Advertisement

                          கணபதியே அருள்வாய்

தலைவியின் நாயகன்

அத்தியாயம் ஒன்று :

இன்றைய  நிகழ்வுகள்

        அழகிய, பரபரப்பான சென்னை மாநகரம். தன்னுள் பல அசுத்தமான, அசிரத்தையான விஷயங்களை கொண்டிருந்தாலும், அது அழகிய பரபரப்பான நகரமே! அது வருவோர் யாரையும், எவரையும், எந்த வேற்றுமையும் பாராது, உள்ளடக்கி கொள்ளும்.

இங்கே வந்து வாழ்ந்தவரும் உண்டு! வீழ்ந்தவரும் உண்டு!. ஆனால் வாழ்ந்தாரோ! வீழ்ந்தாரோ! இங்கே விட்டு மறுபடியும் வேறு இடம் செல்பவர் மிக சிலரே!.

நாம் சாம்ராஜ்யங்களையும் ராஜ்யங்களையும் விட்டு வந்த பிறகு…………… என்னால் தான் உனக்கு இந்த பெருமை என்று சென்னை மாநகரம் சொல்லிகொள்வதர்க்கு எண்ணிலடங்கா மக்கள் உள்ளனர்!, எண்ணிலடங்காத விஷயங்கள் உள்ளன!.

அதே சமயம் குற்றங்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகமே!. குற்றங்களை உள்ளடக்கி! குற்றவாளிகளை உள்ளடக்கி! அதை வளர்ப்பவர்களையும் உள்ளடக்கி! இருந்தாலும்……………… அதை தீர்ப்பவர்களையும்! அழிப்பவர்களையும்! இதே உள்ளடக்கி உள்ளது!.

இப்படி பலபல…………… நாம் பல நூறு பக்கங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இத்துணை பெருமைகளையுடைய சென்னையில், ஒரு இனிய காலை பொழுதில்………………….,

      சென்னை கமிஷனர் ஆபீஸ் பரபரப்பாக இருந்தது. இன்று புதிதாக ஒரு அசிஸ்டன்ட் கமிஷனர் பொருப்பேற்க வருகிறான். தமிழன் என்றாலும் தமிழ் நாட்டில் அவன் பணியில் சேர்ந்த பிறகு இப்பொழுது தான் முதன் முதலாக பொருப்பேற்கிறான்.

கமிஷனர் இருந்திருந்தால் சற்று பரபரப்பு கம்மியாக இருக்கும். ஆனால் அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார். தீடீரென்று அவர் நேற்றைக்கு முதல் நாள் விடுப்பெடுத்துக் கொண்டார். காரணம் யாருக்கும் தெரியவில்லை. அதனால் ஒரு போர்கால அவசர நிலை போல இவன் அங்கே வருகிறான். அவனுக்கு அது தெரியாது. அது அவனுக்கு திடீரென்று சொல்லப்பட்ட ஒரு ட்ரான்ஸ்பர். தமிழ் நாட்டுக்கு வர அவனுக்கு விருப்பமில்லை. ஆனாலும் மிக முக்கியமான உயர் பதவியில் இருப்பவர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதால் வருகிறான். 

சப் இன்ஸ்பெக்டர் இருவர் பேசிக்கொண்டிருந்தது கேட்டு வெளியே காவலாளிகளின் மத்தியில் அமர்ந்திருந்த விசாரணைக் கைதி ஒருவனுக்கு வயிற்றை கலக்கியது.

“எப்போவும் புதுசா யாராவது வர்றதும், போறதும் நமக்கு என்ன புதுசா?, அதுக்கு ஏன் இன்னைக்கு எல்லாரும் இவ்வளவு பதட்டமா இருக்காங்க”.

