இருவருக்கும் பார்த்துக் கொள்ளவே கொஞ்சம் தயக்கமாக இருந்தது இந்த நாட்களில், அதுவும் பெரியவர்கள் ஊருக்கும் கிளம்பியதும்.. இருவரும் நேருக்கு நேராக பேசுவது என்பது தயக்கத்திலேயே சென்றது.
பசுபதி எல்லா வேலையையும் தானே செய்துக் கொண்டான்.. குளிக்க உடைமாற்ற செய்ய என மட்டும் மனையாள் உதவினாள். நெருக்கங்களை தவிர்க்க முடியவில்லை.. ஆனாலும் கண் பார்த்துக் கொள்ளவும் முடியவில்லை. புதுவிதமாக இருந்தது இருவருக்கும்.
தேவையான போது மட்டுமே அவன் எதிரில் வந்தாள். மற்றபடி உணவு என வரும் போது.. வேலையாட்கள் கொடுத்தனர்.. பசுபதி தானாகவே உண்டான். நந்தித்தாவிற்கு வேலை இருந்தது.. அதனால் சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க முடியவில்லை. இரவு இருவரும் சேர்ந்தே உண்டனர்.
பசுபதி, தனியாகத்தான் வீட்டில் இருந்தான்.. அலுவலகத்திலிருந்து அதிகம் வேலை கொடுக்கவில்லை இவனுக்கு. போன்.. மெயில்.. சரிபார்ப்பது எனதான் இருந்தது. மனையாள் எப்போதடா வருவாள் என காத்திருந்தான் சில நாட்கள். அதுவும் கொஞ்சம் ரசித்தது அவனுக்கு. மனையாள் வந்ததும் அவளின் கண்ணில் படுவது போல அமர்ந்துக் கொள்வான்.. ‘தன்னை பார்த்து அவள் புன்னகைக்க வேண்டும்.. தூங்கினீங்களா.. என கேட்க்க வேண்டும்..’ ஆக, அவள் தன்னை எப்போதும் கண்டுக் கொள்ள வேண்டும். மனையாள் வாரத்தில் மூன்று நாட்கள் டியூஷன் எடுக்க.. நேரம் ஆகிவிட்டால்.. கீழே சத்தமாக டிவி போட்டு அமர்ந்துக் கொள்வான். ஆக, அவன் எப்போது அவளிடம் தன்னை நிறுத்திக் கொள்ளவே முனைந்தான்.
அதில் வெற்றியும் உண்டாகிற்று. கரை தொடும் அலைகள்.. மணல்களை கொஞ்சம் கடலுக்குள் எடுத்து செல்வதை போல.. கணவன் ஓவ்வொரு முறையும்.. அவளை தனக்குள் எடுத்துக் கொண்டான்.. துகள் துகள்களாக.
நந்தித்தாவிற்கு, அதெல்லாம் புரியாமல் இல்லை.. சிலநேரம் சிரிப்பு கூட வந்து விடுகிறது, கணவனின் எதிர்பார்ப்பான விழிகளை பார்த்து. கணவனை ஓரகண்ணால் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.. அவ்வபோது பதிலும் சொல்லுவாள்.. கணவனிடம் விசாரிக்கவும் செய்வாள். ஆனால், அந்த பேச்சுகளையோ செய்கைகளையோ தொடர முடியாமல் போகிறது இருவருக்கும்.
தினமும் இரவு உணவு சேர்ந்துதான் உண்ணுவர் இருவரும். மாமனார் மாமியார் ஊருக்கு சென்றுவிட்ட இந்த பத்துநாளும்.. இருவரும் ஒரு நிதானத்தில் நெருங்கியும் நெருங்காமலும்.. இருக்கும் இந்த நேரத்தில், தவறாமல் செய்யும் ஒரே செயல்.. இந்த இரவு உணவுதான். அப்போதுதான் மாத்திரைகள் பற்றி.. நந்துவின் வேலை பற்றி.. அப்பா அம்மா பேசியது பற்றி எல்லாம் இருவரும் பேசிக் கொள்வர். அந்த நேரம் இனிமையாகவே இருக்கும் இருவருக்கும்.
அதிகாலை தென்றல் போல.. விடியலை அறிவித்துக் கொண்டே அவர்களின் நாட்கள் சென்றது.
