Advertisement

“எத்தனை நாள் வீட்டுலயே அத்தைங்க பேசி இருக்காங்க.. அப்பாவால ஏதாச்சும் பேச முடிஞ்சுதா??”  
“அண்ணிய பிடிக்கலையின்னா..” என்று ரூபிணி சொன்னதும் “ரூபி” என்ற சத்ததில் அன்னம் மற்றும் ரூபிணி அப்படியே நின்றுவிட்டனர்.  ரூபிணி பயந்து போய் ஜெய்யை பார்க்க  அவன் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
அன்னம், ஜெய்யை  பார்க்க கோபத்தை கட்டு படுத்தியவன் “ரூபி சாப்பிட்டு போய் படு” என்று எழுந்து சென்று விட்டான்.
ரூபிணிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வர அன்னம் “எதுக்கு ரூபி இப்ப இந்த பேச்சு…  பாரு சாப்பிடாமயே போயிட்டாரு..” என அவளின் கண்களை துடைக்க “இல்ல அண்ணி.. நான் தப்பா நினைச்சு எதுவும் சொல்ல… உங்களால தான்  அண்ணனன் போயிட்டதா எல்லாரும்  திட்டுறத  தான் சொன்னேன் தப்பா??” என்றாள். 
“தப்பு இல்ல ரூபி. ஆனா…. அதுக்குன்னு நேரம் இருக்கு. பாரு இப்ப அவரும் சாப்பிடலை நீயும் அழுதுட்டு இருக்குற… சரி கண்ணை துடை… சாப்பிட்டு முடி… சாப்பிடாமா  தூங்குனா தூக்கம் வராது” என்றவள் அவளை சாப்பிட வைத்தே அனுப்பினாள்.
ரூபிணிக்கும் அன்னத்தின் தங்கை அன்புக்கும் ஒரே வயது தான். அன்னம் இங்கு வந்த பொழுது அவளுடன் வீராசாமிக்கு அடுத்து பேசும் ஒரே ஜீவன் ரூபிணி மட்டுமே. மங்களம் இல்லாத பொழுதுகளில் அத்தைகள் பேசினால் அவளுக்கு தெரிந்த வகையில் பதில் தருவாள் அதற்காக சில சமயம் ரூபிணி அடிவாங்கியதும் உண்டு.
அதனாலேயே அன்னம் அவளை தன் கைகுள்ளேயே வைத்துக்கொள்வாள். அவர்களிடம் அதிகம் பேச விடமாட்டாள்.
கோபத்தில் எழுந்தவன் மாடி ஏறும் போதே இருவரின் பேச்சும் காதில் விழ தான் செய்தது. கேட்ட படியே அறைக்கு சென்றவன்  படுத்து கொண்டான். 
அன்னம் பாலுடன் வர, அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் கண்களை மூடிக்கொண்டான்.  “பாலை குடிச்சிட்டு படுங்க” என்று அவனிடம் கிளாஸை நீட்ட, அவனிடம் எந்த பதிலும் இல்லை.
மேஜையின் மீது கிளாஸை வைத்தவள் “ரூபி சொன்னதுல என்ன தப்பு?? என்னால தான நீங்க வீட்டை விட்டு போனீங்க..” என்றதும் தான் ஜெய் பக்கத்தில் இருந்த வாஸ் எடுத்து வீச அது எதிரில் இருந்த எல்ஈடீ மீது பட்டு சிதறியது. 
ரூபிணி இவனிடம் கேட்டதில் கோபம் தான். அது அன்னம் ரூபிணியிடம் பேசியதில் சற்று மட்டு பட்டு இருந்தது. இப்பேது மீண்டும் “என்னால் தான்” என்ற அவளின் வார்த்தை கோபத்தை கிளரி விட கையில் கிடைத்தை தூக்கி அடித்து விட்டான். எப்போதும் அவன் இப்படிதான் கோபம் வந்தால் கையில் எது இருந்தாலும் உடையும்.
அவனின் கோபத்தை இப்போது தான் பார்க்கிறாள் அன்னம். வாயை கைகளால் பொத்தி நின்றவளை “என்ன சொன்ன… திரும்ப சொல்லுடி??” என்றதும் “இல்லை” என அவள்  தலை தன்னால் ஆடியது.
