“தாத்தா உங்க மககிட்ட சொல்லி வைங்க. எங்கக்காகிட்ட ஏதாவது ஏடாகூடமா பேசிட்டு இருந்துச்சி, அத்தை சொத்தன்னும் பாக்கமாட்டேன், ஐபிஎஸ் அம்மான்னும் பாக்கமாட்டேன் வகுந்துடுவேன்.” என்றாள் வேகமாக சுஜா.
“பாப்பா மலையிறங்கு,போதும். இனியாவது வளரு வளருதான்னு பாக்கலாம். ஆளுதான் வளந்துகிட்டே போகுது. அறிவு…எங்க வளருது அதுக்கு?” என சுகன் மெதுவாக சுஜாவிடம் பேச
“அதவிடுங்க. இவங்க யாரு? எதுக்கு நிச்சயத்தை நிறுத்த சொன்னாங்க? இத பாப்போம் முதல்ல.” என சுஜாவிடம் சக்திவேல் வெள்ளைகொடி பறக்கவிட
“மாமா நிஜமாகவே உங்களால கண்டுபிடிக்க முடியலயா?” சுஜா கேக்க
“ஆமாம் பாப்பா. எனக்கு இவங்கள பார்த்த ஞாபகம் இல்லை. நீ இவங்கள முன்னபின்ன பார்த்திருக்கியா?” என சக்திவேல் கேக்க
“ஏய் சுஜா இது உன் வேலைதானா? அங்க வீட்டுல வேணாமுன்னு சொல்லிட்டு இப்படி ஆள வச்சி நிச்சயத்தை நிறுத்தி எங்கள அவமானபடுத்த பாக்கிறியா நீ?” வளர் தவ்விக்கொண்டு வர
“மாமா இந்த கொசு தொல்லை தாங்கல. இவங்க ஹைட், வெயிட், ஹேர்ஸ்டைல் பார்த்தா தெரியலயா உங்களுக்கு? இவங்க உங்க மகனோட ப்ரெண்ட்ஸா இருப்பாங்க” என சுஜா சொல்ல
“ நாங்க சுபாஷின் ட்ரெய்னிங் மேட்ஸ். சென்னை எங்க சொந்த ஊரு.” என்றனர் இருவரும்.
“ப்ரெண்ட்ஸ் ஓகே. ஆனா நீங்க ஏன் பங்ஷன நிறுத்த சொன்னிங்க?” கார்த்தி கேட்க
“மாமா கம்பெனி ரகசியத்தை வெளியில சொல்ல முடியாது . தெரியலன்னா தலை வெடிச்சிடுமுன்னு நினைச்சிங்கன்னா எங்க சங்க தலைவிய புடிங்க போங்க. நான்லாம் எடுபிடிதான். போங்க…போயி கல்யாண வேலையை பாருங்க” சிரித்தபடி சொல்லிச் சென்றான்.
ராகினி, சுபாஷ் திருமண நிச்சயம் பிரச்சனைகளுக்கு நடுவில் கோலாகலமாக நடந்தேறியது. ராகினியின் அம்மா வழி உறவுகள் எல்லாம் சுபாஷின் வீடு, தோட்டம் என பார்க்க பிரியப்பட, கார், வேன்களில் மங்கலத்திற்கு வந்தனர் அங்காளி, பங்காளிகள் மற்றும் மாமன், மச்சான் எல்லோரும்.
சுபாஷ் வீட்டினர், ஈஸ்வர் வீட்டினரும் ஈஸ்வர், சுஜாவைத் தவிர மங்கலத்தில் அவர்களை வரவேற்றனர்.
சுஜாவும், ஈஸ்வரும் தங்கள் வீட்டுக்கு சென்றிருந்தனர். ராகினியின் உறவினர் ஒருவர் குடும்பத்திற்கு சுஜாவை பிடித்துப்போக சக்திவேல் சகோதரர்களை கூட்டிக்கொண்டு சுஜாவின் வீட்டுக்கு வந்தனர்.