இன்று பசுபதியை மருத்துவமனைக்கு செக்கப் செல்ல வேண்டும்.. நந்தித்தா விடுமுறை எடுத்திருந்தாள். டாக்ஸி புக் செய்துவிட்டு காத்திருந்தனர்.
பசுபதி ஒருகையால்.. தனது ரிபோர்ட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான்.. மனையாள், இப்போதுதான் அதை பார்த்தவள் “நான் எடுத்துக் கொள்வேனே.. “ என சொல்லி, அவன் கையிலிருந்து வாங்க.. கணவன் “இழுக்காத.. நந்து” என சொல்லி அவளிடம் கொடுத்தான்.
மனையாள் வாங்கிக் கொண்டு கீழே வந்தாள். கார் வந்திருந்தது, இருவரும் மருத்துவரை பார்க்க சென்றனர். எல்லாம் நலமாக இருப்பதாக சொல்லினார் மருத்துவர்.. ஒய்வு தேவை.. உணவு பழக்கம் பற்றி சொல்லி அனுப்பினார்.
வரும் வழியில்.. இருவரும் ஷாப்பிங் என இறங்கி தேவையானதை வாங்கினர்.. நந்தித்தா பழம் காய்கறி என வாங்க.. கணவன் கேக் அவளுக்கென வாங்கிக் கொண்டிருந்தான். யோசனைகள் அவளை சுற்றியே இருந்தது போல.. அவளுக்கு என்ன பிடிக்கும் என.. எதை விருபம்புவாள்.. என யோசித்து கொண்டிருந்தான்.. அப்படி அறிந்துக் கொண்டதில் எப்போதோ அவள் கேக் உண்டதை மனதில் நினைவுப்படுத்திக் கொண்டு கேக் வாங்கினான்.
வீடு வந்தனர்.. இருவரும். வேலைக்கு ஆட்கள் இருப்பதால் மதியம் உணவு தயாராக இருந்தது. கணவனுக்கு பரிமாறத் தொடங்கினாள்.. நந்தித்தா.
அமுதா அழைத்தார் மருமகளுக்கு.. நந்தித்தா விவரம்.. சொல்லி பேசி அழைப்பினை வைக்க.. அடுத்து தன் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.
கணவன் உண்டு முடித்திருந்தான். அம்மாவின் அழைப்பினையும் எடுத்து.. மருத்துவர்கள் சொன்னதை சொல்லித்தான் அழைப்பினை வைத்தாள். அப்படியே கணவனுக்கு மருத்துகள் கொடுத்தாள்.
நந்தித்தா உண்ணவில்லை. உண்பதற்கு சென்றாள்.
பசுபதிக்கு லாப்டாப்பில் கொஞ்சம் வேலை இருந்தது. அதை பார்க்கவென அமர்ந்தான். அரைமணிநேர வேலை அதனால் முடித்துவிட்டு சற்று உறங்கலாம் என அமர்ந்தான். அலுவகத்திற்கு தேவையானதை மெயில் செய்துவிட்டு வரும் நேரம்.. பிரசன்னாவிடமிருந்து ஒரு வாட்ஸ்அப்.. அன்று தான் கேட்டிருந்த தன் மனையாளின் பள்ளி புகைப்படம் வந்திருந்தது.
பசுபதி, பிரசன்னாவிற்கு ஒரு நன்றி செய்தியை அனுப்பிவிட்டு.. அதனை பார்த்துக் கொண்டே எதோ அப்பில் தன் புகைப்படத்தினை அவளுடையதினையும் சேர்த்து எதோ செய்துக் கொண்டிருந்தான்.
மனையாள் வந்தால் மேலே அறைக்கு.. பசுபதி விழித்திருப்பதை பார்த்து “ஏன் தூங்கலையா” என்றாள்.
பசுபதி இப்போது அவளுக்கு பதில் சொல்லாமல்.. இமைக்காமல் பார்த்தான்.
மனையாள் “உட்கார்ந்துட்டே தூங்கரீங்கலோ” என்றாள்.
பசுபதி “இல்ல, இங்க வாயேன்” என்றான் ரசனையாக.
