Advertisement

அத்தியாயம் பதினைந்து :

இன்றைய நிகழ்வுகள்

வெங்கட ரமணன் யூனிபார்ம் அணிந்தவுடனே அவனிடத்தில் தானாகவே  வரமஹாலக்ஷ்மியின் நினைவுகள் விடைபெற்று, என்ன கலவரம்? என்ன செய்வது? என்பது மாதிரியான சிந்தனைகள் அவனை அறியாமல்  ஆட்கொண்டன.

அங்கே சென்றால் அவன் நினைத்ததற்க்கும் அதிகமாகேவே சூழல் இருந்தது. அடிதடி பலமாக இருந்தது போல……….. அங்கங்கே ரத்தம் வழியும் முகத்துடனோ கைகால்களில் அடிபட்டோ நிறைய பேர் அமர வைக்க பட்டு இருந்தனர்.

காவலர்களும் பத்து பேருக்கு மேல் அடிபட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு சில பேர்களை முன்னாள் அனுப்பி வைத்திருப்பதாகவும் பாக்கி உள்ளவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரசொல்லியிருப்பதாக அங்கிருந்த ஜெய்லர் சொல்ல…………

நிலைமையின் தீவிரத்தை ஆராய முற்பட்டான். “என்ன பிரச்சினை?”, என….

“தெரியலைங்க சார். எப்பவும் போல நைட் சாப்பாடு டைம்……………… சாப்பாடு வாங்கிட்டு போயிக்கிட்டு இருந்தாங்க………. என்ன நடந்ததுன்னே தெரியலை! ஒருத்தர் மேல ஒருத்தர் சாப்பாடு ப்ளேட் வீசிக்கிட்டு அடிதடில இறங்கிட்டாங்க. அவங்களுக்குள்ள யார் முன்ன வாங்கறது……… பின்ன வாங்கறதுன்னு………… பிரச்சனைன்னு நினைக்கிறேன்?”, என்றார்.

“அதுக்கெல்லாம் இவ்வளவு பெரிய அடிதடி வராது”, என்று மனதிற்குள் நினைதவனாக அவரிடம் சொல்லாமல், “அங்க ட்யூட்டி இருந்த ஆட்களை கூப்பிடுங்க”, என்றவாறு சுற்றுபுறத்தை ஆராய, அவர்கள் வந்த போது பார்த்தால் அவர்களுக்கும் அடிபட்டிருந்தது.

“என்ன நடந்தது?”, என கேட்க………… “தெரியலைங்க சார்! நல்லா பேசிட்டு சிரிச்சிட்டு இருந்தானுங்க. நாங்க கூட சத்தம் போட்டோம் அமைதியா போங்கன்னு”…………,

“நான் பார்த்துட்டே இருக்கறப்பவே………… திடீர்ன்னு தட்டை தூக்கி வீசி ஒருத்தனை பலமா தாக்கிட்டாங்க. அவனோட ஒரு ரெண்டு மூணு பேர் நின்னுட்டு இருந்தவங்க திருப்பி வீச ஆரம்பிச்சிட்டாங்க………….”, என்றான்.

“அப்படியே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் மேல விழ, அடிதடியாகி, எங்களால கன்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு பெரிசாகிடுச்சு சார்!”, என்றான்.

அங்கேயே இருந்து………….. அடிபட்டவர்களை மறுபடியும் ஒரு ட்ரிப் ஹாஸ்பிடல் அனுப்பி விட்டு, பாக்கி உள்ள கைதிகளை தனியாக சந்தித்து ஏதாவது அறிந்து கொள்ள முடியுமா என்று பார்த்தான்.

எல்லாரும் சொன்ன பதில், “அடிச்சிக்கிடாங்க………. எங்க மேலயும் பட்டது, திரும்ப அடிச்சோம்”, என்பதே.

அடிபட்ட கைதிகளை பார்த்த பிறகு முடிவு செய்யலாம் என்று நினைத்தவன், இதிலேயே கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் கடந்து விட்டிருக்க, நேரமும் பதினொன்று என்று காட்ட வீட்டிற்கு போகலாமா என்று யோசித்தபடியே வண்டியில் ஏறி அமர்ந்தான்.

ஆனாலும் அவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது ஏதோ தான் விடுவது போல்…………

வீட்டை நெருங்கும் சமயம் ஜீப்பை ஹாஸ்பிடல் நோக்கி திருப்ப சொன்னான், கைதிகளை பார்த்து விடலாம் என்று.

ஜி.ஹச். அந்த நேரத்திலும் கைதிகளின் அட்மிஷனால் பரபரப்பாக இருந்தது. விஷயம் கேள்வி பட்டு பத்திரிக்கையாளர்கள் வர துவங்கி இருந்தனர். அங்கிருந்த போலீசாருக்கு அவர்களை சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது.

