பசுபதி தன் மனையாளின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே.. தண்ணீர் குடிப்பது.. சீப் எடுத்து அவளுக்கு முன்.. கண்ணாடியில் நின்று தலையை வாரிக் கொள்வது என அவளோடே நின்றுக் கொண்டிருந்தான். மனையாளோ நைட் ஸ்கின் கேர் என்ற வேலையில் மும்முரமாக இருந்தாள்.
ஆனாலும் கணவனின் தடுமாற்றமும் தவிப்பும் புதிதாக இருக்க.. அதை உணர முடிந்தது அவளால். அவளுக்கும் தடுமாற்றமாக.. தவிப்பாக என்ன செய்வது என தெரியாமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மனையாளுக்கு இருந்த தடுமாற்றத்தில் “என்ன.. என்ன புரியலை” என்றாள் குழப்பமான பார்வையோடு.
கணவன் அவளின் அருகில் வந்தான்.. “என்ன புரியலை” என்றான் காதலாக. பேசவந்த விஷயத்தை விட்டுவிட்டு.
மனையாளுக்கு, கணவனின் அருகாமையும்.. இந்த கேள்வியும்.. பார்வையும்.. எதோ செய்ய, இப்போது எல்லாம் மறந்து போனது.. தூர போனது.. மலங்க மலங்க விழித்தாள்.. ஒன்றுமே புரியாமல்.
கணவனுக்கு, அவளின் பார்வையை ஏறிட முடியவில்லை.. குழப்பமான பார்வை.. அவனை ஈர்க்கிறது காதலாக.. உள்ளுக்குள் அதே நேரம், என்னை பற்றி என்ன நினைக்கிறாள் என்ற ஆர்வத்தையும் கொடுக்கிறது. பிடிக்கிறது.. நெருங்க தயக்கமாவிடுகிறது.
கணவன், அவசரமாக அவள் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து அவளின் கண்களை கட்டினான்..
நந்தித்தா “என்னங்க.. என்ன இது.. விடுங்க” என்றாள். ஆனால், குரலில் காதல்தான் கசிந்தது.. குழப்பமில்லை.
கணவன் “உன் கண்ணை பார்த்தால்.. நான் கொஞ்சம் கொஞ்சம் அப்படி ஆகிடுறேன்.. இரு.. இரு..” என்றவன் கண்களை கட்டிவிட்டு.. அவளை நின்று பார்த்தவன் “உனக்கு பழசெல்லாம் ஞாபகம் இருக்கா.. இல்ல, நம்ம சண்டையில்ல.. இது லவ்.. மால்தீவ்ஸ்..” என்றான் அவளின் உதடுகளை தன் பெருவிரலால் வருடிக் கொண்டே.
மனையாள், கணவனின் தீண்டலில் தலை தாழ்ந்தாள்.. கன்னம் சிவந்தது கேள்வியில்.. அமைதியானாள்.
பசுபதி மனையாளின் வெட்கத்தில்.. ஏதேதோ கேட்க வந்தவன் எல்லாம் மறந்து “நந்து..” என சொல்லி நின்றான்.
அமைதியானாள் பெண்.
கணவன் “எனக்கு அந்த வாழ்க்கை வேணும் போல இருக்கு.. இன்னமும் என் மேல ஏதாவது கோவம்.. பயம்.. இருக்கா..” என்றான், வேண்டுதலானது குரல்.
கட்டிய கண்களோடு தன்னவனை பார்த்து நிமிர்ந்தவள்.. ‘இல்லை’ எனுமாறு தலையசைத்தவள்.. அவனை கை நீட்டி தேடினாள் காற்றில்.. “எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல முடியாதுல்ல.. நடந்துடுச்சி..” என அவள் பேச பேச.. கணவன், தன்னவளின் கண் கட்டுகளை அவிழ்த்தான்.
மனையாள் கண்களை கசக்கிக் கொண்டு கணவனை பார்க்க.. கணவனோ “தேங்க்ஸ்.. என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. இது போதும்.. அப்போது ஒருபயம்.. எங்கேனும் நீ என்மேல் இன்னமும் கோவமா இருப்பியோன்னு நினைச்சேன்.. அதான் கட்டினேன்.” என சொல்லி அவளின் கண் கட்டியதற்கு விளக்கம் சொன்னான்.
கணவன் இப்போது தயக்கமில்லாமல் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.. ஏதும் பேச்சுகள் தேவையாக இருக்கவில்லை.. அவளின் நெற்றியை தன் நெற்றிக்கு இணையாக தூக்கி.. அவளின் கண் பார்த்துக் கொண்டே.. அவளின் நெற்றியோடு தன் நெற்றி முடியவன்.. “எனக்கு.. உன்னோட பதி’யாகவே இருக்க ஆசை.. கூப்பிடேன் ஒரு தரம்..” என்றான், காதலாக.
