Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்பது:

இன்றைய நிகழ்வுகள்:

அன்றைய தினம் மிகவும் பரபரப்பான தினமாக வெங்கட ரமணனுக்கு அமைந்தது. இரு கட்சிகளை சேர்ந்த மிக முக்கியமான புள்ளிகளை ஒரே குற்றத்திற்காக கைது செய்தது, அதுவும் போதை மருந்தோடு சம்பந்தப்படுத்தி  நகரத்தினுள் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

அதற்காக கலவரங்கள் எதுவும் நடந்து விடாதபடி பார்த்துக் கொள்வது அவசியமாகி போனதால், அன்றைய நாள் பரபரப்பாகவே இருந்தது.

யாரும் எதிர் பார்க்கவில்லை, இவ்வளவு எளிதாக கைது படலம் நடக்கும் என்று.

அவர்களை கைது செய்து கொண்டிருக்கும் போதே, நகரத்தில் உள்ள எல்லா பள்ளிகளுக்கு பக்கத்தில் இருக்கும் பெட்டி கடைகள், சிறு கடைகள், ஐஸ்க்ரீம் கடைகள் என்று அத்தனையும் சோதனையிடப்பட்டது.        

யாராவது இந்த டிரக்ஸ் விற்பனையோடு தொடர்பில் இருந்தாலும்……….. முன்தினம் நடந்த கைது படலத்திலேயே உஷாராகி இருப்பர் என்று அறிந்தது தான்.

இருந்தாலும் இந்த சோதனை ஒரு பயத்தை கொடுக்கும் என்பதாலேயே செய்தான். 

அது மட்டுமின்றி எல்லா ஸ்கூல் வாசலிலும், ஸ்கூல் ஆரம்பிக்கும் சமயமும், விடும் சமயமும் காவலர்கள் அங்கே தினம் இருக்குமாரு ஒரு புதிய ஆணை பிறப்பித்தான்.

அவனுக்கு தெரியும் ஒரு நாளில் முடியும் விஷயமில்லை இது என்று, மாதங்களாகும், சில சமயம் வருடங்களாகும்.

சில சமயம் தோல்வியை கூட தழுவலாம், ஏனென்றால் ரமணன் கருத்து………… தங்களை விட குற்றவாளிகள் புத்திசாலிகள் என்பதே.

சில சமயம் யோசிப்பான்…………… இப்படி மூளையை கசக்கி, பிழிந்து குற்றம் புரிவதற்கு யோசிக்கும் இவர்கள், ஏன் அதை ஆக்கப்பூர்வமான செயலாக மாற்றக்கூடாது.

அவனுக்கு தெரிந்தவரை இதற்கு கிடைக்கும் பதில் ஈசி மணி, சுலபமாக கிடைக்கும் பணம். அது கிடைத்ததால் குற்றங்கள் நிகழலாம் அல்லது கிடைப்பதற்காக குற்றங்கள் நிகழ்த்தப்படலாம்.

இன்னும் வேறு சிலதை யோசிக்கும் போதே நெஞ்சே கனத்து விடும்.

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்………….”           .

பின் நிகழ்பவைகளை முன் சொன்னானோ நம் பாரதி……………

அதுவும் சமீப காலமாக நிகழும் பாலியல் வன்முறைகள்………………, அவர்களுக்கு தூக்கு தண்டனை  தரக்கூடாது, அது மிகவும் சிறியது. அது அவர்களுக்கு மரணத்தை உடனே கொடுத்து விடும்.

அவர்கள் வாழும் காலம் முழுமைக்கும் சித்ரவதை செய்ய வேண்டும். அதை கேள்வி படும் யாரும் இனி அந்த தவறை செய்ய யோசிக்க கூட பயப்படும் அளவுக்கு தண்டனை இருக்க வேண்டும்.

“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல்  வேண்டுமம்மா”

என்பது

“மங்கையராய் பிறப்பதற்கே மாது அவம் செய்திடல் வேண்டுமம்மா”

என்று திரிந்து விட்டதோ…………….

அந்தோ அந்த முண்டாசு கவிஞன், இதை காணும் முன்னே மரணித்து விட்டான். இல்லையென்றால் மரணம் அவனை தழுவும்முன்னே அவனே அதை தழுவி இருப்பான்.   

யோசனை ஓடிக்கொண்டு இருக்கும் பொழுதே வீடு வந்து விட…………

வீடு வந்த போது சுந்தரவல்லியும் ராமநாதனும் வந்திருந்தனர்.

வயதோகிதத்தின் அறிகுறிகள் நன்கு ராமனாதனிடம் வந்திருந்தன. நடையில் நிறைய தடுமாற்றம். மூப்பு அவரை தன் வசப்படுத்தி கொண்டிருந்தது. அவரை அந்த நிலையில் ரமணனால் பார்க்க முடியவில்லை.  அவரை அவன் பார்த்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும்.

