பசுபதி இப்போதுதான் நிமிர்ந்து அன்னையை முறைத்தான். இதுவரை.. அவர் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என.. அவன் அலட்சியமாக அமர்ந்து உண்பதிலேயே தெரிந்துக் கொண்ட அன்னை.. அவனின் வேலை பற்றியும் பேசினார். அது வேலை செய்தது. மகன் கொஞ்சம் முறைத்தான்.
அன்னை “என்ன டா..” என்றார்.
பசுபதி “அவர்கிட்ட என்ன பேச்சு.. என்ன வேண்டும் உனக்கு” என்றான்.
நந்தித்தா தோசையை ஒன்றை வைத்தாள்.. பசுபதி எரிச்சலாக “போதும்” என்றான்.
நந்தித்தா “ரெண்டுதான் சாப்பிட்டீங்க” என்றாள்.
பசுபதி “ஆமாம்.. ரொம்ப முக்கியம்..” என்றான்.
அமுதா என்ன செய்வது என தெரியாமல் நின்றார்.
பசுபதி “அம்மா, இப்போ என்ன, நைட் சாப்பிட வரணும்.. அவ்வளவுதானே. வரேன்.” என்றான்.
அன்னை “அதுமட்டும்மில்ல.. ரெண்டு பேரும் கொஞ்சம் இயல்பா இருங்கடா.. அதெப்படி டா.. கல்யாணம் ஆகியும்.. வேற வேற அறையில் இருக்கலாம். அ..அதை.. நான் சொல்ல வேண்டி இருக்கு.. மத்த ரூம் சாவியை எல்லாம் கொண்டு வந்து கொடுங்க..” என்றார் சின்ன குரலில்.. உங்களை நம்பமாட்டேன் எனும் குரலில்.
பசுபதி “ம்மா..” என்றான் அலறலாக.
அமுதா “எனக்கு இப்படிதான் தோணுது. உங்க வாழ்க்கையை நீங்கதான் சரி செய்துக்கணும் சொல்லிட்டேன்.” என்றவர் நிற்காமல் சென்றுவிட்டார்.
நந்தித்தாவிற்கு கணவனின் முகத்தை பார்க்க முடியவில்லை. ஆனால், அவளின் கணவனோ.. அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
நந்தித்தா அவனின் குற்றம் சாட்டும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்.. திணறினாள்.. நிற்பதா பேவதா என யோசனை வேறு.
பசுபதி “உன் வேலையா” என்றான், கடுப்பான குரலில்.
நந்தித்தா “என்ன.. என்ன” என்றாள்.
கணவனோ “அதான், அம்மா ஏதேதோ சொல்றாங்களே” என்றான்.
நந்தித்தா நிமிர்ந்தாள் இப்போது “இதோ பாருங்க, இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல.. நான் எதுக்கு இதெல்லாம் சொல்றேன். அத்தையைத்தான் கேட்க்கனும்.” என்றவள்.. டேபிளில் உள்ளவற்றை எடுத்து வைத்தாள்.
பசுபதி வேகமாக மேலே சென்றுவிட்டான்.
நந்தித்தா, மேலே வரவும் கணவன்.. தன் அறையிலிருந்து வெளியே வந்து.. “வா, இங்க ஸ்டே செய்துக்கோ” என்றான் ஒன்றுமில்லா குரலில் அழைத்தான்.
நந்தித்தா சற்று நேரம் அமைதியாக நின்றாள், அவனை பார்த்துக் கொண்டு.
பசுபதிக்கு, அறையின் உள்ளே சென்றுவிட்டான். ஆனால், அவள் வரவும் இல்லை, பதிலும் இல்லை.. என உணர்ந்தான்.
அவள் எழுந்து நின்றது தெரிந்தது.. இவன், அவளை பார்த்தான்.. அவள் பதில் ஏதும் சொன்னது போல தெரியவில்லை.. என உணர்ந்து மீண்டும் எட்டி பார்த்தான்.. பசுபதி, அப்படியே நின்றிருந்தாள் நந்தித்தா. மனதுள் ‘பேரு நல்லாத்தான் வைச்சிருக்காங்க.. நந்தின்னு.. அங்கேயே நிக்கறா பாரு’ என தனக்குள் எண்ணிக் கொண்டான்.
பசுபதி ஏதாவது கேட்பதா வேண்டாமா என ஒரு நொடி யோசித்து.. வேண்டாம் அவளுக்கு வேணும்ன்னா கேட்க்கட்டும் என எண்ணி.. மீண்டும் உள்ளே வந்தான்.