இவனை பார்த்தவுடனே எல்லாரும் இவனை நோக்கி படையெடுக்க……..

சராமாரியான கேள்விகள், “என்ன நடந்தது?, கைதிகளுக்குகுள்ள தகராறா? இல்லை போலீசார்குள்ளும் கைதிகளுக்குள்ளும் அடிதடியா?, இல்லை யார் மீதாவது குறி வைத்து தாக்கப்பட்டதா?, உயிர் சேதம் ஏதாவது இருக்கா?”, என ஆளாளுக்கு கேட்க………            

“ எனக்கும் தெரியாது. கொஞ்சம் நேரம் முன்னாடி தான் இன்சிடன்ட் நடந்திருக்கு சிறைச்சாலைக்கு போய் பார்த்துட்டு இப்போ தான் இவங்களை பார்க்க இங்கே வரேன். உடனடியா எதுவும் சொல்லமுடியாது. வெயிட் பண்ணுங்க! நிலைமையை பார்த்துட்டு சொல்லறேன்”, என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே…………….

சட்ட அமைச்சரும், ஹோம் செக்ரட்றியும் வர நிலைமை சீரியசாக மற்றவர்களுக்கு தோற்றமளிக்க ஆரம்பித்தது. 

அவர்களோடு சேர்ந்து ஒரு கும்பலே வர, எல்லோரையும் வாயிலிலேயே நிறுத்த சொல்லி, சட்ட அமைச்சரையும் ஹோம் செக்ரட்றியையும் இவனே அழைத்து சென்றான்.

அங்கே கிட்ட தட்ட இருபது பேர் அட்மித்ட் ஆகியிருன்தனர். அதில் ஒருவன் “சுப்பிரமணி”, விசாரணைக் கைதி. அவன் மருந்தின் உதவியோடு உறக்கத்தில் இருந்தான். இவனுக்காக நடத்தபட்டதோ இது என்று ரமணனுக்கு சந்தேகமாக இருந்தது.

அவர்கள் மட்டுமல்லாமல் சிறைச்சாலையில் அங்கேயே காயங்களுக்கு முதலுதவி நடந்து கொண்டிருந்தது, அப்படி ஒரு முப்பது நாற்பது பேர் இருந்தனர்.

அமைச்சர் விவரம் கேட்க, “இப்போ தான் என்ன நடந்தது தெரிஞ்சிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்”, என்றான்.

அதற்கு சட்ட அமைச்சர், “நாளைக்கு சட்ட சபை கூட்டம் இருக்குது. எல்லாரும் என்ன நடந்ததுன்னு கேள்வி கேட்பாங்க…….. என்ன சொல்லட்டும்?. இத்தனை பேர் அடிபட்டிருக்காங்க”, என்றார்.

“சட்டம் தன் கடமையை செய்யும்ன்னு சொல்லுங்க சார்!”, என்றான்.

“என்னங்க இப்படி பேசறீங்க…………”, என்று அவர் கேட்க……….. “வேற என்ன சார் சொல்ல முடியும். தெரிஞ்சா தானே சொல்ல முடியும்!”, என்றான்.                             

“இவன் என்னடா இப்படி பேசுகிறான், அதுவும் ஒரு அமைச்சரான தன்னிடம், என்று நினைத்த அவர்……….. இவனிடம் கடுமையாக பேசுவதா…………. எனக்கு தெரிஞ்சாகனும், உடனே ஆக்ஷன் எடுங்க என்று பேசுவதா…………….”, என்று தடுமாறினார்.

“சார்! பார்த்துடீங்கன்னா கிளம்புங்க, நீங்க இங்க ரொம்ப நேரம் இருந்தீங்கன்னா, நான் உங்களோடயே இருந்தா…………. வேற வேலை பார்க்க முடியாது. அதுவுமில்லாம எதுக்கு அடிதடின்னு தெரியலை, உங்களை யாராவது தாக்கிட்டா, ரிஸ்க் எடுக்க முடியாது சார்…………”,

“நாளைக்கு நான் சொன்னதுக்கு அப்புறம் வந்து பாருங்க”, என்று அவரை இடத்தை விட்டு கிளப்ப, ஹோம் செகரட்ரி, “என்ன கேட்பது?”, என்று தெரியாமல் அவருமே குழம்பினார்.

அவ்வளவு தான் என் பேச்சு முடிந்தது என்பது போல………….. “வாங்க சார்!!”, என்று இருவரையும் அழைத்து கொண்டு………. கார்வரை வந்து அவர்களை ஏற்றி……………,

“நாளைக்கு காலைல எனக்கு ஏதாவது தெரிஞ்சு, நீங்க அதை வெளில சொன்னா பிரச்சினை இல்லைன்னு, நான் பீல் பண்ணினா………. உங்களுக்கு சொல்றேன்!”, என்று உள்ளே சென்று விட்டான்.

