தலைகீழ் நேசம்!

14

பசுபதி விடியலில் வீடு வந்து சேர்ந்துவிட்டான். ஆனாலும் மனது பதைபதைத்துக் கொண்டிருந்தது. நான் அவள் அழைத்தும் சென்றிருக்க கூடாது.. அவள் கஷ்ட்டபடுவதை பார்க்க முடியலை.. நான் போயிருக்கவே கூடாது.. என எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்.

நந்தித்தா, குளித்துக் கொண்டிருந்தாள். அதனால், கணவன் வந்தது தெரியவில்லை. ஏன், கீழே யாரும் கூட பார்த்திருக்கவில்லை. 

இப்போது, பெண்ணவள் குளித்து வந்து.. அங்கிருந்த ஹால் சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். என்னமோ இன்று சற்று தலைசுற்றியது.. நந்தித்தா அப்படியே கண் மூடி.. தலையை சாய்ந்துக் கொண்டாள்.. சோபாவில்.

நந்தித்தா கீழே இன்னும் வராததை கண்டு.. அமுதா போனில் அழைத்தார். அவளின் போன் அறையில் இருந்தது போல.. நந்தித்தாவிற்கு, அது காதில் கேட்கவில்லை. 

அமுதாவும் தொந்திரவு செய்யவில்லை.. பூஜையை தானே செய்து.. வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார்.

அப்போதுதான் பசுபதியின் கார் நிற்பதை பார்த்து.. வேலையாட்களிடம் பசுபதி வந்துவிட்டானா என கேட்டுக் கொண்டார்.

பசுபதி, காலையில் நிம்மதியாக தன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால், திவ்யா அலுவலகம் வந்தவள்.. பசுபதி இல்லாமல் அவனின் உதவியாளர்கள் மட்டும் வந்திருப்பதை பார்த்து.. பசுபதிக்கு அழைத்துவிட்டாள், அப்போதே.

உறங்கிக் கொண்டிருந்தவன்.. திவ்யா அழைப்பினை பார்த்து.. அரண்டு போனான். ‘வேண்டாம்.. இவளை பார்த்தாளே நான் தடுமாறுகிறேன் எனதானே.. வந்தேன்.. மீண்டும் எதற்கு அழைக்கிறாள்..’ என அரண்டுபோனான்.

திவ்யா பசுபதி ஏற்கும் வரை.. அழைப்பதை நிறுத்தவில்லை.

விடமாட்டாள் என எண்ணி, பசுபதி அழைப்பினை ஏற்றான்.

திவ்யா “ஹலோ.. பஷூபதி.. நல்லா இருக்கியா.. நீ ஆபீஸ் வரலை, அதான் கூப்பிட்டேன். என்னாச்சு.. நீ நல்லாதானே இருக்க” என்றாள், பதட்டமான குரலில்.

பசுபதியினால்.. திவ்யாவை தவறாக நினைக்க முடியவில்லை. அதற்காக, அவளுக்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் தோன்றவில்லை. தான் செய்வது தவறு.. என புரிகிறது. ஆனால், பாவமாக இருக்கிறது, தான் காதலித்தவள் இப்படி யாருமில்லாமல் நிற்பதையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஓய்ந்த குரலில் “ம்.. கொஞ்சம் உடம்பு முடியலை.. சென்னை வந்துட்டேன்.” என்றான்.

திவ்யா “ஏ..ன், சாரி பஷூ.. என் கதையை சொல்லி உன்னை கஷ்ட்டபடுத்திட்டேன்.” என்றாள்.

பசுபதி “இல்ல.. விடு திவ்யா. நான் உன்கிட்ட அப்புறம் பேசவா.. வொர்க் இருக்கு.. கிளம்பனும்” என்றான்.

திவ்யா “எப்போ பேசுவ..” என்றாள்.

பசுபதி நொந்து போனான்.. ஆனாலும் “திவ்யா உனக்கும் வேலை இருக்குமே பாரு. நான் இன்னும் நந்துவை பார்க்க கூட இல்லை. என் சீனீயர் வேற கூப்பிடுறார்.. என்ன இப்போ.. பேசலாமே..” என்றான் அவளை சமாதானம் செய்வது போல.

