தேன் சாரல் நீ 6

     சுபாஷுக்கு பெண் பார்க்க போக அழைக்க வந்ததாக சக்திவேல் சொல்ல, நிம்மதியடைந்தனர் சுஜா வீட்டினர்.

   அவர்களும் வருவதாய் ஒப்புக்கொள்ள அழைப்புகொடுத்து விருந்துண்டு தங்கள் வீடு திரும்பினர். வீடு திரும்பும் வரை மௌன விரதம்போல வளர் அமைதியாக இருக்க அனைவரும் பாம்பை பார்த்த அதிர்ச்சி என நினைத்தனர்.

    அவரோ மகன் கொடுத்த அதிர்ச்சியில் பேச்சு மறந்தநிலையில் நின்றார்.

     வீடு திரும்பும் முன் வழியிலயே சுபாஷை போனில் கூப்பிட்ட சக்தவேல் “சுபாஷு ஒரு பட்டுப்புடவை ஐயாயிரத்துல அழகா லேட்டஸ்ட் டிசைன்ல வேணும். அத பாத்ததும் எல்லாரும் அசந்து போகனும். அப்படி ஒரு புடவையோட நீ வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேரு. உங்கம்மா வேற கோபமா இருக்கா. ஒரு ரெண்டு மூணு நாளைக்கு உன் அம்மா சொல்றத கேளு, அப்பதான் நீ தப்பிப்ப இல்லன்னா சங்குதாண்டி மகனே” என்க

    “புடவை அம்மாவுக்கா? யாருக்குன்னு சொல்லுங்க?” என சுபாஷ் கேக்க

     சக்திவேல் “ மருமகளுக்கு தான்” என்க, அண்ணன் மருமகளை அவர் எப்போதும் வாய்நிறைய “மருமகளே” என்று கூப்பிடுவதால் சுபாஷுக்கு சந்தேகம் வரவில்லை.

      அவனுக்கு மிகவும் பிடித்த நீல வண்ணத்தில் பட்டுச்சேலை வாங்கிகிட்டு ஏதோ விசேஷம் போல, இல்லன்னா நம்ம அப்பா எச்சில் கையால காக்காகூட ஓட்டமாட்டாரேன்னு ஸ்வீட், காரம், பூ பழம் என இரு வீட்டுக்கும் ( பெரியப்பா வீட்டுக்கும்) சேர்த்து வாங்கிவந்தான்.

     அவன் வீடு வந்ததும், அவனிடம் பேச்சுக் கொடுக்க வாங்கிவந்த பொருட்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தான்.

    முன்பே திட்டமிட்டது போல போன் வர, வந்து பேச முடியாமல் கட்டாவது போல நடித்து சுபாஷின் போன் வாங்கி தன் அண்ணனிடம் பேசினார்.

     “இது சுபாஷ் நம்பர்தான் அண்ணா. என்னோட போனு ரிப்பேராயிடுச்சி போல. அத நாளைக்கு கடையில குடுத்து சரி பண்ணி வாங்கற வரை இந்த நம்பர் எங்கிட்டதான் இருக்கும். நீங்க எந்த நேரம்  வேணுமுன்னாலும் கூப்பிடுங்க. நான் வந்து பாத்துக்கிறேன்.” என சொல்லிட்டு வைத்தவர்,

     “சுபாஷு நாளைக்கு உங்க அண்ணி வீட்ல ஒரு விசேஷம். நம்ம சொந்தமெல்லாம் வர்றாங்க. நீ சீக்கிரம் தூங்கப்போ. அப்பதான் நாளைக்கு ப்ரஸ்ஸா இருக்க முடியும்.” எனக் கூறி உள்ளேச் செல்ல, வளரிடம்

     “அம்மா என்ன விசேஷம்? சொல்லுங்கம்மா” என்க

    “ம்ம்ம் உனக்கு நிச்சயம் பண்ணப்போறோம், போதுமா?” வெடுக்கென சொல்லிச்செல்ல

    “அப்பா அப்பவே சொன்னாங்க, அம்மா டென்ஷனா இருக்காங்கன்னு. ச்சே மறந்துபோய் இப்ப வாங்கிகட்டி இருக்கேன். சரி நாளைக்கு பங்ஷன் போறப்போ அம்மா மூடு மாறிடும் அப்ப பேசிக்கலாம்.” என நினைத்து அமைதியாக இரவு உணவை முடித்து தூங்கச் சென்றான்.

