வளர்மதி இதை எதிர்பார்க்காததால் அதிர்ச்சி அடைந்தார். தன் கணவனும், மகனும் தனக்கு உதவிக்கு வருவார்கள் என நினைத்தவருக்கு மகனே தன் தாலியை பறித்தது அவமானமாக இருந்தது.
“அந்த ராங்கி இப்பவும் ஜெயிச்சிட்டா. இவளை என் காலடியில போடலன்னா நான் என்ன பொம்பள?” என மனதுக்குள் நினைத்த வளர், அங்கே இருந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம், “எல்லாரும் இங்க இருக்கும்போது இந்தூட்டு ராங்கி அங்கென்ன ******* இருக்காளா? திட்டம் போட்டு குடுத்துட்டு நல்லவபோல அங்க என்ன பண்றா?” என கேக்க, அந்த பெண்ணோ
“ஐயா நம்ம சின்னம்மாவ இந்த அம்மா தப்புதப்பா பேசுது. அவங்க கீழ வரலன்னு திட்டுது.” என போட்டுக்கொடுக்க இப்போ சுபாஷ் பதில் சொன்னான்.
“இங்க இல்லாத சுதி எப்படி கீழ வரும். நீங்க பண்ற தில்லாலங்கடி வேலைய நாலுநாளுக்கு முன்னாடியே நாங்க கண்டுபிடிச்சாச்சி. அதனால நான் சுதிய வரவிடாம தடுத்தாச்சி. பாப்பா இங்கே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். கைய, கால முடமாக்கி இருக்கலாம். இப்பவும் ஒன்னும் கெட்டு போகல. இருங்க வர்றேன்” என அருகில் சென்றவன், வளரின் பின்கழுத்தில் தட்ட தொப்பென கீழே விழுந்தார்.
அதை பார்த்த பாட்டி, “ஐய்யோ எம்பொண்ணு? என்னடா பண்ண அவள?” என வேகமாக வர பாட்டியையும் தட்ட பாட்டி ஆவென அலறினார்.
வளர் தெளிந்து எழுந்து உட்கார்ந்து “ஏய்” என கத்த முயற்சி செய்ய, முயற்சி மட்டும்தான் செய்ய முடிந்தது. பேச்சி வரவில்லை.
“சுபாஷு என்ன காரியம் பண்ண? உசுரு போயிருந்தா நீயே கொல கேஸூல உள்ள போயிருப்ப” என சக்திவேல் கத்த,
“அது பேச்சி நரம்பு….. அங்கதான் முடியுமுன்னு கேட்ட ஞாபகம் வந்தது. அதான் ரெண்டும் இனி பேசி இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனையா தீர்க்க போகுதுங்க? மூனு ஜென்மத்துல பேச வேண்டியத இப்பவே, இந்த ஐம்பது வயசுலேயே பேசிடுச்சி. அதான் மைக்க ஆப் பண்ணிட்டேன்” என கூலாக சுபாஷ் சொல்ல வளர் பரிதாபமாக அவனை பார்த்தார்.
“சுபாஷு, இங்க ஸ்பீக்கர் அவுட் போல” என்ற சக்திவேல் “ஏன்டா இந்த ஓரவஞ்சனை உனக்கு? தாத்தாக்காக இத இப்ப செஞ்சவன், எனக்காக இத ஏன் முன்னாடியே செய்யல?” என கேக்க
“அப்பா நான் பேச்சு நரம்ப தட்ட, ஒருத்தருக்கு காது போச்சி இல்ல, அதான் நான் பயத்துல மாத்தி தட்டி கொலை கேஸுல உள்ள போக வேண்டாமேன்னு இத்தனை நாள் அமைதியா இருந்தேன்.” என்றான்.
