இரவு, அண்ணனும் கணவனும் சென்னை கிளம்பினர். பிரசன்னா போனிலேயே பேசிக் கொண்டிருந்தான்.
பசுபதி உண்ணும் போது.. கிளம்பு சாக்கில்.. என எப்போதும் தன்னவளின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.. சற்றேனும் அதில், கருணை காட்டமாட்டாளா என. ஆனால், அதில் குழப்பம்தான் இருந்தது போல.. தன்னை பார்க்கிறாளா என கணவன் பார்த்துக் கொண்டே இருந்தான்.. அவ்வபோது வேலைகளின் நடுவே.. தன்னுடைய பார்வையை எதிர்கொள்ளுகிறாள் மனையாள்.. ஆனாலும், அதில் குழப்பம்தான் நிறைய தெரிகிறது. அவனுக்கு புரிகிறது, அதை சரி செய்தான் நினைக்கிறேன்.. என்னை கொஞ்சம் யோசி என மனதுக்குள் எண்ணிக் கொண்டானே தவிர.. அவளிடம் நெருங்கி ஏதும் பேச முடியவில்லை. அதே தயக்கத்தோடு காரருகே வந்துவிட்டான். மனையாள் கீழே வழியனுப்ப வருவாள் என எதிர்பார்த்தான் பசுபதி. மனையாள் வரவேயில்லை.. அந்த நிமிடம் அவளை விட்டு போவது அத்தனை வலியாக இருந்தது அவனுக்கு.. மேலே நிமிர்ந்து பார்த்தான்.. ஏமாற்றவில்லை நந்தித்தா, அங்கே நின்றிருந்தாள். பசுபதி வெண்ணிலவென தெரியும் அவளின் முகத்தினை தன்னுள் எடுத்துக் கொண்டு.. கிளம்பினான்.
நந்தித்தாவிற்கு ஆதங்கம் ‘நான் என்ன தவறு செய்தேன்’ என்று. அதற்கு விடையே சொல்லவில்லையே அவர் என எண்ணம்தான். ஏதும் பேச தோன்றாமல் அமைதியாக இருந்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் சென்னை சென்று சேர்ந்ததும், பசுபதி மனையாளுக்கு அழைத்தான் போனில்.
நந்தித்தா எடுத்து பேசினாள்.
பசுபதி எப்போது சென்னை வந்தோம்.. பிரசன்னா இங்கிருந்துதான் அலுவலகம் கிளம்பினான். நான் சற்று உறங்கிவிட்டேன்.. இப்போதுதான் கிளம்புகிறேன் என கதை கதையாக சொன்னான். அவன் எதோ ரேடியோவில் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தான். நந்தித்தா காலை கிளம்பிக் கொண்டே ஸ்பீக்கரில் கணவனின் குரலை கேட்டுக் கொண்டிருந்தாள்.. இதழில் ஒரு புன்னகை ஒன்று ஒட்டிக் கொண்டே இருந்தது. அத்தோடு, தன் பதிலை எதிர்பார்க்கவில்லை எனவும்… ரசிக்க முடிந்தது கணவனின் பேச்சினை.
பசுபதி பேசி முடித்து.. “என்ன நந்து.. கேட்க்குறியா” என்றான்.
அவனின் மனையாளும் “ம்..” என்றாள் ஒரு ப்லொவ்வில்.
பசுபதிக்கு அந்த ‘ம்..’ என்ற எழுத்து.. நம்பிக்கையை கொடுக்க “அஹ்.. நிறைய பேசுறேன்.. மிஸ் யூ நந்து.” என்றான்.
நந்தித்தா கேட்டுக் கொண்டாள், பதில் மொழியவில்லை. பெண்ணவளின் முகம் அங்கே மின்னியது.. கணவன் பற்றிய எல்லா தள்ளி நிற்க.. இந்த நேரம் எதோ உணர்ந்தது போல எண்ணம். பசுபதி எப்போதும் மனையாளிடம் அதிகம் பேசாதவன்.. பேசினாலும், அவளை சார்ந்து பேசமாட்டான்.. கொஞ்சம் தள்ளி ஒட்டியும் ஒட்டாமல்தான் பேசுவான். ஹனிமூன் என சென்று வந்த பின்தான் கொஞ்சம் சகஜமாக அவளை தேடினான். அப்போதும் பேச்சு குறைவுதான்.. அவனின் உணர்வுகள் உடல்மொழியில்தான் வெளிப்படும்.