இவன் என்னடா இப்படி சொல்கிறான் என்று அமைச்சரும் செக்ரட்றியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவன் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்த பத்திரிக்கையாளர்கள் இவர்களை சூழ, “இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு…….. நிலைமை கட்டுக்குள் இருக்கு……….“, என்று சொல்லிய படியே அவர்களும் கிளம்பினர்.

 

அத்தியாயம் பதினாறு

அன்றைய நினைவுகள்

“முதலில் அந்த கலாட்டா செய்த பையன்களை நாலு தட்டு தட்டலாமா என்று நினைக்க…….. பிறகு பசங்க இப்படி தான் கமெண்ட் செய்வார்கள் நாம் தான் ஜாக்ரதையாக நடந்து கொள்ள வேண்டும். இப்படி தன்னை சுற்றி யார் என்ன பேசுகிறார்கள், யார் வருகிறார்கள் என்று தெரியாமலேயே, இந்த வரா நடந்து கொள்ளலாமா?”, என்று வரமஹாலக்ஷ்மியின் மேல் கோபம் வந்தது.

அந்த இடத்தை விட்டு எந்த சலசலப்பும் செய்யாமல் அகன்றான்.

வீட்டிற்கு வரா வந்தவுடனே, ராஜேஸ்வரி…………… “எங்கே ரமணன்?”, என்று கேட்க இவள் புரியாமல் முழித்தாள்.

“ரமணன் தம்பி உன்னை கூட்டி வர்றேன்னு வந்தாங்களே…………..”, என………….

“ இல்லையேம்மா!! நான் அங்கே இருந்து தான் வர்றேன்!”, என்றாள் வரா.

“ எங்கே போயிருப்பாங்க?  இப்போ ஒரு அரை மணி நேரம் முன்னாடி நான் டான்ஸ் கிளாஸ்ல  தான் இருக்கேன், வரா வந்துட்டாளான்னு போன் பண்ணினாங்கலே!”, என்று சொல்லிகொண்டிருக்கும்போதே ரமணன் வந்து விட…………..

“இவளை பார்க்கலையா தம்பி!”, என்றார் ராஜேஸ்வரி.

“நான் பார்த்தேன்! அவ பார்க்கலை!”, என்றான் ரமணன் வராவையே பார்த்தவாறு, அவள் பதில் பேசும் முன்னரே…………..

 “அப்படி என்ன அரட்டை! சுற்றி யார் இருக்காங்க, என்ன பேசறாங்கன்னு தெரியாமா, நீ என்ன சாதரணமான பிரஜையா? மத்திய அமைச்சரோட பொண்ணு இப்படி தான் உன் நடவடிக்கை இருக்குமா, நீ இன்னும் சின்ன பொண்ணு இல்லை, இப்படி எல்லாம் நடந்துக்க……..”,

“உன் கூட ரெண்டு ஜந்துக்கள் இருந்ததே, அவங்க யாரு?”, என்றான்.

பதில் பேசாமல் நின்றாள். அவனும் நிற்க வைத்து தான் கேள்வி கேட்டு கொண்டிருந்தான்.

அவள் முகம் அவமானம், கோபம், அவனை எதிர்த்து பதில் பேச முடியாதா இயலாமை, என்று அணைத்து பாவங்களையும் காட்டியது.

இருந்தாலும் ஸ்ருதி இறக்காமல் அவளை பார்த்து ரமணன் கேள்வி கேட்டு கொண்டிருந்தான். ராஜேஸ்வரி ஏதோ நடுவில் பேச வர அவரையும் பார்வையாலேயே அடக்கினான்.

என்ன செய்வது என்று தெரியாமல் அவரும் நின்றிருந்தார்.

“உன்கூட இருந்த ரெண்டு பேரு யாருன்னு கேட்டேன்?”, என்று மறுபடியும் ஒரு சத்தம் போட…………. அவள் உடம்பு தூக்கி போட்டது என்றே சொல்ல வேண்டும்.

“நீ யார் என்னை கேள்வி கேட்கறதுக்கு உன் வேலையை பார்த்துட்டு போடா………”, உதடுகளின் நுனி வரை வந்த இந்த  வார்த்தைகளை உதடுகள் உச்சரிக்கும் வேலையை செய்யவே இல்லை.

ரமணன் செய்த தவறு………….. இளையதலைமுறையினர் அவர்களை திட்டினால் பொருத்துக்கொள்வர், ஆனால் அவர்களின் நண்பர்களை திட்டினால் பொங்கி எழுவர். அந்த வயதுக்கே உரிய இயல்பு அது.

