Advertisement

அத்தியாயம் பத்தொன்பது  

இன்றைய நிகழ்வுகள்

வெங்கட ரமணன் வரமஹாலக்ஷ்மியின் மீது கைபோட்டு அணைத்தவாறு படுத்தவுடனேயே, வராவிற்கு உறக்கம் கலைந்து விட்டது. பயந்து, உடல் விறைத்து, என்ன இது என்று அவள் உணர்ந்து,  அவள் பார்க்க…………….

அவளை சுற்றி ரமணன் கைகள் என்றுணர்ந்து பயம் வடிந்து அவளை அறியாமல் ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது.

 புதிதாக அந்த அணைப்பு, அவனுடைய அருகாமை  அவளுக்கு கூச்சத்தை கொடுக்க…………… கையை எடுத்து விட வேண்டும் என்று பரபரத்த மனதை முயன்று அடக்கி அப்படியே இருந்தாள்.  ரமணன் உறங்க கண்மூடினாலும் அவள் உடலின் அதிர்வு, வெளியேறிய பெருமூச்சு………..

விழித்துகொண்டாள் என்றுணர்த்த “சாரி! எழுப்பிட்டேனா”, என்று கேட்க…………… “மறுபடியும் தூங்கிடுவேன்!”, என்றாள் வரா.

“என்னடா பதில் இது? இவ பதில் எனக்கு புரியவே மாட்டேங்குது. இவளை என்னால புரிஞ்சிக்க முடிஞ்ச அளவு இவ பதில் புரிய மாட்டேங்குது.  இவ பதிலுக்கு அவனுங்க பதிலே பரவாயில்லை போல”, என்று மனதிற்குள் அவன் குற்றவாளிகளிடம் நடத்தும் விசாரனையோடு ஒப்பிட…………….

 அவன் மனமே அவனை சாடியது, “டேய் மடையா! பொண்டாட்டிய கொஞ்ச ட்ரை பண்ணுடான்னா……… இப்போவும் ஏண்டா கேசு விசாரணைன்னு சொதப்பர”.

அவன் மனதில் ஓடிய எண்ணங்கள் அவனை அறியாமலேயே அவனுக்கு சிரிப்பை வரவழைக்க………… அவனின் உடலில் அதிர்வு கண்டு எழுந்தமர்ந்த வரா அவனை பார்க்க அவன் சிரித்துக்கொண்டு இருப்பது தெரிந்து,

“என்னடா இது உலக அதிசயம் இவன் சிரிக்கறான்.  நான் சிரிக்கற மாதிரி என்ன சொல்லிட்டேன்”, என்று யோசனையோடு பார்க்க…………

அவளை புரிந்தவனாக………., தான் வராவோடு சகஜமாக பேசினாள் ஒழிய அவள் தன்னோடு பேசமாட்டாள் என்று உணர்ந்தவனாக…………., தான் அவளோடு அதிகமாக உரிமையோடு பேசவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அறிந்தவனாக…………,

தான் நெருங்கினால் மட்டுமே அவள் தன்னோடு நெருங்க முயலுவாள் என்று தெரிந்தவனாக…………,  “நீ ஒண்ணும் சொல்லலை! நான் தான் வேற யோசனையில் இருந்தேன்”, என்று கூற………..

அந்த பதில் இன்னுமே அவனுக்கு சொதப்பலாக தெரிந்தது.

“சொதப்பரனா?”, என்றான் புன்னகையோடு……………

“ரொம்ப இல்லை! ஆனா கொஞ்சம்!”, என்று வரா கூற……………

அந்த பதில் அவன் முன்பு நினைத்ததையே ரிவ்யு செய்ய, வந்த தூக்கம் பறந்து போக முகம் மீண்டும் புன்னகையை பூச எழுந்தமர்ந்தான். 

அவள் முகம் பார்க்க பார்க்க, காலையில் இருந்து கைதியிடம் விசாரணை, பின்பு ஜெயில் கலவரம், பின்பு கைது படலம், என்று தன் வேலையின் டென்ஷன் அத்தனையும் நிமிடத்தில் வடியக் கண்டான்.

மனதிற்குள், “yes I love her a lot, she has the control over my mood”, என்னை கோபப்படுத்தவும் இவளால தான் முடியுது, கூல் பண்ணவும் இவளால தான் முடியுது, என்று நினைத்தவாறே அவளையே பார்த்திருக்க…………

அவன் முன்னாள் கைகளை ஆட்டி, “என்ன?”, என்று கேள்வியாக சைகையில் கேட்க…………….

“ஒன்றுமில்லை”, என்பது போல் தலையாட்ட………… ஏதோ இருக்கு என்றவாறே அவள் விடாது அவனை பார்க்க…………….. “எப்போ நமக்குள்ள ஹார்மோன் ரியாக்சன் சரியாகும்?”, என்றான்.

“அட லூசே”, என்பது போல் பார்வையால் அவனை அளந்த வரா   அப்போது தான் அவனை நன்றாக பார்த்தாள், “என்ன இது?”, என்றாள் பதட்டமாக………….

“என்ன?”. என்றான் புரியாமல்………. “டிரெஸ் சேஞ் பண்ணலை, சாக்ஸ் கலட்டளை, எங்க எங்க போணீங்களோ?. அழுக்கு boy. முதல்ல போய் சேஞ் பண்ணுங்க”, என்றாள்.

“ம், நான் உனக்கு boy ஆ. எல்லாம் நேரம். நான் ஹார்மோன் ரியாக்ஷன் பத்தி பேசிட்டிருந்தா நீ என்னை பாய்ன்ர”, என்றவன் பெருமூச்சை வெளியேற்றி  அப்படியே தூங்கறனே”, என்றான் சலிப்பாக………….

அவனையே பார்த்திருந்தவள், “அப்படியே தூங்கினா……… என்னோட தூங்க முடியாது, பரவாயில்லையா?”, என்று கேட்க…………

பதிலுக்கு வாயடிக்காமல் சேஞ் செய்ய எழ, அவன் நகர ஆரம்பித்தவுடனே “இது பத்தாது அட்லீஸ்ட் கை கால் கழுவியாவது சேஞ் பண்ணுங்க,”, என்றவள்…………..

அவன் திரும்பி பார்த்து முறைக்கும் முன்னராக போர்வையை எடுத்து தலை மேல் போர்த்த……… அவளுடைய செய்கையை பார்த்து சிரித்தவாறே சென்றான்.

அவன் சென்றிருப்பான் என்று போர்வையை எடுத்தவள், மூடிய குளியலறை கதவையே பார்த்தாள், “இவன் இல்லாவிட்டால் நான் என்னவாகி இருப்பேன்”, நினைக்கையிலேயே கண்களில் நீர் நிரம்பியது.

வந்தவன்……… அவளை பார்க்க கண்களில் கண்ணீரை துடைத்திருந்தாலும் அவள் அப்செட் என்பது தெரிய………….

“என்ன அச்சு”, என்று கேட்க………..

அமைதியாகவே இருந்தாள், “இந்த மாதிரி நீ எதையாவது நினைச்சு மனசை போட்டு குழப்பி, சுய பட்ச்சாதபத்துல இருக்கன்னு தான் நான் உனக்கு நிறைய டைம் குடுத்து இங்க வரவேயில்லை. இனிமேலும் நீ இப்படி கண்ணை கசக்குனா எனக்கு கோபம் தான் வரும் வரா………… அப்புறம் நான் மறுபடியும் போயிடுவேன்”, என்றான் சீரியசாக………….

