Advertisement

அத்தியாயம் பதினேழு :

இன்றைய நிகழ்வுகள்

சட்ட அமைச்சரையும், ஹோம் செக்ரட்றியையும் அனுப்பி வைத்து உள்ளே நுழைந்தால் அவனுக்கு சீஃப் மினிஸ்டரின் செகரட்ரியிடம் இருந்து போன். “சர்! ஜெயில்ல ஏதோ ப்ரோப்ளேம்……………”, என்று அவர் ஆரம்பிக்கும் போதே……………,

“நான் ஜெயில் பார்த்துட்டேன்! அங்கே இப்போ கண்ட்ரோல்ல தான் இருக்கு. இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கேன். என்ன காரணம்னு இன்வேஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்கோம். தெரிஞ்ச உடனே சொல்லறேன்”, என்றான்.

“நான் இப்போ சீப் மினிஸ்டர்கிட்ட என்ன சொல்லட்டும்?”.

“நான் சொன்னதையே சொல்லுங்க, நாளைக்கு நான் ஐயாவை வந்து நேர்ல பார்த்து சொல்றேன்னு சொல்லுங்க”.

“இல்லை, இப்போவே அவரோட என்னை பேச வைங்க! நான் சொல்றேன்!”, என்றான்.

“நான் சொல்றேன் சர்! இப்போவே அவர் பேசனும்னு சொன்னா போன் பண்ணி குடுக்கறேன், இல்லைன்னா, நாளைக்கு நீங்க எப்போ வந்து பார்க்கறதுன்னு கேட்டுக்கறேன்”, என்றார்.

அவரிடம் பேசி வைத்தவுடனே மறுபடியும் கைதிகளிடம் ஒரு ரவுண்டு வந்து என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டான், சுப்பிரமணி கண்விழிபதற்க்காக காத்திருந்தவன்……………..

அவன் கண் விழிக்கவும் எல்லா கைதிகளிடமும் பேசியபடியே அவனிடமும் நெருங்கியவன் மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “இது உனக்காக நடத்தப்பட்டதா?”, என்று கேட்க…………….

 ஏற்கனவே ரமணன் அடித்த அடியில் உதடுகள் கிழிந்து பேச முடியாத நிலையில் இருந்த அந்த கைதி, “ஆமாம்”, என்பது போல் தலையை மட்டும் அசைக்க, வேறு எதுவும் பேசாமல் இடத்தை விட்டு அகன்றவன், தனது தொலைபேசியை எடுத்து எழில் வேந்தனை அழைத்தான்.

“எழில் ரெண்டு டீமா வாங்க! உங்களுக்கு நம்பிக்கையான ஆளா பார்த்து இன்னொரு டீம்க்கு ஹெட் பண்ண கூப்ட்டுகங்க. கையில் நீங்க பிடிச்ச டிரக்ஸ் ஏதாவது இருந்தா எடுத்துக்கங்க! கமிஷனர் ஆபீஸ் வாங்க!”,

ரமணனுக்கு தெரியவில்லை, அவனிடம் கைதி விஷயத்தை சொல்லிவிட்டான் என்று தெரிந்து தாக்குதல் நடத்தப்பட்டதா………… இல்லை சொல்லிவிடுவான் என்று தாக்குதல் நடத்தப்பட்டதா என்று. எதுவாக இருந்தாலும் காலம் கடத்தமுடியாது விரைந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தவனாக……………….,

அதே சமயம் யாரை நம்பலாம், யாரிடம் சொல்லலாம் விஷயம், சம்பந்தப்பட்டவர்களின் காதுகளுக்கு செல்லும் முன்னே கைது செய்யப்படவேண்டும், இல்லையென்றால் தப்பி விடுவார்கள் என்றுனர்ந்தவனாக விரைந்து செயல் பட்டான்.

அதுதான் வெங்கட ரமணன். குற்றவாளிகளுக்கு யோசிக்க சிறிது அவகாசம் கூட கொடுக்கமாட்டான். என்ன செய்ய போகிறான் என்றும் யாராலும் அனுமானிக்க முடியாது.    

கமிஷனர் ஆபீஸ் அந்த இரவு பன்னிரெண்டு மணிக்கு மீண்டும் பரபரப்பானது. எஸ் பி யையும் அந்த நேரத்தில் வரவழைத்தவன் இன்னும் ஒரு அஸிஸ்டன்ட் கமிஷனரையும் வரவழைத்தான்.

எல்லாரும் வர காத்திருந்தவன், அவர்கள் வந்தவுடனே அவரவர் செல்ல வேண்டிய ஏரியா சொன்னவன், அவர்களிடம் யாரை கைது செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.

அங்கே சென்று கூப்பிடுங்கள் என்று நால்வரையும் தனித்தனியாக அனுப்பினான். வேறு விவரம் தெரிவிக்கவில்லை. என்ன விஷயமாக செல்கிறார்கள்………. யாரை கைது செய்ய போகிறார்கள்………. எதற்கு? என்று யாருக்கும் தெரியவில்லை. அவனுடைய முகத்தில் இருந்த கடுமை யாரையும் அவனிடத்தில் கேள்வி கேட்க விடவில்லை.

 நான்கு ஏரியாக்களுக்கும் நால்வரும் தங்களுடைய குழுக்களுடன் செல்ல………. அங்கே அவர்கள் அர்றஸ்ட் செய்ய வேண்டிய ஆட்களின் வீடுகளை சொன்னான்.

“ வீட்டில் தேடுங்கள் ஏதாவது சரக்கு கிடைத்தால் அதை வைத்து அர்றஸ்ட் செய்யுங்கள்! இல்லையென்றால் கையில் நீங்கள் கொண்டு செல்வதை யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டில் எடுத்த மாதிரி காட்டி அர்றஸ்ட் செய்யுங்கள்”, என்று உத்தரவிட்டான்.

“சர் சர்ச் வாரன்ட், அரெஸ்ட் வாரன்ட், ஏதாவது கேட்டாங்கன்னா?”, என்று ஒரு ஆபீசர் இழுக்க……….. “வந்து எங்க கமிசனர் கிட்ட கேளுடான்னு இழுத்துட்டு  வாங்க சர். எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன்” என்றான். 

குற்றவாளிகளிடத்தில் எந்த நீதி நேர்மையும் பார்க்க மாட்டான். செய்ய வேண்டியதை செய்வதற்கு எந்த அளவுக்கும் செல்வான்.          