அழுகையை அடக்கியவாறே, “என் பிரிண்ட்ஸ்” என்றாள். “பார்க்கவே கண்றாவியா இருக்காங்க! அவங்க ஸ்டைலும் ட்ரஸ்சும் பார்க்கவே சகிக்களை! கலர் கலரா தலையிலையும் உடம்புலயும் என்னத்தையோ அப்பிட்டு இருக்காங்க. அவங்க உன் ஃபிரிண்ட்ஸ்ஸா, எப்படி பழக்கம்?”,

“டான்ஸ் கிளாஸ் மூலமா?”, என…………..

“என்ன அத்தை பண்றீங்க நீங்க?,………. ராம் அண்ணா என்ன பண்றாங்க? எங்க கிளாஸ் போறா, யாரோட பழகறா, பார்க்க வேண்டாமா…………”, என்று தன் கோபத்தை அவர்கள் மேல் திருப்ப…….

இது தான் சமயம் என்று வரா வழக்கம் போல் அந்த இடத்தை விட்டு ஓடிப்போனாள்.

அவள் சென்ற பிறகு ராஜேஸ்வரி, “இல்லை தம்பி, இவ கேட்டான்னு ராம் போய் பார்த்து தான் சேர்த்து விட்டான்”, என்றார்.

ராம் பிரசாத் வந்தவுடன் அவனையும் ஒரு பிடி பிடித்தான்.

“என்ன செஞ்சிட்டு இருக்கீங்க வீட்ல எல்லாரும், அவ என்ன பண்றா? எங்க போறா? யார் கூட பழகறா? எதுவுமே பார்க்கறது இல்லையா…………..”,       

“ என்ன டான்ஸ் ஸ்கூல் அது? கத்துக்கனும்னா வீட்டுக்கு வரவைக்க கூடாதா”.

“இவ நண்பர்கள்ன்னு ரெண்டு பேர் கூட பேசிட்டே நம்ம வீட்டு ஹால்ல இருந்து வாசல் தூரத்தை அரைமணிநேரம் நடக்கறா. எனக்கு அதுங்க ரெண்டு பேர் ஸ்டைலும் பார்த்தா வாமிட் வருது”.  

“அந்த பொண்ணு மினி ஸ்கர்ட் போட்டுட்டு டான்ஸ் கிளாஸ் வருது. அதை போட்டுட்டு டான்ஸ் பண்ணின்னா பசங்க எல்லாம் வாயை தொறந்துட்டு பார்ப்பாங்க. அந்த பொண்ணோட இவ சுத்துனா இவளையும் பார்க்க செய்வாங்க”.

“இந்த வயசுல பொண்ணுங்க எல்லாம் சென்டர் ஆப் அட்ராக்ஷனா இருக்க கூடாது. எத்தனை பிரச்சினை வரும் தெரியுமா”.

“வெளில வரும்போதே ரெண்டு பேர் நின்னு மடக்கி காட்றேன் மச்சின்றான் இவளை பார்த்து………. ஆனா அது கூட இவளுக்கு தெரியலை”.

“இப்படி என்ன நடக்குது தன்னை சுற்றின்னு தெரியாம பொண்ணுங்க இருக்கலாமா? இவளுக்கு என்ன தெரியும்னு நீங்க அவளை தனியா டிரைவிங் வேற விடறீங்க? பறக்கறா…………”.

‘அப்பா மினிஸ்டர்ன்றப்போ மத்தவங்களை விட நாம இன்னும் ஜாக்ரதையா இருக்கணும். சின்னதா இவ ஏதாவது பண்ணின்னா கூட அவர் மேல ரிஃப்லக்ட் ஆகும்”.

ராம் பிரசாத்திற்கு திரும்ப பேசும் சந்தற்பத்தையே வெங்கட ரமணன்  கொடுக்கவில்லை.

மிகவும் டென்ஷனில் ரமணன் இருப்பது புரிந்து, “சரி நீ எப்படி சொல்றியோ பார்த்துக்கலாம்”, என்று அவனை சமாதானப்படுத்தி, அவன் தங்கையை பார்க்க சென்றான்.

தன்னிடமே இப்படி பேசுபவன் அவளையும் கட்டாயம் பேசியிருப்பான் என்று தெரிந்து உள்ளே போக……………

அழுது கொண்டிருந்தாள் வரமஹாலக்ஷ்மி, அவள் அன்னையும் அங்கே தான் இருந்தார் அவளை சமாதானப்படுத்தி கொண்டு,

ராமை பார்த்ததும் அவளுக்கு அழுகை, கோபம், ஆத்திரம், எல்லாம் ஒரு சேர பொங்கியது.

“யார் அவன் என்னை கேள்வி கேட்க?……… யார் அவன்?”, என்று ஆத்திரமாக கத்தினாள்.