அப்பாவும் மகனும் அருகில் இல்லாவிட்டாலும் இருவரின் பாசமும் அலாதியானது. அதனால் தான் இவ்வளவு தைரியமாக எந்த விஷயத்திலும் வெங்கட ரமணனால் செயல் பட முடிந்தது.

தான் என்ன செய்தாலும் தன் தந்தை தன்னுடன் இருப்பார் என்ற எண்ணம் அவனை தைரியமாக செயல்பட வைக்கும்.

இத்தனை நேரமாக இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், என்று குற்றத்தையும் குற்றாவளிகளையும் பற்றி நினைத்து கொண்டு வந்தவன்…………. தன் தந்தையை பார்த்ததும் அனைத்தையும் மறந்தான்.

“அப்பா, நான் உங்களோட வந்துடட்டுமா”, என்றான்.

“என்ன ரமணா இது, சின்ன பையன் மாதிரி, சின்ன பையன்லயே, நீ இப்படி சொன்னது இல்லையே”, என்றார்.

“நான் உங்களோட வந்துடறேன்பா”, என்றான் மறுபடியும்.

“அது………………… உங்களுக்கு நான் இப்போ பக்கத்துல இருக்கறது, அவசியமில்லையாப்பா”, என்றான்.     

“தேவை தான்……………. ஆனால் என்னைவிட நீ இங்க இருந்தா மற்றவங்களுக்கு இன்னும் அதிகமா பயன்படுவ. எனக்கு அதுல ரொம்ப பெருமை ரமணா. அதை விட ரொம்ப கர்வம்”, என்று சொல்லி தன்னுடைய வழக்கமான சிரிப்பை உதிர்க்க…………….

நிறைய தைரியசாளியாகி ரமணனையே மிரட்ட ஆரம்பித்து விட்ட போதும்………… அந்த சிரிப்பை கண்டு வரா பயந்து, ரமணன் பின்னே ஒன்டினால்.

அதை பார்த்த சுந்தரவல்லி, “உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது, மகாலக்ஷ்மி முன்னால இப்படி சிரிக்காதீங்கன்னு”, என்று சொல்லியவர்,

தான் அனுபவசாலி என்று நிருபித்தார்……………………., “ஆனா பாருங்க, எப்போ பயந்தாலும் அவங்க அம்மா பின்னால, இல்லைன்னா என் பின்னால தான் ஒளிஞ்சிக்குவா. இப்போ அவ புருஷன் பின்னாடி ஒளியறா”, என்று கிண்டல் செய்ய,

“போங்க வள்ளிமா நீங்க”, என்று சொல்லி அந்த இடத்தை விட்டு வழக்கம் போல் ஓடியே போனாள்.    

புன்னகையோடு பார்த்த ரமணன், “இருங்கம்மா நான் டிரெஸ் மாத்திட்டு, அவளை இழுத்துட்டு வர்றேன்”, என்று சொல்லியபடி சென்றான்.

அதற்குள் ஸ்ருதி தன்னை தூக்கி வைத்திருந்த வள்ளிம்மாவிடம் ஏதோ கேட்க…………… என்னவென்று புரியாமல் ராம் பிரசாத் பார்த்திருக்க, “அந்த தாத்தா மீசை எப்படி ஒட்டியிருக்காருன்னு கேட்கிறாள்” என்றார் சுந்தரவல்லி.

“என்ன இது குட்டிம்மா?”, என்று ராம் ஸ்ருதியை கடிந்து கொள்ள, அவசரமாக கல்பனா உதவிக்கு வந்தாள்,

“அது ஒன்னுமில்லைங்க தாத்தா”, என்று ராமனாதனிடம் கூறியவள்,

“இந்த தடவை மாறுவேடப்போட்டிக்கு அவங்க அண்ணனுக்கு நான் பாரதியார் வேஷம் போட்டு மீசை ஒட்டினேன். அதுவும் உங்க மீசை மாதிரி பெரிய மீசை. அதை பார்த்து கேட்கிறாள்”, என்று கூறியவுடன் மறுபடியும் ராமநாதன் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தார்.   

இந்த சத்தத்தை கேட்ட……………மேலே இருந்த வரமஹாலக்ஷ்மி, அங்கே வந்த ரமணன் பின் மறுபடியும் ஒன்டினால்.  

அப்படியே அவளை பிடித்து அவளை முன்புறம் இழுத்து அணைத்தவன், “நம்ம அப்பாவோட போயிடலாமா”, என்றான்.   

“போகலாமே”, என்றவள் உடனேயே………. “எப்போ போகலாம்”, என…………..

“உடனே முடியாது வரா, இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகணும். இப்போ தானே இங்கே வந்திருக்கேன்”, என்றான்.

