தேன் சாரல் நீ 4

       சுஜா  கண்ணனிடம் “அண்ணா உங்க காலேஜ் லேடிஸ் ஹாஸ்டலில் விசிட்டர்ஸ் டைம்  முடிஞ்சிருக்குமா? இப்ப போனா ராகினி அக்காவை பார்க்க மூடியுமா?” என கேக்க

          “பாப்பா நான் போனா பார்க்க முடியாது. என்னை அலோ பண்ண மாட்டாங்க” என சுபாஷ் வேகமாக படபடக்க

           “உங்கள யாரு போக சொன்னா? நான் உங்கள அனுப்புறேன்னு சொன்னேனா? ஏன் சம்மனே இல்லாம ஆஜர் ஆகறீங்க?”  என சுஜா கேலியாக கேக்க

          “அத்தான் இந்த அவமானம் உங்களுக்கு தேவையா?  ஒரு கேஸ் போலீஸ்கிட்ட இருந்து சிபிஐகிட்ட போனா அதுக்கு மேல நமக்கென்ன வேலையின்னு சொல்றதை மட்டும் செய்வோமில்ல, அதுபோல இப்போ உங்க கல்யாணத்தை மேடம் கைல எடுத்துகிட்டாங்க. நீங்க உங்களுக்கு கொடுக்கிற டாஸ்க்கை மட்டும் செய்யுங்க போதும்.” என ஈஸ்வர் கண்ணடிக்க

       “கொடுக்கிற காசுக்கு மட்டும் கூவுங்க போதுமுன்னு நம்ம சின்ன எஜமானியம்மா சொல்லிட்டாங்க அப்படித்தானுங்கண்ணா?” சுகன் கலாய்க்க

          “ நீங்க வாங்கிட்டு வந்த புக்ஸ் எனக்கில்லை. அதான் போய் அவங்ககிட்ட குடுத்துட்டு எங்க ஹாஸ்டலுக்கு நான் போறேன்.” என்றவள்

           “இந்த பணத்துல என்ன வாங்கி குடுக்கனும்? அதைபத்தி எதுவும் சொல்லாம போனா எப்படி?  அவங்க என்னோட வெளிய ஷாப்பிங் வருவாங்களா? இல்ல நானே ஏதாச்சும் வாங்கிட்டு போய் குடுக்கனுமா?” என சுஜா கடகடவென ஒப்பிப்பதை போல கேட்க

     “சுதிமா என்னடா கோவம் என்மேல? அந்த பணத்தை உனக்கு தான் கொடுத்தேன். ஏன் யாரோ மாதிரி பேசற?” சுபாஷ் கேக்க

     “நீங்க உங்க ப்ரெண்டை சந்திக்க எங்க இத்தனை பேரையும் இம்சை படுத்தியிருக்கிங்க. இது சரியா? யோசிங்க.”

   “ உங்கம்மா வந்தா உங்க பிளான மாத்தி இன்னொருநாள் சந்திக்க வேண்டியதுதானே?”

    “ அவங்களுக்கு உங்கம்மா வர்ற விசயத்தை சொல்லியிருப்பிங்க இல்ல? பேச முடியலன்னா ஒரு தகவலாவது அனுப்பி இருப்பிங்கதானே…. அதுபோல வீ ஆர் ஆன் தி வேன்னு ஒரு மெஸேஜ் போட்டிருக்கலாமே?”

     “இங்க நான் என்னோட ப்ரெண்ட்ஸ் கூட வந்தா, அவங்கள கூட்டிட்டு வந்து, நாங்க என்னமோ குடிச்சிட்டு கூத்தடிக்கிற மாதிரி ஒரு ரியாக்ஷன் குடுக்கறீங்க, இது எங்களுக்கு தேவையா?”

    “நாங்க உங்கள டிஸ்டர்ப் பண்ணல. ஆனா நீங்க எங்கள டிஸ்டர்ப் பண்ணதுமில்லாம என்னவோ லார்ட் லபக்கு மாதிரி இங்கவந்து அலப்பறை பண்றிங்க.”