மனையாள் மெய் மறந்திருந்தாள்.. சட்டென அப்படி அழைக்கவரவில்லை.. கணவன் ஆர்வமாக அவளின் கண்களில் ஊடுருவி.. காதல் பார்வையால் வேண்ட.. மனையாள் கண்களை மூடிக் கொண்டாள்.. கணவன் அவளை மெத்தையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான்.. முத்தங்கள் நடுவே மீண்டும் வேண்டினான்.. மனையாள் வெட்கத்தோடு.. கண்மூடிக் கொள்ள.. இந்தமுறை கிரங்க வைத்தான்.. இருவருக்கும் நிறைய தேடல்கள். அதில் சிலபல காயங்கள்.. சிலபல வன்மையான முத்தங்கள்.. இறுக்கமான அணைப்புகளோடு தொடங்கியது கூடல். முதல் வைத்த அவனின் கோரிக்கை.. நிறைவடைந்த பின்தான்.. அவனுக்கு திருப்தி. இது நேசத்தின் தேடல்.. அதற்கான விளக்கம். மொழி, எப்போதும் ஓசையாகவோ சப்த்தமாகவோதான் இருக்க வேண்டுமென இல்லை.. உடல் மொழியாக கூட இருக்கலாம் தம்பதிகளுக்குள்.
திருமணம் எனும் சம்பிரதாயம் நல்லதுதானோ. ம்.. இது சடங்குகளும்.. நேசமும்.. வெற்றிபெற்று தடம் போடும் வாழ்வு. சம்பர்தாயம் சடங்குகள் பல ஏற்க முடியாததாக இருக்கலாம்.. ஆனால், முறைப்படுத்துதல் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வு வீணாகிடும்தானே.
அடுத்து வந்த ஒருவாரமும் கணவன் மனைவி இருவரையும் பிரிக்க முடியவில்லை. இந்த வார முடிவில் சென்னை கிளம்புகிறான் பசுபதி.அதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.. நிமிட நேரம் கூட வீணடிக்காமல் இருவரும்.. சேர்ந்தே இருந்தனர். தினமும் வெளியே சென்றனர். பசுபதியும் மனையாள் கல்லூரி முடித்து வருவதற்குள்.. வேலைகளை முடித்துக் கொண்டு தயாராக இருந்தான்.. இருவரும் தினமும் வெளியே சென்றனர். என்ன பேசுவது என்றிருந்த நிலை மாறி பேசிக் கொண்டே இருந்தனர். கைகள் கோர்த்துக் கொண்டு.. அப்போதுதான் திருமணமானவர்கள் போல அந்த மால் முழுவதும் சுற்றினர். ஆனாலும் போதவில்லை.. இரவு வீடு வந்தால்.. தீராத மோகம் அவர்களை சூழ்ந்துக் கொண்டது. பிரிந்திருந்த காலத்திற்கும் சேர்த்து களித்திருந்தனர். கண்மூடி திறப்பதற்குள் அந்த வாரம் சென்றுவிட்டிருந்தது.
அதிகாலை, இரவிலிருந்தே உறக்கம் சரியாக இல்லை தம்பதிகளுக்கு. இந்த நேரம் இயல்பாக விழிப்பு வந்துவிட்டது இருவருக்கும்.. மனையாளை பிரிய மனதில்லாமல் நெஞ்சில் தாங்கி சாய்ந்திருந்தான் கணவன். இருவருக்கும் பிரிவின் வலி இப்போதே தெரிய தொடங்கிவிட்டது. மனையாளின் காதோரம் முன்னுச்சி முடிகளை ஒதுக்கி விட்டவன் “டைம்க்கு சாப்பிடு.. அடுத்த வாரம் ப்ரைடே வந்திடுவேன்.. ம்..” என்றான் அவளை தேற்றும் பொருட்டு.
மனையாள் கண்களில் நீர்.. கணவனிடம் காட்ட முடியவில்லை.. அவனிடம் சாய்ந்துக் கொண்டு.. “ம்.. நீங்களும் வீட்டு சாப்பாடு சாப்பிடுங்க.. சீக்கிரமா வீட்டுக்கு வந்திடுங்க, இன்னும் உங்களுக்கு முழுசா சரியாகலை.. ரெஸ்ட் எடுக்கணும் சொல்லிட்டேன்.” என்றாள்.
கணவன் “அடி, டாக்டர் எல்லாம் சரியாகத்தான் இருக்கேன்னு சொல்லிட்டார்.. நீ என்னமோ புதுசா சொல்ற” என்றான் கணவன் அதிர்ந்து.
மனையாள் அவனின் உதடுகளில் தன் விரல்களால் அடித்தாள்.. செல்லமாகத்தான், கணவன் “ஹேய், என்னடி அடிக்கிற வலிக்குது..” என்றான் பாவமாக.
மனையாளுக்கு அந்த குரல் இம்சிக்க.. கணவன் மீதேறி படர்ந்தவள் “என்ன அடிச்சேன்.. அப்படியே வலிச்சிட போகுது..” என சொல்லி தன்னவனின் சிகையை பிடித்துக் கொள்ள..