“வற்ரவருக்கு சின்ன வயசுப்பா, நேத்து தான் இங்க ஒருத்தர் அவரை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தார். ரொம்ப சின்ன வயசுலயே ஐ. பி. எஸ். பாஸ் பண்ணிட்டார் போல, போன போஸ்டிங்  மும்பைய்ல போல, அங்க இருக்கற மாஃபியா கேங் கண்ணுலயே விரல விட்டு ஆட்டுனவரான்ப்பா.

என்கௌன்ட்டர் ஸ்பெஷல்லிஸ்டாம், ஜனாதிபதிகிட்ட அவார்ட் வாங்கியிருக்காராம். நம்ம சென்னைல இப்போ ரௌடியிசம் அதிகமாயிடதால ஸ்பெஷல்ளா அப்பாயின்ட் பண்ணியிருகாங்கலாம்”.

“தமிழ் நாட்டுக்கு வர ஒத்துக்கவே இல்லையாம். கட்டாயப்படுத்தி  கூட்டிட்டு வந்திருக்காங்க போல, கைதிகளை விசாரிக்க வந்து நின்னாலே அவரோட ட்ரீட்மென்ட்க்கு பயந்து உண்மைய சொல்லிடுவாங்களான்”.

“அங்க உட்கார்ந்து இருக்கானே, இன்னைக்கு அவனை ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க கூட்டிட்டு வந்திருக்காங்க. அநேகமா இன்னைக்கு அவரோட முதல் விசாரணை அவனா இருக்கலாம்”. 

இதை கேட்டு தான் அந்த விசாரணை கைதிக்கு வயிற்றை கலக்கியது.

“அவர் பேர் என்னப்பா”,

“அட ஒரு விவரமும் தெரியலை. எல்லாம் அவங்க அவங்க ஒன்னொன்னு சொல்றாங்கா. ஆனா எல்லாரும் பொதுவா சொல்ற ஒரு விஷயம் ரொம்ப அடாவடியான ஆளாம்பா. பயமே கிடையாதாம். அரசியல்வாதிங்க, சீனியர் ஆபீசர்ன்னு யாரும் அவர் வேலையில் தலையிட முடியாதாம். மொத்ததுல சொல்லனும்னா குற்றவாளிங்களுக்கு மட்டுமில்லாமல் நம்ம டிபார்ட்மெண்ட் ஆளுங்களுக்கும் அவர் சிம்ம சொப்பனம் தானாம்”.  

சுற்றி கேட்டுகொண்டிருந்தவர்களில் சிலர் பயமாக பார்க்க, பலர் அலட்சியமாக,  “எவன் அவன்! இது மாதிரி எத்தனை பேரை நம்ம சர்வீஸ்ல பார்த்திருப்போம்”, என்று எண்ணி கொண்டிருந்தனர்.

அவர்கள் எண்ணங்கள் எல்லாம் பொய்யாக்குவதற்காக அவர்களின் பேச்சின் நாயகன் அங்கே படி ஏறிக்கொண்டிருந்தான்.

சரியாக ஆறடி உயரம், அதற்கேற்ற அளவான உடல், இந்த துறைக்கு வந்ததில் இருந்து அவன் தினமும் உடற்பயிற்சி செய்து சீர்படுத்தி வைத்திருக்கும் உடல், கரிய நிறம், மாநிறமாக இருந்தவன் தன் வேலையின் காரணத்தினால் வெயில் என்றும் பாராமல் பணியில் ஈடுபட்டத்தால் நிறம் சற்று மங்கி கரிய நிறமாகவே தோற்றமளித்தது.

அவன் முக லாவண்யம் யாரையும் அவனை மரியாதையோடு பார்க்க வைக்கும். பார்த்தவர்கள் உடனே சொல்லுவார்கள், இவர் சிரித்தால் நன்றாக இருக்கும் என்று, ஆனால் அவன் சிரிப்பை மறந்து போனானா, இல்லை, பழகவே இல்லையா! அவனுக்கே தெரியாத விஷயம் அது.