“அப்போ அதுவரைக்கும் அவங்களை இங்கே இருக்க சொல்லலாம்”, என்றாள்.

“வேண்டாம் வரா! இனிமே அது அப்பாவினாலோ அம்மாவினாலோ முடியாது. சீக்கிரம் நம்ம அங்க போக யோசிக்கறேன்”, என்றான்.

“ம்”,……………… “சரி”, என்றவள் அசையாமல் நிற்க………….

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படி நிற்ப…….. என் கால் வலிக்குது”, என்றான்.

“நான் நின்னா உன்கால் ஏன் வலிக்குது”, என்றவளிடம்………….

“நீ என் கால் மேல நின்னு கழுத்தை பிடிச்சி தொங்கிட்டு இருக்க”, என்றான் சிரிப்போடு.

அப்பொழுதான் தான் அவன் மேல் நின்று தொங்கிக்கொண்டு இருப்பதை உணர்ந்தவள் முகம் சிவந்து விலக போக………….

அவளை விடாமல் பிடித்தவன் சிரித்தான்.

“ப்ளீஸ் விடுங்க”, என்று அவள் வழக்கம் போல் டையலாக் பேச…………..

“உன் வாயை முதலில் மூடனும்”, என்றவன், அந்த வேலையை அவன் வாயால் செய்ய……….. இருவருமே விலகாமலேயே நின்றனர்.

“இரு அப்பாவோட சிரிப்புக்கு பயந்து வந்து………. என்னென்ன செஞ்சிட்டு இருக்கோம்” என்று சிரித்தவன்       

“இரு அப்பா முன்னாடி உட்காரவைத்து……….. நாள் ஃபுல்லா அப்பாவை சிரிக்க சொல்றேன்”, என்று ரமணன் சிரித்தான்.

“இந்த சிரிப்புக்கு தாத்தா சிரிப்பே பரவாயில்லை”, என்று சொல்லி மறுபடியும் கீழே போனாள்.

“இவ என்னடா நான் மேல வந்த கீழ போறா, கீழ வந்தா மேலே போறா, கண்ணாமூச்சி விளையாடறா”, என்று நினைத்தவாறே கீழே சென்ற போது அங்கே இன்னுமே வட்ட மேஜை மாநாடு நடந்து கொண்டிருந்தது.

குழந்தைகள் வரா அவர்களுக்கு சொல்லிக்கொடுத்ததை ஒவ்வொன்றாக எடுத்து விட்டு கொண்டிருந்தனர்.

அவள் “ஷ்”, “சொல்லாத”, “ம்கும்”, என்று செய்த சைய்கைகள் எல்லாம் வேலைக்கே ஆகவில்லை. அவனுக்கு புரிந்தது அப்பா பெரிய டீளிங்காக குழந்தைகளிடத்தில் போட்டிருப்பார் என்று.

“அப்புறம் என்ன சொல்வாங்க உங்க அத்தை”, என்று அவர் கேட்க…………..

“இந்த ராம் க்ரூப்ஸ் ரொம்ப மோசம் சொல்வாங்க. ஒரே ரூல்ஸ் ஆ போட்டு தள்ளு வாங்கலாம்”, என்று ராகம் பிடித்தாள் ஸ்ருதி.

“அய்யய்யோ!”, என்று இருந்தது வராவிர்க்கு. ஓடி போய் மறுபடியும் யார் பின்னாடி ஒளிவது என்று தெரியாமல், ரமணன் புறம் சென்ற கால்களை வலுக்கட்டாயமாக மாற்றி இந்த முறை தன் அண்ணன் பின்னாடி ஒளிந்தாள்.  

“யார் வரா அது? ராம் க்ரூப்ஸ்”, என்று ரமணன் கேட்க………..,

“அது மட்டும் ஏன் என்கிட்ட கேட்கறீங்க? அந்த குட்டி பிசாசு சொல்லுவா”, என்றாள்.

“ம்கும்….. அத்தைக்கு கோபம் வந்துடுச்சு”, என்று உதடு பிதுங்கி ஸ்ருதி பார்க்க, மனம் கேளாமல் உடனேயே வந்து அவளை தூக்கியவள்.

“அத்தை தான்  பயப்படுவேன். குட்டிம்மா யாருக்கும் பயப்படக்கூடாது, சொல்லுங்க………… அத்தையை யாராவது திட்டினா என்ன பண்ணுவீங்க” என்றாள் வரமஹாலக்ஷ்மி.

“ம், டிஷ்யும்”, என்றாள் ஸ்ருதி.

“சரி சொல்லுங்க, குட்டிம்மா”, என்று ரமணன் கேட்க………

ராம் பிரசாத்………

ரமணன்…….

ராமநாதன்………..

என்று தன் மழலை குரலில் மிளிர்த்தாள்.

