தது.

காவலாளி, “காலையில ஒருத்தர் வராம்மாவை பார்க்க வந்தாங்க. அவங்களோட கொஞ்சம் நேரம் கழிச்சு இவங்க போனாங்க. என்கிட்ட ஒண்ணும் சொல்லலை”, என்றான்.

   அந்த பையனோடு அவருடைய பாப்பா போய்விட்டாள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல்,  யாரிடம் சொல்வது என்று தெரியாமல் ராமநாதனை அழைக்க,

விவரத்தை தெரிந்து கொண்டவர், “அந்த பையன் வீட்ல தான்பா நம்ம ராம்ம கொண்டுபோய் இருப்பாங்க. ஒண்ணும் பண்ண மாட்டாங்க. பயப்படாத, இப்போ நம்ம பாக்க வேண்டியதெல்லாம், நம்ம பொண்ணையும், கல்பனாவையும் தான்”.    

“போலீஸ் போனா, நாளைக்கு காலையில பேப்பர்ல எம்.பி பொண்ணு ஓடிபோச்சு, பையனை கடத்திட்டாங்கன்னு நியூஸ் போட்டுடுவாங்கப்பா, ஒரு ரெண்டு நிமிஷம் குடு. என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். பொண்ணு விஷயம்”, என்று சொல்லி அவர் வைக்க.

ராமநாதன் உடனே வெங்கட ரமணனை அழைத்தார். “நான் சென்னைல இருக்கேன்பா. வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்.”, என்று அவன் சொல்ல,

“போனவுடனே என்ன செய்யலாம்னு சொல்லு”, என்று மட்டும் கூறி, அவர் வைக்க………   

குழப்பததோடே வீட்டிற்கு வந்தவன், ராமை தேடுவதா? வராவை தேடுவதா? என்று விழித்தான்.

 

 

Advertisement