திவ்யா “ஓ.. ம்.. உனக்கு வைஃப் இருக்கால்ல. எனக்குதான் யாருமில்லையே.. அதான் கேட்டுட்டேன் போல..” என்றவள், சட்டென பதட்டமான குரலில் “என்கிட்டே என்கிட்டே நீ.. தினமும் ஒரு பத்து நிமிஷம் பேசு போதும்.. ம்.. டென் மினிட்ஸ்.. நாம நல்ல பிரெண்ட்ஸ் பஷூ.. எனக்கு உன்னை தவிர யாருமே தெரியாதே.. ம்.. “ என அவள் விசும்பினாள்.

பசுபதி அமைதியாகவே இருந்தான்.. அவளை காயப்படுத்தும் அனைத்து வார்த்தைகளும் அவனிடம் இருக்கிறது.. ‘உன் வாழ்க்கை திவ்யா இது. நாம  பிரிஞ்சிட்டோம். பழைய மாதிரி நாம இருக்க முடியாது திவ்யா.. இனி இப்படி கால் பண்ணாத.. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு..’ என மூளை நினைக்கிறது. ஆனால், அவள்.. நான் நேசித்தவள். ஒரு காபி வேண்டுமென்றால் கூட வாய் திறந்து கேட்க்கமாட்டாள். இன்று இப்படி எல்லாம் பேசுமளவு அவள் மனம் காயம்பட்டிருக்கிறது.. என எண்ணிக் கொண்டே.. நின்றான்.

அஹ.. யாரையும் காயப்படுத்திடாமல் வாழ்ந்திடலாம் என நினைப்பவர்களை எல்லாம், வாழ்க்கை நாயகர்களாக கொண்டாடுவதேயில்லை.. கோமாளியாக்கிதானே அழகு பார்க்கும். இங்கே இவனுக்கு என்ன வேஷமோ.

திவ்யா “ரெஸ்ட் எடுத்துட்டு ஆபீஸ் போங்க.. நான் லஞ்ச் டைம்மில் கூப்பிடுறேன்..” என்றாள்.

பசுபதிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை அமைதியாக அழைப்பினை துண்டித்தான். பசுபதி உறக்கம் தொலைத்தான்.

எழுந்து குளித்து உடையணிந்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

நந்தித்தாவினால் இப்போது எழுந்துக் கொள்ள முடிந்தது. ப்ளாஸ்கில் இருந்த காபியை மீண்டும் எடுத்து பருகினாள்.. குளித்து முடித்து அப்படியே வந்திருந்தால்.. தலை துவட்டவில்லை.. பொட்டு வைக்கவில்லை.. என அப்படியே இருந்தாள். 

பசுபதிக்கு மனையாள் இங்கே இருப்பதை பார்த்ததும்.. அவள் தன்னை எழுப்ப வேண்டாம் என எண்ணி காத்திருக்கிறாள் என எண்ணி “நந்து குட் மோர்னிங்” என்றான் சோர்ந்த குரலில்.

நந்தித்தா துள்ளி எழுந்தாள்.. “எப்போ வந்தீங்க” என்றாள், கணவனின் குரல் கேட்டதும். முகத்தில், சென்ற நொடி வரை இருந்த களைப்பு எங்கோ சென்றுவிட்டது.

பசுபதிக்கு முகம் வாடி போனது “என்னை நீ பார்க்கவேயில்லையா” என்றான்.

நந்தித்தா “இல்ல.. நேற்று நான் கேட்டேன்.. நீங்க இன்னிக்கு வரேன்னு சொல்லவேயில்ல” என்றாள், தன் அயர்வெல்லாம் எங்கோ சென்ற குரலில்.

பசுபதி தன் ஷர்ட் பட்டனை போட்டுக் கொண்டே வந்து அமர்ந்தான் “அப்போவே வந்துட்டேன், அது.. கொஞ்சம் இங்க வேலை.. அதான் வந்துட்டேன். உன்கிட்ட.. விடு,”  என நெற்றியை தேய்த்துக் கொண்டவன்.. பேச்சினை மாற்றும் பொருட்டு “நீ என்ன இங்க இருக்க.. இந்நேரம் பூஜை ரூம்மில்தான் இருப்ப” என்றான்.

நந்தித்தா “எனக்கு டயர்டா இருந்தது. அதான். நான் இப்போதான் காபி குடித்தேன்.. கிரீன் டீ குடிக்கிறீங்களா.. இல்லை, கீழே போய் ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாமா” என்றாள்.