அந்த வார்த்தை அவளுள் கோபத்தை கிளப்ப,

“என்ன மிரட்றியா………….. போயிடுவியா நீ………….. போ! எனக்கென்ன. ஆனா நீ திரும்ப வரும் போது, நான் இந்த உலகத்துல இருக்க மாட்டேன்”, என்றாள் தீவிரமாக.

“ஏய் என்னடி! இப்படி மறுபடியும் உளற ஆரம்பிச்சிட்ட, இந்த மாதிரி பேசக்கூடாதுன்னு உனக்கு நான் நிறைய தடவை சொல்லிட்டேன் திருந்தவே மாட்டியா நீ!”,  என்று கோபமாக அவள் அருகில் வர…………,

எப்பொழுதும் அவன் பார்வைக்கே பயப்பட்டு காய்ச்சலில் விழும் வரா இப்பொழுது சிறிதும் பயப்படாமல் அவனை எதிர்கொண்டாள்.

“நான் என்ன நினைச்சேன்னு உங்களுக்கு என்ன தெரியும். நீங்களா ஏதாவது நினைச்சா…………..  இன்னைக்கு தான் வந்திருக்கீங்க அதுக்குள்ள நீங்க போறதை பத்தி பேசுனா……… நான் இப்படிதான் பேசுவேன்…….”, என்றாள் பயப்டாமல்.

தன் தவறை உணர்ந்தவன். “சாரி”, என்றான்.

“நானும் சாரி”, என்றவள். என்ன ஏது என்று கேட்காமல் படுத்துறங்க……

“ வரா……..” என்று இரண்டு முறை கூப்பிட பதிலே இல்லை. “ பாப்பா! ப்ளீஸ் தப்பு தான் நான் பேசினது”, என்றான், எதற்கும் அசைவில்லை.

“மெதுவாக முருகா என்னை காப்பாற்று” என்று மறுபடியும் கடவுளை துணைக்கு அழைத்து அவள் மேல் கையை போட்டு அணைத்தான்.

வராவிற்கு ஏதோ செய்தது ஆனாலும் அசையவில்லை. கைகள் அவளை அணைக்க மட்டுமல்லாது வேறு சிலதும் செய்ய விழைய………… “ப்ச் தூங்கு வெங்கி”, என்றாள். அவன் தன்னை விட்டு போய்விடுவேன் என்ற சொன்ன வார்த்தையின் தாக்கத்தினால். 

 “வெங்கி”, என்று அவள் அழைத்த ஒரு சொல்லே அவனுக்கு மிகுந்த மனசாந்தியை அளிக்க அப்போதைக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்று உறங்க ஆராம்பித்தான்.

காலை வேகமாக விடிந்தது. வராவும் இரவு விழித்து மறுபடியும் உறங்கியதால் எட்டு மணியாகியும் எழவில்லை. ரமணன் இரண்டு நாட்களாக உறக்கம் கெட்டது அவனும் எழவில்லை…………..,

கண்விழித்ததும் அத்தையை தேடிய கல்பனாவின் மூன்று வயது மகள், “அத்தை”, என்று போய் ரூம் கதவை தட்ட………..

கல்பனா வந்து பார்த்து தடுக்கும் முன் தன் பிஞ்சு கரங்களால் கையில் ஒரு ப்ளேட் வைத்து கொண்டு தட்டி கொண்டு நின்றாள்.

அந்த சத்தம் ரமணன் உறக்கத்தை கலைக்க………… இன்னொரு புறம் தொலைபேசி அலற ரமணனின் பிஸி காலை ஆரம்பித்தது.

கதவை திறந்தவாரே போன் பேச ஆரம்பித்தான் ரமணன், முதல் அமைச்சரின் செகறட்றி அழைத்திருந்தார்.

“சர்!  பத்து மணிக்கு உங்களுக்கு முதல் அமைச்சர் அப்பாயிண்ட்மென்ட் குடுத்து இருக்கிறார்”,

“சுயூர் சார்! நான் அங்க பத்து நிமிஷம் முன்னாடியே இருப்பேன்”, என்று சொல்லி போனை வைத்து திரும்ப பார்க்க………. குழந்தை அவள் அத்தை மேல் ஏறி படுத்திருந்தாள். அவளை அணைத்தவாறு உறக்கத்தில் தான் வரா இருந்தாள்.

குழந்தையும் அவள் அத்தையை எழுப்பாமல் சமர்த்தாக அவள் மேல் படுத்து கொண்டு ரமணனையே பார்த்து கொண்டிருந்தாள்.

குழந்தையை தூக்க வேண்டும் என்ற ஆசை உந்த………..

“ஹலோ குட்டி பாப்பா! என்ன பண்றீங்க?”, என்றவாறே ரமணன் குழந்தை அருகில் போக………….. குழந்தை அவள் அத்தையை எழுப்ப ஆரம்பித்தாள்.

“அத்தை!!!!!”, என்று அவள் பிஞ்சு கரங்களால் அவள் முகத்தை வருட ஆரம்பிக்க,

 “குட்டிம்மா அத்தை தூங்கறேன் ப்ளீஸ்!”, என்று வரா அவளிடம் கண்திறக்காமலேயே கெஞ்ச……….. “அத்தை!!!!!!!!”, என்று அவள் காதில் கத்த ஆரம்பித்தாள் குட்டி.

“குட்டி பிசாசே!”, என்று அவளிடம் பதிலுக்கு கத்தியவாறே வரா எழுந்து அமர்ந்தாள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறே ரமணன் நின்றிருப்பதை பார்த்தவள், இரவு அவனோடு சண்டையிட்டதை மறந்தவளாக அவனை பார்த்து புன்னகைக்க, அவர்கள் நெருக்கம் அவனுக்கும் புன்னகையை வரவழைத்தது.  

“இவளை என்னோட பேசவைய்யேன்”, என்றான் ரமணனும் குழந்தையை காட்டி………. “குட்டிம்மா அது உங்க மாமா போய் பேசுங்க”, என்று குழந்தைக்கு வரா சொல்லி கொடுக்க……………

குழந்தை யோசிக்க ஆரம்பிக்கும் போதே வரா பாத்ரூமிற்குள் நுழைந்தாள், குட்டிம்மா போய் பாத்ரூம் வாசலில் நின்று தன் அத்தை வருவதற்காக காத்திருக்க………..

“உங்க பேர் என்ன? சொல்லுங்க!”, என்று ரமணன் குழந்தையிடம் பேச்சை வளர்த்தான்.    

“ஸ்ருதி ராம் பிரசாத்”, என்றாள் தெளிவாக……….

“என் பேரு கேட்கமாட்டீங்களா! நானே சொல்றேன்!”, என்றவன், “வெங்கட ரமணன்”, என்றான்.

அப்போது கதவை திறந்து வரா வெளியில் வர, “வெங்கட ரமணன்”, என்று தானே சொல்லி கொண்டிருந்த ஸ்ருதி, அவள் அத்தை அவளை தூக்கியவுடன் அவள் அத்தையின் மோவாயை திருப்பி, “மாகாகணம் பொருந்திய ஸ்ரீமான் வெங்கட ரமணன்”, என்று கண்களை அகல விரித்தாள்.

சின்ன பெண்ணாக இருக்கும் பொழுது வராவிற்கு கோபம் வரும்பொழுது அப்படி தான் சொல்லுவாள். அதை குழந்தைக்கு சொல்லி கொடுத்திருப்பால் போல அது அப்படியே சொல்லியது. 