இப்போது மூவரும் திரும்பி வராவை பார்க்க………… அதிலும் ராமநாதன் மறுபடியும் பெருங் குரலெடுத்து சிரித்தார்.

“நம்ம பொண்ணு சரியாத்தான் சொல்லியிருக்கா”, என்று சொல்லியபடியே.

“இன்னும் என்ன என்ன வரா சொல்லியிருக்க?”, என்று ரமணன் கேக்க.

“இது மட்டும் தான்!”, என்றவள் ரோஹிதிடமும் ஸ்ருதியிடமும்……………………

“இது மட்டும் தானே!”, என்று சொன்னதே, “ஆமாம்”, என்று சொல்லுங்கள் என்ற குறிப்போடு இருந்தது.

அது மற்றவர்களுக்கும் புரிய……. இந்த முறை சிறு வயது வழக்கமாக தன் தாயின் பின் ஒன்டினால்.                

அத்தியாயம் முப்பது

அன்றைய நினைவுகள்:

இங்கே காரியம் முடிந்ததுமே, வரமஹாலக்ஷ்மியை பார்த்துகொள்வதர்காக சுந்தரவல்லி சென்னை சென்றார்.

உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும்………… மூன்று இடத்தில் எழும்பு முறிவு இருந்ததினால்…………… அவளுக்கு தெரிந்ததெல்லாம் வலி வலி வலி மட்டுமே.

உடல் வலி…………. அதையும் மீறி மனதில் வலி,

தன்னால் இப்படி ஆகி விட்டதே என்று………….

வெங்கட ரமணனை பார்த்தவுடனே, “எப்போ வந்தே” என்று கேட்டு அந்த ஆக்சிடன்ட் இடத்தை விட்டு வரும் முன் ஸ்ரீதரை காப்பாற்ற சொல்லி கேட்டது வரை மட்டுமே அவள் அவனுடன் பேசியது.

அவன் காப்பாற்றி இருப்பான் என்ற நம்பிக்கை இருந்ததால் பிறகு அவனை பற்றி கேட்கவில்லை.

ரமணனும் வராவை பார்த்த உடனே கூறிய முதல் வார்த்தை, “ஸ்ரீதர் உயிரோடு இருக்கிறான்”, என்பதே. 

இடுப்பு எழும்பில் விரிசல் இருந்ததால் அவள் முழுவதும் படுக்கையில்……… ஒரு தோளில் அடி, மற்றொரு முட்டியில் அடி, அந்த  இரண்டு இடத்திலும் எழும்பு முறிவு.

டாக்டர்கள் அவளுக்கு, ”சர்ஜெரியா அல்லது மாவுக்கட்டா”, என்று அப்பிராயம் கேட்ட போது, “சர்ஜெரி”, என்று அவனே அப்பிராயம் கூறிவிட்டான்.

யாரிடமும் கேட்க கூட இல்லை. தன் தந்தையிடம் கூட இல்லை. அவர்கள் அடுத்த நாள் காலையில் தான் சர்ஜெரி போஸ்ட் செய்து இருந்தனர்.

ஒற்றை ஆளாய் அந்த ஐ.ஸீ.யு வாசலில் ஒரு பொட்டு தூக்கம் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

ஏனோ தன்னால் தான் இது. அவள் என்ன பேசினாலும் தான் அவளை விட்டிருக்க கூடாது என்று மனம் கிடந்து அடித்துக்கொள்ள……….. அவன் அவளை காப்பாற்ற நாடியது இறைவனின் சன்னிதியை.   

அரை மணிக்கொரு முறை உள்ளே செல்வான், சில சமயம் மட்டுமே விழித்திருப்பாள். பல நேரங்களில் மயக்கம் தான். விழித்திருக்கும் சமயம் அவள் கண்களில் தெரியும் வலி இவனை ஆறுதல் வார்த்தை கூட பேசவிடாது.

ஆனால் அரை மணிக்கொரு முறை சென்று பார்த்து வருவான். காலை அவளை ஆபரேசன் தியேட்டர் கொண்டு செல்லும் போதே சுந்தரவல்லி வந்து விட்டார்.          

இரண்டு இடத்தில் சர்ஜெரி என்பதால் பத்து மணிக்கு அவளை உள்ளே கொண்டு சென்றவர்கள் ஒரு மணிக்கு தான் வெளியே கொண்டு வந்தனர்.

அதற்குள் சிவசங்கரன், ராஜேஸ்வரி, ராமநாதன், என்று எல்லாரும் வந்திருந்தனர்.

சுந்தரவல்லி விபத்தை பற்றி ஏதோ விவரம் தெரிந்து கொள்ள  ரமணனிடம் கேள்வி கேட்க…………. அவன் பார்த்த பார்வையே அவரை வாயை மூடிக்கொள்ள வைத்தது.