     “எங்ககிட்ட சொல்ல கூச்சமா இருந்துச்சி, ஆனா எங்கள பார்க்க வரமாதிரி சீன் கிரியேட் பண்ணும் போது கூச்சம் வரலையா?”

    “அதிமேதாவிபோல பேசறது, பிலிம் காட்றதுன்னு ஏதாவது ஆத்தாவும் மகனும் செஞ்சிங்க அவ்வளவுதான் பாத்துக்குங்க.”

       “எப்போ போட்ட பிளான் இது? யாரோட ஐடியா இது? என்னை கட்டி எங்க குடும்பத்தையே முடக்கிபோட பாக்குது உங்கம்மா. நீங்க உங்களுக்காக போராடாம எங்களையும் உங்க பிரச்சனையில இழுக்கிறீங்க. உங்க குடும்பத்தை பாக்கிறத தவிர எங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா?” என்றவள்

      “நான்  இதுவரை எதையும் உங்ககிட்ட வாங்கினதா எனக்கு ஞாபகம் இல்லையே..”

   “ என்னோட அண்ணனுங்க எனக்கு வாங்கி குடுப்பாங்க. அப்போ நான் விளையாட்டாய் கேட்டேன்னு என் அண்ணனுங்களுக்கு தெரியும். நீங்க உங்க பர்ஸை நீட்டும்போது வேணாமுன்னு சொன்னா ஒரு மாதிரி வித்தியாசமா தெரியுமுன்னு வாங்கினேன். ஸோ இதை என்ன செய்யனுமுன்னு சொல்லிட்டு கிளம்பினா வசதியா இருக்கும்” என்றாள் சுஜா கடுப்புடன்.

     “உனக்கு நானும் இவனுங்களும் ஒன்னு தான்னு அப்ப சொன்ன, இப்போ இப்படி பேசற?” என சுபாஷ் கேக்க

    “உங்கம்மா வாய அடைக்க வேற வழி ஏதாவது இருக்கா? உங்கள அண்ணன் ஸ்தானத்தில் வச்சிருக்கேன்னு தான சொன்னேன். அண்ணன்னு நான் சொன்னதுனால எனக்கு சொத்துல பங்குதர போறிங்களா? இல்லதான?” என்றாள் சுஜா வெடுக்கென

     “அத்தான் அவள மாட்டிவிட்டுட்டு நாங்களா அமைதியா நின்னோம்?”

   “ இல்ல தகவல் கொடுக்காம குற்றவாளிய பிடிக்கிறது போல திடுதிப்புன்னு முன்னாடி வந்து குதிச்சோமா?”

     “உங்கம்மா எண்ணம் உங்களுக்கு தெரியலன்னா பரவாயில்ல. ஆனா எல்லாம் தெரிஞ்சும் கைகட்டி வேடிக்கை பாக்குறது யாரு?”

    “ஒரு நிமிசத்துல மூஞ்சிலடிச்சது போல சொல்லிடும் சுஜா. பாட்டிக்காக பாத்துப்பாத்து சுஜா தர்மசங்கடத்துல மாட்டிக்கிட்டு முழிக்கிது.” என கோபமாக பேசினான் ஈஸ்வர்.

      “தன்னோட தங்கச்சிக்காக பேசாம சுகனே அமைதியா இருக்கான். நீயென்ன ரொம்ப துள்ளுற? இதையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத” என எகத்தாளமாக சுபாஷ் பேச

      சுகன் சுஜா கையிலிருந்த பணத்தை பிடுங்கி அதனுடன் நூறு ரூபாய் சேர்த்து வைத்து,   

   “இந்தாங்க உங்க பணம். இந்த நூறு ரூபா எங்க சுஜா உங்க பர்ஸிலிருந்து  பணத்தை எடுத்ததுக்கு வட்டி.” என்றவன்

     “சுஜா அண்ணங்கூட ஹாஸ்டல் போ. இனிமே நானோ, அண்ணனோ சொல்லாம இவங்களோட போனுலகூட பேசக்கூடாது.” என்று கட்டளைபோல சொன்னான்.