“என்னோட அப்பா, அம்மா, அண்ணா யாரும் கேட்கறது கிடையாது, என்னை பேசறது கிடையாது. இவன் யார் என்னை திட்றதுக்கு. யார் குடுத்தா அந்த உரிமையை?”,

“எப்போ பார்த்தாலும் பெரிய இவன் மாதிரி என்னை திட்டுறது இல்லைனா  மிரட்றது”.

“முதல்ல இவன் எதுக்கு என்னோட கிளாஸ்க்கு வந்தான். என்னை உளவு பார்க்கறானா, இடியாட்டிக் ஃபெல்லா, நான் என்ன சின்ன பொண்ணா என்னை பார்த்துக்க எனக்கு தெரியாது. அப்படியே ஏதாவது பிரச்சனைன்னா நான் ஃபேஸ் பண்ணிக்கறேன். இவனை யாரு கூப்பிட போறா……..”, 

“என் ஃபிரண்ட்ஸ் பார்த்து ஜந்துங்கறான். இவன் கூட தான் பார்க்க சகிக்கலை. இவனை நாம நம்ம வீட்ல வெச்சிருக்களை!. இவனோட பேசலை!. அவனவன் அவன் வேலையை பார்க்கனும்! கலர் கலரா அப்பியிருக்காங்கலாம். இவன் நம்ம மேல பட்டா இவன் கலரே மை மாதிரி அசிங்கமா நம்ம மேல ஒட்டிக்கும்”.  எவரையும் காயப்படுத்தும் வார்த்தைகள் இவை.

அப்படி பிழிய, பிழிய அழுகையோடு சேர்த்து கத்தி கொண்டிருந்தாள். “எங்க வீட்ல வந்து இருந்துட்டு, என் உயிரை எடுக்கிறான். பேசாம என்னை எங்கேயாவது ஹாஸ்டல்ல கொண்டு போய் சேர்த்துடுங்க, நான் போயிடறேன்”, என்று தேம்ப……………,

அந்த நேரத்தில் அவளை தேற்றுவதே அவளுடைய அன்னைக்கு அண்ணனுக்கும் முக்கியமாக தோன்ற, “விடு பாப்பா பார்த்துக்கலாம்”, என்று அவளை தேற்றி கொண்டிருந்தனர்.     

இது அத்தனையையும் வெங்கட ரமணன் கேட்டு கொண்டிருந்தான் என்பது அவர்கள் அறியாதது.

வரமஹாலக்ஷ்மி அழுது கொண்டே போனதை அவன் பார்த்தான். பிறகு பின்னோடு ராஜேஸ்வரியும் ராமும் போவதை பார்த்தவன், அவளை சமாதானப்படுத்த என்று இவனும் அங்கே வர, அவள் குரலில் ஒலித்த ஆத்திரம் அவனை வெளியே நிறுத்த………. இதையெலாம் கேட்க நேர்ந்தது.

என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவளுடைய, “யார் அவன் என்னை கேள்வி கேட்க”, என்ற வார்த்தை அவனை மிகவும் காயப்படுத்தியது.

அத்தனையிலும் ராமும், அவன் அன்னையும் மறுத்து ஒரு வார்த்தை பேசாமல் அவளை சமாதானப்படுத்தி கொண்டு இருப்பதை பார்த்தவுடன் அந்த கேள்வி அவனை மறுபடியும் மறுபடியும் தாக்கியது.

“யார் அவன் என்னை என் வீட்டில் இருந்து கொண்டு கேள்வி கேட்க……….”.

உள்ளே போகாமல் அமைதியாக திரும்ப வந்தவன்…………

சிறிது நேரம் கழித்து ராமும் ராஜேஸ்வரியும் வர, “அத்தை இப்போ தான் சொன்னாங்க, ரிசல்ட் இன்னும் ஒரு மாதம் தள்ளி போகுமாம். அதனால நான் ஊருக்கு கிளம்பறேன்”, என்று கூறியவன்,

முகத்தில் எதையும் காட்டாது, “அவளை பார்த்துக்கோங்க! ரொம்ப திட்டிடேன்! சாரி கேட்டேன்னு சொல்லுங்க!”, என்றபடியே கிளம்பினான்.

ராம் பிரசாத், “நாளைக்கு போகலாண்டா”, என்ற போது கூட “இல்லை அண்ணா, அப்பாவோட பேசினேன், வான்னு சொன்னாங்க!” என்று விட்டான்.

ராமநாதனின் எந்த முடிவுக்கும் வார்த்தைக்கும் எதிர்த்து பேசும் தைரியம் யாருக்கும் கிடையாது. “நான் வருகிறேன் டிரெயின் ஏற்றி விட”, என்ற போது கூட…………, “வேண்டாம்! நான் போயிக்கறேன்”, என்று யாரையும் கூப்பிடாமல் கிளம்பி விட்டான்.