சுந்தரவல்லிக்கே அந்த பார்வை என்றால், பின்பு யாரும் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

வரா உடலளவில் தேருவதர்க்கு மூன்று மாதங்கள் ஆனது மனதளவில்????

கிட்ட தட்ட ஒரு மாதம் அங்கேயே தான் இருந்தான் ரமணன். நடுவில் வந்து வரமஹாலக்ஷ்மியை பார்த்த போதும் ராம் சென்னை நிரந்தரமாக வர ஒரு மாதம் ஆனது.

அவன் அங்கே வந்த பிறகே ரமணன் பணியை பார்க்க சென்றான், அதுவும் அவன் ஸ்ரீதர் வீட்டாரை எதுவும் செய்ய கூடாது என்ற வாக்குறுதி பெற்ற பிறகே.

அவனுக்கு வராவின் நிலை தெரியவில்லை. தெரியாமல் எதுவும் செய்ய அவனுக்கு மனமில்லை.

அதுவுமல்லாமல் ஸ்ரீதர் மிக மோசமாக அடிபட்டிருந்தான்.

அவனுக்கு போதிக்கப்பட்டது சமமான நிலையில் வைத்து போராடுபவனே ஷக்த்ரியன் என்று. அவன் குடும்பத்தார் தற்பொழுது ஸ்ரீதரின் நிலையால் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தது அவனுக்கு தெரியும்.

அவர்களை அப்படியே விடும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஆனால் வராவுக்காக பார்த்தான். அவளுக்கு ஸ்ரீதரின் மேல் என்ன எண்ணம் என்று தெரியவில்லை.

ஒரு வேளை குழந்தைக்கு இப்படி ஆகிவிட்டது என்று மெளனமாக இருக்கிறாளா என்று தெரியவில்லை.

ஆனால் இப்படியே விடும் எண்ணம் இல்லை. ஒரு எக்ஸ் மினிஸ்டரின் மகளுக்கே ஜாதியை காரணம் காட்டி இந்த நிலைமை என்றாள்,  வரா இடத்தில் சாதாரண பெண் இருந்தாள். அவனுக்கு நெஞ்சு கொதித்தது…………            

ராம் ஒரு முடிவோடு இருந்த போது கூட அதை மாற்றினான்.

“உங்களை வீட்டுக்கு வந்து கடத்தியிருக்காங்க, சும்மா விடமாட்டேன். ஆனா இப்போ என்ன செஞ்சாலும் வராக்கு ஸ்ரீதர் மேல சாப்ட் கார்னர் ஆகிடும்”.

“அவளா விரும்பி ஸ்ரீதர் கூட போயிருக்கா”, என்றான்.  அப்போதும் அவர்கள் வரா ஸ்ரீதரோடு சென்றது போல தப்பர்த்தம் செய்து கொண்டு இருந்தனர்.

வராவிடமும், “ஸ்ரீதர் விஷயம் யாருக்கும் தெரியாது, உங்க அம்மாவுக்கு கூட தெரியாது.  அதை பற்றி பேசாதே!”, என்று சொன்னதால், குழந்தை இறந்த அதிர்ச்சியில் இருந்ததால்………… உடல் வலி எல்லாவற்றையும் விட மிக அதிகமாக இருந்ததால்……………… அவளும் பேசவில்லை.

அவளுடைய சிந்தனை எல்லாம் அண்ணியை எப்படி எதிர்கொள்வது என்றே இருந்தது.    

ராமனாதனிடமும் வெங்கட ரமணன் அதே தான் சொன்னான். “இப்போ ஒண்ணும் செய்ய வேண்டாம்பா நான் பார்த்துக்கறேன்”, என்றான்.         

இங்கே வரமஹாலக்ஷ்மி உடல் தேறி எழுவதற்கும், கல்பனாவை வீட்டிற்கு அழைத்து கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

கல்பனாவை பார்த்தவுடன் மீண்டும் அழுகை பொங்கியது.

கல்பனா வருகிறாள் என்று தெரிந்த உடனே, அவளை பற்றி நன்கு அறிந்த  ரமணன் வந்து விட்டான். இவள் ஏதாவது உளறி விட்டாள். யாருக்கும் ஸ்ரீதரை பற்றி தெரியாது.

ராமும், ரமணனும் சேர்ந்து வராவிடம்………… “ஸ்ரீதரை பற்றி யாருக்கும் தெரியாது. சொல்ல வேண்டாம்”, என்றனர்.

“பாப்பா ப்ளீஸ்! கல்பனாக்கு எதுவும் தெரியாது. எதுவும் சொல்லிடாத! இது தெரியாம நடந்த விஷயமா தான் நினைச்சிட்டு இருக்கா. அவளை பொறுத்த வரைக்கும் விபத்து அப்படியே இருக்கட்டும்”, என்றான்.