அதனாலோ என்னோ.. கணவனின் மிஸ் யூ என்ற வார்த்தை மனையாளை பாதித்தது. அமைதியாகவே இருந்தாள் அதை ரசித்துக் கொண்டு.
பசுபதி பதிலில்லாததால் “நந்து, ஆபீஸ்க்கு டைம் ஆச்சு, நைட் பேசறேன்” என்றான் ஒரு பெருமூச்சோடு.
நந்தித்தாவிற்கு இந்த பொறுப்பான குரல்.. அவளின் சிந்தனையை கலைத்து ‘ம்.. இதுதான் பதி’ என எண்ணிக் கொண்டே ஒரு பெருமூச்சோடு “ம்” என சொல்லி அழைப்பினை துண்டித்துவிட்டு சென்றாள்.
அந்த வார விடுமுறையில் பசுபதி கோவை செல்ல வேண்டும் எனதான் எண்ணியிருந்தான். ஆனால், திவ்யாவின் கம்பெனியில் மீண்டும் எதோ குழப்பம் என அழைத்திருந்தனர்.
பசுபதி நிர்வாகத்திடம் போனில் பேசிவிட்டான். ஆனாலும் விடுவதாக இல்லை அவர்கள்.. நேரில் பார்க்க வேண்டும் வாருங்க என அழைத்துக் கொண்டிருந்தார்.
பசுபதிக்கு இடறியது.. எதோ திவ்யாதான் காரணம் என. ஒன்றும் சொல்ல முடியவில்லை.. இந்த பிரச்சனையை இன்றோடு முடித்திடலாம் என எண்ணிக் கொண்டு, தன் ஜுனியர் ஒருவரோடு கிருஷ்ணகிரி கிளம்பினான்.
முதலில் அலுவலக வேலையை கவனித்தான்.
மாலையில் பசுபதி பெங்களூர் கிளம்பிவிட்டான்.
சரியாக திவ்யா அழைத்தாள்.. பசுபதிக்கு.
பசுபதி அந்த அழைப்பினை ஏற்கவில்லை. கோவமாகவே வந்தது.. அவன் இப்போது திவ்யாவின் தந்தையை பார்த்து பேசுவதற்கு என பெங்களூர் சென்றுக் கொண்டிருக்கிறான். இப்போதும் அவளின் அழைப்பு அவனுக்கு கோவத்தைதான் தந்தது.
வேகத்தை அதிகமாக்கினான்.. மனையாளின் முகத்தினை மனதில் எடுத்துக் கொண்டான்.. ‘எத்தனை வலி என்னால் அவளுக்கு’ என எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது.
இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிட்டது. நேரம் கடந்துவிட்டதுதான்.. ஆனாலும். திவ்யாவின் வீட்டின் முன் நின்றான் பசுபதி. எந்த குழப்பமும் இல்லை. எனக்கு என் வாழ்க்கை வேண்டும் என்ற உறுதி மட்டும்தான். மனதில் உறுத்தலோடு வாழ விரும்பவில்லை, பசுபதி.
அவர்களின் பதட்டம் உண்மை என்பது போல.. பசுபதி சொன்ன செய்தி இருந்தது.
திவ்யாவின் குடும்பம் தலைகுனிந்துதான் அமர்ந்திருந்தது. பசுபதிக்கு சொல்லி காட்ட என வரவில்லை.. திவ்யா என்பவள்.. என் வாழ்க்கையில் இல்லை. அதன்மூலம் யாரும் காயப்படுவதை நான் அனுமதிக்க முடியாது என அவனின் மனம் சொல்ல.. இப்போது வந்து அவர்கள் வீட்டில் எல்லாம் சொல்லிவிட்டான்.
திவ்யாவின் அண்ணன் மன்னிப்பினை வேண்டினார். யாருக்கும் பேச முடியவில்லை.. திவ்யாதான் பிடிவாதமாக இருக்கிறாள்.. திவ்யாவின் கணவர் நல்லவர் என.. சொல்லிக் கொண்டிருந்தனர். பசுபதிக்கு, அந்த செய்தி ஒருவகையில் நிம்மதியாக இருந்தது.
