தலைகீழ் நேசம்

12

ஒருமாதம் இருவருக்கும் போனதே தெரியவில்லை. பசுபதி அவளில் லயித்திருந்தான் எனலாம். 

ஒரு விடுமுறை தினத்தில் பெரியம்மா வீட்டிற்கு, அழைத்து சென்றான் நந்தித்தாவை, பசுபதி.

பெரியம்மா.. மகனிடம் “என்ன டா, ஞாபகம் வந்ததா.. பொண்டாட்டி வந்ததும் என்னை மறந்துட்ட” என்றார், கிண்டலாக.

பசுபதி அமைதியாக சிரித்துக் கொண்டே.. அமர்ந்தான்.

பெரியம்மா “நந்தித்தா, பையனை மத்திட்ட, சிரிக்கிறான்..” என்றார் கிண்டலாக.

நந்தித்தா கணவனை பார்த்து புன்னகைத்தாள்.. பெருமையாக.

பசுபதி “பெரியம்மா, மசால் டீ.. மேல அனுப்பிடுங்க..” என சொல்லி, தன லப்போடு மேலே செல்ல எத்தனித்தான்.

பெரியம்மா “இரு.. சூடா குடிச்சிட்டு போ” எனவும் அமர்ந்தான்.

பெரியம்மா பேசிக் கொண்டே கிட்சேன் சென்றார்.. “அவன் அம்மாகிட்ட போகவே மாட்டான். எனக்கு அது வேண்டும்.. இது வேண்டும் என என்கிட்டதான் கேட்பான். செலவுக்கு காசு முதற்கொண்டு நான்தான் கொடுப்பேன்..” என பசுபதியை பார்த்துக் கொண்டே பெருமையாக சொன்னார்.

பெரியம்மா நந்தித்தாவிற்கு என்ன வேண்டும் என கேட்டு இருவருக்கும் குடிக்க கொடுத்தார்.

நந்தித்தாவிற்கு, கணவன் பற்றி எதுமே தெரியாதே, அதனால் “ஏன் பெரியம்மா, அவர் எப்போதும் இப்படிதான் இருப்பாரா” என தெரிந்துக் கொள்ளும் ஆவலில் கேட்டாள்.

பசுபதி போனில் கவனம் வைத்திருந்ததால்.. இதை கவனிக்கவில்லை.

நந்தித்தாவிடம் அவனின் சிறுவயது கதைகளை சொல்ல தொடங்கினார் பெரியம்மா “இவனுக்கு, அம்மாதான் எல்லாம். எனக்கு முதலில் இரண்டு பெண் குழந்தைகள்.. அதன் பிறகுதான் ஒரு நம்ம ராம் பையா உனக்கு தெரியுமே. 

இவன் என்கிட்டே கூட வரமாட்டான் சின்னத்தில்.. ரொம்ப பிடிவாதம். அவன் அம்மாதான் குளிக்க வைக்கணும்.. அம்மாதான் சாப்ப்பாடு கொடுக்கணும்.. நான் ஒருநாள் தட்டில் போட்டு கொடுத்தால் கூட உண்ணமாட்டான். அவன் அப்பாவே, அவன் அம்மாவை நெருங்கி உட்கார கூடாது. சரியான அடம்..” என சொல்லி சிரித்தார்.

பசுபதி “போதும்.. பெரியம்மா.. அவளுக்கு பழைய கதை பிடிக்காது” என்றான்.. மனையாளை பார்த்து கண்சிமிட்டி. இப்போது அவனின் போனில் அழைப்பு வர.. அதை பார்த்து.. லாப்போடு மேலே சென்றுக் கொண்டே.. பேச தொடங்கினான்.

நந்தித்தாவிற்கு, இவனின் நடவடிக்கைகள் என்னமோ இருக்கு என உணர்ந்தால்.. அதனால், கதை கேட்க்க அமர்ந்தாள்.. “அப்புறம் பெரியம்மா.. எப்படி இவர் அங்கே ஊரில் வந்து படித்தார்.” என்றாள்.

பெரியம்மா ஒரு பெருமூச்சு விட்டு “ம்.. கெளவ்ரவ் அமுதா ரெண்டுபேருமே.. இப்போது இவர்கள் வைத்திருக்கும் கார் கம்பெனியில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷன் வைத்திருந்தனர். (அதாவது அவர்களின் ப்ரண்ட் நேம் பயன்படுத்தி.. இவர்கள்.. அங்கே லீஸ் அடிப்படியில்.. சர்வீஸ் ஸ்டேஷன்) என் வீட்டுகாரர் பிஸினெஸ் லாஸ். நாங்களும்.. கொஞ்சம் கொஞ்சம்.. இவர்களை சார்ந்து இருக்க தொடங்கினோம்.. என் கணவனும்.. அவர்கள் கம்பெனியில் சேர்ந்தார். 

எல்லாம் சரியாகத்தான் இருந்தது. 

