தலைகீழ் நேசம்!

8

இந்தமாத பௌர்ணமி பூஜை இவர்கள் வீட்டில். அதனால்  சில ஏற்பாடுகள் நடந்தது.  அமுதா, சொல்லிய வேலைகளை நந்தித்தா செய்துக் கொண்டு இன்று முழுவதும் கீழே இருந்துக் கொண்டாள். இன்று டியூஷன் வகுப்பு விடுமுறை விட்டிருந்தாள்.

பெரியம்மா.. வந்ததிலிருந்து வீடு பரபரப்பாகியது. வந்த உடன் நந்தித்திதா ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவும்.. “சீக்கிரம் எல்லாம் பழகிட்ட” என பாராட்டினார். பின் “பையனை சீக்கிரம் வர சொல்லிட்டியா..” என்றார்.

நந்தித்தாவிற்கு என்ன தெரியும்.. விழித்தாள்.

பெரியம்மா அவளின் பார்வையை வைத்தே கண்டுகொண்டவர். அமுதாவிடம் பேசினார். அவரும் பசுபதியிடம் சொன்னார். ஆனால், அவன் வருகிறேன்னு சொல்லலை.. என்றார்.

பெரியம்மா, பசுபதியிடம் பேசி “இன்று பூஜை. நீ சீக்கிரம் வந்திடனும். நீயும் அவளும்தான் இன்று.. ஹோமம் செய்யணும்” என ஆர்டர் போட்டுதான் அடுத்த வேலையை பார்க்க சென்றார்.

இரண்டு பௌர்ணமிக்கு, நந்தித்தா வெளியே சென்றிருந்தாள், தன் மாமியாரோடு. அப்போதெல்லாம்.. பெரியவர்கள்தான் ஹோமம் செய்தனர். இப்போது எதற்கு என யோசனை அவளுக்கு.

அமுதாவும் இதே கேள்வியை தன் அக்காவிடம் கேட்டார். பெரியம்மா “இருக்கட்டும். நம்ம வீட்டில் நடந்த பூஜைக்கு அவனை வர சொன்னேன் வரலை. வீட்டுக்கு, பெண்டாட்டியோட வாடான்னு சொன்னேன் இன்னமும் வரலை.. என்ன நடக்குது. பழசை இன்னும் மறக்கலையா அவன். அவனை.. நந்தியோடு  எங்காவது வெளிய போயிட்டு வர சொல்றதுதானே.” என்றார்.

அமுதா “வளர்ந்தவனை என்ன அக்கா சொல்றது.” என்றார்.

பெரியம்மா “அதான், அவனை சீக்கிரம் வர சொன்னேன். வந்து உட்காரட்டும் பூஜையில். வீட்டில் இருக்கட்டும்..” என்றார்.

அமுதா ஏதும் சொல்லாமல் தலையசைத்தார்.

மாலை நான்கு மணிக்கே பூஜைகள் தொடங்கியது.

இப்படி பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து பசுபதியை பிடித்து வைக்க நினைத்தும்.. மாலையில் பசுபதி வரவில்லை. பெரியவர்கள் எல்லோருக்கும் கோவம்.. பசுபதி மேல். யாரின் அழைப்பினையும் ஏற்கவில்லை பசுபதி. அதனால், எப்போதும் செய்யவது போல.. கெளவ்ரவும்.. அமுதாவும்தான் பூஜையை செய்தனர்.

அதன்பின் வந்தவர்களை கவனித்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து.. உணவு உண்ண வைத்து என அந்த வேலைகள் இருந்ததால்.. ஏதும் காட்டிக் கொள்ளவில்லை, பெரியவர்கள். பெரியம்மா பெரியப்பா.. பின் கெளரவ் தம்பதி என எல்லோரும் தங்கள் வேலைகளை பார்த்தனர்.

விழா நல்லவிதமாக முடிந்தது.. பெரியவர்களுக்கு வருத்தமாக இருந்தது.

பசுபதி வந்து சேர்ந்தான் இப்போது. எல்லோரும் அவனுக்காகவே உண்ணாமல் காத்திருந்தனர். பசுபதி உண்பதற்காக அமர்ந்தான்.

பெரியம்மா “பேட்டா.. போ.. பூஜை அறைக்கு உன் பொண்டாட்டியோடு போய் கும்பிட்டு வா” என்றார்.