காவலர்களுக்கே  எங்கே செல்கிறோம், என்ன விஷயமாக செல்கிறோம், என்று தெரியவில்லை. அந்த ஏரியாவிற்கு சென்ற பிறகு தான் இந்த ஆள் என்று அடையாளம் காட்டப்பட்டு, யாரும் தப்பிக்க முடியாமல் அடுத்தவருக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் ஒரே சமயத்தில் வெவ்வேறு ஆட்களால் கைது செய்யப்பட்டனர்.

யாருக்கும் தப்பிக்க அவகாசம் இல்லை, இவ்வளவு சீக்கிரம் கைது படலம் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

சுப்பிரமணி எந்த விவரமும் தெரிவிக்கும் முன் அவனை போட்டு தள்ளிவிட இவர்கள் நினைக்க, அதற்கு முன் ரமணன் விரைந்து செயல்பட்டு ஒருவருக்கொருவர் தகவல் தெரிவிக்க கூட முடியாதபடி அனைவரையும் ஒரே நேரத்தில் அர்றஸ்ட் செய்தான்.  

அவர்களை கமிஷனர் ஆபீஸ் கொண்டு வராமல் நேரே மேஜெஸ்ட்றேட் வீட்டிற்கு அந்த இரவு நேரத்திலேயே அழைத்து சென்று அவர்களை ரிமாண்ட் செய்தான்.

அவன் ரீமான்ட் செய்வதற்கு விவரம் தெரிவிக்கும் போது தான் மற்றவர்களுக்கே விவரம் தெரிய வந்தது. வந்த முதல் நாளே எத்தனை பெரிய வேலை செய்திருக்கிறான். ஆனால் அதற்கான ஒரு சந்தோஷம், ஒரு கர்வம், எதையோ சாதித்துவிட்ட உணர்வு, எதுவும் அவனிடத்தில் இல்லை. 

ஜெயிலுக்கு கொண்டு செல்லுமுன் பத்திரிக்கையாளர்களையும் அழைத்து, இவர்களால் தான் கலவரம் ஜெயிலில்…………… காரணம் டிரக் டிராஃபிகிங் என்றவன் மற்ற விவரங்கள் மெதுவாக தெரிவிக்கப்படும் என்று கூறி………..

இது டீம் வார்க் என்று கூறி………… அந்த டீம் ஹெட் நால்வரையும் முன்னிறுத்தி  அவர்கள் டீம் பத்திரிக்கையில் வருமாறு பார்த்துக்கொண்டவன்,

“என்னை பற்றி அதிகம் தெரிவிக்க வேண்டாம், சிறிது நாட்கள் நான் சென்னைக்குள் சுதந்திரமாக என்னுடைய அடையாளம் தெரியாமல் உலாவ வேண்டும். அப்போது தான் என்னால்  ஈஸியாக குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்”, என்றான். 

அங்கே இருந்த அனைவருக்குமே தெரிந்தது, இது அவன் ஒருவனுடைய வேலை. ஆனால் அவன் அதை மற்ற எல்லோருக்கும் பரிசளித்து, “இதற்கு மேல் உங்கள் வேலை பார்த்து கொள்ளுங்கள்”, என்று அவர்களை பணித்து வீட்டிற்கு கிளம்பினான்.

அங்கே இருந்த காவலர்கள் அனைவருக்குமே அவன் ஹீரோ ஆகிவிட்டான் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் காவல் துறை மட்டுமல்ல, எந்த துறையிலும் அடுத்தவர் வெற்றியை கூட தனதாக்கி காட்டும் உலகில், அல்லது அடுத்தவர் சாதிக்கும் போது அது தன்னால் தான் என்று சொல்லும் உலகில், அவனுடைய வெற்றியை அடுத்தவருடையது என்று அடையாளம் காட்டி சென்றான்.

எய்தவன் அவன், அவர்கள் வெறும் அம்பு தான். ஆனால் வெற்றியை அவர்களுடையதாக்கி சென்றான். இத்தனை வேலைகளையும் செய்து முடிக்கும் பொழுது மணி அதிகாலை மூன்று என்று காட்டியது.

வீட்டிற்கு வந்த போது அவனையறியாமல் சோர்வும் தூக்கமும் அவனை ஆட்கொள்ள, ரூமிற்குள் சென்று பார்த்தால் வரா நல்ல தூக்கத்தில் இருந்தாள். சிறிது நேரம் நின்று அவள் உறங்கும் அழகை கண்களில் நிரப்பிக்கொண்டான். பசித்தாலுமே சாப்பிட ஏதாவது தேடினால் வரா எழுந்து கொள்வாள் என்றுணர்ந்து………….

அவள் பக்கத்தில் படுத்துறங்குவதை மிஸ் செய்ய விரும்பாதவனாக  சத்தம் செய்யாமல் வராவின் பக்கத்தில் படுத்து…………… முயன்று தைரியத்தை வரவழைத்து, கடவுளை கண்மூடி ஒரு நிமிடம் வணங்கி,

திருமணமாகி இத்தனை வருடங்களில் அவள் உறக்கம் கலைந்து விடாமல் மென்மையாக………… ஏன் முதன்முறையாக அவளை அணைத்தபடியே உறங்க ஆரம்பித்தான்.     

அத்தியாயம் பதினெட்டு

அன்றைய நினைவுகள்

ராம் பிரசாத் கல்பனாவின் திருமணம் முடிந்த ஒரு திருப்தியான மனநிலையை யாராலும் அனுபவிக்க முடியவில்லை.

காய்ச்சல் வராவை படுத்தி எடுத்து விட்டது. சென்னையில் ரிசெப்சன் வேறு இருக்க…………….. வராவின் அம்மா செய்வதறியாது திகைக்க…………….. அவளுடைய அப்பாவிற்க்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை. ரிசெப்சன் பெரிய அளவில் ஏற்பாடு செய்திருந்தார். கட்சி தலைவர் பெயர் போட்டு அவரின் தலைமை  என்று ஏற்பாடு செய்திருந்தார்.

 சுந்தரவல்லி “நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் ஊருக்கு சென்று நிகழ்ச்சியை முடித்து வாருங்கள்”, என்று தைரியப்படுத்தி அனுப்பினாலும் அரை மனதாகவே கிளம்பி சென்றனர். புதிதாக மணமான ராமிடம் திருமண உற்சாகம் சற்று குறைவாகவே காணப்பட்டது வராவினாள்.

அவள் அப்படி காய்ச்சலில் இருக்கும் பொழுது அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. வாரவே கட்டாயப்படுத்தி அவளுடைய அண்ணனை அனுப்பி வைக்கும் படி ஆயிற்று.

இத்தனையிலும் அவளுடைய திடீர் காய்ச்சலின் காரணம் யாருக்கும் தெரியவில்லை என்பதை விட அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை, ஆராய முற்படவில்லை.