வெங்கட ரமணனுமே, “சொல்ல வேண்டாம்”, என்று சொல்ல…………… ஒரு பெரிய குழப்பத்தில் இருந்தாள்.

பேச்சு வாக்கில் ரமணன் வேறு………….. “நீ அவனோட போனதால தான் இவ்வளவு நடந்திடுச்சு”, என்று சொன்னவன், அவள் முகத்தின் அதிர்ச்சியை கவனிக்க தவறினான்.

அதனோடே, “இல்லைனா நம்ம வீட்ல நடந்ததுக்கு, அந்த ஸ்ரீதர்……. அவன் குடும்பம்…….. அவங்களை தொலைச்சிருப்பேன்”, என்று சொல்ல…………

“இவர்கள் தன்னை தப்பாக நினைத்துவிட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்த நிலையில் தான் என்ன நடந்தது என்று சொன்னாள்……….. மற்றுமொரு பிரளயம் நடக்கும்”, என்று தோன்ற நடந்ததை தனக்குளேயே புதைத்து கொண்டாள்.

இந்த ஆக்சிடென்ட் நடந்ததில் இருந்து வராவை யாரும் பார்க்க விடப்படவில்லை. ஆக்சிடென்ட் நடந்த மறுநாளே ரமணன் அந்த போனை தூக்கி எறிந்து விட்டான்.

வராவிற்கு ஸ்ரீதர் ஞாபகம் அவ்வப்போது வரும். அவளின் இந்த வலி அவனால் தான் எனும்போது எப்படி நினைக்காமல் இருக்க முடியும். அதுவுமில்லாமல் இரண்டு வருடம் அவனோடு பேசி பழகி இருக்கிறாள்.

அதனால் அவன் ஞாபகம் தெரிந்தவன் என்ற முறையில் வரும். என்னவானான் என்று யாரிடம் கேட்பது என்று தெரியாமல் விட்டுவிட்டாள்.

அன்று அவளுக்கு செக் அப் செல்லும் நாள், பழைய நடை இன்னும் வரவில்லை. சரியாகிவிட்டாலும் பாதி நேரம் மற்றவர்கள் கைபிடித்தே நடந்தாள்.

ரமணன் வந்ததால்………… ராஜேஸ்வரி அன்று ரமணனை அழைத்து கொண்டு தான் செக் அப் சென்றார்.

டாக்டரின் ரூம் முன் காத்திருந்த வேளையில் தான் வரா அதனை உணர்ந்தாள். யாரோ தன்னை பார்ப்பது போல். இந்த ஜாக்கிரதை உணர்வு முன்பு எப்பொழுதும் அவளிடம் இருந்ததில்லை. வலி அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்து இருந்தது.

திரும்பி பார்த்தாள்………….. ஸ்ரீதர் இவளையே பார்த்தபடி நின்றிருந்தான். நிறைய மாற்றம் அவனிடம், முகம் வீங்கி இருந்தது.             

வாக்கர் வைத்து அதை பிடித்து தான் நின்றிருந்தான். அவன் பார்வையே அவளை பார்பதற்காக வந்தது போல் தான் தோன்றியது.

நிறைய நேரம் அவள் பார்வை ஒரிடத்தில் தங்கியதுமே, ரமணன் அந்த இடம் நோக்கி தன் பார்வையை திருப்பினான்.  

சிரமப்பட்டு போராடி தூக்கியவன் அல்லவா. அதனால் ஸ்ரீதர் முகம் அவனுக்கு மறந்து போகவில்லை.

“ஸ்ரீதரா?”, என்றான் வாரவிடம்……….. 

“ஆம்”, என்பதாக அவள் தலையசைக்க………

“இரு, நான் போய் பார்த்துட்டு வர்றேன்”, என்று எழுந்தவனிடம்……….. “நானும் வர்றேன்”, என்றாள் சன்ன குரலில்.

“எதுக்கு?”, என்றான் ரமணன் சற்று குரலை உயர்த்தி.

“நீ எதுக்கு போற”, என்றாள் வரா அவனிடம். இப்படி என்றுமே வரா அவனிடம் குரலை உயர்தியதில்லை.  

“பார்க்க போகிறேன்”, என்றான்.

“நானும் அதுக்கு தான் போகிறேன்”, என்றாள்.

அவனை மீறி என்ன நடந்து விடும் என்ற தைரியம் அவனுக்கு………. அதனால், “சரி வா”, என்று அவனருகில் கை பிடித்து அழைத்து சென்றான்.  

ஸ்ரீதர் அவர்கள் தன்னை நோக்கி வரவும், புன்னகைக்க முயன்று தோற்றான்.

“எப்படி இருக்க வரா”, என்றான்.