பசுபதி நிமிர்ந்து அவளையே பார்த்தான்.. உடம்பு சரியில்லை எனவும்.. என்னாச்சு இவளுக்கு.. என ஆராய்ந்தான். அவளின் மேனியை வலம்வந்த.. கண்கள்.. அவளின் விழி நோக்கி சென்றது.. சட்டென அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.. இப்படி எல்லாம் அவளை நேராக ஆராய்ந்ததில்லை கணவன். இப்போது எதற்காக பார்க்கிறோம் என அவனுக்கு தெரியவில்லை.. அவனையும் அறியாமல்.. அவளின் விழியில் நிலைத்து அவனின் பார்வை.. இருவரின் பார்வையும் நேர்கொண்டு சந்தித்துக் கொண்டது. என்ன பகிர்ந்துக் கொண்டது என தெரியவில்லை, அந்த இரண்டு நொடிகளில்.

பசுபதி சுதாரித்து  “இல்ல, கிரீன் டீ போடுறீயா? முடியுமா” என்றான், மீண்டும் தன்னவளின் கண்களை பார்த்து. அவனுக்கு புரிகிறது அவளின் சோர்வு. ஆனால், கீழே செல்ல மனதில்லை இப்போது.

நந்தித்தா வேகமாக எழுந்தாள். இப்போது தலை சுற்றவில்லை.. வேகமாக அவன் கேட்டதை தயாரிக்க சென்றாள்.

பசுபதி மனையாளின் பின்னாடியே சென்றான்.. இத்தனை நாட்களில் அவனுக்கு தோன்றாத உணர்வு.. இது, இப்படி.. இன்னது.. என விவரிக்க தெரியவில்லை.. அவளின் அணைப்பு வேண்டும் போலவும்.. அவளிடம் எல்லாவற்றையும் கொட்டிட வேண்டும் போலவும்.. எண்ணம் தளும்பி நிற்கிறது.

ஆனாலும், அவள் சங்கடபடுவாள்.. நான் அவளோடு வாழ்ந்த நாட்களை எண்ணி, இப்போது குழப்பிக் கொள்ளுவாள், வேண்டாம்.. இனி திவ்யா.. இல்லை. அவளை பார்க்க போகமாட்டேனே.. இதெல்லாம் எதோ நடந்திடுச்சி. இனி என் எந்த அணுவிலும் திவ்யா இல்லையே.. என அவளின் பின்னாலேயே நின்றான்.

நந்தித்தா கணவன்  பின்னால் நிற்பது தெரியாமல் திரும்ப.. கணவனை அருகில் கண்டதும், சற்று அதிர்ந்தவள்.. இப்போது தன் இடது கையை நெஞ்சில் வைத்துக் கொண்டு “பயந்துட்டேன்” என்றாள்.

பசுபதி சிந்தனையிலிருந்து விடுபட்டவன்.. அவளின் அதிர்ந்த தோற்றத்திலும்.. கலங்கிய கண்களிலும்.. பேசிய குரலிலும்.. என்ன நினைத்தானோ.. சட்டென அவளை நெருங்கி தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.. “என்ன பயம், நான்தானே” என்றான், பதட்டமான குரலில். எதற்காக என தெரியவில்லை இப்படி அனைப்போடு இந்த வார்த்தை அவனிடமிருந்து வந்தது. 

மனையாள் எதையும் ஆராயவில்லை.. அவனின் பதட்டம் ஒருமாதிரி ஆனந்தமாக இருந்தது.. அத்தோடு அந்த அணைப்பு இதுநாள் வரை கூடிகளித்த போது கண்டிடாத ஒரு உணர்வை தர.. பெண்ணவள் வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

பசுபதிக்கு நிமிடங்கள் கடந்தது தெரியவில்லை.

மனையாள்தான் “டீ ஆரிபோக போகுது.” என்றாள் சின்ன குரலில்.

பசுபதி சட்டென விலகி ஒரு புன்னகையோடு அவளிடமிருந்து டீ கப் வாங்கிக் கொண்டான். 

நந்தித்தா “என்ன பயந்துட்டீங்களா.. எனக்கு ஒண்ணுமில்ல” என்றாள்.

பசுபதி நடந்துக் கொண்டே.. அவளின் விரல்களை பற்றிக் கொண்டான்.. “ம்..” என்றான். 

ஏதும் பேசாமல் யோசனையோடு அமர்ந்தான்.. மனையாளின் விரல்ளை விடவில்லை.. மனையாளும் அவன் அருகேலேயே அமர்ந்துக் கொண்டாள்.