“இனி ஒரு முறை இந்த பேச்சு வந்தது நான் என்ன செய்வேன்னு தெரியது போடி…” என்றவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். 
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள் அப்படியே நின்று இருக்க “லைட் அணைக்குற எண்ணம் இருக்க..??” என்ற குரலில் விளக்கை அணைத்தவள் படுத்துக்கொண்டாள் நேற்று போலவே இன்றும் சற்று தள்ளி.
சற்று நேரம் அப்படியே இருந்தவன் நிதானத்திற்கு வர, அன்னத்தின் முகமாவது பார்கலாம் என்று திரும்பி பார்த்தால் அவள் அந்த பக்கம் பார்த்து படுத்து இருக்க  அவனுக்கு ஒரு மாதிரி ஆனது. “அவன் அழைத்து இருந்தால் நிச்சயம் அவள் திரும்பி இருப்பாள் அவனுக்கு அது தெரியவில்லை??” 
கண்களை மட்டும் மூடி இருந்த ஜெய்க்கு, மாலையில் இருந்த இணக்கம் போய் ‘என்ன இது??’ என்று இருந்தது. ‘நான் சொன்னேனா இவங்க கிட்ட. எனக்கு இவளை பிடிக்கலையின்னு  இவங்களா முடிவு பண்ணிக்கிட்டு பேசுவாங்களா?? அதையே  இவளும் சொல்லுவாளா??  அறிவு இருக்கா இவளுக்கு??’ 
இப்போது தான் பேசவே ஆரம்பித்து இருந்தான் அதற்குள் ஒரு சண்டை.  தானாய் போய் எல்லாம் சமாதானம் செய்ய முடியாது என்பதை விட அவனுக்கு தெரியாது. 
எப்போதும் ஜெய் இப்படித்தான். வீட்டில் சண்டை வந்தாலும் மங்களம் தான் அவனுக்காக அனைத்தையும் செய்வார். தானாக இறங்கி போய் பேசுவது என்பதே கிடையாது. அதிலும் இப்பேது அவன் துறையிலும் அவனே முதலில். யார் என்றாலும் அவர்கள் தான் வர வேண்டும். 
ஒரு வார்தையோ அல்லது அணைப்போ சமாதானத்திற்கு போதும் இல்லை அந்த நிமிடத்தின் தாக்கத்தை அது குறைக்கும் என்பது இருவருக்கும் தெரியவில்லை. 
அவனுக்கு இப்போது தனிமை தேவை  அறையில் இருந்தால் கண்டிப்பாக ஏதாவது பேசிவிட கூடும் என்பதால் மாடிக்கு சென்றான். 
அவன் சென்றதும் வாசலில் காரின் சத்தம் கேட்க மாடியில் இருந்து எட்டி பார்த்தான். மங்களம் காரில் இருந்து இறங்குவது தெரிய கீழே வந்து வாசல் திறந்தவன் “ம்மா நீங்க போங்க நான் பார்க் பண்ணிட்டு வர்றேன்” ஜெய் காரில் அமர…
“என்னடா இது… சின்ன பையன்  மாதிரி… வந்து ரெண்டு நாள் ஆச்சு உங்க அப்பா கிட்ட பேசுனா என்ன??” என்ற அவரின் கேள்விக்கு,  வீராசாமியை பார்த்து விட்டு மங்களத்தை முறைத்தவன், பதில் சொல்லாமல் காரை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
“இந்த நேரத்துக்கு எங்க போறான்??” வீராசாமி மங்களம் முகம் பார்க்க “தெரியலையே?? முகம் வேற ஒரு மாதிரி இருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை??” என்று வீட்டிற்குள் வர, அன்னம் உடைந்த டீவியை எடுத்து கொண்டு வந்தாள். 
“அன்னம் டீவிக்கு என்ன ஆச்சு??” என்றார் மங்களம். “அது மேல சாமான் எடுக்க போகும் போது கை பட்டு உடைஞ்சு போச்சு அத்தை” என்றாள். வீராசாமி அவளை பார்க்க தலை குனிந்தவள் எதுவும் பேசாமல் அதை வெளியில் சென்று வைத்து வந்தாள்.