அவன் முக தீட்சன்யமே அவன் சிறந்த போராளி எனக் காட்டியது. அவன் கண்களில் தெரியும் கடுமை யாருக்குமே பயத்தை கொடுக்கும்.

வந்தவன் அங்கே நின்று பார்வையால் சுற்று புறத்தை அளந்தான். அங்கங்ககே எல்லாரும் நின்று வளவலத்துகொண்டிருந்தனர். இவன் யுனிபோர்மில் இல்லை. அதனால் அவன் யார் என்று மற்றவர்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் இரண்டொருவர் இவன் பால் கவரப்பட்டு யாரிவன் என்பது போல் பார்த்திருந்தனர்.

அங்கே அமர்ந்திருந்த விசாரணை கைதி இவன் போலீஸ் என்பதை அடையாளம் தெரிந்து………………. அவன் தோற்றம்……….. கண்களில் தெரிந்த அலட்சியம்………. கடுமை…….. அளவிடும் தன்மை……………. இதையெல்லாம் பார்த்து இவன் தான் அவர்கள் பேசிகொண்டிருந்த ஆபீசர் ஆக இருப்பார்…………. என தெரிந்து எழப்போக, ஒரே பார்வையில் அவனை அடக்கினான். 

அங்கே இருந்த வாயிலில் நின்றிருந்த கான்ஸ்டபிளிடம், “கமிஷநர் எங்க பார்க்கறது”, என்றான்.

அவனுடைய போதாத காலம், இவன் தோற்றத்தை வைத்தாவது இவன் போலீஸ் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை அவன் அறியவில்லை.

அவன் என்ன யோசனையில் இருந்தானோ?. அவன் பதில் கூறாமல், “நீங்க யாரு எதுக்கு கேக்கறீங்க…………..?”, என்றான்.

“எனக்கு அவரை பார்க்கணும்”, என்றான், இவன் யார் என்பதை உரைக்காமல்.

“எதுக்குன்னு தெரியாமல் எப்படி அனுப்ப முடியும், யாராவது சொல்லி பார்க்க வந்து இருக்கீங்களா………..”, என்றான் அந்த கான்ஸ்டப்ளும் விடாமல், ஒரு வேலை யாராவது பெரிய ஆளாக இருந்துவிட்டால்.

“தெரிஞ்சு நீ என்ன பன்னபோற”, என்றான் இவன் சட்டென்று ஒருமைக்கு தாவி, குரலை சற்று உயர்த்தி, பொறுமை அவனிடம் நிறைய இருந்தாலும் அது பறந்து போகும் நேரம் அவன் அறியாதது.

அவன் பதிலளித்த விதமே அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு மனதிற்குள் பயத்தை கொடுத்தது,  இருந்தாலும் இப்போது எல்லாரும் அவர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டதால் அவரும் விடாமல்…………. “அப்படி நினைச்ச நேரம் அவரை பார்க்க முடியாதுங்க, அவர் இல்லை, அவரை பார்க்க முடியாது”.

பதில் பேசாமல் அவனை பார்வை பார்த்தபடி, யாருக்கோ போன் செய்ய ஆரம்பித்தான்.  

இவன் யாருக்கோ தெரிந்தவனாக இருக்க வேண்டும் அதுதான் இவ்வளவு ஹோதா காட்டுகிறான். எப்படியும் பெரிய ஆளாக தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, பக்கத்தில் நின்ற மற்றொரு கான்ஸ்டபிளிடம், இவனுக்கு காதில்  விழுமாறு,

“தொரைக்கு கமிசனர் பார்க்கணுமா………….. வீட்டு அட்ரெஸ் குடுத்தனுப்பு………….. காலைல வந்துட்டானுங்க நம்ம உயிரை எடுக்க, ஏன் நம்மளை பார்த்தா போலீஸ் மாதிரி தெரியலையா, கமிசனர் தான் போலீஸ்ஸா”, என்று முனகிக்கொண்டே இடத்தை விட்டு அகல போக

“இங்க வாங்க!”, என்றவன் “நீங்க போலிஸ்சா?…………….,” என்றான் அதட்டலாக.  “இங்க உட்கார்ந்திருக்கிற கைதி நிமிஷத்துல நான் போலீஸ், ஏதோ ஹயர் ஆபீசியல்ன்னு கண்டு பிடிச்சிட்டான்”.