ஒரு வழியா தனிக்குடித்தனம்???? வச்சி, வாயையும், காதயும் முடக்கி வளரையும், பாட்டியையும் டம்மியாக்கி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
ஈஸ்வரின் தாய்மாமா மகளை தன் மகனுக்கு உரியவளாக, மருமகளாக சாந்தாவும், விஜியும் தத்தம் மனதுக்குள் முடிவு செய்ய இப்போதும் தாத்தா பகடையை சுஜாவிடம் நீட்ட
“பெரிய அண்ணனுக்கு அண்ணி மேல விருப்பமிருக்கறது தெரிஞ்சது. அதனால நான் துணை நின்னேன். சுகன் அண்ணா என்னோட ஹெல்ப் தேவைபடாதுன்னு அப்பவே சொல்லிட்டாங்க. அதனால சுஜா இப்போ பந்தை…..” என எல்லோரையும் ஒரு முறை பார்த்து ஊமைபடம் பார்ப்பது போல பரிதாபமாக இருந்த பாட்டியிடம் செல்ல, சுகன் பதறியடித்து “அண்ணா நாளை மறுநாள் சென்னை கவியரங்கத்துக்கு நீங்க போக வேணாம். நான் போறேன். சுஜாவை போத்தீஸ் ஷாப்பிங் கூட்டிட்டு போயிட்டு வர்றேன். யாருக்கு என்ன வாங்கனுமுன்னு பாப்பாக்கு தெரியும்” என்க சுஜா வாயை திறக்காமல் இருக்க, நீலா,
“சுகா உனக்கு ட்ரெயினிங் பத்தல. சோ மேரேஜ் புரபோசல் போஸ்பான்டு ஆக போகுது.” என கலாய்க்க
“அண்ணி உங்க கல்யாணத்துக்கு நானும் சப்போர்ட் பண்ணினேன். ஸோ ஹெல்ப் மீ ப்ளீஸ்.” என சுகன் கெஞ்ச
சுகன் அப்பா ரகுபதி, “அப்பா அண்ணிக்கும், விஜிக்கும் பெரிய மச்சான் பொண்ணு தேன்மொழிய சுகனுக்கு கட்டலாமுன்னு ஆசை. நீங்க சொன்னா ஜாதகத்தை வாங்கி பார்க்கலாம்” என மெதுவாக சொல்ல,
“தேங்க் யூப்பா.” என தந்தையை கொஞ்சியவன், “நீங்க சொல்லன்னா நடக்காதா?” என குதித்தபடி தங்கையையும், அண்ணியையும் பார்த்து நக்கலாக சிரிக்க, “அப்படியா” என பார்த்த நீலா, “ஆனா அன்னைக்கு வேற ஒரு பொண்ண பத்தி சொன்னாங்களே உங்க பேரனும், பேத்தியும்? அந்த பொண்ணுகூட பெங்களூருல எண்பதாயிரம் சம்பளம் வாங்குது. நீ என்ன வாங்கறன்னு கிண்டல் செஞ்சாங்களே?” சத்தமாக யோசிக்க
சுகன் முகம் பியுஸ் போன பல்பாக மாறியது.
தாத்தா சிரிக்க, சுஜாவும், நீலாவும் சோகமாக பார்க்க
“தெய்வங்களா! என்னய மன்னிச்சி, எங்கல்யாணத்த நடத்தி குடுங்க” என சுகன் கையெடுத்து கூம்பிட்டு சொல்ல, டியுட்டி முடிந்து வந்த ஈஸ்வரிடம் நீலா,
“ஏங்க அன்னைக்கு ஒரு பொண்ண நம்ப தம்பிக்கு பொருத்தமா இருக்குமுன்னு பேசினோமே? அந்த பொண்ணபத்தி சொல்லுங்க” என கேக்க, சுஜாவை பார்த்தவன், அவள் ஜாடை காட்ட, சுகனை பார்த்தபடி,
“ பொண்ணு கம்ப்யூட்டர் எஞ்ஜீனியர், பெங்களூருல ஐடீசி யில வொர்க் பண்ணுது. ஒரே ஒரு அண்ணன். அவனும் அங்கையே வேலை செய்யறான். மாசம் எண்பத்தி நாலாயிரம் கையில வாங்குது. அங்கே வீடு பாக்கறாங்க அண்ணனும், தங்கச்சியும்.” என்க
“அண்ணியோட பொஸிஸன் பத்தின டீடெயில்ஸ் ஓகே. ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் எப்படி இருக்கும்?” சுஜா சந்தோசமாக கேக்க
சுஜாவின் அண்ணி என்ற அழைப்பில் சுகன், மனதுக்குள் சுருக்கென வலிக்க கண்கலங்க தலைகுனிந்தான். இனி தேன்மொழி பற்றி நினைப்பதுகூட தவறென மனசாட்சி சொல்ல அமைதியாக நின்றான்.