ஒருமணி நேரத்தில் கிளம்பிவிட்டான் பசுபதி. மனதின் பாரமே இறங்கிய உணர்வு. மனையாளை இனி நேராக பார்த்து பேச முடியும் என்னால் என பெரும் நிம்மதி. இதுதான் வழி என இத்தனைநாள் அவனுக்கு தெரியவில்லை. ஆனாலும், திவ்யாவின் பெற்றோரிடம் பேசி வந்ததும்.. அத்தனை நிம்மதி.
உணவு உண்டான். கொஞ்சம் தன்னை தளர்த்திக் கொண்டு.. கார் எடுத்தான். சென்னை செல்ல எண்ணம் வரவில்லை.. கோவை சென்று மனைவியை பார்த்துவிட்டு.. ஒருநாள் இருந்துவிட்டு செல்லலாம் என.. எண்ணிக் கொண்டே டிரைவ் செய்தான்.
நந்தித்தாவிற்கு இன்று முழுவதும் அழைக்கவில்லை, பசுபதி. வேலை.. அத்தோடு.. திவ்யா பிரச்சனையை முடித்துவிடலாம் என எண்ணிக் கொண்டிருந்தான்.
இப்போது ஸ்ர்ப்ரைஸ் என எண்ணிக் கொண்டே ஒரு புன்னகையோடு, வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.. முதல் கார் பயணத்தில் அவளின் செய்கை இப்போது நினைவு வந்தது.. மனையாளுக்கு அழைக்கலாம் என எண்ணி.. நேரம் பார்த்தான் நள்ளிரவுக்கு மேல்.
நாளை கல்லூரி இல்லைதான்.. உறங்கியிருப்பாள் எப்படி இந்த நேரத்தில் அழைப்பது.. என யோசித்துக் கொண்டே பத்து நிமிடம் கடந்துவிட்டது.
வேசவேண்டும் என எண்ணம்.. அன்று நான் அவள் கையை பிடிக்கமாட்டேன் என அடம் செய்தது எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு வர.. ஒருமுறை பேசிவிட்டால் கொஞ்சம் பெட்டெர் என எண்ணிக் கொண்டே காரினை டீ ஷாப் ஒன்றில் நிறுத்தினான்.
நேரம் இரவினை கடந்துக் கொண்டிருந்தது..
ஒரு டீயினை கையில் வைத்துக் கொண்டு.. போனில் மனையாளின் புகைப்படத்தினை பார்த்துக் கொண்டிருந்தான்.
அழைக்க தோன்றவில்லை.. நேரே விடியலில் வீடு சென்றிடலாம் என எண்ணிக் கொண்டு வண்டியை எடுத்தான்.
அதிகாலை நான்குமணி.. கோவையை நெருங்கிவிட்டான், பசுபதி. அந்த நேரத்தில் அவனின் காரின் பக்கவாட்டில் உரசியது. அவனின் பின்னால் வந்த கார்.. அஜாக்கரதையாக தன் வாகனத்தை செலுத்தியதால்.. பசுபதியின் காரில் இடித்துக் கொண்டு, முன் பறந்தது மூர்க்கமாக.
கீரீச் என சத்தத்தோடு காரின் பக்கவாட்டில் உரசியதில் சட்டென கார் வளைந்து பசுபதியின் கட்டுபட்டிலிருந்து தப்பி.. பின், கார் தாறுமாறாக சென்றது.. பசுபதி சுதாரித்து.. தன் கட்டுப்பாட்டில் காரினை கொண்டு வந்தான். பின் ஓரமாக வண்டியை நிறுத்தி என்ன ஆகிற்று என அவசரமாக இருங்கி பார்க்க.. அப்போது பின்னிலிருந்து கார் வந்ததை கவனிக்கவில்லை.. பசுபதி. முன்போல அந்த கார் இப்போது அவனின் கையை பதம்பார்த்து முன் சென்றது.
பசுபதி வேகத்தில் சற்று தூரம் சென்று விழுந்தான்.
நல்ல வேலையாக அந்த கார் சற்று தூரம் சென்று நின்று.. ரிவர்சில் வந்து, பசுபதியிடம் நிறுத்தியது,
பசுபதிக்கு, மயக்க நிலை.. வலது கை அப்படியே ரத்தமும் சதையுமாக ஆங்காங்கே உடைகள் கிழிந்து.. விழுந்த வேகத்தில் நெற்றி முதுகு காலில்.. என காயம்.