    மற்றவர்களிடம் தலையாட்டிய சுஜா மறந்தும் சுபாஷை திரும்பி பார்க்காமல் ஈஸ்வருடன் காயுவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

    சுபாஷ் தனியா நிக்க சுகன் “வாங்கடா போலாம். போய் ஒரு டீயாவது குடிக்கலாம். நல்ல பசியோட வந்தேன், இந்த பிரச்சனையில நான் என்னோட பசியகூட மறந்துட்டேன்” என்று கடை நோக்கி நடந்தவன்

    “கண்ணா டீயோட பப்ஸும் ஆடர் பண்ணு. பசி வயித்த கிள்ளுது” என்றான்.

      “கண்ணா சுகன் தங்கையும் எதுவுமே சாப்பிடல. வாங்கிட்டு வந்ததை ராகினி இருந்த டேபிள்ல வைச்சிட்டு இங்க பேச வந்துடுச்சி அந்த பொண்ணு.” என்றான் ஜெயன்.

      “இவங்க எல்லாம் வீட்டுக்கு வந்தாலே எங்க வீட்டுல இருக்கிற லேடீஸ் சாப்பிட முடியாது. இதுல இவங்க வீட்டுக்கு எங்க சுஜா? ஒரு மனசாட்சி வேணாம் இந்த கேடுகெட்டவங்களுக்கு?” என சுகன் புலம்ப,

      “என்ன சுகா சொல்ற? சாப்பிட முடியாதுன்னா….? புரியல?” என கண்ணன் கேக்க

    “இப்ப வண்டி நேரா எங்க போகுமுன்னு நெனைக்கிற? எங்க வீட்டுக்கு  போறவரை வண்டிக்கு பிரேக் பிடிக்காது. அங்க போயும் இந்தம்மா இப்ப பஞ்சாயத்தை கூட்டும்”.

      “இந்தம்மாவ பாத்ததும் வரவேற்கறதுல ஆரம்பிச்சி கிளம்பற வரைக்கும் விஐபி போல கவனிப்பாங்க எங்க வீட்டுல. இருந்தாலும் எங்க அம்மாக்களை கரிச்சி கொட்டி, அழ வச்சி, எங்க அப்பாக்களை கெஞ்ச வச்சி ஒரு டிராஜடி படங்காட்டிட்டுதான் ஊரவிட்டு கிளம்பும் இந்தம்மா”.   

        “இதையெல்லாம் பாத்து வளர்ந்த சுஜா, இவங்கள திரும்பியும் பார்ப்பாளான்னு அறிவு வேண்டாமா இந்த அம்மாவுக்கு?”

      “அண்ணனுங்க நல்லா வாழறதையே பொறுக்காத இந்தம்மா அண்ணன் பொண்ண கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குமாம்? வேடிக்கையா இல்ல?”

     “சொந்தத்தை சட்டுனு முறிக்ககூடாதுன்னு தலையை சாச்சிக்கிட்டு கண்டுக்காம, இதுங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு சகிச்சிகிட்டு போனா இதுங்க போடற ஆட்டம் அப்பப்பா…. தாங்க முடியலடா சாமி” வாயினுள் முனக  கண்ணன் அதிர்ச்சியுடன் பார்த்தான்.

      “சுகா எல்லாம் தெரிஞ்சும் எப்படி உந்தங்கச்சிகிட்ட பேச விடறீங்க? பாவம்டா சுஜா. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சரின்னு சொல்லிட்டாங்கன்னா அவங்க வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடாதா?” கண்ணன் கேட்க

     “டேய் சுஜாகிட்ட இவங்க பப்பு வேகாது.  இவங்க புள்ளி வைக்கிறதுக்குள்ள சுஜா கோலம் போட்டு முடிச்சிடும். சாதாரணமா அத்தான்னு ஒத்த வார்த்தை வராது மேடம் வாயில இருந்து. இவங்க ரெண்டு பேரும் தலைகீழ நின்னாலும் சுஜாவை கன்வீன்ஸ் பண்ண முடியாது கவலைப்படாத.” என்றவன்