பசுபதி, முறைத்தான் தன் பெரியம்மாவை.. அவர் “போ.. பசுபதி” என்றார் அதட்டலாக.

நந்தித்தா எங்கே என கணவனுக்கு தெரியவில்லை. பசுபதி கண்களால் தேடினான். 

அமுதா “நந்தித்தா” என அழைத்தார். மருமகள் வந்து சேர்ந்தாள். அவளுக்கு இங்கே நடந்தது தெரியாது. 

அமுதா “போ.. உன் புருஷனோட போய் சாமி கும்பிட்டு வா” என்றார்.

நந்தித்தா, பசுபதியின் அருகே வந்து நின்றாள். இருவரும் பூஜை அறை சென்று வணங்கி வந்தனர். பின் பெரியவர்களிடம் ஆசி வாங்கினர்.

அதன்பின் பெரியம்மா, கேள்வியாக கேட்டு, அவனை ஒருவழி செய்தார். பசுபதி அதற்கெல்லாம் பதில் சொல்லவில்லை. ஆனால், அமைதியாக அவரின் பேச்சினை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.

பசுபதி தம்பதியை அமர வைத்து, பெரியம்மா இருவருக்கும் உணவு பரிமாறினார். முழு அட்வைஸ்.. எங்களுக்கு வயசாகுது.. குழந்தையை சீக்கிரம் பெத்துக்கோங்க.. அப்புறம் உனக்கு நடந்த மாதிரி உன் பசங்களுக்கும் நடக்க கூடாது சொல்லிட்டேன்” என்றார். நந்தித்தா அதிர்ந்து.. “என்ன நடந்தது பெரியம்மா” என்றாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக கணவன் திட்டு வாங்குவதை கேட்டுக் கொண்டிருந்தவள்.. இப்போது இதை கேட்கவும் பெரியம்மா “ஏன் ஒன்னும் சொல்லலையா உன் புருஷன்.. நீங்க பேசிக் கொள்ளுவீங்களா” என்றார்.

நந்தித்தா வாய் மூடிக் கொண்டாள். பேசவில்லை.

பசுபதி இதையெல்லாம் நான் கண்டுக் கொள்ளவில்லை என.. உண்டு முடித்து எழுந்துக் கொண்டான்.

நந்தித்தா திருப்த்தியாக எல்லா உணவுகளையும் உண்டு, பொறுமையாகவே எழுந்தாள்.

இப்போது நந்தித்தாவின் அலைபேசி அழைத்தது.. எடுத்து பேசிக் கொண்டே, சற்று தூரம் தள்ளி சென்றாள். 

அவளின் தந்தை.. ஊரில் திருவிழா வருகிறது என மகளையும் மருமகனையும் அழைப்பதற்காக பேசினார்.

அதனால், மகளிடம் பேசிவிட்டு.. கெளவ்ரவிடம் பேசினார்.. அமுதாவிடம் நந்தித்தாவின் அன்னை பேசினார்.. மகள் திருமணமாகி முதல் திருவிழா.. மாப்பிள்ளையும் மகளையும் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள் என்றனர்.

நந்தித்தா மேலே சென்று.. தன் கணவனிடம் போனினை கொடுத்தாள்.. பசுபதி யாரென கண்களால் கேட்டான். நந்தித்தா “என் அம்மா அப்பா..பேசறாங்க” என சொல்லி கொடுத்தாள் போனினை.

பசுபதிக்கு மறுக்க முடியவில்லை.. போனினை வாங்கி காதில் வைத்தான்.. ஒரு நொடி தாமதித்து “ஹலோ” என்றான்.

நந்தித்தா எதற்கும் அவனை அவசரபடுத்தவில்லை. சற்று தள்ளி நின்று அவனின் பாவனைகளை கவனித்தாள்.

பசுபதி “ம்.. நல்லா இருக்கேன்.. சாப்பிட்டேன்.. சரிங்க.. சரி..” என நாலு வார்த்தை மட்டுமே பேசினான்.. ஐந்த ஒரு நிமிடத்தில், பின் ஏதும் சொல்லாமல் அந்த போனினை, மனையாளிடம் கொடுத்துவிட்டு.. அறையிலிருந்து வெளியே வந்தான்.

நந்தித்தா பேசிக் கொண்டே தன் அறைக்கு சென்றுவிட்டாள். 