“உங்களுக்கு தெரியலை………………….. போலிசையே உங்களால அடையாளம் கண்டு பிடிக்க முடியலை. நீங்க எங்க குற்றவாளிய கண்டு பிடிக்க போறீங்க………………, இதுல தொரைன்னு அனாவசியமான பேச்சு வேற………………. டிபார்ட்மெண்ட் விளங்கும்!”. 

கேட்ட கான்ஸ்டபிள் அதிர்ந்தான், “இவனும் போலிசா, அதுவும் ஹையர் ஆபீசரா, உனக்கு நேரமே சரியில்லடா”, என தன்னை தானே நொந்து கொண்டான். சுற்றி ஆளுக்கொரு வேலையில் இருந்த டிபார்ட்மெண்ட் மக்களுமே இப்போது அலெர்ட் ஆனார்கள்.      

“நீங்க போலீஸ் தான். ஆனா டிரெஸ் போடறதால மட்டும் போலீஸ் ஆயிடமாட்டோம். உயிரை எடுக்கறதுன்னா, என்னன்னு தெரியுமா…………….? தெரியலைன்ன என்னோட ஒரு நாள் வா காட்டுறேன்……………”,

“ஆனா பாரு நான் கமிசனர் கிட்ட தான் ரிப்போர்ட் பண்ண முடியும் உங்க கிட்ட பண்ண முடியாது”, என்றான்.

இது அத்தனையும் அவன் சொன்ன த்வனி அவனாக கேள்வி கேட்டால் தவிர, விஷயமில்லாமல் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாது என்று மற்றவர்களுக்கு புரிய வைத்தது.

அந்த கான்ஸ்டபிள் பயத்தோடு, “சாரி சார்”, என்றான்.

“என் கேபின் எது”, என்றான். 

“சார்! எங்களுக்கு எதுவும் தெரியாது சார். கமிசனர் தீடீர்னு முந்தா நேத்து மெடிகல் லீவ்ல போயிட்டாங்க, புதுசா ஒருத்தர் வர்றாங்கன்னு நேத்து ஈவினிங் சொல்லிக்கிட்டாங்க, மற்றபடி ஒண்ணும் தெரியாது சார். நீங்க இந்த நேரத்துக்கு இப்படி வருவீங்கன்னு தெரிஞ்சா நம்ம ஆளுங்க……….. ப்ரெஸ்ன்னு…………….. ஒரு பெரிய கூட்டமே கூடியிருக்கும்”, என்றான்.

‘சரி நான் பார்த்துக்கறேன்” என்றவன் போனை கையில் எடுக்கும் முன்,  “குட் மார்னிங் சார்! இட்ஸ் எழில் வேந்தன் ரிபோர்டிங்”, என்று ஒரு சல்யூட்டுடன் அருகில் வந்து நின்றவனை ஒரு ஆச்சர்யமான மென்னகையுடன் எதிர்கொண்டான்.

“ட்ரைனிங்ல பார்த்தது எப்படி இருக்கீங்க!”, என்றான் இவன் அவனை பார்த்து,

“நல்லா இருக்கேன் சார் , உங்க பேரை கேட்டவுடனே அது நீங்க தான்னு எனக்கு நிச்சயம்………….. ஆனாலும் ஒரு ஆர்வத்துல நானே வந்துட்டேன். சர்க்குள் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் தான் உங்களை ரீசிவ் பண்ற மாதிரி இருந்தது. ஆர்வக்கோளாறு நானே வந்துட்டேன்”. 