அவனை கவனித்தவர்களுக்கு அவனது விருப்பம் புலப்பட்டது.
“அண்ணா அண்ணி பேரு சொல்லுங்க.” என சுஜா கலாட்டா பண்ண
“பொண்ணோட அத்தை பேரு சாந்தாமணி,
பொண்ணு பேரு…. தே……. தேன்மொழி” என்க சுகன் பட்டென சுஜாவை திரும்பி பார்க்க,
“அண்ணா உங்கள மட்டும் விட்டுடுவோமா? எனக்கு மட்டுமில்ல நம்ம வீட்ல எல்லாருக்கும் தெரியும்” என்க, தாத்தா, “ என்னடா சுகா? பேசிடலாமா?” என கேட்க
“பாப்பாக்கு புடிச்சா பேசலாம்” என சுகன் இழுக்க,
“அண்ணி! இந்த விசயம், அதான் எனக்கு பிடிச்சா பேசிடலாம் அப்படிங்கிற விசயத்தை, மொழிகிட்ட சொல்றோம் நம்ம கூட்டணிய பலப்படுத்தறோம்” என சொல்லி சுஜா சிரிக்க
சுகன் தன் தங்கையை பார்த்தவன், ஈஸ்வரிடம் திரும்பி பேச சொன்னான்.
“சுஜா தேன்மொழி அண்ணனுக்கும் வரன் பாக்கறாங்க. மாமாவுக்கு உன்னை கேக்கலாமுன்னு..” என இழுக்க
“அண்ணா என்னோட லைன் டீச்சிங். அதனால இது ஒத்து வராது. நான் போஸ்டிங் வாங்கினதுக்கு அப்புறம் கல்யாணம் பத்தி பேசலாமே ப்ளீஸ்” என்றாள் சுஜா.
பாட்டி தன் மகள் வழி சொந்தத்தில் பெண் எடுக்காமல், மருமகள் வழியில் பெண்ணெடுக்க தாங்க முடியாமலும், எதுவும் செய்ய முடியாமலும் தத்தளித்தார்.
வளருக்கு எப்படியாவது அந்த நிலத்தை சுஜாவிடமிருந்து பெற்றால் போதும் மோட்சம் கிடைக்கும் என்ற நிலை.
சுகனின் திருமணத்திற்கு நண்பர்கள் குழு ஒரு வாரம் வந்து தங்கி உதவி செய்து விருந்துண்டு சென்றனர். கண்ணனும், மகேஷும் ஜெய்யை கண்காணிக்க அவன் பார்வை நொடிக்கொரு முறை சுஜாவை தொட்டது. சுகன் பார்வை பெரும்பாலும் தன் தங்கையை தொடர, அவளோ ஐவரையும் ஒரே மாதிரி நடத்த, பெருங்குழப்பத்தில் ஈஸ்வரனிடம் தன் சந்தேகத்தை சொல்ல,
“ஆனா நீயோ இப்படி புலம்பற. வெயிட் பண்ணு. பாப்பா படிச்சு முடிக்கட்டும். அதுக்குள்ள ஒரு வழியாவது தெரியாமையா போயிடும்? இப்போ ப்ரெண்ஸோட என்ஜாய் பண்ணு.” என்றான் ஈஸ்வர்.
தனியார் பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டே அரசு பணிக்கு தேர்வு எழுதினர் ஜெய், சதீஷ், மற்றும் செல்வம்.
ஜெய் டியுஸனும் எடுத்தான். வீட்டுக்கு சம்பளத்தில் முக்கால்வாசி குடுத்தான் . மீதி சம்பளத்தையும் , டியுஸன் எடுப்பதால் வரும் பணத்தையும், செலவு போக தொடர்வைப்பு திட்டத்தில் சேமித்தான்.
சுஜாவும், காயுவும் பிஎட் முடிக்க, தொகுப்பூதியத்தில் பணியாற்றிட அரசு தேர்வு நடத்தியது. இருவரும் பட்டதாரி ஆசிரியராக தேர்வு பெற்று இரு வேறு பள்ளிகளில் பணியில் சேர்ந்தனர்.
சுஜா வீட்டில் ஜாதகத்தை எடுக்க, ஈஸ்வரன் இன்னும் சிறிது நாள் கழித்து பார்க்கலாம் என்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இதனிடையே மகேஷ் மூலம் விஜயனும், சுகன் ஈஸ்வர் மூவரும் நெருங்கி பழகினர்.