காரில் இடித்தவர்கள் வந்துவிட்டனர். பசுபதியை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
முதலுதவி பசுபதிக்கு செய்யப்பட.. அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கு அழைப்பது என கேட்டு.. பசுபதியின் மனையாள் நந்தித்தாவிற்கு அதிகாலையில் அழைத்து விவரம் சொல்லினர்.
நந்தித்தாவிற்கு.. கணவன் கோவை வருவான் என அனுமானம் கூட இல்லை. ஒன்றும் புரியாமல் கிளம்பி மருத்துவமனை சென்றாள் பெண்.
கணவனுக்கு, முதலுதவி செய்யப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தான். நந்தித்தாவிற்கு கண்ணீர் கண்களை மறைக்க.. கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள். செவிலியர்கள் வந்து விவரம் சொல்லினர்.
நந்தித்தாவிற்கு, எதோ புரிந்தும் புரியாத நிலை.. அந்த நேரத்தில் பணியிலிருந்து மருத்துவர்களை பார்க்க சொல்லினர்.
நந்தித்தாவிற்கு விவரம் சொல்லினர், மருத்துவர். அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். காலை எட்டு மணிக்கு மருத்துவர் வருவார் என நேரம் சொல்லினர், அதற்குள் பணம் கட்ட வேணும் என அறிவுறுத்தினர்.
நந்தித்தாவிடம் அவ்வளவு பணம் இல்லை. சம்பாத்யம் அவ்வளவு இல்லையே. உடனேயே தந்தைக்கு அழைத்துவிட்டாள் பெண். குரல் கொஞ்சம் கமற “அப்பா அப்பா” என பெண்ணவள் திணற.
அந்த அதிகாலை நேரத்தில் வேதாந்தன் பயந்தது போலவே ஒன்று நடந்திருந்ததே.. விவரம் சொன்னாள் பெண்.. ‘முதலில் பணம் போட்டு விடுங்கள் அப்பா’ என்றாள். உடனே அதை செய்தார் வேதாந்தன்.
அதன்பின் தானே சென்னையில் தன் சம்பந்திக்கு அழைத்து விவரம் சொன்னார்.. கிளம்பியது இரு குடும்பமும் வெவ்வேறு ஊரிலிருந்து சென்னை நோக்கி.
நந்தித்தாவிற்கு அழைத்து விவரம் கேட்டனர் இரு வீட்டு பெரியவர்களும்.. அத்தோடு தைரியமாக இரு என சமாதானம் செய்தனர்.
அறுவைசிகிச்சை முடிந்து பசுபதி ICU வந்து சேர்ந்தான் மதியம். அப்போதுதான் வேதாந்தன் தன் மனையாளோடு வந்துவிட்டார் மருத்துமனைக்கு.
நந்தித்தாவிற்கு இப்போதுதான் உயிரே வந்தது. ஒரமாக அந்த வார்டில் அமர்ந்திருந்தவள்.. பெற்றோரை பார்த்ததும் எழுந்து நின்றாள்.
பெற்றோரிடம் ஒன்றிக் கொண்டாள். முகத்தின் கலக்கம் சோர்வு எல்லாம் கலந்த தோற்றம். கண்ணில் ஒரு பயம்.. கணவனை தனிய இதுவரை பார்த்துக் கொண்டது.. ஒருமாதிரி பயத்தினை கொடுத்திருந்தது. அப்படியே கலக்கமாக அன்னையின் தோள் சாய்ந்துக் கொண்டாள். ஏதும் பேசவில்லை.. உணர்வுகளால் அழவில்லை.
வேதாந்தன் பொறுப்பெடுத்துக் கொண்டார். மாப்பிள்ளையை எப்போது பார்ப்பது.. என்ன விவரம் என மகளோடு சென்று மருத்துவர்களிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு விவரம் கேட்டுக் கொண்டார். பயப்படும்படி ஒன்றுமில்லை என மருத்துவர்கள் விவரம் சொல்லினர்.
வேதாந்தன், தன் சம்பந்தியிடம் போனில் அழைத்து விவரம் சொன்னார்.