ராமிற்கு சந்தேகமாக இருந்தது, ஒரு வேலை வரா பேசியதை கேட்டிருப்பானோ என்று, அவனிடம் எப்படி கேட்பது என்று தெரியவில்லை.  

ஸ்டேஷன் போனால் இன்னும் ட்ரெயின் வர இரண்டு மணிநேரம் இருந்தது.  அமைதியாக அமர்ந்து கொண்டான். என்ன செய்தாலும் மனம் ஆறுவது போல் தெரியவில்லை.

“இவன் யார் என்னை கேள்வி கேட்க?”, என்ற வராவின் கேள்வியே அவனை தாக்கியது, அவனை யோசிக்கவும் வைத்தது, “அவன் யார் அவளுக்கு”, என்று.

மறுபடியும் அதே யோசனை அவனிடம் சொன்னது, “அவன் அவளுக்கு யாருமில்லாமல் போய்விட்டான்”………. “யார் அவன் என்னை கேள்வி கேட்க”………. என்று சொன்ன போது, “அவள் மட்டும் அவனுக்கு என்னவாகிவிட முடியும்?”, என்று……….. 

ராம் பிரசாத்தும் ஒன்றும் பேசவில்லை. அந்த வார்த்தைக்கு ராஜேஸ்வரியும் ஒன்றும் பேசவில்லை. அதுவே சொல்கிறதே, “நீ யாருமில்லை அவளுக்கென்று”, என்று மனம் எடுத்துரைக்க,

இன்னொரு புறம் அதே மனம், “நீ என்ன எதிர்ப்பார்தாய்” என்று சாட தலையை பிடித்து கொண்டு அமர்ந்தவன், ட்ரெயின் வரும் வரையில் சுய அலசலில் இருந்தான். ஆனால் விடை காண விருப்பமில்லாத சுய அலசல்.

விடை தெரிந்தது, புரிந்தது, அவளை பிடித்திருந்தது.

ஆனால் அது அவனுக்கே அப்பொழுது பிடிக்கவில்லை.   

திடீரென்று தன்னையே தொட்டு அழுத்தி இழுத்து பார்த்தான், மை போல ஏதாவது வருகிறதா என்று. கண்களில் கண்ணீர் வந்து விடுமோ என்று அவனுக்கே பயமாக இருந்தது. 

ட்ரெயின் வரும் வரையில் அமைதியாக அமர்ந்திருந்தவன், ட்ரெயின் வந்தவுடன் முயன்று தன்னுடைய தாக்கத்திலிருந்து வெளியே வந்தான். அவனுக்கு தெரியும் அவனுடைய சிறு முக சுனுக்கம்மும் அவனுடைய அன்னைக்கும் தந்தைக்கும் வருத்தத்தை கொடுக்கும் என்று……..

வீட்டிற்கு வர ராம் பிரசாத் கல்பனாவின் திருமணத்தை பற்றிய பேச்சுகளே இருக்க…………

இவனுடைய வித்தியாசம் யாருக்கும் தெரியவில்லை. இவனும் வித்தியாசத்தை காட்டவில்லை. இரண்டு மூன்று முறை ராம் போனில் அழைத்த போது கூட நன்றாகவே பேசினான்.

ராமாக வரமஹாலக்ஷ்மியின் பேச்சை எடுத்தபோது கூட, “அவளுக்கு விவரம் பத்தாது அண்ணா நன்றாக பார்த்து கொள்ளுங்கள்” என்று முடித்து வேறு பேச்சை எடுத்து திசை திருப்பி விடுவான்.    

ரிசல்ட் ஓரிரு தினங்களிலேயே வர, ஐ.பி’எஸ் காடரில் முதல் ஐந்து இடங்களில் வந்திருந்தான். எல்லாரும் சந்தோஷத்தை அனுபவிக்க அவனால் தன்னுடைய இத்தனை வருட உழைப்பின் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. 

அதுவும் இந்த மாதிரி நல்லதனமாக நடந்துக்கொள்ளவே முடியவில்லை. தன்னுடைய கோபத்தை வரா மீது………… அதை கேட்டு கொண்டிருந்தவர்கள் மீது காட்டா வேண்டும் என்று தோன்றினாலும், அது சிவசங்கரனுக்கு மிகுந்த வருதத்தை  கொடுக்கும் என்றுணர்ந்து……………., இதனை தெரிந்தால் தனது தந்தையும் அவர்களோடான உறவை தொடர்வாறா இல்லையா தெரியவில்லை?.

 சிவசங்கரனுக்கு தன்னுடைய தந்தை எத்தனை முக்கியமானவர் என்று அவன் அறிவான்.  அதனாலேயே அமைதியாக விட்டுவிட்டான். அதுமல்லாமல் கல்பனாவுடன் ராமின் திருமணம் வேறு நெருங்கியது. சில தினங்களே இருந்தது.    