ஜெய் தேர்வுகள் அறிவிக்கப்படும் போதெல்லாம் அதனை முழுமுயற்சியுடன் எழுதினான். ஆனால் ஓரிரு மதிப்பெண்களில் பணி கிடைக்காமல் போனது.
அந்த நாட்கள் அவனுக்கு நரகத்தை காட்டியது. தன் தாயும், அண்ணன் மனைவியும் கேவலமாக நடத்தியும், விஜயனுக்காக அமைதி காத்தான்.
இதனிடையில் கீதாவிற்கும், விஜயனுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்கு பவன் என பெயரிட்டனர்.
கீதா பெண் பார்க்கும் படலத்தை ரகசியமாக துவக்கினாள். பயந்த சுபாவம் உள்ள, பணம், நகையென நிறைய கொண்டு வரும் பெண்ணாக தேடினாள்.
அது போல நர்மதா என்ற பெண் கிடைக்க, சுசிலாவை மூளைசலவை செய்து பெண் பார்க்க ஏற்பாடு செய்தாள்.
ஜெயனை சமாளிக்க சுசிலா அழுது ஆர்ப்பாட்டம் செய்து, “நான் சொல்ற பொண்ணை கட்டினா நான் உயிரோட இருப்பேன். இல்ல நீயா எந்த பொண்ணயாவது இழுத்துக்கிட்டு வந்த எனக்கு உங்கண்ணன் கொள்ளி போட வேண்டியதுதான்” என மிரட்டி
“இதுக்குதான் படிக்க வைக்க வேண்டாமுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேன் யாரு கேட்டா? அருமை பெருமையா வளத்து எந்த சிறுக்கி கையில இழந்து நிக்க போறேனோ தெரியலயே?” என ஒப்பேரி வைத்து அவனை லாக் செய்தார்.
ஜெயனை வற்புறுத்தி அழைத்து செல்ல முயற்சிக்க விஜயன் தலையிட்டான்.
“கீதா அந்த பெண்ணை நான் ஒரு கல்யாணத்துல பார்த்தேன். அந்த பொண்ணு உன்னையபோல குண்டா, கருப்பா இருக்கு. என் தம்பிக்கு கட்டி வைக்க எனக்கு இஷ்டமில்லை.” எனச் சொல்ல ஜெயனை வெளியே செல்லும்படி ஜாடை காட்ட வெளியேறினான் ஜெயன்.
“நீங்க ரெண்டு பேரும் ஏதோ திட்டம் போடறிங்க. இது நல்லதுக்கில்ல பாத்து இருந்துக்குங்க” என திட்டி தரகருக்கு தகவல் கொடுத்தான்.
இதற்கிடையில் மகேஷ், விஜயன் இருவரும், சுகன் ஈஸ்வருடன் சேர்ந்து ஜெயன் வீட்டிற்கு சுஜா ஜாதகமும், போட்டோவும் தரகர் மூலம் கிடைக்கவும், ஜெய் ஜாதகம் கந்தசாமி தாத்தாவிற்கும் கிடைக்கும்படியும் செய்தனர்.
விஜயன் சொல்லிய தரகர் வர ஜெயன், “அண்ணா அம்மா அழுததால நான் விரும்பின பொண்ண விட்டுடுடறேன். ஆனா நீங்க சொன்ன தரகர் கொண்டு வர்றதுல ஏதாவது ஒரு பொண்ண எனக்கு புடிச்சா, நீங்க கொற எதுவும் சொல்லாம கட்டி வைக்கனும் சரியா?” என கேக்க
தங்கள் சொன்ன தரகர் மேல வைத்த நம்பிக்கையில், “சரி. அவர் கொண்டு வர்றதுல உனக்கு எந்த பொண்ணை பிடிக்குதோ அதையே கட்டி வைக்கிறேன்” என சுசிலா சொல்ல
“அண்ணா, அண்ணி தலையில அடிச்சி சத்தியம் செய்ய சொல்லுங்க அம்மாவை” என்றான் ஜெய்.
தரகரை பார்த்து நூறு ரூபாய் நோட்டு கட்டு ஒன்றை கொடுத்து தங்கள் அறிவுரைபடி நடக்க ஏற்பாடு செய்திருந்தனர் கீதாவும் சுசிலாவும்.