அதன்பின்தான் மகளோடு உண்பதற்காக சென்றனர்.
உண்டு வரவும்.. சற்று நேரத்தில் நந்துவின் மாமனார் மாமியார் வந்து சேர்ந்தனர்.
பசுபதியை அறைக்கு மாற்றிவிட்டனர் மருத்துவர்கள். தந்தையும் அன்னையும் முதலில் சென்று மகனை பார்க்க.. கையில் இரண்டு பிராக்ச்சர்.. கொஞ்சம் அதிக ரத்தம் சென்றிருந்தது. கையை அசைக்கவே கூடாது என ஆர்டர். நெற்றியில் தலையில் முதுகில் என காயம்தான். அமுதா அந்த காயத்தினை வருடி வருடி அழுதார். கெளவ்ரவிற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது, மகனை பார்க்க.
பசுபதிக்கு மனையாள் நினைப்புதான்.. அவளுக்குத்தான் அழைக்க சொல்லியிருந்தேன் வந்தாளா வரவில்லையா என ஒரு தேடல் கண்ணில்.. வாயிலையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான்.
கெளவ்ரவ், மகனை பார்த்துவிட்டு வெளியே வர..
இப்போது வேதாந்தன் தம்பதி உள்ளே சென்றனர். பசுபதி ‘இவர்களும் வந்தாச்சா’ என எண்ணிக் கொண்டே அவர்களின் கேள்வியை எதிர்கொண்டான்.
அவர்களும்.. மாப்பிள்ளையை நலம் விசாரித்தனர்.
‘என்ன.. எப்படி கோவை வந்த..’ என அமுதா கேட்க்க தொடங்கினார்.. பசுபதி, கிளைன்ட் பார்க்க கிருஷ்ணகிரி சென்றது, அங்கிருந்து.. மனையாளை பார்க்க கோவை செல்லலாம் என எண்ணி பயணித்த போது நடந்த விபத்து என எல்லாம் சொன்னான். திவ்யாவின் செய்தியை மறைத்துவிட்டான்.
பெரியவர்களுக்கு ‘அய்யோ’ என்றானது. எல்லோரும் பார்வை பரிமாறிக் கொண்டனர்.
பசுபதிக்கு லேசாக வலி தெரிய தொடங்கியது.. கண்கள்.. மனையாள் வந்திருக்கிறாளா இல்லையா என மீண்டும் வாயிலில் தேடியது.
நந்தித்தா உள்ளே வரவில்லை.. ஒருமாதிரி அசதி.. அத்தோடு பழைய நினைவுகள் வேறு.. அவளை தாக்கிக் கொண்டிருந்தது. அதை உதறவும் முடியாமல்.. கணவனை பார்க்க வேண்டும் என்ற மனதின் ஓர ஆசையை ஒத்தி வைக்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் பெண்.
பசுபதிக்கு, வருத்தமாகியது.. ‘அவள் இப்படி இருந்த போது’ என அவனுள்ளும் பழைய நினைவுகள்.. கண்களை மூடிக் கொண்டான், யாரையும் பார்க்க பிடிக்கவில்லை. மனையாள் வரவில்லை என்றே எண்ணிக் கொண்டான்.
பசுபதி உறங்குகிறான் என எண்ணி.. அமுதா வேதாந்தன் தம்பதி வெளியே வந்தனர்.
நந்தித்தாவிடம், அவளின் அன்னை வந்து “நீ போ நந்து.. போய் பார்த்துட்டு வா.. போ” என்றார்.
நந்தித்தாவிற்கும் உள்ளே செல்ல வேண்டும் என தோன்ற அமைதியாக.. கணவனை பார்க்க அறைக்குள் வந்தாள்.
கணவன் காலையில் பார்த்தபோது இருந்ததை விட கொஞ்சம் முகம் தெளிவாக இருந்தது.. கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருந்தது. விரல்களில் சிராய்ப்புகள்.. மருந்திட்டிருந்தனர்.. நெற்றியில் காயம்.. தோள்பட்டையில் காயம்.. பெண்ணவளின் அன்பால்.. கண்கள் கலங்கியது.