வராவும் வாயை திறக்கவில்லை, தன்னுடைய நிலையை நினைத்து அவளுக்கே சோர்வாக இருக்க, அம்மா, அண்ணன், அப்பா, என்று அனைவரும் சென்னை அவளை விட்டு செல்ல……….

 மனமில்லாவிட்டாலும் கட்டாயத்தால் விட்டு செல்ல……….. சுந்தரவல்லி அவளை நன்றாக பார்த்து கொண்டார். இருந்தாலும் வராவிற்கு நினைத்த நேரம் அழுகை வந்து அவளுடைய அம்மாவை மனம் தேடியது.

இதெல்லாம் ரமணநிர்க்கு எதுவும் தெரியவில்லை, ஹைதராபாத் சென்றவுடன் சுந்தரவல்லியிடம், “வந்து சேர்ந்துவிட்டேன்”, என்று கூறியவன் இரண்டு நாட்களாக அழைக்கவில்லை,

அம்மா அழைத்தாலும் எடுக்கவில்லை, எடுத்தாலும்………. “பிறகு அழைக்கிறேன்”, என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்து வைத்துவிட்டான்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவனாகவே அவனது அம்மாவை அழைக்க, “நான் ஹாஸ்பிடலில் இருக்கிறேன்”, என்று அவன் அம்மா சொன்ன பிறகே, “என்ன?”, என்று கேட்க அவனுக்கு விவரம் தெரிய வந்தது.

அவள் வேண்டுமென்றே பேசியிருந்தால் கூட தான் இந்த மாதிரி பேசியிருக்க வேண்டாமோ என்று சற்று குற்றவுனர்ச்சியாக உணர்ந்தான்.

அவன் அம்மாவிடம் அதன் பிறகு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை அழைத்து, “என்ன? எப்படி இருக்கிறாள்?”, என்று கேட்டவனுக்கு அவளுக்கு அழைக்க மனம் வரவில்லை. அவன் அம்மா, “பேசுகிறாயா?”, என்றபோது கூட ஏதாவது பேசி பேச்சை மாற்றி விடுவான்.

வராவும் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள், அவன் அம்மாவிடம் ரமணன் அடிக்கடி பேசியதையும், அவளை பற்றி தெரிந்து கொள்வதையும். ஆனால் தன்னிடம் அவன் பேச முயற்சி செய்யாததை அவள் உணர்ந்தே இருந்தாள்.

ரமணன் மேல் மிகுந்த கோபம் வந்தது. “என்ன பேசினேன் என்றே எனக்கு தெரியவில்லை. என்னை சாரி கேட்கவும் இவன் விடவில்லை. இவன் என்ன பெரிய இவனா?”, என்று மனதிற்குள் அவனை திட்டியவாரே இருந்ததினால் அவள் நினைவுகளில் பெரும்பான்மை நேரம் அவனுடனே இருந்தது. 

இன்று டிஸ்சார்ஜ், நாளை அவள் சென்னை செல்கிறாள் என்று தெரிந்தவுடன், அவளுக்கு ஒரு பொக்கே வந்தது, “don’t get your health spoiled for anything, Keep mind activities not to affect body”.  ரமணன் என்று கீழே எழுதியிருக்க, அதன் கீழே அவனுடைய போன் நம்பர் இருந்தது.

“என்னுடன் பேசவேண்டுமென்றால் நீ அழைத்து பேசு”, என்ற நினைவுடன் அவன் அனுப்பியிருக்க……….. “வேண்டுமென்றால் நீ பேசு”, என்று அவளும் அழைக்க வில்லை.

ஆனால் நிறைய முறை அந்த நம்பரை போனில் லோட் செய்து டையல் செய்ய போகும் போது வேண்டாம் என்று விட்டுவிடுவாள். அதனால் அந்த நம்பர் அவள் நினைவில் நன்றாக நின்று விட்டது.

இயல்பு வாழ்க்கை திரும்பியது. இத்தனை பிரச்சனைக்கும் காரணமான டான்ஸ் கிளாசின் புறம் அவள் மறுபடியும் திரும்பி கூட பார்க்கவில்லை. அதன் பிறகு. வராமகாலக்ஷ்மி  அவனுடைய பேச்சுகளை நாளடைவில் மறந்தும் கூட விட்டாள். அவள் இயல்பு நடந்தவைகளை மறந்து போவது. அதை அவள் செய்து விட்டாள்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தற்போது அவளுடைய தந்தை எம் பி மட்டுமே. அவருடைய கட்சி ஆட்சியில் இல்லாததால் அவர் அமைச்சர் பதவியில் இல்லை. 

ரமணன் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கும் இயல்புடையவன் அல்லன். தனியாக இருக்கும் சமயங்களில் அவளுடைய பேச்சுக்கள் அவன் காதில் ஒலிப்பது போல் தோன்றும். அதனால் அது தெரியாமல் இருக்க அவனுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகளில் கடுமையாக ஈடூபட்டான்.

அவளை மறக்க நினைத்து……….. அவனை அறியாமல் அவளையே நினைத்து நினைத்து……….. அவள் மேல் உள்ள கோபத்தை அவனையறியாமல் வளர்த்து கொண்டான்.

கோபம் வளர அவள் நினைவும் வளர்ந்தது.

நாட்கள் மாதங்களாக……….. வருடம் முடிந்து………….. மறுபடியும் வருடம் நெருங்கிய போது…………… மறுபடியும் வரா விழுந்தால், இந்த முறை காய்ச்சலில் அல்ல காதலில்.

ஸ்ரீதர்…………… வராவின் காலேஜ் ஃப்ரன்ட் பத்மாவின் அண்ணன். அவர்களுடையது தமிழகமெங்கும் கிளைகள் உள்ள நகைக்கடை, துணிக்கடை மற்றும் சில தொழில்களும் உண்டு.  

மிகவும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள், பரம்பரை பணக்காரர்கள், தங்கள் குல பெருமையை வாய் ஓயாமல் பேசும் வழக்கம் உடையவர்கள்.

சற்று பெரிய குடும்பமும் கூட………… அண்ணா, தம்பி, அக்கா, தங்கை, எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்றாக பெண் எடுத்து கொடுத்து பக்கம் பக்கமாக வசித்து வருபவர்கள். இதுநாள் வரை அவர்கள் அன்னியதில் பெண் எடுத்ததோ, கொடுத்ததோ, கிடையாது.   .