இப்போது நந்தித்தா அவன் அறையின் கதவின் அருகே வந்து நின்று “ஒரு நிமிஷம் பேசணும்” என்றாள்.
பசுபதி திரும்பவேயில்லை.. ‘அன்று நான் கேட்டேன்.. இவள் அனுமதித்தாளா’ என எண்ணி.. அமர்ந்தான் கட்டிலில்.
நந்தித்தாவிற்கு சங்கடமாக இருந்தது.. ஆனால், அன்று அவன் கேட்டது நினைவில் இல்லை.. என்னமோ பசுபதி சம்பந்தபட்ட எதுவும் அவள் நினைவில் இல்லை போல.. “கொஞ்சம் பேசணும்” என்றாள் மீண்டும்.
பசுபதி “எதுக்கு.. பேசணும், எனக்கு மரியாதை கொடுக்காதவர்களிடம் நான் பேசுவதில்லை” என்றான். சொன்னவன் எழுந்து வெளியே வந்தான் “நீ உன் லக்கேஜ் எடுத்து வைச்சிக்கோ.. அந்த கார்னர் நீ.. எனக்கு இதுதான் கம்போர்ட் ஸ்பேஸ். சீக்கிரம், எனக்கு தூங்கனும்.” என்றவன் வெளியே வந்துவிட்டான்.
நந்தித்தா “இங்க பாருங்க.. நான் எப்போ மரியாதை கொடுக்கலை” என்றாள், கொஞ்சம் கோவமாக.
பசுபதி, முறைத்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.. “நான் அன்று.. அதான், நிச்சயம் முடிந்த அன்று.. நீ தாத்தா அறையில் இருக்கும் போது கேட்டேன் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்ன்னு கேட்டேன்.” என்றான்.
நந்தித்தாவிற்கு நினைவு வந்துவிட்டது.. அவளின் முகம் உண்மையான வருத்தத்தை கொண்டது இப்போது.
நந்தித்தா “சாரி, அதனால் இப்போ.. பேசமாட்டீங்களா” என்றாள்.
பசுபதி ஆராயும் பார்வையோடு.. அவளை ஏறிட்டான்.. பின் “சரி சொல்லு” என்றான்.
நந்தித்தாவிற்கு ஓய்ந்து போனது. எதோ பள்ளியில் நடக்கும் பெற்றோர் மாணவர் பேச்சு வார்த்தை போன்று எத்தனை கேள்வி என தோன்ற.. “என்ன பேசறதுன்னு மறந்துட்டேன். நீங்க அன்னிக்கு என்ன சொல்ல வந்தீங்களோ.. சொல்லுங்க” என்றாள் பெருந்தன்மை போல.
பசுபதி “நானும் மறந்துட்டேன்” என எழுந்து உள்ளே சென்றான். உயிரற்ற பொருட்கள் எல்லாம்.. தங்களுக்கு உயிரில்லையே.. இந்த பைத்தியங்களை பார்ப்பதற்கு எங்காவது ஓடிவிடலாம் என வருந்தியது இந்த நேரத்தில்.
எந்த பார்வையும்.. பேச்சும்.. எந்த செய்கையும்.. எந்த பொருளும்.. அவர்களை ஈர்க்கவில்லை போல. உலக நியதி தவறோ.. எதிரெதிர் பாலின ஈர்ப்புதானே விதி, அதை நம்பிதானே அத்தனை சடங்குகளும்.. சம்பிரதாயங்களும். இதென்ன விதி என காலம் கண் சிமிட்டியது.
பசுபதி, ஒரு ஷாட்ஸ்.. தொல தொலவென ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட்டில் இருந்தான். இறுக்கமான இளமையான முகம்.. எந்த சாயலும் அதில் இல்லை.. சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் கட்டிலில். கையில் போன் இருக்க.. அதை எடுத்து எப்போதும் போல பார்க்க தொடங்கினான். நிமிடங்கள் கடந்தது.. அவள் இன்னமும் அறைக்கு வரவில்லை.. இவனின் மனது போனில் லயிக்கவில்லை.
பசுபதிக்கு என்னமோ போலானது. போனினை கீழே வைத்து விட்டு கண்களை மூடிக் கொண்டான்.. ‘நான் என்ன செய்யணும்..’ என எண்ணி தலையை கோதிக் கொண்டான்.