    வளர் சக்திவேலிடம், “ஏங்க நான் உனக்கு நாளைக்கு நிச்சயம் பண்ணப் போறோமுன்னு சொல்றேன், அவன் தலையாட்டிக்கிட்டு போறான். என்ன நடக்குது இங்க?” என சந்தேகத்துடன் கேக்க

      “வளரு நானு அந்த மாலினி நம்பரையும், ராகினி நம்பரையும் கார்த்திக்கிட்ட பேச்சுவாக்குல வாங்கிகிட்டு வந்தேன். இங்க பாரு இது ராகினி நம்பர் இது இந்த சுபாஷ் போனுல நான் போடுறேன் பாரு” என நம்பரை போட பேர் எதுவும் வரவில்லை.

    உடனே அவர் “இப்ப அந்த வெத்துவேட்டு மாலினி நம்பர போடறேன் பாரு” எனப்போட   ’மை லைப்’ என வந்தது.

    சுஜாவின் நம்பர் அவன் அவளை அழைக்கும் “சுதி” எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

   வளருக்கு தான் கண்ட காட்சி நெஞ்சு வலியை கொண்டு வந்தது.

    “ஏங்க அவனும் அமைதியா படுக்க ரூம் போயிட்டான். போனு இங்கிருக்க எப்படி போனான்?” என கேக்க

      “என் போன் ரிப்பேர். அதுவும் இல்லாம இந்த லைப் விசயம் நமக்கு தெரியுமுன்னு அவனுக்கு தெரியாது. நீ ரொம்ப கோவமா இருக்கன்னு சொல்லிருக்கேன். அதனால ஐயா போன்ன என்னிடம் குடுத்துட்டு போயிருக்கார்” என்றவர்

     “நானு இப்ப அந்த நாடகக்காரி நம்பர ப்ளாக் பண்ணிட்டு நம்ம ராகினி நம்பர இதுல அதான் அந்த லைப்ல பதிவு செஞ்சி நாளைக்கு குடுத்துவிடப் போறேன்” எனவும் அவர் சொல்ல

     ஆவென வாயை பிளந்த வளர் “சூப்பருங்க. இது நடந்திடுமில்ல. அவ நாளைக்கு பந்தல்ல வந்து கலாட்டா செஞ்சா என்னங்க பண்றது?” அவளது தைரியத்தை நினைத்து பயந்தபடி கேட்டார்.

   சக்திவேல் தான் ராசப்பனுடன் பேசியதை நினைத்தபடி, “அதெல்லாம் நடக்காது. அவ வந்தாலும் பேசாம ஒரு ஓரமா உக்காந்து பாத்துட்டு போயிடுவா. ஏன்னா அவ மாமன் மகனோட அவளுக்கு கல்யாணத்தை முடிவு பண்ணிட்டாங்க” என்றார்.

   இருவரும் அடுத்த நாள் செய்ய வேண்டியதை பட்டியலிட்டனர்.

      “ஏங்க எங்கண்ணன் அந்த சுஜா கழுதையை கூட்டிட்டு வருவாரா? வந்து நம்ம மருமவள பாத்து அவ அசந்து போகணும். மேக்கப்புக்கு ஆள ரெடி பண்ண சொல்லுங்க. எல்லாமே டாப்பா இருக்கனும் நாளைக்கு விசேஷத்துல, நாம கம்முனு சரின்னு சொல்லி நம்ம அத்தான கல்யாணம் பண்ணியிருக்கலாம் அப்படின்னு அவ ஏங்கனும். அதுபோல பாத்து பாத்து செய்யுங்க.“ என்றார்.

     “சுஜாவ பத்தி நீ தப்பாவே கணிச்சி வச்சிருக்க. அந்த புள்ள உன்னையெல்லாம் மனுஷ ஜென்மமாவே கணக்குல வைக்கல. இதுல உன் மருமவளா வர ஏங்கனுமா? உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல?” என்ற சக்திவேல்

     “நீ என் வீட்டுக்கு வந்துடாதன்னு ஒரு சண்டையில அவ பெரியம்மாவ சொல்லிட்டன்னு இன்னும் உன் வீட்டு வாசப்படிய மிதிக்காதவ, சொந்த அத்தை வீடு கூரையா, மெத்தயான்னு தெரியாதவ உன் மகனை கல்யாணம் செய்ய நெனப்பாளா?  நீ யோசிக்கவே மாட்டியா?”