இப்போது பசுபதிக்கு போனில் அழைப்பு வர.. நிகழ்காலம் வந்தான். அவனின் சீனியர் அழைத்திருந்தார். போனோடு பேச பால்கனி சென்றுவிட்டான்.

நந்தித்தா, பொட்டு வைத்துக் கொண்டு.. ஹேர் ட்ரையர் கொண்டு.. முடியை காய வைத்துக் கொண்டு.. கீழே வந்தாள்.

கெளவ்ரவ் மருமகளை பார்த்து “குட் மோர்னிங் ம்மா” என்றார்.

நந்தித்தா “குட் மோர்னிங்” என்றாள் சோர்ந்த குரலில்.

கெளரவ் “என்ன.. குரல் டல்லா இருக்கு நந்தித்தா..” என்றார்.

அமுதா “என்ன ஆச்சு நந்து..” என்றார்.

நந்தித்தா “என்னமோ தலைசுற்றுது அத்தை.. ஒரு மாதிரி இருக்கு” என்றவள் டைன்னிங் டேபிளில் சேரில் அமர்ந்து தலை சாய்ந்துக் கொண்டாள்.

அமுதாவிற்கு, ஒரு எண்ணம் இருந்தாலும் ஏதும் இப்போது கேட்க்க வேண்டாம் என எண்ணி.. “முதலில் சாப்பிடு நந்து.. நைட் சரியா சாப்பிடறதில்ல.. எந்நேரமும் அந்த டியூஷன்..” என சொல்லி அவளுக்கும்.. தன் கணவருக்கும் ப்ளேட் வைத்து பரிமாறினார்.

நந்து “அவர் வந்திடட்டும் அத்தை..” என்றாள்.

அமுதா சிரித்துக் கொண்டே.. கணவருக்கு மட்டும் பரிமாறினார்.

கெளவ்ரவ், அலுவலகம் கிளம்பியதும் அமுதா, நந்தித்தாவின் அருகே வந்து அமர்ந்து பேச தொடங்கினார். 

நந்தித்தா “அத்தை, நீங்க சாப்பிடுங்க”  என்றாள். 

அமுதா “அவன் வரட்டுமே. சேர்ந்து சாப்பிட்டுக்கலாம்.” என்றார்.

பின் “மயக்கம்  அப்படின்னு சொல்ற, ஏன் நந்தும்மா.. டேட்ஸ் தள்ளி போகியிருக்கா” என்றார் பேச்சு வாக்கில்.

நந்தித்தா இப்போதுதான் உணர்ந்தாள்.. கண்கள் விரிய “ஆமாம் அத்தை..” என்றாள், பின் “அதான் தலை சுற்றலா.. செக் பண்ணிடலாம் அத்தை கிட் வாங்கிட்டு வரேன்” என எழுந்தாள்.

அமுதா “பசுபதி போகும் போது.. போயேன்.. அவன் இப்போ ஆபிஸ் கிளம்பிடுவானில்ல” என்றார்.

நந்தித்தா ஆவலோடு கணவனை எதிர்பார்த்திருந்தாள்.

இப்போது பசுபதி இறங்கி வந்தான்.

நந்தித்தா அவசரமாக தன் அத்தையிடம் “அத்த, அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்.. நீங்க இப்போ சொல்ல வேண்டாம்.. நானே சொல்லிக்கறேன் செக் செய்துட்டு” என்றாள், ரகசிய குரலில்.

அமுதா புன்னகையோடு மகனை பார்த்துவிட்டு, தனதறைக்கு சென்றுவிட்டார். இருவரும் பேசிக் கொள்ளட்டும் என.

பசுபதி போனினை பார்த்துக் கொண்டே இறங்கினான்.

நந்தித்தா அவனுக்கு உணவு எடுத்து வைத்தாள்.

நின்றுக் கொண்டிருந்தவன்.. நிமிர்ந்து பார்த்தான்.. “நந்து அர்ஜென்ட், போயிட்டு வரேன்..” என சொல்லி கொண்டு கிளம்பிவிட்டான்.

நந்தித்தா “சாப்பிட்டு போங்க.. ரெண்டு பூரி மட்டும்..” என சற்று தூரம் வந்து சொன்னது அவனின் காதில் விழவில்லை.

நந்தித்தா புன்னகையோடு நின்றாள். அவளுக்கு நாள் தள்ளி போகிற்று.. என சந்தோஷம்.. கணவனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின் மாமியாரும் மருமகளும் உண்டனர்.