“ஷ்”, என்று வரா வாயில் விரல் வைக்க………. “ஷ்”, என்று திருப்பிய ஸ்ருதி “சொல்லக்கூடாது!”, என்றாள்.

பார்த்த வராவிற்க்கும் ரமணநிர்க்கும் சிரிப்பு வர……….. அந்த காலையில் தன் மனைவியோடான அந்த க்ஷணத்தை பரிபூரணமாக அனுபவித்தான் ரமணன்.

தான் நேற்று காலையில் தான் சென்னை வந்தோம். நேற்று இரவு தான் பல மாதங்களுக்கு பிறகு வராவை பார்த்தோம். எல்லாம் ரமணனுக்கு மறக்க அவளோடு ஜென்மமாய் இருக்கும் ஒரு உணர்வை உணர்ந்தான்.

அது கொடுத்த உந்துதல் யோசிக்காமல் அவன் வாயிலிருந்து தானாக வந்தது, “இந்த மாதிரி எனக்கும் ஒண்ணு வேண்டுமே!”, என்றான்.

வரா புரியாதவளாக, “எது?”, என்றாள்.

ரமணன் ஸ்ருதியை காட்டி, “இந்த மாதிரி ஒரு குழந்தை!”, என்றான்.

லேசாக வெட்கம் வர வாய்க்குள் ஏதோ பேசியவாறு வரா வெளியே போக போக…………. “நான் கேட்டேன் ஒண்ணுமே சொல்லலையே பாப்பா!”, என்றான் மென்னகையுடன்.

ரூம் வாசல் வரை பதில் சொல்லாமல்  சென்றவள், ஸ்ருதியிடம், “மாமாகிட்ட சொல்லிட்டு வாங்க”, என்று ஏதோ சொல்லி அனுப்ப………

பக்கத்தில் வந்த ஸ்ருதி,  “அது அத்தையால மட்டும் தனியா  முடியாதாம், மாமாவும்  வேணுமாம்”,  என்று சொல்லி செல்ல……….

“நிறைய தைரியம் வந்து விட்டது இந்த வராவிர்க்கு, ச்சே ச்சே இப்படியா பேசுவாள்”, என்று ரமணனிர்க்கு வெட்கம் எட்டிப்பார்த்தது. அவன் வராவை பார்க்க………… லேசாக கண்ணடித்து விட்டு சென்றாள்.  

அந்த நினைவு தந்த இனிமைகளுடன் குளித்து ரெடியாகி வந்தான். வரா ஸ்ருதிக்கு இட்லி ஊட்டிகொண்டிருப்பதை பார்த்தவன்,

“இப்படி தான் எனக்கு போட்டியா உன் பொண்ணை ரெடி பண்ணி வைப்பியா”, என்று கல்பனாவை பார்த்து கேட்டவாறே வந்தமர்ந்தான்.

“நேத்து தான் வீட்டு பக்கம் எட்டி பார்த்துட்டு, என் பொண்ணை போட்டின்றயா நீ, சீக்கிரமா அவளுக்கு போட்டியா நீ ஒன்னை ரெடி பண்ணு”, என்றாள்.

“என்னடா இது? இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் இப்படி பேசறாங்க”, என்று ரமணன் கப்பென்று வாயை முடிகொண்டான். 

 “வரா அவளை அவங்கம்மா கிட்ட குடுத்துட்டு சீக்கிரம் ரெடியாகு! நான் முதல் அமைச்சர் பார்க்க போறேன், நீயும் வரணும்!”, என்றவாறே பேப்பரை பார்த்துகொண்டே டீவிய  போட்டுக்கொண்டே அமர்ந்தான்.

“நானா நான் எதுக்கு?”, என்றாள்.

“இது அஃபிசியாலா போகலை, சும்மா மரியாதைக்காக பார்க்க போறேன். நீயும் வா!”, என்றான்.

தயங்கியவளை, “கிளம்பு பாப்பா! லேட் பண்ணிடாத!”, என்று சற்று சீரியசாக சொன்னான்.

“ராம் அண்ணா எங்கே?”, என்று கல்பனாவிடம் கேட்க…………

“இன்னும் ஒரு வாரத்துக்கு அவங்க காலைல பிஸி”, என்றாள்.

புரியாமல் பார்த்தவனிடம், “நீ இங்க வர்றதுக்காக, இருக்கிற அத்தனை சாமியையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ தாங்க்ஸ் சொல்ல போயிருக்காங்க”, என்றாள்.

இதற்கு என்ன சொல்லுவான், அவன் வேலையை பார்க்க துவங்கினான்.     

வரா  கால் மணிநேரத்தில் ரெடியாகி வந்தாள்.

பச்சை பட்டில் இருந்தாள். மிகவும் அழகாக இருந்தாள். பார்க்க பார்க்க கண்களை எடுக்க முடியவில்லை. ஆனால் கடமை அழைத்தது.    

அதற்குள் அப்பாவிடம் பேசி………. அம்மாவிடம் பேசி……….. எழில் வேந்தனை அழைத்து, சில விஷயங்கள் செய்ய சொல்லி, அஸிஸ்டன்ட் கமிஷனர் அழைத்து, அவருக்கும் சில வேலைகள் பணித்தான்.

சாப்பிட்டுவிட்டு கிளம்பினர், தங்களுடைய காரிலேயே சென்றவர்கள், “வெயிட் பண்ணு!”, என்று அவளை காரிலேயே இருக்க வைத்து ஆபிஸ் சென்றான்,

அதுவரை இருந்த அவன் முக பாவம் அப்படியே மாறிவிட்டது. சிரித்து, ஜோக்கடித்து, காதல் பார்வை பார்த்து, அப்படி எல்லாம் அவன் இருக்கவில்லை தான். இருந்தாலும் ஒரு சகஜ முக பாவம் இருந்தது. இப்பொழுது அப்படியே சீரியசாக மாறிவிட்டதை பார்த்து கொண்டு தான் இருந்தாள்.

“எப்படி இவன் கீழ் எல்லாரும் வேலை செய்கிறார்களோ”, என்று யோசித்தவாறே காரிலேயே பொறுமையாக அரை மணி நேரம் காத்திருந்தாள்,

சரியாக அரைமணி நேரம், வந்தவன் காரை கிளப்ப………….. அவன் வேகத்தை பார்த்து பயந்தாள். “மெதுவா போங்க! எதுக்கு இவ்வளவு வேகம்”, என கேட்க……….. “உனக்காக தான் மெதுவா போறேன்”, என்றவனிடம்.

“இன்னும் மெதுவா போ, எனக்கு வேகமா போனா பயமா இருக்கு”,  என்றாள்.

அமைதியாக ஓர் இடத்தில் நிறுத்தியவன், “நான் உன்கூட இருக்கும்போது வேற எந்த நினைவும் உனக்கு இருக்க கூடாது. பயம் அது நிச்சயம் இருக்க கூடாது”, என்றவன்…………….. அவள் முகம் தெளியாததை கண்டு அவள் முகத்தை இரு கைகளாலும் அருகில் இழுத்தான்.

அருகில் பார்க்கும் பொழுது அந்த முகம்………….. அவனுக்கு, “வராமல் வந்த தேவதை”,…………. என்ற வார்த்தையை ஞாபகப்படுத்த, எத்தனை வருட நினைவின் தாக்கம் அவள்.