மனையாள் கணவனின் குரலில் எதோ மாற்றம் இருப்பதை உணர்ந்து “எ..ன்ன” என்றாள் தயக்கமாக.
கணவன் “இங்க வா நந்து” என்றான் வற்புறுத்தும் குரலில்,.
மறுக்க முடியாமல் அருகில் செல்ல.. கணவன் தன் மொபைலில் இருந்த.. அவளின் பள்ளி புகைப்படத்தினை காட்ட.. மனையாளிடம் புன்னகை விரிந்தது.. “இது எப்படி உங்ககிட்ட” என்றாள்.
கணவன் “அது எதுக்கு.. அடுத்து பார்” என சொல்ல, தானும் கணவனும் பள்ளி புகைப்படத்தில் இருப்பது போல இருவரின் பள்ளி புகைப்படமும் ஒரே பிரேம்மில் இருந்தது.. அதை கண்ட மனையாளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
பசுபதி “தெரியுதா” என்றான்.
மனையாள் “ம்.. நீங்கதானே. தெரியும்” என சொல்லி, இயல்பானவள்.. போனினை கணவனிடம் கொடுத்தாள்.
கணவன் “அப்போதும் இப்போதும் அதே லுக்கு.. அதே முகம்.. அப்படியே இருக்கத்தானே நீ” என்றான் ரசனையாக.. புகைப்படத்தினை பார்த்துக் கொண்டு.. மனையாளையும் பார்த்துக் கொண்டே.
மனையாள் தன்னை குனிந்து பார்த்துக் கொண்டு “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல சும்மா சொல்லாதீங்க..” என்றாள்.
கணவன் எழுந்து வந்தான் மனையாள் அருகே.. அவள் கண்ணாடியின் முன் நின்றிருக்க.. “பாரேன்..” என சொல்லி அவளின் பின் நின்று.. தன் அலைபேசியில் இருக்கும் புகைப்படத்தினை காட்ட.. பெண்ணவளுக்கு அந்த புகைப்படத்தை ரசிக்க முடியவில்லை.. கணவனின் அருகாமையைதான் ரசிக்க முடிந்தது. அவளாக அவனுக்கு உதவும்போது.. ஏதும் சலனமில்லை.. இப்போது எதோ சலனம்.. சொல்ல முடியவில்லை அவனின் அருகாமை இம்சித்தது..
கணவனோ “சொல்லு.. அதே முகம்.. பாரேன்..” என சொல்லி அவளின் கைபற்றி தன்னை நோக்கி திருப்ப.. உணர்வுகளிலிருந்து விடுபட்டவள் போல பெண்ணவள் விழித்தாள்.
கணவன், அவளின் தப்பிய பார்வையிலும்.. மௌனத்திலும் எதோ கண்டுக் கொண்டு “ஹேய்.. என்ன நந்து..” என வினவ..
மனையாள் தலைகுனிந்துக் கொண்டே “ஹூம் ஹூஹூம்ம்..” என்றாள்.
கணவன் முகத்தில் ரகசிய புன்னகை எதையோ அனுமானித்துவிட்ட புன்னகையில் “ஹேய் சொல்லு நந்து.. என்ன நினைச்ச.. என்ன” என்றான் ரசிகனாக.
மனையாள் கோவமும் வராமல்.. வெட்கம் வேறு வந்து தொலைக்க.. “விடுங்க” என கலவையான உணர்வுகளில் தன் கையினை அவனிடமிருந்து விடுவிக்க.. போராட.
கணவன் “இரு நந்து, அஹ.. என்னால் உன்னை விட முடியாது.. நான் ஒரு கையில்தான் பிடித்திருக்கேன், இரு.. ஆடாத.. உனக்கு வலிக்கும்” என்றான் அதே மந்தகாச புன்னகையோடு.
மனையாள் கணவனின் பேச்சினை புரிந்துக் கொண்டு.. அவனின் புன்னகையை பொறுக்க முடியாமல்.. தன்னை கேலி செய்கிறானோ என எண்ணி “நீங்க விடுங்க” என சிணுங்கினாள்..