பின் இருவரும் மறுநாள் காலையில்தான் முகம் பார்த்துக் கொண்டனர்.

நந்தித்தா, இரண்டுநாட்களில் தன் ஊருக்கு புறப்பட்டாள். பசுபதி தனக்கு வேலை இருக்கு என சொல்லிவிட்டான். பெற்றோர் எவ்வளோவோ சொல்லியும் கேட்கவில்லை, மனையாளோடு ஊருக்கு செல்ல முடியாது என்றுவிட்டான். ‘பதில்’ என்பது மொழியால் சொல்லவில்லை.. தன் மௌனத்தால்.. அலட்சியத்தால்.. ஒருநாள் இரவு வீடு வராததால்.. என தன் பதிலை அமர்த்தலாக பதிவு செய்தான் வீட்டாருக்கு.

நந்தித்தா அமுதா கெவ்ளரவ்.. என மூவரும் கிளம்பினர் குளித்தலைக்கு. நந்தித்தாவின் மாமனாரும் மாமியாரும் ஒருநாள் தங்கி.. அவர்களின் கோவிலுக்கு சென்றுவிட்டு.. மறுநாள் மதியம் சென்னை கிளம்பி வந்தனர்.

நந்தித்தா ஒருவாரம் அங்கே தங்குவதாக ஏற்பாடு.

பசுபதி, வீட்டில் யாருமில்லை எனவும்.. பப் சென்றுவிட்டான் அன்று இரவு. எப்போதும் போல நண்பர்கள்தான் அவனை, வீடு சேர்த்தனர்.

தன் அறைக்கு வந்தவன்.. அன்று போலவே.. கோணல்மாணலாக உறங்கினான். அவ்வளவு ட்ரிங்க்ஸ்.. லிமிட் வைத்துக் கொள்வதேயில்லாமல் ட்ரிங்க்ஸ். என்றோ ஒருநாள்தான் என்றாலும்.. அதை அருந்தினால்.. அளவே இல்லாமல் தன்நிலை மறக்கும் அளவிற்கு எடுத்துக் கொண்டான் பசுபதி..

வேலையாட்கள் பசுபதியின் நிலை பற்றி அமுதாவிடம் சொல்லிவிட்டனர்.

காரில் வரவர அன்னை தந்தை இருவருக்கும் மகன் பற்றி கவலைதான்.

நந்தித்தா, சந்தோஷமாக கோவில் சென்றாள்.. மாலையில் சற்று நேரம் வகுப்புகள் எடுத்தாள். தோழிகளை பார்த்து வந்தாள். சொந்தங்கள் எல்லாம் வந்தனர். நந்தித்தாவிற்கு நேரம் சரியாக இருந்தது.

இரண்டுநாள் சென்றுதான் எதிர்வீட்டிற்கு வந்தாள் நந்தித்தா.

தாத்தாவை பார்த்து வந்தாள்.. முதல்நாள். சற்று தயங்கி தயங்கி பேசிவிட்டு வந்தாள்.

மறுநாள் வந்தாள். பொம்மு ஆசையாக வரவேற்று.. அவளுக்கு பிடித்த தின்பண்டகள் கொடுத்தார். கொஞ்சம் நந்தித்தா இயல்பாக இருந்தாள். ஆனந்தன் பற்றி பேச்சினை கவனமாக.. அவர்கள், தவிர்த்து பேசினார். மனதில் ஒரு நிம்மதி பெண்ணுக்கு. 

அப்பாடா.. என மூன்றாம்நாள் வந்தால் பெண் காலையிலேயே. பொம்மு ஆசையாக அம்மியில் சட்னி அரைத்து தோசை ஊற்றி கொடுத்தார்.

தாத்தா எல்லா நாளும் நந்தித்தாவை பார்த்துக் கொண்டே இருந்தார். அவளின் நடவடிக்கையில் ஒரு எச்சரிக்கை தன்மை இருந்தது. அதை கவனித்துக் கொண்டார். இயல்பாகவே பேசினார் பசுபதி பற்றி கேட்கவேயில்லை.

இன்று நந்தித்தா நிறையா பேசிக் கொண்டே உண்டாள். தன் புகுந்த வீட்டின் கதைகளை நிறைய இங்கேதான் பேசினால் பெண். அவர்கள் வீட்டில் கூட பேச கூச்சமாக இருந்தது. ஆனால் பொம்முவிடமும் தாத்தாவிடமும் கலகலவென முன்போல பேச்சு வந்தது இப்போது.