    “உனக்கு அவள உன் மருமகளா கொண்டு வரனுமுன்னு ஆசை இருந்திருந்தா ஆரம்பத்துல இருந்து நீ வாயடக்கி  இருந்திருக்கனும். உன்னால முடியற காரியமா அது? எட்டாத பழத்துக்கு  நீ ஏங்குனது போதும். போய் ஆக வேண்டியத பாரு.” என முடித்தார்.

     காலையில் எழுந்து மூவரும் அருகிலிருந்த பெருமாள் கோவிலுக்கு சென்று கும்பிட்டு வந்து நிச்சயத்திற்கு  சொந்த பந்தங்களோடு சென்றனர்.

    கார்த்தியும், அவன் மனைவியும் இவனோடு ஒரு காருல வந்தனர்.

    “அண்ணி என்ன விசேஷம் உங்க வீட்டுல? அம்மாகிட்ட கேட்டா உன்னோட நிச்சயதார்த்தம் தான்னு கோவமா சொல்றாங்க. பொண்ணு பாக்கவே போகல. எப்படி டைரக்டா நிச்சயம் வைக்க முடியும்?” என்க

     “டேய் சுபாஷு உனக்கு அண்ணியோட தங்கை ராகினிய பொண்ணு பாத்து நாங்க முடிவு பண்ணி, இன்னைக்கு நிச்சயதார்த்தம்.” என்ற கார்த்திக்

     “புவனா அந்த போட்டோஸ சுபாஷ்கிட்ட காட்டு” என்றான்.

    ஏற்கனவே செய்த ப்ளான்படி ராகினியுடன் தானிருக்கும் போட்டோக்களை ஒரு போல்டரில் வைத்திருந்தாள்புவனா. அதை அவனிடம் காண்பித்தாள்.

   சுபாஷ் ஆவலுடன் அந்த படங்களை பார்த்தான். அவன் அண்ணி போலவே அவளும் பேரழகியாக இருந்தாள்.

     “அண்ணா! அண்ணி வீட்டுல பொண்ணுங்க எல்லாம் அழகு. உங்க பாப்பாவும் அழகாவே இருக்கும்.” எனச் சொல்ல ஆசையுடன்  தன்னுடைய மேடிட்ட வயிற்றை தடவினாள் புவனா.

     பின், “தம்பி அதுவந்து…. நீங்க போனுல ராகினிகூட பேசியிருப்பிங்க. இப்போ அது வெளிய தெரிஞ்சா வேற மாதிரி பெருசுங்க பேசும். அதனால போனுல பேசினதுபோல யாருகிட்டயும் சொல்லாதிங்க” என்றாள் கார்த்திக்கின் மனைவி புவனா.

    “ இதில் இவ்வளவு தயங்க என்ன இருக்கு அண்ணி? எனக்கு உங்க வீட்டு பொண்ணுங்க யாரோட முகமும் ஞாபகம் இல்லை.”

   “ இப்ப ஒரு ரெண்டு மாசமா ராகினி என்கிட்ட பேச முயற்சி பண்ணாங்க. ஆனா எனக்கு இருந்த வேலையில இவங்ககூட பேச முடியல.”

     “இந்த வாரம் ஊருக்கு வர்றேன்னு தெரிஞ்சதும் என்னை அவங்கள பாக்க அவங்க படிக்கிற காலேஜ் இருக்க ஊருக்கு வரச்சொல்லி மெசேஜ் போட்டாங்க. போனேன்”.

    “ஆனா அம்மா என்னோட வந்தாங்க. அவங்க எங்க சுதி பாப்பாகிட்ட கொஞ்சம் பிரச்சனை செஞ்சி  ராகினிய பாக்கவிடாம கூட்டிட்டு வந்துட்டாங்க.” என்றான்.

     “தம்பி நான்…. “ என புவனா ஆரம்பிக்க

      “நீ அமைதியா இரு புவனா. நானே சொல்லிக்கிறேன்”.  என்ற கார்த்தி

    “டேய் சுபாஷு உன்கிட்ட பேச முயற்சி பண்ணது ராகினி இல்ல. ராகினி பிஜி முடிச்சி ஒரு வருசமாகுது. உன்னோட பேச டிரை பண்ணது ஒரு ஏழரை. நல்லவேளை நீ அவளோட பேசல. அவளுக்கு இவுங்க மாமன் மகனோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி.”