“என் பேர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா”, என்றவனை………………. “என்ன சார் இப்படி கேட்டுடீங்க, மறக்கக்கூடிய  பேரா அது “வெங்கட ரமணன்”.  உங்க அச்சீவ்மென்ட் என்ன சாதாரணமானதா………….. நானும் நீங்களும் சேர்ந்து தான் ட்ரைனிங் எடுத்தோம். நான் இப்போ தான் எஸ். பி. ஆகியிருக்கிறேன்………………..”,

“நீங்க ஜாயின்ட் கமிஷனர் ஆப் போலீஸ்…………….. எட்டு வருஷ சர்வீஸ்ல யாரும் நினைச்சு பார்க்க முடியாத விஷயம். ஏன் யாருக்கும் கிடைக்காத விஷயம்னே சொல்லலாம். அதை விட நம்ம போலீஸ் மக்கள் யாரும் அப்ஜக்ட் பண்ணாம, கேஸ் அது இதுன்னு போகாம, உங்க ப்ரமோஷன்க்கு எதிரா ஒரு வாரத்தை கூட பேசலியே அது இன்னும் பெரிய விஷயம்”.      

“நான் உங்களோட ட்ரைனிங் பீரியட்ல இருந்தேன்னு சொல்லிக்கறதே எனக்கு பெருமையான விஷயம் சார்”.

“அப்பா……………..! எனக்கு இன்னைக்கு சளி பிடிக்க போகுது. இவ்வளவு ஐஸா……………”,

“இதெல்லாம் நிஜம் சர்”, என்றவனை………… “விடுங்க சர்!!!!!”, என்ற ரமணன், “இங்க என்னை யாருக்குமே தெரியலை”, என்றான்.

“எப்படி தெரியும்?, நீங்க பேர் சொன்னீங்கன்னா ஒரு வேளை தெரிஞ்சிருக்கும். நீங்க தான் உங்க முகத்தை யாருக்கும் காட்ட மாட்டேங்கரீங்களே. உங்க பேருமே அதிகமா வெளிய வரமாட்டேங்குது”.

“நானே உங்க கூட ட்ரைனிங்ல இருந்ததுனால தெரிஞ்சது. அதுவுமே ரொம்ப வருஷ இடைவெளி. அப்போவுமே நல்லா இருப்பீங்க. இப்போ இன்னுமே ஹன்ட்சம் ஆகிட்டீங்க”. அதற்குமே மென்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தான். 

“உங்களோட அளவுக்கு யாராவது அச்சீவ் பண்ணியிருந்தாங்கன்னா………………. இந்தியாவோட ஹீரோ ஆகியிருப்பாங்க. இப்பத்திக்கு உங்க பேர் மட்டும் தான் ஹீரோ”, என்றவனுக்கு மறுபடியும் ஒரு மென்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.

“நான் உங்களை ரிசீவ் பண்ண ஸ்டேஷன் வந்தேன்……………”, என்றவனை, “நான் ப்ளைட்ல வந்தேன் எழில்”,…………. “ட்ரெயின்ன்னு எனக்கு இன்பார்மேஷன்”, என்று எழில் இழுக்க………….

“எப்போவுமே என் ஜர்னி மோட் மாத்திட்டே இருப்பேன். நான் இந்த உலகத்துல இல்லாம இருந்தா பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க அதிகம்மாயிட்டாங்க…………….. அதனால “,

“நீங்க இருக்கனும்னு நினைக்கறவங்க, அதைவிட அதிகம் சர்”, என்றவனுக்கு மறுபடியும் ஒரு மென்னகை

“அதுதான் என்னை காப்பத்திட்டுவருதுன்னு நினைக்கிறேன்”, என்று மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

எழில் வேந்தன் மக்களை நினைத்து இதனை உரைக்க, இவனுக்கு வேறு சிலரின் நினைவுகள்,

“நான் வர்றது உங்களுக்கு எப்படி தெரியும், நீங்க இங்க இருக்கீங்களா?”,

“இல்லைங்க சார்……………, நான் norcotics control bureau ( N C B ) ல இருக்கேன்”. (அது போதை மருந்து கடத்தல் மற்றும் வேறு சில வகை குற்றவியல் விஷயங்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரிவு).