மங்கையவள் பூவென தன்மேலிருக்க, அவளை தனக்கு வசமாக இருகைகளாலும் சிறை செய்துக் கொண்டவன்.. ரசனையாக “இப்போ டாக்டர் சொன்னது உனக்கு ஞாபகம் இல்லையா.. உடம்பு சரியில்லாதவன் மேல இப்படிதான்.. பாவமே பார்க்காமல்..” என சொல்ல சொல்ல.. மங்கையவள் திமிறிக் கொண்டே.. கணவனின் பேச்சினை தடை செய்யும் விதமாக அவன் உதடுகளை தன் விரல்களால் மூட.. கணவனோ “இப்போ புரியுதா.. நான் நல்லா இருக்கேன்னு.. சும்மா சும்மா.. உடம்பை பாருங்க.. மாத்திரை எடுங்க.. என்ன பேச்சு இது.. டைம்மே இல்லை இவ வேற..” என சொல்லி.. மனையாளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான்.
நேரம் கடந்ததுதான் இருவரும் கிளம்பி வந்தனர்.
பூஜையறை சென்று விளகேற்றி வணங்கினர் இருவரும்.. பசுபதி பெரிதாக பக்தி.. கோவில் செல்வது.. சாமி கும்பிடுவது.. என எல்லாம் இல்லை. ஏதாவது பண்டிகை.. விழா.. என்றால் செய்வான் அவ்வளவுதான். ஆனால் இன்று கடவுளிடம் வேண்டுதலாக தங்களின் நிலை இருந்தது, பசுபதிக்கு.
காலை உணவு இருவரும் சேர்ந்தே உண்டனர்.
கார் டிரைவ் செய்ய கூடாது என்றதனால்.. டிரைவர் ஏற்பாடு செய்திருந்தனர். மனையாள் கண்ணில் நீரோடு இங்கும் அங்கும்.. கணவனுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டிருந்தாள்.
பசுபதி மேலிருந்து தன் உடமைகள் லாப்டாப் எல்லாம் எடுத்து வந்தான். வேலையாள் வந்து பெட்டிகளை எடுத்து காரில் வைத்தார்.
மனையாளை தேடினான்.. கிட்செனில் நின்றிருந்தாள். அங்கே வந்தான். சென்னயிலிருந்து ஒரு தம்பதி வந்து வீட்டு வேலைகளை கவனிக்க என இங்கே அமர்ந்தியிருந்தனர். அவர்கள்தான் இங்கே முழு பொறுப்பு எல்லா வேலைகளுக்கும். அவர்கள் சமைத்திருக்க.. அந்த உணவினை மதியத்திற்கு என பாக் செய்துக் கொண்டிருந்தாள்.
பசுபதி அவர்களிடம் தன் மொழியில் மனையாளை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி பேசிக் கொண்டிருந்தான்.
நந்தித்தா புன்னகையோடு எல்லாம் எடுத்துக் கொண்டு காரில் சென்று வைத்தாள்.
பசுபதி மனையாளையே பார்த்திருந்தான்.. மனையாள் உள்ளே வரவும்.. அவளை எதிர்கொண்டவன் இறுக்கமாக ஒருமுறை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தம் வைத்தான்.. “கவனமா இரு..” என்றவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து.. அவளின் கைபற்றிக் கொண்டு சிட்அவுட் வந்தான். மீண்டும் ஒருமுறை கண்ணால் விடைபெற்றுக் கொண்டு.. காரேறினான்.
பெண்ணவள் பேச்சின்றி கண்கள் கசிய வழியனுப்பி வைத்தாள். தவிர்க்க முடியாத பிரிவு.. கிளம்பினான் பசுபதி சென்னைக்கு.
அன்று முழுவதும்.. இருவருக்கும் வேறு சிந்தனையே இல்லை.. தங்கள் இணையை தவிர.
நந்தித்தா பசுபதியின் நாட்கள் மீண்டும் தனிமைக்கு சென்றது. ஆனால், முன்போல வெறுப்பாக இல்லை இந்த காலம்.. எப்போதடா பார்ப்போம் என ஆர்வமாக இருந்தது.
பசுபதி, மனையாளை நிரம்ப உணர்ந்தான்.. காலையில் அவளின் குரல் கேட்கவே அழைத்தான். சில நேரம் வேலையில் மறந்தாலும்விட்டாலும்.. ஞாபகம் வரும் போது மனையாளுக்கு அழைத்து பேசினான். அவளுக்கு வந்தவுடன் பழசாறு கொடுக்கும் படி பணியாட்களிடம் சொன்னான். கணவன் அவளை நிறைய கேர் செய்தான் தூரத்திலிருந்து.
அடுத்தடுத்து வந்த நாட்களில் வேளையில் கவனம் வைக்க தொடங்கினர் இருவரும்.