     “ ராகினிக்கு எங்க உன்னோட கல்யாணம் ஆயிடுமோன்னு நினைச்சி அந்த கழுதை உன்னோட ராகினி பேருல பேசியிருக்கா. ராகினி மேல அவ்வளவு பொறாமை அந்த கழுதைக்கு.” என்றான்

    “அவகிட்ட ஏதோ பித்தலாட்டம் இருக்குன்னு நான் நினைச்சது சரியாயிடுச்சி.” என முணுமுணுத்தவன்,

    “சுதிகூட ப்ரெண்டாயி நம்ம கல்யாணத்தை சீக்கிரமா பண்ணிடலாமுன்னு சொல்லி என்னைய நேத்து வர சொல்லியிருந்தா. ஆனா மேடம் யாரு? எங்க உட்கார்ந்து இருந்தான்னுகூட எனக்கு தெரியல. பட் சுதி ஏதோ ஸ்மெல் பண்ணி என்னையவே குறுக்குவிசாரணை பண்ணிட்டா.”

     “அப்பவே ஈஸ்வர் சொன்னான். உங்க கல்யாண வேலையை எங்க சுஜா டேக்கோவர் பண்ணியாச்சின்னு, அது சரின்னு ப்ரூவாயிடுச்சி” என்றான் மகிழ்வுடன்.

      “ சித்தப்பூ பிராபளம் ஸால்வ்டு” என சக்திவேலுக்கு மெசேஜ் போட்டான் கார்த்தி.

     “அண்ணா நேத்துவரை இந்த நிச்சயத்தை ஏற்பாடு பண்ணலதான? ஏன் இப்போ திடீர்னு ஒரே நாளுல இத்தனை அலைச்சல்? சொல்லுங்கண்ணா, சொல்லுங்க” என சிரிக்க

     “தப்பான கைகளில் இந்த ஐபிஎஸ் மாட்டாம இருக்கதான்னு சொன்னா நம்புவியா? அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?” என்ற கார்த்தி

    “எங்கடா ஈஸ்வர், சுகந்தன், சுதி பாப்பா யாரையும் காணோம். நேரா அங்க வந்திருவாங்களா?” எனக் கேட்டான்.

    முதல்நாள் நடந்த குளறுபடிகளை சொல்லி, “பாப்பாக்கு அண்ணனை திட்டிட்டேன்னு கோபம். வர்றதுக்கு வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். அதுவுமில்லாம மேடம் இங்கதான் வரமாட்டாங்களே!” என்றான் சுபாஷ்.

   காலையில் அந்த ஏமாற்றுக்காரி மாலினிக்கும், ராஜனுக்கும் நிச்சயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாலினிய சபைக்கு அழைக்க வந்த ராஜனின் அம்மா  கதவைத் தட்ட கைதூக்கியவர், உள்ளே கேட்ட பேச்சுக்குரலில் அதிர்ந்து கதவை தட்டாமல் நின்று கேட்க ஆரம்பித்தார்.

    “இப்ப இதுக்கு என்ன அவசியம் வந்துச்சி? நானின்னும் டிகிரியே வாங்கல. படிப்ப முடிச்சி அப்புறம்….” மாலினி முடிக்கும் முன் கண்ணம்வீங்க ஒரு அறை விழுந்தது.

    “அப்புறம் ராகினிக்கு வர்ற ஒரு ஐபிஎஸ் மாப்பிள்ளைய  மடக்கி கட்டிக்கலாம். அடுத்த மாப்பிள்ளை கலெக்டரா வந்த இவன விட்டு அடுத்தவனையும் கட்டுவியா? நேத்து புவனா மாமனாரு கேட்டாரு பாரு ஒரு கேள்வி… நாக்க புடுங்கறமாறி.. இந்த சனியன பெத்து இன்னும் என்னென்ன நானு கேக்கனுமோ?”

      “அவனுக்கு உன்ன அடையாளம் காட்ட அவன வரச்சொன்னியாம். ஏன்டி உனக்கு இந்த புத்தி?” என தலையில் அடித்துக்கொண்டார் அவளின் அம்மா.

     புவனாவின் அம்மாவோ, “ஏன்டி காலேஜ் சேரும்போது ராஜன கட்டிக்கிறேன்னு நீதானே சொன்ன? உனக்கு அந்த பையன பிடிச்சிருந்தா அப்பா, பெரியப்பாகிட்ட நீ முன்னாடியே சொல்லியிருந்தா ராகினிக்கு பேசும்முன்னவே உனக்கு பேசியிருப்பாங்க. அப்பவிட்டுட்டு இப்ப ஏன்டி இப்படி ஏடாகூடம் பண்ற?” எனக் கேக்க

     “அப்ப அந்த ஆட்டக்காரி சுஜாதா, அதான் அவன் மாமன் பொண்ணு அவன கட்டிக்குவான்னு  நினைச்சேன்.”