பின் நந்தித்தா, அவசர அவசரமாக கிளம்பி கடைக்கு சென்றாள். தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு வீடு வந்தாள்.

அமுதா மதியம் உணவு.. பசுபதிக்கு பேக் செய்து அலுவகத்திற்கு கொடுத்து விட்டார்.

மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தார். நந்தித்தா சந்தோஷத்தில் இருந்தாள். அவள் இன்னமும் செக் செய்யவில்லை.. ஆனால், உணர்வுகளும் எல்லா.. தான் கர்ப்பமாக இருக்கிறோம் என உணரவைத்துக் கொண்டிருந்தது.

அத்தையிடம் ‘அத்த, அதான்.. காபி குடிக்கும் போது வயிறு பிரட்டினது. தூங்கிட்டே இருந்தா நல்லா இருக்கு அத்தை.. அதான் அதிகமா பசித்தது போல..’ என பேசிக் கொண்டே இருந்தாள்.

அமுதா “சாப்பிட்டு படு, ஈவினிங், டாக்டர்கிட்ட போய் செக் செய்துட்டே வந்திடலாம்.. ம், நாளை வரை எதுக்கு வெயிட் பண்ற.. நாம் போலாம்” என்றார்.

நந்தித்தா “இல்ல அத்தை, நான் என் பதிதேவ் கூட போய்கிறேன். எல்லோரும் காலையில்தான் செக் பண்ணும் சொல்லுவாங்க.. நான் தூங்கி எழுந்து, ஈவ்னிங் செக் செய்து பார்த்திடுறேன்.. எனக்கு பொறுமையில்லை..” என்றாள்.

அமுதாவிற்குமே பொறுமையில்லை. தலையசைத்தார்.

அமுதா மருமகளை உண்ண வைத்து மேலே அனுப்பினார். 

லஞ்ச் நேரம்..

கெளவ்ரவ் வந்தார். அதன்பின் அமுதா நடந்தவைகளை சொல்லிக் கொண்டே உண்டார். 

கெளவ்ரவ் “நீ, எதுக்கும் உன் பையனை நம்பாத.. சித்திக்கு வந்து செக் செய்யும் லப்’க்கு போன் செய்து சொல்லி.. யாரையாவது வர சொல்லு.. கன்ப்ஃபோம் ஆனதும்.. டாக்டர் பார்த்துக்கலாம்.” என அவர் ஒரு யோசனை சொன்னார்.

அமுதா என்ன செய்வது என தெரியாமல் நின்றார்.

இப்போது பசுபதி, அலுவலகத்தில் இல்லை.. என, அவனுக்கு அனுப்பிய உணவு.. வீடு வந்தது.

அமுதா மகனுக்கு போனில் அழைத்து விவரம் கேட்டார்.

பசுபதி “அம்மா வெளியே இருக்கேன் அம்மா.. நான் சாப்பிட்டேன், நீ வை” என்றான் கோவமாக எரிச்சலாக.

ஏதும் பெரிதாக சிந்திக்கவில்லை, புதுவரவு வரவிருக்கும் சந்தோஷத்தில்.. எல்லாம் பின்னுக்கு போனது. அமுதா கணவன் சொன்னபடி, லப்’க்கு போன் செய்து.. ஒரு நர்ஸ் வீடு வர ஏற்பாடு செய்தார்.

பசுபதி, தலையை பிடித்துக் கொண்டு நண்பனோடு.. அவனுடைய கெஸ்ட்ஹவுஸ்சில் அமர்ந்திருந்தான்.

முதலில் அலுவலகம் சென்றவன், சீனியர் பார்த்து விவரங்கள் சொல்லியவன்.. உறங்குவதற்காக வீடு வரத்தான் எண்ணினான். ஆனால் மீண்டும் திவ்யா அழைக்கவும்.. டென்ஷன் அவனுக்கு. அவளின் அழைப்பினை ஏற்க்கவில்லை. சைலெண்டில் போட்டு விட்டு.. தன் நண்பனை பார்க்க அலுவலகம் சென்றான்.

இப்போது இருவரும் நண்பனின் கெஸ்ட் ஹவுஸ்சில்.

திவ்யாவும் அழைத்துக் கொண்டே இருந்தாள்.