திருமணம் முடிந்த பிறகும் நினைக்க மட்டுமே வைத்து கொண்டிருந்தவளின் முகம் கைகளில் இருக்கவும் முதலமைச்சர் சந்திப்பையே மறந்தான்.

அவள் அப்பொழுதும் பயத்தோடு கூடிய பார்வை பார்க்க………… அவள் பார்க்க பார்க்க………….  மிக மென்மையாக அவள் முகத்தில் தன் முத்திரையை பதித்தான்.

அவள் பயம் போய் வேறு உணர்வுகளுக்கு ஆட்படுவது புரிய……….. தன் முத்திரையை அவள் முகமெங்கும் அழுத்தமாக எழுத ஆரம்பித்தான்.

இருவருமே தன் உணர்வில் இல்லை. அப்பொழுது பார்த்து அவன் கிளம்பி விட்டானா என்று கேட்க தொலைபேசி அழைக்க…………… உணர்வுக்கு வந்தவன் காரை கிளப்பினான்.  

மயக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கும் இடம் பொருள் உணர்ந்து சட்டென்று இருவருமே தங்களை சமணப்படுத்தினர்.   

ஒரு காலத்தில் எப்படி வேகமாக இந்த வரா கார் ஓட்டுவாள் என்று எண்ணியபடியே இருக்க, சீ.எம் இருப்பிடம் வந்தது.

அவனோடு சென்றது, சீ.எம் மை பார்க்க காத்திருந்தது, எல்லாமே அவளுக்கு ஒரு பெருமையை கொடுத்தது. அடிக்கடி அவளையறியாமல் அவன் முகத்தை பார்த்தபடியே இருந்தாள். ஆனால் அவன் கருமமே கண்ணாயினான். முகத்தில் சிந்தனை மட்டுமே.

உள்ளே செல்ல, அங்கே முதல் அமைச்சரும், அவர் பீ.ஏ மட்டுமே இருந்தனர்.

“வணக்கம் ஐயா! நான் வெங்கட ரமணன்!”, என்று அவன் அறிமுகபடுத்தி கொள்ளும்போதே……….

“வாப்பா! வாப்பா!”, என்றார் அவர். அருமையான ரெகார்ட்ஸ் வச்சிருக்கியே நீ………. இந்த சின்ன வயசுல ஒரு தமிழன் அடுத்த மாநிலத்துல சாதிச்சு இருக்கியேப்பா! உன் ரெகார்ட்ஸ் தான் பார்த்துட்டு இருந்தேன், வாழ்த்துக்கள்!”, என்றார்.

“நன்றி ஐயா!”, என்றவன், பின்பு தன் மனைவியையும் அறிமுகபடுத்தி தன் விவரம் தெரிவிக்க………… “அட! கம்பம் ராமநாதன்  அண்ணன் பையனா நீ! எப்படி உன்னை எனக்கு இத்தனை நாளா தெரியாம போச்சு”, என்று பேசி இருக்க……….

சிறிது நேரம் குடும்ப விவரங்களை கேட்டவர், பிறகு வராவிடமும் சிறிது நேரம் பேசினார்.

“உங்க அப்பா உன் அண்ணன் கல்யாணத்துக்கு எல்லாம் என்னை கூப்பிட்டாங்க, ஆனா உன் கல்யாணத்துக்கு கூப்பிடலைமா அது தான் எனக்கு தெரியலை!”, என்றார்.

“நான் உங்க கிட்ட தனியா பேசணுமே அய்யா”, என அவன் கேட்க………… “சரி”, என அவர் தலையசைத்ததும்,

வராவை சிறிது நேரம் வெளியே இருக்க சொன்னவன், பி.ஏ வையும் வெளியே நிறுத்தி அவரிடம் பேச துவங்கினான்.

 

அத்தியாயம் இருபது

அன்றைய நிகழ்வுகள்

ஸ்ரீதர் தன் வீட்டில் காதலை பற்றி பேச…………. அங்கு புயல் பூகம்பம் அத்தனையும் ஒரு சேர கிளம்பியது.

ஸ்ரீதர் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தான் தான். ஆனால் எக்ஸ் மினிஸ்டர், தற்போது எம்.பி, இப்படி வரமஹாலக்ஷ்மியின் தந்தை பதவியில் இருப்பதால் அந்தஸ்து கண்டாவது எப்படியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்று நினைத்திருக்க………..  அவன் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

அவன் தந்தை சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. “ ஏதோ வயசுக்கோளாறு பொண்ணுங்களோட சுத்திகிட்டு இருக்கன்னு நினைச்சா………. நீ என்னடா கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து நிக்கற. அதெல்லாம் முடியாது! அவங்கப்பன் என்னவா வேணா இருந்துட்டு போறான். அது பிரச்சனையில்லை. அவன் நம்மாளு இல்லை!”.

“ அரசியலுக்கு வந்துட்டா அவன் பெரியாளா?. நம்ம வசதி அந்தஸ்து முன்னாடி நிக்க முடியுமா!. நம்ம ஜாதி சங்கத்துக்கு உங்க சித்தப்பா தான் தலைவர். நம்ம வேற ஜாதில பொண்ண கட்டினா எவண்டா நம்மள மதிப்பான். அப்படி செஞ்சவங்கள இது நாள் வரைக்கும் நாங்க மதிச்சாதே இல்லைடா”.

“இத்தனை நாள் வாய் ஓயாம பேசுணீங்கலே, எங்க இனம் அது இதுன்னு. எங்க போச்சு அதெல்லாம். உங்க வீட்ல என்ன நடக்குதுன்னு, அவனவன் எங்களை பார்த்து கைகொட்டி சிரிப்பாண்டா! நாங்க வெளில தலை காட்ட முடியாது!”.

“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு அவ வேணும்பா, நான் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்”, என்றான்.

அவன் வார்த்தையை கொண்டே மடக்கினார், “வேணும்னா வச்சிகிடுறா, அதுக்கு ஏண்டா கல்யாணம் கட்டனும்ன்ர. உனக்கு முன்னாலயே தெரியும், உனக்கும் சித்ராக்கும் தான் கல்யாணம்ன்னு நாங்க முடிவுபண்ணியிருக்கோம்னு………..”,

“இப்போ வந்து அவளை கட்டுவேன், இவளை கட்டுவேன்னா,! வெட்டி பொலி போட்டுருவோம்டா! சாதாரணமா நினைக்காத இதுல நம்ம கௌரவம் மரியாதை அத்தனையும் அடங்கியிருக்கு”.

“இத்தனை பேசுனவங்க….. நம்ம ஜாதி நம்ம ஆளுங்கன்னு இருந்தவங்க…….  இன்னைக்கு அரசியல்ல இருக்கிற கொஞ்சம் வசதியானவங்க வந்தவுடனே அப்படியே திரும்பிட்டாங்கன்னு எல்லாரும் பேசுவாங்க………. அதையெல்லாம் என்னால பொருத்துக்கவோ கேக்கவோ முடியாது. அதுக்கா………… இந்த பேச்சு கேக்கவா நாங்க இருக்கோம்”.  

“இப்பவும் நாங்க அந்த பொண்ணோட பழகாதேன்னு சொல்லலை. உனக்கு அவ தான் வேணும்னா, பழகு அனுபவி. அது உன் திறமை. ஆனா கல்யாணம் அது நடக்காதுடா!!!!!!!!!!!!!!”, என்று ஆவேசமாக கத்தினார்.