தாத்தா யோசனையோடு “பசுபதி ஏன் வரலை கண்ணு” என்றார்.

நந்தித்தாவிற்கு சட்டென ஸ்தம்பித்தது.. 

எல்லோருக்கும் இந்த கேள்வி இருக்கிறது. தெருவில்.. சொந்தங்கள்.. அன்னை தந்தை.. என எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் வேதாந்தன் “என் மாப்பிள்ளைக்கு வேலை நிறைய” என பெருமை போல பேசி எல்லாவற்றையும் சரி செய்துக் கொண்டிருந்தார். இப்போது நேரடியாக எல்லாம் தெரிந்த தாத்தா கேட்கவும்.. ஸ்தம்பிக்க வைத்தது.

தாத்தா “உன்னை கஷ்ட்டபடுத்த இதை கேட்க்கல டா.. கண்ணு. நீதானே, உன் வாழ்க்கையை சரி செய்துக்கணும்.” என்றார்.

நந்தித்தா பாவமாக பார்த்தாள், தாத்தாவை.

தாத்தா லேசாக புன்னகையோடு “எதற்கோ கட்டுப்பட்டு இருவரும் ஒரு பொறுப்பை ஏற்றிருக்கீங்க.. அதை சரியாக செய்யனுமில்ல..” என்றார்.

நந்தித்தா யோசனை.. எதற்கு கட்டுப்பட்டேன்.. கட்டுப்பட்டோம் என.. “என்ன தாத்தா இது” என்றாள்.

தாத்தா “இது கேட்க்க நல்லா இருக்காதுதான். ஆனால், புருஷன் பெண்டாட்டி உறவிற்கு.. நிகரான உறவு ஏதுமில்லை. ஆயிரம் குறைகள் அதில் இருந்தாலும்.. அதை அப்போ அப்போ துடைச்சி.. மக்கர் பண்ணும் போது அங்க அங்க தட்டி.. வைச்சிக்கணும்.” என்றார்.

நந்தித்தா “தாத்தா ப்ளீஸ்” என்றாள், முகத்தில் ஒரு கோவம்.

தாத்தா “எல்லாம் நாமே செய்யணுமான்னு தோணும்.. அதனால் என்ன.. நம்ம வாழ்க்கையும் இதில் இருக்கே. கட்டிக் கொண்டவனாச்சே எதிரி இல்லையே.. முதல் முயற்சி உன்னோடதா இருக்கட்டும்.. அப்படி ஒன்றும் பசுபதி குணம் கெட்டவன் இல்லை.. கண்டிப்பா துணை வருவான் கண்ணு” என்றார் வாடா புன்னகையோடு.

நந்தித்தாவிற்கு முதல்முதலாக.. கணவனை பற்றி சிந்தனை. 

தாத்தா, அவளின் அசையா பார்வை உணர்ந்து.. எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பொம்மு டீ போட சென்றார்.

அமைதியாக டைன்னிங் சேரில் அமர்ந்துக் கொண்டாள்.. மனம் கணவனை அசைபோட்டது. ஒன்றோடு ஒன்று அவனை முரணாகவே காட்டுகிறது. ‘திருமணத்திற்கு முன்.. மருத்துவமனையில்.. அவன், திமிராகவேதான் இருந்தான்.. ஆனால், நண்பனுக்கு என அவனின் பொறுப்பை ஏற்று செய்தான். தாத்தாவிற்காக எனதான் என்னை பார்க்க வந்தான்.. பின், பழி ஏற்று.. என்னையும் திருமணம் செய்துக் கொண்டான்.. என்னிடமும் கடுமை காட்டுகிறான்.. பிடிக்கவில்லை.. நீ போ என்பது போல் ஏதும் சொல்ல கூட இல்லை. 

ஆனால், குடிக்கிறான். ஏன்? 