அதற்குள் இன்டர்வியூ வர இவன் டெல்லி கிளம்ப……., இவன் சென்னை வராததால் சிவசங்கரன் தன்னுடைய குடும்பத்தை அழைத்து கொண்டு இவனை பார்த்து விட்டு அப்படியே கல்யாண வேலைகளையும் ஆரம்பித்து வைக்க வந்தார்.

முயன்று ராமோடும் ராஜேஸ்வரியோடும் பேசினாலும் வராவோடு பேசவே முடியவில்லை. அவள் உணர்ந்து பேசியிருக்க மாட்டாள் கோபத்தில் பேசியிருப்பாள் என்று அவனை அவனே சமாதானப்படுத்தி கொண்டாலும் முடியவேயில்லை.

வரா அவன் முகத்தையே அடிக்கடி, அவன் வந்து பேசமாட்டானா என்று  பார்ப்பது போல தோன்றியது.

வரா தன்னை பார்க்கும் பொழுது, அவன் அவள் புறம் திரும்பவேயில்லை. ஆனால் அவள் பார்க்காத பொழுது அவளை மட்டுமே பார்த்தான்.    

எல்லோரிடமும் சொல்லி கொண்டு கிளம்ப தன்னிடமும் சொல்வானா என்று வரா பார்ப்பது போல தோன்றினாலும்…………. அது நிஜமா பொய்யா என்று அவள் கண்களுக்குள் பார்க்க அவனுக்கு விருப்பமில்லை. கிளம்பிவிட்டான்.

வரமஹாலக்ஷ்மிக்கு அவனை பார்த்து ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்ல வேண்டும் போல தோன்றினாலும் அவன் பார்வையே வராவை அவனை நெருங்க விடவில்லை.

டெல்லி சென்று இன்டர்வியூ அட்டென்ட் செய்து வந்தான். அவனுக்கு கிடைக்கும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எந்த டென்ஷனும் இன்றி நன்றாகவே மிக நன்றாகவே செய்தான்.

அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முயன்றபடியே வந்து ராம் பிரசாத் கல்பனாவின் திருமணத்தில் கலந்து கொண்டான். அவன் இயல்பே மிக சில நேரங்களில் தான் சிரிப்பான். அவன் தந்தைக்கு நேர் எதிர்.

இப்போது அதுவும் காணாமல் போய் இருந்தது. ஐ பி எஸ் ஆகும்முன்னே அதன் லட்ச்சனங்கள் பல அவனிடம் தோன்றி எல்லோரையும் அவனிடத்தில் இருந்து தள்ளி நிறுத்தியது.

திருமணம் மதுரையில் ரிசெப்சன் சென்னையில் என்றிருக்க…………… இவன் திருமணத்தை மட்டுமே அட்டென்ட் செய்ய முடியும். இவன் ஐ பி எஸ் செலக்ஷன் வந்திருந்தது.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அகாடமியில் இரண்டு வருட ட்ரைனிங். சுந்தரவல்லிக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் ராமநாதன் அவன் மிகவும் பொறுப்பான ஒரு பதவிக்கு போகபோகிறான் என்றுணர்ந்து சற்று கவலையில் இருந்தார்.

அவனிடம் தனியாக……….. “ரமணா எக்ஸாம் எழுதி உங்கம்மா இஷ்டப்படி செலக்ட் ஆகிட்ட”.

“ஆனாலும் உனக்கு போகனும்னு எந்த கட்டாயமுமில்லைப்பா. இஷ்டமிருந்தா போ, இல்லைன்னா இருந்துக்கோ, நான் உங்க அம்மாவை சமாளிச்சிக்கறேன்”, என்றார்.

“இல்லைங்கப்பா, முதல்ல அம்மாவோட கட்டாயத்துக்காக தான் பா இதுல இறங்கினேன். இப்போ எனக்கு இது பிடிச்சிருக்கு பா, எப்போ எந்த நிமிஷம் என் மனசுல இது வேண்டாம்னு தோனினாலும் உடனே வந்துடுவேன்”, என்று வாக்கு கொடுத்தபடியே கிளம்பினான்.

எல்லாரும் திருமணத்தில் பிஸியாக இருக்க…………… இவன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் பார்த்து வரமஹாலக்ஷ்மி இவனோடு பேச வந்தாள்.

ராம் பிரசாத் அவளிடம் கூறியிருந்தான், “அன்னைக்கு நீ பேசுனதை ரமணன் கேட்டிருப்பான் போல”, என்று………

உண்மையை சொல்லபோனால், அன்றைக்கு அவள் என்ன பேசினாள் என்றே அவளுக்கு ஞாபகமில்லை. அவளுக்கு இருந்த கோபத்தில் ஆத்திரத்தில் கத்தினாள்.      