பத்மாவின் நகைக்கடைக்கு ஒரு முறை வரமஹாலக்ஷ்மி தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக என்று அவருக்கு தெரியாமல் பத்மாவுடன் அவர்களுடைய ஜ்வல்லரி ஷோ ரூமிற்கு சென்ற போது தான் அவர்களுக்குள் முதல் அறிமுகம்.

யாரோடும் சீக்கிரமாக பழகிவிடும் தன்மை கொண்டவன் ஸ்ரீதர். மிக சிலருக்கு மட்டுமே இருக்க கூடிய குணம் அது. எந்த அர்த்தமுமில்லாமல் இல்லாமல் பேசியே எதிராளியை வசியபடுத்தி விடுவான். அவனுக்கு பார்த்த முதல் பார்வையில்லேயே வரா அவனை வசீகரித்து விட்டாள்.

“அண்ணா என்னோட ஃபிரன்ட் சிவசங்கரன் எம் பி யோட பொண்ணு, நகை செலக்ட் பண்ண வந்திருக்கா, எங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்”, என்றபடி ஸ்ரீதரை பத்மா அழைக்க………… அவன் கேபின் விட்டு எழுந்து வந்தவன் வரமஹாலக்ஷ்மியை பார்த்து முதல் பார்வையில்லேயே தடுமாறினான்.

பார்க்க பார்க்க அவனால் கண்களை அகற்ற முடியவில்லை. எத்தனை அழகான பெண்களை பார்த்திருக்கிறான், ஆனால் யாரும் வராவைபோல் அவனை வசீகரித்தது இல்லை. வரமஹாலக்ஷ்மி அழகான பெண். பார்க்க கண்களுக்கு குளிர்ச்சியாக ரசிக்கும்படியாக ஒரு புன்னகை முகத்தோடு இருப்பாள்.

   சொல்லப்போனால் அவன் பணக்காரன், பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவன், திருமனமாகாதவன், பார்க்கவும் அழகன், அவனை பார்க்கும் பொழுது நிறைய பெண்களின் கண்களில் ஆர்வம் தொனிக்கும். அதனால் அவன் மேல் ஏறி விழுந்து பழகும் பெண்கள் அதிகம்.

அவனும் அப்படி ஒன்றும் ஒதுங்கியிருக்க மாட்டான். இவர்களால் தனக்கு பெரிதாக பிரச்சினை வராது என்று தெரியும் பெண்களுடன் தாராளமாகவே பழகுவான். தினம் ஒரு பெண்ணுடன் சுற்றுவது அவன் வட்ட ஆட்கள், நண்பர்களிடையே அது ஒரு ப்ரஸ்டீஜியஸ் மேட்டர்.

வாழும் வாழ்க்கையை அதிக கோட்பாடுகள் வைத்து கொள்ளாமல் அதன் போக்கில் அனுபவிப்பவன். வராவை பார்த்த அவன், முதல் பார்வையில்லேயே கவிழ………… அதன் அடையாளங்கள் சிறிதும் இல்லாமல் வரா அவனை பார்த்து, “ஹலோ”, என்றாள்.

“ஹலோ மிஸ்……………”, என்று கையை நீட்டியபடியே  அவன் வராவின் பேரை தெரிந்து கொள்வதற்காக இழுக்க……….

மென்மையாக ஒரு புன்னகையை சிந்தி, “வரமஹாலக்ஷ்மி”, என்றபடி அவன் கையை பற்றி குலுக்கினாள். ஸ்ரீதருக்கு கையை விடவே மனசில்லை. விண்ணில் பறந்தான்.

ஸ்ரீதர் தன்னுடைய பேரை சொல்வதற்காக வாயை திறக்கும் முன்னரே, “டிசைன்ஸ் பார்க்கலாமா”, என்றபடி வேலையில் இறங்கினாள், அவனை பார்த்தவுடன் நிறைய பெண்களின் கண்களில் தோன்றும் ஆர்வம் அவளிடத்தில் சிறிதும் இல்லை.

மிகவும் சாதாரணமான பார்வையே அவனை பார்த்து வைத்தாள். எந்த பாவமும் அவள் கண்களில் தென்படவில்லை. 

“எதை பார்க்கறீங்க”, என்று அவன் கேட்டதற்கு……….. “எல்லாமே”, என்றாள்,

அவன் புரியாமல் பார்க்க……….. “செட்டா ஆரம், நெக்லஸ், வளையல், தோடு, எல்லாமே”, என்றாள்.

அவள் சொல்லிகொண்டிருக்கும் போதே அவள் தொலைபேசி அழைக்க ராம் அழைத்து கொண்டிருந்தான்……….

“அண்ணா உள்ளே தான் இருக்கேன், வாங்க”, என்றவள் பத்மாவிடம் திரும்பி, “அண்ணாவும் அண்ணியும் வராங்க”, என்றாள்,

உள்ளே கல்பனாவுடன் ராம் நுழைய அவர்கள் கைகளில் ஒரு வயது நிரம்பிய ரோஹித் பிரசாத் இருந்தான். அருகில் வந்ததும் அவன் அத்தையை பார்த்தவுடனே அவள்  கைகளுக்கு தாவ அவனை வாங்கி அணைத்து உச்சி முகர்ந்த வராவை கண்களில் முழுவதுமாக நிரப்பிக்கொண்டான் ஸ்ரீதர்.

பார்த்தவுடனே கடைக்கு வரும் கஸ்டமர்களை தன்னுடைய வசீகரமான பேச்சால் கவர்ந்து விடும் ஸ்ரீதருக்கு அன்று வார்த்தையே வரவில்லை. பத்மா………. “அண்ணா பார்க்கலாமா?”, என்றபடி மறுபடியும் அழைத்தபிறகே நிகழ்வுக்கு வந்தவன்,

“ஹாய் ஐ அம் ஸ்ரீதர்”, என்று கைகுலுக்க, “நான் ராம் பிரசாத். இவ என் மனைவி கல்பனா”, என்று அறிமுகப்படுத்தி நகை செலெக்ட் செய்வதில் மும்முரமாக………….. ஸ்ரீதர் வரா கவனிக்காத போது அவளை கவனித்தவன், தன்னை அவள் கவனிக்கிறாளா என்று பார்க்க “ம்கூம்”, அவள் திரும்ப கூட இல்லை.

 கல்பனா தான் ஸ்ரீதரிடம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்க………… ராம் கூட இரண்டொரு வார்த்தை பேசினான். ஆனால் வரா வாயைத் திறக்கவேயில்லை. அவள் அண்ணி செலெக்ட் செய்யும் டிசைன்கள் அத்தனையையும் கண்களாலேயே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தாள்.