“அப்பா!!!!!!!!!!!”, என்று பதிலுக்கு இவனும்  கத்தினான். “இப்படி அசிங்கமா பேசாதீங்க”, என்றான்.

“அப்படி தாண்டா பேசுவோம்! இதுமட்டுமில்லை இன்னும் கூட பேசுவோம்!. நானாவது உன்கிட்டே தான் பேசுறேன், ஆனா நம்ம பயளுவளுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணு கிட்டயே பேசுவாங்க. அதுவும் உங்க அத்தைக்கு நீ சித்ராவ கட்ட மாட்டேன்னு தெரிஞ்சது, அந்த பொண்ணு வீட்டுக்கே போய் மானத்தை வாங்கிடுவா”.

“வீணா நீ அந்த பொண்ணுக்கு பிரச்சினை கொடுக்காத! அவளை கழட்டி விட்டுடு!”, என்றார்.

“அப்பா ப்ளீஸ் பா!”, என்று கெஞ்சலில் இறங்கினான். “நான் அவளைதான்பா கல்யாணம் பண்ணிக்குவேன்”, என…………..

“நீ வாழ்கை பூராவும் கல்யாணம் பண்ணிக்கலைன்னா கூட பரவாயில்லை! ஆனா இந்த கல்யாணம் நடக்காது. ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ண என் உடம்புல உசுரு இருக்குற வரைக்கும் விடமாட்டேண்டா”,

“உனக்கு நாங்க எதுலடா குறை வெச்சோம். பிறப்பிலயே நீ கோடீஸ்வரன்டா, உன்னை சொத்து சம்பாரிக்க சொல்றோமா……………. உனக்கு குடும்பத்தை காப்பாத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கா………….. அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனுமா…….. என்னடா உன் நிர்பந்தம்………….? எதுவுமே கிடையாது…………..”,

“உன்னை நாங்க இதுவரைக்கும் எதுவும் சொன்னது கூட கிடையாதுடா, குடிக்கரியா குடி, கூத்தடிக்கிரியா கூத்தடி, பொண்ணுங்க சகவாசமா, அனுபவி………….. எதுவுமே சொல்றது கிடையாது”

“ஆனா நாங்க இத்தனை வருஷம் கட்டி காத்த பெருமையை உனக்காக விடமுடியாது. நீ நம்ம ஜாதிலயே எவளையாவது இழுத்துட்டு வா………… உங்க அத்தையை சமாதானப்படுத்தி கலயானத்தை கூட செஞ்சி வெக்கிரேன். ஆனா ஜாதி விட்டு ஜாதி நான் செத்ததுக்கு அப்புறம் கூட நடக்க விட மாட்டேண்டா”, என்றார் ஆவேசமாக.

சண்டையிட்டு பார்த்தான்……… கெஞ்சி பார்த்தான்……….. மிரட்டி பார்த்தான்…… “நான் இந்த வீட்டை விட்டு போய்விடுகிறேன், எனக்கு உங்கள் சொத்து எதுவும் வேண்டாம்”, என்று சொல்லி பார்த்தான், எதற்கும் அங்கிருந்த யாரும் அசையவில்லை.

அவன் குடும்பத்தில் ஒருவர் கூட அவனுக்கு சப்போர்ட் இல்லை.

பத்மாகூட……….. “நான் அன்னைக்கே இது சரி வராதுன்னு சொன்னேன். நீ கேட்கலை”, என்று குற்றம் சாட்டினாள். அதே சமயம் அவன் அப்பாவையும் சாடினாள்……………..,

“நான் அன்னைக்கே உங்க கிட்ட சொன்னேனே அப்பா! நீங்க தான் வயசுப்பையன் அப்படி இப்படி இருக்கறது சகஜம்னு சொல்லி என் வாயை அடைச்சிடீங்க! இப்போ இது எங்க கொண்டு நிறுத்தி இருக்கு பாருங்க. நானும் வரமஹாலக்ஷ்மி ஒத்துக்க மாட்டான்னு அலட்சியமா இருந்துட்டேன். இல்லைன்னா அட்லீஸ்ட் அவகிட்டயாவது இது நடக்காதுன்னு சொல்லியிருப்பேன்!”, என்றாள்.

அவன் அன்னை அதற்கும் மேலே……….. அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. “நடக்காதுன்னு தெரிஞ்சும் நீ செஞ்சா, அதுக்கு யார் என்ன பண்ண முடியும். இத்தனை வருஷம் கண்ணுக்கு கண்ணா வளர்த்த நாங்க உங்க கண்ணுக்கு தெரியலை. அப்ப நீங்க மட்டும் எதுக்குடா எங்க கண்ணுக்கு தெரியணும். எங்க சம்மதமும் கிடைக்காது, உன்னையும் செய்ய விடமாட்டோம்!”, என்றார் தீர்மானமாக.

 “நம்ம ஆளுங்களுக்கு தெரியாம பார்த்துக்கடா, தெரிஞ்சா அந்த பொண்ணு வீட்டுக்கு போய் கலாட்டா செஞ்சிடுவாங்க”, என்று மிரட்டல் வேறு விடுத்தார்.

 மிரட்டல் மட்டுமல்ல, அது தான் உண்மையும் கூட. 

ஸ்ரீதருக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

அவன் அப்பா அதற்குள் வேலையை ஆரம்பித்து இருந்தார். தன்னுடைய தம்பியை கூப்பிட்டு, “அந்த பொண்ணு  வீட்டுக்கு நீயே போய் விவரம் சொல்லு! இது நடக்காதுன்னு. அவங்களுக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ. பொண்ண பத்திரமா பார்த்துக்க சொல்லு. நாம நம்ம பையன பார்த்துக்குவோம்னு சொல்லு!”,

 “மீறி இனிமே ஏதாவது அந்த பொண்ணு நம்ம பையனோட சுத்துனா……. நடக்கற எதுவுக்கும் நாமா பொருபில்லைன்னு சொல்லு. அவங்கப்பன் அரசியல்ல இருந்தா நமக்கென்ன! ஒழுங்கா பொண்ணை பார்த்துக்க சொல்லு!”, என்றார்.

வரா ஸ்ரீதரை பார்த்து……… “ஐ அம் ஆல்சோ இன் லவ் வித் யூ”, என்ற வார்த்தையை சொல்லி மூன்று மணி நேரத்திற்குள் அவள் வீட்டு முன் இரண்டு டாட்டா சுமோ நிறைய ஆட்களை கொண்டு, ஸ்ரீதரின் சித்தப்பா சிவசங்கரனை பார்க்க வந்தார்.

சிவசங்கரன் அப்பொழுது வீட்டில் இருந்தார். இவர்கள் ஏதோ அரசியல் வேலை காரணமாக வந்திருக்கிறார்கள் என்று அவர் நினைத்திருக்க………….. “நான் உங்களிடம் தனியாக பேசவேண்டும்”, என்றார் ஸ்ரீதரின் சித்தப்பா.

அவர் குரலே ஏதோ சரியில்லை பிரச்சனை செய்ய வந்திருக்கிறார்கள், என்றுனர்த்த…………. எல்லோரையும் அனுப்பிவிட்டு ராமை மட்டும் கூட வைத்து கொண்டு, “சொல்லுங்க இவன் என் பையன் தான்!”, என்றார்.