தரகர் தாங்கள் ஏற்கனவே பார்த்து ஓகே சொன்ன பெண்களை மட்டுமே காட்டுவார் என்பதால் சுசிலா கீதாவின் தலையிலடித்து சத்தியம் செய்தார்.
ஆனால் விஜயன் தான் கொடுத்த ஜாதகம், போட்டோ காட்டினால், பெண் வீடு போடும் நகைக்கு, சவரனுக்கு ஆயிரமும், பெட்டி பணத்துக்கு பத்தாயிரமும் தரகர் கமிஷனாக தருவதாக சொல்ல தரகர் விஜயன் சொன்னபடி செய்தார்.
தரகர் பையில் இருந்து சுசிலா சொன்ன போட்டோக்களை காட்ட, அதை வாங்கிப் பார்த்த ஜெயன், விஜயனிடம் தர விஜயன் உதடை பிதுக்கினான்.
“அண்ணா இவ்வளவு தானா? வேற போட்டோஸ் இருக்கான்னு கேளுங்க. இந்த பொண்ணுங்கள பாத்தா எனக்கு ஒன்னும் தோணல.” என ஜெயன் சொல்ல
“ஏங்கைய்யா உங்ககிட்ட இருக்குற மொத்த ஜாதகமும் இவ்வளவு தானா?” என கேக்க
“இல்லைங்க தம்பி. அம்மா சொன்னதுபோல உங்களுக்கு தோதா இருந்தத நான் தனியா எடுத்து காட்டினேன்” என்க “சரிசரிங்க” என விஜயன் சொல்லும்போதே ஓடி வந்த கவினும், பவனும் ஜெய் தினமும் வீட்டுக்கு வந்தவுடன் கீதா ஜெய்யின் பையை தேடுவது போல, தரகரின் பின்புறம் இருந்த அவரின் பையை எடுத்து அவருக்கு முன் தலைகீழாக கொட்டினர்.
அதில் நிறைய ஜாதகங்களும், போட்டோக்களும் இருந்தன. அதில் தனியாக ஒரு மஞ்சள் கலர் கவர் இருக்க, பவன் எடுத்து “சித்தப்பா எனக்கு புடிச்ச கலரு. இத எனக்கு எடுத்து தாங்க” என அடம்பிடிக்க, அதிலிருந்த ஜாதகம், போட்டோவை எடுத்துக்கொண்டு கவரை அவனிடம் கொடுத்தான் விஜயன்.
“தம்பி அத குடுங்க. அது மகாலட்சுமி மாதிரி அம்சமான ஜாதகம். அதுக்கு பெரிய இடமா பாக்கனும்.”
“அண்ணா இந்த பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இவங்களயே எனக்கு கட்டி வச்சிடுங்க” என போட்டோவை விஜயனிடம் தந்தான்.
“ஏன்டா யேன் உயிர வாங்குற? இதுல ஒன்னை எடுக்கச் சொன்னா நீ ஏதோ ஒன்னை எடுக்குற? எங்களுக்கு இதுல இருக்கிற பொண்ணைதான் பிடிச்சிருக்கு” என சுசிலா கத்த
“ஐயா தம்பி சொன்ன போட்டோவும், ஜாதகமும் தாங்க. இந்தாங்க எந்தம்பி ஜாதகமும், போட்டோவும், இதை பொண்ணு வீட்டுல குடுங்க. பொருத்தம் பாத்துட்டு மேற்கொண்டு பேசலாம்” என சொல்லி அவரை கையோடு கூட்டிட்டு போய் கை செலவுக்கு பணம் கொடுத்து பஸ் ஏற்றிவிட்டு வந்தான்.
வீடோ போர்களமாக காட்சி அளித்தது. ஜெய் ஜாதகம், போட்டோவை தன்னுடன் எடுத்துச் சென்று கதவடைத்திருந்தான். கீதாவும், சுசிலாவும் காவு கேட்கும் காளியாய் விஜயனை எதிர்பார்த்திருந்தனர்.
கவின், பவனுக்கு உச்சிகால பூஜையாய் பலத்த அடியுடன், திட்டும் கிடைத்திருந்தன. இருவரும் அழுதழுதே தூங்கியிருந்தனர்.