“வரா! நீயும் எடுக்க மாட்டேங்கற, நான் செலெக்ட் பண்றதும் ரிஜெக்ட் பண்ணற!”, என்று கல்பனா சலிப்பாக பேச………….

“ஏதோ எங்க அண்ணனை செலெக்ட் பண்ணியிருகீங்கலே நல்ல டேஸ்ட் இருக்கும்னு நினைச்சா, சுத்த வேஸ்ட் அண்ணி நீங்க”, என்று கல்பனாவுக்கு மட்டும் கேட்கும்படியாக முனுமுனுத்தவள், குழந்தையை ராமின் கையில் கொடுத்து, ஒன்றை தேர்வு செய்ய……….. அது அழகாக புது விதமாக இருந்தது.

ராம் கல்பனாவை பார்க்க அவள் அவனை முறைத்த முறைப்பிலேயே வரா கல்பனாவை ஏதோ சொல்லியிருக்கிறாள் என்றுணர்ந்த ராம், இந்த வரா எப்பொழுது தான் வாயை அடக்குவாளோ, இன்று தனக்கு சரியான மண்டகப்படி என்று நினைத்தவன், யாரையும் எதுவும் கேட்க்காமல் பரிதாபமாக நிற்க……………

“அண்ணி! பார்த்துட்டு பில் பண்ண சொல்லுங்க”, என்று கல்பனாவிடம் கூறிவிட்டு பத்மாவிடம் பேசதுவங்க, “ஒரே அதிகாரம் தான்!”, என்று வாய்க்குள்ளேயே பேசிய கல்பனா, “பில் பண்ணுங்க”, என்று ஸ்ரீதரிடம் கூற……….

அவன் வேறொருவரை அழைத்து பில் பண்ண சொன்னவன், எப்படி வராவிடம் பேசுவது என்ற யோசனையில்லேயே இருக்க…….. அவர்கள் நிமிடத்தில் பில் செட்டில்  செய்து கிளம்பிவிட்டனர்.

மரியாதை நிமித்தம் கல்பனாவும் ராமும் ஸ்ரீதரிடம் சொல்லி கொண்டு கிளம்ப………….. வராவின் பார்வைக்காக ஸ்ரீதர் அவளையே ஆவலோடு பார்த்திருக்க……………….  வரா அவனை பேச்சு மும்முமுரத்தில் திரும்பி கூட பார்க்கவில்லை பத்மாவிடம் பேசியபடியே கிளம்பி சென்று விட்டாள்.

அவளுடைய அந்த செய்கை எப்படியாவது அவளை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்ரீதரின் மனதில் தோன்ற செய்தது.

ஆனால் அது எவ்வளவு கடினம் என்பதை ஸ்ரீதர் உணரவில்லை. தினமும் தனது தங்கையை அவனே காலேஜிற்கு ட்ராப் செய்தான். வராவின் கார் வரும்வரை நின்றிருப்பான்.

கார் வந்தவுடன் அவளை அது இறக்கிவிடும் வரை அங்கே இருந்து அவளை பார்த்த பிறகே செல்வான். ஆனால் அவளோட பேச முயற்சி செய்ய மாட்டான். மீண்டும் மாலையும் இந்த காட்சி நடக்கும்.

ஆனால் வரா எப்பொழுதும் சுற்று புறத்தை உணர்ந்தாளில்லை. முன்பு ரமணன் அவளை கண்டித்ததும் அதற்கே. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அவள் கவனிப்பதில்லை என்பது தான்.

இப்பொழுதும் அதே தவறை மீண்டும் வரா செய்தாள். கிட்டதட்ட பத்து நாட்களாக இது நடக்க…………… இது எதையும் அவள் அறியவில்லை. தனக்காக ஒருவன் தினமும் வந்து நிற்கிறான் என்று அறியவில்லை.

அவள் அறியதாதினால் உலகம் அறியாமல் போகுமா என்ன?. சக தோழியர் இதனை பார்த்து அவன் வராவுக்காக தான் வந்து நிற்கின்றான் என்றுணர்ந்து………………,

யார்? எவறேன்ட்ரே தெரியாத போதும், மிகவும் சாதாரணமாக கல்லூரியில் காலம் காலமாக சொல்லப்படும் வார்த்தையான……….. “உன் ஆளு நிக்கராண்டி”, என்று வராவின் கவனத்தை ஸ்ரீதரன் பால் திருப்பினர்.           

“என் ஆளா எவன் அவன்” என்று எண்ணியவாறே திரும்பிய  வரா…………. அன்று தான் ஸ்ரீதர் அங்கே நிற்பதையே பார்த்தாள். பார்த்தவளுக்கு அவனை சட்டென்று அடையாளம் தெரியவில்லை,

யார் இவன் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே………… என்று எண்ணியவாறே திரும்பி திரும்பி பார்த்தவாறே காரில் ஏறினாள்.

முதன் முறையாக இந்த பத்து நாட்களில் வரா அவனை திரும்பி பார்த்த சந்தோஷத்தில் ஸ்ரீதர் அவளை பார்த்து புன்னகைத்தவன், “ஹாய்”, என்றபடி அவளை நோக்கி கையசைத்தான்.

“யாருடா இவன் நமக்கு தெரிந்தவனா, நம்மை பார்த்து இப்படி கையசைக்கிறான்”, என்ற குழப்பத்தில் வரா காரில் ஏற தாமதப்படுத்த, அதற்குள் அவளை நெருங்கிய ஸ்ரீதர் மறுபடியும் ஒரு ஹாய் சொன்னவன்,

“ஹப்பாடா! ஒரு வழியா என்னை திரும்பி பார்த்துடீங்க!”, என்று கூறி ஒரு வசீகரமான புன்னகையை அவளை நோக்கி புரிந்தான்.

அப்பொழுதும் யார் இவன் என்ற கேள்வியை கண்களில் தாங்கியபடி குழப்பத்தோடு வரா பார்த்திருக்க…………., அவளுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்றுணர்ந்த ஸ்ரீதர் கண்களில் தவிப்போடு, “என்னை உங்களுக்கு தெரியலையா”, என்றான்.

“இல்லை”, என்பது போல் வரா தலையசைக்க, “நான் பத்மாவோட அண்ணன், நீங்க அன்னைக்கு எங்க ஷோ ரூம்க்கு வந்தீங்களே”, என்று அவளுக்கு நினைவுபடுத்த, இப்பொழுது ஞாபகம் வந்தவளாக வரமஹாலக்ஷ்மி அவனை பார்த்து, “ஒஹ் சாரி மறந்துட்டேன்! ஹாய்!”, என்றாள்.