கம்பெனியில் பிரச்சனை.. என தெரியும் வரை. ம்.. நாங்கள் சார்ந்திருந்த அந்த கம்பெனியில் கடன் பிரச்சனை, அதனால்.. நிர்வாக சீர்குலைவு என பல பிரச்சனைகள். விற்க போகிறோம் என்றனர், எங்கள் எல்லோருக்கும் என்ன செய்வதென தெரியவில்லை. வாங்குகிறவர்கள் எப்படி எங்களை அலோ செய்வர்.. நாங்கள் இதை நம்பி மட்டுமே இருக்கிறோம் என யோசனை.

அந்த நேரத்தில் அமுதா மீண்டும் உண்டானாள். வீடே சந்தோஷமாக இருப்பதா.. வாடி நிற்பதா என தெரியாமல் ஒரு இரண்டுமாதம் சென்றனர். 

அமுதா கருவுற்றிருப்பது தெரிந்து.. அவளின் அப்பா அம்மா பார்க்க வந்தனர். அப்போதுதான் எங்களின் பிரச்சனை தெரிந்தது அவர்களுக்கு.

அமுதாவின் தந்தை.. சென்ட்ரல் கவர்மென்ட் வேலை.. அவர்தான் எங்களுக்கு அந்த கம்பெனியை நீங்களே வாங்குங்கள் என்றார்.

அதை நாங்கள் முதலில் முடியாது எனதான் நினைத்தோம். ஆனால், கெளவ்ரவ் விடாமல் அதற்கான முயற்சியை தொடங்கினார்.

பசுபதியின் பள்ளி அப்போது முடிய.. அமுதா, தன் அம்மா வீட்டிற்கு விடுமுறைக்கு அனுப்பினாள், பசுபதியை. ஆனால், பையனுக்கு கோவம், அன்னைக்கு குழந்தை பிறப்பதால் தன்னை தள்ளி வைக்கிறாள் என எண்ணிக் கொண்டு.. அங்கே செல்லமாட்டேன் என அழுதான் ஆர்பாட்டம் செய்தான்.. பிடிவாதமாக உணாமல்.. அழுதான். உனக்கு பாப்பா வேண்டாம்.. எதுக்கு பாப்பா என பத்து வயது பையன் அழுகை. அவனை அமுதாவினால் கூட சமாதானம் செய்ய முடியவில்லை.

அமுதாவிற்கு, கரு வேண்டாம் எனகூட எண்ணம் வந்துவிட்டது. அவளும் அழுகை. அவளுக்கும் உடல்நலமில்லாமல் போய்.. அன்னை மகன் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தோம்.

கெளவ்ரவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தொழிலை தக்க வைக்க வேண்டும்.. மனையாளையும் கருவையும் காக்க வேண்டும்.. முதல் பாலகனையும் அமைதிபடுத்த வேண்டும்.. என எண்ணி இரவோடு இரவாக.. பசுபதிக்கு உறக்க மருந்து கொடுத்து.. அவனை தன் மாமனாரோடு ஊருக்கு அனுப்பி வைத்தார். 

பின்தான் ஆண்கள் இருவரும் எங்கள் ஊருக்கு சென்று சொத்துகளை விற்க என ஏற்பாடுகள் செய்தனர். மூன்றுமாதங்கள் அங்கேயே இருந்தனர்.

அமுதாவின் தந்தை சென்னை அடிக்கடி வந்தார்.. பாதி பணம்.. அவர்தான் முதலில் கொடுத்தார். பின் கடன் வாங்கி நாங்கள் கொடுத்து.. கம்பெனியை பற்றிக் கொண்டாம்.

அதில் பசுபதியை மறந்தோம்.

பசுபதி தாத்தா பாட்டியிடம் கோவமாக இருந்தானாம், விடுமுறை தினங்களில். பள்ளி செல்ல தொடங்கியதும் சற்று சமாதனாம் ஆனான் போல.

அமுதாவிற்கு, உடல்நிலை சரியாக இல்லை என்பதால், அவளால் சென்று மகனை பார்க்க முடியவில்லை. போனில் அழைத்து பேச எண்ணினாள், பிடிவாதக்காரன் பேசவில்லை. அவளின் உடல்நிலையில், கணவனும் அதிகமாக ஊரில் இல்லாததால் சோர்ந்து போனாள்.

அமுதா பிள்ளை பெற்று தன் ஊர் சென்றாள். ஆனாலும் பசுபதி அன்னை வந்திருக்கிறாள் என தெரிந்ததும்.. ஆசையோடு வீடு வந்தவன்.. கையில் பிரகதீஷ் பார்க்கவும்.. அழுகையோடு எங்கோ ஓடிவிட்டான்.

அமுதா இருக்கும்வரை வீடு வரமாட்டேன் என அழுதிருக்கிறான்.. அவனின் நண்பர்கள் வீட்டிலிருந்துக் கொண்டு. ஹம்.. அமுதா, பிறந்த பச்ச குழந்தையை அம்மாவிடம் விட்டு, அவனை அங்கே சென்று பார்த்து பேச.. பசுபதி.. முறைத்து கொண்டு நின்றான். அன்னையிடம் பேசவேயில்லையாம். அமுதா பிரகதீஷ்ஷோடு இங்கே வந்துவிட்டாள்.