நண்பனும் ‘எடுத்து பேசிவிடு.. எல்லாம் சொல்லிவிடு.. இனி நாம் பேச வேண்டாம்.. உன் எண்ணை பிளாக் செய்கிறேன்னு சொல்லு’ என சொல்லிக் கொண்டே இருவரும் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், பசுபதி அவளின் இந்த நிலைக்காக வருந்துகிறான்.. எனக்கு என்னை.. நந்து இருக்கா டா. ஆனால், திவி பாவம் டா.. என்னை காதலித்த ஒரே காரணத்திற்காக.. என்னை இன்னமும் மறக்க முடியாமல் அவஸ்த்தைபடுறா.. அவள் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நான்தான் காரணம்.. என்னால் சரியா யோசிக்க முடியலை.. எனக்கு என்ன பண்றது தெரியலை..’ எனத்தான் அவனின் புலம்பல். ஆனால், அவனால் நந்துவை பிரித்து பார்க்க முடியவில்லை என அவனுக்கே தெரியவில்லை. இதில் எது காதல் எதுவென்று நமக்குதான் தெரியவில்லை.

இரவு.

திவ்யாவின் அழைப்பினை இதுவரை ஏற்கவில்லை, பசுபதி.

இரவில்தான் வீடு வந்தான் பசுபதி.

நந்தித்தாவின் கர்பம் உறுதியானது. எனவே, அமுதாவை கையில் பிடிக்க முடியவில்லை. மருமகளை இப்போதே விரட்ட தொடங்கிவிட்டார். “அவனுக்காக எல்லாம் நீ வெயிட் பண்ணாத.. நீ சாப்பிட்டு படு, நான் சாப்பாடு போட்டுகிறேன்” என்றார்.

ஆனால், நந்தித்தா “அத்தை இன்னிக்கு ஒருநாள் மட்டும், அவர்கிட்ட நான்தான் சொல்லணும்.. சோ.. நான் வெயிட் பண்ணறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என மாமியாரை இவள் மிரட்டி அமைதியாக்கினாள்.

அமுதா, மருமகளுக்கு துணையாக ஹாலில் அமர்ந்துக் கொண்டார், எதோ வெப் சீரீஸ் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பசுபதி லேட் நைட்தான் வந்தான். பெண்கள் இருவரையும் பார்த்தவன்.. மேலே செல்ல எத்தனித்தான்.

அமுதா “பசுபதி.. சாப்பிட்டு போ” என்றார்.

பசுபதி “நந்து, நான் சாப்பிட்டேன்.. எனக்கு தூக்கம் வருது” என சொல்லி நிற்காமலே சென்றுவிட்டான் லிப்டில்.

நந்தித்தா அமுதா இருவருக்கும் புரிந்தது.. அவன் ட்ரிங்க் செய்திருக்கிறான் என.

அமுதா “எதுவும் பேசாத நந்து. காலையில் பேசிக்கலாம்” என்றார்.

நந்தித்தாவின் முகம் சங்கடத்தையும்.. கண்ணீரையும் தன்னுள் எடுத்துக் கொண்டது.

தங்களின் அறைக்கு வந்தாள்.

கணவன் எப்போதும் போல கோணல்மாணலாக படுத்திருந்தான்.  போன் அவனின் சட்டை பாக்கெட்டில்.. அதை எடுத்து சார்ஜ் போட்டாள்.

நேர்த்தியாக இருப்பவன்.. தன்னிடம் சேர்ந்த பிறகு.. ஒருநாள் கூட ட்ரிங்க்ஸ் எடுக்காதவன்.. மீண்டும் தன்னிலை இழந்து இருப்பதை பார்க்க.. நந்தித்தாவிற்கு பயம். 

பெருமூச்சு ஒன்று எழுந்தது.. அவன் அருகில் சென்று.. அவனின் உடைகளை தளர்த்த.. நீண்ட மாதங்கள் சென்று அவன் ட்ரிங்க்ஸ் செய்திருக்கிறான். எப்போதும் அவன் புலம்புவது போல.. அவளின் பெயரை சொல்லிவிட்டால் என்ன செய்வது என.. பயமோ பயம்.. பெண்ணுக்கு. அவன் ஷர்ட் பட்டனை தளர்த்தினாள்.. பசுபதி, திரும்பி படுத்துக் கொண்டே.. இப்போது “நந்து..மா.. விடு என்னை” என்றான்.

நந்தித்தா புன்னகைத்தாள் அதிர்ந்தவளாக.

“ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே..

உனக்கென காத்துகிடபேனே..

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி..

உன்னில் வாழ துடிப்பேனே..”