என்ன, எதற்கென தெரிந்துகொள்ள வளரும் வந்தார். வரவேற்று உபசரிப்பு முடிந்ததும், கார்த்தியின் அப்பா, சுஜாவின் தாத்தாவிடம்
“ஆனா நீ என் மகனதான் கல்யாணம் பண்ணனும். வேற யார்கூடவும் உன் கல்யாணம் நடக்காது. நடக்க விடமாட்டேன்.”
“என்னை யாருன்னு நினைச்ச? எங்கண்ணன் சொத்து முழுசையும் நாந்தான் ஆளனும். அதுக்கு என்ன வேணுமுனாலும் செய்வேன்.”
“தப்பிச்சிட்டன்னு மட்டும் நினைக்காத. இத்தனை நாள் நான் பேசறது, செய்யறது எல்லாத்தையும் யாருக்கும் தெரியாம மறைச்ச எனக்கு அதே போல இப்ப உன்னை மடக்கறது கஷ்டமில்லை.” என்றார் வளர்.
“ரொம்ப துள்ளற வளர். தலைகால் தெரியாம ஆடாத. விழுந்தா எழுந்துக்க முடியாது” என்ற சுஜா, சட்டென அவளின் பெரியம்மாவை அருகில் இழுத்து திருப்பி முதுகை காட்டி,
“ வளரு இந்த காயம் எப்படி ஆச்சி? தைரியமிருந்தா சொல்லு பாக்கலாம்” என கேக்க
“என்னடி நீதான் பேரு வச்சவளாட்டம், பேரை சொல்லி பேசற? ஒழுங்க முறை சொல்லி கூப்பிடு” என வளர் பம்ம
பாட்டி திருதிருத்தபடி “அது அத்தை சொன்னது போல தான் குட்டிம்மா. நாங்கதான் அப்பவே இதபத்தி பேசுனோமே உனக்கு மறந்துபோச்சா குட்டிம்மா?” என்க
“நீங்க சொல்றது உண்மை அப்படின்னு என்னால நம்ப முடியாது. நீங்களும் உங்க பொண்ணும் கிச்சன்ல அப்போ இருந்தது எனக்கு தெரியும். உங்க நியாயம் எப்படி இருக்கும் அப்படின்னும் எனக்கு நல்லாவே தெரியும்” என்றவள்
“ஏன்னா நான் காயம் ஆகறதையும் பாத்தேன். காயம் பண்ணவங்க ஆடின ஆட்டத்தையும் பாத்தேன். நீங்க அளந்த நியாய தர்மத்தையும் பார்த்தேன். நான் மட்டுமில்லை, போலீஸ் ஆபிசர் மிஸ்டர் சுபாஷும் அதை பாத்தார். இப்ப உண்மைய பேசலாமா மிஸ்ஸஸ். கந்தசாமி?” என நக்கலா கேக்க
“என்ன நீயும், சுபாஷு பாத்திங்களா? இத்தனை நாளா இதை பத்தி நீங்க எதுவுமே பேசலயே ஏன்?” என பாட்டி பயந்தபடி கேக்க
“உங்க நியாயத்தை பாத்ததுனால தான்” என்ற சுஜா
“அண்ணா உங்கள்ல யாராவது ஒருத்தர் உள்ள போயி என் கப்போர்டுல ஒரு வைர நெக்லஸ் இருக்கும். எடுத்துட்டு வாங்க ப்ளீஸ். குவிக்” என அவசரப்படுத்தினாள்.
ஈஸ்வர் உள்ளே சென்று நகையை கொண்டுவந்து கொடுத்ததும், வளரை ஒரு சுழட்டு சுழட்டி கழுத்துக்கடியில் ஒரு கை கொண்டு வெட்டுபோல தட்டினாள்.