“உங்க பொண்ணு…………”, என்று ஆரம்பித்த ஸ்ரீதரின் சித்தப்பா விவரம் கூற……

“எங்க பொண்ணு……. உங்க பையனோட சுத்துறாளா……….. அவன் அவளை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்றானா………?”, என்றார் நம்பாத குரலில் சிவசங்கரன்,

“பின்ன உங்க முன்னாடி பொழுது போகாம வந்து கதையடிச்சிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்களா”, என்று ஸ்ரீதர் சித்தப்பா எகிற……….. அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற உணர்வு கூட சிவசங்கரனிடமும் ராமிடமும் இல்லை.

தீடீரென்று தங்கள் வீடு தேடி வந்து, தங்கள் செல்லப் பெண்ணின் மீது இப்படி ஒரு பழி சொல்லை ஒருவர் போட……….. இருவரும் அதிர்ந்த நிலையிலேயே இருந்தனர்.

“இருங்க நான் என் பொண்ணை கேட்கிறேன்”, என்றார் சிவசங்கரன் இன்னுமே செய்தியை ஜீரணிக்க முடியாதவராக……….

அவளை அழைத்து பொறுமையாகவே கேட்டார்.

“பாப்பா! உனக்கு இவங்க பையனை தெரியுமா?”, என்றார்.

யார்? என்று தெரியாமல் வரா தடுமாற……….. அதை உணர்ந்த ராம்…….. “ஸ்ரீதர்”, என்று எடுத்து கொடுத்தான்.

“தெரியும்”, என்கிற மாதிரி தலையைசைத்தாள்.

“நீ இவங்க பையனோட ஊர் சுத்தறியாம். இவங்க பையனை காதலிக்கிரியாம் உண்மையா?”, என்றார்.

“இல்லை”, என்று தன் மகள் சொல்லிவிட வேண்டும் என்று வேண்டியபடியே அவளை பார்க்க……..

அவள் தடுமாறினாள், ராம் அருகில் நின்றிருக்க ஆதரவிற்கு அவன் கையை பிடித்தவள், “அப்பா! ஸ்ரீதர்……….”, என்று அவள் ஆரம்பிக்க………

“பாப்பா! அவங்க பையனை பற்றி நமக்கு தேவையில்லாதது, நீ உன்னை பற்றி மட்டும் பேசு”, என்றார்.

தடுமாறினாள் வரா………… “ஸ்ரீதரை காதலிக்கிறாளா?”, என்று கேட்டால் உண்மையாக அவளுக்கு பதில் தெரியாது. அவனுடைய அருகாமையை அவள் ரசித்தாள்.

ஸ்ரீதரை அவளுக்கு பிடித்தது. அதை விட அவள் மேல் அவன் வைத்திருந்த காதல் பிடித்தது. தன்னை பார்த்த பிறகு தன்னுடைய ப்ளே பாய் இமேஜ் விட்டு தனக்காக தன்னையே மாற்றி கொண்ட குணம் பிடித்தது.  

இந்த இரண்டரை வருடமாக அவளுக்கு அவனை தெரிந்த நாள் முதல் ஸ்ரீதர்……………. “அவளையன்றி ஏதுமில்லை இவ்வுலகில்…………….” என்ற மாதிரியான ஒரு அன்பை, செய்கையை தான், அவளுக்கு உணர்த்தி கொண்டிருந்தான்……… காட்டி கொண்டிருந்தான்.

எந்த வகையிலும், “நீ என்னை தான் காதலிக்க வேண்டும்”, என்று அவளை கட்டாயபடுத்தியது கூட கிடையாது.

அவன் காதலை சொல்லிய பிறகு……, தான் அதை உணர்ந்த பிறகு………….,  இத்தனை நாட்கள் அவனுடன் பழகிய பிறகு………….., தான் அவனிடம் பதிலுக்கு காதல் சொல்லாதது, ஏதோ தவறு போல தோன்றவே……….. அதை சொன்னாள்.

சொன்னவுடனேயே……… அதன் பொருட்டே………… அதை திருமணமாக மாற்ற எண்ணி……….. திருமணமானால் தன்னுடைய யோசனைகளுக்கு தேவையிருக்காது என்றே………. “அப்பாவிடம் திருமணம் குறித்து பேசுகிறீர்களா”, என்றாள். 

“காதல் சொல்லி வந்து சில மணித்துளிகளே ஆன நிலையில்………… இவர் வந்திருப்பதை பார்த்தால் திருமணம் பேச வந்திருக்கிறார்களா…………. இல்லை ஏதாவது பிரச்சனையா………..”, என்று எண்ண அலைகள் வேகமாக தாக்க………

“கேக்கறாங்க இல்லை, சொல்லு பாப்பா!”, என்றான் அவள் அண்ணனும்……….

“ஆமாம்”, என்பது போல் தலையாட்டிவள், அதை வாய் வார்த்தையாக சொல்லாமல், “நான் தான்பா உங்க கிட்ட கல்யாணம் பேச சொல்லி சொன்னேன்!”, என்றாள்.

“இதை நான் உன்னிடம் எதிர்ப்பார்க்கவில்லை”, என்று அவர் பார்வை குற்றம் சாட்டியது.

“அவங்களுக்கு விருப்பமில்லையாம். உங்க பொண்ண ஒழுங்கா இருக்க சொல்லுங்க! எங்க பையன நாங்க பார்த்துக்குறோம்! இந்த கல்யாணமெல்லாம் நடக்காதுன்னு, சொல்ல வந்திருக்காங்க! நான் என்ன சொல்லட்டும்!”, என்றார்.

வரமஹாலக்ஷ்மி வந்ததில் இருந்து ஸ்ரீதரின் சித்தப்பா அவளை தான் பார்த்து கொண்டிருந்தார்.

அழகான மென்மையான பெண். அவளை பார்த்தவுடனே ஸ்ரீதரை இவளிடமிருந்து பிரிப்பது கடினம் என்றே உணர்ந்தார். பிரித்தாலும் இப்படி ஒரு அழகான பெண்ணை தேடுவது என்பது இயலாத காரியம் என்றே தோன்றியது.

ஒரு நிமிடம் மனக்கண்ணில் தங்களுடைய தங்கை மகள் சித்ரா வந்து போக………… இவள் பக்கத்தில் நின்றால் அவள் பார்க்க சகிக்க கூட மாட்டாள் என்றே தோன்றியது.

இருந்தாலும் இவர்கள் தாங்கள் ஜாதி அல்லவே…………. அவருள்ளும் இப்படி யோசனை ஓடியபடியே இருக்க…………….

“சொல்லு பாப்பா!”, என்று சிவசங்கரன் குரலுயர்த்த………… “நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி சொல்றேன்பா”, என்றாள்.

“எங்க பொண்ணு இனிமே உங்க பையனோட எந்த பேச்சு வார்த்தையும் வெச்சுக்காதுங்க, அதுக்கு நான் பொறுப்பு!”, என்றவர்.

 ஒரு பெண்ணின் தந்தையாக அடுத்த நிமிடம் அவரிடம்…………. “இது நமக்குள்ளயே இருக்கட்டுமே! அவளால எந்த தொந்தரவும் வராது! நான் பார்த்துக்கறேன். பொண்ணு பேரு எங்கயும் வெளில வரவேண்டாமே!”, என்றார்.