அவள் அந்த கேள்வி தன்னை பார்த்து கேட்பாளா என்பது போல் அவன் பார்க்க வரா வாயை திறக்க வில்லை.

“நான் உன்கிட்ட பேசணுமே”, என்றான் ஸ்ரீதர். அப்படி அவன் சொன்னவுடனே ரமணன் ஏதோ ஸ்ரீதரிடம் பேச வர, ரமணன் கையை பிடித்து அழுத்தினாள் வரா, “நீ அமைதியா இரு”, என்பது போல் அவனை பார்வையாலேயே அடக்கினாள். 

“பேசுங்களேன்!”, என்றாள் வரா. “நம் வரா வா இது”, என்று அதிசயமாக ரமணன் பார்க்கும் பொழுதே, “சொல்லுங்க ஸ்ரீதர்”, என்றாள்.

“பேசுவது வரா தானா”, என்று இருந்தது ரமணனுக்கு. குரலில் ஒரு கம்பீரம் ஏறியிருந்தது அவளுக்கு.      

ஸ்ரீதர் ரமணனை பார்க்க………….

“அவங்க இருப்பாங்க ஸ்ரீதர். நீங்க இப்படியே சொல்ல வந்ததை சொல்லுங்க. நான் போக சொன்னாலும் அவங்க போக மாட்டாங்க” என்றாள் வரமஹாலக்ஷ்மி.

அவள் போகவேண்டாம் என்று நினைத்து அப்படி சொன்னாளோ இல்லை அவன் போகமாட்டான் என்று தெரிந்து சொன்னாளோ…………?

“அது ஐ அம் சாரி. அது குழந்தை இறந்திருச்சாமே. என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க”, என்றான்.

கேட்டவுடம் மறுபடியும் தன்னால் தான் என்ற துக்கம் பொங்கியது வராவுக்கு.

“நான் நிறைய தடவை உன்னோட இந்த ரெண்டு மாசமா பேச ட்ரை பண்ணினேன். ஆனால் உன் கிட்ட நெருங்கவே முடியலை. அதனால தான் ஹாஸ்பிடல் நீ செக் அப் வர்ற நாள் தெரிஞ்சு வந்தேன். என் வீட்டு ஆளுங்க செஞ்சதுக்கு  ஐ அம் சாரி”, என்றான் மறுபடியும்.

பொங்கிய வேதனையை கட்டுக்குள் கொண்டு வந்து………… “நானும் உன்கிட்ட சாரி கேட்கணும் ஸ்ரீதர்”, என்றாள். 

“நீ இதை எப்படி எடுத்துபேன்னு தெரியலை ஸ்ரீதர். நான் உன்கிட்ட தெரிஞ்சு தான் ஐ லவ் யூ சொன்னேன். ஆனா அந்த வார்த்தையை தெரியாம சொல்லிட்டேன்”, என்றாள்.

“நான் பண்ணினது தப்புதான் ஐ அம் சாரி”, என்றாள். “அதனால நிறைய வேதனையை என்னால என் வீட்ல அனுபவிச்சிடாங்க. இனிமே நீங்க என்னை பார்க்க முயற்சி பண்ணாதீங்க”, என்றாள்.

“அப்போ நமக்குள்ள எல்லாம் அவ்வளவு தானா”, என்றான் ஸ்ரீதர்.

பதில் பேசாமல் வரா திரும்ப……… “சொல்லிட்டு போ வரா”, என்றான் சற்று குரலை உயர்த்தி.

அந்த த்வனி அவளுக்குள் கோபத்தை கிளப்ப……….

“மறுபடியும் ஏதாவது முட்டாள்தனம் பண்ணிடாத ஸ்ரீதர்”, என்றாள் அவளும் குரலை உயர்த்தி.

“முட்டாள்தனம், நான் என்ன பண்ணினேன்?”, என்றான் பதிலுக்கு.

“நான் எத்தனை முறை சொன்னேன் நீ வீட்டுக்கு போ. அப்புறம் பேசலாம்னு அன்னைக்கு.  நான் உன்கூட வரமாட்டேன்னு சொல்ல சொல்ல என்னை ஏமாத்தி கூட்டிட்டு போனதும் இல்லாம, நீ கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்த………….”,

“அதனால தான் எங்க அண்ணாவை கடத்திட்டாங்க……… எங்க அண்ணிக்கு இப்படி ஆயிடுச்சு. அதுவுமில்லாம வேகமா போகாதன்னு எப்படி கெஞ்சினேன். உன்னோட முட்டாள்தனம் தான் இந்த ஆக்சிடென்ட். அந்த வலி…………………. வேண்டாம் அந்த வலி எனக்கு எப்பவுமே வேண்டாம்.  ஸ்ரீதர் அதை மறந்துடலாம்”,  என்றாள் ரமணன் இருப்பதையும் மறந்து.               