பசுபதிக்கு, உள்ளுணர்வு மனையாள் என அறிவுறுத்த.. கண்திறந்தான்.உணர்வுகள் எப்போதும் பொய்ப்பதில்லை. கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தாள்.. தன்னவள்.
கணவனுக்கு சந்தோசமும் துக்கமும் வெட்கமும் அவஸ்த்தையும் என கலவையான உணர்வு… அவனால் பார்க்கவே முடியவில்லை.. வெட்கி போனான்.. “நீ வந்து பார்க்கமாட்டியோன்னு நினைச்சிட்டேன்..” என்றான் தயக்கமான குரலில்.
நந்தித்தாவிற்கு, சட்டென கரைகட்டி நின்ற கண்ணீர் கன்னம் தாண்டியது.. கணவன் “அழாத டா” என்றான் வாஞ்சையாக.
அந்த குரல் ஆறுதலாக இருந்தது மனையாளுக்கு, பெண்ணவள் கண்களை துடைத்துக் கொண்டாள். அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை.. கணவனை நெருங்க முடியவில்லை.. ஆனால், ஒரு கருணை வந்தது அவன் மேல். ‘என்ன இது’ எனவும் எண்ணம்.. கணவன் பார்வையில் ஏக்கம் தெரிய.. பெண்ணவள் “நான் வீட்டுக்கு போறேன். நீங்க உடம்பை பார்த்துக்கோங்க..” என்றவள் லேசான புன்னகையோடு விடைபெற எண்ணினாள்.
கணவன் “ஏன்.. கொஞ்ச நேரம் இரேன்” என்றான் பதட்டமான வேண்டுத்லான குரலில்.
நந்தித்தா திரும்பி பார்த்தாள்.. என்ன செய்வதென தெரியவில்லை.. இரண்டு மனமாகத்தான் இருக்கிறாள்.. ‘இங்கேயே இருக்கலாம்.. இல்லை, போய்விடலாம்’ என. இப்போது கணவன் கேட்கவும்.. “நான் என்ன பண்றது.. இங்கே” என்றாள்.
கணவன் நம்பிக்கை கொண்டவனாக “உட்கார்.. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான் உறுதியான குரலில்.
அந்த முரலினை தட்டி செல்ல மனம் வரவில்லை.. நந்தித்தாவின் கண்ணில் எதோ ஆர்வம் தெரிய.. ஒரு சேர் எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
பசுபதிக்கு முடியவில்லை.. லேசாக வலித்தது ஆனாலும், மனையாளை தன்னோடு பிடித்து வைக்க எண்ணினான் “நான் திவ்யா அப்பாவை பார்த்து பேச போகியிருந்தேன்” என தொடங்கி நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தான்..
ஒரு கட்டத்தில் வலி எடுக்க.. முகம் லேசாக சுருங்கியது.. மனையாள் “இல்லைங்க.. கண்ணெல்லாம் சிவக்குது.. கொஞ்சம் தூங்குங்க” என்றாள்.
கணவன் பேச்சினை நிறுத்திவிட்டு.. மனையாளையே பார்த்தான் ‘நீ என்னை விட்டு போய்டுவ’ எனும் பார்வையாக.
மனையாளுக்கு இந்த பார்வை அப்பட்டமாக புரிந்துவிட்டது.. ஆனால், பதில் சொல்ல அவளுக்கு தயக்கம்.. கணவனை பார்க்காமல் எழ முயன்றாள்.
பசுபதி “ஹேய்.. என் கூடவே இருறேன்” என்றான் யாசகமாக.
நந்தித்தா “நீங்க தூங்குங்க” என்றாள்.
கணவன் “நந்து.. ப்ளீஸ்” என்றான் அழுத்தமான.. சின்ன குரலில். முகமே வாடியிருக்க.. என்னமோ போலானது அவனுக்கு.
“குறைகள் உள்ளது மனித
உறவுகள் புரியாதா..
இது கண்ணீர் நடத்தும்
பேச்சு வார்த்தை
உடைந்த மனங்கள் ஒட்டாதா..”
பெண்ணவளுக்கு மீண்டும் கண்கள் கசிந்தது.. மீண்டும் சேரில் அமர்ந்தாள்.
கணவன் நிம்மதியோடு கண்களை மூடிகொண்டான்.. மனையாள் அருகில் இருக்கிறாள் என்ற எண்ணத்தில்.