      “இப்பதான் இவரோட காதல் கதை தெரிஞ்சிடுச்சே, இனிமேல் சுஜா இந்தாள்தான் உலகத்தோட கடைசி பேச்சுலரா இருந்தாலும் திரும்பிகூட பாக்காது. எங்கம்மாவை சொன்ன ஒத்த சொல்லுக்கு இன்னமும் கொதிச்சிகிட்டு இருக்கு. இவங்க வீட்டுக்கு போனதே இல்ல சுஜா. இவங்க வீட்டு வாசப்படிய மிதிக்கறதுகூட பாவமுன்னு நினைக்குது எங்க பாப்பா.”

     “அப்படி ஒரு நினைப்பு சுஜாவுக்கு வந்தாலும் நாங்க சம்மதிச்சா மட்டுமே அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவும். ஷீ இஸ் அவர் ஸோல். வீ நோ ஹெர் பெட்டர் தென் ஹெர்.” என சுகன் சொல்ல, அவன் தன் தங்கை மேல்  வைத்துள்ள நம்பிக்கையில் அசந்து போனான் கண்ணன்.

     சிறிது நேரம் கழித்து கடையினுள் வந்த சுபாஷ், “சாரி சுகா. நான் அந்த அர்த்தத்துல சொல்லல. உனக்குதானே சுதி மேல முழு உரிமை உண்டு. சித்தப்பன், பெரியப்பன் பசங்க எல்லாம் ஓரளவுக்கு தான். அவன் உன்னைவிட சுதிகிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்கிறான். அதனால கொஞ்சம் தட்டி வைக்கலாமுன்னு நினைச்சிதான் சொன்னேன்.”

     “அப்புறம்….. அறைவாங்காம போக கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கிங்களா சார்? உங்ககிட்ட வர்ற கேஸ முடிச்சி வைங்க போதும். எங்க வீட்டுல சிண்டு முடியிற வேலை உங்களுக்கு வேணாம். நாங்க எப்படி இருக்கனும் எப்படி பேசனுமுன்னு யாரும் உங்ககிட்ட கருத்து கேக்க வரல. உங்க வேலைய மட்டும் பாருங்க போதும்”.

    “எங்க அண்ணன தட்டிவைக்க நீங்க யாரு சார்? ஒன்னா இருக்கிற எங்குடும்பத்தை பிரிக்கிறதுதான்  உங்க பேமலிக்கான நெக்ஸ்ட் டேஸ்கா சார்? சாரி சார் உங்க அறிவுரைக்கு நன்றி.” என சுகன் கொதிக்க

      “அண்ணனை சொன்னா உறவு இல்லையா? இரட்டையர்களா பிறந்தவங்களே முட்டிக்கிற இந்தநாளுல நீங்க இப்படியே இருக்கபோறிங்களா? நானும் பாக்கத்தானே போறேன், இது இன்னும் எவ்வளவு நாளைக்கு நிலைக்குதுன்னு?” என்று வேகமாக வெளியேறினான் சுபாஷ்.

      “விசம், உடம்பு முழுசும் விசம். இதுங்க கண்ணுல படாதவரை நிம்மதி.” என சுகன் முணுமுணுக்கவும், சுகனின் போன் அலறவும் சரியாக இருந்தது. அவனின் தாத்தா கூப்பிட்டு இருந்தார்.

      “தாத்தா அதுக்குள்ள அணுகுண்டு வீட்டுக்கு வந்தாச்சா? வெடி வெடிக்க போகுது போல?” என விளையாட்டாய் கேட்க

     “இன்னும் உங்க அத்தை இங்க வரல அப்பு. ஆனா உங்க அத்தை பெத்த ரத்தினம் இப்ப போன் செஞ்சி புள்ள வளக்க எனக்கு துப்பில்லன்னு கத்தறான்.” என்ற தாத்தா

      “ஏன்டான்னு கேட்டா, உங்க பேரனுங்க ஒன்னா இருக்குறவரை உருப்பட மாட்டாங்கன்னு சொல்றான்.”