வளரின் கைகள் நடுங்க உணர்விழந்து போனது. இப்போது அந்த நகையை தூக்கி முகத்தில் அடிப்பது போல நீட்டியவள்,
“சீக்குவன்ஸ் கரெக்டா ஐபிஎஸ் சார். ஏதாவது மிஸ் ஆயிடுச்சா? நான் தோசை திருப்பிய சூடு பண்ணி முதுகுல இழுத்திருக்கனும் இல்ல……. ஓ மாத்தி பண்ணிட்டனா மிஸ்ஸஸ். கந்தசாமி?” என்றவள்
“கை போனா என்ன? அஞ்சு லட்ச வைர நெக்லஸ் கிடைச்சிருக்கே. அந்த இத்துப்போன கையால அவ்வளவு எப்போ சம்பாரிக்க முடியும்? நீங்களே சொல்லுங்க மிஸ்ஸஸ். கந்தசாமி” என சொல்ல வீட்டினர் அனைவரும் மரம்போல நின்றனர். சுஜாவின் பேச்சு அவர்களுக்கு எதையோ உணர்த்துவதுபோல் இருந்தது.
“என்னோட கைக்கு என்ன ஆச்சி? அம்மா ஏதாவது பண்ணி என்னோட கைக்கு உணர்வுவர செய்யும்மா. கையில்லாம நான் எப்படி இருக்கிறது? சுபாஷூ நீயும் இத படிச்சதான, இப்ப சரி பண்ணுடா” என வளர் கதற
“நிறைய வருசம் ஆனதால எனக்கு இதெல்லாம் மறந்துபோச்சிம்மா. நானும் விருப்பப்பட்டு முழுமனசோட கத்துக்கிட்டிருந்தா ஞாபகத்துல இருந்திருக்குமோ என்னமோ?” என்ற சுபாஷ்
“குட்டிமா பாட்டி சொல்றேன்டா. தயவுசெஞ்சி இப்ப இத சரி பண்ணுடா. அத்தைக்கு வலிக்கும்டா. அத்தை பாவம்டா குட்டிமா.” என பாட்டி கெஞ்ச
“உங்க மகளுக்கு வலிக்கும், ஆனா மருமகளுக்கு வலிக்காது இல்லையா தாத்தா? பெரிய மனுசன் நீங்க நியாயத்தை சொல்லுங்க” என்ற சுஜா
“அன்னைக்கு ஏதோ ரெண்டு பேரும் சொன்னிங்களே? அத இப்ப இங்க திருப்பி சொல்லுங்க பாக்கலாம்” என முறைத்தாள்.
“இப்படியே ஒரு மாசம் இருக்கட்டும். இப்ப உங்க மக வெட்டி முறிக்கறது என்ன கெட்டுப்போச்சி? வேளாவேளைக்கு வடிச்சி கொட்ட வேற ஒரு ஆள பாத்துக்கச் சொல்லுங்க உங்க மாப்பிள்ளைய. இல்லன்னா எங்கப்பாங்கள பாத்து ஏற்பாடு செய்ய சொல்லட்டுமா?” என கோபம் கொப்பளிக்க பேச
“சுஜா என்னம்மா இப்படி பேசற? உனக்கு இதுபோல பேச வருமா கண்ணு?” என சுஜாவின் பெரியப்பா பதற
“அப்பா, பெரியப்பா இதெல்லாம் என்னோட பேச்சில்ல. எனக்கு வெவரம் தெரிய ஆரம்பிச்சதிலிருந்து உங்க உடன்பிறப்பு இங்க வரும்போது பேசனதுல நூத்துல ஒரு சதவீதம்.”
“அதுமட்டுமில்ல அண்ணனுக்கு ஆளபாத்து விடறேன்னு உங்க உடன்பிறப்பே கூசாம சொல்லறப்போ அது புருஷனுக்கு பாத்துவிடச் சொல்ல…. நல்லா கவனிங்க நான் பாக்கறேன்னு சொல்லல, ஆள பாத்துக்கச் சொல்ல நான் ஏன் வெட்கப்படனும்?” என்றவள்
“போலீஸ்கார், நீங்க அப்பவும் அங்க மரம்போல நின்னிங்க, இப்பவும் நிக்கிறிங்களே இது சரியா?” என்க சுஜாவின் பற்றில்லா பேச்சு சுபாஷை பரிதவிக்கச்செய்தது.