காலையில் அலாரம் இல்லாமல் எழுந்துக் கொள்ளுகிறான்.. உடற்பயிற்சி.. நேரத்திற்கு அலுவலகம் செல்லுகிறான்.. வீட்டில் இருந்தால்.. எப்போதும் போன் பேசிக் கொண்டே இருக்கிறான். எனக்கென, AC அளவாக வைத்துக் கொள்ளுகிறான். என்னை, க்கும்.. கஷ்ட்டமாதான் இருக்கு.. ஆனாலும், ஒருநாளும் என்னை.. தவறாக ஒருபார்வை பார்த்ததில்லை.. அஹ.. இல்லை, அன்று விளையாடும் போது.. ஒருமாதிரி ஆராய்ச்சியாக பார்த்தானே.. இல்லையோ.. அலட்சியமாக பார்த்தானோ.. ம்.. இருக்கும். இது அத்தனையும் எதற்காக செய்கிறான்.. என்னதான் அவன் பிரச்சனை.. காதலிச்சி ஏமாந்திருப்பானோ.. அதான், இப்படி இருக்கானோ.. என ஒரே கவலை. யாரிடமும் ஏதும் பகிர முடியவில்லை.

ஆனால், கணவனிடம் பேச வேண்டும் என.. இந்த நான்கு நாட்களாக ஒரு எண்ணம். என்னதான் பிரச்சனை உனக்குன்னு கேட்டிடனும் என இருந்தால்.. இப்போது தாத்தா பேசவும், அது ஸ்திரமானது. நம்மால் முடிந்ததை செய்திடலாம்.. அவங்க லவர்.. இருந்தால் சேர்த்துக் கூட வைத்திடலாம்.. பேசிடனும். எப்படி பேசுவது என எண்ணம்.

பொம்மு சூடாக டீ கொண்டு வந்து வைத்து “நந்தி பாப்பா” என்றார். நந்தித்தா புன்னகையோடு, டீ வாங்கிக் கொண்டு, தன் கணவனின் நினைப்பினை விட்டு வெளியே வந்து.. பேச தொடங்கினாள் பொதுவாக.

மறுநாள், கோவிலில் பொங்கல் வைத்து.. மாவிளக்கு போட்டு.. பூஜைகள் சிறப்பாக நடந்தது. மாப்பிள்ளை வரவில்லை, குறைதான். 

நந்தித்தாவிற்கும் மனது.. கணவனிடமே இருந்தது. ஊரில் எல்லா புதுமண தம்பதிகளும்.. ஜோடியாக வந்திருந்தனர். பார்த்தவளுக்கு கணவன் நினைவு அதிகமாகியது.

இரவு கணவனுக்கு அழைத்தாள் பெண். பசுபதி தன் அழைப்பினை 99% ஏற்கமாட்டான், தன்னை மதிக்கமாட்டான் என தெரியும். ஆனாலும் அழைத்தாள் பெண்.

முதல் அழைப்பில் எடுக்கவில்லை. உடனேயே இரண்டாம் முறை அழைத்தாள் பெண். அப்போதும் எடுக்கவில்லை.

மூன்றாம்முறை பத்து நிமிடம் சென்று அழைத்தாள்.. பெண். கணவன் எரிச்சலோடு அழைப்பினை ஏற்றான்.

“ஹ..ல்லோ..” என்றான்.. அந்த குரலே சொன்னது.. எதற்கு அழைத்தாய் என.

நந்தித்தா “எப்படி இருக்கீங்க பதிதேவ்” என்றாள், கொஞ்சும் குரலில். மனம் முழுவதும் சங்கடம்தான். ஆனால், அவனை எதிர்கொள்ள.. இந்த புன்னகை தேவையாக இருந்தது அவளுக்கு.

பசுபதி “என்ன” என்றான்.

மனையாள் “பதிதேவ்… கேட்க்குதா.. எப்படி இருக்கீங்க” என்றாள்.

பசுபதி “என்ன.. என்ன வேண்டும்” என்றான்,

மனையாள் “கேட்டதும் கொடுப்பது போல.. எப்போதும் கேள்வி.. என்ன வேணும்.. என்ன வேணும்ன்னு” என்றாள் சின்ன குரலில்.

அது நன்றாக பசுபதியின் காதில் விழுந்தது, ஆனாலும் “என்ன” என்றான், அதட்டலாக.

நந்தித்தா “க்கும்.. அ..து.. எனக்கு உங்க நிலை புரியுது. இங்க ஊரில் எல்லோரும்.. எங்க மாப்பிள்ளைன்னு கேட்க்கிறாங்க.” என்றாள்.

பசுபதி அமைதியாகவே இருந்தான்.