“என்னங்க இப்படி சொல்லிடீங்க! பத்து நாளா நான் வரமஹாலக்ஷ்மி தாசன் ஆகி உங்க நினைவாகவே உங்க பின்னாடியே சுற்றி உங்க கடைக்கண் பார்வைக்காக ஏங்கிட்டு இருக்கேன். இப்படி என்னை தெரியலைன்னு சொல்லிடீங்களே!”, என்று பாவனையோடு சொல்ல வராவிற்கு சிரிப்பு வந்தது.

“ஏன் இப்படி உளர்றீங்க?”, என்று சிரிப்போடு கேட்க………

“நோ ஐ  அம் சீரியஸ்! ஐ அம் இன் லவ் வித் யூ!”, என்றான்.

ஒரு கனம் அதிர்ந்த வரா, “பட் ஐ அம் நாட்”, என்று சொல்லி காரில் ஏற……

“ஸோ வாட்? நான் உங்களை லவ் பண்றேன், பண்ணுவேன், பண்ணிட்டே இருப்பேன்!. நீங்க பண்ணினாலும் பண்ணலைன்னாலும் அது என்னை பாதிக்காது, ஐ லவ் யூ!”, என்றான்.

கேட்ட வரா பதில் பேசாமல், “லூசாடா நீ”, என்று ஒரு பார்வை பார்த்தபடியே கிளம்பி சென்றாள்.

ஆனால் இதற்கெல்லாம் ஸ்ரீதர் அசரவில்லை தினமும் நாள் தவறாமல் காலையும் மாலையும் வந்துவிடுவான். அவளை தொந்தரவு செய்யாமல் அவளை பார்த்தபடியே நிற்பான்.

கிட்டதட்ட ஆறுமாதம் இது தொடர, வராவிற்கு டென்ஷன் ஏறியது. முதலில் அலட்சியப்படுத்தினாலும் யாரோ ஒருவன் தனக்காக தினமும் வந்து நிற்பது அவளை சற்று ரெஸ்ட்லெஸ் ஆக்கியது.

பத்மாவிடம் கூட கூறினாள், இது சரியல்ல என்று. பத்மாவும் அவள் அண்ணனிடம் கூற………… “அண்ணா, அவளுக்கு தான் பிடிக்கலேயே விட்டுடேன்! நம்ம வீட்டுக்கு தெரிந்தாலும் பிரச்சினை ஆகிடும் அண்ணா!”, என்று சொல்ல………….

உன் வேலையை பார்! எனக்கு அவளை பிடிச்சிருக்கு! எனக்கு அவதான்!”, என்றான் தீர்மானமாக,

அதை அப்படியே பத்மா வரமஹாலக்ஷ்மியிடம் சொல்ல, வராவே அன்று மாலை நேரடியாக ஸ்ரீதரிடம் பேசினாள், “ப்ளீஸ் என்னை தொந்தரவு பண்ணாதீங்க! எனக்கு ரொம்ப டிஸ்டர்பன்சா இருக்கு!”, என்றாள்.

“நான் உங்களை ஒண்ணும் டிஸ்டர்ப் பண்ணலையே! என்ன பண்ணினேன்?”, என்றான் பதிலுக்கு.

“நீங்க தினமும் நின்னு என்னை பார்க்கறீங்க! எனக்கு அது பிடிக்கலை! நான் அப்பாகிட்ட இல்லை அண்ணா கிட்ட சொன்ன உங்களுக்கு தான் பிரச்சினை”, என்றாள்.

“என்ன பிரச்சினை வந்தாலும் உனக்காக ஃபேஸ் பண்ணுவேன்.. பார்க்கறதே உனக்கு தொந்தரவா இருக்குன்னா……. இந்த ஆறு மாசமா உன்னை பார்த்ததுல இருந்து, எனக்கு உன்னை தவிர வேறு ஞாபகமில்லை”.

“என்னை என்ன பண்ண சொல்ற! ஐ கான்ட் டூ எனி வொர்க் அதர் தன் திங்கிங் ஆஃப் யூ,………….. என்னை நீ கொஞ்சம் கொஞ்சமா பையித்தியமாக்கிட்டு இருக்க. ஐ லவ் யூ”, என்றான் மறுபடியும்.

அவன் குரலில் இருந்த தீவிரம் அவன் சொல்வது அத்தனையும் உண்மை என்று சொல்லியது.

“உனக்கு தெரியாது வரமஹாலக்ஷ்மி எனக்கு நிறைய கேர்ள் பிரிண்ட்ஸ் இருந்தாங்க, ஆனா உன்னை பார்த்த நாள்ல இருந்து நான் யாரையும் பார்க்கலை பேசலை. எனக்கு உன்னை தவிர யாரையும் பார்க்க பிடிக்கலை! ஐ லவ் யூ!”, என்றான் மறுபடியும்.

“நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க, அழகான பொண்ணை பார்த்தா இந்த மாதிரி பேசதோன்றது சகஜம் தான். தூரமா இருந்து பார்த்தா எல்லாமே கண்களுக்கு அழகா தான் தெரியும். அப்படி இத்தனை மாசமா நான் உங்களை பார்க்கறதுக்காக இல்லை நீங்க என்னை பார்க்கரதுக்காக வந்து நிற்கறது சுத்த பையிதியக்கரதனம்!”, என்றாள்.

“அது தானே நானும் சொல்றேன்! நீ என்னை பையித்தியமாக்குறே”, என்று…

“ப்ச்……”, இவனுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று எண்ணியவளாக ஒன்றும் பேசாமல் வரா கிளம்பி செல்ல……………

ஸ்ரீதர் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.

இதை பார்த்திருந்த பத்மா, “அண்ணா இது சரி வராது! நம்ம வீட்டு ஆளுங்க பத்தி உனக்கு தெரியாதா. முதல்ல வரா உன்னை லவ் பண்ணுவான்னு தோணலை! அவ லவ் பண்ணினாலும் இதை நம்ம வீட்டு ஆளுங்க நடக்க விடமாட்டாங்க. உனக்கும் நம்ம அத்தையோட பொண்ணு சித்ராவுக்கும் தான் கல்யாணம் பண்றதுன்னு பேசிட்டு இருக்காங்க. இதை விட்டுடுங்௧”, என்றாள்.

அவளை திரும்பி பார்த்தவன் பதில் பேசாமல் அவளை அழைத்துகொண்டு வீட்டிற்கு சென்றான்.

இதற்கிடையில் வெங்கட ரமணன் அவனுடைய ட்ரைனிங்கை முடித்தான். எழுத்து தேர்வு, உடற்தேர்வு, பயிற்சியில் என்று அனைத்தையும் முதலிடத்தில் முடித்து சர்தார் வல்லபாய் பட்டேல் விருது வாங்கினான்.