இதுவரை வராவின் புதிதாக உதித்த தைரியத்தை ரசித்து கொண்டிருந்த ரமணன், “என்ன உனக்கு தெரியாம……… உன் சம்மதமில்லாம இவன் கூட்டிட்டு போனானா……….?”, என்று ரமணன் அதிர்ந்து ஸ்ரீதரை ஒரு கை பார்க்கும் உத்வேகத்துடன் நெருங்க…………..

ரமணன் கையை பிடித்து நிறுத்தினாள்.

“நான் பேசிட்டு இருக்கேன்ல, நீங்க தலையிடாதீங்க”, என்றவள்………….,

ஸ்ரீதரை பார்த்து, “எங்க வீட்ல இன்னும் யாருக்கும் தெரியாது. ராம் அண்ணாக்கு தெரியவே தெரியாது. ஸ்ரீதர் நீ என்னை கட்டாயபடுத்தி கூட்டிட்டு போனேன்னு தெரிஞ்சது……….. உன்னை காப்பாத்தறது ரொம்ப சிரமம், என் அண்ணா என்ன பண்ணுவாங்க தெரியாது”,  என்றாள். 

ரமணன் வேறு தன்னை நோக்கி வந்ததும்………….. வரா அவன் கையை பிடித்ததும் ஸ்ரீதருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  “ஏன் இவன் என்னை என்ன செஞ்சிடுவான்? எனக்கு இன்னும் முழு பலம் திரும்பளைன்னு மிரட்டுறான்களா”, என்றான் ரமணனை பார்த்து.    

“நீயும் உங்க வீட்டு ஆளுங்க மாதிரின்னு ப்ரூவ் பண்ற ஸ்ரீதர். உன்னை காப்பதினவங்க கிட்ட நீ இந்த மாதிரி தான் நடநதுக்குவியா”.

“போ! போய் அன்னைக்கு அந்த ஆக்சிடென்ட் ஸ்பாட்ல இருந்தவங்க, யாரை வேணா கேட்டு பாரு. உன்னை யாரு காப்பதினாங்கன்னு?”.  

மிரட்டல் சரி வராததால் கெஞ்சலில் இறங்கினான் ஸ்ரீதர். “நீ சொல்றது எல்லாமே சரியா இருக்கட்டும் வரா, but my love for you is sincere. I still love you. And I will love only you. I can’t live without you “,  என்றவனிடம்,

“But I can’t live with you”, என்று கூறி என் பேச்சு முடிந்தது என்பது போல் திரும்ப…………,

“அப்படி அவ்வளவு சுலபமா யாருக்காகவும் எதுக்காகவும்…………  உன்னை நான் விட்டுட மாட்டேன் வரா…………. என்னை தவிர யாரும் உன்னை கல்யாணம் செஞ்சுக்க முடியாது, விடவும் மாட்டேன்!”, என்று அடிக்குரலில் சீறினான்.

அப்போது அந்த கண்களில் வராவின் நிராகரிப்பால் தெரிந்த வலி, வேதனை, சீற்றம், தீவிரம்,…………………….. இவனை அத்தனை சுலபமாக வரமஹாலக்ஷ்மியின் வாழ்க்கையில் இருந்து அகற்ற முடியாது என்றே தோன்றியது.

அங்கே ஹாஸ்பிடலில் அவர்கள் டாக்டர் ரூமிற்கு சென்ற நேரம், அங்கே  இருந்த படியே தன் தந்தையை அழைத்தவன், “அப்பா எனக்கு இன்னும் மூணு நாள் லீவ் இருக்கு, அதுக்குள்ள எனக்கு நீங்க கல்யாணம் செஞ்சு வைக்கிறீங்களா”, என்றான். 

“யாரைப்பா?”, என்ற தன் தந்தையிடம் வரமஹாலக்ஷ்மியை என்றான். 

“நம்ம மகாலக்ஷ்மி பொண்ணுதானே பா, நாள் குறித்து பெருசா விமரிசையா பண்ணலாம்பா”, என்றார் சந்தோஷமாக.

“மூணு நாள்ல என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க. ஆனா யாருக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கு தெரியாது அவளை நீங்க எனக்கு போகுறதுக்குள்ள பண்றீங்கப்பா”. என்றான்.

“ரமணா பொண்ணுக்காவது பிடிக்கனுமேப்பா”, என்றவரிடம்,

“அவளுக்கு பிடிச்சா என்ன? பிடிக்காட்டி என்ன? நான் அவளை தான் கல்யாணம் கட்டுவேன், அவ மறுபடியும் ஏதாவது பிரச்சினையில மாட்டுறதுக்குள்ள சீக்கிரம் கல்யாணத்தை முடிங்கப்பா”,  என்ற வார்த்தையில் முடித்து போனை வைத்தான்.         

 

 

 

 

 

Advertisement