நந்தித்தா “இல்ல.. இந்த வாரம் ஞாயிற்று கிழமை.. வந்து, என்னை கூட்டி போங்களேன்.. இல்ல, எல்லோர்கிட்டவும் நான்.. நான்தான் சொன்னேன்.. அவர் சண்டே வருவார்ன்னு.. அது, க்கும், எல்லோரும் கேட்டாங்க அப்பா சமாளிச்சிட்டார். இருந்தாலும் நீங்க வரலைன்னா.. ஏதாவது பேசுவாங்க.. ப்ளீஸ், எனக்காக வரவேண்டாம்.. நீங்க, அன்னிக்கு எதற்கோ கட்டுப்பட்டு.. என்னை கல்யாணம் செய்துகிட்டீங்களே.. அதுக்காக வாங்க, ப்ளீஸ்..” என்றாள் அழுத்தமான குரலில்.

பசுபதிக்கு பதில் பேச வரவில்லை. அலட்சியமான அவனின் பாவனை அங்கே சற்று அசைந்தது.. “ம்.. பார்க்குறேன்.” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டான்.

போனினை வெறித்துக் கொண்டிருந்தான். ஏன் அப்படி சொன்னேன் என யோசனை இப்போது அவனுள். ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து பால்கனி சென்றான். என்ன செய்யணும் நான்.. போகனுமா.. நான்தான் போகனுமா. ஏன் என்கிட்டே போன் செய்து கேட்டால்?.. என.

பின், ‘அவள் எதற்கும் என்னை கேட்டதில்லை.. ஊருக்கு போவதற்கு கூட என்னை கேட்கவில்லையே.. இப்போது என்ன.. வருவதற்கு மட்டும், நான் வந்து அழைத்து வர வேண்டுமா?. ம்.. திமிர், அதே திமிர்.. யாரையும் நினைக்காமல் இருக்கிறாள் பாரேன். அவள் வருந்தி அமர்ந்து நான் பார்த்ததேயில்லை. ம், ஸ்கூலில் அவன் பின்னாடியே சுற்றுவாள்.. இப்போது அதன் சுவடு கூட இல்லை.. ‘நீங்க வாங்க’ன்னு என்னை கூப்பிடுகிறாள். அஹ.. காரியவாதி.’ என எண்ணி நட்சத்திரங்களை வெறித்தான். கீழே இருந்த மின்விளக்குகளின் பிரகாசத்தில்.. வின்மீன்கள்.. மங்கலாகத்தான் தெரிந்தது அவன் கண்களுக்கு. அதற்காக, அதன் தன்மையை இழந்துவிட்டது என்று அர்த்தமிலையே. 

பசுபதிக்கு, தன்மேல்தான் கோவம்.. அவள் கேட்டதும், தான் எப்படி சரியென்றேன் என. பின் எதற்கு இந்த யோசனைகள் என. சற்று நேரம் அதே யோசனைதான். அவனை, அவனால் சமாதானமே செய்துக் கொள்ள முடியவில்லை. பார்க்கலாம் எனத்தான் சொல்லியிருக்கிறேன்.. போக வேண்டாம்.. என உறுதியாகிக் கொண்டான்.

இரண்டு நிமிடம் அந்த முடிவு சரியாக தோன்றியது. ஆனாலும் அவன் மனது முரண்டியது.

அவளாக முதல்முறை கேட்டிருக்கிறாள்.. போகவில்லை என்றால் தவறாகிவிடும். அவள் சொன்னது போல.. இந்த கடமைக்கு நான் கட்டுபட்டவனே.. ‘போகனும்’ என தன்னையே சமாதானம் செய்துக் கொண்டான்.

இப்போது அந்த மங்கலான நட்சத்திரங்கள்.. “அஹ.. கடமைக்கும் கள்ளதனத்துக்கும்.. வித்யாசம் தெரியாதவன் எல்லாம் யோசிக்கிறான் பாரு” என சிரித்தது.

இப்போது சட்டென.. மின் விளக்குகள் அணைந்தது சற்று நேரம்.. அவனை நையாண்டி செய்த நட்சத்திரங்கள்.. இப்போது பிரகாசமாக தெரிந்தது பசுபதியின் கண்களுக்கு. பசுபதி, ஆச்சர்யத்தோடு ரசித்தான் வின்மீன்களை.

“யார் எழுதியதோ..

எனக்கென ஒர் கவிதையினை..

நான் அறிமுகமா..

மறைமுகமா..

அகம் புறமா..”