கணவனுக்கு ஆனந்தமாக இருந்தது “என்ன சொல்ற.. காது கேட்க்கலை.. என்னை பார்த்து சொல்லு” என்றான்.. பிடி தளர்ந்தது தன்போல, ஆனால், அவனின் கவனமெல்லாம்.. அவளின் சிணுங்கள் மொழியில்தான்.. புதுரத்தம் பாய்ந்தது போல ஒரு சுறுசுறுப்பு.. ஒரு இஞ்ச் வளர்ந்துக் கொண்டான்.. அவளையே பார்த்திருந்தான்.
பெண்ணவள் அவனின் பிடியிலிருந்து விலகினாள்.. கணவனின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்து.. குறைத்துக் கொண்ட வெட்கத்தோடு “என்ன..” என்றாள் புன்னகை இழையோட.
கணவன் “நீதான் சொல்லணும்” என சொல்லிக் கொண்டே அமர்ந்தான் கட்டிலில்.. அவனின் உணர்வுகள் தளும்பிக் கொண்டிருந்தது.. மனையாளின் அமைதியும் இம்சையாக இருக்க.. தன்னை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான்.
நந்தித்தா “எனக்கு போட்டோ அனுப்புங்க” என்றாள்.
பசுபதி “ம்.. எனக்கு அப்போ தெரியலை.. நமக்கு அப்போ தெரியலை.. தெரிந்திந்திருந்தால் கொஞ்சம் அப்போவே பேசி புரிந்துக் கொண்டிருக்கலாம்.. இல்ல” என்றான்.
நந்தித்தாவிற்கு இந்த பேச்சு இயல்பாக இல்லை.. அத்தோடு பள்ளி நாட்கள் என்பது ஆனந்தை நினைவுப்படுத்த.. எதற்கு இந்த பேச்சு என ஒருமாதிரி உணர்ந்தாள். அமைதியாக இருந்தாள் கணவனுக்கு பதில் சொல்லாமல்.
கணவன் “நானும் ஆனந்தும் நல்ல ப்ரெண்ட்ஸ். நீயும் ஆனந்தும் நல்ல ப்ரெண்ட்ஸ்.. ஜாலியா இருந்ததுதானே.. அப்போவெல்லாம்.” என்றான் அந்த நாட்களின் நினைவில்.
பெண்ணவள் பெரிதாக அந்த நாட்களுக்கு செல்ல எண்ணவில்லை.. ஆனந்த என்ற பெயரும் அவளை பாதிக்கவில்லை. அதனால் “அதெல்லாம் ஜாலி தான். இப்பவும் நான் ஸ்கூல் லைப்பில் இருப்பது போலதான் இருக்கேன். அஹ.. நீங்கதான் எல்லா மறந்துட்டீங்க போல..” என்றாள்.. புன்னகையோடு.
கணவன் “நான் என்ன மறந்துட்டேன்.. புரியலை” என்றான்.
மனையாள் “இல்ல.. நான் இன்னமும் டீச்சிங்கில் தானே இருக்கேன். அதைதான் சொன்னேன்..” என்றாள்.
கணவன் “இல்லையே வேற எதோ சொன்னது போல இருக்கே” என்றான்.
மனையாள் “இல்ல.. நீங்க ஏதாவது நினைச்சிக்காதீங்க” என்றவள்.. வெளியே வந்துவிட்டாள்.
பசுபதி அதே யோசனையோடு சற்று நேரம் உறங்கினான்.
பின் மாலையில்தான் எழுந்துக் கொண்டான். பசுபதி கீழே வந்தான்.. இப்போது இந்த வீடு சென்னை வீடு போல இருந்தது.. தன் வீடு என்ற எண்ணம் எழுந்தது. அவள் இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்தாள்.. மதியம் பேசியது பாதியில் தொக்கி நின்றாலும்.. அவளின் பதில் பேச்சு.. நான் இங்குதான் இருப்பேன் என எடுத்த முடிவிற்கு ஞாயம் சேர்த்ததாக இருக்க.. இத்தனை நாள்.. இல்லாமல் அவளும் வீட்டில்.. ஏதேதோ செய்துக் கொண்டிருப்பதும்.. உறவில் இன்னும் உயிர்ப்பிருக்கிறது என தோன்றியது.
ஏழு மணி.. மனையாள் கணவன் கீழே வந்ததை பார்த்துவிட்டு சூப் கொண்டு வந்து கொடுத்தாள்.