ட்ரைனிங் காலத்தில் கொடுக்கப்படும் மிக உயர் விருது. ட்ரைனிங் செல்லும் அனைவரின் கனவு. அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே வாங்கினான்.  

அவனுக்கு தமிழகத்திலேயே போஸ்டிங் கிடைத்திருக்கும். ஆனால் அவனாகவே வேறு மாநிலம் விருப்பப்பட அவனுடைய போஸ்டிங் புனேவில் கிடைத்தது.

பணியில் சேரும்முன் தமிழகம் வர, ராமநாதன் அவனிடம் அவன்  திருமணம் செய்து கொள்வதை பற்றி பேச…………. “இப்பொழுது வேண்டாம் பா”, என்று தீவிரமாக மறுத்தான்.

“சரி இப்போ வேண்டாம்! ஆனா நிச்சயம் பண்ணிடலாமா!”, என்றார். அப்பொழுதான் தன் தந்தை யாரையோ மனதில் வைத்து பேசுகிறார் என்றுணர்ந்த ரமணன், “பொண்ணே பார்க்காம நிச்சயம் பண்ணுவீங்கலாப்பா”, என்று கேட்க…………..

“பொண்ணா எதுக்கு பார்க்கணும். நம்ம மகாலக்ஷ்மி இல்லை!”, என்று கூற இதை ரமணன் எதிர்பார்க்கவில்லை………..

மனதில் மகிழ்ச்சி எட்டி பார்க்க துவங்கினாலும்…………., அறிவு………….. “டேய் அவளுக்கு உன்னை பிடிக்கலை. உன் தோற்றம் பிடிக்கலை. விட்டுடு!”, என்று சொல்ல……….. அன்றைய அவனை அழவைக்கும் வரை கொண்டு சென்ற நினைவுகள் நினைவில் வர………………

“வராவா? அது சரி வராதுப்பா!”, என்றான்.

“ஏம்பா?”, என்று அவர் கனிவாக கேட்க…………. “வேண்டாம்பா! எனக்கு அவளை சின்ன வயசுல இருந்தே தெரியும்! எனக்கும் அவளுக்கும் சரி வராது”.

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், வேற பொண்ணு பாருங்க!”, என்றான் முடிவாக, சுந்தரவல்லியும் அவனிடத்தில் எவ்வளோவோ எடுத்து கூறியும் அவன் ஒத்துக் கொள்ளவில்லை.

வரா படிப்பை முடிக்கபோகும் சமயம் அது. சிவசங்கரனும் வெங்கட ரமணனை மனதில் வைத்திருந்ததால் தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்காமல் இருந்தார்.

ஆனால் ரமணன் முடிவை அவனின் தந்தை மூலமாக அறிந்தவர் ஏமாற்றமாகவே உணர்ந்தார். பின்பு தீவிரமாக வரமஹாலக்ஷ்மிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.  

வேலையில் சேருவதற்கு முன் சிவசங்கரனிடம் சொல்லிவிட்டு செல்வது தான் மரியாதை என்று ராமநாதனும் சுந்தரவள்ளியும் சொல்லிவிட………… வேறு வழியில்லாமல் சென்னை, வரமஹாலக்ஷ்மியின் வீட்டிற்கு வந்தான்.

அவனுக்கு சங்கடமாக இருந்தது தான் வேறு வராவை நிராகரித்து விட்டோம் இப்பொழுது அவர்களை எப்படி எதிர் கொள்வது என…………..

ஆனால் அவனுடைய சங்கடத்திற்கு அவசியமே இல்லாது போனது. அந்த விஷயம் சிவசங்கரனுக்கு தவிர மற்ற யாருக்கும் தெரியததால் எல்லாரும் சகஜமகாவே பழகினர்.

ராமிற்க்கும் கல்பனாவிர்க்கும் மிகுந்த சந்தோஷம். வரா அவன் பேசுவானா என்று பார்த்தபடியே நிற்பது புரிந்தது.

வெண்மை நிறத்தில் டாப்ஸ் அணிந்து ப்ளூ ஜீன்ஸ் ஸ்கர்டில் பார்பதற்க்கு தேவதை போல் இருந்தாள். ராஜேஸ்வரி அவன் வந்ததினால் தடபுடலாக விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்

“இவளை வேண்டாம் என்று சொல்லி தப்பு செய்து விட்டோமோ”, என்று ரமணன் மனதில் எண்ணம் உதிக்க…………. அவள் பேசிய வார்த்தைகள் ஞாபகத்தில் வந்து, “நீ சொன்னது தான் சரி”, என்று அவனுக்கு கூறியது.

எல்லோரும் அவரவர்  வேலையாக சற்று நகர…………. இவனும் வராவுமே இருந்தனர். அவன் பேசுவானா? பேசுவானா? என்று அவன் முகத்தையே வரா பார்த்துக் கொண்டிருப்பது புரிய, அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,

“என் போன் நம்பர் சொல்லு”, என்றான்.

எதற்கென்று புரியாவிட்டாலும் சொன்னாள்.

“என் நம்பர் தெரியும்! ஆனாலும் நீ என்னை கூப்பிடலை!”, என்றான்.

“ஏன் நீங்க கூப்பிட மாடீங்களா?”, என்று வாய் வரை வந்த வார்த்தை எப்பொழுதும் போல் வார்த்தையாக வெளி வரவில்லை. அவனையே பார்த்துக்கொண்டு நிற்க………… அதற்குள் எல்லாரும் வர சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

சென்றவன்…………. தன்னுடைய டிக்கெட்டை டைம் பார்பதற்காக எடுத்ததை டேபிள் மேல் வைத்தது ஞாபகம் வர, திரும்ப வந்தால்………….., எல்லாரும் வெளியே நிற்க வரா உள்ளே நிற்பது தெரிந்தது.

டிக்கெட்டை எடுத்து கொண்டு திரும்பியவன்…………… என்ன நினைத்தானோ அவள் அருகில் வந்து, “எதுன்னாலும், எந்த டைம் நாளும் என்னை கூப்பிடு! தயங்காதே!”, என்று கூறி சென்றான்.

ஏன் அந்த வார்த்தைகளை கூறினான்? என்ன எதிர் பார்த்துக்கூறினான்? என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் கூறி சென்றான்.