திருமணம் முடிந்தது.. என நிம்மதியாக இருந்தான். அவன் யோசிக்கவேயில்லை திருமணம் வாழ்க்கையை பற்றி இந்த நாட்களில். அது ஒரு நிகழ்வு என அமைதியாகினான்.
இப்போதுதான் அன்னை, கடிந்துக் கொள்ளவும்.. ஒருமணி நேரத்திற்கு முன்தான்.. ‘இது திருமணம்.. எங்களுக்கென ஒரு வாழ்க்கை.. ம்.. இப்போது அவளை வான்னு சொல்லனுமா’ என யோசித்தான். ஆனால், எழ தோன்றவில்லை. பசுபதிக்கு, பொம்மு பேசியதுதான் நினைவில் வந்தது. அத்தோடு, ஆனந்தனை தெரியும்.. நந்தித்தாவையும் அவனுக்கு நினைவிருக்கிறதே.. என மனம் ஒருமாதிரி வேதனையானது. எந்த நிகழ்வும்.. அவனுக்கு சாதகமாக இல்லை. மனது அவள்புரம் சாய காரணம் தேடுகிறது அவனுக்கு.
விளக்குகளை அனைத்துவிட்டு, மனையாளை அழைக்க விரும்பாதவனாக கண்மூடிக் கொண்டான்.
இப்போது உறங்கினானோ.. நீண்டநேரம் சென்று.. உறங்கிக் கொண்டிருந்த பசுபதிக்கு ஒரு அசௌகர்யம்.. உறக்கம் வரவில்லை. நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளிகள்.. என்னவென எழுந்து அமர்ந்தான். ஒன்றும் புரியவில்லை.
தனக்கருகில்.. பெட்டில்.. மூட்டையாக முகம் தெரியாமல் நிழலாக தெரிந்தது.. ஒரு உருவம். உணர்ந்தான்.. அவளாகத்தான் இருக்கும் என. மனதில் சின்ன நிம்மதி அவளாகவே வந்துட்டா..’ என.
அதனால், உறக்கம் வராமல் போகுமா.. என எண்ணி.. நன்றாக சுற்றி பார்க்க தொடங்கினான். என்னவென பார்க்க.. AC ஆஃப்பாகி இருந்தது. ACக்கு பழக்கப்பட்டவன். ஐம்பூதம் எப்படி மனிதனுக்கு முக்கியமோ.. பசுபதிக்கு ஆறாவது பூதமாக AC முக்கியம். AC இல்லாமல் உறக்கம் வராது அவனுக்கு.
நந்தித்தா, முகம் தெரியாமல் போர்வையை போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.
பசுபதிக்கு யோசனை.. எப்படி AC ஆஃப் ஆச்சு என. இருந்தும் மீண்டும் Acயை ஆன் செய்துவிட்டு உறங்க முற்ப்பட்டான்.
அரைமணி நேரம் சென்று மீண்டும் வியர்வை அவனுக்கு. எழுந்து பார்த்த போது.. மீண்டும் Ac ஆஃப். இந்தமுறை, பசுபதி கோவமாக AC ஆன் செய்துவிட்டு, ரிமோட்டினை தன்னிடமே வைத்துக் கொண்டான்.
உறக்கம் அவனை தழுவும் நேரம்.. அவனை எதோ உலுக்கி அசைத்தது.
கண்களை திறக்க.. நந்தித்தா, எழுந்து அமர்ந்து.. அவனுடைய போர்வையையும் இழுத்துக் கொண்டிருந்தாள். கோவமாக பார்த்தவனின் முகம்.. அவளின் புலம்பலான மொழி கேட்டதும்.. இயல்பானது. அவள் “எதுக்கு இப்படி AC போடுறீங்களோ.. குளிருது..” என புலம்பிக் கொண்டு.. அவனிடமிருந்து போர்வையை இழுக்க.. பசுபதி, லேசாக எழுந்து.. போர்வையை அவளுக்கு கொடுத்தவன்.. Acயின் அளவினை கூட்டி வைத்து.. “கம்மி செய்துட்டேன்.. தூங்கு..” என்றான்.
நந்தித்தா திரும்பி வாகாக படுத்துக் கொண்டு உறங்க தொடங்கினாள்.
பசுபதிதான் அந்த அறையில் புதிததா வீசிய மல்லிகையின் வாசனையை நாசி தாண்டி.. இதயத்தில் நுழைய விடலாமா.. வேண்டாமா என எண்ணிக் கொண்டே கண்மூடிக் கொண்டான்.