பசுபதி “நந்து.. கேக் வாங்கிட்டு வந்தேன்.. பிரிட்ஜ்ஜில் இருக்கு.. எடு.. உனக்கு பிடிக்கும்ன்னுதான் வாங்கினே” என சொல்லி.. அவன் எழுத்துக் கொள்ள.
மனையாள் “இருங்க, நான் எடுக்கிறேன்” என சொல்லி.. அவன் சொல்லியபடி எடுத்து வந்தாள்.
மனையாளின் முகம் அந்த கேக் பார்த்ததும் மலர்ந்தது தன்போல.. கணவன் ரசித்தான் அதனை. இருவரும் சேர்ந்தே அந்த கேக் எடுத்துக் கொண்டனர். அவளின் கல்லூரி வேலை பற்றி பேச்சுகள் சென்றது.
நாட்கள் இப்படியே நகர்ந்தது. வாரம் ஒருமுறை பெரியவர்கள் வந்தனர். பிரசன்னா வந்தான் ஒருமுறை.. பசுபதியை பார்க்க.
பிரகதீஷ் வந்தான். நான்குநாட்கள் தங்கினான்.. ‘அண்ணியோட தியேட்டர் போயிட்டு வா அண்ணா.. கையில்தானே அடி.. சும்மா போயிட்டு வா’ என்றான்.
பசுபதிக்கு அதெல்லாம் தோன்றவேயில்லையே தனக்கு என எண்ணிக் கொண்டான்.
தம்பி ஊருக்கு சென்றதும்.. ‘மனையாளிடம் படம் பார்க்க போலாமா’ என கேட்டு.. இருவரும் தியேட்டர் வந்தனர். மனையாளை தன் கையில் பற்றிக் கொண்டான் அந்த நாள். நீண்டநாட்கள் ஆகிற்று அந்த தொடுதலை தங்களுக்குள் நிகழ்த்த.. அவ்வளவு எளிதல்ல போல.. முன்பாதி எல்லாம் பார்த்தவர்கள்தான் இவர்கள்.. ஆனால், இது புது தொடக்கம் போல.. பெண்ணவளின் விரல்கள்.. கணவனின் மென் தொடுதலில் சற்று நடுங்கியது. ஆனாலும், மிரளவில்லை.. இசைந்துக் கொண்டது அவனோடு.. என்னமோ அவள் விரல்களை விட மனதில்லை.. கணவனுக்கும்.
ஒருமாதத்திற்கு மேல் கடந்திருந்தது.
பசுபதிக்கு கை கொஞ்சம் சரியாகி இருந்தது. பிசியோ செய்துக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் அலுவகல வேலையும் செய்கிறான்.
இன்று, நந்தித்தா எதோ தன்னோடு வேலை செய்யும் தோழியின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா.. அங்கே சென்றுவிட்டு தாமதமாகத்தான் வந்தாள். காலையிலேயே சொல்லிவிட்டுதான் சென்றாள், கணவனிடம். மணி ஒன்பதுக்கு மேல்.
நந்தித்தா வரும் வரை பசுபதி உண்ணவில்லை.. அந்த சிட்அவுட் பகுதியிலேயே அமர்ந்திருந்தான்.. சொல்ல போனால் காத்திருந்தான்.
மனையாள் வண்டியை நிறுத்திவிட்டு வந்ததும்தான் கணவன் நிமிர்ந்தான். மனையாள் வந்ததும் “சாபிட்டீங்களா..” என்றாள் முதல் கேள்வியாக கண்களை உருட்டி.. எதோ சிறுபிள்ளையை மிரட்டுவது போல.
இப்போதெல்லாம் பேச்சுகள் இயல்பாக வர தொடங்கிவிட்டது. அந்த வழக்கத்தில்.. கேட்டுவிட்டாள்.
கணவன் “பசிக்கலை.. சரி, என்ன பார்ட்டி முடிய இவ்வளோ நேரமா” என்றான்.