“நாங்களும் பொண்ண பெத்தவங்க தான்! இந்த மாதிரி நடக்க வாய்ப்பேயில்லை அப்படின்றதால தான், அண்ணன் பேச சொல்லி அனுபிச்சாங்க. பையன நாங்க பார்த்துக்குவோம்! இருந்தாலும் இளரத்தம் இல்லையா…………. சொன்ன பேச்ச கேட்க தோணாது, மீற தான் தோணும்! அதனால தான் உங்க கிட்ட பேச வந்தோம்”.

“ஸ்ரீதர் உங்க பொண்ண தேடி வரதுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கல்யாணம் நடக்க வாய்பேயில்லை! எங்க சம்மதத்தோட மட்டுமில்லை, எங்களை மீறியும் நடக்க வாய்ப்பில்லை………… சொல்லிட்டோம்! வளராம பார்த்துக்குங்க………….”, என்றபடி எழுந்து சிவசங்கரனின் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட்டார்.

ராம் பிரசாத் எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.

“இந்த காதல் கன்றாவியெல்லாம்…………. எப்போ இருந்து பாப்பா”, என்றார் சிவசங்கரன் கடுமையான குரலில்…………….. இந்த மாதிரி என்றுமே அவர் வராவிடம் பேசியதில்லை. அந்த த்வனியே அவளுக்கு கண்களில் நீர் வரவழைத்தது.

“அப்பா!…………”, என்றாள்.

பதில் வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருக்க…………..

“ரெண்டு மூணு வருஷமா ஸ்ரீதரை தெரியும் அப்பா! இன்னைக்கு தான்…………”, அதை சொல்லவே தன் தந்தையிடம் தடுமாறினாள். “இன்னைக்கு சாயந்திரம்  தான் அவரோட காதலை ஒத்துக்கிட்டு, உங்க கிட்ட கல்யாணத்தை பத்தி பேச சொன்னேன்”,

குரல் கமறியது, அவள் அண்ணன் அவள் கைகளை ஆதரவாக பற்றினான்.

தன்னுடைய செல்ல மகளை திட்ட மனமில்லாமல் யாரிடம் கோபத்தை காட்டுவது என்று தெரியாமல் ராமை நோக்கி…………….

 “நீங்கல்லாம் வீட்ல என்னடா பண்றீங்க? அவ எங்க போறா? எங்க வர்றா? யாரோட பழகுரா? எதுவுமே பார்க்கறது இல்லையா?”,

 ரமணன் முன்பு ராம் பிரசாத்தை பார்த்து கேட்ட அதே கேள்வி, இதை கேட்டவுடன் அண்ணனுக்கும் தங்கைக்கும் சம்பந்தமே இல்லாமல் வெங்கட ரமணன் நினைவு வந்தது.   

“அவளுக்கு என்னடா தெரியும்! சின்ன பொண்ணு. காதல் சொல்லி மூணுமணிநேரத்துல நேரத்துல ரெண்டு வண்டி நிறைய ஆளுங்களோட வந்து மறைமுகமா மிரட்டிட்டு போறான்”.

“இத்தனை வருஷமா நம்ம பொண்ணோட அந்த பையன் பழகறது நமக்கு தெரியலை, அவனுங்களுக்கு தெரியாமையா இருக்கும். கல்யானம்ன்னு சொன்னவுடனே எப்படி கிளம்பி வந்துட்டாங்க பாரு……….”.

“அவனுங்களுக்கு இனப்பற்று அதிகம்டா…………. வேற ஜாதி பொண்ணை எல்லாம் வீட்ல வேலைக்கு கூட வெச்சிக்க மாட்டாங்க. நம்ம சாதாரணமான ஆட்களா இருந்தாலே பொண்ணுங்க விஷயம் தீயா பரவிடும்”.

“இப்போ நான் போஸ்ட்ல இருக்கேன். எம்.பி, எக்ஸ் மினிஸ்டர். எல்லாரும் நம்மளை எப்படி கவனிப்பாங்க! பொண்ணு பேரை நிமிஷத்துல கெடுத்துருவாங்கடா! ஏதோ நான் பதவியில இருக்க போகவும், வீடு தேடி வந்து பொண்ணை பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டு போறான்…………… இல்லைன்னா ரோட்ல நின்னு கத்துற ஆளுங்கடா அவங்கல்லாம்”.

“எந்த கட்சி வந்தாலும் போனாலும் அவங்களை பாதிக்காது. ரொம்ப பெரிய தொழில் சாம்ராஜ்யம். நம்மளால அவங்க முன்னால நிக்க முடியாது”.

“பாப்பா பார்த்து நடந்துகோங்க. அவங்க சகவாசம் வேணாம் சரிவராது. எங்க பேர் கெட்டுடும் அப்படின்றதை விட, நம்ம நிம்மதி போய்டும். உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டாங்க. இப்படி பண்ணிடீங்கலே பாப்பா………………….  கொஞ்ச நாள் காலேஜ் போறதை கூட நிறுத்திடுங்க. அப்புறம் பார்க்கலாம்”, என்று மேல பேச முடியாதவராக சென்றார்.  

அவள் அண்ணன் எதுவும் பேசவில்லை. “ஏன் இப்படி செய்தாய்? ஏன் காதலித்தாய்? அது தவறு!”, என்பது போல் எதுவும் சொல்லவில்லை. வராவின் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்க அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு……….

“கொஞ்ச நாள் ஆறப்போடலாம் பாப்பா! இப்போ இதை பத்தி மேல என்ன செய்யறதுன்னு யோசிக்காத……. வா!”, என்றான்.

கல்பனா ஊரில் இல்லை, இரண்டாவது குழந்தை வயிற்றில். அது அவளுக்கு ஏழாம் மாதம், தனது தந்தை வீட்டிற்கு சீராட சென்றிருந்தாள். அங்கே ஏதோ விஷேசமென்று அவள் மாமியார் ராஜேஸ்வரியும், தன் பேரன் ரோஹித் பிரசாத்தோடு சென்றிருந்தார்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் ராஜேஸ்வரிக்கும் தெரியவில்லை, கல்பனாவுக்கும் தெரியவில்லை. தங்களுடைய செல்லத்தின் செய்கையை தங்களுடைய வாழ்க்கை துணையிடம் கூட  பகிர  அவர்களுக்கு விருப்பம் இல்லை.  

தூக்கமில்லா இரவாக வரமஹாலக்ஷ்மிக்கு அன்று ஆனது.

“என்ன செய்வது………..? யாரிடம் சொல்வது? தான் ஸ்ரீதரிடம் சொன்னது சரியா………….? இனி என்ன ப்ரச்சனைகைளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்……………? தன்னால் அது முடியுமா…………… தன்னால் தன்னுடைய தந்தைக்கு அவப்பெயரா……………. தான் இதைதான் தன் தந்தைக்கு தேடிக் கொடுத்தோமா………….. தான் கெட்ட பெண்ணா…………..?”  

“ஸ்ரீதரிடம் இது சரி வராது என்று சொல்லிவிடலாமா………….. அது தான் அவனை ஏமாற்றியது போல் ஆகாதா……….. தான் காதலித்து ஏமாற்றிவிட்ட சுயநலப் பெண்களின் வரிசையில் சேர்ந்து விடுவோமா…………… அப்பொழுது தான் சுகமான வாழ்கையை தான் அவனிடம் எதிர்பார்த்தோமா? அது இல்லாத பட்சத்தில் தான் அவனை விட்டு விலகுகிறோமா!……….  தான் கெட்ட பெண்ணா…………….?”