எப்படி பேச்சை ஆரம்பிப்பது? என்ன சொல்லி சாரி கேட்பது? என்றே புரியவில்லை. இவள் என்ன பேசினாள் என்பதும் இவள் நினைவில் இல்லை. அதை கேட்டானா என்றும் அவளுக்கு தெரியாது. 

 ரமணன் அவன் அம்மாவோடு ஏதோ எடுப்பதற்காக மண்டபத்தில் அவர்கள்  இருந்த ரூமிற்கு போக. சுந்தரவல்லி இருக்கிறார் என்று தைரியமாக அவனை விஷ் செய்யும் நோக்கத்தோடு வரமஹாலக்ஷ்மி  போக……..

அவளுடைய நேரம் சுந்தரவல்லி ராமநாதன் அழைக்கிறார் என்று உடனே அந்த ரூமை விட்டு வெளியேற…………… வந்தவர் இவளை பார்த்து “இரு மகாலக்ஷ்மி வந்துடறேன்”. என்று போனார்.

இவளை பார்த்த ரமணன் ஒன்றும் பேசாமல் ஏதோ எடுத்து வைத்துகொண்டிருக்க, “கன்க்ராட்ஸ்”, என்றாள்.

அவன் திரும்ப எதுவும் பேசாமல் அவன் வேளையிலேயே மும்முறமாயிருக்க, அவளுக்கு இருக்கவா போகவா என்று தோன்ற…. 

திரும்ப போனாள்…………. “இங்க வாடி” என்று ரமணனின் குரல் கேட்க, வேறு யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவளின் செய்கையை பார்த்திருந்தவனின் கோபம் அதிகமாக……… “உன்னை தான் இங்க வாடி”, என்றான்.       

ரமணன் இந்த மாதிரி பேசி வரா கேட்டதில்லை என்பது ஒரு புறமிருக்க, யாருமே வராவிடம் இந்த மாதிரி இதுவரை பேசியதில்லை.

நடுக்கம் எடுக்கும் போல் இருந்தது அவளுக்கு. அவளால் அந்த இடத்தை விட்டு அசைய கூட முடியவில்லை. ரமணனே அவள் அருகில் வந்தான்.

“நீ என்ன சுவர் கிட்டயா பேசின? என்னவோ வெங்கி மங்கின்னு ஸ்டைலா கூப்பிடுவியே………… உனக்கு தெரியாதவங்களை எல்லாம் இப்படி தான் கூப்பிடுவியா………..”,

“என்னவோ பெரிய இவ மாதிரி உங்க அண்ணனை பார்த்து கேட்டியே இவன் யாரு என்னை கேள்வி கேட்கன்னு…………. ஆமா நான் யாருடி உனக்கு?”, என்றான்.

வரமஹாலக்ஷ்மி மூச்சு விடும் சத்தம் கூட கேட்குமோ என்று அஞ்சி மெதுவாக மூச்சு விடுபவள் போல இருந்தாள்.

“நான் தொட்டா மை அப்பிக்குமா? எங்க என்னை தொடுடி அப்புதான்னு பார்க்கலாம்”.

கண்களில் வராவுக்கு நீர் திரண்டது. “ஏய்”, என்றவன்……… “கண்ல தண்ணி வந்தது, என்ன பண்ணுவேன்னு தெரியாது”,  என்று மிரட்டினான்.

பின்பு அவள் கையை பிடித்தவன், அவளுடைய கையின் மேற்புறத்தை தன்னுடைய இன்னொரு கையின் மேல்புறத்தில் வைத்து தேய்த்தான்,

அதை பட்டென்று விடுவித்தவன் “பாரு, ஏதாவது மை ஒட்டியிருக்கான்னு”, என்றவன்………….

“ஆனா பாரு, உன் கையில இருந்து வெள்ளையா ஏதாவது ஒட்டியிருக்கான்னு. நான் அப்புனாலாவது அது மை மாதிரி தெரியும். ஆனா நீ அப்புனா அது………..”, அவளை எப்படியாவது காயப்படுத்தி விடும் நோக்கத்தில்………. “எச்சில் மாதிரி இல்லைனா வெண் குஷ்டம் மாதிரி தோணும்”, என்றவன்…………. அந்த வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து அவள் வெளி வரும் முன்னரே……………  

“என் முன்னாடி நிக்காத! போடி, போ!”, என்று அவன் குரலை உயர்த்தாமலேயே அவளை பார்த்து கர்ஜித்தது, அவளை அந்த இடத்தை விட்டு உடனே போக சொல்லியது, மறுபடியும் அவளை ஒரு மோசமான ஜீவ மரண போராட்டத்தோடு கூடிய காய்ச்சலில் தள்ளியது.

    

Advertisement