“நேத்து இங்க ஒரு கேஸ் விஷயமா கமிசனர் பார்க்க வந்தேன். அவர் மெடிக்கல் லீவ்ன்னு தெரிஞ்சது. போன்ல அது விஷயமா பேசினப்போ, நீங்க தான் இங்க சார்ஜ் எடுக்க போறீங்கன்னு அவர் சொன்னார். அதுதான் நானே ரிசீவ் பண்றேன்னு வந்தேன். உங்களை மிஸ் பண்ணிட்டேன்”.

“பரவாயில்ல எழில், என்னோட முடிவுகளை நான் நிமிஷத்திற்கு நிமிஷம் மாற்ற வேண்டிய கட்டாயத்துல இருப்பேன்”.

“வாங்க கமிஷனர் கிட்ட பேசறேன்”, என்றவன் உள்ளே போகும்முன் ‘என்ன விஷயம் அது” என்றான் ஏதோ தோணினவனாக,

“சர் இங்க உட்கார்ந்து இருக்கானே, இவனை போதை மருந்து கடத்தல் மற்றும் சப்ளை கேஸ்ல விசாரிக்கணும். அதுக்குள்ள சின்ன பிரச்சனைய பண்ணி…………. சட்டம் மற்றும் ஒழுங்க பங்கம் பண்ணின்னான்னு ஒரு கேச பண்ணி………… இங்க உட்கார்ந்துட்டான். என்ன பண்றதுன்னு எனக்கு புரியலை”.

“இவன் இங்க இருந்து வந்து…………. நான் கஸ்டடில எடுத்து……….. இவன்கிட்ட விஷயத்தை வாங்கறதுக்குள்ள…………….. இவன் நெட் வொர்க்ல இன்னும் ரெண்டு பேர் புதுசா முளைச்சிடுவானுங்க. இன்னும் அதுக்குள்ள எத்தனை பேர் இந்த பழக்கத்துக்கு அடிமையாவாங்களோ தெரியலை”, என்று குரலில் போதை மருந்துக்கு அடிமையாகும் நமது இளைய சமுதாயத்தினர் மீது கவலை கொண்டவனாக எழில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த கவலை ரமணனுக்கும் தொற்ற,

“ இவனை நான் பார்த்துக்கறேன் எழில்”, என்றான். இவ்வளவு நேரமாக அவன் எழிலிடம் பேசிக்கொண்டிருந்த த்வனி க்ஷணத்தில் மாறியது. குரலில் கடுமை தொனிக்க, “விஷயத்தை சொன்னா பார்க்கலாம்…………. இல்லைன்னா விடுதலை பண்ணிடலாம்”, என்று ரமணன் கூற…………., புரியாமல் எழில் பார்க்க……….,

திரும்பி அந்த விசாரணை கைதியை பார்த்தவன், அவனையே தீர்க்கமாக பார்த்தபடி, “இந்த இடத்தை விட்டு இல்லை!!!!!!!!!!!!!!!!!!!!! இந்த உலகத்தை விட்டு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”, என்று அவன் கூறிய தோரணை……………

 இப்படி கூட பார்வையாளும் வார்த்தையாளும் மரண பயத்தை ஒருவருக்கு கொடுக்க முடியுமா?…………. என்று எழில் அவனை பார்க்க, மற்றவர்களுக்கு அவனின் கீழ் வேலை பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தெரிய,

அந்த விசாரணக் கைதிக்கு ரமணனின் பார்வையும், வார்த்தையும் உணர்த்திய செய்தி, சொன்னதை செய்வேன்! என்றதோடு மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்வேன்! என்றது.

Advertisement