     “எனக்கு வந்த கோபத்துல நான் பெத்ததுல உங்கம்மாவ தான் ஒழுங்கா வளக்காம போயிட்டேன். அதனாலதான் உன்னமாறி அரைவேக்காடுகிட்ட எல்லாம் பேச்சி வாங்கிட்டு இருக்கேன் அப்படின்னேன்.”

     “நீங்க எதுக்கு யேன் பேத்திய பாக்க போனீங்க? போறதுக்கு முன்ன என்னை கேக்கனுமுன்னு தெரியாதா? உன்னையவே பாத்துக்க தெரியாத உங்கம்மா என் பேத்திய பாத்துக்கிறாளாம் இது நல்ல கதையா இருக்கே?ன்னு நான் சொல்ல மூச்சி விடல அவன்”

    “யேன் பேத்தி, பேரனுங்கள பாக்க நானு, எம்பொண்டாட்டி, மகனுங்க, மருமகளுங்க ன்னு ஆளும் படையும் நிறையவே இருக்கோம். உங்க நாடகம் இங்க ஓடாது. பெட்டிய கட்டுங்கன்னு சொன்னதும் பட்டுனு போன அமுத்தி வச்சிட்டான்”.

     “என்னப்பு நடந்துச்சி? உங்க அத்தைக்காரி வாரதுக்குள்ள சொல்லிப்போடு கண்ணு” என தாத்தா பேச்சோடு பேச்சாக கேக்க, காலேஜ் விட்டு வந்ததிலிருந்து சற்றுமுன் நடந்தது வரை சுருக்கமாக சுகன் சொல்ல,

    “அப்பு கண்ணன் தம்பி பக்கத்துல இருந்தா போன அவருகிட்ட குடு” என்க, போனை வாங்கிய கண்ணனும்

      “சொல்லுங்க தாத்தா, நல்லா இருக்கிங்களா?” என்றவன்

     “எங்கிட்ட என்ன கேக்கனுமோ தயங்காம கேளுங்க தாத்தா. எனக்கு தெரிஞ்சவரைக்கும் சொல்லறேன்” என்றான்.

   தாத்தாவும், “ தம்பி இன்னைக்கு அந்த பொண்ண யாரு கடைக்கு கூப்பிட்டா? அதுவே வந்து கேட்டுச்சா? சொல்லுங்க தம்பி” என்க

    “அந்த பொண்ணு சுஜாவை மீட் பண்ணனுமுன்னு சொல்லுச்சி. நான்தான் சாயங்காலம் பாக்கலாமுன்னு சொன்னேன். ஆனா இடம் பத்தி எதுவுமே சொல்லல. கரெக்ட்டா வந்துட்டாங்க. எப்பவும் போற கடைக்கு வேணாமுன்னு புதுசா ஒரு கடைக்கு போனோம். சரியான நேரத்துக்கு வந்துட்டாங்க, அந்த பொண்ணும், உங்க பொண்ணும்.” என்றான்.

     “எதுக்கு பாக்கணுமுன்னு சொன்னாங்கன்னு கடைசிவரை சொல்லல தாத்தா. இதுதான் எனக்கு தெரிஞ்சது” என்க

    “உன்னிடம் சந்திக்க கேக்கிறதுக்கு முன்னால போனுல பேசிட்டு இருந்துச்சா?” என தாத்தா கேக்க

     “அது எப்பவும் போனுல யார்கூடவோ பேசிக்கிட்டேதான் இருக்கும். உங்க சுபாஷ் சார் போனுல ‘ மை லைப்’ அப்படின்னு அந்த பொண்ணு நம்பர் சேவ் ஆகியிருக்கு. சுஜா காட்டும்போது நாங்க எல்லோருமே பாத்தோம்.” கண்ணன் சொல்ல

    “தம்பி இனி சுஜாமாகிட்ட அத பேச விடாதிங்க. மறுபடியும் பாக்கனும், பேசனுமுன்னா வேண்டாம் சொல்லிடுங்க. எங்க பாப்பாவை கொஞ்சம் பத்திரமா பாத்துக்குங்கப்பா” என கெஞ்சும் குரலில் கூற

      “தாத்தா நாங்களே அந்த ராகினிகிட்ட இருந்து தள்ளியிருக்கிறதுன்னு முடிவு செஞ்சிட்டோம். அதனால கவலைபடாதிங்க” என்றான் கண்ணன்.