     “அதனால ராஜன அந்த ராகினிக்கு விட்டுக்குடுக்க கூடாதுன்னு நான் கட்ட நெனச்சேன். அவனோட சுத்தி நானே அவன் உலகமுன்னு  என்னையவே சுத்த விட்டேன்”

     “ஆனா அந்த ஆட்டக்காரிய விட்டு ராங்கி ராகினிய போலீஸ்காரன் கட்ட ஆசைப்படுவான்னு நானென்ன கனவா கண்டேன்.”

     “இது அப்பவே தெரிஞ்சிருந்தா முன்னாடியே அவன கரெக்ட் பண்ணி வயித்தல புள்ளய வாங்கியாச்சும்  இந்த கல்யாணம் நடக்காம நிறுத்தியிருப்பேன். அவ நிம்மதியா இருக்ககூடாது. இருக்க விடமாட்டேன்.”

     “கல்யாணம் ஆனாலும் இங்க வரபோவ இருப்பாங்கல்ல… ஒரு நாளாச்சும் அவ இடத்தில நானிருந்து அவ நிம்மதிய பறிக்கலன்னா நான் எங்கப்பன் ராசப்பனுக்கு பொறக்கல” மாலினி சபதம்போல சப்தமிட

     “அக்கா அவரு சொன்னது சரிக்கா. இத பெத்ததுக்கு நான் வரடியாவே இருந்திருக்கலாம்.” என அழ

     “என்ன குறைஞ்சிடுச்சி உங்களுக்கு இப்போ என்னை பெத்ததுனால? பெத்த பொண்ணுக்கு அவ ஆசைப்படறவன கட்டி வைக்க முடியல பெருசா பேச வந்துட்டிங்க ரெண்டு பேரும்.” என அவள் கொக்கறிக்க

     “ஏய் அவங்க சொல்லறப்போ ஏதோ தப்பா புரிஞ்சிகிட்டு நம்ம புள்ளைய பேசறாங்க அப்படின்னு நெனச்சேனே. ஆனா நீ எங்க மானத்த கப்பலேத்த போறவன்னு தெரியாம போச்சே?” புவனா அம்மா வருந்தி பேச

     “அம்மா, பெரியம்மா, நல்லா கவனிங்க. நான் உயிரோட இருக்குறவரை அந்த ராகினிய நிம்மதியா இருக்க விடமாட்டேன்.”

    “நீங்க எவனுக்கு என்ன கட்டி குடுத்தாலும் நான் அந்த போலீஸ்காரனுக்கு புள்ளைய பெத்து அவன் நடத்தையை கேள்விக்குறியாக்கி அவள இங்க மூலையில முடங்க வைப்பேன்.”

     “நேத்து நான் மெசேஜ் போட்டப்போ இன்னைக்கு நிச்சயமுன்னு ஒரு வார்த்தை போடல, அந்த பரதேசி. இருக்கட்டும் இவள கட்டியிருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம் அப்படின்னு அவன அழ வைக்கலன்னா என்ன பொண்ணு நானு?” அவள் பேசிக் கொண்டே போக

    இவர்களை சபைக்கு அழைக்க வந்த ராஜன் அம்மா வராததால்,  தானே அழைக்க வந்த ராசப்பன், கதவின் முன் நின்று கேட்டுக் கொண்டிருந்த ராஜனின் அம்மாவை கண்டு திகைத்தார். தான் வந்தபின் மகள் பேசியதையே தன் காதுகளால் கேட்க முடியல. இதுல இந்தம்மா இன்னும் என்னென்ன கேட்டுச்சோ என தடுமாறினார்.

      “இத எங்க தலையில கட்டனுமுன்னு நினைக்கறீங்க, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? இத கட்றதுக்கு என் பிள்ளைக்கு என் கையாலேயே விசம் கொடுத்து கொன்னுடுறேன். தயவுசெஞ்சி அவன விட்டுருங்கண்ணா. அவன கூட்டிட்டு கண்காணாம நான் போயிடறேன்.” என கெஞ்சினார்.

    நிச்சயம் நடந்ததா?  இதை கேட்ட ராஜனின் முடிவு என்ன? மாலினி யாரை திருமணம் செய்ய முடிவு செய்தாள் ? காத்திருப்போம்.