வேண்டாம் என்று சொன்னாலும் வராவின் நினைவுகள் அவனை துரத்திய வண்ணம் இருந்தன. ஒரு முறை அவள் தன்னை போனில் அழைத்து விட்டாலும் உடனே திருமணத்திற்கு சரியென்று விடலாம் என்று நினைக்கும் அளவிற்கு ரமணன் மாறிப்போனான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல…………. ஸ்ரீதர் கல்லூரி வாசலில் தினம் தவறாமல் அவளை பார்பதற்காக வந்து நிற்பது மட்டும் நிற்கவேயில்லை.

ஸ்ரீதரை பற்றி நினைக்கவேண்டாம் என்று நினைத்தாலும்………… சமீப காலமாக வரா கல்லூரிக்குள் நுழையும் போதும், வெளியே வரும் போதும்  அவளையறியாமல் ஸ்ரீதர் நிற்கிறானா என்று பார்வை தேடியது.

வீட்டில் அவள் அப்பா ஒரு நாள் ராம் பிரசாத்தோடு பேசிகொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது.

“ராம் வராக்கு காலேஜ் முடியப்போகுது. நல்ல மாப்பிள்ளையா பார்க்கனும்பா! தரகர் கிட்ட சொல்லலாமா இல்லை ஊர்பக்கம் நம்ம அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி யாராவது இருக்காங்களான்னு உன் மாமனார் வீட்ல சொல்லி பார்க்க சொல்றியா!”, என்றார்.

ராம் பிரசாத் தயங்கி, “ஏன் அப்பா வெளில பார்க்கணும்! நம்ம ரமணனுக்கு பார்க்க கூடாதா!”, என………….

அது என்று அவர் ஆரம்பிக்கும் போதே, முக்கியமான தொலைபேசி அழைப்பு வர அதை அட்டென்ட் செய்தார்.

அவர் பதிலுக்காக ராம் காத்திருக்க…………….. இதை கேட்டு கொண்டிருந்த வரமஹாலக்ஷ்மி என்ன பதில் சொல்ல போகிறார் என்று            ஆவலோடு எதிர் பார்த்து நின்றிருந்தாள்.

அவள் இதையத் துடிப்பின் ஓசை அவளுக்கே கேட்டது. சிவசங்கரன்  போன் பேச எடுத்துக் கொண்ட சில நிமிடங்கள் அவளுக்கு யுகங்களாக தோன்றின.

“அது………..”, என்று ஆரம்பித்த சிவசங்கரன் ராமை பார்த்து, “எனக்கும் அதே எண்ணம் தான்பா. ஆனா  ரமணன் இதுக்கு ஒத்துக்கலை! அவனுக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிட்டான்”,.

கேட்டுகொண்டிருந்த வராவிற்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. “என்னை வெங்கி வேண்டாம் என்று சொல்லிவிட்டானா? ஏன்? ஏன்?”, என்ற கேள்வி அவளுடைய மூளைக்குள்ளும் மனதுக்குள்ளும் ஓட ஆரம்பித்தது. கண்களில் கண்ணீரும் ஓட ஆரம்பித்தது.  

“நான் வேணா பேசட்டுமாப்பா?”, என்று ராம் கேட்க…………. “வேண்டாம் ராமநாதன் அண்ணனும், சுந்தரவல்லி அண்ணியும், ரொம்ப கேட்டும் பிடிவாதமா மறுத்துட்டான்”.

“இதுக்கு மேல கேட்டா……… நமக்கு மரியாதையில்லை. நம்ம வேற பார்க்கலாம்”, என்று விட்டார்.

இரண்டு நாட்கள் கல்லூரிக்கும் செல்லவில்லை………… யாரோடும் பேச பிடிக்கவில்லை. வரமஹாலக்ஷ்மி ரூமிற்குள் அடைந்து கிடந்தாள்.

பின்பு கடைசி செமஸ்டர் பரீட்ச்சை நெருங்கி விட்டதால் வேறு வழியில்லாமல் காலேஜ் செல்ல…………. இறங்கும் போது ஸ்ரீதர் நிற்கிறானா என்று அவளையறியாமல் கண்கள் தேட……….. “ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை”, என்ற கேள்வியோடு ஸ்ரீதர் அவளருகில் வந்தான்.

எப்பொழுதும் நிற்காமல் போய்விடும் வரா………. ரமணன் தன்னை நிராகரித்த கோபத்திலும் ஆற்றாமையிலும் இருந்தவள் “எனக்கு உடம்பு சரியில்லை”, என்று நின்று பதிலளிக்க………..

இப்படியே அவள் வரும் போதும், போகும் போதும், இரண்டொரு வார்த்தை பேசுவதில் ஆரம்பித்து……………. தினமும் காலேஜ் முடிந்தவுடன் தனியாக அரைமணிநேரம் பேசும் அளவிற்கு வளர்ந்து……………, ஸ்ரீதரின் ஐ லவ் யூ விற்கு வரா பதில் சொல்லாவிட்டாலும்…………..

அவனுடைய பேச்சுக்கள் அவளை வசியப்படுத்த ஆரம்பித்து…………… அவனோட செலவிடும் அந்த அரைமணி நேரத்தை ஆவலோடு எதிர்ப்பார்த்து………… யு.ஜி முடிந்தவுடன் மறுபடியும் பி.ஜி யும் அதே காலேஜில் அவளை சேர வைத்தது. 

இரண்டு வருடங்கள் இறக்கை கட்டி ஓட………., வராவிற்கு வீட்டிலும் வரன் அமையாமல் தள்ளி தள்ளி போக………., வரா அவளுடைய இயல்புக்கு திரும்பியிருந்தாள்.

ரமணன் அவன் வேலையில் மிகவும் ஒன்றிபோயிருந்தான். வராவின் நினைவுகள் இருந்தாலும் அவள் அழைப்புக்காக காத்திருந்தான். ஒரு முறை இவன் அழைத்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்குமோ என்னவோ?

ஆனால் அவன் அழைக்க தயங்க………………..  

அவள் பி ஜி முடிக்கும் சமயம், ஸ்ரீதர், “ஐ லவ் யு”, என்ற தன் வார்த்தைக்குரிய பதிலான……..

“ஐ அம் ஆல்சோ இன் லவ் வித் யு!”, என்ற வார்த்தையை வராவிடம் இருந்து வாங்கியே விட்டான்.

“வீட்டிற்கு வந்து எங்கப்பா கிட்ட கல்யாணத்துக்கு பேசறீங்களா! உங்க வீட்ல சொல்லிட்டீங்களா!”,  என்று வராவை அவனை பார்த்து கேட்க வைத்து விட்டான்.

ஸ்ரீதரின் மனம் உற்சாகத்தில் பறந்தது. “கண்டிப்பா நான் எங்க வீட்ல இன்னைக்கே பேசறேன்!”, என்றான்.     

 

Advertisement