    ஹாஸ்டலில் ஈஸ்வர் வாங்கிக்குடுத்த ஸ்நேக்ஸுடன் சுஜா, காயு உள்ளே செல்ல, சுஜாவின் போன் அடித்தது. சைலன்ட் செய்து வைத்தவள், காயுவிடம்

   “மாமியாகாரி நடிக்கிறதையே நம்மால சமாளிக்க முடியல. இதுல மருமகளும் மாமியார்கூட போட்டிப் போட்டு நடிச்சா பொழப்பு வெளங்கினமாறிதேன். அடுத்த நாடகம் ரெடி. நம்பர பிளாக் பண்ணிடட்டுமா?” என்றவள் ஏதோ யோசித்தபடி சில நிமிடம் நின்றாள். சட்டென போனை எடுத்து “அண்ணா அந்த ராஜுவுக்கும் ராகினிக்கும் வேற ஏதோ தொடர்பு இருக்கிறதுபோல தோணுது. எங்களோட பஸ்ட் மீட்டிங் ப்ரீ பிளான்டுன்னு தோணுது. யார் ப்ளான் செஞ்சா? சுபாஷா, இல்ல ராகினியா? கண்டுபிடிங்க. அண்ணன் ப்ரெண்ட்ஸும் ஹெல்ப் பண்ணுவாங்க” எனச்சொல்லி போனை வைத்துவிட்டு காயுவை பார்த்தாள்.

     “சுஜா இது தில்லாலங்கடி வேலைதான். அவங்களே நம்ம முன்னாடி வந்து வம்பு செஞ்சி,  ராகினிய நம்பகிட்ட பழக வைக்கிறாங்கன்னா எதுக்கா இருக்கும்?”

     “நம்பர ப்ளாக் பண்ணாத. ஒன்னும் தெரியாததுபோல நாமும் நடிப்போம். மறுபடியும் போன் வந்தா குடு நான் பேசறேன்.” என்றாள் காயு.

   போன் அடிக்க காயு எடுத்து, “வணக்கம். யாருங்க வேணும்? ஓ ஸாரி. நீங்கபாட்டுக்கு சூர்யா, அஜீத் வேணுமுன்னு சொல்லிட்டா என்னால குடுக்க முடியாது பாருங்க.” என மூச்சிவிடாமல் பேசியவள், “சுஜா ஏதோ ராங் நம்பர் போல,  யாருமே பேசல. கட் பண்ணிடட்டா? இந்த போன் வந்தாலும் வந்துச்சி இது பெருந்தொல்லையா போச்சி.” என்றவள் ஜாடைக்காட்டி விட்டு அமைதியாக காதில் வைத்திருந்தாள்.

    அந்தப்பக்கம் “ஏய் ராகினி போன் போட்டுட்டு இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்? ஒன்னு பேசு, இல்லனா கட் பண்ணு.” என யாரோ சொல்ல

     “அந்த ஆட்டக்காரி எடுக்கல. அவகூட இருப்பாளே ஒரு திமிரு புடிச்சவ, அவ எடுத்து என்னை பேசவே விடாம பேசிட்டு போன்காலை கட் பண்ணிட்டா.” என்றாள் அந்த ராங்கி ராகினி.

     “மறுபடியும் போடு. போன அவகிட்ட குடுக்கச்சொல்லு. குடுக்க வைய்யி. அதவிட்டுட்டு இந்த சோக சித்திர போஸ் நல்லாயில்ல சொல்லிட்டேன். நீ பேசு. நான் நமக்கு டின்னர் எடுத்துட்டு வரேன்.” என சொல்லி கிளம்பினாள் அவள் தோழி.