“என்ன ஆச்சு அன்னம்?? இந்த நேரத்துக்கு ஜெய் போறான்… நீ டீவிய தூக்கிட்டு வர்ற… ஏதும் சண்டையா??” என்று கேட்க 
“இல்லை அத்தை மில்லுல இருந்து ஃபோன் வந்தது பாக்க போயிருக்காரு… என் கை பட்டு தான் உடைஞ்சது” என்றவள் அவரிடம் இருந்து அடுத்த கேள்வி வரும் முன் சென்று விட்டாள்.
மங்களம் வீராசாமி முகம் பார்க்க “விட்டு பிடிக்கலாம் எங்க போக போறான்” என்றவர் யோசனையாகவே அறைக்கு சென்றார். மில்லுக்கு ஃபோன் செய்ய “கார் அங்கு இருப்பதாக” வாட்ச்மேன் சொல்ல அப்போதுதான் சற்று நிம்மதி ஆனது அவருக்கு.
அன்னம் காலையில் எழுந்து பார்க்க ஜெய் இன்னும் வீட்டுக்கு வந்து இருக்க வில்லை. வந்ததில் இருந்து அவன் தான் இவளிடம் பேசி கொண்டு இருக்கிறான். இரவும் அப்படி தான் நினைத்தாள். மாடிக்கு சென்றவன் சற்று நேரத்தில் வந்து விடுவான்  ஏதாவது பேசுவான் என்று  வெகு நேரம் காத்திருந்தாள். ஆனால் மங்களம் வந்ததும் காரை எடுத்து கொண்டு வெளியே போவான் என்று நினைக்க வில்லை. அவனை எதிர்பார்த்த படி இருந்தவள்  தூங்கிவிட்டாள். நேற்று கண் திறக்கும் போது அவன் இருந்ததை போல் இன்றும் இருப்பான் என்று நினைக்க அவன் இல்லாத வெறும் படுக்கை ஏமாற்றமாக தான் இருந்தது.  
அன்னம் மில்லுக்கு போக வாசலுக்கு வர காருடன்  வந்து நின்றான் டிரைவர் மணி. 
“என்ன மணி இந்த நேரம்??” வீராசாமி கேட்க “முதலாளி, பெரிய பாப்பாவுக்கு என்னைய காரை ஓட்ட சொல்லி பெரிய தம்பி அனுப்பி வைச்சதுங்க” என்றான் மணி.
“எதுக்கு மணிண்ணா… நானே வந்துப்பேன்.  சாவிய கொடுங்க” என்று அன்னம் கை நீட்ட, அவளின் ஃபோன் ரிங்க் ஆனது. புது எண்ணாக இருக்க ‘யார்??’ என்ற யேசனையுடன் எடுக்க, ஜெய் ‘நீ  டிரைவ் செய்ய வேண்டாம் மணியே ஓட்டட்டும்’ என்றவன் வைத்து விட்டான். 
ஃபோனையே அவள் பார்க்க “என்னம்மா” என்றார் வீராசாமி. “அவர் தான் மாமா… மணி அண்ணாவ ஓட்ட சொல்லுறாரு” என்றதும் “சரி கிளம்புங்க டைம் ஆச்சு” என்றவர் உள்ளே சென்றார் மகனை நினைத்து சிரித்த படி.
“அண்ணா அவரு  கிளம்பிட்டாரா??” அன்னம் மணியிடம் கேட்க  “ம்மா நான் வரும் போது தம்பி அங்க தான் இருந்துச்சி” என்றவரிடம் “இருங்க அண்ணே வந்துடுறேன்” என்றவள் அவனுக்கு காலை உணவினை எடுத்து கொண்டு சென்றாள்.
“சதுரங்கத்தில் இன்னும் காய்களே நகர்த்த படவில்லை
அதற்கு முன்பே பாம்பாய் என்னை விழுங்குவது ஏனோ!!!”
தாளத்தில் சேராதா தனி பாடல்………………………

Advertisement