“ஏன் தான் அவனிடம் பழகினோம். என்னவாயிற்று தனக்கு. வெளியில் தெரியும் பொழுது தன்னை எல்லாரும் அவனுடன் சேர்ந்து சுற்றினாள் என்று பரிகசிப்பார்களா……………. தன்னை பற்றி அசிங்கமாக பேசுவார்களா………… தான் கெட்ட பெண்ணா?”

“இந்த காதல் தனக்கு தேவையா? இதை சொல்லி அரை நாளில் தனக்கு இத்தனை துன்பமா…………. இப்பொழுது வேண்டாம் என்று சொன்னால், தான் கெட்ட பெண்ணா……………….?” 

யோசித்து யோசித்து……………. தலை சுழன்றது. இவை மட்டுமின்றி ஏதேதோ எண்ணங்கள் அவளை தாக்க……………

தானாக கைகள் வெங்கட ரமணனின் தொலைபேசி எண்ணை அழுத்தின………… நேரம் அப்பொழுது பண்ணிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது.

வெங்கட ரமணன் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்து இருந்தான். சிறு சத்தத்திற்கும் விழித்து விடும் இயல்பினன் என்பதால், ஒரே ரிங்கில் எழுந்தவன் போன்…………, “பாப்பா காலிங்”, என்று காட்ட………       

வரா தன்னை அழைக்கிறாளா……….. எதற்கு என்று மனதில் சிறு பதட்டம் தோன்ற எடுத்து, “பாப்பா”,  என………..

அந்த பக்கம், “நீ ஏன் என்னை வேண்டாம்னு சொன்ன?”, என்றாள் அழுகையோடு கூடிய குரலில் வரா.

அதிர்ந்தான், “என்ன வரா கேட்கற நீ………….”,

 “ஏன் என்னோட கல்யாணம் வேண்டாம்னு சொன்ன, அதனால நான் கெட்ட பொண்ணு ஆயிட்டேன் பார்த்தியா”, என்றாள் மறுபடியும் அழுகையுடன்.

அவள் குரலில் என்ன இருந்தது என்று அறிய ரமணன் முற்பட அவனுக்கு விளங்கவேயில்லை. கோபமா……. அழுகையா…….. ஆத்திரமா…….. வருத்தமா……

அவனுக்கு அந்த குரல் பத்து வயதில் அவளை முதன் முதலில் பார்த்த போது, அவளுடைய விளையாட்டில் தலையிட்டு அவளை கோபப்படுத்தி “மை ஃபிரிண்ட்ஸ் கால் மீ வெங்கி”, என்று சொல்ல………

“ஐ அம் நாட் யுவர் ஃபிரன்ட்”, என்று உதடு துடிக்க சொன்ன வரா ஞாபகத்திற்கு வந்தாள். 

மறுபடியும், “என்னை கெட்ட பொண்ணு ஆக்கிட்ட தானே”, என்றாள்.

“பாப்பா என்ன பேசறீங்க நீங்க…………… எப்போவும் வரா பாப்பா யாருக்கும்  கெட்ட பொண்ணு ஆகமாட்டீங்க, உங்களால அது முடியாது!”, என்றான்.

“யூ ஆர் தி பெஸ்ட்” என்றான் உணர்ந்து. 

தன்மையாக பேசினால் ஒழிய, தன்னால் விஷயத்தை வாங்க முடியாது என்றுனர்ந்தவன், பத்து வயது வராவை சமாதனபடுத்துவது போல் சமாதானப்படுத்தினான்.   

  “அப்போ நான் நல்ல பொண்ணுன்னா நீ ஏன் வேண்டாம்னு சொன்ன?”, என்று மறுபடியும் அதிலேயே நிற்க………

இதற்கு என்ன பதிலளிப்பது என்று சில வினாடிகள் தயங்க………. அந்த சில வினாடிகள் அவளுக்கு போதுமானதாக இருக்க……….

“நான் கெட்ட பொண்ணு தானே, உனக்கு கெட்ட பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. அட்லீஸ்ட் ஸ்ரீதர்க்கு நல்ல பொண்ணா இருக்கேன்”,  என்று கூறி போனை வைத்து விட்டாள்.

பதட்டம், என்னவென்று தெரியாத பதட்டம், “யார் பெயரை சொல்லுகிறாள்? என்ன செய்கிறாள்? ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டாளா? எவண்டா அந்த ஸ்ரீதர்?”,  பதறிய ரமணன்,

அந்த நேரத்திலும் தயங்காது ராம் பிரசாத்திற்கு உடனே ரமணன் அழைக்க……… உறக்கம் வராது இருந்த ராமும் முதல் ரிங்கிலேயே எடுக்க…………

“ராமண்ணா வராக்கு என்ன பிரச்சினை?”, என்றான் ரமணன் எடுத்தவுடனேயே.

ராம் தயங்க………. “அண்ணா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க எல்லாம் அங்கன்னு எனக்கு தெரியலை. என்னன்னு சொல்லுங்க, யார் அந்த ஸ்ரீதர்?”,  என்று அதட்ட……..

ராம் அத்தனையையும் கடகடவென ஒப்பிக்க………….. வெங்கட ரமணன் நேரில் இருந்தால் தன்னை அடித்திருப்பானோ என்று எண்ணும் அளவுக்கு கோபமாக ஒலித்தது ரமணன் குரல்,

“நான் உங்ககிட்ட முன்னமே சொல்லியிருக்கேன், அவ எங்க போறா? எங்க வர்றா? யாரோட பழகறா? எல்லாம் பாருங்கன்னு, என்ன பிரச்சனையை இழுத்து விட்டிருக்கான்னு தெரியலையே?”, என அவனை கடிந்து கொள்ள……..

பதில் சொல்லாத ராமின் அமைதி………… அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று ரமணனுக்கு உணர்த்த, வரா போன் செய்த பிறகு எனக்கென்ன என்று இருக்க வெங்கட ரமணனால் முடியவில்லை.  

“நான் அங்கே காலையில இருப்பேன்!”, என்று மட்டும் சொன்னவன் அந்த நேரத்தில் எந்த ஃப்ளைட் இருக்கிறது என்று பார்த்து கிளம்பி வர………….

அப்படியும் அவன் சென்னை வந்து சேர காலை பத்து மணியாகி விட்டது. வந்து பார்த்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி………………

 ராம் பிரசாத்தை காணவில்லை…………,

வரமஹாலக்ஷ்மியை காணவில்லை…………….,

இருவரையும் வேறு வேறு நேரத்தில் காணவில்லை.

 சிவசங்கரன் என்ன செய்வது என்று தெரியாமல் சென்னையில் திகைத்து கொண்டிருக்க……………..

அங்கே மதுரையில் ராம் பிரசாத்தை காணவில்லை என்ற செய்தியை கேள்விப்பட்ட ஏழு மாத கர்ப்பிணியான கல்பனா மாடிப்படியில் இருந்து நிலை தடுமாறி கீழே படிகளில் உருள……………….

 வயிற்றில் அடிபட்டு சீரியஸான நிலைமையில் கல்பனா ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக……………. ?????????????,

டாக்டர் அந்த பெண் மிகவும் சீரியசாக இருக்கிறாள் அவள் கணவன் வந்தாள் பரவாயில்லை என்று கூற………….   

வெங்கட ரமணனுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஆனது யாரை தேடுவது முதலில் வராவையா…………..?, ராம் பிரசாத்தையா………..???????????           

Advertisement