பசுபதி, பின்தான் வீடு வந்தானாம். பிடிவாதக்காரன். அதன்பின் அவன் அன்னையை தேடவேயில்லை. கெளவ்ரவ் தம்பியும் எத்தனை முறை சென்று மகனை பார்ப்பார். பசுபதி பிடிவாதமாக இருந்தான்.

வருடங்கள் கடந்தது. பசுபதி பதின்ம வயதில்தான் சென்னை வந்தான், பள்ளி விடுமுறைக்கு. அப்போதும், இங்கே நம் வீட்டில்தான் இருப்பான். அங்கே அவர்கள் வீட்டிற்கு செல்ல மாட்டான்.

பள்ளி படிப்பு முடிந்தது. கல்லூரிக்கு என பெங்களூர் சென்றான் படிக்க. அதன்பின் டில்லி. அங்கேயும் எதோ பிரச்சனை போல.. பின்தான் சென்னை வந்தான். CA ட்ரைனிங் சென்னையில்தான் எடுத்துக் கொண்டான். ஒருவருடம் தனியாக அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தான். பின்தான் அவனாக வீடு வந்தான்.” என்றார் ஓய்ந்த குரலில்.

நந்தித்தாவிற்கு கணவன்மேல் தாய்மைதான் கூடி போனது. அந்த பத்து வயதில்.. எவ்வளவு அன்பிருந்தால், இப்படி பேசியிருப்பான் அன்னையிடம். என மனது எப்போது நடந்ததற்கு, இப்போது கணவனுக்காக வருந்தியது.

மீண்டும் பெரியம்மா “அப்போதும் தனியறை. யாரிடமும் பேசமாட்டான். பின் தானாக சம்பாதிக்க தொடங்கியதும், மேலே தனக்கென கட்டிக் கொண்டான்.. இந்த வீட்டினை. அதன்பின் அவனின் ராஜாங்கம் தனிதான். யாரும் அவனை கேள்வி கேட்க்க முடியாது. அப்படி அவன் நடந்துக் கொண்டதும் இல்லைன்னு இல்லை, அவன் பதில் சொன்னதேயில்லை. யாரிடமும் பேசமாட்டான். என்னிடம் மட்டும்தான் பேசுவான். இங்கே அடிக்கடி வருவான்.. சாப்பிட இது வேண்டும் என கொஞ்சம் உரிமையாக சொல்லுவான். கேட்க்க மாட்டான். சரியான அழுத்தகாரன்.

இறுகிய அவனின் தோற்றம் அழுதாவிற்கு சங்கடம்.. ஆனாலும், நீண்ட வருடங்கள் சென்று மகன் வீடு வந்ததில் நிம்மதி. திருமணம் பற்றி பேசவே எல்லோருக்கும் பயம்.. நான்தான் சொல்லிக் கொண்டே இருந்தேன். அப்போது என்னிடம் பேசுவதையும் விட்டுவிட்டான். எல்லோருக்கும் பயம் வந்தது.. இப்படியே பிடிப்பில்லாமல் இருந்திடுவானோ என.. அந்த நேரத்தில்தான் நீ வந்த.. எதோ நல்ல நேரம் வந்திடுச்சி அவனுக்கும்.. இப்போ, இங்க வருவதற்கு யோசிக்கிறான் எங்க பையன்” என்றார் ஆனந்த குரலில்.

நடுவில் இருவரும் சேர்ந்துக் கொண்டு சமையலறையில் இனிப்பு செய்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.

பசுபதி, தன் பெரியப்பாவின் அறையில் அமர்ந்து லாப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பெரியம்மா பையன் ஒரு மகள்.. சென்னையில் இருக்கின்றனர். இருவரும் திருமணம் முடித்து, தனியாக இருக்கின்றனர். பசுபதி நந்தித்தாவின் விருந்து என்பதால் அவர்களும் இப்போது வந்திருந்தனர். மதியம் விருந்து சிறப்பாக நடந்தது. பெரியம்மாவின் இன்னொரு மகள் தமிழ்நாட்டில் இல்லை.. அவர்கள் மும்பை. எனவே, வீடியோ காலில் அழைத்து பேசினர்.

 வீடே கலகலப்பாக இருந்தது.

பசுபதி ஒரு பார்வையாளனாக பார்த்துக் கொண்டு.. எல்லோரின் பேச்சுகளையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன்முறை என்றால் இரண்டொரு வார்த்தைகள் பேசினான்.

நந்தித்தாவிற்கு மொழி இப்போது நன்றாக புரிந்தது.. சிலவார்த்தைகள் பேசவும் செய்வாள். எனவே, அந்த கூட்டத்தோடு.. கலகலப்பாக பேசி சிரித்து கலந்துக் கொண்டாள்.

நந்தித்தா வீடு வந்ததும், அமைதியாகவே இருந்தாள். கணவன், அதை கவனித்தாலும் ஏதும் கேட்கவில்லை. 

பசுபதிக்கு, சற்று நேரத்திற்கு மேல்.. அவளின் பேச்சு சத்தம் இல்லாமல் ஏதும் ஓடவில்லை.. லாப்டாப் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும்.. வேலை ஓடவில்லை.