மனையாள் “சொல்லிட்டுதானே போனேன்” என சொல்லி கணவன் அருகிலேயே அமர்ந்துக் கொண்டாள். பின் “அந்த குழந்தை அழகா இருந்தது.. பேரு ரக்ஷ்ன்.. என்கிட்ட வந்துட்டான்.. யாரு கூப்பிட்டும் போகலை.. குறுகுறு கண்கள்.. பஞ்சு போல கன்னம்.. அஹ” என சொல்லி உடல் சிலிர்த்தவள்.. “சமர்த்தா இருந்தான்.. எனக்கு மனசே இல்ல.. அவனை விட்டு வர.. எப்படிதான் சத்யா அவனை விட்டு வேலைக்கு வராலோ..” என சொல்லிவிட்டு கணவனை பார்க்க.. கணவனின் முகம் கசங்கி இருந்தது.
மனையாள் சுதாரித்து “எ..ன்னங்க.. வாங்க உள்ளே போலாம்..” என சொல்லி எழ.
கணவன் “நந்து..” என சொல்லி கையை பிடித்துக் கொண்டான்.
மனையாளின் கண்ணில் கடகடவென கண்ணீர் நிரம்பியது. இதுவரை கடந்ததைபற்றி.. பேசவேயில்லை.. தங்களுக்குள் இளைப்பாறிக் கொள்ளவேயில்லை.. இங்கே சட்டென நடந்த உரையாடலில் அந்த தடை உடைய.. இருவரும் கைகளை பற்றிக் கொண்டனர்.
பசுபதி “இப்போ பாப்பா இருந்திருக்குமோ.. நமக்குள் ஏதும் இப்படி நடந்திருக்காதோ.. அஹ” என சொல்லி ஒரு மூச்சினை இழுத்துவிட்டான்.
நந்தித்தாவிற்கு.. அத்தனை அழுகை.. அடக்கி அடக்கி.. வைத்திருந்த அன்றைய அழுகை.. இன்று கணவன் முன் வெடித்து கிளம்பியது.. “நான் அன்று உங்ககிட்ட சொல்ல ஆசையா இருந்தேன்.. காலையிலிருந்து வெயிட் பண்ணேன்.. நைட் நீங்க லேட்” என சொல்லி நிறுத்தி, மீண்டும் அழுகை.
கணவன் “சாரி டா.. எனக்கு தெரியலை டா.. ச்ச” என்றான்.
நந்தித்தா சேரிலிருந்து எழ முற்பட.. கணவன் மீண்டும் அவளின் கையை பிடிக்க.. அமர்ந்தாள் பெண்.
பசுபதி அவளை நெருங்கி அமர்ந்தான்.. தோளோடு அனைத்துக் கொண்டான். மனையாள் “உங்களுக்கு விஷயம் தெரியாதில்ல.. எனக்குதானே தெரியும்.. நீங்க நீங்க இல்லையே” என்றாள் குறைபடும் குரலில்.
கணவன் தழைந்து போனான் “சாரி டா.. என்மேல்தான் தப்பு, அன்னிக்கு நான் உன்கூட ஏதும் பேசாமல் இருந்திருக்கனும், சண்டையாகிடுச்சி.. என்னால்தான். அதை இப்போ நினைக்க கூடாது. முடிஞ்சி போச்சு. இப்போ இப்படி அழாத.. சரியாகிடும்.. பார்த்துக்கலாம்” என்றவன் மனையாளின் கண்களை துடைத்துவிட்டான்..
சிறுபிள்ளையாய் கணவனின் கைகளை தட்டிவிட்டாள்.. அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அஹ.. நேசம் கொண்ட மனம் உடைந்து நிற்கையில்.. வரும் செய்கைகள் எல்லாம் தலைகீழ்தான்.
பசுபதிக்கு முன்போல ஆராய தோன்றவில்லை.. தேறுதலாக அவளின் தோள் அனைத்துக் கொண்டான்.
கணவன் “ நிறைய யோசிக்காத நீ.. இப்போ எல்லாம் சரியா இருக்குல்ல.. நல்லதா யோசி.. நம்மோட இன்றைய நேசம் ஒரு ஸ்பெஷல் தானே. பழசை விடு டா..” என தன்னவளின் உச்சியில் முத்தமிட்டு.
நந்தித்தா கணவனின் தோள் சாய்ந்து அமர்ந்திருந்தாள் பேச்சுகளில் கவனமில்லை.. கணவனிடம் நீண்டநாள் சென்று அழுததில் ஒரு நிம்மதி போல.. நிர்மலமாக இருந்தது மனது.